'சவுதி - என் பார்வையில்'
என்னை எழுதத் தூண்டும் நேசங்கள்
ஸாதிகா சொன்னது…(எல்லாப் புகழும் இறைவனுக்கே)
// வளைகுடாவில் தொலைத்துவிட்டோம்! என்னத்த சொல்ல...?
ஆனாலும் வளைகுடா வாழ் நம்மவர்கள் இப்படியே புலம்பி
கவிதை வடிப்பதை விட்டு, அங்கிருந்து பெறக்கூடிய
நன்மைகளை கவிதையாக வடித்து இனி வரும் ஜெனரேஷன்
களுக்கு பூஸ்ட் கொடுக்கலாமே? //
------
கவிதையா எழுதினால்..(சொன்னால்) புரியாது (யாருக்கு??
எனக்குத் தான் ஹா..ஹா.. !!)
ஆகவே சின்னச் சின்ன செய்திகளாய்.....
உலகமே உருண்டு புரண்டு வந்தாலும் சவுதி சத்தமில்லாம
எல்லாத்திலுமே மெதுவாத்தான் வரும். எல்லா நாட்டிலும்
காலிங் கார்டு கம்பெனிகள் ஆஃபர் மேல் ஆஃபர் தந்து காசை
கொழித்துக் கொண்டிருந்தாலும் அவரவர் மொழிகளில்
மெஸேஜ் கொடுத்து மக்களை மயக்கத்திலேயே
வைத்திருப்பார்கள். ஆனால்...
இவர்கள் என்னவென்றால் எந்த ஒரு ஆஃபருக்கும் அரபி
மொழியைத் தவிர்த்து வேறு எந்த மொழியிலும் செய்தி
அனுப்பமாட்டாங்க. நமக்கு அதை வாசிக்கத் தெரிந்தாலும்
அதன் அர்த்தம் புரியணுமே. இங்கிருத்து இந்தியாவுக்கு
பேச 0.40 (halala) பைசாவாம். இப்ப தான் உலக அதிசயமா
‘ஹிந்தி’யில் மெஸேஜ் அனுப்புறாங்க.
ஹிந்தி என்றால் நமக்கு வேப்பங்காய் (அப்படி நம்மை
பழக்கி விட்டார்கள்) ஹி..ஹி..(எல்லாம் ஒரு மொழிப்
பற்று தான்) இப்படியே போனால் எப்ப தமிழில் மெஸேஜ்
அனுப்பி ஹும்...விடிஞ்சுடும். காமனா ஒரு மொழி இங்கிலீஷ்
இருக்குல அதுல மெஸேஜ் அனுப்ப வேண்டியது தானே.
இதை யார் முன்னெடுத்துச் (செல்வது) சொல்வது!!
இங்க எல்லோரும் என்ன நெனக்கிராங்கன்னா (இங்க
மட்டுமில்ல உலகம் முழுக்க) இந்தியன் என்றால் ‘ஹிந்தி’
தான் எல்லோரும் பேசக் கூடிய தேசிய மொழியாக இருக்கும்,
அதில் மெஸேஜ் போட்டு எல்லோரையும் அசத்தி விடலாமென்றும் நினைக்கிறார்கள்.
ஆனால் இந்த அரபுக்காரங்க அதை விட ஒரு படி மேலே
போய் இந்தியாக்காரர்கள் அனைவரையுமே ‘ஹிந்தி’ என்றே
தான் விழிக்கிறார்கள். சீனாக்காரர்களை (சீனி...!!) இது சும்மா
ஒரு சாம்பிளுக்கு!! மற்ற நாடுகளை எல்லாம் எப்படி
அழைப்பார்கள் என்று வேறு ஒரு பதிவில் பார்ப்போம்!
