facebook

சனி, அக்டோபர் 30, 2010

எல்லாமே கணக்கு தான்!!


எல்லாமே கணக்கு தான்!!

எங்க மேனேஜர் இன்றைக்கு சொல்லிக் கொண்டிருந்தார்.

'எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரித்துக் கொள்ள சொன்ன மாதிரி',
“ஒரு நாளைக்கு (உள்ள இருபத்தி நாலு மணி நேரத்தை) எட்டு
எட்டா பிரிச்சுக்க” என்றார்.

எப்படி??

“எட்டு மணி நேரம் டூட்டி என்றால், முடிந்த உடனே ஒரு நிமிஷம்
கூட சீட்டில் உட்கார்ந்திருக்காதே. (ஓவர் டைம் இருந்தா மட்டும்
அட்ஜஸ்ட் பண்ணிக்க!!) அடுத்த எட்டு மணி நேரத்தை, உனது
மனைவி, பிள்ளைகளுடன் ‘கொஞ்சி’ கும்மாளமடிக்க, சொந்தங்கள், நண்பர்களுடன், தொழுகை, பிரார்த்தனை, உடற்பயிற்சி இன்ன பிற
என்று நேரம் வகுத்துக் கொள்.

ப்ளாக் எழுதினால் மனைவி குழந்தைகளுக்கு உள்ள நேரத்தை ஒரு போதும் விட்டுக் கொடுக்காதே! (அவ்வ்வ்வ்… ஆமாங்க ஆமாம்!!) மீதி
உள்ள எட்டு மணி நேரம் கண்டிப்பாய் உறக்கம்”. (வராவிட்டால் கனவு காண். உபயம் : அப்துல் கலாம்) என்றார் நல்லது தானே சொல்கிறார்.

-----------------------

இங்கு (சவுதி – அமீரகம் - வளைகுடா முழுதும்) தட்ப வெப்ப நிலை
மாறிக் கொண்டு, ‘வெப்பத்துக்கும் குளிருக்கும் இடைப்பட்ட
மிதமான நிலையில்’ மனிதர்களை உடல்வலி, குளிர்ஜுரம்,
சல்லகடுப்பு (ஹி ஹி இப்படி தான் எங்க பாட்டி சொல்லும்)
ஜலுப்பு என்று ஆரம்பித்து, போட்டு வாட்டி எடுத்துக் கொண்டி
ருக்கிறது. குழந்தைகளையும் (உங்களையும் தான்) கொஞ்சம்
கவனமா கவனிச்சிக்கணும்.

யாரை நலம் விசாரித்தாலும் மூக்கு உரிதலோடு, ‘பொக்கு
பொக்கு’ என்று இருமிக் கொண்டு தான் பதில் வருகிறது.
பெரும்பாலான ஹாஸ்பிடல்களில் கூட்டமாவே இருக்கு.
இன்ஜெக்சன் போட வேண்டியவர்களுக்கு போட்டு, ‘ஆன்டிபயாடிக்’ மருந்துகள் எடுத்துக் கொள்ள சொல்லியும் சொல்கிறார்கள்.
இந்த சீசனில் மட்டுமல்லாமல் எந்த சீசனிலும் வெந்நீர்
போட்டு வைத்துக் கொண்டு பருகுங்கள். குழந்தைகளையும்
வெந்நீரையே எப்பொழுதும் குடிக்கச் சொல்லி வற்புறுத்துங்கள்.
சாப்பிடும் முன் கை கழுவி துடைத்து விட்டு சாப்பிடும்
பழக்கத்தை கை கொள்ளுங்கள்.

-------------------------------------------------------------------------------------------

நிறைய படிக்க வேண்டும் என்ற ஆர்வலர்களுக்காக!

ஓர் அறிமுகம்

நாங்கள் படித்த திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில்
தற்போது தமிழ்த் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும்
பேராசிரியர் ரமீஸ் பிலாலி.

ஆழமாக, எந்த இட்த்திலும் நிதானம் தவறாமல், உணர்ச்சி
வசப்பட்டு விடாமல், தர்க்கம், கிண்டல், அழகான தமிழ் இப்படி எல்லாவற்றையும் வாரி வாரி வழங்கி எழுதுகிறார் இவர். யார்
மனமும் புண்படாமல், அதே சமயம் உண்மையை உண்மையாக
கூடுதல் குறைவு இல்லாமல் உரைக்கும் இவர் பாணி என்னை பரவசப்படுத்துகிறது.

“பிரபஞ்சக் குடில்” என்ற பெயரில் ஒரு வலைத்தளம் / பக்கம் வைத்துள்ளார். அவ்வப்போது இவர் உதிர்க்கும் ஆங்கிலச்
சொற்களின் மூலமாக இவரது ஆழமான ஆங்கில அறிவையும்,
ஆழ்ந்த படிப்பறிவையும் நாம் அனுமானிக்க முடிகிறது. எல்லா மதங்களையும் சேர்ந்த முக்கியமான எழுத்தாளர்களும் விரும்பிப்
படிக்கும் ஒரு ஆளாக இவர் இருக்கிறார். உண்மை அழகாகச் சொல்லப்படுவதை விரும்பும் யாரும் இவர் கட்டுரைகளை
ரசிக்காமலும் விரும்பாமலும் இருக்க முடியாது. நீங்களே படித்துப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். http://www.pirapanjakkudil.blogspot.com/  
       
 நன்றி: பறவையின் தடங்கள்.                                                         

வியாழன், அக்டோபர் 28, 2010

கொஞ்சம் ரிலாக்ஸ்!!


சிந்திக்க கொஞ்சம்..!!



தடுத்த ஒன்றை

கொடுக்கச் சொல்லிக் கேட்கிறாய்;

கொடுக்க மறுத்தால்

மணக்க மறுக்கிறாய்!


நீ பட்டம் பெற்றதற்கு

விலையாய் கூலிக்

கேட்கிறாய் - நான்

கொடுக்காவிட்டால்

எனக்கு பட்டம் கொடுக்கிறாய்!


மணத்திற்கு முன்னே

மடிப்பிச்சைக்

கேட்கிறாய்;

கொடுத்ததற்குப்  பின்னே

அதிகாரம் தொடுக்கிறாய்!


பணம் கொடுத்து உன்னை

மணம் முடிப்பதற்குப்

பெயர் திருமணமா;

இல்லை

பணம் செலுத்திப்

பணிப் புரியும்

தனியார் நிறுவனமா!

                                           ***************


சிரிக்க கொஞ்சம்..!!


செந்தில்: அண்ணே...சாப்ட்வேரு, ஹார்டுவேருன்னா என்னண்ணே...

கவுண்டமணி: அட..ப்ளூடூத் மண்டையா... செடியப் புடுங்குனா
சாப்ட்வேரு,, மரத்தப் புடுங்குனா அது ஹார்டுவேரு...

                                               ***************

இயக்குநர்: சார் இந்தப் படத்துல நீங்க பன்னி மேய்க்கிறீங்க...

நடிகர்: என்னோட இமேஜ் கெட்டுப் போயிடுமே..

இயக்குநர்: இதையேதான் அந்தப் பன்னியும் சொல்லுச்சு...


