facebook

செவ்வாய், ஜூலை 10, 2012

ஸாஃபி-Safi (Herbal)

இந்த படத்தில் பார்க்கும் டானிக் பாட்டிலை உங்கள் வீட்டில் எங்காவது பார்த்திருக்கிறீர்களா? உங்களின் தாத்தா காலம் தொட்டு இப்ப அப்பாக்கள் காலம் வரை இன்னும் பல குடும்பங்களில் உபோயகப் படுத்தப்படும் டானிக். இன்னும் பலருக்கு இதை பற்றி தெரியாமலே இருக்கலாம். அவர்களுக்காக இங்கே சொல்கிறேன்.

ஸாஃபி-Safi (Herbal)

இது ஹம்தர்த் (Hamdard) கம்பெனியின் தயாரிப்பு! பன்னெடுங் காலமாய் மார்கெட்டில் வளம் வந்துக் கொண்டிருக்கும் இதன் உபயோகம் என்னவென்று தெரியாமல் நான் கூட கவனமில்லாமல் இருந்து விட்டேன். நண்பர் ஒருவர் சொன்ன பிறகே புரிந்தது. பயன் படுத்த ஆரம்பித்தேன்.

அதன் மகாத்மியம் பற்றி அவர்களே சொல்வது :

Safi இது ஒரு பயனுள்ள இரத்த purifying மூலிகை துணை யாகும். அது உங்களின் உடலில் உள்ள செயல்பாடுகளை சுத்திகரிக்கும் நேரத்தில், குடல், சிறுநீரகம் மற்றும் தோல் மூலம் திரட்டப்பட்ட ஆரோக்கியமற்ற விஷயத்தை நீக்குதல் போன்ற வேலையை முடுக்கி விடுகிறது. Safi, செரிமான அமைப்பை சரி செய்து, மலச்சிக்கல் மற்றும் உடல் சூட்டை தணித்து, பருக்கள் , தோல் வெடிப்புகளை நீக்குகிறது.

விவரம் போதுமா?

இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால், படிக்கிற பிள்ளைகளுக்கு அரவணைப்பாய் அன்னையும், கல்யாணம் முடிந்திருந்தால் அன்பான மனைவியும் அனுசரணையாய் பரிமாறிய கூட்டுக்குடும்பக் காலம் டெலிவிஷன் ஊடாய் தொடர்கள் என்னும் பின்னனியூடே கனவாகிப் போனது. என்றாலும், எல்லாக் குடும்பத்தையும் அப்படி சொல்லிவிட முடியாது, எங்கோ ஏதோ கண்ணுக்குத் தெரியாத தூரத்தில் சில குடும்பங்களில் கனவில் பலன் நடந்துக் கொண்டிருக்கலாம்.

வெளிநாடுகளில் வேலைக்கு செல்லும் நம்மை போன்ற பலர் நம் உடல் நலனில் என்றைக்குமே அக்கறை கொள்வதில்லை. குடும்பம், பிள்ளைகள், சொந்தங்கள் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கும். பெரும்பாலோனோர் இருக்கையில் அமர்ந்து கணிணியில் வேலை செய்து விட்டு, இரவில் அவசரம் அவசரமாய் சாப்பிட்டு விட்டு உறங்கி, உடல் உஷ்ணத்தால் காலையில் பாத்ரூமில் அமர்ந்து படும் அவதி சொல்லில் மாளாது. அவசர யுகம் நம்மை பாடாய் படுத்துகிறது.

இரவில் இந்த டானிக்கை சாப்பிட்டுவிட்டு படுத்துறங்குங்கள். காலையில் எழுந்து பாத்ரூமுக்கு ஓட வேண்டியிருக்கும். அங்கே சென்று விட்டு வந்தால் கலகலாதான் :) எங்கள் பக்கமுள்ள வேளாங்கண்ணியை சுற்றிய கிராமப்புறங்களில் “மடா உடைத்த மாதிரி” (மண் பானையை போட்டுடைத்த) மாதிரி என்ற சொலவாடை சொல்வார்கள் :))

சாப்பிடும் முறை :

இரவில் சாப்பாட்டுக்குப் பின் படுக்கப் போகுமுன் பாலிலோ, தண்ணீரிலோ (தண்ணீர் என்றால் குடிக்கிற தண்ணீர் ஐயா!!) ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் கலந்து சாப்பிடவேண்டும். பாலில் கூடுதலாய் ஒரு ஸ்பூன் சுகர் கலந்துக் கொள்வது நல்லது. ஏனெனில் இந்த டானிக் கசப்போ கசப்பு அப்படி ஒரு கசப்பு!

அதனுள்ளே உள்ள Leaflet-ல் விவரமிருக்கிறது. பார்த்துக் கொள்ளுங்கள். http://www.hamdard.com.pk/safi போய் தெரிந்துக் கொள்ளுங்கள்

இந்தியாவில் இருந்து தயாராகும் இந்த 200 மிலி டானிக்கின் விலை ரூ.70 தான். இது நாட்டு மருந்துக் கடைகளிலும், பார்மஸிகளிலும் கிடைக்கிறது.

பாகிஸ்தானிலிருந்து தயாராகி வெளிநாடுகளில், குறிப்பாக சவுதி போன்ற வளைகுடா நாடுகளில் விற்பனையாகும் இந்த 175 மிலி டானிக்கின் விலை Pkr 50/- ஆனால் இங்கே ரொம்ப கடைகளில் கிடைப்பதில்லை. வந்த உடனே விற்று தீர்ந்து விடுகிறது. நாட்டு மருந்துக் கடைகளிலும், Bhatkal போன்ற ஷாப்பிங் சென்டர்களில் மட்டுமே கிடைக்கிறது. விலை SR.10/= (சவுதி ரியால்கள்)வியாழன், மே 31, 2012

தெரிந்த சவுதி அரபியா, தெரியாத பல விஷயங்கள்!தெரிந்த சவுதி அரபியா.. தெரியாத பல விஷயங்கள்.. சவுதி பற்றி நல்ல விஷயங்களை நீங்களும் தெரிந்து கொள்ள..


ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நாட்டைப் பற்றி ஒரு அபிப்ராயம் இருக்கிறது.

அது அவர்கள் நாளிதழ்கள் வாயிலாகவோ, நண்பர்கள் வாயிலாகவோ, இன்ன பிற ஊடக வாயிலாகவோ அறிந்தவை. பொதுவாக அமெரிக்கா என்றால் மனதிற்குள் அது ஒரு சொர்க்க பூமியாகத் தோன்றும்.

