facebook

வியாழன், டிசம்பர் 30, 2010

உலகின் நம்பர் #1 முன்மாதிரி கிராமம்!!


உலகின் நம்பர் #1 முன் மாதிரி கிராமம்  


ஒரு கிராமம் என்றால் என்னவெல்லாம் உங்கள் நினைவுக்கு வரும்?

வயல், பம்ப்செட், கால்நடைகள், பண்ணையார், ஆலமரம், நாட்டாமை, பஞ்சாயத்து, சொம்பு, பட்டியல் நீண்டுக்கொண்டே போகும்.

ஆனால் இந்த கிராமம் அப்படியல்ல. இங்கு வசிக்கும்
அனைவருமே வசதியான பங்களாவில் வசிக்கிறார்கள்.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு சொகுசு கார் இருக்கிறது.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்தபட்சம் இரண்டரை லட்சம்
டாலர் (நம் மதிப்பில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலே) வங்கி
கையிருப்பாக இருக்கிறது. மருத்துவம், கல்வி, வீடு.. ஏன் சமைக்கும் எண்ணெய் கூட இந்த கிராமத்தாருக்கு கிராமக்குழுவால்
இலவசமாகதான் வழங்கப்படுகிறது.

வாயைப் பிளக்காதீர்கள். இந்த ஊர் நம் நாட்டில் அல்ல. சீனாவில்
இருக்கிறது. கிழக்கு சீனாவின் ஜியாங்சூ மாகாணத்தில் அமைந்
திருக்கும் ஒரு சிற்றூர் இந்த ஹூவாக்ஸி. 'உலகின் நெ.1 கிராமம்'
என்று கூறி, உலகெங்கும்  இருந்து இந்த ஊருக்கு பயணிகள் குவிகிறார்கள். சமூக ஆராய்ச்சியாளர்கள், இந்த கிராமத்தின்
திடீர் வளர்ச்சியின் பின்னணி குறித்து ஆராய்ந்து  கட்டுரைகளாக
எழுதித் தள்ளுகிறார்கள். 1994ல் இருந்து சீனாவின் இரும்புத்திரை
விலகிய பிறகு, உள்ளூர் மற்றும் அயல்நாட்டுப் பயணிகள் கிட்டத்
தட்ட பத்து லட்சம் பேர் இந்த ஊருக்கு வந்து வேடிக்கை பார்த்து சென்றிருக்கிறார்கள்.

ஒரே இரவில் நடந்தது இல்லை இந்த அதிசயம். கிராமத்தில்
வசிக்கும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குதான் தெரியும், அந்தக் காலத்தில்  'ஹூவாக்ஸி'  எப்ப்டி இருந்தது என்று. சில வருடங்
களுக்கு முன்பு 1500 பேர் மட்டுமே வாழ்ந்த மிகச்சிறிய
குக்கிராமம் இந்த ஹூவாக்ஸி. மொத்த சுற்றளவே ஒரு சதுர
கிலோ மீட்டர் தான். சீனாவின் பாரம்பரிய கிராம வாழ்க்கை.
அளவில் சிறிய வீடுகள். விவசாயம்தான் பிரதானத் தொழில்.
சம்பாதிக்கும் சொற்பப் பணம் வயிற்றுக்கும், வாய்க்கும் சரியாகப்
போகும் சராசரி கிராம வாழ்க்கை.

ஒரு மனிதர் இவை எல்லாவற்றையும் மாற்றிட நினைத்தார்.
எல்லாமே மாற வேண்டும். கனவு காணும் மாற்றங்கள் அனைத்தும் அமைந்திட வேண்டும். மக்கள் சுகமாய் வாழ வேண்டும். மண்ணில் சொர்க்கத்தை படைத்திட வேண்டும்.

அந்த மனிதர் "ஹூ ரென்பாவ்". அந்த கிராம கம்யூனிஸ்ட்
கட்சியின் செயலாளர். கிட்டத்தட்ட நம்மூர் பஞ்சாயத்துத் தலைவர்
மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்.


உலகமயமாக்கல் மற்றும் சந்தைப் பொருளாதாரத்தை பல
நாடுகளும், பொருளாதார வல்லுனர்களும் அச்சத்தோடு ஆராய்ந்துக் கொண்டிருந்த வேளையில் இவர், அதனால் விளையக்கூடிய
நன்மைகளை மட்டும் பட்டியலிட்டுக் கொண்டிருந்தார்.
கம்யூனிஸத்தின் பொருளாதார அடிப்படைகள் வாயிலாக
சந்தைப் பொருளாதாரத்தை அணுகினார்.


ஒரு தீவிர கம்யூனிஸ்ட்டும், விவசாயியுமான ஹூ இம்மாதிரியாக
40   ஆண்டுகளுக்கு முன்பாக சிந்தித்தார் என்பதை நம்புவது கொஞ்சம் கடினம்தான்.ஆனால் இப்படித்தான் அவர் தனது கிராமத்தின் எதிர் காலத்தை நிர்ணயித்தார்.முழுக்க விவசாயக் கிராமமாக இருந்த ஹூவாக்ஸியை நவீன விவசாயம் மற்றும் தொழில் பலம் மிக்க கிராமமாக மாற்றம் செய்வித்தார்.

நூற்றுக்கும் அதிகமான தொழிற்சாலைகள் மழைக்கால திடீர்
காளான்களாய் ஆங்காங்கே முளைக்கத் தொடங்கியது. கிராம
வாசிகள் விடுமுறையின்றி வாரத்தின் 7 நாட்களுக்கும்
கடுமையான உழைப்பினைத் தர முன் வந்தனர். ஒருங்கிணைந்த பொருளாதாரம் மற்றும் பொதுவான வளர்ச்சி என்பது தான்
ஹூவின் திட்டம். இது தான் உண்மையான 'சோஸலிஸம்' என்று
அவர் சொன்னார்.

கடுமையாக உழைத்தவர்களுக்கு குறுகிய காலத்திலேயே பலன்
கிடைக்கத் தொடங்கியது. கிராமத்தின் முகம் மாறியது. ஒரே
மாதிரியான வீடுகள், வாகனங்கள் எல்லோருக்கும் கிராமக்குழு
வழங்கியது. இதற்காக தொழிலாளர்கள் காசு எதுவும் கொடுக்கத் தேவையில்லை. ஒட்டுமொத்த லாபத்தை ஒட்டு  மொத்தமாக
பிரித்துக் கொண்டார்கள். இதில் ஏதாவது ஊழல், கீழல்? கொன்று போட்டுவிடுவார்கள்.

'ஹூவாக்ஸி' வாசிகள் கல்வியிலும் கில்லாடிகள். 'ஜியாங்சூ'
மாகாணத்திலேயே சிறந்த கல்விச்சாலைகள் இங்குதான்
இருக்கின்றன.


இன்று 'ஹூவாக்ஸி' கிராமத்தின் வருமானத்தில் ஐம்பது
சதவிகிதம் இரும்பு  மற்றும் எஃகு தொழிற்சாலைகளை சார்ந்திருக்
கிறது. இக்கிராமத்தின் வளர்ச்சியில் இந்தியாவின் பங்கும் உண்டு.
இந்தியாவிலிருந்தும், பிரேஸிலில் இருந்தும்தான் பெரும்பாலான
மூலப் பொருட்களை வாங்குகிறார்கள். இங்கு தயாராகும்
பொருட்கள் 40-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. டெக்ஸ்டைல்'ஸ் மற்றும் சுற்றுலா அடுத்தடுத்த நிலையில்
இருக்கும் தொழில்கள்.

'ஹூரென்பாவ்', பழங்கால சீன பாரம்பரிய மதிப்பீடுகளின் மீது
பெரும்மதிப்பு கொண்டவர். செல்வம் பெருகும் தேசங்களிலும், நகரங்களிலும் இரவுநேர கேளிக்கை வெறியாட்டம் ஆடும். ஹூவாக்ஸியில் அது அறவே கிடையாது. விடிகாலையில்
எழுவார்கள். கடுமையாக பணிபுரிவார்கள். சீக்கிரமே தூங்கி
விடுவார்கள். "வசதியாக வாழ நினைப்பது அடிப்படையான
ஆசைதான். ஆனால் அது மட்டுமே வாழ்க்கை அல்ல. கூட்டுக்
குடும்பம், நேர்மை, தைரியம், கடுமையான உழைப்பு  இவைதான்
ஒரு சராசரி சீனனின் கலாச்சாரம். கலாச்சாரப் பின்னணியோடு
கூடிய தரமான வாழ்க்கைதான் எங்களது  கனவு" என்று ஒருமுறை சொன்னார் ஹூரென்பாவ்.

ஹூரென்பாவ் உருவாக்கியிருக்கும் ஹூவாக்ஸி ஒரு சொர்க்கம்
தான் என்கிற போதிலும், உலகின் மற்றப் பகுதிகளில் வாழும்
சராசரி கிராமத்தானுக்கு இருக்கும் குறைந்தபட்சம் சுதந்திரம் இங்கிருக்கிறவர்களுக்கு இல்லை என்கிற ஒரு குற்றச்சாட்டும்
இருக்கிறது.

இங்கே சட்டம், ஒழுங்கு மிகக்கடுமையான முறையில் கடைப்
பிடிக்கப்படுகிறது. மீறுபவர்களுக்கு செமத்தியான தண்டனை.
ஓய்வே இன்றி உழைத்துக் கொண்டிருப்பதுதான் ஹூவாக்ஸியில் பிறந்தவனின் விதி. கருத்துச் சுதந்திரமெல்லாம் நஹி. கிராமத்தைப்
பற்றி ஒரு குடிமகன் கூட வெளியாட்கள் யாரிடமும் பேசிவிட
முடியாது. கிராமக்குழுத் தலைவர்தான் பேசுவதற்குரிய அதிகாரம் பெற்றவர்.

இண்டர்நெட் கிண்டர்நெட் என்றால் உதைதான் கிடைக்கும். 
மதுவிடுதியோ, டீக்கடையோ கிடையவே கிடையாது. வெளியூரில்
வேலை பார்க்கப் போகிறேன் என்று கிளம்பினால் ஊரில்  உள்ள  
வீடு, வாகனம் போன்ற சொத்துகளை கிராமக்குழு எடுத்துக்
கொள்ளும்.  இது மாதிரி நிறைய. மொத்தத்தில் ஹூவாக்ஸி
கிராமத்தை ஒரு கறாரான இராணுவ முகாமோடு ஒப்பிடலாம்.

அதே நேரத்தில் இவர்களது அட்டகாசமான நிர்வாகத்திறனையும்
மறுத்து விட முடியாது. தினமும் காலையில் வேலையை தொடங்குவதற்கு முன்பாக (தணிக்கை படுத்தப்பட்ட) செய்திகளை ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம்  வாசிக்க/கேட்க வேண்டும். பின்னர் கிராமத்தலைவரின் அறிவுறுத்தல்கள் ஒரு பத்து நிமிடம்.
வாரம் ஒருமுறை மொத்த கிராமமும் ஒரு இடத்தில் சந்திக்கும். விவாதிக்கும்.

மொத்த சம்பளமும் யாருக்கும் வழங்கப்படாது. 50 சதவிகித 
சம்பளத்தை மட்டுமே சம்பளத் தேதியில் வழங்குகிறார்கள்.
அதிலும் கூட பணமாக 20 சதவிகிதம்தான் கைக்கு வரும். மீதி
அந்தந்த தொழிலாளியின் பெயரில் ஏதாவது தொழிலில் முதலீடாக சேர்த்துக்கொள்ளப்படும். மீதி 50 சதவிகித சம்பளம் கிராம வளர்ச்சி
சிறப்பு நிதியில் சேர்த்துக்கொள்ளப்படும். அடிப்படை சம்பளத்தில்
இருந்து மூன்று மடங்குத் தொகை வருடம் ஒரு முறை போனஸாக வழங்கப்படும். முதலீட்டில் இருந்து வரும் லாபம், போனஸ் இத்யாதி களையும் பெற இதுமாதிரி ஏகப்பட்ட விதி முறைகள் உண்டு.

கிராமத்தை விட்டு வெளியேற நினைப்பவர்களுக்கு இந்த 
எல்லாமே அம்பேல். இங்கிருக்கும் வரை மட்டுமே அனுபவிக்கலாம். நாற்பதாண்டுகளுக்கும் மேலாக ஊர் வளர்ச்சிக்கு உறக்கமின்றி
பணி யாற்றிய ஹூ ரென்பாம சில வருடங்களுக்கு முன்பாக
தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவரது மகன்
களில் ஒருவரான ஹூ க்ஸீன் கிராமத்தலைவராக, அப்பா வழியில் இப்போது பணிபுரிகிறார் (அங்கேயும் வாரிசு அரசியல்). இப்போது ஹூவாக்ஸி 35 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட பெரிய ஊராகி
விட்டது. மக்கள் தொகை 35,000.

