எண்ணத்த எழுதுறோம்...!!
எண்ணத்த எழுதுறோம் (எழுத்துப் பிழை இல்லை) அதாவது
“எண்ணங்களை எழுதுகிறோம்”. அப்படி!!
நம்மில் நிறைய பேர் கமெண்ட்ஸ் போட்டுட்டு திரும்ப போய், அதற்கு என்ன பதில் எழுதி இருக்காங்க என்று படித்துப் பார்க்கிறோமா என்பது தெரியவில்லை. நாம் அவசியம் சென்று படித்துப் பார்க்கணும். பதிவில் ஒரு மாதிரியும், கருத்தில் வேறு மாதிரியும் நிறைய சுவாரஸ்யங்கள் இருக்கும். நான் யாரை குறிப்பிடுகிறேன் என்று இதை படிக்கும் 'அந்த' நபருக்கு புரியும்
சிலர் கமெண்ட்ஸுக்கு பதில் போடுவாங்க. சிலர் மாட்டங்க. எழுதுபவர்கள் அவரவர் வேலை நிமித்தம் மனதில் தோன்றுவதை எழுதிவிட்டு, பிறகு பிஸியாகி விடுவார்கள். அதை நாம் குறையாய் எடுத்துக் கொள்ளக் கூடாது. இயன்றவரை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்துக் கொண்டே இருக்கணும். சரி வாங்க இப்ப டபார்னு மேட்டருக்கு ஜம்பிடுவோம்.
----------------------
நேயர் விருப்பம் :
முன்பு நீங்க சிலோன் ரேடியோ கேட்டீர்கள் என்றால் "வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கு அருகில் அமர்ந்திருக்கும், எமது ரசிக பெருமக்கள் அனைவருக்கும் எனது அன்பு வணக்கம்" என்று ஒரு குரல் கணீரென்று ஒலிக்கும் அந்த குரலுக்கு சொந்தக்காரர் “கே. எஸ். ராஜா” என்று சொல்வார்கள். அதை நான் கேட்டதில்லை. ஆனால் சமீபத்தில் எனது நண்பர் ஒருவரை சந்திக்க சென்ற போது, மனுஷன் அவர் பேசியதை பெரும்பாலானவைகளை ரெகார்ட் செய்து வைத்திருந்தார். அம்ம்மா...!! என்ன மாதிரி ஒரு குரல். கேட்டவுடன் அப்படியே மலைத்து சொக்கி தான் போனேன். இப்போது அவர் உயிருடன் இல்லையாமே ரேடியோ ரசிகர்களுக்கு பெரிய இழப்பு தான். ஆனாலும் நம் அனைவர்களின் சார்பாக அவர் குரலுக்கு ஒரு 'ராஜ சல்யூட்!'
இப்ப இதை எதுக்கு சொல்ல வர்றேன்னா....!!
நீங்கள் கேட்டவை :
// சகோ.அப்துல் காதர் உங்கள் ப்ளாக்கிற்கு வந்தவுடன் தமிழ் பாடல்கள் பாடுகிறதே! எப்படி? //
asiya omar துபாய் அல் அய்ன்- இலிருந்து கேக்றாங்க!!
(((இது ஒரு நல்ல கேள்வி!!))) :-
யாரும் என் மேல் பாயாதீங்க!! முன்பு ‘D D’ யில் 'எதிரொலி'யில் இப்படி தான் சொல்வார்கள். இப்ப அது ‘பொதிகை’யாகி, காற்றாகி, மரமாகி, பிஞ்சாகி, பூவாகி, திரும்ப மண்ணுக்குள் விதையாகிக் கொண்டிருக்கிறது. விருட்சமாவது எப்போது??
அதை கவர்ன்மெண்ட் பார்த்துக் கொள்வார்கள் என்றால், பார்க்கிற மக்கள் என்னாவார்கள். இது ஒரு நல்ல கேள்வி?? (நாமும் கேப்போம்ல!! ) ஹி..ஹி!!
இப்ப நாம் சொல்ல வந்த விஷயத்துக்கு வருவோம்.
"வந்தேமாதரம் சசி" சொல்லாததையா நாம் சொல்லப்
போறோம்.
இது ரொம்ப சிம்பிள். பெரும்பாலான வலைப் பக்கங்களில் சென்றால் நிறைய விஷயங்களை 'கேதர்' செய்து வைத்திருக்கிறார்கள். சில நேரங்களில் நாம் படிக்கும் போதோ எழுதும் போதோ ஏதாவது இசை பொழிவுகள் நம்மை ஆக்கிரமித்து சூழ்ந்திருக்கும் போது நிறைவாய், நிறைய எழுதத் தோன்றும். படிக்கிற காலங்களிலிருந்து அப்படி தான். இப்பவும் இப்படி தான். நம் வலைப் பூவுக்கு வரும் மக்கள் உருப்படியாய் இதையாவது கேட்டுக் கொண்டிருக்கட்டுமே!
இந்த வலை பூவின் கீழே இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் F M இல், நீங்கள் வலைப் பூவுக்கு வந்த உடனே ( ‘muthal fm’) ஸ்டேஷன் இல் இருந்து ஏதாவது பாட்டு பாடிக் கொண்டிருக்கும். நடுவில் (CHOOSE BUTTON)-ஐ கிளிக்கினீர்கள் என்றால், கிட்டத்தட்ட 50-60 ஸ்டேஷன் லிஸ்ட் திறக்கும். உங்களுக்கு BBC NEWS முதற்கொண்டு, உலகில் உள்ள எல்லா fm களும் திறக்கும்.
dash board – design (வடிவமைப்பு) சென்று..
copy செய்து..
உங்களுக்கு தேவைப் பட்ட இடத்தில் (இந்த வலைப்பூவில் வலது புறத்தில் உள்ளது போல) paste பண்ணி save செய்து விடவும். அவ்வளவு தான். இனி உலக fm களெல்லாம் உங்கள் விரல் நுனியில்.
டிஸ்கி : இப்ப எல்லாமே மாறிப் போய் மொபைலிலும், வாட்சிலும் fm ரேடியோக்கள் வந்து விட்டாலும், "பொட்டி ரேடியோ" வைச் சுற்றி குடும்பமே கேட்டு ரசித்த காலம் எங்கே?!


