facebook

வாழ்க்கைப் பாடங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்க்கைப் பாடங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஜூலை 02, 2011

வெ‌ற்‌றிகரமான திருமண வா‌ழ்‌க்கை‌யி‌ன் ரக‌சிய‌ம்!


வெ‌ற்‌றிகரமான திருமண வா‌ழ்‌க்கை‌யி‌ன் ரக‌சிய‌ம்!

திருமண வா‌ழ்‌க்கையை எ‌ந்த ‌பிர‌ச்‌சினை‌யு‌ம் இ‌ல்லாம‌ல் வா‌ழ்‌ந்த
ஜோடிக‌ள் த‌ங்களது 25-வது ‌திருமண நாளை‌க் கொ‌ண்டாடினா‌ர்க‌ள்.

ஊரையே‌க் கூ‌ட்டி ‌விரு‌ந்து வை‌த்து த‌ங்களது ‌திருமணநாளை‌க் கொ‌ண்டாடிய த‌ம்ப‌தி‌யினரை‌ப் ப‌ற்‌றி அ‌றி‌ந்த அ‌ந்த ஊ‌ர் செ‌ய்‌தி-
யாள‌ர் ஒருவ‌ர், அவ‌ர்களை‌ப் பே‌ட்டி‌க் க‌ண்டு ப‌த்‌தி‌ரி‌க்கை‌யி‌ல் ‌
பிரசு‌ரி‌க்க ‌விரு‌ம்‌பினா‌ர்.

நேராக அ‌ந்த த‌ம்ப‌திக‌ளிட‌ம் செ‌ன்று, 25-ஆ‌ம் ‌திருமண நாளை‌ ஒ‌ற்றுமையாக‌க் கொ‌ண்டாடுவது எ‌ன்பது பெ‌ரிய ‌விஷய‌ம். இது
உ‌ங்களா‌ல் எ‌ப்படி முடி‌ந்தது. உ‌ங்களது ‌திருமண வா‌ழ்‌‌வி‌ன்
வெ‌ற்‌றி ரக‌சிய‌ம் எ‌ன்ன எ‌ன்று கே‌ட்டா‌ர்.

இ‌ந்த கே‌ள்‌வியை கே‌ட்டது‌ம், அ‌ந்த கணவ‌ரு‌க்கு தனது பழைய
தே‌னிலவு ‌நிக‌ழ்‌ச்‌சிக‌ள் ‌நினைவு‌க்கு வ‌ந்தது.

"நா‌ங்க‌ள் ‌திருமண‌ம் முடி‌ந்தது‌ம் தே‌னிலவு‌க்காக சிம்லா
செ‌‌ன்றோ‌ம். அ‌ங்கு எ‌ங்களது பயண‌ம் ‌சிற‌ப்பாக அமை‌ந்தது.
அ‌ப்பகு‌தியை சு‌ற்‌றி‌ப் பா‌ர்‌க்க நா‌ங்க‌ள் கு‌திரை ஏ‌ற்ற‌ம் செ‌ல்வது
எ‌ன்று ‌தீ‌ர்மா‌னி‌த்தோ‌ம்.

அத‌ற்காக இர‌ண்டு கு‌திரைகளை‌த் தே‌ர்‌ந்தெடு‌த்து, இருவரு‌ம்
ஆளுக்கொரு கு‌‌திரை‌யி‌ல் ஏ‌றி‌க் கொ‌ண்டோ‌ம். எ‌னது கு‌திரை ‌
மிகவு‌ம் அமை‌தியாக செ‌ன்று கொ‌ண்டிரு‌ந்தது. ஆனா‌ல் எ‌ன்
மனை‌வி செ‌ன்ற கு‌திரை ‌மிகவு‌ம் குறு‌ம்பு‌த்தனமானதாக
இரு‌ந்தது. ‌திடீரென ஒரு து‌ள்ள‌லி‌ல் எ‌ன் மனை‌வியை ‌அது
கீழே‌த் த‌ள்‌ளியது. அவ‌ள் ‌‌கீழே இரு‌ந்து எழு‌ந்து சுதா‌ரி‌த்து‌க்
கொ‌ண்டு அ‌ந்த கு‌திரை‌யி‌ன் ‌மீது ‌மீ‌ண்டு‌ம் ஏ‌றி அம‌ர்‌ந்து
கொ‌ண்டு, "இதுதா‌ன் உன‌க்கு முத‌ல் முறை" எ‌ன்று அமை‌தி-
யாக‌க் கூ‌றினா‌ள்..

‌சி‌றிது தூர‌ம் செ‌ன்றது‌ம் அ‌ந்த கு‌திரை ‌மீ‌ண்டு‌ம் அ‌வ்வாறே
செ‌ய்தது. அ‌ப்போது‌ம் எ‌ன் மனை‌வி ‌மிக அமை‌தியாக எழு‌ந்து
கு‌திரை‌யி‌ன் ‌மீது அம‌ர்‌ந்து கொ‌ண்டு "இதுதா‌ன் உன‌க்கு இர‌ண்டா‌ம்
முறை" எ‌ன்று கூ‌றியவாறு பய‌ணி‌க்க‌த் தொட‌ங்‌கினா‌ள்.

மூ‌ன்றா‌ம் முறையு‌ம் கு‌திரை அ‌வ்வாறே செ‌ய்தது‌ம், அவ‌ள்
வேகமாக அவளது கை‌த்து‌ப்பா‌க்‌கியை எடு‌த்து அ‌ந்த கு‌திரையை
சு‌ட்டு‌க் கொ‌ன்று‌வி‌ட்டா‌ள்!!!