எவ்வளவுதான் சட்டதிட்டங்கள்,விதிமுறைகள் எல்லாம் சிக்கலான தாகவும்,  கறாராகவும் இருந்தாலும், கிராமத்தவர்கள் ஒவ்வொரு
வரும் 82 வயதான ஹூரென்பாவ் மீது அளவுக்கடந்த மதிப்பு வைத்திருக்கிறார்கள். 'ஹூவாக்ஸி' வாசிகள் யாரும் மழையிலும், பனியிலும் நனைந்துவிடக்கூடாது என்பதற்காக ஊரின் நடை
பாதை எங்கும் மேற்கூரை அமைத்தவர் ஆயிற்றே அவர். மக்கள்
மீது வைக்கப்பட்ட அந்த நிஜமான அக்கறையை அவ்வளவு
எளிதாக யாராவது புறக்கணித்துவிட முடியுமா என்ன?

நன்றி : புதிய தலைமுறை + 
நன்றி : யுவகிருஷ்ணா http://www.luckylookonline.com/

 ************************************************************************************************************************

தமிழ் மணத்தெரிவில் உள்ள எனது பதிவுகள்.

செய்திகள்/ நிகழ்வுகளின் அலசல் பகுதியில்



ஞாயிறு, டிசம்பர் 26, 2010

'ஆஹா அவார்ட்ஸ்' கொடுக்குறாங்க



'ஆஹா அவார்ட்ஸ்' கொடுக்குறாங்க...!!

வலைப்பூவில் பிறந்து ஆறு மாதமேயான (உங்கள்) "ஆஹா பக்கங்கள்"  உங்கள் கைப்பிடி   மவுஸ்   கண்ட்ரோல்   வழியாக
உங்கள் மனதில் நீங்கா இடம் பெற்று விட்டது. (ஹி.. ஹி..
சும்மா ஒரு கம்பெனி  விளம்பர பில்டப்பு தாங்க!!)  ஆகவே
உங்களையும் என்னையும் யாராலும் பிரிக்க முடியாதுங்க..
(யாரோ நற..நற..ப்பது கேட்குது ...!!) சரி.. சரி.. மக்கள்ஸ்  சோதிக்கவில்லை.   மேட்டருக்கு வந்துட்டேன்.

இது எனக்கு Siss 'வானதி' தந்த விருது!!

 

இந்த விருதை நாமே வைத்துக் வைத்துக் கொள்வதில் எந்தவித பெருமையும் இல்லை என்றே கருதுகிறேன். பொதுவாக பிளாக் எழுதுறவங்களுக்கும், புதிதாக வலைபூக்கள் தொடங்கி எழுத ஆரம்பிதிருப்பவர்களுக்கும் இந்த விருதுகள் ஒரு ஆர்வத்தையும்,
உற்சாகத்தையும் கொடுக்கும் என்றே நினைக்கிறேன். ஆகவே அதை
பெருமைப்படுத்தும் விதமாக  எங்கள் வலை உலக பிரம்மாக்கள் அனைவர்களுக்கும்  பகிர்ந்தளிக்கிறேன். இது வருடம் 2010-க்கு
உள்ள விருது!!

மேலும் இன்னொரு விருது இது எதிர்வரும் 2011- க்கு உள்ள
விருது. "ஆஹா அவார்ட்ஸ்"  'ஆஹா பக்கங்கள்' சார்பாக...



இது, நாம் எல்லோரும்,  நாம்  நம் குடும்பம் என்று சந்தோசமாய்
இருக்கவும், அது போக மீதி கிடைக்கும் நேரத்தில், நமது
நண்பர்கள், நண்பிகள், சொந்தங்கள், பந்தங்கள், நமது நாடு,
என்றும் மீதி கிடைக்கும் நேரத்தில் வலைப்பூக்கள் எழுதி
எல்லோரையும் மகிழ்ச்சியாய் வைத்திருக்கவும், ஒருவருக்
கொருவர் போட்டி பொறாமை இல்லாமல் நிம்மதியாகவும்
சுபீட்சமாகவும், சந்தோஷமாகவும், நோயற்ற நிம்மதியான
நல்வாழ்வு வாழவும் வேண்டியவனாக, பிறக்கும் புதிய வருடம் எல்லோருக்கும் எல்லா வளமும்  கிடைக்க இறைவனை
வேண்டியவனாக வேண்டி வழங்குகிறேன்!

இன்னொரு செய்தியையும் சொல்ல விரும்புகிறேன். இங்கே
உங்களில் நிறையப் பேருக்கு என்னை அதிகமாய்த் தெரிய
வாய்ப்பில்லை. இருந்தாலும் இதை உங்களோடு என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாகவே கருதுகிறேன்.
உங்கள் எல்லோருடைய இடுகைகளையும் வந்து  விரும்பிப்
படிப்பேன். ஏனெனில் எழுத்தார்வம் என்பது அப்படி!! ஆனால்
கமெண்ட்ஸ் போட நேரமிருக்காது. எனது 'ஆணி'யும் அப்படி,
என்றாலும் உங்கள் ஃபாலோவர்ஸ் லிஸ்டில் நிச்சயம் இருப்பேன். என்னைவிட அதிகமாய் தினமும் 'தீயாய்' சென்று படிக்கும்
சொந்தக்காரர்களும் இருக்கிறார்கள். அவர்கள் யாரென்று
உங்களுக்கே தெரியும். :-))))

இன்னொரு செய்தியையும் சொல்லிவிடுகிறேன். உங்களின்
பெயர்களைச் சொல்லியே இங்கே பட்டியலிட்டிருக்கிறேன்.
உங்கள் வலைப் பூவின் பெயர்களை குறிப்பிடவில்லை என்று
ஏதும் நினைத்துக் கொள்ளாதீர்கள். பெயர் சொல்லி கூப்பிடும்
உரிமை சொந்தங்களுக்கு மட்டுமே உண்டு. எப்பவுமே நான்
உங்கள் சொந்தக்காரன் தான். (விருதுக்கு) பத்திரிகைக்கு உங்கள்
பெயர் எழுதிவிட்டேனே தவிர, லிங்க் கொடுக்கணும், உங்கள்
வீட்டுக்கு வந்து சொல்லணும் என்று இந்த சின்னவனுக்கு
வேலையை அதிகப் படுத்தி விடாதீர்கள். வந்து பார்வையை செலுத்தியவுடன் 'கப்' பென்று இந்த தங்கப்பதக்கங்களை
அள்ளிக் கொள்ளுங்கள். இருந்தாலும் முடிந்தவரை மேற்படி
வேலைகளை செய்து முடித்து விடுவேன்.

நானிங்கே குறிப்பிட்டிருப்பது கொஞ்சமே கொஞ்சம் நேசங்களை
மட்டுமே. ஏனெனில் எல்லோருக்கும் நானே கொடுத்து விட்டால், நீங்களெல்லாம் நீங்கள் விரும்பியவர்களுக்கு எப்படி கொடுப்பது??
ஆகவே என் சகோதர நெஞ்சங்களே நீங்கள் விருப்பபட்டால் மற்றவர்களுடன்  தாரளமாக  பகிர்ந்து கொள்ளலாம். நான்
கொடுக்காமல் விட்டுப் போனவர்களுக்கு எப்படியும் யார்
வழியிலாவது இந்த விருது வந்து சேரும் என்பது  உறுதி. :-)))

வாங்க ..!!! வந்து இந்த 'இரண்டு' விருதுகளையும் கொண்டு
போய் உங்க வீட்டு வரவேற்பறையில் பத்திரமா வையுங்க.


சகோதரிகள் :

வானதி, ஆசியாஉமர்,  மனோசாமிநாதன்,  ஹுசைனம்மா, சித்ரா,
ஜலீலா கமால் (சமையல் அட்டகாசங்கள்- புதிய இணைப்பு),  
http://samaiyalattakaasam.blogspot.com/, ஸாதிகா,  அஸ்மா, ஜெயந்தி,
கவிசிவா, Mrs.மேனகாசத்யா,  அன்புடன் மல்லிகா, அன்புடன் ஆனந்தி,
கௌசல்யா, ஹேமா,  அன்னு, ஆமினா, புவனேஸ்வரி ராமநாதன்,
அனன்யா மகாதேவன், சிநேகிதி, மின்மினி RS, பிரியாணி, நிலாமதி,
தோழி பிரஷா, அமைதிசாரல்,  ஆனந்தி...

சகோதரர்கள் :

ஜெய்லானி + ஒளியின் வழியே,  அஹமது இர்ஷாத், இளம் தூயவன்,
சீனா சார், கேபிள் சங்கர், பனித்துளி ஷங்கர், ஜாக்கி சேகர், பா.ரா.சார், செ.சரவணக்குமார், தேவா, சிநேகிதன்அக்பர், ஷேக் ஸ்டார்ஜன்,
நாடோடியின் பார்வையில், ராஜவம்ஷம், பட்டாப்பட்டி, மதி சுதா,

மங்குனி அமைச்சர், பாமரன் பக்கங்கள், கலாநேசன், சி@பாலாசி,
பாலாஜி சரவணா, பிரசன்னா, வழிப்போக்கன்- யோகேஷ்,
நித்திலம்-சிப்பிக்குள் முத்து,  சீமான்கனி,  சங்கவி,  மோகன்ஜி,
LK, RVS, ஷஹி, PHILOSOPHY PRABHAKARAN, MOHD.FAAQUE NAJEEB,

நாஞ்சில் பிரதாப், Dr P KANDASWAMY PhD, Dr V.ராதாகிருஷ்ணன்,
DJXAVIER, காயலாங்கடை காதர்,  சி.பி.செந்தில்குமார், அரபு தமிழன்,
பதிவுலகில் பாபு,   ரஹீம் கஸாலி, அபுல் ஃபஜர், கக்கு மாணிக்கம்,
T V ராதாகிருஷ்ணன், சிவா(எ) சிவராம் குமார், 

வந்தேமாதரம் சசி, ரமீஸ் பிலாலி, O.நூருல் அமீன், விமலன்,
சூர்யாகண்ணன், பல்சுவைப் பக்கம் நிஜாமுதீன், நட்புடன் ஜமால்,
நான் வாழும் உலகம் ரியாஸ்,  ஆர்.கே.சதீஷ் குமார்,  பொடுசு,
மதுரை சரவணன்,  ஃபர்ஹான், K.R.P. செந்தில்,  இப்படிக்கு இளங்கோ,

'ஜே' (பட்டிக்காட்டான் பட்டணத்தில்) சே.குமார், பாரத்... பாரதி,
மோகன் குமார் (வீடு திரும்பல்) ஐத்ரூஸ் பக்கங்கள், மாணவன்,
அந்நியன்-2, ஹைதர் அலி,  முஹம்மத் ஆஷிக்,  தோசை, சர்பத்...,

இது டெரர் கும்மி குருப்ஸ் :

இந்த குருப்பைப் படித்தால் சந்தோஷமாகவுமிருக்கும் படித்து 
விட்டு கமெண்ட்ஸ் போட்டால்  எங்கே நம்மையும் 'குமுறி'  விடப் போகிறார்களோ என்று பயமாகவுமிருக்கும். ஏன்னா டெர்ரராச்சே:-)))
ஹி..ஹி..

நாகராஜசோழன் MA சௌந்தர் அருண் பிரசாத் Madhavan
Srinivasagopalan வெங்கட் இம்சைஅரசன் பாபு.. வினோ எஸ்.கே
பன்னிக்குட்டி ராம்சாமி TERROR-PANDIYAN(VAS) கோமாளி செல்வா
வெறும்பய Arun Prasath பெயர் சொல்ல விருப்பமில்லை
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) பிரியமுடன் ரமேஷ்
dheva கோண பூசாரி....

வாங்க பாஸ்'s எல்லோரும் அவார்ட எடுத்துங்க  இன்னும்
நிறைய எழுதி எல்லோரையும் சந்தோசப்படுத்துங்க!!

விருது வடிவமைப்பு தம்பி ARMI முஹம்மது இஸ்மாயில்.





புதன், டிசம்பர் 22, 2010

நன்றி சொல்லும் நேரம்..!!

                                                                 
என்னை எழுதச் சொல்லும் மனிதங்கள்!!


இந்த வாரம் சகோதரி ஹுசைனம்மா அவர்கள்.