சவுதி அரபியா என்றால், அது குறித்த எண்ண ஓட்டங்கள் உலக பார்வையில் தரக் குறைவாகவே இருக்கிறது. அது பல இடங்களில் தன்னுடைய சட்ட திட்டங்களிலும், மனிதாபி மானத்திலும் கடுமையான உலக விமரிசனத்துக்கு உள்ளாகி இருப்பது உண்மைதான் என்றாலும், சவுதி அரபியா, தன் நாட்டின் பெருமையாக கொண்டுள்ள விடயங்களை, அது குறித்து நான் அறிந்த விடயங்களை மட்டுமே சில இங்கு பகிரப்பட்டுள்ளன.

பெரும்பாலான சவுதி அரபிய சட்டதிட்டங்களிலும் மற்ற நாட்டினனுக்கான நீதி முறைகளிலும் பல கருத்துகள் ஒவ்வாது என்பதை சொல்லிக்கொண்டு, சவுதி அரபியாவின் வியக்கத்தக்க செய்திகளை நீங்கள் அறிய வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே படியுங்கள்.

*முஸ்லிம் ஒருவர் தன் வாழ்வில் ஒருமுறையேனும் புனிதப்பயணம் மேற்கொள்ள வேண்டிய புனிதத்தளமான மெக்காவும், மெதினாவும் இங்குதான் உள்ளது.

*உலகின் இரண்டாவது மிகப் பெரிய எண்ணெய் கிடங்குகளை (world’s Second largest oil reserves) கொண்ட நாடாக இது உள்ளது. வெனிசுலா முதலிடத்தில் உள்ளது.

*கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ரஷ்யாவிற்கு அடுத்த படியாக உலகின் இரண்டாவது மிக அதிகமான கச்சா எண்ணெய் (Worlds second largest oil export) ஏற்றுமதி செய்யும் நாடு இது என்பது குறிப்பிடத்தக்கது.

*worlds sixth largest natural gas reserves என்ற இயற்கைவாயு சேமிப்பில் உலகின் ஆறாவது இடத்தில் சவுதி உள்ளது.

*வளைகுடா நாடுகளில் அதிக பரப்பளவையும், அரபு நாடுகளில் அல்ஜீரியாவிற்கு அடுத்த இடத்திலும் சவுதி உள்ளது.

*Abraj al bait towers இந்த ஹோட்டல் mekkah royal hotel tower என்றும் அழைக்கப் படுகிறது. இது பல உலக சாதனைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த ஹோட்டல் இவ்வாண்டு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இவ்வாண்டு திறக்கப்படும் பட்சத்தில், tallest hotel என்ற பெருமையை அடையும்.

*Abraj al bait towers ல் உள்ள clock தான் உலகின் tallest clock tower என்ற பெருமையையும், largest clock face என்ற பெருமையையும் பெறுகிறது. இதன் சிறப்பு என்னவென்றால், 25 KM தொலைவில் இருந்து கடிகாரத்தைப் பார்க்க முடியும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

*உலகின் இரண்டாவது மிகப் பெரிய கட்டிடம் (World largest building) என்ற பெருமையை Abraj al bait towers அடைகிறது. இது குறித்து நீங்கள் அறிய விரும்பினால் இதை கிளிக் செய்யவும்.http://en.wikipedia.org/wiki/Abraj_Al_Bait_Towers

*Worlds largest military funds spends என்பதில் சவுதி உலகில் ஏழாவது இடத்தில் உள்ளது. மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியா எட்டாவது இடத்தில் உள்ளது.

*மன்னர் அப்துல்லா உலகின் மூன்றாவது வலிமை வாய்ந்த தலைவராகக் கருதப்படுகிறார். சீனா, அமெரிக்கா நாட்டின் presidents முதல் இரு இடங்களை முறையே பெற்றுள்ளதாக இவ்வாண்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

*அமெரிக்காவை ஆட்டிப் படைத்த ஒசாமா பின்லேடனின் சொந்த நாடு சவுதி. SBG (Saudi Binladan Group) என்ற கம்பெனி தான் சவுதியில் மிகப் பெரிய contracting company என்பது குறிப்பிடத்தக்கது.

*princess noura bin abdul Rahman university(PNU) , இதுதான் உலகின் மிகப் பெரிய பெண்களுக்கு மட்டுமான university.

*The world’s largest Automated People Mover (APM) train வசதி பெற்றுள்ள university ஆக PNU விளங்குகிறது. APM Railway யின் நீளம் 14 KM & In rush hour, 70000/HR பயணிகளை ஏற்றி செல்லும் அளவுக்கு  ரயில் வசதி செய்யப் பட்டுள்ளது என்றால் PNU University யைப் பற்றி நாம் வேறு என்ன சொல்ல வேண்டும்! சவுதி அரேபியா உலகின் கல்விக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் ஐந்தாம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

*13000 மில்லியன்/வருடம் (ஒரு கோடியே முப்பது லட்சம்), வெளிநாட்டிலிருந்து முஸ்லிம் மக்கள் மெக்காவிற்கு வந்து வழிபட்டு செல்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மற்ற மதத்தினர் மெக்கா மற்றும் மெதினா நகர எல்கைக்குள் செல்ல முடியாது. கடந்த ஆண்டு 2011 அரசு அறிக்கைப் படி, ஹஜ் பயணிகளாக மெக்கா வந்தவர்கள் எண்ணிக்கை 1828195.

*முஹம்மது நபி (ஸல்) பிறந்த புண்ணியத் தளம்தான் முஸ்லிம்கள் வழிபடும் இந்த மெக்கா.

*உலகின் மிகப் பெரிய மசூதிக்குரிய பெருமை, மெக்கா மசூதியையே சாரும்.

*ஆசியாவின் மிகச் சிறந்த university ஆக KSU(King Saud Univesity, Riyadh) 19 ஆவது இடத்திலும், உலகில் சிறந்த university வரிசையில் 200 ஆவது இடத்தையும் பெற்றுள்ளது. அரபு நாடுகளின் மிகச் சிறந்த university ஆக KSU விளங்குகிறது.

*சவுதி அரபியாவின் தேசிய விலங்காக ஒட்டகம் உள்ளது. ஒட்டகத்தை வளர்ப்பவர்கள் மிகப் பெரிய செல்வந்தர்களாகப் பார்க்கப் படுகிறார்கள்.

*கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஓரினச் சேர்க்கை, தீவிர வாதம், விபச்சாரம், போதைப் பொருள் தயாரித்தல் அல்லது கடத்தல், தேசப் பாதுகாப்பு, கடவுளுக்கு எதிராக விமர்சித்தல், இன்னும் சில விரோத செயல்களுக்கு மரண தண்டனையும், ஆயுள் தண்டனையும் வழங்கப்படுகிறது. குற்றங்களுக்கு கடும் தண்டனை என்பதை உபயோகிக்கும் உலக நாடுகளில் முதன்மையானது சவுதி.

*திரை அரங்குகள் இல்லாத ஒரே நாடாக சவுதி அரபியா உள்ளது.

*பூங்காக்களைப் பொறுத்தவரை Familiy park and Bachelor park என்று தனித் தனியாகவே உள்ளது.

*உணவகங்களில் Familiy Restaurant இருக்கின்ற இடங்களில், இருக்கைகள் family க்குத் தனியாகவும், bachelor க்குத் தனியாகவும் உள்ளன.

*மேற்கூறிய கடைசி மூன்று விசயங்கள் பெரும்பாலோர் விரும்புவதில்லை என்றாலும் சவுதி அரசின் கட்டளைப் படி அவ்வாறே இயங்குகின்றன.

*தொழுகை நேரங்களில் அரசின் உத்தரவுப்படி அனைத்து கடைகளும் அடைத்து வைக்கப்படும்.

ஒரு சில மிகப் பெரிய ஷாப்பிங் மாலில் மட்டும் உள்ளே செல்ல அனுமதி உண்டு. விலை போடுவது என்பது கிடையாது. இறைவனுக்குப் பிறகு தான் வியாபாரம் என்பதைக் கடைபிடிக்கும் ஒரே இஸ்லாம் நாடாக சவுதி உள்ளது.

*King Fahd International Airport (KFIA) தான் உலகின் largest airport in the world ஆக உள்ளது.

*Saudi ARAMCO தான் உலகின் second largest public company ஆக உள்ளது. இது dammam ல் உள்ளது.

*Saudi ARAMCO உலகில் அதிக அளவு crude oil reserves ஐயும், உலகில் அதிக அளவு ஒரே நாளில் ஆயில் உற்பத்தி செய்யும் நிறுவனமும் சவுதியில்தான் உள்ளது. ஆயில் சம்பந்தமான 1oo pattern rights வைத்துள்ள saudi aramco, இங்குதான் உள்ளது.

*ஒரேநாளில் 12 millions/day அளவுக்கு SAUDI ARAMCO நிறுவனம் உற்பத்தி செய்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

*கெமிக்கல் உற்பத்தியில் SABIC SAUDI ARABIYA தான் பல பொருட்களை உற்பத்தி செய்வதில் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக Ethlene glycol உற்பத்தியில் உலகில் இரண்டாம் இடத்தையும், Poly ethlene தயாரிப்பில் மூன்றாமிடத்தையும், Poly propline, Poliyofins உற்பத்தியில் உலகில் நான்காம் இடத்தையும் தன்னகத்தே வைத்துள்ள, SABIC சவுதியில் தான் உள்ளது.

*உலகில் அதிகம் வாகன போக்குவரத்து உள்ள நாடுகளில் சவுதியும் ஒன்று. ஆனால் இங்கு கார் தயாரிப்பு கிடையாது.

*உலகில் எங்கும் கிடைக்காத அமைதி தவழும் பூமி!

நன்றி : கதம்பம்

வெள்ளி, ஏப்ரல் 27, 2012

மரவள்ளிக் கிழங்குபடிக்கிற காலத்தில் நான் விரும்பி சாப்பிடும் ஐட்டங்களில் இந்த மரவள்ளிக் கிழங்கும் ஒன்று. கடைதெருவில் கூடைகளில் வைத்து விற்பவர்கள், கூடைகளின் மேல் ஒரு பலகையை வைத்து அழகாய் வெந்து வெடித்த கிழங்குகளை பார்வைக்கு வைத்திருப்பார்கள். பார்க்கும் போதே வாங்கிடனும் போல ஆசை வரும். வாங்கி விடுவேன். வீட்டில் கொண்டு வந்து கொடுத்தால், அம்மா அதை அழகாக தோலுரித்து, சிறிது சிறிதாக வெட்டி, சீனி, தேங்காய் பூ போட்டு பிளேட்டில் கொண்டு வந்து தருவார்கள். சாப்பிட சாப்பிட சுவையாய் இருக்கும்.


பின்னாளில் நான் ஊர் செல்லும்போதெல்லாம் அம்மா இதை நினைவு வைத்து, ஒரு கடமையாகவே எனக்கு வாங்கி வைத்திருப்பார்கள். அது ஒரு கனாக்காலம்.இப்பொழுது இங்கே கிடைக்கிற மரவள்ளிக் கிழங்குகளை வேக வைத்து சாப்பிட்டாலும், அம்மாவின் கைமணம் இல்லவே இல்லை. ஆனால் கடைகளில் விற்கும் கிழங்குகள் மட்டும் எப்படி அழகாய் வெந்து வெடித்திருக்கிறது என்று இன்று வரை புரியவில்லை.

கொஞ்சம் அதன் கதையை தெரிந்துக் கொள்வோம்

தமிழ்நாட்டில் இக்கிழங்கிற்கு மரவள்ளிக் கிழங்கு என்பது தவிர கப்பக் கிழங்கு, ஏலேலங் கிழங்கு (திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம்) குச்சிக் கிழங்கு, குச்சிவள்ளிக் கிழங்கு என வேறு சில பெயர்களும் உண்டு.

வரலாறு :

தென் அமெரிக்காவையும் மேற்கு ஆப்பிரிக்காவையும் தாயகமாகக் கொண்ட இச்செடி இன்று ஆப்பிரிக்காவில் அதிகம் பயிர் செய்யப் படுகிறது, என்றாலும் அமேசானை பிறப்பிடமாகக் கொண்ட மரவள்ளிக் கிழங்கு இந்தியாவில் 17-ஆம் நூற்றாண்டில் கேரளாவில் போர்துகீசியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. (கப்பலில் வந்ததால் “கப்பக் கிழங்கா” என்ற வரலாறு தெரியவில்லை அமைச்சரே!) கொலம்பசின் காலத்துக்கு முற்பட்ட அமெரிக்காக் கண்டத்தில் வாழ்ந்த மக்களின் முக்கிய உணவாக விளங்கிய மரவள்ளி அவர்களின் தாயக ஓவியங்களிலும் இடம் பெற்றது.


இதிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு மாவுப் பொருள் ஜவ்வரிசி ஆகும். இது உப்புமா, பாயாசம், கஞ்சி முதலியவை தயாரிக்கப் பயன் படுகிறது. மரவள்ளிக்கிழங்கு ஸ்டார்ச், குளுக்கோஸ், டெக்ஸ்ட்ரின், கோந்து, புரூக்டோஸ் சாறு ஆகியவை தயாரிக்கும் தொழில்துறை சார்ந்த தொழிற்சாலைகளில் ஒரு முக்கிய மூலப்பொருளாக பயன்படுகிறது.

மரவள்ளியைச் சமைக்கும்போது இஞ்சியைக் கலந்து சமைத்தல் அல்லது மரவள்ளி உணவுடன் இஞ்சி கலந்த உணவுப் பொருள்களை உட்கொள்ளல் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது என அறியப்பட்டுள்ளது. தோலுரித்த மரவள்ளிக் கிழங்கை வெறுமனே அவித்து உண்பது உலகின் பல பகுதிகளிலும் பொதுவாகக் காணப்படுகின்றது.

இதனைத் துணைக் கறிகளுடன் ஒரு வேளை உணவாகப் பயன் படுத்துவதும் உண்டு. அவித்த கிழங்கை மிளகாய், உப்பு போன்ற பொருட்களுடன் சேர்த்து உரலில் இட்டு இடித்து உண்பதும் உண்டு. கிழங்கைக் குறுக்காக மெல்லிய சீவல்களாக வட்டம் வட்டமாகச் சீவி, எண்ணெயில் இட்டுப் பொரித்து உண்பதுண்டு.

இது பொதுவாக சிற்றுண்டியாகவே பயன்படுகின்றது. இப் பொரியலைப் பல நாட்கள் வைத்து உண்ண முடியும் என்பதால், இவற்றை நெகிழிப் பைகளில் (பிளாஸ்டிக் கேரி பேக்ஸ்'ங்க) அடைத்து விற்பதுடன் பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

மரவள்ளிக் கிழங்கு புட்டு:

வழக்கமா மாவு வகைகள்லதான் புட்டுப் பண்ணுவோம். ஆனா, கிழங்குகளை வெச்சும் கிராமங்கள்ல புட்டு அவிக்கறதுண்டு. அந்த வகைல வர்ற இந்த மரவள்ளிக் கிழங்கு புட்டு சாப்பிட அத்தனை ருசியா இருக்கும்!

அரைக் கிலோ மரவள்ளிக் கிழங்கை அரை மணி நேரம் தண்ணீர்ல ஊற வெச்சு, அப்புறமா மண் போக கழுவிட்டு மேல இருக்கற பட்டைய உரிச்சுடுங்க. கிழங்கை சன்னமாத் துருவி, இட்லிப் பானைல பரவலாத் தூவி, பதினைந்து நிமிஷம் வேக வைங்க. வெந்ததும், சூட்டோட இருக்கறப்பவே ஒண்ணுலேர்ந்து ஒண்ணரைக் கப் அளவுக்கு சர்க்கரை, ஒரு டீஸ்பூன் ஏலத்தூள், ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி விடுங்க. அவ்வளவு தான் வேலை. புட்டு தயார்!

இதை அப்படியேயும் சாப்பிடலாம். சின்னச் சின்னதா உருண்டை பிடிச்சும் சாப்பிடலாம். கிழங்குத் துருவலை ஒரு டிரேல கொட்டி சமப்படுத்தி, அப்புறமா ஆவியில வேகவெச்சு எடுத்து, விரும்பின வடிவத்துல துண்டுகளா போட்டு, அதுமேல முந்திரி துண்டுகளை பதிச்சுக் கொடுத்தா… குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.

தகவல் + படங்கள் : விக்கிபீடியா. 

புதன், மார்ச் 07, 2012

வைரத்தின் வரலாறு

வைரத்தின் வரலாறு

இந்த பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு, இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும்.

உலகிலேயே முதன் முதலில் இந்தியாவில் தான் வைரங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆந்திராவில் உள்ள கோல்கொண்டா என்னுமிடத்திற்கு அருகில் உள்ள வஜ்ரகரூர் என்னும் இடத்தில் தான் வைரங்கள் கிடைத்தது.

இங்கிருந்து தான் வைரம், அந்தக் காலத்தில் கி.மு.எட்டாம் நூற்றாண்டில் அதாவது 2800 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து கலிங்க நாடு (இன்றைய ஒரிஸ்ஸா) வழியாக பாரசீக வளைகுடா, அலெக்சாண்டிரியா, ரோம், அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

வைரங்களை பட்டை தீட்டும் முறையையும் இந்தியர்கள் தான் முதன் முதலில் கண்டுபிடித்தனர். இந்தியாவிலிருந்து தான் "வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடியும்'' என்ற பழமொழியும் வந்தது.

வைரம் எப்படி உருவாகிறது?

பூமியின் மேற்பரப்பில் இருந்து 150-200 கிலோ மீட்டர் ஆழத்தில் 1200 முதல் 1800 டிகிரி சென்டி கிரேடு வெப்பம் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கும் போது சுத்தமான கார்பன் மூலக்கூறுகளால் வைரம் உருவாகிறது.

வைரம் உருவாக எத்தனை ஆண்டுகள் ஆகும் ?

இன்றைக்கு நாம் உபயோகிக்கும் வைரங்களில் மிகவும் வயது குறைந்த வைரம் 30 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக 1977-ல் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி கூறுகிறது.

வைரம் ஏன் இவ்வளவு ஜொலிக்கிறது ?

வைரம் மட்டுமே தன்னுள் பாய்கின்ற வெளிச்சத்தில் 85 சதவீதம் ஒளியை பல கோணங்களில் பிரதிபலித்துத் திருப்பி வெளியிலேயே அனுப்பி விடும். வேறு எந்த ரத்தினத்துக்கும் இந்த தன்மை கிடையாது. இதனை ஆங்கிலத்தில் Internal Reflection (TIR) முழுமையான உள்பிரதிபலிப்பு என்பர். அதனால் தான் இதனை அடம் பிடிக்கும் ஜொலிப்பு (Adamantine Luster) என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.