                                                 *************
ரிப்போர்ட்டர்: ஒபாமாவப் பற்றி என்ன நினைக்கிறீங்க?

சூரியா: எங்க அப்பா அம்மா ரொம்ப நல்லவங்க..

ரிப்போர்ட்டர்: நாசமாப்போச்சு.... உங்க ஒப்பாமா இல்ல சார்... ஒபாமா..ஒபாமா அமெரிக்கா...

சூரியா: தெரியாது சார்

                                                ***************

நேர்முகத் தேர்வு-

தேர்வாளர்: ரயில் விபத்தைத் தடுக்க என்ன செய்யலாம் என நினைக்கிறீர்கள்?

சர்தார்: ரயில் தண்டவாளத்தில் ஸ்பீடு பிரேக்கர் போட்டால் ரயில் விபத்தைத் தடுக்கலாம்.

தேர்வாளர்: ஒரு மோட்டார் எப்படி இயங்குகிறது?

சர்தார்: டுர்ர்ர்ர்ர்ரர்ர்ர்ர்...

                                                 ***************

அவன்: இந்த செல்போன் அழகா இருக்கே..எங்க வாங்குனீங்க?...

இவன்: இது ஒரு ஓட்டப் பந்தயத்தில் ஜெயிச்சு வாங்கினது..

அவன்: அப்படியா...வெரிகுட்...எத்தன பேரு கலந்துகிட்டாங்க?...

இவன்: செல்போன் கடை ஓனர், போலீஸ்காரர் அப்புறம் நான்....மொத்தம் மூணு பேர்தான்.

                                                    ****************
அமெரிக்கன்: நாங்கதான் நிலவில் முதலில் கால் வைத்தோம்.

ரஷ்யன்: நாங்கதான் வீனஸில் முதலில் கை வைத்தோம்.

இந்தியன்: நாங்கதான் முதலில் சூரியனில் கால வச்சோம்....

அமெரிக்கன்: பொய் சொல்லாதீங்கடா...சூரியனுக்குப் போனா சாம்பலாயிடுவீங்க..

இந்தியன்: ங்கொய்யால...நாங்க போனது நைட்லடா...

                                                                           

நன்றி: மெயிலில்  அனுப்பியவர்களுக்கு !!

புதன், அக்டோபர் 27, 2010

சாண்ட்லியர்ஸ் ஏன்?


“சாண்ட்லியர்ஸ்  ஏன்?? ”

எவ்வளவு லட்சம் கோடிகள் செலவு செய்து வீடு கட்டினாலும்,
இந்த சாண்ட்லியர்ஸ் ஒன்றை தலைக்கு மேல்தொங்க விடாமல்,
ஆடம்பர 'டெகோர்'கள் செய்யாமல்  வீட்டுக்குள் காலடி எடுத்து
வைத்து நம்மவர்கள் குடிபுக மாட்டேனென்கிறார்கள் ஏன்??

வீடு கட்ட ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தின் பட்ஜெட் பத்திலிருந்து பதினைந்து லட்சம் (பத்தாது தான்) என்று வைத்துக் கொண்டாலும், இந்த மாதிரி ஆடம்பர 'டெகோர்'களில் ஒரு குறிப்பிட்ட தொகை புகுந்து வீண் விரயமாகும் வாய்ப்புள்ளது. புத்திசாலிகள் இந்த செலவினங்களை தவிர்க்கப் பார்ப்பார்கள்.

வீட்டை கட்டும் போதே இதற்கும் சேர்த்து அச்சாரம் போடப்படும்.
“அந்த வீட்டில் தொங்குற மாதிரி வேணும் ; இந்த வீட்டில் உள்ள
மாதிரி வேணாம்” என்றெல்லாம் வகைக்கு ஒன்றாய் காட்டி, அதற்கு தகுந்தாற் போல் ”ஏதாவது TV தொடர்களில் எந்த வீட்டிலாவது
தொங்கும் லைட்டை காண்பித்து”, தொங்க ஆரம்பிப்பார்கள்.

கடனே என்று மேலும் லோனை வாங்கி போட்டு இவர்கள்
ஆசையை நிறைவேற்றி விடுவோம். ஆனால் கடன்கள்?? “அதை பாத்துக்கலாம்” என்று இவர்கள் பக்கத்தில் நின்று சொல்லும்
போது ஒரு தைரியம் வரும். உண்மை!! ஆனால் பாடாய் படப்
போவது நாம் தான் என்று அப்பொழுது இந்த மண்டைக்குள்
உறைக்காது. இத்தனைக்கும் புத்திசாலி தனமாய் நம் கூட
உட்கார்ந்து பட்ஜெட் போடும் யாரும் இதற்கு விதி விலக்கில்லை.

கடையினுல் நுழைந்த உடனேயே ஏதாவது ஒரு சாண்ட்லியர்சை
பார்த்த உடன் நம்ம sweet hearts களும் "ஸ்ஸ்ஸ் ஆஆஆ" என்று
ஒரு சவுண்டு விடுவார்கள் பாருங்க (“ஊறுகாயை நுனி நாக்கில்
எடுத்து வைத்த மாதிரியோ, பச்சை மிளகாயை கடித்த மாதிரியோ”)
அப்ப தொலைந்தது தான் நம் பர்ஸின் கணம்.

இதை தெரிந்து கொண்ட கடையின் வியாபார நுணுக்கங்களை
கற்று தேர்ந்த முதலாளிமார்களும், மிக விவரமாய் நம் ‘தங்ஸ்’
களிடம் "இது இப்ப வந்த லேடஸ்ட் டிசைன்" என்று காட்டி
வியாபாரம் பேச ஆரம்பிப்பார்கள்.

இந்த கடை காரர்கள் பேசும் பேச்சில் எப்படி மடிகிறார்கள் என்பது இன்னமும் புரியாத புதிராய் இருக்கு? அவர்கள் போடும் ஏஸி யில் இல்லை என்றாலும், வாங்கி கொடுக்கும் ஜூஸிலா??

அதனால் தான் சொல்கிறேன் தைரியமாய் பேரம் பேசுங்கள். சர்வ சாதரணமாய் ஒரு சாண்ட்லியர்ஸுக்கு குறைந்த பட்சம் 300 %
முதல் 500 % வரை லாபம் வைக்கப்படும். எவ்வளவுக்கெவ்வளவு
பேரம் பேசி (நீங்க தான் 'அடித்து' பேசுவீங்களே ஹி..ஹி..) வாங்குகிறீர்களோ அவ்வளவும் உங்களுக்கு லாபம் தான்.

இதை ஏன் இங்கே குறிப்பிடுகிறேன் என்றால் சில கடைகளில் சாண்ட்லியர்ஸுக்கு கீழே விலை கட்டி தொங்க விட்டிருப்பார்கள்.
அப்படி இல்லாத கடைகளில் உஷாரா இருக்கணும். நாம் 'உச் உச்' சவுண்டுக்கு தக்க கணிசமாய் விலை உயர வாய்ப்பிருக்கு!