இதை‌க் க‌ண்டு அ‌தி‌ர்‌ச்‌சி அடை‌ந்த நா‌ன் அவளை ‌தி‌ட்டினே‌ன்.
"ஏ‌ன் இ‌ப்படி செ‌ய்தா‌ய்? ‌நீ எ‌ன்ன மு‌ட்டாளா? ஒரு ‌வில‌ங்கை‌க் கொ‌ன்று‌வி‌ட்டாயே? அ‌றி‌வி‌ல்லையா?" எ‌ன்று கே‌ட்டே‌ன்.

அவ‌ள் ‌மிகவு‌ம் அமையாக எ‌ன்னை‌ப் பா‌ர்‌த்து, "இதுதா‌ன்
உ‌ங்களு‌க்கு முத‌ல் முறை" எ‌ன்றா‌ள்.

“பிறகென்ன... இப்பொழுதெல்லாம்  எ‌ங்களது வா‌ழ்‌க்கை ‌மிகவு‌ம் அமை‌தியாக செ‌ன்று கொ‌ண்டிரு‌க்‌கிறது” எ‌ன்றா‌ர் கணவ‌ர்.

---------------------------------------------------------------------------------------------------------

AMAZING FACTS :


MASJID  = is a 6 letters word


TEMPLE = is a 6 letters word


CHURCH = is a 6 letters word

Also...


QURAN  =  is a 5 letters word


GEETA   =  is a 5 letters word


BIBLE    =  is a 5 letters word


NAMES ARE DIFFERENT, BUT THEY ALL ARE TEACHES THE SAME....

(1) “HUMANITY”,

(2) “PEACE”,

(3) “UNITY”

பஸ்(buzz)ஸில் அனுப்பியது “சித்ரா” (வெட்டிப் பேச்சு சித்ரா அல்ல!!
இவங்க வேற சித்ரா.S!!)

நல்ல விஷயம் தானே!!

மேற்படி “ஆர-ஞ்சை” பெற்று விட்டாலும், கீழுள்ள “முக்கனி”
களை எப்பொழுது கைவர பெறப்போகிறோம். அனைவரும்
சற்றே சிந்திப்போம்!!

செவ்வாய், மே 31, 2011

உங்களை நீங்களே தயார்ப் படுத்திக் கொள்ளுங்கள்!!







உங்களின் இலட்சியம் என்ன?

நீங்கள் எப்போது மரணிப்பீர்கள் என்று உங்களால் கூற முடியுமா? நிச்சயமாக உங்களால் முடியாது! அடுத்த ஆண்டு மரணிக்கலாம்;
அடுத்த மாதம் அல்லது அடுத்த வாரம் அல்லது அடுத்த நிமிடம்
கூட நீங்கள் மரணிக்கலாம். ஆகவே அதற்குமுன்...

உங்கள் வாழ்வில் நீங்கள் என்ன அடைந்தீர்கள்? உங்களின் கனவு
மற்றும் இலட்சியம் என்ன?

உங்கள் வாழ்க்கைக்காக நீங்கள் போட்டுள்ள பெரிய பெரிய
திட்டங்கள் என்ன?

உங்கள் மரணத்துக்குப் பின் நீங்கள் எப்படி நினைவு கொள்ளப்
படுவீர்கள்? ஒரு மனிதனைப் பொருத்தவரை பிறந்தோம்;
வாழ்ந்தோம்; மரணித்தோம் என்ற வகையில் இவ்வுலகில் வாழ
முடியாது! அவ்வாறு எவ்வித இலட்சியமோ அதை அடைய
முயற்சியோ இல்லாத வாழ்க்கை என்பது வீணானதுதான்!

மரணத்துக்குப் பின் என்ன? என்பதைக் குறித்துத் திட்டமிட்ட
வாழ்வை எதிர்நோக்குவோர் மட்டுமே இவ்வுலகத்தின் முக்கியத்-
துவத்தை உணர முடியும். அவ்வாறான ஒரு திட்டமிடலோடு வாழ்பவர்களால் மட்டுமே இலட்சியத்தை அடைய முடியும்.

இவ்வுலகில் வாழ்பவர்கள், அவர்களின் இலட்சியமான
சுவர்க்கத்தை அடையவும் மரணத்திற்குப்பின் நினைவு
கூறப்படவும் எளிதான வழி உள்ளது. அதற்கு ஒவ்வொருவரும்
தம் மரணத்திற்கு முன் கீழ்க் காணும் 10 விஷயங்களைச் செய்து
முடித்து விட்டால் போதும். தயாரா நீங்கள் ??

1. கனவை நனவாக்குங்கள்

நல்லவற்றுள் எதையாவது நீங்கள் செய்ய விரும்புகின்றீர்கள்
எனில், அதனைப் பின்னர் என்று தள்ளிப்போடாமல் உடனே
செய்யத்துவங்குங்கள். சீனப்பெருஞ் சுவரை நடந்து கடக்க
வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?, பட்டதாரி ஆக வேண்டும்
என்று விரும்புகின்றீர்களா?, டாக்டரேட் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? வழக்கறிஞராக வேண்டும் என்று விரும்பு-
கின்றீர்களா? கலெக்டராக வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?
புத்தகம் ஒன்று எழுத வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? சீன, ஜப்பானிய, அரபி மொழிகளைக் கற்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? எதுவாக இருந்தாலும் உடன் செயல்பாட்டில் இறங்குங்கள். ஒருபோதும் வாழ்வில் செய்யத் துடிக்கும் நல்ல விஷயங்களைத் தள்ளிப் போடாதீர்கள். கனவை நனவாக்குங்கள்!