வைரத்தின் ஆங்கிலப் பெயர் Admas என்பதாகும்.

இந்த வார்த்தை மருவி, Diamond என்று வழக்கத்தில் ஆகிவிட்டது.

வைரத்தை ஏன் காரட்(Carat)முறையில் எடை போடுகிறார்கள் ?

இந்தியாவிற்குப் பிறகு, 1870 லிருந்து தென் ஆப்பிரிக்காவில் வைரங்கள் கண்டெடுக்கப்ப டுகிறது. இங்கு, எடை அளவுகள் நிர்ணயிக்கப் படாத காலகட்டத்தில் காரப் விதை (Carob Seeds) என்ற ஒருவித விதைகளையே எடையாக பயன்படுத்தினர். ஏனென்றால் இந்த விதைகள் அனைத்தும் அநேகமாக ஒரே அளவு எடை உடையவை.இந்த காரப் என்ற பெயர் மருவி, காலப்போக்கில் காரட் என்றாகி விட்டது.

ஒவ்வொரு காரப் விதையும் 200 மில்லி கிராம் எடை கொண்டது. ஆகவே, ஒரு காரட் வைரத்தின் எடை 200 மில்லி கிராம். அதாவது 5 காரட் 1 கிராம் எடை.

சென்ட் என்பது எந்த எடையை குறிக்கும் ?

ஒரு காரட் என்பது 100 பாகங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பாகமும் 1 சென்ட் எனப்படும். ஒரு காரட் வைரம் 100 சென்ட்டுகள்.

உம் : 10 சென்ட் கற்கள் 10 எண்ணிக்கை 1 காரட்.

ப்ளு ஜாகர்(Blue Jager)வைரம் என்றால் என்ன ?

தென் ஆப்பிரிக்காவில் ஜாகர் பவுண்டன் (Jagers Fontein) என்ற இடத்தில் ஒரு வைரச்சுரங்கம் இருந்தது. அங்கிருந்து எடுக்கப்பட்ட வைரங்கள் வெண்மையோடு சேர்ந்த ஒரு நீலநிற ஒளியைக் கொடுக்கும். அதனால் தான் அந்த வைரங்களுக்கு Blue Jager என்று பெயர். ஆனால் இப்பொழுது இந்த சுரங்கம் உபயோகத்தில் இல்லை.

வைரத்திற்கு இவ்வளவு விலை ஏன் ?

ஒரு காரட் வைரம் தோண்டி எடுக்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 350 டன் (35/40 லாரி லோடு) பூமியை தோண்டி எடுக்க வேண்டும். அதிலும் நிச்சயமாய் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இதற்காகும் செலவு, பட்டை தீட்டும் போது ஏற்படும் சேதம், சந்தைப்படுத்துதல் (மார்க்கெட்டிங்), இதில் செய்யும் முதலீடு, தரம் பிரித்தல் மற்றும் பிற செலவுகள் சேரும் போது விலை கூடுகிறது.

இந்தியாவில் எங்கு வைரம் கிடைக்கிறது ?

இந்தியாவில் மத்தியபிரதேசத்தில் பன்னா (Panna) என்னும் இடத்தில் உள்ள வைர சுரங்கத்திலிருந்து தினமும் வைரம் தோண்டி எடுக்கிறார்கள். இங்கிருந்து இன்றும் நல்ல தரமான வைரங்கள் கிடைக்கிறது. ஆனால் ஆப்பிரிக்காவை ஒப்பிட்டால், மிகவும் குறைந்த அளவே இங்கு கிடைக்கிறது.

பெல்ஜியம் கட்டிங் என்றால் என்ன ?

முதல் முதலில் இந்திய வல்லுநர்கள் பட்டை தீட்டியதை இன்னும் மேம்படுத்தி, பெல்ஜியம் நாட்டை சேர்ந்த லோடெவிஜ்க் வேன் பெர்க்காம் என்ற வல்லுநர் 58 பட்டைகளோடு மிகவும் நன்றாக ஜொலிக்கும் முறையில் வைரத்தை பட்டை தீட்டினார். இதற்கு (Round Brilliant cut) என்று பெயர். இது தான் பெல்ஜியம் கட்டிங்.

வைரம் உலகிலேயே மிகவும் கடினமானது என்கிறார்களே ?

வைரத்தை வெட்டவோ, பட்டை தீட்டவோ செய்வதற்கு வைரத்தால் மட்டுமே செய்ய முடியும். ஆனால் வைரத்தை வைத்து மற்ற எல்லா ரத்தினக் கற்களையும் பட்டை தீட்டலாம். ஆனால் வைரத்தை பட்டை தீட்ட, வைரத்தால் மட்டுமே முடியும்.

பட்டை தீட்டிய வைரக்கல்லில் உலகில் உள்ள எந்தப் பொருளை வைத்து உரசினாலும் அதில் கீறல் விழாது. இதைத்தான் வைரத்தின் கடினத்தன்மை Hardness என்கிறோம்.

வைரம் என்னென்ன நிறங்களில் கிடைக்கிறது ?

வெள்ளை (நிறமற்றது), மஞ்சள், பிரவுன், கிரே பச்சை, ஆரஞ்சு, பிங்க், நீலம், வெளிர்பச்சை, வயலட் கலர்களில் கிடைக்கிறது. முழுக்கறுப்பிலும் காணப்படுகிறது.

இந்தியாவில் கிடைத்த மிகப் பெரிய வைரம் எது ?

கோல்கொண்டாவில் கிடைத்த கோகினூர் வைரம் தான் மிகப் பெரியது. இதன் எடை 105.80 காரட்கள். இன்று இங்கிலாந்தில் Tower of London என்னும் இடத்தில் அரச பரம்பரை நகைகள் ஒரு மகுடத்தில் சூட்டப்பட்டு காட்சியளிக்கிறது.

இதுவரை உலகில் கிடைத்த மிகப்பெரிய வைரம் எது ?

தென் ஆப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட Golden Jubilee தான் மிகப்பெரியது இதன் எடை : 545.67 காரட்டுகள், தாய்லாந்து அரசரிடம் இது உள்ளது.
 
