"அருக்காணி"
"அதாரு பேரு"
"அது யாரு பேரும் இல்லீங்க, ஒரு ஊரு பேரு"
"என்னாதூ..!!"
"ஆமாங்க ‘கன்யாகுமரி மாவட்டத்துல’ இருக்கும் ஒரு ஊரோட
பேர் தான் அது"
"இண்ட்ரஸ்ட்டா இருக்கே, மேலே சொல்லுங்க..!!"
"முக்காலி"
"என்னாங்க இது?? மேலே சொல்லுங்கன்னு சொன்னது தப்பா? அதுக்கு ஏங்க திட்டுறீங்க"
“இல்லீங்க இதுவும் ஒரு ஊர் பெயர் தான்”
"நான் ஏதோ நாக்காலி மாதிரி உள்ளதுன்னு நெனச்சேன்"
"ஆமா அப்படியும் முக்காலின்னு உட்காரும் பொருளிருக்கு!!
"சரி மேலே சொல்லுங்க!"
“இந்த ஊர் கேரளா 'பாலக்காடு' மாவட்டத்தில் இருக்கு!!”
(இந்த ஊர் பெயரை கேட்டால் நிறையப் பேருக்கு தெரியல!!
ஆனாலும், நாம விட்டுட்டு போற ரகமில்லையே!!) விபரம்
தெரிந்துகொள்ள ‘சைட்’டுக்கு போனா, அங்கே ஒரு நேஷனல்
பார்க் இருக்கு!!
டூரிஷம் டெவலப்மெண்ட் கண்ட்ரோலில் இருக்கு!!)
இங்கே போய் படிச்சு பாருங்க நிறையதெரிஞ்சுக்கலாம்!!)
http://www.gatewayforindia.com/tourism/silent_valley.htm
சரி வாங்க அடுத்த ஊர பத்தி தெரிஞ்சுக்குவோம்!!
"கல்லெட்டும்கரா"
"இதென்னங்க புது கராவா இருக்கு??"
"ஆமாங்க இதுவும் ஒரு ஊர் பேர் தான், அதாவது கேரளாவுல
‘திருச்சூர்’ மாவட்டத்துல இருக்கு!!"
"அதெப்படி இந்த பேர்..!! அதுக்கும் ஒரு விளக்கம் வச்சிருப்பீங்களே?"
"இருக்கு சொல்றேன் கேட்டுங்க!! இந்த கரையில் நின்னுகிட்டு,
ஒரு கல்லை எடுத்து வீசினால் தத்தி தத்தி 'ட்ட்ட்டட்ட்ட்' என்று தண்ணியில் போகுமே (அதுக்கு பேரென்ன தவளைக்கல் விளையாட்டா??) அது மாதிரி அக்கரையில் போய் விழும் வரை
உள்ள தூரம். அதற்கு பெயர் தான் "கல்லெட்டும்கரா"...
"அப்பாடா எப்படியெல்லாம் பேர் வைக்கிரைங்கய்யா?? நாமும்
தான் இருக்கமே ‘தேவூர்’னு பேர் வச்சுக்கிட்டு"
"பரவாயில்லையே நீங்களும் ஊர் விபரமெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கீங்களே"
"பின்னே உங்களோட பேச ஆரம்பிச்சா ஃபிங்கர் டிப்ஸ்ல புள்ளி விபரமா எடுத்து விடுவீங்க! நாமளும் ஒன்னு ரெண்டு தெரிஞ்சு வச்சிருந்தாதான் கவுரதி!!....ஹி.. ஹி.. தப்பில்லையே"
"ஆமா உண்மை தான்.., அதென்ன ‘தேவூரு’"
"ஆமாங்க அப்படி ஒரு ஊர் பெயர் ‘நாகை மாவட்டத்தில்’ ஒன்றும், ‘சேலம் மாவட்டத்தில்’ ஒன்றும் இருக்கு"
"அப்படியா..வெரி குட்.. வெரி குட்... நல்லாச் சொன்னீங்க.."
"வாரங்கள்!!"
"ஏன் மாதங்கள் இல்லையோ??"
"இல்லீங்க 'வாரங்கள்' (WARANGAL) என்ற ஊர் + மாவட்டம் ‘ஆந்திர பிரதேசத்தில’ இருக்கு சார் அதை சொல்ல வந்தேன்"
"அப்படியா??"
"என்னாதது பேசிக்கிட்டே இருக்கும் போது ஆந்திராவுக்கு
போயிட்டீங்க?"
"ஆமா இங்கேயே கெடந்து உழன்று கிட்டிருக்காமா கொஞ்சம்
வெளி மாநிலத்தையும் தெரிஞ்சு வச்சிருக்கிறது நல்லது தானே!"
"சரி சரி சொல்லுங்க"
"(A.P) ஆந்திர பிரதேசத்தில ஒரு 'நிஜாமாபாத்' இருப்பது போல,
(U.P) உத்தர பிரதேசத்தில ஆஜம்கர்’ (AZAMGARH) மாவட்டத்திலும்
ஒரு 'நிஜாமாபாத்' இருக்கு!!"
"ஓஹோ!!"
"என்ன ஓஹோ!! இன்னொன்னு கவனிங்க. நம்ப 'தேனி
மாவட்டத்துல' ‘கம்பம்’னு ஒரு ஊர் இருக்கு தெரியுமா?"
"ஓ பேஷா தெரியுமே!!"
"அதுமாதிரி ‘ஆந்திர பிரதேசத்தில’ ‘கம்மம்’னு ஒரு ஊர் இருக்கு!!"
"அப்படீன்னா நானும் ஏதாச்சும் ஒன்னு சொல்லணுமே!!"
"சொல்லும்!"
"அடி அக்கா மங்களம்!"
"அடி ஆத்தி அது யாரது?"
"இதுவும் ஊர் பேர் தான்"
"இதென்னா அக்கா தங்கச்சின்னா?"
"இல்ல சார்,.. ரயில் புறப்பட்டு போக ஆரம்பிச்சிடுச்சு. உடனே
தங்கச்சிக்காரி, "அடி-அக்கா- மங்களம் சீக்கிரம் வாடி..!" என்று
குரல் விட்டாளாம். ஓடி வந்த அக்கா ஏறிய பிறகே ரயில்
புறப்பட்டு சென்றது என்றாலும், அதை கேட்டுக் கொண்டிருந்த
ஊர்க் காரர்களில் சிலர், 'இது நல்லா இருக்கேன்னு' அந்த
பெயரைச் சொல்லியே அழைக்க ஆரம்பிச்சுட்டாங்கலாம்.
நாளைடைவில் 'அடியக்கா மங்களம்' என்ற பெயரே நிலைத்து
விட்டது!! "
"அது எங்க இருக்குன்னு சொல்லலியே?"
"திருவாரூர் மாவட்டத்துல!!"
- இன்னும் தெரிந்து கொள்வோம்...!!







