facebook

செவ்வாய், பிப்ரவரி 22, 2011

இடிந்த தேசத்தில் இருந்து ஓர் இடிமுழக்கம்

பரங்கிப்பேட்டை (Portonovo) கைமணம் சாப்பாட்டில் இருப்பது
போல், இந்த ஊர் எழுத்தின் வீச்சு படிக்கும் மனங்களை
கிறங்கடிக்கும். ஏற்கனவே இந்த ஊரின் புகழை தன் எழுத்தில்
தக்க வைத்துக் கொண்டிருக்கும் நம்ம தல ‘ஜெயலானி’ய
தெரியாதவர்கள் இந்த 'படிக்கும்' உலகத்தில் மிக சொற்பமே!!

இப்ப அதே ஊரை சேர்ந்த நண்பர் இப்னு ஹம்துன் (ஃபக்ருத்தீன்)  இவருடைய எழுத்தை "இடிந்த தேசத்திலிருந்து ஓர் இடிமுழக்கம்" 
கொஞ்சம் கீழே படித்து விட்டு  “எழுத்தோவியங்கள்” இங்கே
சொல்லுங்கள்.


இடிந்த தேசத்திலிருந்து ஓர் இடிமுழக்கம்

"என் தேசத்தை; அதன் மீதான ஆக்ரமிப்பை; அது குற்றப்
பின்னணி உடையவர்களாலும் யுத்த வெறியர்களாலும்
ஆளப்படும் அவலத்தை; அமெரிக்காவின் அப்பட்டமான சுயநல
வெறியை; சுரண்டலை வெளிஉலகுக்குத் தெரிவிக்க அனைத்து உபாயங்களையும் நிச்சயம் மேற்கொள்வேன்" என்கிறார் அந்தப்
பெண். உலகின் மிக தைரியமான பெண் என்றும் பாராட்டப்-
படுகிறார் அவர்.

உலகின் சக்தி வாய்ந்த 100 பேரில் ஒருவராக, கடந்த மே மாதம்
டைம் பத்திரிக்கை தேர்ந்தெடுத்திருந்தவர்களுள் அவரும் ஒருவர்.
அவர் பெயர் மலலாய் ஜோயா. ஆஃப்கனிஸ்தானின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். "எனது நாடு, அதன் முன்னேற்றம்
குறித்து பெரும் கனவுகளைச் சுமந்தலைகிறேன்" என்கிறார்.

லோயா ஜிர்கா எனப்படும் ஆப்கன் மக்களவைக்கு 2007 ஆம்
ஆண்டு, தன்னுடைய 28 வயதில் தேர்தல் வெற்றி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, நாட்டின் மிக இளவயது நாடாளுமன்ற
உறுப்பினர் (MP) ஆக இருந்த ஜோயாவை, அவருடைய மூன்று
நிமிட உரையை எதிர்கொள்ள முடியாத ஆஃப்கன் நாடாளுமன்றம் பதவிபறிப்பு செய்து அவரை வீட்டுக்கு அனுப்பியது. ஆனால்
ஜோயாவின் பயணம் அதிலிருந்து தான் தொடங்கிற்று எனலாம்.

பன்மைச் சமுதாயங்களும் மனித உரிமைகளும் என்கிற
தலைப்பில் நடைபெற்ற உலகளாவிய கருத்தரங்கில் கலந்து
கொள்ள கனடாவின் மாண்ட்ரியல் நகரிலுள்ள மெக்கில் பல்கலைக்கழகத்திற்கு கடந்த செப்டம்பரில் ஜோயா வந்திருந்தார். உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், சட்ட
நிபுணர்கள், அரச தந்திரிகள், மனித உரிமை ஆர்வலர்கள் என்று உயர்நிலையில் உள்ள பலரும் கலந்துகொண்ட கருத்தரங்கு அது.