**Story of Appreciation** (நன்றி பாராட்டும் கதை) என்பது ஒருவர் தான் ஆசைப்பட்ட எண்ணமாக இருக்கலாம். ஆனாலும் அது ஒரு மிகச்
சிறந்த அர்த்தமுள்ள செய்தியை நவீன சமூகத்திற்கு எடுத்துரைக்
கிறது. அப்படி ஒரு கதையை எனக்கு இணையத்தில் அனுப்பித்
தந்தது சகோதரி ஹுசைனம்மா. இந்தக் கதையை படித்து விட்டு
மற்ற மின்னஞ்சல்கள் போல் பர்சனல் மெயிலில் கிடப்பில்
போட்டு வைக்க மனசில்லை. உங்கள் எல்லோருடனும் பகிர்ந்துக் கொள்ளவே விருப்பமுள்ளவனாக இருக்கிறேன்.

இதை மொழியாக்கம் செய்து தந்தவர் தம்பி ஜாஃபர் சாதிக்.
(இவரை முன்பே உங்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறேன்).

அந்த மொழியாக்கம்  கட்டுரை வடிவில் இருந்ததால் சற்றே
அதன் மெருகு குறையாமல் 'கதை' வடிவில் அமைத்திருக்கிறேன்.
இதைப் படித்து விட்டு உங்கள் உணர்வுகளைச் சொல்லுங்கள்!!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நன்றி சொல்லும் நேரம்..!!

ஒரு பெரிய நிறுவனத்தின் மேலாளர் பதவிக்கு விண்ணப்பித்த
இளைஞன் ஒருவன் நேர்காணலுக்குப் அழைக்கப் பட்டிருந்தான். இளைஞனின் CV யில் நல்ல மதிப்பெண்களும் பல சிறப்பான
கல்விச் சான்றிதழ்களும் இருப்பதைக் கண்டு அதன் நிர்வாக
இயக்குனர் இறுதி நேர்காணலுக்குப் பின், அவனை நியமனம்
செய்ய தீர்மானித்து, மெல்லப் பேச்சுக் கொடுத்தார்.

"தம்பி நீ படிக்கிற காலத்தில் உனக்கு 'ஸ்காலர்ஷிப்' (உதவித்-
தொகை) ஏதும் கிடைத்ததா?

"இல்லீங்க சார்"

"உன் படிப்பு செலவை எல்லாம் உங்க அப்பா கவனித்துக்
கொண்டாரா?"

"இல்லை சார் எனக்கு ஒரு வயதாகும் போதே அப்பா
இறந்துட்டாங்க. என் அம்மா தான் எல்லா செலவையும் கவனிச்சுக்கிட்டாங்க!!”

"உங்க அம்மா எங்க வேலை செய்றாங்க"

"துணித் துவைக்கிற கூலித் தொழிலாளி சார்!!"

"ஓ அப்படியா...!! அப்ப உன் கையைக் காட்டு?"

காட்டினான். . அவனது கைகள் மிருதுவாகவும் பளபளப்பாகவும்
இருந்தன.

"நீ உங்க அம்மாவுக்கு எப்பவாவது உதவியாய் இருந்திருக்கிறாயா?"

"இல்லீங்க சார், எங்க அம்மா அதுமாதிரி எப்போதுமே
எதிர்பார்த்ததில்லை. நான் மேலும் மேலும் படிப்பதையும்
நிறைய கற்றுக் கொள்வதையும் தான் விரும்பினாங்க!"

நிர்வாக இயக்குனர் சற்று நிதானித்து அந்த இளைஞனைப்
பார்த்து…

"நான் ஒன்று சொல்வேன் நீ அதன்படி செய்ய வேண்டும்...
செய்வியா??!!"

"சரிங்க சார் சொல்லுங்க !"

இன்று வீட்டிற்கு சென்றவுடன்,

"உங்க அம்மாவின் கைகளை நீ கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
பிறகு நாளை காலை வந்து என்னை பார் ” என்றார்.

இளைஞனுக்கு வேலை கிடைத்து விடுமென மனதில் பொறி
தட்டியது.

உற்சாக துள்ளலாய் வீட்டிற்கு திரும்பியவுடன், அம்மாவை
தன்னருகே அழைத்து, மேற்கண்ட உரையாடலை பகிர்ந்துக்
கொண்ட பின்னர் தன் அம்மாவின் கைகளை கழுவ அனுமதிக்கு
மாறு வேண்டிக் கொண்டான்.

சந்தோஷமும் ஆச்சரியமும் கலந்த ஒரு உணர்வில்அந்த தாய்
என்னும் மனிதம் தன் மகனை தன் கைகளை கழுவ அனுமதித்தது.

அந்த இளைஞன் தன் அம்மாவின் கைகளை பார்த்தவுடன்
அதிர்ந்தான். அன்றுதான் தன் அம்மாவின் சுருங்கிய கைகளையும் அவற்றில் நிறைய புண்கள் இருந்ததையும் அவன் கவனித்தான்.

எதுவும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் பார்த்து பார்த்து மெதுவாக
சுத்தம் செய்ய ஆரம்பிக்கிறான். அப்போது அந்த இளைஞனின்
கண்களில் முட்டிக் கொண்டு கண்ணீர் வர ஆரம்பித்தது.

உள்ளுக்குள் தேம்பினான் “அம்மாஆஆ..!!” என்று விம்மலாய்....

சில புண்களை அவன் கழுவும்போது வலியால் அம்மாவின்
கைகள் துடித்தன. அந்த அளவிற்கு சில கோரப்புண்கள். தினமும்
ஊரார் துணிகளைக் துவைத்த இந்த இரண்டுக் கைகள்தான் தன்
பள்ளிச் செலவிற்கு உதவியதா...?? அப்போதுதான் அவன் மனம்
முதன் முதாலாக உணர ஆரம்பித்தது.

அம்மாஆஆஆ..!! விம்மி அவன் உடம்பு குலுங்கியது.

“எனது கல்வி உயர்விற்கும், பட்டப் படிப்பிற்கும் எதிர்காலத்திற்கும் கொடுக்கப்பட்ட விலைதான் அம்மாவின் கையிலிருந்த புண்களா ??”

அம்மா… அம்மா… அம்மா… என்னவென்று நான் சொல்வேன்
மருகினான்.

அம்மாவின் கைகளை கழுவியபின், ஏதும் பேசாமல் அம்மா துவைக்கவிருந்த மற்ற துணிகளையும் சத்தமில்லாமல்
அமைதியாக துவைத்தான்.

அடுத்த நாள் காலையில் அந்த இளைஞன் தன்னை நேர்காணல்
செய்த நிர்வாக இயக்குனரை அலுவலகத்தில் சென்று சந்தித்தான். இளைஞனின் கலங்கிய கண்களைப் பார்த்துவிட்டு….

“நேற்று என்ன செய்தாய்? என்ன கற்றுக் கொண்டாய்
என்பதை எனக்கு கூற முடியுமா?” என்று கேட்டார்.

“நான் என் அம்மாவின் கைகளை கழுவியதோடு அவர்கள் துவைக்கவிருந்த மற்ற துணிகளையும் துவைத்தேன் சார்”
என்று பதிலளித்தான்.

"அப்போது உன் உணர்வுகள் எப்படி இருந்தது என்று சொல்ல
முடியுமா?"

“முதலாவதாக “நன்றி பாராட்டுதல்” என்றால் என்னவென்று
இன்று நான் தெரிந்து கொண்டேன். என் அம்மாவின் உதவியின்றி,
என் வாழ்வில் வெற்றி என்ற ஒன்று இருந்திருக்காது.

இரண்டாவதாக, என் அம்மாவுக்கு உதவி செய்ய அவர்களுடன்
சேர்ந்து அவர்களின் வேலையில் பங்கெடுத்ததன் மூலம் ஒரு காரியத்தைச் செய்து முடிப்பது எவ்வளவு கடினம் எனபதை
இன்று தான் உணர்கிறேன்.

மேலும் மூன்றாவதாக குடும்ப உறவின் முக்கியத்துவத்தையும்
அதன் மதிப்பையும் நான் கற்றுக் கொண்டேன்” என்றான்.

“என் நிறுவனத்தின் மேலாளராக இருக்க வேண்டியவரிடம்
இதைத்தான் எதிர்பார்த்தேன். மற்றவர்கள் தனக்கு செய்யும்
உதவிக்கு நன்றி பாராட்டுபவரை, காரியங்களை நிறைவேற்ற எதிர்கொள்ளும் கஷ்டங்களை மதித்துணர்பவரை, பணத்தை
மட்டுமே தம் வாழ்நாளின் குறிகோளாக கொள்ளாத நபரைத் தான்
பணியில் அமர்த்த விரும்புகிறேன். நீ இன்றுமுதல் இந்த
பணியில் சேர்ந்து கொள்ளலாம்”. என்றார்.

அதன்பின் அந்த இளைஞன் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து
நிறுவன ஊழியர்களிடம் நன் மதிப்பை பெற்றான். நிறுவனமும்
வெகு சிறப்பாக முன்னேறியது.

டிஸ்கி : கொஞ்சம் நீளமானது..!!

தன்னைத் தானே கவனிக்க சந்தர்ப்பம் கொடுக்கப்படாமல், பேணி வளர்க்கப்பட்ட, கேட்ட போதெல்லாம் கொடுத்து  பழக்கப் படுத்திய
குழந்தை தனக்கு மற்றவர்கள் உதவ வேண்டும் என்ற மனப்பாங்-
கோடும் தன் தேவைகளையே பற்றியே சிந்திப்பவனாகவும்தான் இருப்பான்.

அவனுடைய பெற்றோர்களின் முயற்சிகளை பற்றி அறியாத-
வனாகவும் இருப்பான். அவன் வேலைக்கு செல்லும்போது தன்
பேச்சை அனைவரும் கேட்பார்கள் என்று நினைத்துக் கொள்வான்.

அவன் மேலாளராக ஆகும்போது மற்ற வேலையாட்களின்
கஷ்டங்களை அவனால் தெரிந்து கொள்ள முடியாது. அதனால் மற்றவர்களை குற்றம் சாட்டிக் கொண்டே இருப்பான்.

இது போன்ற தன்மையுடையவர்கள் கல்வியில் சிறந்து
விளங்கலாம், சில காலம் வெற்றியில் மிதக்கலாம், ஆனால்
கடைசியாக எதையும் சாதித்த உணர்வே அவர்களிடம்
இருக்காது.

எப்போதும் வெறுப்பும், எதுவும் அடையவில்லை என்ற புலப்பமே இருக்கும். மேலும் இருப்பதைக் கொண்டு திருப்தியடைய முடியாமல் மேலும் மேலும் பொருள் தேடி போராட்டத்திலேயே வாழ்நாளை கழிப்பார்கள்.

உங்கள் குழந்தைகள் ஆடம்பரமான பெரிய வீட்டில் வாழட்டும்,
சிறந்த உணவை உண்ணட்டும், பெரிய திரையில் தொலைக்-
காட்சியும் பார்க்கட்டும். ஆனாலும், நீங்கள் புல்வெட்டும்போது
அதிலும் அவர்களை பங்கு கொள்ள விடுங்கள்.

சாப்பட்டுக்கு பின், தான் சாப்பிட்ட தட்டை, கோப்பைகளை தன்
சகோதர சகோதரிகளுடன் கழுவவிடுங்கள். இதனால் உங்களுக்கு
ஒரு வேலைகாரியை வைக்க உங்களிடம் வசதியில்லை என்று
ஆகி விடாது,

மாறாக உங்கள் குழந்தை மேல் நீங்கள் சரியான அன்பைக் காட்டுவதற்காக. நீங்கள் எவ்வளவு பணக்காரர்களாக இருந்தாலும்
ஒரு நாள் உங்கள் குழந்தைகளின் தலைமுடியும் அந்த இளைஞனின் தாயின் தலைமுடிபோல் வெள்ளையாகி விடும் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

இதில் மிக முக்கியமானது என்னவென்றால் இதனால் உங்கள்
பிள்ளை மற்றவர்களின் சிரமங்களை மதித்துணர்ந்து அதே
கஷ்டங்களை தானும் அனுபவிப்பதன் மூலம் மற்றவர்களுடன் சேர்ந்து குழுவாக வேலை செய்ய கற்றுக்கொள்கிறான்.

முடிந்தவரை உங்கள் குடும்பத்தினரோடும், நண்பர்களோடும்
இந்தக் கதையையும் டிஸ்கியையும் பகிந்துக் கொள்ளுங்கள்.
இது சிலரின் எதிர்காலத்தையே அற்புதமாக மாற்றி அமைக்கும் வாய்ப்புள்ளது!!! 