--------
அமீரகத்தில் அமல்படுத்தப்பட்ட அத்தனை விஷயங்களையும்
கொஞ்சம் கொஞ்சமாய் இங்கே இறக்குமதி செய்துக்
கொண்டிருக்கிறார்கள். அதில் இக்காமா (iqama) என்று
சொல்லப்படும் அடையாள புத்தகத்தையே, அட்டையாக
மாற்றி கொடுத்துக் கொண்டிருப்பதும், எல்லோருக்கும்
கைரேகையும், கண் ரேகையும் சமீபத்தில் தான் எடுத்து முடித்திருக்கிறார்கள். பிளாட்பார நடைபாதையில் கார்பார்க்கிங்,
Pay-பார்க்கிங்காக அமீரகத்தில் எப்பொழுதோ மாற்றி விட்டாலும்
இப்ப தான் இங்கே சிற்சில ஏரியாக்களில் பரவலாக அமல்
படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
------------------
இங்கே சொந்தமாய் வியாபாரம் செய்ய – செய்து - வருபவர்
களுக்கு ஒரு மிகப் பெரிய வரப்பிரசாதம் என்னவென்றால்
வருடத்தில் அதிகமாய் கவர்ன்மெண்ட் ஹாலிடே என்று
எதுவுமே கிடையாது. மிஞ்சி மிஞ்சிப் போனால் ரம்ஜான் -
ஹஜ் விடுமுறைகளை தவிர்த்து, எல்லா வெள்ளிக்கிழமை
களிலும் ஜும்மா மற்றும், தினமும் நடைபெறும் ஐந்து வேளை
தொழுகை நேரம் போக மீதி எல்லாமே வேலை நேரம்தான்.
இதில் எட்டு மணி வேலை நேரம் என்று இருப்பது சொற்ப
கம்பெனிகளே!! மீதி எல்லாமே பத்து பனிரெண்டு பதினாறு
மணி நேரப் பணிகள். வீட்டு டிரைவர்கள் என்றால் கேட்கவே
வேண்டாம். வீட்டில் எப்பவெல்லாம் அழைப்பார்களோ
அப்பவெல்லாம் வேலை நேரம் தான்.
--------------
எல்லோர் மனதுக்கும் இதமான ஒரு விஷயம், கூட்டம் போட்டு
ரோட்டில் மேடை அமைத்து அலறும் ஸ்பீக்கர்கள், போராட்டம்
என்று ரோட்டையும் வாகனத்தையும் வழி மறித்துக் கொண்டு
போகும் மனிதம், வீதிக்கு வீதி ஒரு தியேட்டர் என்று எதுவுமே இங்கில்லை. பவர்கட், ஆற்காட்டார் கட் என்று எதுவுமே பார்த்து அறிந்ததில்லை.
-----------------------
பஸ்ஸிலோ, டாக்ஸியிலோ போனால் பாய்ண்ட் டு பாய்ண்ட்
ரேட். குறிப்பாக இந்த ஊரிலிருந்து அந்த ஊர் என்று வைத்துக் கொண்டாலும் (கிட்டத் தட்ட 20 to 25 km தொலைவுக்கு) நீங்கள்
எங்கே ஏறினாலும் இறங்கினாலும் ஒரே ரேட். பஸ்ஸில்
2 ரியால்கள், டாக்சியில் (லிமோ) 3 ரியால்கள். இது நல்லதா?
கெட்டதா?
-----------------------
இங்கே குளிர் லேசாக ஆரம்பித்து, வானம் இருண்டும்
இருளாத ஒரு வெளிச்ச ஒளியாய் காட்சியளிக்கறது.
இந்த கிளைமேட் எப்போதுமிருந்தால் நல்லா இருக்குமோ
என்று மனம் ஆசைக் கொள்கிறது. நினைப்பதெப்போதும்
கிடைத்து விடுமா என்ன?? நாம் விரும்புவதை கொடுப்பதாக
இறைவன் சொல்லி இருக்கிறான். பார்ப்போம்!!
-----------------
இன்னும் ஊறி வரும் பெட்ரோல் கிணறு போல், இங்குள்ள
செய்திகள் ஏராளம்!! இப்பதிவை தொடர நான் அழைப்பது..
அன்பு நண்பர்கள்...
செய்திகள் ஏராளம்!! இப்பதிவை தொடர நான் அழைப்பது..
அன்பு நண்பர்கள்...