மாண்ட்ரியல் கருத்தரங்கில் இவருடைய உரையைக் கேட்ட
ஒட்டாவா பல்கலை பேராசிரியர் டெனிஸ் ரான்கோர்ட் இப்படி
எழுதுகிறார்: "இவருடைய உரை ஒரு கூரிய ஆயுதமாகச்
செயற்பட்டு, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நேச நாடுகளின்
போர்ப்பிரச்சார கடின வலையை சுக்குநூறாகக் கிழித்தெறிந்து
விட்டது. நம்முடைய எம்.பிக்கள் இவரிடம் பாடம் படிக்க
வேண்டும்"

ஒபாமா சமாதானத்துக்கான நோபல் பரிசு வாங்கிய சமயம்,
ஜோயாவை முன்னிறுத்தி பிரபல மனித உரிமை ஆர்வலர்
நோம் ச்சோம்ஸ்கி இப்படி குறிப்பிட்டார்: "நோபல் கமிட்டிக்கு
என்ன நேர்ந்துவிட்டது, ஜோயா போன்ற எளிய வாய்ப்புகள்
இருந்தும் கூட ...."

"எங்கள் விடுதலை வேட்கை நூறாண்டுகளைக் கடந்தது.
கண்ணியமும் நீதமும் நிரம்பியது. ஆனால் அது மிக நீண்ட
தொரு பெரும் போராட்டம். சிறுதுளிகள் சேர்ந்தே பெரு
வெள்ளமாகும் என்பதை அறிந்தே வைத்திருக்கிறேன். எங்கள்
மக்கள் மட்டும் நீதிக்காகவும், ஜனநாயகத்திற்காகவும் ஒன்று
பட்டு விடுவார்களேயானால் அது காட்டாற்று வெள்ளமாகிவிடும். யாராலும் தடுத்துநிறுத்த முடியாது" என்கிறார் ஜோயா.

"சிறுசிறு இனவாதப் பிரச்னைகளாலும், குழுச்சண்டைகளாலும்
சிதறுண்டுப் போகாமல், நாட்டு நலன் நாடி பொது எதிரிக்கு
எதிராக ஆஃப்கனியர் ஒன்று திரளவேண்டும்"

"தாலிபன்களையும், அல்-காய்தாவையும் காரணம் காட்டி
அமெரிக்கா சுரண்டலை மேற்கொள்கிறது. உண்மையில் தீவிரவாதத்திற்கெதிரான போர், தீவிரவாத வளர்ச்சிக்கே
வித்திட்டது" என்கிறார் ஜோயா.
உள்நாட்டில் பலத்த ஆதரவையும் அரசியல் எதிர்ப்பையும்
கணிசமான அளவு சம்பாதித்து வைத்திருக்கும் ஜோயா,
ஒரு சமயம் முஜாஹிதீன்களைப் பற்றி குறிப்பிட்டதும்
சர்ச்சையை உண்டாக்கியது: "இரண்டு விதமான முஜாஹிதீன்கள் இருக்கிறார்கள். ஒரு தரப்பினர் நாட்டு விடுதலை என்கிற
இலக்கு நோக்கி மனப்பூர்வமாகப் பாடுபட்டனர். அவர்களை
மதிக்கிறேன். ஆனால் மற்றொரு தரப்பினர் பதவிச் சண்டைக்காக
சொந்த நாட்டின் 60,000 மக்களை கொன்று குவித்தவர்கள்......".
உடனடியாக கம்யூனிஸ்ட் முத்திரை இவர்மீது குத்தப்பட்டது.
இவருடைய தந்தையோ முஜாஹிதீன்களுடன் சேர்ந்து
சோவியத் ரஷ்யாவின் ஆக்ரமிப்பை எதிர்த்துப் போரிட்டு
ஒரு காலை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

"மெளனம் ஒருபோதும் வாய்ப்பாகாது" என்கிற ஜோயாவிடம்
"பன்னாட்டுச் சமூகத்திடமிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?"
என்று கேட்கப்பட்டபோது "நீங்கள் (பன்னாட்டு அரசுகள், சமூகம், அமைப்புகள்) எங்களுக்குச் செய்ய முடிகிற மிகப் பெரிய உதவி, அமெரிக்காவின் பின்னால் போகாமல் இருப்பதுதான்"

"நேட்டோ படைகளுடன் சேர உங்கள் நாட்டுப் படைகளை
அனுப்பாதீர்கள்" என்று உடனடியாக விடையிறுக்கிறார். ஸ்வீடன்
முதலான நாடுகளுக்கு இதே கருத்தை வலியுறுத்தி சுற்றுப்-
பயணமும் ஜோயா மேற்கொண்டிருந்தார்.