                               நன்றி!! அன்புடன் எம் அப்துல் காதர்.

ஞாயிறு, டிசம்பர் 19, 2010

எண்ணக் கனவுகளில் வண்ணக் களஞ்சியமே பெண்ணல்ல நீ எனக்கு...!!!


எண்ணக் கனவுகளில்!!

சென்ற மாதம் 'கேபிளாரின்' வலைப்பதிவில் 'பாபி' படத்தின்
'ஹம் தும் ஏக் கம்ரேமே பந்த் ஹோ' பாட்டு வெளியாகி இருந்தது. ஆர்வத்துடன் அதை ரசித்துப் பார்த்தேன். அது பழையப் பாட்டாய் இருந்தாலும், ரசித்துப் பார்க்கக் கூடிய சூப்பர் சாங் அவர் வர்ணித்திருந்ததற்கு மேலும்!

எனக்கு எப்பவுமே ஒரு ஆர்வமுண்டு. எந்த ஹிந்திப் பாடல்
கேட்டாலும் அதன் அர்த்தம் தெரிந்து கொள்வது. அப்படிக் கேட்டால்
அதன் சுகம் அலாதி!

இசையைப் பற்றி தெரிந்து கொள்வதும் இசைத் தெரிந்தவர்களோடு
அதைப் பகிர்ந்துக் கொள்வதும் பரமசுகம். அதுவும் நம்மைவிட அதிக விவரம் தெரிந்தவர்களாக இருந்தால் சுகமோ சுகம்.

இப்படிதான் ஒரு நாள் தல ஜெய்லானியுடன் பேசிக் கொண்டி
ருக்கும் போது கேட்டேன். 'பாபி'யில் வரும் "மே ஷாயர் தோ
நஹி" என்ற பாட்டு, தமிழ் பாட்டான TMS பாடிய "நான் கவிஞனு
மில்ல, நல்ல ரசிகனுமில்ல" என்றப் பாட்டின் அப்பட்டமான நேரடி
காப்பி தானே என்றேன்.

அதுக்கு தல சொன்னுச்சு. அது அப்படியல்ல. நீங்க சொல்வது போல நேரடியா ஒரு அப்படி அர்த்தம் தருவது போல தெரிந்தாலும் அதன் உள்ளர்த்தம் வேறு மாதிரி என்று ஏதேதோ சொல்லிக்கிட்டேப்
போச்சு. நான் பிரமித்துப் போனேன். இசையில் இதுக்கு இவ்வளவு
ஈடுபாடா என்று. அது சொன்னதை இங்கே எனக்கு திருப்பி
சொல்லத் தெரிய வில்லை. சும்மாவா சொன்னார்கள் அடக்கமாய் இருப்பவர்களிடம் ஆயிரம் விஷயங்கள் அடங்கி இருக்கும் என்று.
ஆனா அந்தப் பாட்டின் முழு அர்த்தமும் எனக்கு இதுவரை தெரிய
வில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!!!


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

வண்ணக் களஞ்சியமே!!

நமக்கு என்னைக்குமே இந்த சீரியஸ்னஸ் பிடிக்காதுங்க. ‘விக்கி
லீக்ஸ் விக்கிலீக்ஸ்’ ன்னு சொல்றாங்களே, அது என்னான்னு
நண்பரிடம் விசாரிச்சேங்க.

“அவங்க எல்லா நாட்டு ரகசியங்களையும் ‘ஒட்டு’ (உளவு பார்த்து) மொத்தமா திடீர்ன்னு வெளியிடுராங்கலாம்” என்றார்.

“எவ்வளவு தான் வயிறு நிறைய சாப்பிட்டாலும் தண்ணி குடிக்
காட்டி அது 'விக்கி' வாந்தியாகி (லீகாகி) வெளியே வந்து தான்
ஆகணும்” என்றேன்.

அவர் சீரியஸாய் சிரிக்காமல் என்னை பார்த்தார்.

“பின்னே என்னாங்க, அப்பப்ப கிடைக்கிற தகவல்களைப் பரிமாறிக்கொண்டா, அப்படி பேசிக் கொள்பர்களுக்கும், நடந்துக் கொள்பவர்களுக்கும் ஒரு பயமிருந்திருக்கும். அப்படியில்லாம
இப்ப இப்படி ஒரேமுட்டா அதுவும் இத்தனை வருடம் கழித்து
வெளியிட்டா அதுல என்னாங்க சுவாரசியம் இருக்கு" என்றேன்.

********************************************************************************************

பெண்ணல்ல நீ எனக்கு....!!!

சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். ஃபேஸ் புக்கிலும், சாட்டிங்கிலும்
பேசி பழகிய காதலர்கள் பிற்பாடு ஒரு தேதி குறித்து சந்தித்துக் கொள்வதாக ஏற்பாடு. இன்ன இன்ன கலர் டிரஸ் செய்துக் கொண்டு
ஒரு இடத்தைக் குறிப்பிட்டு மிகச் சரியாக சந்தித்துக் கொண்ட
போது இருவரும் அம்மா - மகனாம். இருவருமே அதிர்ந்துப்
போனதாக பிற்பாடு சொன்னார்களாம். நாட்டுக்கு ரொம்ப தேவை
தான்!! ஒரே வீட்டில் இருந்து தான் தனித்தனி ரூமில் உட்கார்ந்து
சாட்டி இருக்கிறார்கள். என்ன கர்மம்டா இது என்று சொல்லத்
தோணுதா??

இப்படி ஏன் நடக்குது என்று யோசிக்கணும்!!

வீட்டில் இருக்கும் நிறைய நேரங்களிலும், சாப்பிடும் போதும்
ஒருத்தருக் கொருத்தர் மனம் விட்டுப் பேசி இருந்தால் இந்தக்
கொடுமை எல்லாம் நடந்திருக்குமா? சரி இதை விடுங்க. கீழே
இன்னொரு விஷயம் சொல்றேன் அதைப் படிச்சிட்டு என்ன சொல்றீங்கன்னு பார்க்காலாம்.

கல்யாணமாகி ஒன்றரை வருடம் கழித்தும் தங்களுக்கு ஒரு
குழந்தைக் கூட இல்லையே என்று யோசித்த ஒரு ஆண்மகன்,
நிறையப் பேர்களோடு சாட்டிக் கொண்டிருந்த சமயத்தில், தமிழ்
நாட்டில் (ஊர் பெயர் தவிர்க்கப் படுகிறது) இருந்து பேசி பழகி
சாட்டியப் பெண்ணை (தனது மூத்த மனைவிக்கு தெரியாமல்)
கல்யாணம் செய்துக் கொள்ள முடிவெடுத்து ஊருக்குப் போய் கல்யாணமும் செய்துக் கொண்டிருக்கிறார். மாமியார் இல்லை.
மாமனார் மட்டும் தானிருந்திருக்கிறார்.

சிறிது நாள் சென்று அந்தப் பெண்ணும், அந்த மாமனாரும் அரச
புரசலாய் ஒன்றாய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார். அடைந்து என்ன பிரயோஜனம்?? அந்தப் பெண் அவருடைய வளர்ப்பு மகளாம். இவர் பசையுள்ளப் பார்ட்டி என்று தெரிந்து தான் வலை விரித்திருக்கிறார்கள். இவரும் வகையாக மாட்டிகொண்டார்.
இவ்வளவு கொடுத்தால் தான் ஆச்சு என்று மிரட்டி இருக்கிறார்கள். கடைசியில் அந்த மூத்த மனைவியே வக்கீல் வச்சு மிரட்டி, ஏதோ
பணம் கொடுத்து மீட்டு வந்ததாக சொன்னார்கள்.

நான் கேட்கிறேன் இந்த கணவனும் மனைவியும் முன்கூட்டியே உட்கார்ந்து பேசி தத்தமது மன ஓட்டங்களை பகிர்ந்துக் கொள்ளக் கூடாதா?? இதையெல்லாம் படிக்கும் போது ...த்தூவென்று காறி
துப்பத் தான் தோன்றுகிறது!!!

நிறைய நிகழ்வுகள் நம் கண் முன்னால் நடந்தும், காதால் கேட்டும்
அதை மற்றவர்களோடு பகிர்ந்துக் கொள்வதுமில்லை, அதற்கு உண்டான தீர்வு என்னவென்று யோசிப்பதுமில்லை. ஏனோ போகட்டும் என்றும் ரொம்ப அசால்ட்டாக இருந்து விடுகின்றோம். இது எதனால்??



நன்றி: Google - u tube - சசி

வியாழன், டிசம்பர் 16, 2010

தன்னம்பிக்கை என்பது..!!!


சொல்வேந்தர் சங்கம் - சாதிக்

சவுதி-'ரியாதில்' இருக்கும் நண்பர் + தம்பி சாதிக்-இன் (நாகூர் சித்தி ஜுனைதா பேகம், கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம், சினிமா
கதை வசனகர்த்தா தூயவன், எழுத்தாளர் நாகூர் ரூமி ஆகியோர்
அடங்கிய பிரபல இலக்கியக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று சொன்னால்தான் உங்களில் பலருக்குப் புரியும்!) இந்த உரையில் வேடிக்கையான ஒரு கதை இருக்கிறது.

படுவேகமாகப் பறக்கும் ராக்கெட்டைப் பார்த்து பொறாமை
கொண்ட ஒரு விமானம், ’நீ எப்படி இவ்வளவு வேகமாகச்
செல்கிறாய்?’ என்று கேட்டதாம். ‘உன் பின்னால் யாராவது
நெருப்பு வைத்தால்தான் தெரியும்’ என்று பதில் வந்திருக்கிறது.
மேலே போவதற்காக எதையெல்லாம் வைக்க வேண்டியிருக்கிறது!


“I never could make a good impromptu speech
without several hours to prepare it.” - Mark Twain

Toastmaster International என்றழைக்கப்படும் அமெரிக்காவை
தலைமையகமாகக் கொண்டு இயங்கும் சொல்வேந்தர் சங்கம்
(இது ரியாத் தமிழ்ச் சங்கத்தின் மொழிபெயர்ப்பு) 60 ஆண்டுகளுக்கும் மேலாக பல சொற்பொழிவாளர்களையும் ஆற்றல் மிக்க தலைவர்
களையும் உருவாக்கியிருக்கிறது. நண்பர் இப்னுஹம்தூனின் வலியுறுத்தலின் பேரில் (அவருக்கும் துணை தேவைப்பட்டது)
நானும் அங்கு என்ன தான் நடக்கிறது பார்ப்போமே என்று
6- மாதங்களுக்கு முன்பு சேர்ந்து விட்டேன்.

உண்மையில் அதில் சேர்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
மேடையில் பேசுவது என்பது இவ்வளவு சுலபமானதா என்று
நினைக்கும் அளவிற்கு இந்த கிளப் நம்மை மாற்றிவிடுகிறது.

கடந்த திங்களன்று (06/12/2010-ல்) இந்திய பன்னாட்டு பள்ளியில்,
Taj Toastmasters Club என்றழைக்கப்படும் இந்தியர்களை அங்கத்தினர்
களாகக் கொண்ட ரியாதில் உள்ள (இது போன்ற 60-க்கும் மேற்பட்ட
பல நாட்டவர்களுக்கான குழுக்கள் ரியாதில் உள்ளன), எங்கள் சொல்வேந்தர் குழுவின் வாராந்தரக் கூட்டத்தில் நான் எனது
6-வது சொற்பொழிவை, “தோல்விகளும் அவமானங்களும்
வெற்றியை நோக்கிய இரு இணைச் சாலைகள்” என்ற தலைப்பில் கொடுத்தேன். அது அனைவராலும் ரசித்து வரவேற்கப்பட்டது.

அதன் மொழிபெயர்ப்பை கீழே தந்துள்ளேன். (ஒரு அடிப்படை
பேச்சாளராக ஆவதற்கு டோஸ்ட்மாஸ்டர் கிளப்பின் வரையறை
யின்படி மொத்தமாக 10 தலைப்புகளில் சொற்பொழிவாற்ற
வேண்டும். ஒவ்வொரு தலைப்பிலும் பேச்சாற்றலின் ஒரு
அம்சத்தை வற்புறுத்துகிறார்கள்.) இதில் ஆறாவது பேச்சு குரலின்
ஏற்ற இறக்கத்தை அடிப்படையாகக் கொண்டது)

என் பேச்சின் தொனியை என்னால் முழுவதுமாக எழுத்தில்
விவரிக்க இயலாது. எனவே ஒரிரு இடங்களில் சில கருத்துக்
களை எப்படி வெளிப்படுத்தினேன் என்பதை அடைப்புக்குள் அதன் தாக்கத்திற்காக (Effect) சேர்த்துள்ளேன்.

