facebook

வெள்ளி, ஜூன் 11, 2010

விருந்தினர் பக்கங்கள்


விருந்தினர் பக்கங்கள் :


     நான் இங்கு வந்த பின்பு, நாங்களாகி போனது கடந்த ஆறு ஏழு வருடத்திற்கு முன்பு தான். தனியாக இருந்த காலத்தில் எப்படியும் பத்து பதினைந்து பிளாட் மாறியிருப்பேன். இவர்கள் எல்லாம் வந்த பின்பு மாறியிருப்பது இது ரெண்டாவது பிளாட்.

      சமீப காலமாய் இங்கு பாமிலி பிளாட் கிடைப்பது ரொம்ப சிரமமாயிருக்கிறது. அப்படியே கிடைத்தாலும் ரெண்ட் ரொம்ப தாஸ்தி. அந்த பிளாட் தேடி அலைந்த கதையை வேறு தனி இடுகையாய் எழுதுகிறேன்.

     பிளாட் தேட ஆரம்பித்ததுமே பால்கனி இல்லாத பிளாட் எதுவும் நமக்கு வேண்டாம் என்று வீட்டம்மா ஸ்ட்ரிட்டா சொல்லிட்டாங்க. ஆஹா அவங்க பேச்சுக்கு மறு பேச்சு பேச முடியுமா.(அதானே! எனக்கு நானே பயந்து கொண்டு, என்னை நானே இப்படி கேள்வியும் கேட்டுக்கொள்வேன்)

     இந்த பிளாட்டில் பால்கனி சுமாரான பெரிசு. கதவை திறந்தாலே வெளிக்காற்று சில்லென்று வரும். (வெயில் நேரத்தில் அல்ல) "ஹா" என்று திறந்த மாதிரி இருப்பதால் புறாக்கள் வந்து வந்து உட்கார்ந்து போவது தனி அழகாக சுவாரஸ்யமாக இருந்தது.

     அதுவே கொஞ்ச நாளில் பல்கி பெருகி வர ஆரம்பித்து, பால்கனி நாஸ்தியாகி போனது. பால்கனி வேண்டும் என்று சொன்ன வீட்டுக்காரம்மா புறாக்களின் எச்சங்களை அள்ளிப்போட்டு கழுவி சுத்தம் பண்ணியே கை அசந்து போனாங்க. ஒரு கட்டத்தில் வெறுத்தே போய்ட்டாங்க.

     ஹை ஜாலி!! அது தானே நமக்கு வேண்டும். அப்படியே கிட்ட போய் இந்த புறாக்கள் வராம இருக்க வலை மாதிரி உள்ள ஸ்க்ரீன் வாங்கி கட்டி விடுவோம். என்ன கொஞ்சம் செலவாகும் என்றேன். அவர்களுக்கு செலவை பற்றி ஒரு கவலை (பின்னே இருக்காதா?) ஒரு பக்கம் மகிழ்ச்சி!! புருஷன் ஆதரவா சொல்றேன்னு. (எப்படி நம்ம கோ ஆபரேஷன் ?) இதுதானய்யா மனுஷனுக்கு வேணும். அதுக்கு தானே ஓடியாடி சம்பாதிக்கிறோம்.

     ஸ்க்ரீனும் போட்டாச்சு, காற்றோட்டமாய் இருக்க அதை இழுத்து கட்டாமல் அசைந்தாடுவது போலும் விட்டாச்சு. ஆனாலும் அந்த ஸ்க்ரீன் அசைந்து விலகும் நேரத்தில், உள்ளே புறாக்கள் புகுந்து திரும்பிப் போக வழி தெரியாமல் வந்து வசமாய் மாட்டிக் கொள்ளும். மாட்டிக்கிச்சா... மாட்டிகிச்சு. இப்ப அவை தானே நமது விருந்தினர்கள்.
                                                                             

                                                        
       இப்ப பிரச்சினையே என்னன்னா அதை பிரியாணி போடுவதா?  குருமா போடுவதா? பொரிப்பதா? ஆக்குவதா? இதுக்கெல்லாம்...Siss. ஆசியா உமர், ஜலீலாக்கா, மல்லிகாக்கா, நாஸியா (பிரியாணி அவங்கதானே) ஸாதிகா, சஸிகா, கீதா ஆச்சல், இன்னும் அறுசுவை தளங்கள் என்னென்ன இருக்கோ அதையெல்லாம் அலசியாகிறது. பெயர் விட்டுப்போனவர்கள் (நான் புதுசு தானே) ஹி..ஹி..சாரி..

      இப்படி தான் ஹுசைனம்மா, அனன்யா மகாதேவன் ஆகியோர்கள் சொல்கிற, எங்களை மாதிரியுள்ள “ரங்கஸ்” களின் பிழைப்பும் ஓடுகிறது!!

**                                                                                                                                                    

**

**

விளம்பர சுவாரஸ்யங்கள்





நம்ம திரிஷா.

பாத்ரூமில் பல்விளக்கிக் கொண்டிருக்கும் ஒருவர் ஸ்ஸ்ஸ்.. ஆஆஆ.. என்று கத்துகிறார். சொல்லிவைத்தார் போல் இவரும் மைக்கை பிடித்துக்கொண்டு "உங்களுக்கு பல்லில் கூச்சமிருக்கா?" என்கிறார். எப்படி இதெல்லாம் இவரால் முடிகிறது !

      இதெல்லாத்தையும் விட கொடுமை. ப்ளைட்டில் போகும் ஒருவருக்கு ஜில் தண்ணி குடித்த வுடன் ஸ்ஸ்ஸ்.. ஆஆஆ.. கிறது. டிக்கெட் போட்டுக்கொண்டு போய் கேட்கிறார். எப்படி சார்?. இந்த விளம்பரம் எடுக்கும் கம்பெனியை ரெண்டு போட்டால் சரியா வரும். நாமெல்லாம் விளம்பரம் பார்ப்பதற்கென்றே, படத்தை பார்க்கிற ஆட்கள் அதிலும் இந்த அழிச்சாட்டியம் தாங்கமுடியலை!


இன்னொரு விளம்பரம் கால்வின் கெவின் என்று நினைக்கிறேன்.

     இதில் ஒரு சிறுவன் அப்பாவிடம் வந்து சாவி கொடு கார் ஓட்டனும் என்கிறான். நீ வளர்ந்த பிறகு என்கிறார். பையன் உடனே போய் பிரிட்ஜிலிருந்து பாலை எடுத்து குடித்து விட்டு வருகிறான். குடித்த பால் கொஞ்சம் மேலுதட்டில் மீசை வரைந்த மாதிரி இருக்க, அப்பாவிடம் அவன் வந்து கார் சாவியை கேட்கும் அழகே அழகு!


இன்னும் என்ன சொல்ல...

இருங்க -

இந்த வார டிஸ்கி போடலன்னா பதிவர்கள் கோச்சுக்குவங்கன்னு சொன்னாங்க.

ஆகவே -

டிஸ்கி : அது டிஷ் சம்பந்தப்பட்டது

முஸ்கி : அது குஷ்பு சம்பந்தப்பட்டது

கிஸ்கி : அது ஹிந்திங்க!!நமக்கு தெரியாது. ஐயோ ஆள விடுங்க!



````````````````````````````````````````````````````````