நான்கு முறைக்கும் மேல் தன் மீது நடத்தப்பட்ட மரணத்
தாக்குதல் களிலிருந்து தப்பியிருக்கும் ஜோயா, பல நாடுகளுக்கும்
பயணம் செய்திருக்கிறார். "உங்கள் பயணத்தில் நீங்கள் கண்டது
என்ன?" என்று கேட்டால், "மக்களுக்கும் அரசுகளுக்கும் இடையே
இருக்கும் தூரம்தான், அது கடக்க இயலாததாக மாறிவருகிறது"
என்று பதிலளிக்கிறார். ஜாமியா மில்லியா பல்கலைகழகத்தின்
கருத்தரங்கு ஒன்றிற்காக ஜோயா இந்தியாவுக்கும் வந்திருக்கிறார்.

இப்னு ஹம்துன் (பஃக்ருத்தீன்) சவூதி

நன்றி : இந்நேரம்


**********************************************************************************

  ASHROFF SHIHABDEEN
 
இவ்வருடம் மலேசியாவில் நடை பெறவுள்ளதாக அறிவிக்கப்-
பட்டிருக்கும் 'உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக்கான தகவல்களை' இங்கே சென்று படியுங்கள்.

"நாட்டவிழி நெய்தல்"



26 கருத்துகள்:

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

present

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அருமையான கட்டுரை. அறிமுகத்திற்கு நன்றி!

ASHROFF SHIHABDEEN சொன்னது…

நன்றி சகோதரரே. அவசியமானவற்றை எழுதுவது மட்டுமல்ல தேடிப் பொறுக்கி மற்றோர் முன் விருந்தாகப்படைப்பதும் ஒரு மக்கள் சேவைதான். அப்பெண்ணிடம் ஆண்கள் கற்றுக் கொள்ள வேண்டிய விடயங்கள் நிறைய இருப்பதாக உணர்கிறேன்.

ஜெய்லானி சொன்னது…

கொஞ்சம் திருந்துற மாதிரி தெரியுது ஓக்கே..ஓக்கே..!!

Asiya Omar சொன்னது…

pakirvukku nanri.

இப்னு ஹம்துன் சொன்னது…

"ஆஹா பக்கங்கள்"

ஆஹா ! பொருத்தமான பெயர்.



நன்றியும், நெகிழ்வும்.

அஸ்மா சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அருமையான பகிர்வு சகோ!

ஸாதிகா சொன்னது…

நல்ல பகிர்வு.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

உண்மைதான், நோபல் பரிசு ஜோயாவுக்குக்
கொடுக்கப்பட்டிருக்கலாம்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

ஸலாம் சகோ.அப்துல் காதர்,
//அவர் பெயர் மலலாய் ஜோயா. ஆஃப்கனிஸ்தானின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்//--இன்றுதான் அறிகிறேன்... மிக்க நன்றி சகோ.

இவர் தாலிபான் தர்பாரிலிருந்து வேளியேற்றப்பட்டிருந்தால் பாமியான் சிலையை விட பிரபலமடைந்திருப்பார்.

அமெரிக்காவை ஆதரித்திருந்தால் என்றைக்கோ நோபல் பரிசு வென்றிருப்பார்.

பாவம்... நீங்கள் அறிமுகப்படுத்தி இவரை நாம் அறிந்து கொள்ள வேண்டி உள்ளது..!

மிக்க நன்றி உலக ஊடகங்களே..!

சிநேகிதன் அக்பர் சொன்னது…

நல்ல பகிர்வு சகோ.

தூயவனின் அடிமை சொன்னது…

தன் நாட்டிற்காக தன் மக்களுக்காக போராடினாலே அமெரிக்கா தன் ரப்பர் ஸ்டாம்பை எடுத்து தீவிரவாதி என்ற முத்திரையை குத்திவிடுவார்கள்.
இவரின் வீர எழுச்சி அனைவரையும் குலை நடுங்க வைத்துள்ளது. இவரின் முயற்சி வெற்றி அடைய பிரார்த்திக்கின்றேன்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ரஹீம் கஸாலி கூறியது...

// present //

வாங்க ரஹீம். உங்கள் வருகைய பதிவில் ஏத்தியாச்சு தல!

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது

//அருமையான கட்டுரை. அறிமுகத்திற்கு நன்றி!//

வாங்க பன்னி சார்.

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ASHROFF SHIHABDEEN கூறியது...