***

“தோல்விகளும் அவமானங்களும் வெற்றியை நோக்கிய இரு
இணைச் சாலைகள்” – சாதிக்.

(கொடுக்கப்பட்ட நேரம் 5 லிருந்து 7 நிமிடங்கள் - 7நிமிடத்திற்கு
பிறகு 30 விநாடிகள் சலுகை நேரம்)

தோல்விகளைக் கண்டு நீங்கள் அஞ்சுகிறீர்களா? அவமானங்
களைக் கண்டு நீங்கள் பயப்படுகிறீர்களா? (பார்வையாளர்களின் மறுமொழிக்கு காத்திருந்தேன். சிலர் 'ஆம்' என்றார்கள். சிலர் 'இல்லை'யென்றார்கள்).

பொதுவாக அனைவரும் இவைகளைக் கண்டு பயப்படுகிறவர்
களாகவே இருக்கிறோம்.

ஆனால், இதற்கு மாறாக தோல்விகளும் அவமானங்களும்
வெற்றிக்கான இரு இணைச்சாலைகள் போல் அமைந்து நம்
வாழ்வை சீரமைக்கின்றன என்பதே உண்மை. வெற்றிக்கான
எளிதான வழி பெரும்பாலும் தோல்விகளின் மூலமே சாத்தியம்.
அதுதான் வெற்றிபெற்றவர்களின் சரித்திரம் கூட.

Dear Fellow Toastmasters and distinguished guests, Good Evening! (இதை
தமிழில் மொழிபெயர்த்தால் செயற்கையாக இருக்கும். அதனால்
அதை அப்படியே விட்டு விடுகிறேன்)

ஒவ்வொரு வெற்றியின் சரித்திரமும் ஒரு தோல்வியின் பின்னணி
யைக் கொண்டுள்ளது. பொதுவாக நாம் எந்த சரித்திரத்திலும் வெற்றி
யின் பகுதியை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டு தோல்வி
யின் பகுதியை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறோம். ஆப்ரஹாம் லிங்கன் தன் வாழ்வின் ஆரம்பக் காலத்தில் வியாபார முயற்சியில்
இரு முறை தோல்வியடைந்தார்; சட்டசபை தேர்தல்களில் மூன்று
முறை தோற்றார். இன்னும் பல தோல்விகளையும் இன்னல்
களையும் கண்டார். எனினும் எதற்கும் சளைக்காமல் தன் விடா முயற்சிகளால் 52-வது வயதில் அமெரிக்காவின் அதிபரானார்.

ஒரு வேடிக்கையான உவமானக் கதை ஒன்று உண்டு. ஒரு
விமானம் வேகமாக பறந்து கொண்டிருந்தது. ஒரு ராக்கெட்
அதை விட வேகமாக அதைத் தாண்டிச் சென்றது. அதைப்
பார்த்து பொறாமை கொண்ட விமானம் அந்த ராக்கெட்டை
பார்த்து கேட்டது “நீ எப்படி இவ்வளவு வேகமாகச் செல்கிறாய்?”.
அதற்கு ராக்கெட் “உன் பின்னால் யாராவது நெருப்பு வைத்தால்,
நீயும் அப்படிச் செய்வாய்” என்று சொன்னதாம். “நீங்கள்
அவமானங்களைச் சந்திக்க நேர்ந்தால் எப்பேர்பட்ட சவால்
களையும் சந்திக்கத் துணிவீர்கள் என்பதே இந்த வேடிக்கையான
கதை சொல்லும் அர்த்தமுள்ள செய்தி”.

மஹாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவிற்கு சென்றபோது அவருக்கு
நேர்ந்த அவமானத்தை ஒவ்வொரு இந்தியனும் அறிவர். முதல்
வகுப்பில் பயணம் செய்த காரணத்திற்காகவே இரயில் பெட்டியிலி
ருந்து அவர் தூக்கி எறியப்பட்டார். அந்தக் காலத்தில், இனவெறி
கொண்ட தென் ஆப்பிரிக்க அரசாங்கம் வெள்ளையர்களைத் தவிர
மற்ற எந்த இனத்தவரையும் முதல் வகுப்பில் பயணம் செய்ய
தடை விதித்திருந்தது. இந்த அவமானம் காந்தியின் மனத்தில்
ஏற்படுத்திய சிறு தீப்பொறி பிற்காலத்தில் பெரும் ஜுவாலையாக
மாறி ஆங்கிலேயர் களிடமிருந்து இந்தியாவிற்கு சுதந்திரம்
வாங்கித் தந்தது.

நானும் என் இளமைப்பருவத்தில் ஒரு பேச்சாளனாகவும் பாடக
னாகவும் ஆக வேண்டுமென ஒரு பேராவல் கொண்டிருந்தேன்.
ஒரு பேச்சாளனாக என் முதல் முயற்சியை நான் பத்தாம் வகுப்பு
படிக்கும் காலத்தில் ஒரு பெரும் கூட்டத்திற்கு முன்னால் ஆரம்பித்
தேன். பேச்சை துவங்குவதற்கு முன் என் வயிற்றை கலக்கியது.
நான் என்னவோ ஆவேசத்துடன்தான் ஆரம்பித்தேன். ஆனால் நான்
உச்சஸ்தாயியில் “அன்புள்ளம் கொண்ட பெரியோர்களே தாய்மார்
களே” என்று துவங்கிய என் குரல் பரிதாபகரமாக 'கீச்'சென்று மாறி
விட்டது. எனது பேச்சு தடுமாறியது. கால்கள் நடுங்கின. பார்வை-
யாளர்கள் தொடர்ந்து நக்கலடித்துக் கொண்டிருந்தனர். (அழுகுரலில்)
அன்று முதல் பேச்சாளனாக வேண்டுமென்ற என் வாழ்வின் ஒரே இலட்சியத்தையும் தொலைத்து விட்டேன்.

ஆனாலும், (நிறுத்தம். பிறகு உணர்ச்சி பூர்வமான குரலில் வேகத்தை அதிகப்படுத்தி) என் குடும்பம் ஒரு குறிப்பிடத்தக்க இலக்கிய பிண்ணனியைக் கொண்டிருப்பதால், என்னையும் அறியாமல் என்னுள் ஒளிந்திருந்த ஒரு ஆவல் (நிறுத்தம்), (கொஞ்சம் குரலை உயர்த்தி) கட்டுங்கடங்காத கலையார்வம் கலந்த ஒரு ஆவல், என்னுள்ளிருந்து வெளிப்பட என் ஆத்மாவுடன் போராடிக்கொண்டிருந்திருக்கிறது.

அதன் விளைவாக, 2009-ல் ரியாதில் நடந்த சில விழாக்களில் நான்
எழுதி வாசித்தக் கவிதைகள் மிகுந்த வரவேற்பை பெற்றது. (சிறிய
குரலில்) 2010ல் (கொஞ்சம் குரலை உயர்த்தி),  நான் ஒரு பாடகனாக முயற்சி எடுத்தேன். (புன்சிரிப்புடன் நக்கலான முகபாவனையுடன்) அதிர்ஷ்டவசமாக நானும் ஒரு பாடகனாக பார்வையாளர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டேன். ஒரு காலத்தில் என் சொந்தக்
குரலையே வெளிக்கொண்டு வர முடியாமல் திணறிய நான்,
இன்று பல ஹிந்தி மற்றும் தமிழ் பாடகர்களின் குரல்களை
பாவித்து (Voice Modulation) மேடைகளில் துணிச்சலாக பாடுகிறேன்.
அதை கேட்பதற்கு உங்களுக்குத்தான் துணிச்சல் வேண்டும். என்
குரல் முழுமையாக அந்த பாடகர்களின் குரலுடன் ஒத்து போகாது என்றாலும், அவர்கள் தொனியில் என்னால் நிச்சயமாக பாட இயலும்.

இவன் பேச்சுக்குத்தான் இப்படி கயிறு விடுகிறான் என நினைக்கிறீர்
களா? நீங்களெல்லாம் என் குரலை சோதிக்க விரும்புகிறீர்களா?.
(பதிலுக்கு காத்திருந்தேன் – எதிர்பார்த்ததுபோல் அனைவரும்
“Surely” “of course” “certainly” “with pleasure” என்று பலவிதமாக குரல்
கொடுத்தனர்).

எங்கள் சொல்வேந்தர் மன்றத்தில் தமிழர்களல்லாமல் பல மாநிலத்
தைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இருப்பதால் நான் ஹிந்தி பாடல்களையே சில வரிகள் பாடினேன்.

கிஷோர்: “டூட் ன ஜாயே சப்னே மே டர்தா ஹூம் நித் தின்
சப்னோமே தேகா கர்த்தா ஹூம்”.

ரஃபி: “ஏ பர்தா ஹட்டாதோ! (Z)சரா முக்(H)டா திகா(H)தோ. ஹம்
ப்யார் கர்னே வாலே ஹேன் கோயி கேர் நஹீன். அரே ஹம்
தும்பே மர்னே வாலே ஹேன் கோயி கேர் நஹீன்”.

இதோ மூக்கால் பாடும் முகேஷ்: “ஆவாரா ஹூம். ஆவாரா
ஹூன். யா க(G)ர்டிஷ் மே ஹூன் ஆஸ்மான்கா தாரா ஹூன்.
ஆவாரா ஹூன்”

இளையகுரல் வேண்டுமா? இந்தாருங்கள் சோனு நிகாம்:

“தும் கோ பாயா ஹே தோ ஜேசே கோயா ஹூன். கெஹ்ன
சாஹுன் பீ(H) தோ தும் சே க்யா கஹூன்".

என்னால் தொடர்ந்து பல குரல்களில் பாட இயலும். ஆனால் எனக்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிந்துவிடும்”. மேலும் உங்களை பார்த்தாலும் பரிதாபமாக உள்ளது.

என்னாலும் பொது மேடைகளில் பேச, பாட இயலும் என்பதை
நான் அறிந்துகொள்ளவே எனக்கு சில காலமாகி விட்டன.
ஏனெனில் தோல்வி மற்றும் அவமானங்களின் பயம் என்
திறமைகளை என்னுள் நீண்ட காலமாக அமுக்கி வைத்து
விட்டது. நீங்களெல்லாம் எப்படி சொல்வேந்தர்களே! விழித்துக் கொள்ளுங்கள்! உங்கள் பயத்தை எறிந்துவிட்டு உங்கள்
திறமைகளை தோண்டி எடுங்கள்! நம்பவே இயலாத உயரங்களை அடைவீர்கள்.

நினைவில் கொள்ளுங்கள்! தோல்வி என்பது நாம் செய்யத்
தவறிய ஒரு காரியத்தை இன்னும் சிறப்பாகவும் இன்னும் கவனத்துடனும் செய்யக் கிடைத்த ஒரு சந்தர்ப்பம் மட்டுமே!
Over to Toastmaster! (இப்படிச் சொல்லி பிறகு நிகழ்ச்சியை நடத்தும் சொல்வேந்தரிடம் அவர் மேடைக்கு வரும் வரை காத்திருந்து
மேடையை திருப்பி அவரிடம் கொடுத்துவிட்டுத்தான் செல்ல
வேண்டும்).


நன்றி : தனது ஆங்கில உரையை உடன் மொழிபெயர்த்து
அனுப்பிய ஜாஃபர் சாதிக் sadikjafar@gmail.com

நன்றி : http://abedheen.wordpress.com/

செவ்வாய், டிசம்பர் 14, 2010

கதவைத் தட்டியது யார்?? (தேவதை- 2)


தேவதை வரும் நேரம் - 2



கதவைத் தட்டியது யார்??

என் பயத்தில் அயனிங் டேபிள் மேல் கை வைக்க, அந்த ஆட்டத்
திலேயே, அதன் மேலிருந்த 'கப் & ஸாசர்' 'சிலிங்' என்ற சப்தத்தோடு
கீழே விழுந்து சிதறியது. அந்த சப்தத்தில் கதவோரம் தெரிந்த நிழல்
சற்றே வாசலை விட்டு அசைவது போலிருந்தது. கதவைப்
பிராண்டும் சப்தமும் நின்று போன மாதிரியிருந்தது.

விருட்டென்று துணிவை வரவழைத்துக் கொண்டு கதவின் வியு ஃபைண்டர் வழியாக ஊடுருவினேன். யாரோ கதவை விட்டு விலகி நடப்பது போல் காதுவழி உணர்வில் யூகிக்க முடிந்தது.

யாரது??