பல லட்சங்கள் செலவு செய்து கட்டிய வீட்டை விட்டுட்டு
கணவனும் மனைவியும் ஒரு சேர வெளியூரில் இருப்பார்கள்.
பிள்ளைகள் வெளி நாட்டில் படித்துக் கொண்டோ அல்லது
கல்யாணமாகி வாழ்ந்துக் கொண்டோ இருப்பார்கள். கட்டிய வீடு
கறுக்கு மாறாமல் அப்படியே பூட்டப் பட்டிருக்கும். அல்லது
வாடகை, ஒத்தி, பெந்தகம் என்ற பெயரில் யார் யாரோ
குடியமர்த்தப் பட்டிருப்பார்கள்.

அவர்களுக்கெப்படி தெரியும் நம் வாழ்நாளின் கற்பனை வீட்டின்
அருமை?? அவர்கள் நம் வீட்டை எப்படியெல்லாம் உபயோகிக்
கிறார்கள் என்பதை நம் கண்ணும் பார்க்காது. ஆனால் திரும்ப
ஊர் வந்து பார்க்கும் போது அழுது வடியும். நம் மனமும் தான்!!

குடிபுகும் அன்று எல்லாமே ஜோடனையாய், கண்ணுக்கழகாய்
செய்து எல்லோரும் பார்த்து "ஆஹா ஓஹோ" சொல்லிவிட்டால்
போதும் என்று மட்டும் தான் நினைக்கிறோம்.

இருபது, இருபத்தைந்து ஆயிரத்திலிருந்து ஆரம்பிக்கும் ஒரு
சாண்ட்லியர்ஸின் விலை சில லட்சங்கள் வரை போகும்.
குடிபுகுந்த அன்று அதை கவனித்த பின்னர், மற்ற நாளில்
மாதம் ஒரு முறையாவது  அதை சுத்தம் செய்வோம் என்ற
அக்கறை யாருக்கும் இருப்பதாய் தெரியவில்லை.

அந்த இருபத்தைந்தாயிரத்தை ரொக்க பணமாய்  சீலிங்கில்
கட்டி  தொங்க விட்டுப் பாருங்கள். நம் கண்கள் அடிக்கடி அங்கே
போகிறதா இல்லையா என்று?? (அவ்வ்வ்வவ்) எதுக்கு எது மாதிரி உதாரணம். அல்லது டெபாசிட்டில் போட்டு வையுங்களேன். யார் வேணாங்றா? உங்களுக்கு பின்னொரு நாளில் உதவாதா??

 நான் பார்த்த வகையில், ஐம்பது லட்சம் செலவு செய்து கட்டிய
எனக்கு தெரிந்த ஒரு வீட்டில் ரெண்டு மூணு வருஷம் கழித்து
சென்று பார்க்கையில், அந்த சாண்ட்லியர்ஸின் அழகு பொலி
விழந்து, ஏதோ 'முட்டை விளக்கு' ஏற்றி வைத்த மாதிரி அதன்
'கோல்டன் பிளேட்' தோலுரிந்து காணப்பட்டது. இது தேவையா??

அது போலவே மற்ற 'டெகோர்' களிலும் கவனம் செலுத்தினால்
நிரம்பவே செலவினங்களை தவிர்க்கலாம் என்பது என் எண்ணம்.

கொஞ்ச காலம் இந்த மாதிரி பிஸினெஸிலும் நான் இருந்தேன்.
அதனால் தான் இவ்வளவு சொல்லுகிறேன். இப்படி சொல்லுவதால்
சகோ. யாரும் வருத்தப்பட்டுக் கொள்ளாதீர்கள். இத்தனையையும் என் கண்கள் பார்த்தாதல் தான் எழுதுகிறேன்.

டிஸ்கி : கல் மண் ஜல்லி இரும்பு சிமெண்ட் கட்டுமான பணிக்கான
கூலி ஏறி விட்டதென்று கூவுகிறோமே தவிர இதற்கெல்லாம் யார்
குரல் கொடுப்பது. எவ்வளவு விலையானாலும் மாய்ந்து மாய்ந்து
வாங்கி தொங்க விட்டுட்டு, நாமும் விழி பிதுங்கி நிற்கிறோமே.
அது தான் நானும் ஒரு கூவு கூவி விட்டேன்.

ஞாயிறு, அக்டோபர் 24, 2010

வீட்டுக்கொரு 'பட்ட' பெயர் வைப்போம்..!!


வீட்டுக்கொரு 'பட்ட' பெயர் வைப்போம்..!!

வீட்டுக்கொரு இலவச டிவி மாதிரி, வீட்டுக்கொரு மரம்
வளர்ப்போம் என்கிற மாதிரி (வெட்டி நடு வீதில போட்டுட்டா,
எங்கிட்டு??), வீட்டுக்கு வீடு ஒரு 'பட்ட' பெயர் இருக்கும் கவனிச்சிருக்கீங்களா?? பார்க்க, கேட்க வித்தியாசமாகவும்
இருக்கும், நகைச்சுவையாகவும் இருக்கும்.

நான் ஊருக்கு போயிருந்த சமயம் 'அமளி' வீட்ல போய் இதை கொடுத்துட்டு வாவென்று பையனை ஏவிக் கொண்டிருந்தார்கள்.

"அமளீன்னா??!! " என்று வினவினேன்.

வீட்டில் யாருக்கும் தெரியல!! யாரிடம் கேட்கலாம். யோசித்தேன்.

எங்க அக்காவோட சித்தப்பாவோட பாட்டி (அப்படீன்னா எனகென்ன
முறை வேணும் என்று கேட்டா, நீங்க என் பல்லு மேலேயே
கல்லெடுத்து போடுவீங்க, அதனால வேணாம்!!) அது கிட்ட போய்
நேர்முக பேட்டி கண்டேன்.

அது ‘கெக்கே பிக்கே’ வென்று (இல்லாத) பல்லையும், வாயையும்
வைத்து சிரித்து விட்டு அட ‘இவனே’!! (அது எல்லாத்தையும்
அப்படி தான் சொல்லும். அல்லது ‘இவளே’)

"அப்பெல்லாம் வீட்டுக்கு டோர் நம்பர் ஏதுடா? இப்படி பேர் சொன்னா
 தான் வெளங்கும்" என்றது.

“ம்ம் அப்புறம் சொல்லு பாட்டி” என்று சொல்லு முன், பாட்டிக்கு பிடித்த வஸ்து ஏதாவது வாங்கி கொடுத்தால் நிறைய கறக்கலாமே என்று பிடிவாதாமாய் மனதை இழுத்து வைத்து யோசித்தேன்.

“அச்சு வெள்ளமும், கம்மர் கட்டும் ரொம்ப பிடிக்கும்”
என்று முன்பு எப்பவோ ஞாபகத்தில்  இருந்த  மனக் கவுளி
சொன்னது!!   

(ஆஹா அதுக்காக 'ரோஹிணி' கிட்டவா போய் கேட்க முடியும்.
ஏதோ ஒரு படத்தில் கூட 'ரெண்டு அச்சு வெள்ளத்தை' வச்சுகிட்டு பாடிக்கிட்டிருக்குமே!!)

"டேய் யார்டா அங்கே?? அந்த முக்கு கடைக்கு போயி, ஆயிரம் ரெண்டாயிரம் செலவானாலும் பரவாயில்ல. ரெண்டு அச்சு வெள்ளமும், நாலு கம்மர் கட்டும் வாங்கிட்டு வாங்கடா!!”