2. உங்கள் கடமைகளை நிறைவேற்றுங்கள்

படித்து முடித்ததும் வேலையில் சேர்ந்து சம்பாதிப்பதன் மூலம்
உங்கள் குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறை
வேற்றுங்கள். அதுபோக உங்கள் சொந்தங்களில் உள்ள
ஏழ்மையான குடும்பத்தில் படிப்பதற்கு செலவழிக்க முடியாதவர்
களுக்கு உங்களால் ஆனா உதவிகளை செய்யுங்கள்.

3. பெற்றோர்களை மகிழ்வியுங்கள்!

நம் பெற்றோர்களே நமக்கு எல்லாம்! நமது மரியாதைக்கும்
அன்புக்கும் கீழ்படிதலுக்கும் அவர்கள் உரித்தானவர்கள்.
அவர்களுடன் தினசரி குறிப்பிட்ட நேரத்தைச் செலவழிக்க
முயலுங்கள். அவர்களுக்குப் பெருமை சேர்க்க முயலுங்கள்;
ஒருபோதும் அவர்களின் மனதை வேதனைப்படுத்தி விடாதீர்கள்.
ஒன்றை எப்போதும் நினைவில் வையுங்கள்: "பெற்றோர்களை
நாம் மகிழ்ச்சியாக வைத்திருந்தால் இறைவனும் நம்மை
மகிழ்ச்சியாக வைத்திருப்பான். பெற்றோர்கள் நம் மீது
கோபமாக இருந்தால், இறைவனும் நம் மீது கோபமாகவே
இருப்பான்" என்று என்று எல்லா மதங்களும் நமக்கு போதிக்கிறது.

ஆகவே, அவர்கள் மரணிக்கும்முன், அவர்களுக்குப் பெருமை
சேர்ப்பதோடு அவர்களை மகிழ்வாகவும் வைத்திருங்கள்.
அவர்களின் மரணத்திற்குப்பின் அவர்களை நினைவுகூருங்கள்; அவர்களுக்காகப் பிரார்த்தியுங்கள்; அவர்களின் இலட்சியம்
அல்லது நிறைவேற்ற நினைத்து அவர்களால் முடியாமலாகி
விட்ட கடமைகள் ஏதாவது இருப்பின் அதனை நிறைவேற்றுங்கள்.

4. உலகைப் பாருங்கள்

நீங்கள் இருக்கும் இருப்பிடத்தில் மட்டுமே உலகைக் காண்பதாக
இதற்கு அர்த்தம் கொடுக்காதீர்கள். இறைவனின் அற்புதமான படைப்புகளைக் கூர்ந்து கவனியுங்கள். இயன்றால் உலகிலுள்ள
ஏழு அதிசயங்கள், இன்னும் காணக் கிடைக்காத அரியபல
விஷயங்கள் பொதிந்துள்ள வரலாற்றை எடுத்தியம்பும் நாடுகளை
வலம் வாருங்கள். குறைந்தபட்சம் உங்களைச் சுற்றியுள்ள கிராம, நகரங்களையாவது வலம் வாருங்கள். நிச்சயமாக, அது உங்களுக்கு
ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இருப்பதோடு, இறைவனின் படைப்புகளையும் அதில் உங்களின் பங்கையும் குறித்து உங்களுக்கு விளக்கித் தரும்.

5 வாழ்க்கையைப் படியுங்கள்; அதற்கு உயிர் கொடுங்கள்!

இந்த உலகில் நீங்கள் பிறந்ததற்கான காரணத்தையும் பிறப்பின்
பயனை அடைவதற்கான வழிகளையும் அறிந்து கொள்ளாமல்
நீங்கள் இந்த உலகத்தை விட்டுப் போய்விடக் கூடாது. அது பின்னர் உங்களுக்கே பேரிழப்பாக முடியும். ஆகவே வாழ்க்கையை
படியுங்கள். அதன் அடிப்படைகளை அர்த்தத்துடன் படியுங்கள்.
வாழ்ந்து மறைந்த பெரிய மனிதர்களின் வாழ்வைப் படியுங்கள்.
நாம் இந்த பூமியில் படைக்கப் பட்டிருப்பதற்கான அர்த்தம்
என்றால் என்ன என்பதை நீங்கள் அறிந்து கொண்டீர்களா?
என்பதை உறுதிப் படுத்துங்கள். அதனை உங்கள் தினசரி வாழ்வில் நடைமுறைப் படுத்துங்கள். இது ஒன்று மட்டுமே   உங்களுக்கு இவ்வுலகிலும் பாதுகாப்பாக இருக்கும்.

6. திருப்பிக் கொடுங்கள்

ஏதாவது வித்தியாசமானதாகவும் அற்புதமானதாகவும் செய்ய
முயற்சி செய்யுங்கள். ஒரு அனாதையின் வாழ்வாதாரத்துக்கு
உதவுதல், ஒரு மரத்தை நட்டு வளர்த்தல், ஏழைகளுக்கு உதவி
செய்ய ஃபண்ட் ஒன்று துவங்குதல், ஏழைகளுக்கு உணவளித்தல், தேவையில் இருப்போருக்கு இரத்தம் வழங்குதல், குழந்தை-
களுக்கும் முதியவர்களுக்கும் கற்றுக் கொடுத்தல், யாருடைய பிரச்சனைகளையாவது தீர்த்து வைத்தல், லைப்ரரி ஒன்று
உருவாக்குதல், வசதியற்ற மாணாக்கருக்குக் கல்வி கற்க
ஏற்பாடு செய்தல், வட்டியின்றித் தேவையுடையோருக்குக்
கடனுதவி செய்யக் குழு ஏற்படுத்துதல், சுற்றுப் புறத்தைத்
தூய்மையாக வைக்கப் பயிற்சியளித்தல், குடிநீர் இல்லாத
வீடுகளுக்குக் குடிநீர் கிடைக்க வசதி ஏற்படுத்துதல்.....