வரண்ட தொண்டையை எச்சில்கூட்டி விழுங்கிக் கொண்டே
கதவை மெல்லமாய், அதேநேரம் வேகம் கூட்டி. சப்தம் வராமல்
திறந்து, தலையை வெளியே நீட்டி எட்டிப் பாத்தேன்.

யாரோ திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டே ஓடுவது தெரிந்தது.
நானும் முழுகதவையும் திறந்துக் கொண்டு வெளியே வந்து,
அவனை பின் தொடர்ந்து ஓட எத்தனித்தேன். அறிமுகமே இல்லாத முகமாய் இருக்கே என்று நான் உணருமுன்னே, அவன் எதையோ
என் மீது வீசி எறிந்தான். நான் சடுதியில் விலகி சுவற்றில்
பரவினேன். அது தரையில் ‘கிளங்’ என்று விழுந்து ஓசையைக்
கிளப்பியது. கொஞ்சம் வெலவெலத்துதான் போனேன். நாம்
யாருக்கும் எந்த கெடுதலும் செய்யலியே. ஏன் இப்படி நடக்கிறது?

ஆணி போன்ற கூறிய பொருளொன்று விழுந்து கிடந்ததை
எடுத்துப் பார்க்கையில், அதில் ரிஜிஸ்டர் லெட்டருக்கு முடுச்சு
போட்டு வைக்கும் tag ஒன்று இறுக்கிக் கட்டப்பட்டிருந்தது. அதில்
"will see u again" என்று கிறுக்கலாய் எழுதியிருந்தது.

மேல் மாடியாய் இருந்ததால் எளிதாய் வெளியே நடப்பது எல்லாத்தையுமே பார்க்கும் படியாய் இருந்தது. ரோட்டின் பக்கம்
ஒரு கார் ஸ்டார்ட் ஆகாமல் அடம் பிடிக்க ‘கிர்ர்றிக் கிர்ர்றிக்’
என்று நீண்ட சப்தம் எழுப்பிக் கொண்டிருந்தது. இதுவாய்
இருக்குமோ?

திரும்பி வந்து கதவின் கைபிடியில் கைவைக்க, லாண்டரி மேன் மாட்டிவிட்டுச் சென்ற எனது பேண்டும் சர்ட்டும், பாலிதீன் பேப்பர்
சுற்றி தரையில் சரசரக்க, ஹேங்காரின் ஹோல்டர் கதவின்
கைப்பிடியில் "சரக் சரக்" என்று உராய்ந்துக் கொண்டிருந்தது. இது
தான் அந்த சப்தமா? இல்லையே!!

எதிர் வீட்டுப் பக்கம் கண்களால் அளந்தேன். அங்கே பாத்ரூம் வெண்டிலேடர் எதிலோ உரசி ஓவராய் சப்தமெழுப்பிக் கொண்டி
ருந்தது. இந்த சப்தம் அதுதானா??

*************

வீடு கட்டி முடிந்து பெயிண்டிங் வேலை நடந்துக் கொண்டி
ருந்தது. "தம்பி அந்த பிரேயர் ரூமை ‘சவுண்ட் புரூஃப்’ செய்து
கொடுத்துடுங்கன்னு” அம்மா சொன்னாங்க. அது ரொம்ப
செலவாகுமே என்று சொல்ல வாயெடுத்து, 'பார்க்கலாமே' என்று சொல்லலாமா, 'சரி' என்று சொல்லலாமா என்று யோசித்துக்
கொண்டு அம்மாவின் முகத்தை நோக்கினேன். சிரிச்சுக்கிட்டே
"நிறைய செலவாகும் தானே"ன்னாங்க!!

அது தான் அம்மா!

அந்த சிரிப்புக்கும், எதையுமே புரிந்துக்கொண்டு ஈஸியா எடுத்துக் கொள்வதற்காகவே அவங்களுக்கு கோடி ரூபாயில் அழகான
மாளிகை கட்டிக் கொடுக்கலாமே என்று நானும் சிரித்துக்
கொண்டே அவர்களைப் பார்க்க, என்னை கிட்டக் கூப்பிட்டு
வாஞ்சையோடு நெற்றியில் முத்தமிட்டாங்க. அம்மான்னா சும்மாவா சொன்னாங்க. அவங்க கேட்டதை என்ன செலவானாலும் செய்து கொடுக்கணும், ‘அவங்களுக்கு தேவை இப்ப அமைதி’ என்று மனதில் நினைத்துக் கொண்டு வெளியே கிளம்பினேன்.

***************

வீடு குடிபுகும் நாளன்று வந்தவர்கள் எல்லாம் கைபிடித்து முகம்
பார்த்து சிரித்து வீட்டைப் பார்த்து இது என்ன? அது அழகா இருக்கே என்றெல்லாம் சொல்லி பாராட்டி, வாழ்த்தி சாப்பிட்டுவிட்டு சென்றபின் நானும் அம்மாவும் இவங்களும் சாப்பிட உட்கார்ந்தோம். பிள்ளைகள் எல்லாம் சாப்பிட்டு விட்டு ரூமில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

தான் பார்த்து பார்த்து இழைத்து இழைத்துக் கட்டிய வீட்டைப் பார்க்க ‘இரண்டு’ அம்மாக்களுக்கும் பரம சந்தோஷம். உலகத்தில் இதைவிட மனுஷனுக்கு வேறென்னய்யா வேண்டும். சந்தோஷத்தில் சந்தோஷம் பெரிய சந்தோஷம் சொந்தங்களையும் பந்தங்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்தி, கூட இருந்து பார்த்து மகிழ்வது தான்.

சாப்பாடும் பேச்சுமாய் போய்க் கொண்டிருந்தபோது, என் கண்கள்
வாசல் பக்கமே மேய்ந்துக் கொண்டிருந்தது. அங்கே யாரோ
ஸ்க்ரீனை விளக்கி வீட்டுக்குள் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

“எல்லோரும் தான் சாப்பிட்டு விட்டுப் போயிட்டாங்களே, பிறகு
யாரது?” அம்மாவிடம் கேட்டேன். “யாரும் சாப்பாடுக் கேட்டு
வந்திருப்பாங்க எடுத்துப் போடச் சொல்லுங்க” ன்னாங்க.

உள்ளே குரல் கொடுத்து எடுத்துக் கொடுக்க சொல்லி அவர்கள்
கொண்டு சென்ற போது, அங்கே யாருமில்லை என்று திரும்ப வந்து சொன்னார்கள். நானும் பார்த்தேன் யாருமில்லை. சிறிது நேரம் சென்று அந்த முகம் திரும்பவும் தெரிந்தது.

எனக்கு மட்டும் தான் தெரிகிறதா? இல்லை எல்லோருக்குமா?
அந்த முகத்தை திரும்பி அவர்களையும் பார்க்கச் சொன்னேன்.
ஆமாம் தெரிகிறது என்றார்கள்.

சடேரென்று எழுந்தபோது கண்கள் அதன் கால்கள் பக்கம்
சென்றது.!! அந்த உருவம் பின்னோக்கி நகர்வது போலுணர்ந்தேன்!!


                                                                       - தொடரும்

 

ஞாயிறு, டிசம்பர் 12, 2010

தேவதை வரும் நேரம்



தேவதை வரும் நேரம்


மணி இரவு  இரண்டு!!

வயிற்றை புரட்டுவது போலிருந்தது. எழுந்து பாத்ரூம் போய்
விட்டு கதவை திறக்குமுன், யாரோ பாத்ரூம் கதவை தட்டுவது போலிருந்தது. “இத வர்றேன்” என்று குரல் கொடுத்துவிட்டு,
கதவை திறந்து பார்த்தபொழுது இருட்டாய் இருந்தது.
யாருமில்லை!!!

ஹால் விளக்கை போட்டு விட்டுதானே பாத்ரூமுக்குள்
நுழைந்தேன். கிச்சனில் எரிந்துக் கொண்டிருந்த விடிலைட் கூட
ஆபாஃகி இருந்தது. யார் ஆப் செய்திருப்பா? புரட்டிய வயிற்றை
காலி செய்து விட்டு வந்தாலும், இந்த சம்பவத்தால் மறுபடியும்
புரட்ட ஆரம்பித்து.

ஏதோ ஒன்னு என்னையே பார்க்கிறமாதியே எனக்குள் ஒரு
குறு குறுப்பு ஓட ஆரம்பித்தது. சுற்றும் முற்றும் சுற்றிப் பார்த்து
கண்களை சுழலவிட்டேன். யாராது என்று கேட்கலாம் என்ற
வார்த்தை தொண்டை வரை வந்து அங்கேயே அமுங்கிப் போனது.

சட்டென்று யோசனை வந்து ரூமுக்குள் நுழைந்து தூங்கிய
மனைவியை எழுப்பி "நீயா கதவை தட்டினாய்" என்று கேட்ட
போது, அது திடுக்கிட்டு போய் என்னை ஏறிட்டு கண்ணை
உருட்டிய போது நான் வெலவெலத்துப் போனேன். என்ன
நடக்குது இங்கே??

பின்னே எப்படி நான் பாத்ரூமில் நிற்கும்போது பேச்சுக்
குரல், ஏதேதோ பாத்திரங்கள் நகர்த்தும் சப்தமெல்லாம்
கேட்டதே!! அதெல்லாம் என்ன? யார் செய்தது?

"கதவை தட்டியது யார்?? "

இப்படி நான் கேட்டது வார்த்தையாய் வெளியே வந்து
வீடு முழுக்க எதிரொலித்தவுடன் குபீரென்று பத்திக்கொண்ட
மாதிரி வீடு முழுக்க லைட்டெரிய ஆரம்பித்தது.

********

மறுநாள் எதிலும் ஈடுபாடு இல்லாமல், BBC தமிழோசையை
கிளிக்கி செய்தி கேட்டுக் கொண்டிருந்தபோது, பிலிப்பைன்ஸில்
ஒரு பெண்ணை முட்டி தள்ளிவிட்டு லாட்டரி சீட் வாங்கிய
பெண்ணுக்கு பரிசு விழாமல், வழி விட்ட பெண்ணுக்கு மில்லியன் கணக்கில் லாட்டரி அடித்திருப்பதாகச் சொல்லிய செய்தியில்
ஈடுபாடில்லாமல், சன் நியூஸுக்கு தாவினேன். நியூஸில் மனம் லயிக்காமல் லாட்டரி சீட்டு செய்தியே மனசில் வட்டமடித்தது.

இப்படி நம்மை இந்த அவசர வாழ்க்கை பொறுமையில்லாமல் மாற்றிக் கொண்டிருக்கிறதே.  அதை ஏன் நாம் கண்டுக் கொள்ளாமல் இருக்கிறோம்?? 

அதே யோசனையில்  கண்ணயர்ந்து போனேன். எவ்வளவு நேரம்
உறங்கினேனோ  தெரியவில்லை. "கிரீக்... கிரிக்.." என்ற  சப்தம்
வருவதை உணர்ந்து கண்விழித்தபோது சன் நியூஸ் சானல்
கட்டிங் வந்து  வெட்டி வெட்டி ஸ்க்ரீன் முழுதும் போர்களம் போல்  காட்சியளித்தது. ஆஃப் செய்து விட்டு நகர்ந்தபோது...

இன்னதென்று யூகிக்கமுடியாத ஒரு வினோத சப்தம். வாசல்
கதவை ஏதோ நகம் கொண்டு  சுரண்டுவதைப் போல் கேட்டு
ஒரு அடிகூடமுன்னெடுத்து வைக்க முடியாமல் அப்படியே
நிலைகுலைந்து நின்றேன். கண்களை ஜூம் செய்து பார்த்தபோது...

வாசல் கதவின் கீழே ஏதோ நிழலாடியது..........!!!!

                                                                                               
                                                                               -  தொடரும்

             

வெள்ளி, டிசம்பர் 03, 2010

வாழ்வை ரசிக்கலாம் வாங்க!!





வாழ்வை ரசிக்கலாம் வாங்க!!


நாமிருவர் நமக்கிருவர் போய், நாமிருவர் நமக்கொருவர்
போய், நாமிருவர் நமக்கேன் ... என்று காலம் போய்க்
கொண்டிருந்து விட்டு, இப்ப நம்மைக் காக்க பிள்ளைகள்
வேண்டும் என்றெண்ணி 'விழித்துக்' கொண்டு..... நாம் எங்கோ…
போய் விட்டோம்.  நான் பாப்புலேசனை சொன்னேங்க!!

இப்ப இங்கே நம்மிடம் நம்மை அறியாமலேயே ஒரு
ஃபேஷன் ஒன்று தொற்றிக் கொண்டிருக்கிறது. அது
தெரியுமா நமக்கு?? அதென்ன? வாங்க பார்ப்போம்.

