facebook

உண்மை நிகழ்வுகள் பொது நலம் கருதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உண்மை நிகழ்வுகள் பொது நலம் கருதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், அக்டோபர் 18, 2010

'உஷார்ப் படுத்து’ங்க...!!

















'உஷார்ப் படுத்து’ங்க...!!

எனது நண்பர் ஒருவர் இங்கு (சவுதியில்) இருக்கிறார். அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை நம்மிடம் வந்து பகிர்ந்து கொண்டார். அது நம்மில் பலருக்கு பாடமாக, உதவியாக கூட இருக்கலாம்.

அதைப் பற்றி உங்களோடு ..!!!

இவரும் இவருடைய மூத்த மகனும் இங்கிருக்கிறார்கள்.
இவருடைய மனைவியும் இளைய மகனும் ஊரில் இருக்கிறார்கள்.
மாதா மாதம் சம்பளம் வாங்கி எங்கள் வங்கி வழியாகத் தான்
பணம் அனுப்பி வைப்பார். சேமிப்பில் எப்போதும் ஓரளவு பணம் வைத்திருப்பார். அந்த  மாத செலவுக்காக தேவைப் பட்ட பணத்தை
எடுத்துக் கொள்ளச் சொல்லி ஒப்புதல் கொடுத் திருக்கிறார்

அவர்கள் அந்த ஊரில் (பெயர் தவிர்க்கப் படுகிறது) உள்ள வங்கி (பெயரும் தவிர்க்கப் படுகிறது) யில் பணம் எடுக்க சென்ற போது, கவுண்டர் ஸ்டாஃபாக இருந்த பெண்ணிடம் விபரம் சொல்ல, சலானை ஃபில்லப் செய்து கொடுங்கள் என்று கேட்கவும், தனக்கு எழுத வராது என்று சொல்ல, பரவாயில்லை கையொப்பமிட்டு மட்டும் தாருங்கள் நான் மீதியை எழுதிக் கொள்கிறேன் என்றி ருக்கிறார்.

இவரும் ஒரு சலானில் கையொப்பமிட, அது லேசான குளறுபடியாக, அதை கிழித்துப் போடாமல் கசக்கி கவுண்டர் மேலேயே வைத்து விட்டு, இன்னொரு சலானில் கையொப்பமிட்டு கொடுத்து பணத்தை எடுத்து சென்றிருக்கிறார். note : இவர் எடுத்து சென்ற பணம் பத்தாயிரம். சேமிப்பில் மீதி இருந்த பணம் அறுபத்தைந்தாயிரம்.

இது முடிந்து பதினைந்து நாள் கழித்து இவர்களுக்கு ஏதோ அவசர தேவைக்காக பணம் ஐம்பதாயிரம் தேவைப் பட்டிருக்கிறது. கணவரின் ஒப்புதலுடன் வங்கியில் சென்று விபரம் சொல்லி கேட்க, உங்கள் அக்கவுண்டில் வெறும் ஐயாயிரம் மட்டுமே இருக்கு என்று சொல்லி இருக்கிறார்கள். இவர் அங்கேயே விளக்கம் கேட்காமல், பதறிப் போய் வீட்டுக்கு வந்து, கணவருக்கு போனில் தகவல் சொல்லி இருக்கிறார்.

இவருக்கும் என்ன சொல்வது என்று தெரியாமல் நாட்டாமை என்னிடம் வந்து விட்டார். நாம தான் அப்பவும் இப்பவும் எப்பவும் எல்லோருக்கும் உதவும் அறிவுக் களஞ்சியமாச்சே! "நீங்க எல்லாருமே இப்படி என்னை புகழ்ந்தால்.. ஹி..ஹி.. நான் என்ன செய்வேன் (இருக்கட்டும்.. இருக்கட்டும்)

"நீங்க ஒன்னும் பதஸ்ட்டப் படாதீங்க. ஊரில் விபரமா பேசக் கூடியவர்கள் யார் இருக்கிறார்கள்" என்றேன். "அவங்க தாய் மாமா இருக்கார்" என்றார்.

அவரிடம் "நாளை பேங்க் டேமஜரிடம் போய், "இது மாதிரி விவகாரம் நடந்திருக்கு. நீங்க தீர்வு சொன்னா சரி... இல்லையேல் போலீஸுக்கு தகவல் சொல்லிட்டு, வில்லங்களை விவரித்து எழுதும் பத்திரிகையின் பெயரையும் சொல்லி, கன்ஸ்யூமர் கோர்ட்டுக்கு போகும் படியாய் இருக்கும் என்று மட்டும் சொல்லச் சொல்லுங்க போதும் " என்றேன்.

எப்பூடி??!! நாமெல்லாம் சட்டங்கள்லேயே, பல சட்டங்களை கரச்சு குடிச்சவங்களாச்சே. நம்மகிட்டேயேவா?? ஓஹோன்னானாம்.

அந்த மங்குனி டேமஜர் அரண்டு போய், "நீங்க அப்படியெல்லாம் ஒன்றும் செய்து விட வேண்டாம். அதற்குள்ள தீர்வை நாளை சொல்கிறேன்", என்று சொல்லி இவரை அனுப்பி விட்டு, உள்ளே வட்ட மேஜை மாநாடு நடத்தி இருக்கார். (பேங்க்ல வட்ட மேஜை யெல்லாம் இருக்கா... என்ன??)

நடந்த மேட்டர் இது தான். இவர் மனைவி கிழித்துப் போடாமல்,
ஞாபக மறதியாய், கவுண்டர் பெண்மணியின் மேஜை மேல்,
கையொப்ப மிட்ட சலானை வைத்து விட்டு வந்தது தான். அந்த பெண்மணியும், வங்கியின் கேஷியரும், அந்த சலானை வைத்து ஐம்பதாயிரம் பணத்தை 'உஷார்' செய்திருக்கிறார்கள். விவரம் வெளிச்சத்துக்கு வராமலிருக்க,  அந்த பெண்மணியை அன்றே
‘சஸ்பென்ட்’ செய்திருக்கிறார்கள்.

நான் கேட்கிறேன், அந்த கேஷியர் மட்டும் என்ன ‘புண்ணியம்’ செய்திருந்தார் அவரை மட்டும் விட்டு வைக்க??

இங்கிருந்து நாம் அவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாத்தித்து அனுப்புவதை எல்லாம் இந்த மாதிரி வாழும் புண்ணியவான்கள் நம் மக்களை இப்படி அல்லல் படுத்துவதற்கு தானா??

டிஸ்கி : இது சம்பத்தப் பட்ட வங்கி 'ஆப்பீசர்'கள்,  ஊழியர்கள் யாரேனும், இதைப் படிக்க நேர்ந்தால் உணர்ச்சி (இருந்தால்) வசப்பட்டு இங்கே கருத்துரை எழுதி விடாதீர்கள். நான் முடிந்த வரை மூடி மறைத்தே எழுதியிருக்கிறேன். அப்புறம் உங்கள் வங்கியின் பெயர் ஊரறிந்த விஷயமாகி விடும். இது எங்கள் வலையுலக சகோதர எழுத்தாளர்களுக்கும், எங்களைப் படிக்கும் வாசகர்களை 'உஷார்ப்'  படுத்தவுமே....!!