இப்படி எதையாவது நீங்கள் மரணிக்கும் முன்னர் இவ்வுலகுக்குத்
திருப்பிக் கொடுத்து விட்டுச் செல்லுங்கள். உங்களின் மரணத்துக்குப் பின்னர் நீங்கள் இவ்வுலகில் நேர்மறையாக நினைவு கூறப்
படுவதற்கு இது உதவும். உங்களின் நற்செயல்கள் இவ்வுலகில்
எத்தனை காலத்திற்கு நிலைநிற்கின்றதோ அத்தனை காலம்வரை
நினைவு கூறப்பட்டுக் கொண்டே இருக்கும். உங்களின் சுயநலமற்ற செயல்பாடுகள் நாளை வரும் தலைமுறையினருக்கு பயனுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுக் கொண்டே இருக்கும்.

7. திருமணம்

இது எல்லா மதங்களிலும் வரையறுத்து கூறப்பட்ட ஒரு
தீர்மானமாகும். உங்களின் கனவுகளையும் இலட்சியங்களையும் உயிர்கொடுக்க தோள்கொடுக்கத் தயாராகுபவரோடு அவற்றைப்
பகிர்ந்து கொள்ளுங்கள். அவரைத் திருமணம் புரிந்து குழந்தை-
களைப் பெற்றுக் கொள்ளுங்கள். அது உங்களுக்குப் பெருமை
சேர்ப்பதோடு, நல்ல குழந்தைகளாக வளர்த்தால் அதற்காகவும்
நீங்கள் நன்மை வழங்கப் படுவீர்கள். உங்களின் மரபுவழி
நன்மைகளை வாழ வைப்பவர்களாகவும் தங்கள் நம்பிக்கையைச் செயல்படுத்துபவர்- களாகவும் மனிதாபிமானத்தோடு இறைவனின் படைப்புகளைக்காணும் நல்ல மக்களாகவும் அவர்களை
வளர்த்தெடுப்பது உங்களின் இலட்சியமாக இருக்கட்டும்.

8. மன்னிப்பு கேளுங்கள்

உங்கள் வாழ்வில் நீங்கள் செய்த தவறுகளை நினைவு கூர்ந்து,
உங்களைப் படைத்தவன் முன்னிலையில் சிரம்பணியுங்கள்.
ஒவ்வொரு இரவிலும் படுக்கைக்குச் செல்லும் முன், உங்கள்
தவறுகளை நினைத்து மனம் வருந்தி மன்னிப்புக் கேளுங்கள்.
நீங்கள் யாருடைய மனதையாவது வேதனைப் படுத்தியுள்ளீர்களா? மக்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட நீங்கள் காரணமாக இருந்துள்ளீர்களா? யாருக்காவது தவறு இழைத்துள்ளீர்களா? இன்றே அதற்காக அவர்களிடம் மன்னிப்புக் கேளுங்கள்.

நினைவில் வையுங்கள்: நீங்கள் தவறிழைத்தவர்கள் உங்களை மன்னிக்கும்வரை, இறைவன் உங்களை மன்னிப்பதில்லை!
வருத்தங்களைப் பொறுத்துக் கொள்ளப் பழகுங்கள். முன்னர் உங்கள் வாழ்வில் மற்றவர்களால் உங்களுக்கு நடந்த  தவறுகளையும்
மீட்டிப் பார்த்து அவற்றைப் பொறுத்துக் கொள்ளுங்கள். இறைவன் உங்களின் பாவங்களை மன்னிக்க வேண்டுமெனில்,
நீங்கள் மற்றவர்களின் தவறுகளையும் மன்னிக்க வேண்டும்
என்பதை நினைவில் நிறுத்துங்கள்.

9. கடன்களை அடையுங்கள்

நீங்கள் கடனாளி எனில், அது எத்துணைப் பெரிதாக இருந்தாலும்
சிறிதாக இருந்தாலும் அவற்றைத் திருப்பிக் கொடுக்க இப்போதே திட்டமிடுங்கள். ஒரு நிமிடமும் இதற்காகத் தாமதிக்க வேண்டாம்!
கடன் என்பது ஒரு வலி; அது ஒரு சுமையும் கூட! அதனை நிறை- வேற்றவில்லையேல் அதற்காக மிகப்பெரிய பலனைத் திருப்பிக்
கொடுக்க வேண்டியிருக்கும்.

10. முன்னுதாரண மனிதராகுங்கள்

ஆமாம்! உங்கள் குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கு, உறவினர்-
களுக்கு, என அனைவருக்குமாக நீங்கள் நல்ல குணங்களுக்குச் சொந்தகாரரான ஒரு முன்னுதாரண மனிதராகுங்கள். அனைவரும் மரியாதையுடன் பார்க்கும் படியான மனிதராகுங்கள். மனிதர்கள்
தங்களின் தேவைகளுக்காக உங்கள் பக்கம் திரும்ப வைக்கும்-
படியான நல்ல மனிதராகுங்கள். உங்கள் மரணத்துக்குப் பின்னரும்
நல்ல காரணத்திற்காக நீண்ட காலம் மக்கள் நினைவு
கூறும்படியான   நற்பண்புகளுக்குச் சொந்தக்காரராக மாறுங்கள்.