“வீட்டில் இது சமைத்தால் என் பையனுக்குப் பிடிக்காது ;
அது சமைத்தால் என் பெண்ணுக்குப் பிடிக்காது ; அவரவர்
களுக்கென்று தனித் தனியாய் கறி சமைக்கணும். இந்த
ரெண்டுகளும் சாப்பிடும் அயிட்டம் ‘அவருக்கு’ப் பிடிக்காது.
அவருக்கென்று ஒரு தனிக்கறி சமைக்கணும். இவர்கள்
சாப்பிடும் எதுவுமே எனக்குப் பிடிக்காது. எனக்கென்று
தனியா சமைத்துக் கொள்வேன்” என்று தாய்மார்கள்
சொல்வதைக் கேட்க நேரிடுகிறது.

உண்மையாதான் சொல்றாங்களா? ஃபேஷனுக்காக
சொல்றாங்களா? இல்ல பெருமைக்குச் சொல்றாங்களா?
நாமும் கொஞ்சம் தெரிந்துக் கொள்ளனும்ல!!

இதை நாம் கவனித்தோமா?? கண்டுக் கொண்டோமா?
இல்லையே!! நாம் உண்டு நம் வேலை உண்டு ; அதையும்
மீறி நமது ப்ளாக் ஸ்பாட் உண்டு (ஹி..ஹி..) என்றிருக்கிறோம்.

என்ன இது நாமென்ன நோயாளிகளா? தனித்தனியாய்
உணவு சமைத்துக் கொள்ள? இல்லை பிள்ளைகளை
வளர்ந்த + வளர்த்த விதம் சரியில்லையா.

எல்லோருக்கும் சேர்த்து ஒருவகைக் கறி, பின்னர்
கூட்டு, மோர் அப்பளம் என்றாலும், அல்லது கோழிக்
கறியோ + கோழி ஃபிரையோ ஆனாலும் வருமானத்தில்
எங்கோ துண்டு விழுந்து, பட்ஜெட் எகிறி, குடும்ப
வருமானத்துக்கு மேல் கடன் வாங்கி, நம்மை ஒரு
ஆட்டு ஆட்டி விடுகிறது. இதில் நாலு பேருக்கு நாலு
வகையான கறி என்றால் ??

உலகில் எத்தனையோ குழந்தைகளுக்கு சரியான உணவுக்
கூட கிடைக்காமல் அல்லாடிகிட்டிருப்பதாக யுனெஸ்கோ
கணக்கு சொல்கிறது.

பையனும் பொண்ணும் படிக்கப் போகுது என்று பாசக்
கயிற்றைப் போட்டு கட்டிவைக்கும் நாம், நாளை இந்தப்
பிள்ளைகள் தான் குடும்பத்தை நிர்வகிக்கப் போகிறது
என்பதை ஏனோ சிந்திக்கத் தவறி விடுகின்றோம்.
நாமிருக்கிறவரைப் பார்த்துக் கொள்ளலாம் என்ற
மனோபாவம் வேரூன்றிப் போய் விட்டது தான்
காரணமா இல்லை வேறு ஏதேனுமா?

குழந்தைகளின் வளர்ச்சியில் அதற்கு ஊட்டமாய் உணவு
தந்து, சுகாதரமாய் வைத்து நோய் நொடி இல்லாமல்
வளர்க்க ஆசைப் படும் நாம், அது வளர்ந்து கொண்டே
போகும் போது எங்கோ கவனிக்கத் தவறி விடுகிறோம். ஒவ்வொருவருக்கும்  வேறு வேறு டேஸ்ட் என்று
வளர்க்காமல், அடிப்படையில் குடும்ப சூழ் நிலைகளை
புரியவைக்கணும். வருமானம் இவ்வளவு என்றும் அதற்கு
தகுந்தாற்போல் செலவு செய்யணும் என்றும் சொல்வதோடு மட்டுமில்லாமல்,

கையில் பையையும், லிஸ்டையும் போட்டு எடுத்துக் கொண்டு,
கூடவே ரங்ஸ்கள் தன் பையனையும் அழைத்துக் கொண்டுப்
போய் இதை இதை அவசியமென்றால் சரி ; அனாவசியமாய்
வாங்கினால் நம் குடும்பச் செலவுக்கு கட்டுப்படியாகாது என்ற அறிவையும், பொருட்களின் தரத்தையும், நம் வரவுக்குத்
தகுந்தாற்போல் பார்த்து பார்த்து வாங்க கற்றுக் கொடுக்கணும்.

பின்னாளில் அவர்களே யோசித்து முடிவெடுத்து, அவர்கள்
வாயாலேயே சொல்லும்படி தயார்ப் படுத்த வேண்டும். அப்ப
தெரியும் டேஸ்ட் என்பதற்காக வேண்டாததை எப்படியெல்லாம் தவிர்க்கணும் என்று! இதை நம்மில் எத்தனைப் பேர் செய்கின்றோம்.

அதற்கு இது மேட்ச் இதற்கு அது மேட்ச் என்று, சுடி, புடவை,
மருதாணி கலர்களை மட்டுமே செலெக்ட் செய்ய பெண்
பிள்ளைகளுக்கு அறிவு புகட்டி, படிக்கப் போகிறாளே,
டயர்டாகி வீட்டுக்கு வருகிறார்களே என்று (இரக்கப்பட்டு)
அடுப்படிப் பக்கம் போக விடாமல் செல்லம் கொடுத்து
வைக்காதீர்கள்.

கிச்சன் உங்களுக்கு மட்டும் சொந்தமில்லை நாளை
அவளும் அதனுள் ராஜாங்கம் நடத்தனும் என்பதை
மனதில் கொள்ளுங்கள். கிச்சனில் நின்று அம்மா எப்படி
அவதிப்படுகிறாள் என்பதை பெண் பிள்ளைகள் உணர்ந்தாலே,
இருப்பதைக் கொண்டு, தனித்தனியாய் டேஸ்ட்டுக்கு தான்
சமைத்து சாப்பிடனும் என்ற மனப்பான்மை தன்னால்
குறைய வரும்.

இப்பொழுதெல்லாம் குடும்பத்தில் பேச்சுக்களை பகிர்ந்துக்
கொள்ளும் சூழல் குரைந்து கொண்டே போய் ஒருவருக்
கொருவர் பேசிக் கொள்ளும் அளவே மணிரத்னத்தின் பட
வசனம் போலாகிவிட்டது. உட்கார்ந்து பேசி அவரவர்
மனநிலையை தெளிவுப் படுத்திக் கொள்வது பலவழிகளில்
குடும்பத்தில் மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

பெற்றோர்கள் மனதில் இருத்திக் கொள்ள வேண்டிய
விஷயம் என்னவென்றால் மற்றவர்கள் முன்னிலையில்
நம் பிள்ளைகளை நாமே 'வாடா-போடி' என்று அழைக்காமல், பிள்ளைகளிடம் தாழ்வு மனப்பான்மை உருவாகாமல் இருக்க,
'வாங்க போங்க' என்று அழைக்கப் பழகி கொள்ளவேண்டும்.

'நாங்கள் அன்பாய் அப்படிதான் 'வா-போ' என்பதெல்லாம்
மற்றவர்கள் முன்னாடி வேண்டாமே. (எங்கள் வீட்டில்
பையனை 'டியர்' என்றும், பெண்ணை 'டார்லிங்' என்றும்
அழைத்துக் கொள்வதாக என் நண்பர் ஒருவர் போகிறப்
போக்கில் சொன்னார். இது கூட நல்லாத்தானே இருக்கு!!)

டிஸ்கி : அங்கீகாரம் என்பதும் அந்நியோன்யம் என்பதும்
வேறு வேறு. இப்ப நீங்கள் பிள்ளைகளுக்குக் கொடுப்பதை,
பின்னாளில்.. அரவணைப்பாய்ப் பெறுவீர்கள் என்பது திண்ணம்.


திங்கள், நவம்பர் 29, 2010

சவுதி என் பார்வையில் (தொடர் பதிவு)



'சவுதி - என் பார்வையில்'




என்னை எழுதத் தூண்டும் நேசங்கள்  


ஸாதிகா சொன்னது…(எல்லாப் புகழும் இறைவனுக்கே)

// வளைகுடாவில் தொலைத்துவிட்டோம்! என்னத்த சொல்ல...?
ஆனாலும் வளைகுடா வாழ் நம்மவர்கள் இப்படியே புலம்பி
கவிதை வடிப்பதை விட்டு, அங்கிருந்து பெறக்கூடிய
நன்மைகளை கவிதையாக வடித்து இனி வரும் ஜெனரேஷன்
களுக்கு பூஸ்ட் கொடுக்கலாமே? //

------
கவிதையா எழுதினால்..(சொன்னால்) புரியாது (யாருக்கு??
எனக்குத் தான் ஹா..ஹா.. !!)

ஆகவே சின்னச் சின்ன செய்திகளாய்.....

உலகமே உருண்டு புரண்டு வந்தாலும் சவுதி சத்தமில்லாம
எல்லாத்திலுமே  மெதுவாத்தான் வரும். எல்லா நாட்டிலும்
காலிங் கார்டு கம்பெனிகள் ஆஃபர் மேல் ஆஃபர் தந்து காசை
கொழித்துக் கொண்டிருந்தாலும் அவரவர் மொழிகளில்
மெஸேஜ் கொடுத்து மக்களை மயக்கத்திலேயே
வைத்திருப்பார்கள். ஆனால்...

இவர்கள் என்னவென்றால் எந்த ஒரு ஆஃபருக்கும் அரபி
மொழியைத் தவிர்த்து வேறு எந்த மொழியிலும் செய்தி
அனுப்பமாட்டாங்க. நமக்கு அதை வாசிக்கத் தெரிந்தாலும்
அதன் அர்த்தம் புரியணுமே. இங்கிருத்து இந்தியாவுக்கு
பேச 0.40 (halala) பைசாவாம். இப்ப தான் உலக அதிசயமா
‘ஹிந்தி’யில் மெஸேஜ் அனுப்புறாங்க.

ஹிந்தி என்றால் நமக்கு வேப்பங்காய் (அப்படி நம்மை
பழக்கி விட்டார்கள்) ஹி..ஹி..(எல்லாம் ஒரு மொழிப்
பற்று தான்) இப்படியே போனால் எப்ப தமிழில் மெஸேஜ்
அனுப்பி ஹும்...விடிஞ்சுடும். காமனா ஒரு மொழி இங்கிலீஷ்
இருக்குல அதுல மெஸேஜ் அனுப்ப வேண்டியது தானே.
இதை யார் முன்னெடுத்துச் (செல்வது) சொல்வது!!

இங்க எல்லோரும் என்ன நெனக்கிராங்கன்னா (இங்க
மட்டுமில்ல உலகம் முழுக்க) இந்தியன் என்றால் ‘ஹிந்தி’
தான் எல்லோரும் பேசக் கூடிய தேசிய மொழியாக இருக்கும்,
அதில் மெஸேஜ் போட்டு எல்லோரையும் அசத்தி விடலாமென்றும் நினைக்கிறார்கள்.

ஆனால் இந்த அரபுக்காரங்க அதை விட ஒரு படி மேலே
போய் இந்தியாக்காரர்கள் அனைவரையுமே ‘ஹிந்தி’ என்றே
தான் விழிக்கிறார்கள். சீனாக்காரர்களை (சீனி...!!) இது சும்மா
ஒரு சாம்பிளுக்கு!! மற்ற நாடுகளை எல்லாம் எப்படி
அழைப்பார்கள் என்று  வேறு  ஒரு பதிவில் பார்ப்போம்!

--------

அமீரகத்தில் அமல்படுத்தப்பட்ட அத்தனை விஷயங்களையும்
கொஞ்சம் கொஞ்சமாய் இங்கே இறக்குமதி செய்துக்
கொண்டிருக்கிறார்கள். அதில் இக்காமா (iqama) என்று
சொல்லப்படும் அடையாள புத்தகத்தையே, அட்டையாக
மாற்றி கொடுத்துக் கொண்டிருப்பதும், எல்லோருக்கும்
கைரேகையும், கண் ரேகையும் சமீபத்தில் தான் எடுத்து முடித்திருக்கிறார்கள். பிளாட்பார நடைபாதையில் கார்பார்க்கிங்,
Pay-பார்க்கிங்காக அமீரகத்தில் எப்பொழுதோ மாற்றி விட்டாலும்
இப்ப தான் இங்கே சிற்சில ஏரியாக்களில் பரவலாக அமல்
படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

------------------

இங்கே சொந்தமாய் வியாபாரம் செய்ய – செய்து - வருபவர்
களுக்கு ஒரு மிகப் பெரிய வரப்பிரசாதம் என்னவென்றால்
வருடத்தில் அதிகமாய் கவர்ன்மெண்ட் ஹாலிடே என்று
எதுவுமே கிடையாது. மிஞ்சி மிஞ்சிப்  போனால் ரம்ஜான் -
ஹஜ் விடுமுறைகளை தவிர்த்து, எல்லா வெள்ளிக்கிழமை
களிலும் ஜும்மா மற்றும், தினமும் நடைபெறும் ஐந்து வேளை
தொழுகை நேரம் போக மீதி எல்லாமே வேலை நேரம்தான்.