என்று நானே சவுண்டும் விட்டுக் கொண்டு, நானே எழுந்து போய்
வாங்கிக் கொண்டும் வந்தும் கொடுத்தேன். அதை பார்த்தவுடன்
பாட்டிக்கு பல்லெல்லாம் வாயி!! அந்த அச்சு வெள்ளத்தை சப்பிகிட்டே சொல்ல ஆரம்பித்தது.

நம்ப பக்கத்து வீட்டுக்கு பேரு ஓடு திருப்பி வீடு, அதுக்கு பக்கத்து வீட்டுக்கு பேரு ரத்த குசு வீடு (ஐயோ), பொட்ட கோழி வீடு,
பொசுக்கி வீடு, கண் சிமிட்டி வீடு, கறு துணி வீடு, ஈ தீனி வீடு...

"இரு பாட்டி இரு எழுதிக்கிறேன்" அது பாட்டுக்கு சொல்லிக் கொண்டே போனது...

பச்சை மொளகா வீடு, சோத்து பொட்டி வீடு, லட்டு வீடு, பூரான் வீடு,
சக்கர வீடு, பிச்ச வீடு, ஓலைப் பொட்டி வீடு, சோகை வீடு, நரையான்
வீடு..!!

“என்னா பாட்டி இப்படி ஸ்பீடா சொல்றே? நா எழுத வேணாமா??”

“இருடா, நான் ஒரு பாட்டம் சொல்லி முடுச்சிக்கிறேன். இல்லாங்கட்டி மறந்துடும்" என்றது.

சீனி மூட்டை வீடு, பச வீடு, மொளவா நாறு வீடு, கழுவா வீடு,
பீ வரண்டி வீடு (ஹூம்), பச்சைக்கிளி வீடு, தேங்கா வீடு, கொய்யப்
பழ வீடு, தண்ணி கொடத்தார் வீடு...

"பாட்டி கொஞ்சம் மூச்சு விட்டுக்கோயேன்!!"

“இல்லடா, இருடா!!"

மியா மியா வீடு, போண்டா வீடு, யாவாரி வீடு, பனங் கொளத்தார் வீடு, கூத்தூரா வீடு, பாம்பாட்டி வீடு, குடுக்கை வீடு (பொய் குடுக்கையாம்)

"அதுக்கப்புறம்" ..??

அய்யா 'கொட்ட' வீடு, பனங் 'கொட்ட' வீடு, 'கொட்ட' பாக்கு வீடு" சொல்லிவிட்டு சிரித்தது!!

"எத்தனை?? நிறுத்து நிறுத்து..!!."

"யானை சூ##து வீடு"

"அம்மாடி இதென்ன"??

"அதாண்டா இந்த பக்கத்து வீடு" பீச்சாங் கைய காட்டியது..

நாம ஏண்டா கேட்டோம்னு ..... ஙே.!! ஙே..?

-------------------------------------------------------------------------------------------------
“பிட்" நியூஸ் : அப்படின்னதும் நீங்க 'வேறேதும்னு' நெனச்சுக்
காதீங்க! சும்மா ஒரு குறுஞ் செய்தி அம்புட்டுதேங்!

நேற்று ஞாயிற்று கிழமையாதலால் நமக்கு இவ்விடத்தில் ஒரு நா விடுப்பு! ஆதலினால்... ஹாயாக உட்கார்ந்து..."ஹலோ fm" கேட்டுக் கொண்டிருக்கும் போது 'தொகுப்பாளர் பாலாஜி' மிக அழகாக ஒரு செய்தியை சொன்னார்.

“அப்பாவுக்கும் பசங்களுக்கும் அவார்ட் கெடச்சிருக்கு” என்று!

அதாவது "பா" (ஹிந்தி அப்பா) படத்துக்கு அமிதாப் பச்சனுக்கும்,
நம்ம ரெண்டு "பசங்க" ளுக்கும், கிடைத்தை மிக இயல்பாக
சொல்லிக் கொண்டே போனார். ஒரு சின்ன விஷயத்தை கூட பெரிசாய் யோசிக்கிறாங்க பாருங்க. “106.4” ‘இது தான் ரைட் நம்பர்’
என்று வேறு சொல்லிக்கிறாங்க. நல்லா இருக்கு!! நீங்களும் கேளுங்க!!

சும்மா இருக்கும் போது, இவர்களெல்லாம் இப்படி யோசித்து பேசும்
போது, மனதுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாகவும், சந்தோசமாகவும் இருக்கு தெரியுமா?? இதையெல்லாம் ஏன் உங்களுக்கு சொல்றேன்னா? சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன்!!

                                                                           

வியாழன், அக்டோபர் 21, 2010

அரசியலுக்கு அப்பாற்பட்டு!!

                                                                                                                                                 


அரசியலுக்கு அப்பாற்பட்டு!!


நான் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவனும் இல்லை. இருந்தாலும்
இதை படித்த உடன் நாம் எந்த காலத்தில் வாழ்கிறோம் என்ற
நினைவே மேலோங்கி நிற்கிறது. ஒரு மாறுதலுக்காக, அரசியலிலும்
ஒரு பார்வை. நீங்களும் ஒரு 'தம்' பிடித்து படித்து வையுங்கள்.

இக்கட்டுரையினை வெளியிட்ட ஜூவிக்கு ஒரு நன்றி. ஊழல், கொலை, கொள்ளை, திருட்டு, அதிகார துஷ்பிரயோகம் இவற்றில் ஊறித்திளைக்கும் தமிழக அரசியல்வாதிகளில் இப்படியும் ஒருவர் இருக்கிறார் என்பது நமக்கெல்லாம் சற்றே மனதிற்கு சந்தோஷம் தரும் செய்தி அல்லவா. இதோ அந்தச் செய்தி.

                                                                       


சைக்கிள் செயின் நீளத்தில் தொங்கும் தங்கச் சங்கிலி, பளபளா நிறத்தில் முரட்டு பிரேஸ்லெட், கார், பங்களா… ‘மக்கள் பணி’ ஆற்றிவரும் இன்றைய கவுன்சிலர்களே இப்படிப்பட்ட அடையாளங் களோடுதான் வலம் வருகிறார்கள். ஆனால், மருத்துவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் ஒருவர் ஒழுகும் குடிசை வீட்டில் எளிமையான வாழ்க்கை வாழ்கிறார் என்றால் நம்ப முடிகிறதா!

சென்னையை ஒட்டிய திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியின் தற்போதைய அ.தி.மு.க. எம்.பி-யான டாக்டர் வேணுகோபால்தான் அந்த எளிமையான மனிதர். பெரம்பூர் லோகோ ஜி.கே.எம். காலனியில் இருக்கிறது எம்.பி-யின் குடிசைக் குடியிருப்பு. வீட்டின் முன்புறத்தில் இருக்கும் வெட்டவெளியிலேயே தகரக் கொட்டகை அமைத்து தினமும் பொது மக்களை சந்திக்கிறார். நாம் சென்றிருந்த நேரம், நெடுஞ்சாலை விரிவாக்கத்தில் வீடு இழந்த நெமிலிச்சேரி மக்கள் தங்கள் குறைகளை எம்.பி-யிடம் சொல்லி கதறிக் கொண்டிருந்தனர்.