 
நன்றி : இன்று ஒரு தகவல்
 
 
 


வியாழன், பிப்ரவரி 16, 2012

செவி வழி தொடு சிகிச்சை [[செலவில்லா மருத்துவம்]]
செவி வழி தொடு சிகிச்சை !! [[செலவில்லா மருத்துவம்]]

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி!  எனது நண்பர் ஒரு மாதமாக அவருக்கு கிடைத்த cd யை பார்க்கச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தார். பார்த்தேன். அதை உங்களோடு பகிர்கிறேன். மருத்துவப் பதிவுகளாகவே போட்டுக் கொண்டிருப்பதால் என்னை டாக்டர் என்று யாரும் நினைத்து விடவேண்டாம் :-)

நீரிழிவு எனும் சக்கரை நோய் (Diabetes) அவருக்கு இருக்கிறது. இது ஒரு குணப்படுத்த முடியாத வியாதி என்றாலும் இதை முழுமையாக குணப்படுத்த முடியும் என்றே சொல்லுகிறார் இந்த டாக்டர்.

இலவசம் என்றால் எப்பவுமே ஒரு கிரேஸ் இருக்கும் அல்லது பெரிதாய் ஒரு எதிர்பார்ப்பு இருக்காது. டாக்டரே எல்லா விஷயங்களையும் முழுமையாக இலவசமாக சொல்லிக் கொடுக்கிறார்.

வீடியோவை இங்கே அழுத்தி http://www.anatomictherapy.org/  முழுமையாக பொறுமையாகப்  பாருங்கள். வீடியோ பார்க்க நேரமில்லாதவர்களுக்கு சின்னதாய் ஒரு இன்ட்ரடொக்சன்.

Anatomic Therapy என்றால் என்ன?

நாம் அனைவரின் உடலிலும் ஒரு சுரப்பி இருக்கிறது. அது சுரக்கும் ஒரு திரவம் மனிதனின் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும். இந்த திரவம் 120 வயது வரை சுரக்கும்.

அந்த சுரப்பியின் பெயர் என்ன? உடலில் எங்கே உள்ளது? அது சுரக்கும் திரவத்தின் பெயர் என்ன? அதை எப்படி நமக்கு நாமே சுலபமாக சுரக்க வைப்பது என்பதை படித்தவர்கள், படிக்காதவர்கள் அனைவருக்கும் தெரியும்படி பல மொழிகளில் விளக்கமாக நான்கு மணி நேரத்தில் புரிய வைத்து கற்றுகொடுக்கிறார் டாக்டர் Healer பாஸ்கர்.

48 மணி நேரத்தில் இந்த சுரப்பியை சுரக்க வைக்க முடியும். அனைத்து நோய்களும் 120 நாள் முதல் 360 நாளுக்குள் முற்றிலும் குணமாகும்.

இந்த சிகிச்சையில் எந்த மருந்து, மாத்திரை, ஊசி, தியானம், யோகா, மூச்சுபயிற்சி, உடற்பயிற்சி, அக்குபஞ்சர், ரெய்க்கி, நாடிபார்த்தல், பத்தியம் கிடையாது.

இவ்வாறு நமது உடலில் உள்ள ஒரு சுரப்பியை நாமே சுரக்க வைத்து நமது நோய்களை நமக்கு நாமே குணப்படுத்தி கொள்ளும் முறைக்கு அனடாமிக் தெரபி, செவிவலி தொடு சிகிச்சை என்று பெயர்.

இந்த சிகிச்சைக்கு 4 மணி நேரம் செலவு செய்தால் போதும்.

உப்பு, புளி, காரம், குறைக்க தேவையில்லை, பத்தியமும் இல்லை, வாக்கிங் தேவை இல்லை.

சக்கரை மற்றும் அனைத்து நோயாளிகளும் சிகிச்சை முடிந்த அடுத்த வினாடி முதல் எல்லா இனிப்புகள், பழங்கள், எண்ணெய் பலகாரங்கள், மனதுக்கு பிடித்த எல்லா உணவுகளையும் வாழ்க்கை முழுவதும் தாராளாமாக சாப்பிடலாம்.

ஒரே ஒரு முறை சிகிச்சை எடுத்துக் கொண்டால் போதும் இரண்டாவது முறை சிகிச்சை எடுக்க அவசியம் இல்லை.

இந்த சிகிச்சை எந்த மதமும் சம்பந்தப்பட்டது அல்ல. எனவே எல்லா மதத்தினருக்கும் பொருந்தும்.

வழி - 1 # 9944221007, 9842452508 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்கள் ஊரில் இலவச சிகிச்சை நடக்கும் நாள் மற்றும் இடத்தை தெரிந்து கொண்டு நேரில் வரலாம்.

வழி - 2 # நேரில் வரமுடியாத நோயாளிகளும் மருத்துவ துறையில் உள்ளவர்களும் DVD -ஐ VPP அஞ்சல் மூலம் பெற்று உங்கள் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெறலாம்.

வழி - 3 # 500- பேர் ஒன்று சேர்ந்து அழைத்தால் உங்கள் இடத்திற்கே வந்து இலவச சிகிச்சை அளிக்கப்படும் (வீடு, ஆசிரமம், அப்பார்ட்மெண்ட், கல்லுரி, பள்ளி, முதியோர் இல்லம், அலுவலகம்).

வழி- 4 # முழு சிகிச்சை முறையை http://www.anatomictherapy.org/ என்ற இணைய தளத்தில் இலவசமாக பார்த்து கொள்ளுங்கள்.

யாராவது இதற்கு முன் இதை பார்த்திருந்தாலும், படித்திருந்தாலும் நீங்களும் இதை ‘உங்களுடைய ஆலோசனையை கருத்துரையாய்’ மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் நம்மில் பலர் நோயாளிகளாகவே இருக்கிறோம். ஆகவே சபையோர்களே இதனால் எனக்கு எந்தவித கமிஷனும் கிடைத்து விடாது என்று சொல்லிக் கொள்ள விழைகிறேன் :-)

செவ்வாய், ஜனவரி 24, 2012

கடையில் அரைத்து பாக்கெட்டில் விற்கும் இட்லி, தோசை மாவு: ஒரு ஸ்லோ பாய்ஸன்??!!
என்ன தலைப்பை பார்த்து பயந்துவிட்டீர்களா, ஆம் இது
முற்றிலும்  உண்மை!!

மைதாவினால் செய்த பரோட்டா, அதில் உள்ள கெமிக்கல் உடம்புக்கு நல்லது அல்ல என கொஞ்ச நாளுக்கு முன் ஃபேஸ்புக்கில் பெரிதளவில் ஷேர் செய்யபட்ட பரபரப்பு அடங்கு முன்னர், இப்பொழுது இட்லி எனப்படும் வேகவைத்த "ரைஸ் பேன்கேக்" பற்றிய சிறு ஆய்வு.