இதில் எட்டு மணி வேலை நேரம் என்று இருப்பது சொற்ப
கம்பெனிகளே!! மீதி எல்லாமே பத்து பனிரெண்டு பதினாறு
மணி நேரப் பணிகள். வீட்டு டிரைவர்கள் என்றால் கேட்கவே
வேண்டாம். வீட்டில் எப்பவெல்லாம் அழைப்பார்களோ
அப்பவெல்லாம் வேலை நேரம் தான்.

--------------

எல்லோர் மனதுக்கும்  இதமான ஒரு விஷயம்,  கூட்டம் போட்டு
ரோட்டில் மேடை அமைத்து   அலறும் ஸ்பீக்கர்கள், போராட்டம்
என்று  ரோட்டையும்  வாகனத்தையும்  வழி மறித்துக் கொண்டு
போகும் மனிதம், வீதிக்கு   வீதி  ஒரு தியேட்டர் என்று எதுவுமே இங்கில்லை. பவர்கட், ஆற்காட்டார் கட் என்று எதுவுமே பார்த்து அறிந்ததில்லை.

-----------------------

பஸ்ஸிலோ, டாக்ஸியிலோ போனால் பாய்ண்ட் டு பாய்ண்ட்
ரேட். குறிப்பாக இந்த ஊரிலிருந்து அந்த ஊர் என்று வைத்துக் கொண்டாலும் (கிட்டத் தட்ட 20 to 25 km தொலைவுக்கு) நீங்கள்
எங்கே ஏறினாலும் இறங்கினாலும் ஒரே ரேட். பஸ்ஸில்
2 ரியால்கள், டாக்சியில் (லிமோ)  3 ரியால்கள். இது நல்லதா?
கெட்டதா?

-----------------------

இங்கே குளிர் லேசாக ஆரம்பித்து, வானம் இருண்டும்
இருளாத ஒரு வெளிச்ச ஒளியாய் காட்சியளிக்கறது.
இந்த கிளைமேட் எப்போதுமிருந்தால் நல்லா இருக்குமோ
என்று மனம் ஆசைக் கொள்கிறது. நினைப்பதெப்போதும்
கிடைத்து விடுமா என்ன?? நாம் விரும்புவதை கொடுப்பதாக
இறைவன் சொல்லி இருக்கிறான். பார்ப்போம்!!
-----------------

இன்னும் ஊறி வரும் பெட்ரோல் கிணறு போல், இங்குள்ள
செய்திகள் ஏராளம்!! இப்பதிவை தொடர நான் அழைப்பது..

அன்பு நண்பர்கள்...

'ராஜவம்சம்'  தெரியாததை தெரிந்து 'கொல்'வது


இன்னும் தொடர நினைப்பவர்கள் தொடரலாம் நண்பர்களே..!!


வியாழன், நவம்பர் 25, 2010

காணக் கண் கோடி வேண்டும் (2010)


இந்த வருடம் 35 லட்சம் ஹஜ்ஜாஜிகள் காபாவில் ஒன்று
கூடினார்கள். அங்கு கூடிய கூட்டத்தையும் அந்த ஒற்றுமை
யையும் அல்லாஹ் எல்லா மக்களுக்கும் கியாமத் நாள்
வரை தந்தருள வேண்டி, இம்மையில் எல்லா சகோதர
மக்களும் ஒன்று கூடி நிற்பது போல், மறுமையிலும்
சுவனத்தில் ஒன்று கூடிட வேண்டி, அடுத்த வருட ஹஜ்ஜில்
இதை காணும் கண்கள் அத்தனையும் வந்து கலந்து
கொள்ள துஆ இறைஞ்சியவனாக...!!

உங்கள் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் பகிர்ந்துக்
கொள்ளுங்கள். படங்களும் அதன் விளக்கங்களோடு 
உங்களுக்காக..!!


                                                 Hajj 2010

One of the pillars of Islamic faith, the Hajj must be carried out at least
once in their lifetime by any Muslim who has the ability to do so.
Pilgrims perform a series of rituals including walking around the Kaaba,
standing vigil on Mount Arafat and a ritual Stoning of the Devil. At the
end of the Hajj,  the three day festival of Eid al-Adha begins around the
world.


1
A Muslim pilgrim prays atop Mount Al-Noor during the annual Hajj
pilgrimage in Mecca November 9, 2010. (REUTERS/Mohammed Salem)

2
A general view shows the Saudi holy city of Mecca, as seen from the top of Noor
mountain, late on November 13, 2010. (MUSTAFA OZER/AFP/Getty Images)
3
A Saudi worker stitches Islamic calligraphy in gold thread on a silk drape to cover
the Kaaba at the Kiswa factory in Mecca< Saudi Arabia on November 8, 2010.
The Kaaba cover is called Kiswa and is changed every year at the culmination of
the annual Hajj or pilgrimage. (MUSTAFA OZER/AFP/Getty Images)

4
An Indian Hajj pilgrim holds prayer beads prior to his departure for Mecca at the
Sardar Vallabhbhai Patel International Airport in Ahmedabad, India on October 26,
2010. (SAM PANTHAKY/AFP/Getty Images)

5
Saudi Arabian men ride on the newly-opened Holy Sites metro light rail in Mecca on
November 2, 2010. The Chinese-built monorail project, will link Mecca with the holy
sites of Mina, Arafat and Muzdalifah, and will operate for the first time during the Hajj
this month at 35 percent capacity to ferry Saudi nationals who will take part in the
upcoming annual Muslim pilgrimage. (AMER HILABI/AFP/Getty Images)

6

Saudi special forces show their skills during a military parade in preparation
for the Hajj in the Saudi city of Mecca on November 10, 2010.
(MUSTAFA OZER/AFP/Getty Images)

7
Saudi special forces take part in a military parade, preparing for the Hajj in Mecca
on November 10, 2010. (MUSTAFA OZER/AFP/Getty Images)

8

Saudi workers load carboys of "zamzam" water containers at the Zamazemah
United Office in Mecca, on November 7, 2010. According to Islamic belief,
zamzam is a miraculously-generated source of water from God, which began
thousands of years ago when Abraham's infant son Ishmael was thirsty and
crying for water and discovered a well by kicking the ground. Millions of pilgrims
visit the well each year while performing the Hajj or Umrah pilgrimages, in order
to drink its water. (MUSTAFA OZER/AFP/Getty Images)
9
Thousands of tents housing Muslim pilgrims are crowded together in Mina near
Mecca, Saudi Arabia, Sunday, Nov. 14, 2010. (AP Photo/Hassan Ammar)

10

Muslim pilgrims walk past construction outside the Grand Mosque during the
annual Hajj in Mecca, Saudi Arabia on Friday, Nov. 12, 2010.
(AP Photo/Hassan Ammar)

11
Muslim pilgrims are seen on their way towards a rocky hill called Mount Arafat,
on the  Plain of Arafat near Mecca, Saudi Arabia on Monday, Nov. 15, 2010.
(AP Photo/Hassan Ammar)

12
An ambulance is parked among thousands of Muslim pilgrims praying near the
Namira Mosque at Mount Arafat, southeast of the Saudi holy city of Mecca,
on November 15, 2010. Pilgrims flooded into the Arafat plain from Mecca and
Mina before dawn for a key ritual around the site where prophet Mohammed
gave his farewell sermon on this day in the Islamic calendar 1,378 years ago.
Pilgrims spend the day at Arafat in reflection and reading the Koran.
(MUSTAFA OZER/AFP/Getty Images)

13

Muslim pilgrims pray outside Namira mosque in Arafat near Mecca, Saudi Arabia,
Monday, Nov. 15, 2010. (AP Photo/Hassan Ammar)

14

Pilgrims fill the streets in prayer, near Namira mosque in Arafat, Saudi Arabia
on Monday, Nov. 15, 2010. (AP Photo/Hassan Ammar)

15

A Muslim man visits the Hiraa cave on Noor mountain late on November 13, 2010
during the annual Hajj. According to tradition, Islam's Prophet Mohammed received
his first message to preach Islam while praying in the cave. (MUSTAFA OZER/AFP
/Getty Images)

16
A Muslim pilgrim holds his daughter on Mount Arafat on the plains of Arafat,
outside the holy city of Mecca on November 15, 2010. (REUTERS/Mohammed Salem)

17
Pilgrims pray on the side of Mount Arafat, near Mecca, Saudi Arabia on Monday,
Nov. 15, 2010. (AP Photo/Hassan Ammar)

18
Pilgrims climb up Mount Arafat on the Plain of Arafat in Saudi Arabia on Monday,
Nov. 15, 2010. (AP Photo/Hassan Ammar)

19
A Muslim pilgrim reads the Koran at Mount Al-Noor during the annual Hajj
on November 11, 2010. (REUTERS/Mohammed Salem)

20
Muslims on the Hajj pilgrimage take a rest in Mina near Mecca, Saudi Arabia
on November 15, 2010. (REUTERS/ Fahad Shadeed)

21
His head resting on the Jabal al-Rahma pillar, a Muslim pilgrim prays atop Mount
Arafat near Mecca, Saudi Arabia on Monday, Nov. 15, 2010. (AP Photo/Hassan Ammar)

22
Muslims touch and write on the Jabal al-Rahma pillar on Mount Arafat in
Saudi Arabia on Monday, Nov. 15, 2010. (AP Photo/Hassan Ammar)

23

Muslim pilgrims pray atop Mount Arafat, southeast of Mecca, on November 15,
2010. Pilgrims flooded into the Arafat plain from Mecca and Mina before dawn
for a key ritual around the site where prophet Mohammed gave his farewell
sermon on this day in the Islamic calendar 1,378 years ago.
(MUSTAFA OZER/AFP/Getty Images)

24


At sunset, a Muslim man prays on Mount Arafat, near Mecca, Saudi Arabia on Monday, Nov. 15, 2010. (AP Photo/Hassan Ammar)

25

Muslim pilgrims stand on top of Noor mountain where the Hiraa cave is located
overlooking Mecca late on November 13, 2010. (MUSTAFA OZER/AFP/
Getty Images)

26
The Grand Mosque and the four-faced clock, atop the Abraj Al-Bait Towers are seen
from the top of al-Noor mountain in Mecca, Saudi Arabia on Nov. 11, 2010.
(AP Photo/Hassan Ammar)

The massive new clock atop the newly-completed Abraj Al-Bait Towers, above tens
of thousands of Muslim pilgrims walking around the Kaaba, inside the Grand
Mosque in Mecca, Saudi Arabia on Wednesday, Nov. 10, 2010.
(AP Photo/Hassan Ammar)

28
Muslim pilgrims circle the Kaaba at the center of the Grand mosque in Mecca
during the annual Hajj pilgrimage November 11, 2010.
(REUTERS/Mohammed Salem)

29
Tens of thousands of Muslim pilgrims pray inside the Grand Mosque, during the annual Hajj in Mecca, Saudi Arabia on Friday, Nov. 12, 2010. (AP Photo/Hassan Ammar)

30
Muslim pilgrims perform Friday prayers in front of the Grand Mosque in Mecca,
on November 12, 2010. (MUSTAFA OZER/AFP/Getty Images)

31

In shadows and sunlight, thousands of Muslim pilgrims pray inside the Grand
Mosque in Mecca, Saudi Arabia on Friday, Nov. 12, 2010.
(AP Photo/Hassan Ammar)

32
Muslim pilgrims move around the Kaaba, inside the Grand Mosque in Mecca,
Saudi Arabia on Saturday, Nov. 13, 2010. (AP Photo/Hassan Ammar)

33
Muslim pilgrims reach to touch the golden doors of the Kaaba as they perform their
walk around the Kaaba at the Grand Mosque in Mecca early on the morning of
November 9, 2010. (MUSTAFA OZER/AFP/Getty Images)

34
A Muslim pilgrim prays at the top of Noor Mountain, on the outskirts of Mecca,
Saudi Arabia on Thursday, Nov. 11, 2010. (AP Photo/Hassan Ammar)