// நன்றி சகோதரரே. அவசிய மானவற்றை எழுதுவது மட்டுமல்ல தேடிப் பொறுக்கி மற்றோர் முன் விருந்தாகப்படைப்பதும் ஒரு மக்கள் சேவைதான். அப்பெண்ணிடம் ஆண்கள் கற்றுக் கொள்ள வேண்டிய விடயங்கள் நிறைய இருப்பதாக உணர்கிறேன்.//

வாங்க ASHROFF SHIHABDEEN

நன்றி உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!!@ ஜெய்லானி கூறியது...

// கொஞ்சம் திருந்துற மாதிரி தெரியுது ஓக்கே..ஓக்கே..!!//

கொஞ்சம் தானே?!! மீதி.. ஹி.. ஹி!!

நன்றி பாஸ் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ asiya omar கூறியது...

// pakirvukku nanri.//

வாங்க டீச்சர்!!

நன்றி asiya omar உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ இப்னு ஹம்துன் கூறியது...

// "ஆஹா பக்கங்கள்" ஆஹா ! பொருத்தமான பெயர். நன்றியும், நெகிழ்வும்.//

வாங்க தல நீங்க தான் இப்ப இங்க ஹீரோ!!
.
நன்றி இப்னு ஹம்துன் உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ அஸ்மா கூறியது...

// அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அருமையான பகிர்வு சகோ!//


வாங்க, வ அலைக்கும் சலாம் சகோ..

நன்றி அஸ்மா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஸாதிகா கூறியது...

// நல்ல பகிர்வு.//

வாங்க,ஸாதிகாக்கா!!

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ NIZAMUDEEN கூறியது...

// உண்மைதான், நோபல் பரிசு ஜோயாவுக்கு கொடுக்கப் பட்டிருக்கலாம்.//

வாங்க நிஜாம் நீங்க சொல்றது சரி தான். ஆனா யாரு நம்ம பேச்ச கேக்றாங்க!!

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ முஹம்மத் ஆஷிக் கூறியது...

// இவர் தாலிபான் தர்பாரிலிருந்து வேளியேற்றப்பட்டிருந்தால் பாமியான் சிலையை விட பிரபலமடைந் திருப்பார். அமெரிக்காவை ஆதரித்திருந்தால் என்றைக்கோ நோபல் பரிசு வென்றிருப்பார். பாவம்... நீங்கள் அறிமுகப்படுத்தி இவரை நாம் அறிந்து கொள்ள வேண்டி உள்ளது..! மிக்க நன்றி உலக ஊடகங்களே..! //

நீங்கள் சொல்வது நியாயமான வார்த்தை ஆஷிக். அட்லீஸ்ட் இவர் இந்திய வில் பிறந்திருந்தால் கூட பத்திரிக்கை ஊடகங்களிலாவது தெரியவந்திருக்கலாம். ஆனா தாலிபானில் பிறந்து விட்டாரே. என்ன சொல்ல!!

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ சிநேகிதன் அக்பர் கூறியது...

// நல்ல பகிர்வு சகோ.//

வாங்க அக்பர்!!

நன்றி தல உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ இளம் தூயவன் கூறியது...

// தன் நாட்டிற்காக தன் மக்களுக்காக போராடினாலே அமெரிக்கா தன் ரப்பர் ஸ்டாம்பை எடுத்து தீவிரவாதி என்ற முத்திரையை குத்திவிடுவார்கள்.
இவரின் வீர எழுச்சி அனைவரையும் குலை நடுங்க வைத்துள்ளது. இவரின் முயற்சி வெற்றி அடைய பிரார்த்திக் கின்றேன்.//

வாங்க இளம் தூயவன், சமீபத்தில் தான் பார்க்கிறீர்களே எகிப்தில் ஆரம்பித்தது எதுவரை போய் முடியும் என்று தெரியவில்லையே!! பருவ நிலை மாற்றம் போல் எல்லாமே மாறிவரும். இன்ஷா அல்லாஹ்!!

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

vanathy சொன்னது…

super post, Sir.
who is Jailani?????

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ vanathy கூறியது...

//super post, Sir.
who is Jailani?????//

அவ்வவ்...'ஜெய்லானி'யையா யாருன்னு கேட்டீங்க வான்ஸ். ஆட்டோ வீட்டுக்கு வந்தாலும் வரும். அல்லது தல தாவி அங்க வந்தாலும் ஆச்சர்யப் படுவதற்க்கில்லை ஹி..ஹி..!!

நன்றி வான்ஸ் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.