”எம்.பி-யாகிறதுக்கு முன்னாலேயே முழுநேர டாக்டரா இந்தத் தொகுதி முழுக்க அறிமுகமானவர்தான் வேணுகோபால். கொடுங்கையூரில் இருக்கிறது அவரோட கிளினிக். அதிகபட்ச ஃபீஸே 25-தான்… ஏழைப்பட்ட சனங்களுக்கு எந்தக் கட்டணமும் இல்லாமல் தன்னோட செலவிலேயே மருந்து மாத்திரையையும் வாங்கிக் கொடுப்பார். இப்பவும் இங்கே வந்திருக்கிற மக்கள்ல பாதிப்பேர் தங்களோட சொந்தப் பிரச்னைகளைச் சொல்ல வந்திருக்காங்கன்னா, மீதிப்பேர் தங்களோட வியாதிகளுக்காகத் தான் வந்திருக்காங்க…” என்று எம்.பி-யின் இன்னொரு முகத்தைக் காட்டி புளகாங்கிதம் அடைகிறார்கள் ஏரியாவாசிகள்.

மகளின் இதய ஆபரேஷன் செலவுக்கு வழி கேட்டு வந்தவருக்கு
பிரதமர் நிவாரண உதவித் தொகையின் கீழ் நிதி வழங்குவதற்கான ஏற்பாடு, பட்டா கேட்டு முறையிட்ட திருமுல்லைவாயல் நரிக் குறவர்களுடன் ஆலோசனை…. என்று அடுத்தடுத்துபடுபிஸியாக
இருந்தார் எம்.பி.! அவரது குடிசை வீட்டிலோ வந்திருப்பவர்களுக்கு
சுடச்சுட காபி தயாராகிக்கொண்டு இருந்தது.

”நந்தனம் கலைக் கல்லூரியில் பி.எஸ்சி. படிக்கும்போதே அ.தி.மு.க-வின் மாணவர் அணித் தொண்டராகக் கட்சி வாழ்க்கையை ஆரம்பித்தவர். மிகுந்த பொருளாதாரச் சிக்கலுக்கிடையே பகுதி நேர வேலைகள் பார்த்துக் கொண்டே எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்தார். வீட்டுக்குத் தலைப்பிள்ளை என்பதால் பொறுப்பு அதிகம். உடன் பிறந்த மூன்று தம்பிகள், மூன்று தங்கைகளையும் படிக்க வைத்துக் கல்யாணமும் செய்துவைத்தார்.

வேலை காரணமாக இரண்டு தம்பிகளும் வேறு ஏரியாவில் குடும்பத்தோடு செட்டிலாகிவிட… இப்போது எம்.பி. குடும்பமும் அவரது தம்பி குடும்பமும் இந்த ஓட்டு வீடு, குடிசை வீடு இரண்டிலும் கூட்டுக் குடும்பமாக வசிக்கிறார்கள். 2004-லேயே புது வீடு கட்டுவதற்காக கொஞ்சம் பணம் சேர்த்து வைத்திருந்தார் டாக்டர். ஆனால், அப்போதைய நாடாளுமன்றத் தேர்தலில் திடீரென்று கட்சி இவருக்கு ஸீட் ஒதுக்கவே பணத்தை எல்லாம் செலவழித்து தேர்தலில் நின்று தோற்றுப்போனார்.

அதன் பின்பு பழையபடி கட்சிப் பணி, மருத்துவத் தொழில் என்று இருந்தவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக 2008 தேர்தலில் அம்மா ஸீட் ஒதுக்கினார்கள். தொகுதி முழுக்க இலவச மருத்துவ முகாம் நடத்துவது, கட்சிக்காகக் கடுமையாக உழைப்பது என்று எளிமையும் நேர்மையுமாக சுற்றிச் சுழன்ற டாக்டரை மக்களும் எம்.பி-யாக்கி டெல்லிக்கு அனுப்பி வைத்தார்கள்!” என்று ஒரு டாக்டர், எம்.பி.யான கதையை உணர்ச்சி பூர்வமாக விளக்கினார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

”எங்கே போறதா இருந்தாலும் ரயில்லதான் போவார். டெல்லிக்கு மட்டும்தான் ஃப்ளைட்டுல போவார். ரயில் வசதி இல்லாத குக் கிராமங்களுக்கு சென்று மக்களை சந்திக்க வசதியாக இப்போது
தான் பேங்க் கடனில் ஒரு கார் வாங்கி இருக்கிறார். எவ்வளவோ
பேருக்கு வீடு, மனை, பட்டா… வாங்க உதவிகள் செய்கிறார்.
ஆனாலும் தனக்குன்னு ஒரு வீடு கட்ட இதுவரையிலும்
யோசிக்கவே இல்லை. கேட்டா…. ‘பேங்க்ல லோன் கேட்டிருக்கேன்.
கூடிய சீக்கிரம் கிடைச்சுடும்’னு சொல்றார்!” என்கிறார்கள்
அக்கம் பக்கக் குடும்பத்தினர்.

வேணுகோபாலின் வீட்டை வலம் வந்தோம். சின்னஞ்சிறிய அந்தக்
குடிசை வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. ஒன்று சமையலறை, அருகிலேயே தங்கி ஓய்வெடுக்க வசதியாக ஒரு கட்டில்… எதிரில் அமைந்திருக்கும் சிறிய ஓட்டு வீட்டின் ஒரு பகுதியில் எம்.பி-யின் தாயாருக்கு ஒரு கட்டில். மொத்தக் குடும்பத் தினரும் பயன்படுத்த ஒரேயரு பழைய பீரோ.

பொதுமக்கள் சந்திப்பை முடித்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்த வேணுகோபால்,

”என்ன சார் என் வீட்டை இவ்வளவு ஆச்சர்யமா பார்த்துட்டு இருக்கீங்க…?” என்றபடியே நம்மிடம் பேசத் தொடங்கினார்.

”ஒரு மருத்துவரா நோயாளிகளை மட்டுமே திருப்திப்படுத்திக்கிட்டு
இருந்த என்னை, எம்.பி-யாக்கி லட்சக்கணக்கான மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்புத் தந்தாங்க அம்மா. இதுவே எனக்குப் போதும். மற்றபடி இந்த வீட்டுக்கு என்ன குறைச்சல்? இந்த வீட்டுல யிருந்துதானே நான் டாக்டருக்குப் படிச்சு இன்றைக்கு எம்.பி-யாகவும் ஆகியிருக்கேன்! என்ன… இந்த மழையில ஓட்டு வீடு மட்டும் அங்கங்கே கொஞ்சம் ஒழுகிச்சு. கெயிட்டி தியேட்டர் பக்கத்துல 300 கொடுத்து பழைய விளம்பர ஃப்ளெக்ஸ் ஒண்ணை வாங்கிட்டு வந்து ஓட்டு மேல போர்த்திவிட்டேன். இப்ப பிரச்னை எதுவும் இல்லை!” என அவர் பேசிக்கொண்டே போக… நாம் இருப்பது தமிழ்நாட்டில்தானா எனக் கிறுகிறுத்துப் போனோம்.

