வியாழன், ஜூலை 29, 2010
மலைச்சாமி
இங்கு சவுதியில் Al gosaibi, Al zamil, Kanoo, Olayan, Jufali, Ali Reza ஆகிய ஐந்தாறு பெரிய கம்பெனிகள் இருக்கின்றன. அவைகள் எல்லாம் ஒன்று சேர்ந்தால் செமி கவர்ன்மெண்ட் என்று சொல்வார்கள். அந்த கம்பெனி ஒன்றில் தான் நம்ம மலைச்சாமி வீட்டு டிரைவர் வேலை பார்த்து வருகிறார். இவரின் பூர்வீகம் மதுரை என்றாலும் வசிப்பிடம் தற்போதைய மதரசாப் பட்டணம். நாங்கள் அவரை செல்லமாக சாமி என்றே அழைப்போம்
பெரியக் கம்பெனி வீட்டு டிரைவர் ஆகையால் சம்பளம் மூவாயிரம் ரியாலுக்கு குறையாமல் வாங்கினார். பெரிய அளவில் படிப்பு இல்லா விட்டாலும் விவரமா பேசுவார். மற்றவர்களை அவர் சொல்லி நகையாடியது கிடையாது. ஆனால் மற்றவகளின் கிண்டல் பேச்சுகளில் வகையாக மாட்டிக் கொள்வார்.
இரவு எத்தனை மணியானாலும் எங்கள் ரூமை கடந்து போகும் போது, போனில் கூப்பிட்டு “ஒரு சுலைமானி போட்டு வைங்க”(பால் கலக்காத டீக்கு அந்த பேர்) என்று சொல்லி குடித்து விட்டு தான் போவார்.
இந்த மாதிரி மேல் மட்டத்து குடும்பங்களில் எல்லாம்
மட்டன் கறி கிலோக் கணக்கில் வாங்க மாட்டார்கள்.
முழு ஆடுகள் தான். இவர் தான் போய் அறுத்து, வெட்டி
வாங்கி வருவார். இப்படி தான் ஒரு நாள் எங்களுக் கெல்லாம் லீவு நாளாக இருந்ததால் எங்களையும் தன் கூட வரச் சொன்னார். சரி சும்மா தானே இருக்கோம் என்று எங்களின் இரண்டு மூன்று நண்பர்களையும் சேர்த்து அழைத்துக் கொண்டு போனோம்.
அவர் நேராக அரபுகாரனிடம் சென்று ஏதேதோ
சொல்லி விலைபேசி ஒரு ஆட்டை வாங்கி வெட்டச் சொல்லிவிட்டார். எட்டி நின்றதால் அவர் என்ன பேசினாரென்று எங்களுக்கு விளங்கல. இருந்தாலும் நம்மில் கூட வந்த கிண்டல் புடுச்ச நண்பர் ஒருவர் "சாமி ஆட்டுக் கறியில் முடி ஒட்டிக் கிட்டா
அது அவ்வளவா நல்லா இருக்காது. அதனால முடி ஒட்டாம வெட்டிக் கொடு என்று அரபுக்காரனிடம் போய் சொல்லு" என்று சொல்ல, அவரும் இவர்களின் கிண்டலை கவனிக்காமல் போய்க் கொண்டிருந்தார்.
நாங்கள் அவருக்குத் தெரியாமல் பின்னாடியே போனோம். அவர் அந்த அரபுக்காரனிடம், தன் முழங் கையை நீட்டி, இன்னொரு கை விரலால் தொட்டுக் காட்டி, "மேரா போலோ.. (B)பால் டச் நை கரோ" என்றார். (நான் சொல்கிறேன் முடி படாம வெட்டிக் கொடு என்று அர்த்தமாம்) நாங்க ளெல்லாம் விழுந்து புரண்டு சிரித்தோமே யொழிய, சாமி சளைக்கவில்லை. "ஏப்பா
நான் சொன்னது அவனுக்கு வெளங்குனுச்சு, அவன் சொன்னது எனக்கு வெளங்கிடுச்சு, போவியளா" என்பார் முத்தாய்ப்பாக..
இனி சாமியோடு ஒட்டிய அவரது சொந்த நிகழ்வுகளுக்குள் பேசிக் கொண்டே போகலாம்
வாங்க!!
சாமிக்கு சவுதியிலேயே வாழ்க்கை ஓடிக் கொண்டி ருக்கிற காரணத்தினாலும், இங்கு பழகியவர்களின் ஈர்ப்பினாலும் முதல் குழந்தை பிறந்தவுடன் (இப்போதைக்கு முந்திய மன்னரின் பெயரான) ஃபஹத் என்ற பெயரை வைத்து விட்டார். நாங்கள் ஏனென்று கேட்ட போது "இந்த மண் தான் என்னை செழி
செழிப்பாக வாழ வைத்தது, இதற்கு நானென்ன கைம்மாறு செய்தேன்" என்பார் இந்த படிக்காத மேதை.
இரண்டாவது பிரசவத்தின் போது ரெட்டைக் குழந்தை
பிறந்ததால், பிரசவம் பார்த்த டாக்டரின் பெயரான மேரி
என்று பெண் குழந்தைக்கும், இன்னொரு ஆண் குழந்தைக்கு தனது குல சாமியின் பெயரையும் வைத்து விட்டார்.
இவைகளுக்கு குடும்பத்தில் எதிர்ப்புகள் இருந்த போதும்,
அவைகளை புறம் தள்ளி வைத்து விட்டே சமாளித்து வந்தார். பிள்ளைகள் வளர்ந்து ஸ்கூல் படிப்பை எட்டும் வரை...!
அதன் பின் தான் குழந்தைகளை ஸ்கூலில் சேர்த்த போது சின்ன சின்னதாய் பிரச்சினைகள் முளைக்கத் தொடங்கின. ஃபஹத், மேரி என்கிற பெயர்களை மாற்றச் சொல்கிறார்கள் என்று வந்து சொன்னார். ஏன்?
அது மாதிரி பெயர்கள் வைக்கக் கூடாதா??
லேபிள்கள்:
உண்மை நிகழ்வுகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