இந்தப் பத்து விஷயங்களையும் உங்கள் மரணத்துக்கு முன் செயல்படுத்துங்கள். இவ்வுலக வாழ்க்கை என்பது மிகக் குறுகியது;
எனவே இவற்றை உடனடியாகச் செயல்படுத்த ஆரம்பியுங்கள்.
நேரத்தை ஒருபோதும் வீணாக்காதீர்கள். செய்யும் செயலை அர்த்தமுள்ளதாகவும் ஒருபோதும் வருத்தப்படுத்தாததாகவும்
செய்யுங்கள். மிக முக்கியமாக, உங்கள் செயல்களை இவ்வுலகிலும்
மறு உலகிலும் ஒன்று போல் வெற்றிக்குரியனவாகத் தேர்ந்து செய்யுங்கள்.

எனவே, வெற்றிக்கான இந்தப் படிகளை உங்கள் மரணத்துக்கு
முன்னர் செயல்படுத்த இப்போது உங்கள் முறை! இவற்றை
இன்றே, இப்போதே ஆரம்பித்து வெற்றியாளர்களாகத் திகழுங்கள்.

(நன்றி : Therevival.co.uk என்ற ஆங்கிலத் தளத்தில் வெளிவந்த
"Ten Things To Do Before You Die" என்ற கட்டுரையின் தமிழாக்கம்.)


சனி, அக்டோபர் 02, 2010

மனதினிலே பார்த்து விட்டேன்!

                    




மனதினிலே பார்த்து விட்டேன்!


அன்னிக்கி அது மாதிரி தாங்க வார லீவு வீட்டிலிருந்தேங்க. பாத்ரூமுக்கு குளிக்கப் போன நான் மறதியோ பழக்க தோஷமோ, போவட்டும், 'தங்ஸ்'க்கு உதவியா இருக்கட்டுமேன்னு சுத்தமா பக்கெட்லேந்து சிட் அவுட் வாஷ் பேஸின் வரைக்கும் பளிச்ன்னு கிளீன் செய்து வைத்து விட்டு, (பேச்சிலர்ஸ்ஸா இருந்த போது இதைத்தானே செய்துக் கொண்டி ருந்தோம் என்ற நினைப்பிலேயும் ) ...

குளித்து விட்டு வெளில வந்தா ஒரே கலைப்பா இருக்கேன்னு ஒரு லெமன் ஜூஸ் போடச் சொல்லி (அல்ல போட்டு) குடித்து விட்டு (இப்படி சொல்வதனால ‘ரங்ஸ்’ களெல்லாம் என்னை தாப்பா எடுத்துக்கப் படாது. ஏன்னா அங்கிட்டும் அப்படி தானென்று எங்களுக்கு அப்பவே தெரியும்ங்க ஹி..ஹி.. ) சரி மேட்டருக்கு வர்றேன்.

பின்னர் அவுக பாத்ரூம் போய்  பாத்திருப்பாங்க போல, பதறியடிச்சிக் கிட்டு ஓடியார்ராக (அப்படித் தான் எனக்கு தெரிந்தது) என்னமோ ஏதோ வென்று பதறிப் போய் 'லேப்டாப்பை' தூக்கி பெட் மீது வீசி விட்டு, எழுந்தே நின்று விட்டேன்!

"என்னாங்க இப்படி பண்ணிட்டு வந்திருக்கீங்க"

"என்..ன்னா.. ?" என்றேன்.

"பாத்ரூம இப்படி பளிச்சுன்னு கிளீன் செஞ்சு வச்சிருக்கீங்க பக்கெட்டேல்லாம் பள பளாங்குது...? "

அதுக்கு..??

"ஹி..ஹி.."

"அய்யய்யோ சிரிக்கிறாங்க டோய்... மண்டைக்குள் ஏதோ பொறி தட்டி பல்பு எரிந்தது..தொண்டைக்குள் ஏதோ அடைப்பது போலிருந்தது, சுதாரிச்சிக்கிட்டு.."

"அதுக்கென்ன இப்ப ? "

ஏதும் விளங்காதவனைப் போல் முகத்தை வைத்துக் கொண்டு....
(நாம் தான் அதெல்லாம் கரெக்ட்டா செய்வோமே...!!)

"ஒன்னுமில்லீங்க..ஹி..ஹி..! "

(அய்யய்யோ மறுபடியும் சிரிக்கிறாங்க டோய் எடத்த காலி பண்ணிட்டு குதிச்சு ஓடுடாய்.., என்று மனசு சொன்னாலும், சிரிச்சிட்டாங்களே இன்னொரு மனசு அடியெடுத்து கொடுக்க, நானும் ஹி..ஹி.. (இதுக்குப் பேர் வழிதலல்ல கம்பீரம்னு எடுத்துக்கணும் ஹி..ஹி..)

இந்த 'தங்ஸ்'களெல்லாம் செம கில்லாடிங்க! நம்ம முகத்தில் என்ன எழுதியிருக்குன்னு அப்படியே ‘ஸ்கான்’ பண்ணிடுவாங்க...

(அத மறைக்க  ஏதாச்சும் கூடிய விரைவில்  கண்டு பிடிக்கணும். இருக்கட்டும் கண்டு பிடிப்போம்..)

அந்த நேரத்தில் கோட்டை விட்டோம் அம்புட்டுதேன்... அப்படி என்னா எழுதி இருந்துச்சோ என் முகத்தில் எனக்கே தெரியலீங்க.. எனக்கெப்படி தெரியும். அதானே!! அவுக படிச்சிட்டாக போல… படிச்சவுகல்ல...!!