”எப்படி சார்… இவ்வளவு எளிமையா வாழுறீங்க..?” என அடக்க முடியாத ஆச்சர்யத்தோடு நாம் கேட்க… ”இருக்க இடம் இல்லாம எத்தனையோ பேருங்க ரோட்டோரம் ஒண்டிக் கிடக்கிறாங்க… அவங்களோட ஒப்பிட்டா நான் பெரிய பணக்காரனாச்சே சார்! வசிக்கிற இடம் எப்படி இருந்தால் என்ன… வாழுற முறை நல்லா இருந்தா சரிதானே சார்…” என்றார் வெகு இயல்பாக.

இந்த வார்த்தைகளை இந்தியாவில் உள்ள அத்தனை அரசியல் வாதிகளுக்கும் அச்சடித்துக் கொடுக்க வேண்டும் போல் இருந்தது நமக்கு!
                                                                          

                                                                             
நன்றி : ஜூவி - த.கதிரவன்

நன்றி : http://velichathil.wordpress.com/

திங்கள், அக்டோபர் 18, 2010

'உஷார்ப் படுத்து’ங்க...!!

















'உஷார்ப் படுத்து’ங்க...!!

எனது நண்பர் ஒருவர் இங்கு (சவுதியில்) இருக்கிறார். அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை நம்மிடம் வந்து பகிர்ந்து கொண்டார். அது நம்மில் பலருக்கு பாடமாக, உதவியாக கூட இருக்கலாம்.

அதைப் பற்றி உங்களோடு ..!!!

இவரும் இவருடைய மூத்த மகனும் இங்கிருக்கிறார்கள்.
இவருடைய மனைவியும் இளைய மகனும் ஊரில் இருக்கிறார்கள்.
மாதா மாதம் சம்பளம் வாங்கி எங்கள் வங்கி வழியாகத் தான்
பணம் அனுப்பி வைப்பார். சேமிப்பில் எப்போதும் ஓரளவு பணம் வைத்திருப்பார். அந்த  மாத செலவுக்காக தேவைப் பட்ட பணத்தை
எடுத்துக் கொள்ளச் சொல்லி ஒப்புதல் கொடுத் திருக்கிறார்

அவர்கள் அந்த ஊரில் (பெயர் தவிர்க்கப் படுகிறது) உள்ள வங்கி (பெயரும் தவிர்க்கப் படுகிறது) யில் பணம் எடுக்க சென்ற போது, கவுண்டர் ஸ்டாஃபாக இருந்த பெண்ணிடம் விபரம் சொல்ல, சலானை ஃபில்லப் செய்து கொடுங்கள் என்று கேட்கவும், தனக்கு எழுத வராது என்று சொல்ல, பரவாயில்லை கையொப்பமிட்டு மட்டும் தாருங்கள் நான் மீதியை எழுதிக் கொள்கிறேன் என்றி ருக்கிறார்.

இவரும் ஒரு சலானில் கையொப்பமிட, அது லேசான குளறுபடியாக, அதை கிழித்துப் போடாமல் கசக்கி கவுண்டர் மேலேயே வைத்து விட்டு, இன்னொரு சலானில் கையொப்பமிட்டு கொடுத்து பணத்தை எடுத்து சென்றிருக்கிறார். note : இவர் எடுத்து சென்ற பணம் பத்தாயிரம். சேமிப்பில் மீதி இருந்த பணம் அறுபத்தைந்தாயிரம்.

இது முடிந்து பதினைந்து நாள் கழித்து இவர்களுக்கு ஏதோ அவசர தேவைக்காக பணம் ஐம்பதாயிரம் தேவைப் பட்டிருக்கிறது. கணவரின் ஒப்புதலுடன் வங்கியில் சென்று விபரம் சொல்லி கேட்க, உங்கள் அக்கவுண்டில் வெறும் ஐயாயிரம் மட்டுமே இருக்கு என்று சொல்லி இருக்கிறார்கள். இவர் அங்கேயே விளக்கம் கேட்காமல், பதறிப் போய் வீட்டுக்கு வந்து, கணவருக்கு போனில் தகவல் சொல்லி இருக்கிறார்.

இவருக்கும் என்ன சொல்வது என்று தெரியாமல் நாட்டாமை என்னிடம் வந்து விட்டார். நாம தான் அப்பவும் இப்பவும் எப்பவும் எல்லோருக்கும் உதவும் அறிவுக் களஞ்சியமாச்சே! "நீங்க எல்லாருமே இப்படி என்னை புகழ்ந்தால்.. ஹி..ஹி.. நான் என்ன செய்வேன் (இருக்கட்டும்.. இருக்கட்டும்)

"நீங்க ஒன்னும் பதஸ்ட்டப் படாதீங்க. ஊரில் விபரமா பேசக் கூடியவர்கள் யார் இருக்கிறார்கள்" என்றேன். "அவங்க தாய் மாமா இருக்கார்" என்றார்.

அவரிடம் "நாளை பேங்க் டேமஜரிடம் போய், "இது மாதிரி விவகாரம் நடந்திருக்கு. நீங்க தீர்வு சொன்னா சரி... இல்லையேல் போலீஸுக்கு தகவல் சொல்லிட்டு, வில்லங்களை விவரித்து எழுதும் பத்திரிகையின் பெயரையும் சொல்லி, கன்ஸ்யூமர் கோர்ட்டுக்கு போகும் படியாய் இருக்கும் என்று மட்டும் சொல்லச் சொல்லுங்க போதும் " என்றேன்.

எப்பூடி??!! நாமெல்லாம் சட்டங்கள்லேயே, பல சட்டங்களை கரச்சு குடிச்சவங்களாச்சே. நம்மகிட்டேயேவா?? ஓஹோன்னானாம்.

அந்த மங்குனி டேமஜர் அரண்டு போய், "நீங்க அப்படியெல்லாம் ஒன்றும் செய்து விட வேண்டாம். அதற்குள்ள தீர்வை நாளை சொல்கிறேன்", என்று சொல்லி இவரை அனுப்பி விட்டு, உள்ளே வட்ட மேஜை மாநாடு நடத்தி இருக்கார். (பேங்க்ல வட்ட மேஜை யெல்லாம் இருக்கா... என்ன??)

நடந்த மேட்டர் இது தான். இவர் மனைவி கிழித்துப் போடாமல்,
ஞாபக மறதியாய், கவுண்டர் பெண்மணியின் மேஜை மேல்,
கையொப்ப மிட்ட சலானை வைத்து விட்டு வந்தது தான். அந்த பெண்மணியும், வங்கியின் கேஷியரும், அந்த சலானை வைத்து ஐம்பதாயிரம் பணத்தை 'உஷார்' செய்திருக்கிறார்கள். விவரம் வெளிச்சத்துக்கு வராமலிருக்க,  அந்த பெண்மணியை அன்றே
‘சஸ்பென்ட்’ செய்திருக்கிறார்கள்.

நான் கேட்கிறேன், அந்த கேஷியர் மட்டும் என்ன ‘புண்ணியம்’ செய்திருந்தார் அவரை மட்டும் விட்டு வைக்க??