பரோட்டாவாவது நமது பாரம்பரிய உணவு அல்ல, மற்றும் அதை இளைஞர்கள் தான் உண்ணுவார்கள், ஆனால் இப்பொழுது நமது ஒரு வயது குழந்தை முதல் வயாதனவர்கள் வரை உண்பது "இட்லி" எனப்படும் ஒரு தமிழனின் உணவு. இது போக பேஷண்ட்களும், அறுவை சிகிச்சை செய்தவர்களும் மற்றும் திட உணவு சாப்பிட ஆரம்பிக்கும் எந்த ஒரு பேஷண்டுக்கும் பரிந்துரைக்கும் முதல் உணவு இட்லி தான்.

இந்த கட்டுரையை நான் எழுதவேண்டும் என பல மாதங்கள் நினைத்தும் ஏனோ சில பல காரணங்களால் அது நடக்காமல் போனதற்கு ஒரு முக்கிய காரணம் அதற்கு தேவையான ஆராய்ச்சி விஷயங்கள் தான். அதற்குரிய பொறுமையான தேடல்களில் சமீபமாய் கிடைத்தவைகளை தான் உங்களுடன் பகிர்கிறேன்.

ஆம், நான் கூறும் இந்த விஷயங்கள் 100% சதவிகிதம் உண்மை. இட்லியை நீங்கள் வீட்டில் மாவரைத்து சாப்பிட்டால் பிரச்சினை கொஞ்சமும் இல்லை இதையே கடையில் வாங்கி சாப்பிட்டால் பல பேருக்கு ஒத்து வராது என்பது மறுக்க முடியாத உண்மை. அப்ப என்ன தான் பிரச்சினை என்கிறீர்களா?? அதற்கும் தேவையான் மாவு பற்றி தான் இந்த ஆய்வு கட்டுரை.

ஆம். ஒரு காலத்தில் நாம் ஆட்டுரலில் மாவு அரைத்தோம், பின்பு அது மிக்ஸி மற்றும் எலக்ட்ரானிக் கிரைண்டர்ஸ் வந்தது. அதுவும் பரவாயில்லை வாழ்க்கை மாற்றங்களின் காரணத்தால் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாகி போனது. சமீப காலமாக இட்லி தோசை மாவு ‘ரெடிமேடாக’ பட்டிதொட்டி அண்ணாச்சி கடை முதல் பெரிய பெரிய  சூப்பர் மார்க்கெட் வரை எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. மக்களும் இட்லிக்கு மாவு அரைப்பதையே மெல்ல மறந்து வருகின்றனர்.

முன்பாவது திடீர் டிபன் ரவா உப்புமாதான். இப்பொழுது நம்ம வாண்டுகளிடம் "தம்பி முனை கடையில ஒடி போய் ஒரு பாக்கெட் இட்லி தோசை மாவு வாங்கி வா"ன்னு சொல்லி வந்த மாவை இட்லி தோசை ஊத்தி மிச்சத்தை ஃபிரிஜ்ஜில் வைத்து அது முடியும் வரை ஓட்டிக் கொண்டிருக்கிறோம். ஏனோ இதற்கு பேச்சிலர்சும்  விதிவிலக்கில்லை.

இந்த மாவு ஒரு உயிர்கொல்லி - ஸ்லோ பாய்ஸன் என்பது ஏனோ நிறைய பேருக்கு தெரிவதில்லை. இதன் பயங்கரத்தை இப்பொழுது கூறுகிறேன் கேளுங்கள்.
1. நீங்கள் வாங்கும் எந்த ஒரு வெட் ஃப்ளோர்-Wet Flour (ஈர பத தோசை மாவிற்கும்) ஐ எஸ் ஐ-ISI சான்றிதல் கிடையாது. அதனால் இது எந்த ஒரு ஆராய்ச்சி கூடத்திலும் சோதனை செய்யபடவில்லை.

2. இந்த மாவு சில மட்டமான அரிசியும் உளுந்தும் அத்துடன்,
புண்ணுக்கு பயன்படும் போரிங் பவுடர் மற்றும் ஆரோட் மாவு போடுவதால் மாவில் புளிப்பு வாசனை கண்டிப்பாக வராது. அது போக, மாவும் பொங்கி நிறைய வரும் என்பதால் இதை செய்கின்றனர். இதே மாதிரி வீட்டில் அரைத்த மாவை ரெண்டு நாள் வைத்து மூன்றாவது நாள் முகர்ந்து பாருங்கள் புளிப்பு வாசனையும் வரும் தோசையும் புளிக்கும். ஏனென்றால் மாவு பக்குவமாவதும் தயிர் உறைவதும் ஒரு நல்ல பேக்டீரியாவின் செயலாகும். இதை தவிர்க்க தான் கடையில் வாங்கும் மாவுக்கு 6 நாள் கியாரண்டி அளித்தும் ஒரு வாசனையும் வராமல் இருக்கக் காரணம்.

3. முக்கியமாக இந்த கிரைண்டர்கள் கமர்ஷியல் ரகம் இல்லை. அதாவது, ஒரு நாளைக்கு 3 - 6 மணி நேரம் அரைக்க முடியும். ஆனால் இவர்கள் 12- 18 மணி நேரம் தொடர்ந்து ஓட்டுவதால் அந்த கல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து பல சமயம் இந்த சிறு கருங்கல் துகள்களால் சிறு நீரகத்தில் கல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஒரு நல்ல கல்லின் ஆயுள் 12 மணி நேரம் அரைத்தால் வெறும் 6 மாதம் தான். கொத்தி திரும்ப போட்டாலும் அடுத்த மூன்று மாதம் தான் மேக்ஸிமம்.

4. உங்களுக்கு நன்கு தெரியும். சமையல் செய்யும் ஆட்கள் கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மற்றும் நகங்கள் வளர்க்கவே கூடாது. ஆனால் இந்த மாதிரி எந்த ஒரு சுத்ததையும் இவர்கள் பேணுவது இல்லை. ஒவ்வொரு நகத்தின் இடுக்கிலும் உள்ள கிருமிகள் இந்த மாவில் கெட்ட பேக்டிரியாக்கள் மற்றும் கிருமிகள் ஈஸியாக உருவாகி எதிர்ப்பு சக்தி குறைந்து வாந்தி, பேதி மற்றும் அடிக்கடி உடம்பு முடியாமல் போவதற்கும் இது தான் காரணம்.