ஆஹா இத ரொம்ப நுணுக்கமா ஹேண்டில் பண்ணனும் டோய் என்று நெனச்சுக்கிட்டிருக்கும் போதே...'அவங்க சொன்னாங்க'...,

"நா என்னா தான் கிச்சான கிளீன் பண்ணினாலும் (பண்ணினாத் தானே) கிச்சன்..கிச்சன்.. மாதிரி இல்ல.. அதனால ...!"

"வெளங்கிடும்" என்று சொன்னது வெளியில் தெரியாம அதை காற்றில் மேய விட்டுட்டு, பிறகு pause button-ன on பண்ணி..

"அதனால ..!! " (இப்பவும் கம்பீரமாக கேட்டேன்..)

"நீங்களே கிளீன் பண்ணிடுங்க" ஒரு க்கி..க்கி.. விட்டுப் போய்ட்டாங்கைய்யா ..!!

சொந்த செலவில் சூனியம்.., தலையில் மஞ்சத் தண்ணி .., சேச்சே ...அதெல்லாம் சொல்ல மாட்டேங்க.. இதுல வலையுலக “அன்புச்” சகோதரிக லெல்லாம் ஒன்று சேர்ந்து 'தங்ஸ்'க்கு உதவியா இருங்கன்னு என்று வேற அட்வைஸ் மழை (..நற.. நற..) செய்ததாலும்..!!

இருங்க... !

ஏதோ ஒரு வாசனை வருதே!! அதென்ன...?? காபி வாசனை மாதிரி...!! கண் முழிச்சிட்டேங்க...!!

'தங்ஸ்' எதிரே புன்னகையுடன் முகத்தை வைத்துக் கொண்டு காபியுடன் வந்து எழுப்ப..

அட... அது... புரூ காபிம்மா... நம்புங்க...!!

அடடா 'தங்ஸ்'களெல்லாம் என்ன சொன்னாலும் எவ்வளவு
நல்லவுக, நாம தான்  தப்பு தப்பா புரிஞ்ச்சிக்கி றோம்னு நெனக்கக் கூடாதுன்னு...நெனச்சிக்கிட்டே எழுந்து பாத்ரூமைப் பார்க்க ஓடினேன்.

ஹி..ஹி.. இப்பயும் அங்கிட்டு தான் வேலையா??


சனி, செப்டம்பர் 04, 2010

கிச்சனில் "தங்ஸ்கள்" படும்பாடு!!

கிச்சனில் "தங்ஸ்கள்" படும்பாடு


நீங்க டைனிங் டேபிளில் உட்கார்ந்துகிட்டு உப்பு சரி இல்ல (Bp இருந்தாலும்) காரம் சரி இல்ல (அல்சர் இருந்தாலும்) என்று சொல்லிக் கிட்டு இருக்காதீங்க பாஸ். ஒரு எட்டு கிச்சனுக்குள்ளும் நுழைந்து அங்க நம்ம தங்ஸ்கள் படுற கஷ்டத்தையும் பாருங்க!! என்ன நான் சொல்றது காதுல விழுதா??

நேற்று தாங்க கிச்சனுக்குள்ளே எட்டிப் பார்த்தேங்க!! என்னா கஷ்டம் ; என்னா கஷ்டம். மற்ற நாட்களிலெல்லாம் கூட பகல் நேரத்து சாப்பாட்டு பிரிபரேசன் மிஞ்சி மிஞ்சி போனா ஒரு மணி நேரம் என்றால் நோன்பு நேர வேலைகள் அதிகமென்றே சொல்லத் தோன்றுகிறது. அந்த ரெண்டு மணி நேரத்தில் கிச்சன் அமளி துமளிப் பட்டு ஓய்கிறது

ஒரு நோன்பு நேர கஞ்சி ஒரு ஜூஸ் கொஞ்சம் பஜ்ஜி அல்லது ஏதாவது வடை சட்னி செய்வதற்கே ஒரு மணி நேரத்துக்கு மேலாகி விடுகிறது. அப்புறம் ஏதாவது அடிஷனலா செய்யனும் என்றாலும் இப்ஃதார் விருந்துக்கு யாரையாவது நாம் அழைத்து விட்டாலும் கேட்கவே வேண்டாம். தங்ஸ்கள் படுற பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. நோன்பு திறக்க வந்து உட்காருவதே பெறும் பாடாகிவிடும் அவர்களுக்கு. பாவம் தானே!!

நாமெல்லாம் என்ன செய்கிறோம் நல்லா திண்டு புட்டு ஷோபாவில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு (சரி காலமேலே தூக்கிப் போடாமே அப்படியும் வச்சுக்குவோம்) மேலே சொன்ன ரெண்டு வரியைத் தானே செய்கிறோம். புரியுதா??

                                                                      
சில நேரங்களில் இவர்கள் அன்பால் செய்யும் அநியாயம் ரொம்பவா சொல்லி மாளாது. சாதரணமா மேலே சொன்ன அய்ட்டங்களை தானே தயார் செய்து சாப்பிடத் தருவாங்க. ஊஹும். ரொம்ப ஓவரான அன்பினாலே தின்ன முடியாதா அளவுக்கு எக்ஸ்ட்ரா அய்ட்டங்களை செய்து சாப்பிடச் சொல்லி அன்பைப் பொழியும் போது கொஞ்சம் ஜோப்பையும் எட்டிப் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கு!!

அன்னிக்கி அப்படித் தான் மேலே சொன்ன அய்டங்களோடு, எக்ஸ்ட்ரவாய் ஜாலர் முட்டை சமோசா, கஸ்டர்ட், சப்ஜா விதை கலந்த ஜூஸ் (குளிர்சிக்காம்) என்று நிறைய பதார்த்தங்களை செய்து வைத்து விட்டார்கள். என்னால் அவ்வளவா சாப்பிட முடியல! நாம ஒன்றும் புதுமாப்பிள்ளை யல்லவே!