இங்கிருந்து நாம் அவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாத்தித்து அனுப்புவதை எல்லாம் இந்த மாதிரி வாழும் புண்ணியவான்கள் நம் மக்களை இப்படி அல்லல் படுத்துவதற்கு தானா??

டிஸ்கி : இது சம்பத்தப் பட்ட வங்கி 'ஆப்பீசர்'கள்,  ஊழியர்கள் யாரேனும், இதைப் படிக்க நேர்ந்தால் உணர்ச்சி (இருந்தால்) வசப்பட்டு இங்கே கருத்துரை எழுதி விடாதீர்கள். நான் முடிந்த வரை மூடி மறைத்தே எழுதியிருக்கிறேன். அப்புறம் உங்கள் வங்கியின் பெயர் ஊரறிந்த விஷயமாகி விடும். இது எங்கள் வலையுலக சகோதர எழுத்தாளர்களுக்கும், எங்களைப் படிக்கும் வாசகர்களை 'உஷார்ப்'  படுத்தவுமே....!!

                                                                          

வியாழன், அக்டோபர் 14, 2010

எண்ணத்த எழுதுறோம்.!!










எண்ணத்த எழுதுறோம்...!!


எண்ணத்த எழுதுறோம் (எழுத்துப் பிழை இல்லை) அதாவது
“எண்ணங்களை எழுதுகிறோம்”. அப்படி!!

நம்மில் நிறைய பேர் கமெண்ட்ஸ் போட்டுட்டு திரும்ப போய், அதற்கு என்ன பதில் எழுதி இருக்காங்க என்று படித்துப் பார்க்கிறோமா என்பது தெரியவில்லை. நாம் அவசியம் சென்று படித்துப் பார்க்கணும். பதிவில் ஒரு மாதிரியும், கருத்தில் வேறு மாதிரியும் நிறைய சுவாரஸ்யங்கள் இருக்கும். நான் யாரை குறிப்பிடுகிறேன் என்று இதை படிக்கும் 'அந்த' நபருக்கு புரியும்

சிலர் கமெண்ட்ஸுக்கு பதில் போடுவாங்க. சிலர் மாட்டங்க. எழுதுபவர்கள் அவரவர் வேலை நிமித்தம் மனதில் தோன்றுவதை எழுதிவிட்டு, பிறகு பிஸியாகி விடுவார்கள். அதை நாம் குறையாய் எடுத்துக் கொள்ளக் கூடாது. இயன்றவரை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்துக் கொண்டே இருக்கணும். சரி வாங்க இப்ப டபார்னு மேட்டருக்கு ஜம்பிடுவோம்.

----------------------

நேயர் விருப்பம் :

முன்பு நீங்க சிலோன் ரேடியோ கேட்டீர்கள் என்றால் "வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கு அருகில் அமர்ந்திருக்கும், எமது ரசிக பெருமக்கள் அனைவருக்கும் எனது அன்பு வணக்கம்" என்று ஒரு குரல் கணீரென்று ஒலிக்கும் அந்த குரலுக்கு சொந்தக்காரர் “கே. எஸ். ராஜா” என்று சொல்வார்கள். அதை நான் கேட்டதில்லை. ஆனால் சமீபத்தில் எனது நண்பர் ஒருவரை சந்திக்க சென்ற போது, மனுஷன் அவர் பேசியதை பெரும்பாலானவைகளை ரெகார்ட் செய்து வைத்திருந்தார். அம்ம்மா...!! என்ன மாதிரி ஒரு குரல். கேட்டவுடன் அப்படியே மலைத்து சொக்கி தான் போனேன். இப்போது அவர் உயிருடன் இல்லையாமே ரேடியோ ரசிகர்களுக்கு பெரிய இழப்பு தான். ஆனாலும் நம் அனைவர்களின் சார்பாக அவர் குரலுக்கு ஒரு 'ராஜ சல்யூட்!'

இப்ப இதை எதுக்கு சொல்ல வர்றேன்னா....!!

நீங்கள் கேட்டவை :

// சகோ.அப்துல் காதர் உங்கள் ப்ளாக்கிற்கு வந்தவுடன் தமிழ் பாடல்கள் பாடுகிறதே! எப்படி? //

asiya omar துபாய் அல் அய்ன்- இலிருந்து கேக்றாங்க!!

(((இது ஒரு நல்ல கேள்வி!!))) :-

யாரும் என் மேல் பாயாதீங்க!! முன்பு ‘D D’ யில் 'எதிரொலி'யில் இப்படி தான் சொல்வார்கள். இப்ப அது ‘பொதிகை’யாகி, காற்றாகி, மரமாகி, பிஞ்சாகி, பூவாகி, திரும்ப மண்ணுக்குள் விதையாகிக் கொண்டிருக்கிறது. விருட்சமாவது எப்போது??

அதை கவர்ன்மெண்ட் பார்த்துக் கொள்வார்கள் என்றால், பார்க்கிற மக்கள் என்னாவார்கள். இது ஒரு நல்ல கேள்வி?? (நாமும் கேப்போம்ல!! ) ஹி..ஹி!!

இப்ப நாம் சொல்ல வந்த விஷயத்துக்கு வருவோம்.
"வந்தேமாதரம் சசி" சொல்லாததையா நாம் சொல்லப்
போறோம்.

இது ரொம்ப சிம்பிள். பெரும்பாலான வலைப் பக்கங்களில் சென்றால் நிறைய விஷயங்களை 'கேதர்' செய்து வைத்திருக்கிறார்கள். சில நேரங்களில் நாம் படிக்கும் போதோ எழுதும் போதோ ஏதாவது இசை பொழிவுகள் நம்மை ஆக்கிரமித்து சூழ்ந்திருக்கும் போது நிறைவாய், நிறைய எழுதத் தோன்றும். படிக்கிற காலங்களிலிருந்து அப்படி தான். இப்பவும் இப்படி தான். நம் வலைப் பூவுக்கு வரும் மக்கள் உருப்படியாய் இதையாவது கேட்டுக் கொண்டிருக்கட்டுமே!

இந்த வலை பூவின் கீழே இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் F M இல், நீங்கள் வலைப் பூவுக்கு வந்த உடனே ( ‘muthal fm’) ஸ்டேஷன் இல் இருந்து ஏதாவது பாட்டு பாடிக் கொண்டிருக்கும். நடுவில் (CHOOSE BUTTON)-ஐ கிளிக்கினீர்கள் என்றால், கிட்டத்தட்ட 50-60 ஸ்டேஷன் லிஸ்ட் திறக்கும். உங்களுக்கு BBC NEWS முதற்கொண்டு, உலகில் உள்ள எல்லா fm களும் திறக்கும்.

dash board – design (வடிவமைப்பு) சென்று..



copy செய்து..




உங்களுக்கு தேவைப் பட்ட இடத்தில் (இந்த வலைப்பூவில் வலது புறத்தில் உள்ளது போல)   paste பண்ணி save செய்து விடவும். அவ்வளவு தான். இனி உலக fm களெல்லாம் உங்கள் விரல் நுனியில்.

டிஸ்கி : இப்ப எல்லாமே மாறிப் போய் மொபைலிலும், வாட்சிலும் fm ரேடியோக்கள் வந்து விட்டாலும், "பொட்டி ரேடியோ" வைச் சுற்றி குடும்பமே கேட்டு ரசித்த காலம் எங்கே?!