5. கிரைண்டர்களை எனக்கு தெரிந்து தாய்மார்கள் பயன்படுத்த
தயங்கும் இரண்டு காரணங்கள்

i. கிரைண்டரை சுத்தம் செய்யும் கஷ்டம்.

ii. ஒவ்வொரு முறையும் கழுவிய கல்லை தூக்கி மாட்ட வேண்டும். பெரிய குடும்பமென்றால் இது சாத்தியம். சிறுகுடும்பம் என்பதால் கடையில் மாவு வாங்குவது அவசியமாகிறது. ஆனால் அரைத்து விற்பவர்களோ, அல்லது கடையிலோ, கிரைண்டரை ஒவ்வொரு முறையும் அரைத்து முடிந்து கழுவுவதில்லை. அதனால் அந்த கிரைண்டரில் கிருமி அதிகரித்து கொண்டே செல்கிறது. இவர்கள் கமர்ஷியலாக பயன்படுத்த ஒவ்வொரு முறையும் வென்னீர் (Hot Water) உற்றி தான் சுத்தம் செய்ய வேண்டும். ஆனால் இவர்கள் ஒரு வாரத்திற்கு ஒரு முறை கழுவினாலே அதிகம், மாவு பொருட்களினாலும், எலிகள் மற்றும் பூச்சிகள் அந்த மிச்ச மாவை ருசித்து அந்த மெஷினின் சுத்ததன்மை அறவே
போய்விடுகிறது.

6. என்னதான் நல்ல அரிசி உளுந்து போட்டாலும் நல்ல தண்ணீர்  ஊற்றி தான் மாவு அரைக்க வேண்டும். இவர்கள் எந்த தண்ணீரை உபயோகப்டுத்துகின்றனர் என்பது அந்த இறைவனுக்கே வெளிச்சம். எனக்கு தெரிந்த தகவல் படி இவர்கள் போரிங் தண்ணீர் மற்றும் உப்பு தண்ணிரை ஊற்றும் காரணம் உப்பு போட வேண்டிய வேலை இல்லை.

7. அந்த கால ஃபார்முலா படி நம் முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும் போது ஒரு கை வெந்தயத்தை போட்டு அரைப்பார்கள். வெந்தயம் ஒரு இயற்கை ஆண்டிபயாடிக், உடம்பு உஷ்ணம், வாய் நாற்றம், அல்சருக்கு கைகண்ட மருந்து. ஆனால் இவர்கள் யாரும் வெந்தயத்தை உபயோகிப்பதில்லை.

8. கிரைண்டரில் மாவு தள்ளிவிடும் அந்த ஃபைபர் பிளாஸ்டிக்கை ஆறு மாதத்திற்கு அல்லது வருடத்திற்க்கு ஒரு முறை மாற்ற வேண்டும். ஆனால் இவர்கள் அதை மாற்றவே மாட்டார்கள். அதனால் அந்த பிளாஸ்டிக்கும் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து இந்த மாவில்தான் கலக்கும்.

9. கிரைண்டர் ஓட அதன் மத்திய குளவியை இணைக்கும் செயினை இவர்கள் கழட்டி ஒரு கார்பன்டம் பெல்ட்டை மாட்டி இருப்பர்கள். ஒன்று சத்தம் வராமல் இருப்பதற்கும் மற்றும் மாவை கையால் தள்ளி விடாமல் அரைக்கும் டெக்னிக்குககாக. தண்ணீர் பட்டு பட்டு அந்த பெல்ட் துகள்களும் நமது மாவில்தான் கலக்கும்.

10. இந்த மாவை இவர்கள் அரைத்து கடைக்கு பிளாஸ்டிக் பேக் மூலம் சப்ளை செய்கின்றனர். நமது தமிழ் நாட்டு கிளைமேட் படி இதை ஃப்ரீஜரில் தான் வைக்க வேண்டும். அப்பொழுது தன் இந்த மாவில் பாக்டீரியாவின் உற்பத்தியை கட்டுப்படுத்த முடியும், ஆனால் நம்மூரில் பாதி கடைகளில் ஃப்ரிட்ஜில் தான் இதை வைக்கிறார்கள். இப்ப இருக்கிற கரெண்டு ‘கட்’ பிரச்சனையில் இந்த மாவு கண்டிப்பாக பாய்ஸனாகிறது.

இந்த மாவில் இப்பொழுது நிறைய இடங்களில்  பால், தயிறு, முட்டை, காய்கறி, மாட்டு இறைச்சிகளில் காணப்படும் ஈகோலி (E-COLI) எனும் பேக்டீரியா பரவி சிலருக்கு உடனே பிரச்சினையும் சிலருக்கு இந்த மாவுகள் ஸ்லோ பாய்ஸனாக உருவாகிறது. இந்த ஈகோலி மைனஸ் 24 டிகிரிக்கு கீழே இருந்தால் தான் கொஞ்சமாவது கட்டுபடும். அதனால் தயவு செய்து இவர்கள் கொடுக்கும் 6 நாள் கியாரண்டியில் ஈரமான இட்லி தோசை மாவை கண்டிப்பாக வாங்குவதை தவிருங்கள்.

உலர்ந்த மாவு ஓரளவு பரவாயில்லை. ஆனால் இதே மாதிரி சில தாய்மார்களும் மாவரைத்து நான்கு அல்லது ஐந்து பேர் ஷேர் செய்து கொள்கிறார்கள். அவர்களுக்கும் இதில் கண்டிப்பாக கவனம் தேவை.

இப்பொழுது இது ஒரு அங்கிகரிக்கபட்ட தொழில் அல்ல. அதனால் சென்னை மாநகராட்சி ரெய்டு நடத்தி, பல இடங்களில் சுகாதாரமற்ற, தரமற்ற முறைகளில் தயார் செய்யும் இதுபோன்ற பொருட்களை கைப்பற்றி பெனால்டியும் விதிக்கிறது.

ஆகவே,  இந்த விழிப்புணர்வை உங்களால் முடிந்த அளவு
மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மாற்று கருத்து இருப்பினும் அதையும் இங்கே பகிருங்கள்.

ஃபேஸ் புக்கில் (பகிரச்சொல்லி) பகிர்ந்தவர்:
எஸ் எம் ஆரீப் மரைக்காயர்
காரைக்கால்