படம் : ஆசியா உமர் அனுமதியுடன்! நன்றி!!
சின்ன சின்ன சந்தோஷங்கள்
நேற்றைக்கு முந்தியதினம் ஃபேஸ்புக்கில் சகோதரி ஆசியா
உமர், தனது மகன் ZAAHID பள்ளியில் எல்லோர் முன்னிலையிலும்
டிகிரி முடித்து விட்டு பட்டம் வாங்குவதற்கு நிகரான
கான்வகேஷன் உடையுடன் நின்று பள்ளி cbsc syllabbus, ஃபேர்வெல்
டேயை grade-12 completion n merit certificate-ஐ பெற்றுக் கொள்ளும்
புகை படத்தினை வெளியிட்டு மகிழ்ந்தார்கள். ‘ஈன்ற பொழுதில்’ பெற்றோர்களுக்கு வாழ்வில் இதை விட வேறென்ன மகிழ்ச்சி
இருக்க முடியும். அந்த ஒரு காட்சியே கண்கொள்ளா காட்சியாக அமைந்திருக்கும். (அதை பதிவாய் வெளியிடுங்கள் சகோ:-)
அந்த 'தம்பி' மென்மேலும் படித்து தன் பெற்றோர்களுக்கு
தங்கமகனாய், வாழ்வில் எல்லாநிலையிலும் சிறந்து விளங்கிட
'ஆஹா பக்கங்கள்’ தனது வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறது!
இந்த நேரத்தில் எங்கள் ‘உம்மா’வின் சின்ன ஃப்ளாஷ்பேக்.
எங்கள் வீட்டின் தெரு வழியே பள்ளிக்கூடம் செல்லும் சிறுவர்
களையோ சிறுமிகளையோ காணும் போதெல்லாம் எங்க உம்மா, அவர்களை தன் கிட்ட அழைத்து, தெரிந்த பிள்ளையாய்
இருந்தாலும் சரி ; இல்லாவிடில் "நீங்க யார் வீட்டுப் பிள்ளைம்மா?"
என்று கேட்டு தெரிந்துக் கொண்டு, அந்த பிள்ளையிடம், "என்ன படிக்கிறீங்க?" என்றும் "என்ன படிக்கப் போறீங்க?" என்று கேட்டு ஆர்வமூட்டியும் "நீங்க நிறைய படிச்சு பெரிய ஆளா வரணும்"
என்று ஊக்கப் படுத்துவார்கள்.
அதன் பின்னர் பிள்ளைகளுக்கு தலைவாரி, முகத்தில் பவுடர்
தடவி, வீட்டில் செய்து வைத்திருக்கும் ஏதாவது தின்பண்டங்களை அவர்களுக்கு தின்னக்கொடுத்து "ரோட்டில் பார்த்து நடந்து
போம்மா" என்று சொல்லி சந்தோஷமாய் வழியனுப்பி வைப்பார்கள்.
அவர்களுக்கு இந்த மாதிரி பிள்ளைகளை காணும்போது பரவசம்
தொற்றிக் கொள்வதை பலமுறை பார்த்து உணர்ந்திருக்கிறேன்.
அதுபோலவே சபர் (பயணம்) சென்றுவிட்டு இவர்களை
காணவரும் சொந்த பந்த பிள்ளைகளிடம், எல்லா சுகநலன்களும் விசாரித்துவிட்டு, அருந்த, சாப்பிட கொடுத்தப் பிறகு, அவர்கள்
புறப்பட்டு செல்லும் சமயம், "நீங்க சம்பாதிப்பதில் உங்கள்
பெற்றோர்க்கும், குடும்பத்தார்க்கும், தாராளமாகக் கொடுங்கள்.
அதுவே பெருமை என்று இருந்து விடாதீர்கள். கொஞ்சம்
உங்கள் எதிர் காலத்திற்கும் சேர்த்து வைக்க மறந்து விடாதீர்கள்" என்பார்கள்.
இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால், ஆசியா உமரின்
அந்த பகிர்வு ‘இந்த மகனுக்கும்’ பழைய நினைவுகளை மீட்டுக்
கொண்டு வந்து உங்களோடு பகிர வைத்து விட்டது. நன்றி!!
**********************************************************************************
சவுதியில் புழுதிப் புயல்
சகோதர பதிவர்கள் அழைத்த தொடர் பதிவை தொடர இன்னும்
நேரம் சரியாய் கூடிவரவில்லை!!
நேற்றிரவு தொடங்கி இதை பதிவிடும் வரையிலும்,
சவுதியிலும் அதை சுற்றியுள்ள நாடுகளிலும் "புழுதிப் புயல்"
அடித்துக் கொண்டிருக்கிறது. வானத்திலிருந்து மழைக்கு பதில்
மண்ணாய் கொட்டுகிறது. ரோட்டில் நடக்க முடியவில்லை!!
எதிரில் வரும் வாகனங்கள் புலப்படவில்லை. கார்களை
அங்கங்கே வழியில் நிறுத்திவிட்டு, வாகன ஓட்டிகள் அலை-
பேசியில் உரியவர்களுக்கு தகவல் சொல்லிக் கொண்டிருக்-
கிறார்கள். காற்றும் குளிராய் வீசுகிறது. சங்கடமாய் இருக்கிறது.
நண்பர்கள் அனைவர்களும் கவனமாய் இருக்க வேண்டுகிறேன்!!
நேற்றிரவு தொடங்கி இதை பதிவிடும் வரையிலும்,
சவுதியிலும் அதை சுற்றியுள்ள நாடுகளிலும் "புழுதிப் புயல்"
அடித்துக் கொண்டிருக்கிறது. வானத்திலிருந்து மழைக்கு பதில்
மண்ணாய் கொட்டுகிறது. ரோட்டில் நடக்க முடியவில்லை!!
எதிரில் வரும் வாகனங்கள் புலப்படவில்லை. கார்களை
அங்கங்கே வழியில் நிறுத்திவிட்டு, வாகன ஓட்டிகள் அலை-
பேசியில் உரியவர்களுக்கு தகவல் சொல்லிக் கொண்டிருக்-
கிறார்கள். காற்றும் குளிராய் வீசுகிறது. சங்கடமாய் இருக்கிறது.
நண்பர்கள் அனைவர்களும் கவனமாய் இருக்க வேண்டுகிறேன்!!

