குழந்தைகளை கண்ணுக்கு கண்ணாக பள்ளிக் கூடங்களில் கொண்டு போய் சேர்ப்பித்து திரும்பவும் அழைத்து வரும் பொறுப்பு வேன் மற்றும் பஸ் டிரைவர்களின் தலையாயக் கடமை ஆகும். டிரைவர்களின் பொறுப்பு என்பது ரோட்டில் வண்டியை விரைவில்லாமல் மெதுவாய் கவனமாய் ஓட்டுவதில் மட்டுமல்ல மற்றதிலும் பொறுப்பு வேண்டும் என்பது தான்.
பள்ளிக்கூடத்திற்கு அனுப்பும் தன்னுடைய குழந்தைகளை பராமரித்து அனுப்புவது பெற்றோர்களின் கடமை மட்டுமல்ல. அதை ஒரு பொறுப்பான பஸ் அல்லது வேன் நிர்வாகியிடம் ஒப்படைத்து விட்டு நம் கடமை முடிந்து விட்டது என்று அலட்சியமாக இருந்து விடக் கூடாதே என்பதற்காவே பதற வைக்கும் இந்தப் பதிவு.
இப்படி தான் கடந்த மாதத்திற்கு முந்திய மாதம் பள்ளிக்கூடம் சென்ற 5 வயது பச்சிளம் தளிர் மரணித்து போனது இங்குள்ள (சவுதி) தம்மாம் மாவட்டத்தில் அனைவரிடமும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஸ்கூலுக்கு வேனில் போன குழந்தை மரணித்தது எப்படி??
வேனில் சென்ற குழந்தை வேனை விட்டு இறங்க வில்லை. உடல் அசதியோ, இல்லை தூங்கிக் கொண்டிருந்ததோ தெரியவில்லை, மற்றக் குழந்தைகள் இறங்கி கிளாசுக்கு போன பின், இது கடைசி சீட்டிலேயே படுத்திருந்தது போலும். டிரைவரும் வண்டியை ஒரு முறைக்கிருமுறை நோட்டமிட தவறி ஓரிடத்தில் பார்க் செய்து பூட்டி விட்டு வேறெங்கோ சென்று விட்டார்.
வெயில் சூட்டின் தாக்கமும், ஏசி வண்டி யாதலால் லாக் செய்யப் பட்டிருந்த கதவை தள்ளித் திறக்க (தெரிய/முடிய) வில்லை. இது தான் நடந்திருக்க வேண்டும். மூச்சு திணறல் ஏற்ப்பட்டு குழந்தை கத்தி இருக்கக் கூடும். பூட்டிய கதவுகளால் அது வெளியில் நின்றவர்களுக்குக் கூட கேட்டிருக்க வாய்ப்பில்லை. காரணம் -
ஸ்கூலுக்கு சற்று தூரத்தே பார்க் செய்யப் பட்டிருந்ததாலும் யார் கண்ணிலும் பட வாய்ப்பில்லாமல் போய்விட்டது எனலாம். வெளி சுவாசக் காற்று கிடைக்காததால், குழந்தை தன் சுவாசத்தை நிறுத்திக் கொண்டது. பார்த்த நெஞ்சு அனைத்தும் பதைப் பதைத்து போனது தான் நிஜம்.
நான் ஏதோ கதை சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று இதைப் படிக்காதீர்கள். ஏனிந்த தவறுகள் எப்படி நடை பெறுகின்றன??.
பெறும்பாலான தவறுகள் பெற்ற நம்மிடம் தான் இருக்கின்றன என்பது கணிப்பு. எப்படி?? கல்வி நிர்வாகத்தினால் நடத்தப்படும் அல்லது கவர்ன்மெண்ட்டால் நிர்வகிக்கப் படும் பஸ்சிலோ வேனிலோ குழந்தைகளை அனுப்பாமல், பிரைவேட் வேனில் அனுப்புகிறோம் என்பது குற்றச்சாட்டு. ஏன்?? விலை மலிவு என்று சிம்பிளாகச் சொன்னாலும், நமது வேலை பரபரப்பில் இவற்றை எல்லாம் உட்கார்ந்து சிந்திக்க தவறி விடுகிறோம் என்பதே உண்மை. பொறுப்புள்ள பெற்றோர்களாகிய நாம் இவைகளை பற்றி சிந்திக்க கடமைப் பட்டிருக்கிறோம்.
பொறுப்பான வேன் டிரைவர் என்றால் வண்டியில் உள்ள அனைத்துக் குழந்தைகளும் இறங்கி விட்டதா என்று பார்த்து, அத்தனையும் அழைத்து சென்று (கைபிடித்து, முடியாவிட்டால் வழி காட்டி) ஸ்கூலில் விட்டப் பின்பே இவர் வண்டியை நோக்கி வர வேண்டும். அது மாதிரி ஸ்கூல் முடிந்ததும் பொறுப்பாய் அழைத்து வந்து வீட்டில் விட வேண்டும். எங்கே நடக்கிறது இது மாதிரி யெல்லாம்?? தனிக் காரில் அழைத்து வரப் படும் குழந்தைகள் கூட இது மாதிரி பார்த்து பார்த்து கையாளப் படுவதில்லை என்பதே உண்மை.
ஒரு சில டிரைவர்கள் அது மாதிரி செய்கிறார்கள் என்றால் நீங்களே அவர்களை நாலு பேர்கள் முன்னிலையில் கௌரவியுங்கள். அப்ப தான் ஒரு விழிப்புணர்வு ஏற்படும். இனி இந்த மாதிரி செய்திகள் நம் கண்ணில் படாமல் இருந்தாலே நாம் பாக்கியம் செய்தவர்கள் என்று நினைத்துக் கொள்ள தோன்றுகிறது.
1) Sense of Responsibility.
2) Not Letting A Child Walk in Front of the Van or Bus
3) Making sure that All Children are off the Vehicle at the time of Drop Off.
4) Driving Slowly
5) Not allow Tinted Windows.
6) Not allow children to peek out of the windows when the vehicle is moving.
7) Maintain their vehicles and make sure that the Air Condition Works Fine.
LET US MAKE SURE THAT WE NEVER HAVE TO READ SUCH NEWS AGAIN.