அப்ப தான் நினைத்துக் கொண்டேன். கல்யாணம் முடிந்த புது மாப்பிள்ளைக்கி முதல் நாளன்று சாப்பிட முடியாத அளவுக்கு சாப்பாட்டையும், பலகரங்களையும் செய்து வைத்திருப்பார்கள். வந்திருக்கும் சுற்றமும் நட்பும் விழுந்து விழுந்து கவனிப்பார்கள். ஏன்னா புது மாப்பிள்ளையாச்சே! சந்தோசத்தின் மிகுதியால் அவரால் அதிகமாக சாப்பிட முடியாது. கொஞ்சமாவே கொறிப்பார். புதிய இடம் என்பதால் சங்கோஜமாகக் கூட இருக்கலாம்.

ரெண்டாவது மூனாவது நாளும் அது மாதிரியே செய்து வைப்பார்கள். அப்பவும் அது மாதிரியே சந்தோஷ மிகுதியால் அதிகம் சாப்பிட மாட்டார்.

மாப்பிள்ளை தான் அதிகம் சாப்பிட மாட்டேங்கிறாரே என்று நான்காவது நாள் ஒரு நார்மலான சாப்பாட்டை தான் செய்து வைப்பார்கள். அன்னிக்கு அவருக்கு அதிகமா பசிக்கும். மூணு நாளும் அரைகுறையா சாப்பிட்டது. கிடந்து முழிப்பார். அனுபவமான்னு கேட்கப் படாது.

டிஸ்கி : ஆகவே தங்ஸ்களுக்கு உதவியா நாமளும் கிச்சனில் ஏதாவது உதவிகள் செய்யணும் போலத் தோணுது!! என்ன செய்யலாம்?? நீங்களும் யோசிச்சு சொல்லுங்க சார்!!


                                                                              
                                                                                     

புதன், செப்டம்பர் 01, 2010

மனைவிமார்களை கைக்குள் போட்டுக் கொள்வது எப்படி??

                                                                            

"தங்ஸ்"களை கைக்குள் போட்டுக் கொள்வது எப்படி??


முதலில் நெடுஞ்சான் கிடையாக அவங்க காலில் விழுந்து விடுவது. (என்ன சார் இது எழுந்திரிங்க! சொன்னவுடனே இப்படியா? பொறுங்க நாம தப்பு செஞ்சுட்டோம்னா/அது அவங்களுக்கு தெரிஞ்சிட்டா மட்டும் தான் அப்படி செய்யணும், சரியா!)

அப்படி விழுந்து விட்டு தலை குனிந்தவாறே அவங்க கிட்டே இருந்து நல்ல பதில் வரும் வரை அப்படியே கிடைக்கணும். தலை தூக்கி பார்க்கக் கூடாது. மிதி விழும் அபாயம் இருக்கிறது! உஷார்!!

இதெல்லாம் ஆரம்ப தற்காப்பு தான்!!

இனி தான் பயிற்சி ஆரம்பம்.

விழி விரித்து ஜூம் லென்ஸ் போட்ட மாதிரி கண்களை வைத்துக் கொண்டு அவங்க நம்மை முறைத்தால் தலை தாழ்ந்து நடக்க பழகிக்கணும். சரியா? ம்ம்ம் நல்லா தலை யாட்டுறீங்களே! good அது தான் நல்ல பிள்ளைக்கு அழகு. அப்படி பார்க்காமல் வீம்புக்கு நாமும் முறைத்தால், நாம் பெற்ற சின்னஞ் சிறுசுகளுக்கு "மொத்து" விழும் அபாயம் இருக்கிறது.

கல்யாணத்துக்கு முன்பே கிரிக்கெட் பயிற்சி இருத்தல் கூடுதல் தகுதி உடையவராவர். ஏன்னா? ஏன்னு கேளுங்க சார்? ம்ம்ம் அப்படி தான்.

கிச்சனில் இருந்து பறந்து வரும் மதிப்பு மிக்க ஆயுதங்கள் இன்ன பிற வஸ்துக்களை கேட்ச் பிடிக்க, அடி விழாமல் தப்பிக்க...

அவங்க நம் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் போது ஏதாவது நாம் எசகு பிசகாக பேச, பொளேரென்று அடி விழுந்தால், விம்மாமல் விக்காமல் வாய்க்குள் அடக்கி அதை வெளி வர விடாமல், உறு தெரியாமல் அழிக்க பழகிக் கொள்ள வேண்டும். சரியா? சரின்னா சரி சொல்லணும்.

ஷாப்பிங் மால் சினிமா தியேட்டர் புடவை, நகைக் கடை போன்ற இடங்களுக்கு போகும் போது பர்சை அவங்க கையிலேயே ஒப்படைத்து விடுவது ஷேஃப்டிக்கு ஷே ஃப்டி!! உத்தமம்.

நம்ம அம்மா வீட்டுக்கு மறந்தும் கூட அடிக்கடி அவங்களை அழைத்துக் கொண்டு போய் விடக் கூடாது. அம்மாவை இங்கே வரச் சொல்லிடனும். அப்படியே வந்தாலும், காலையில் வந்தவங்களை இரவு தங்க அனுமதிக்கக் கூடாது. மாலைக்குள் ஒப்பேத்தி அடுப்பிடனும். புரியுதா இது ரொம்ப முக்கியமான பாடம்.

ரொம்பவும் அவங்களுக்கு ஐஸ் வைத்து நைஸ் பண்ணனும்னா, e- மெயில் f-மெயில் g-மெயில் எல்லாத்துக்கும் ஒங்கட பேரத் தான் பாஸ் வேர்டா போட்டு வச்சிருக்கேன்னு சொல்லிடனும். ஆபத்துக்கு பாவமில்ல!

அம்புட்டு தாங்க! இதத் தவிர வேற எந்த வித ஆபத்தான கட்டம் வந்தாலும், மேலே முதல் வரி இருக்கு பாருங்க அத செஞ்சிடனும். அதை by heart டா வச்சுங்க. ஏன்னா இது heart beat விஷயம் ?? இப்படியெல்லாம் நான் சொல்வேன்னு நீங்க எதிர் பார்த்தா?? Sorry !!

மேலே சொன்ன விஷயங்களை படிச்சு சிரிச்சதோட சரி ; அதை சுத்தமா உங்க மூலையிலிருந்து delete செய்து விட்டு கீழே உள்ளதை படிக்க வாங்க!

பெண்கள் நம் வாழ்க்கையில் அருமை பெருமை மிக்கவர்கள். பொறுமையானவர்கள். நம்மமோடு வாழப் பிறந்தவர்கள். அதனை மனதில் கொண்டு இதை இங்கே வரி பிறழாமல் மனதில் இருத்திக் கொள்தல் அவசியம்.
                                                                           
                                                                                  

கல்யாணமாகாத இளைஞர் பெருமக்களே நான் சொல்வதை சற்று கவனமாய் படியுங்கள்.

உங்களுக்கு வருங்கால மனைவியை நீங்கள் தேடிக் கொண்டாலும் சரி ; அல்லது உங்கள் பெற்றோர்கள் தேடி அமைத்துத் தரும் மனைவியாக இருந்தாலும் சரி ; நீங்கள் உங்கள் பெற்றோர்களிடம் மிக சரியாய் அவர்கள் மனதில் பதியும் படி, வரதட்சணை எனும் கைக்கூலி வாங்கினால் இந்த இல்லறத்தில் ஈடுபட மாட்டேன் என்று நீங்கள் கட் அண்ட் ரைட்ட்டாக சொல்லி விடுங்கள்.

காலமெல்லாம் உங்களோடு கைக் கோர்த்து வாழப் போவது உங்கள் மனைவியே யன்றி உங்கள் பெற்றோர்களோ அல்லது சொந்த பந்தங்களோ அல்ல. இப்படி செய்தாலே பெறும் பாலான மனைவிகள் அன்பினால் கட்டுண்டவர்களாவார்கள். இது நிச்சயம்.

அப்படியல்ல நாங்கள் வாங்கியே தீருவோம் என்று அடம் பிடிக்கும் பட்சத்தில், அப்படியானால் நான் என் மனைவியை அழைத்துக் கொண்டு தனி குடித்தனம் போய் விடுவேன் என்று கோரிக்கையை முன் வையுங்கள், ஒரு வேளை அப்ப அவர்களின் மன நிலை மாறக் கூடும்.

எப்படி தான் நாம் போராடினாலும் சீர் செனத்தி என்று ஏதாவது கை மாறத் தான் செய்யும். கண்டுக்கொள்ளாதீர்கள். விட்டு விடுங்கள். நான் சொல்கிற ஒரு விஷயத்தை மட்டும் மனதில் வையுங்கள்.

உங்களின் சொந்த சம்பாத்தியத்தில் கிடைக்கும் பணத்தை கொஞ்சம் கல்யாணத்துக்கு முன்பே யாருக்கும் தெரியாமல் சேமிக்க ஆரம்பித்து விடுங்கள். அதைக் கொண்டு ஐந்து பவுனிலோ (சவரனிலோ) பத்து பவுனிலோ ஏதாவது ஒரு நகை செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு அதிகமாக இருந்தாலும் ஒட்டியாணம் செய்து வைத்துக் கொண்டாலும் சரியே சந்தோஷம். அய்யா அவ்வளவெல்லாம் இல்லை என்று சொல்லும் பட்சத்தில் ஒரு பவுன் 8 கிராம் காயின்சை யாவது வாங்கி,

கல்யாணம் முடிந்து முதன் முதலில் (இரவிலோ/பகலிலோ) உங்கள் மனைவியை சந்திக்கும் போது அதை அவர்கள் கையில் கொடுத்து, இது எனது சொந்த சம்பாத்தியம், உனக்காக வாங்கி ரகசியமாய் வைத்திருந்தேன். இது என் குடும்பத்தில் யாருக்கும் தெரியாது. தெரியவும் வேணாம். உனது குடும்பத்திலிருந்தும் இந்த செய்தி வெளியே போகவும் வேணாம் என்று சொல்லி கொடுத்துப் பாருங்கள். அவர்கள் கைக்குள் நீங்கள் கொடுத்தது, அவர்கள் உங்கள் கைக்குள் வந்த மாதிரி தான். அன்பை வெளிப் படுத்த எவ்வளவோ வழிகளில் இதுவும் ஒன்று!!

இதற்கு மேல் நான் என்ன சொல்லணும் என்று எதிர் பார்க்கிறீர்கள். என் இளைஞர் பெருமக்களே போங்க போய் நிறைய நல்ல வழிகளில் சம்பாதியுங்கள்!!

உங்கள் நல்ல மனதிற்கு அருமையான குணவதியான மனைவி வாய்க்கும். இதை படித்து விட்டு, இதை படித்து தான் இப்படி செய்தேன் என்று வரும் மனைவியிடம் உளறி வைக்காதீர்கள். அங்கே உங்கள் அறிவு வெட்ட வெளிச்சமாகிவிடும். வரட்டா!!