                  

திங்கள், அக்டோபர் 11, 2010

ஊரெல்லாம் ஊர்கள்...!!!

                                                                 
//ஆங்... நாகப்பட்டினம் மாவட்டத்தில 'சிக்கல்' ன்னு ஒரு ஊரு இருக்காமே அத விட்டுடீங்களே..//

சென்ற பதிவில் நான் எழுதிய ஊர் பெயர்களில் உள்ள சுவாரஸ்யங்களை படித்து விட்டு, எங்களின் நட்புள்ளங்கள் நிறைய பேர் இதை கேட்கிறார்கள்.

அவர்கள் கிண்டலுக்கு கேட்டார்களா? விவரம் தெரிந்து கொள்ள கேட்டார்களா?   தெரியலிங்க! ஆனாலும்  நம்ம  ஆராய்ச்சி
'மைண்ட்' இருக்கே (ஹி..ஹி..நம்மை நாமே பாராட்டிகிட்டா தான்
உண்டு.)  எல்லோரும் தெரிந்து கொள்ளவும், நாமும்  தெரிந்து 
(கொள்ளவும் / கொண்டும்) இங்கே வரைகிறேன்.

இப்ப எல்லோரும் தெரிஞ்சுங்க!

‘நாகை’ மாவட்டத்தில் ஒரு 'சிக்கல்' இருப்பது போல் ‘ராமநாதபுரம்’ மாவட்டத்தில் ஒரு 'சிக்கல்' இருக்கு. (இதைப் பற்றி எழுதினால்
‘சிக்கல்’ வந்துடுமோன்னு தான் எழுதல ( ஹி..ஹி..!! )

இந்த ஊர்களை சுற்றி இருக்கும் ஊர் பெயர்களை கவனியுங்கள்.
"மஞ்சக்கொல்லை",  "கூத்தூர்",  "வேட்டைக்காரன் இருப்பு"
"தலைஞாயிறு"  பெயர்கள் எப்படி?? (அவைகள் எல்லாமே நாகை மாவட்டத்தில் வருகிறது) "வாழ்க்கை",  "வாழ வந்தான்"  இப்படி
பெயர் கொண்ட ஊர்களும் ..!! (இவைகள் திருவாரூர் மாவட்டத்தில் வருகின்றன)

அது போலவே -

'ஏர்வாடி' என்ற ஊர் பெயர் ‘திருநெல்வேலி’ மாவட்டத்தில் ஒன்னு இருக்கு, ‘ராமநாதபுரம்’ மாவட்டத்தில் ஒன்னும் இருக்கு. (அந்த 'ஏர்வாடி’யில் என்ன இருக்குன்னு உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன். இந்த ‘ஏர்வாடி’யில் என்ன விசேஷம் என்று எனக்கு தெரியலைங்க!)

‘திருநெல்வேலி’ மாவட்டத்தில் ஒரு 'குற்றாலம்' போல், ‘நாகை’ மாவட்டத்தில் ஒரு 'குத்தாலம்' இருக்கு. இந்த ‘குத்தாலத்தில்’ “அந்த” குற்றாலம் மாதிரி எந்த விசேஷமும் கிடையாது.

"பாளையம்கோட்டை" என்ற ஊர் ‘திருநெல்வேலி’ மாவட்டத்தில் மட்டுமில்லை, ‘கடலூர்’ மாவட்டத்திலும் ஒன்னு இருக்கு.
(அதில் ஃபேமஸ் ஜெயில், இதில் என்னவென்று தெரியல!)

"தமிழ் நாட்டில்" ஒரு 'வேலூர்' இருப்பது போல், (கேரளா)
'கோட்டயத்திலும்' ஒரு 'வேலூர்' இருக்கு. (இங்கே ஜெயில்
ஃபேமஸ் போல, அங்கே என்னவென்று தெரியல!)

"மேலூர்" என்ற ஊர் ‘மதுரை’ மாவட்டத்தில் ஒன்றும் ‘தூத்துக்குடி’ மாவட்டத்தில் ஒன்றும் ‘விழுப்புரம்’ மாவட்டத்தில் ஒன்றும்,
'திருவள்ளூர்' மாவட்டத்திலும் ஒன்றும் இருக்கு .

"வடகரை" என்ற ஊர் ‘நாகை’ மாவட்டத்தில் ஒன்றும்,
'திருவாரூர்’ மாவட்டத்தில் ஒன்றும், ‘சிவகங்கை’ மாவட்டத்தில்
ஒன்றும், ‘திருநெல்வேலி' மாவட்டத்தில் ஒன்றும், (கேரளா)
“பாலக்காட்டில்” ‘வடகரா’ என்ற பெயரிலும் இருக்கு!!

"சாத்தனூர்" என்ற ஊர் ‘நாகை’ மாவட்டத்தில் ஒன்றும், (கேரளா) ‘கொல்லம்’ (Quilon) மாவட்டத்தில் ஒன்றும் இருக்கு.

"திருபுவனம்" என்ற ஊர் பெயர் (பட்டுப் புடவைக்கு ஃபேமஸ்)
‘தஞ்சை’ மாவட்டத்தில் ஒன்றும், ‘சிவகங்கை’ மாவட்டத்தில்
ஒன்றும் இருக்கு.

"திருமுல்லை வாசல்" என்ற ஊர் ‘நாகை’ மாவட்டத்தில் இருப்பது போல் ‘சென்னையில்’ "திருமுல்லை வாயில்" என்று ஒரு ஊர் இருக்கு !!

“திருப்பத்தூர்” என்ற ஊர் ‘சிவகங்கை’ மாவட்டத்தில் ஒன்றும் ‘வேலூர்’ மாவட்டத்தில் ஒன்றும் இருக்கு.

"முதுகுளத்தூர்" என்ற ஊர் ‘மதுரை’ மாவட்டத்தில் ஒன்றும், ‘ராமநாதபுரம்’ மாவட்டத்தில் ஒன்னும் இருக்கு.

"வளையப்பட்டி" என்ற ஊர் ‘நாமக்கல்’ மாவட்டத்தில் ஒன்றும், ‘மதுரை’ மாவட்டத்தில் ஒன்றும் இருக்கு.

"ஆலங்குடி" என்ற ஊர் 'திருவாரூர்' மாவட்டத்தில்
ஒன்றும், ‘புதுக்கோட்டை’ மாவட்டத்தில் ஒன்றும் இருக்கு.

‘அரியலூர்’ முன்பு ‘பெரம்பலூர்’ மாவட்டத்தில் இணைந்திருந்தது. தற்பொழுது ‘அரியலூர்’ தனி மாவட்டமானாலும், ‘அரியலூர்’ என்ற ஊர் ‘விழுப்புரம்’ மாவட்டத்தில் ஒன்றும் இருக்கு!

"அத்தானி" என்ற ஊர் 'ஈரோடு' மாவட்டத்தில் ஒன்றும்,
'புதுக்கோட்டை' மாவட்டத்தில் ஒன்றும், (கேரளா) 'திருச்சூர்'
மாவட்டத்தில் ஒன்றும், (கேரளா) 'எர்ணாகுளம் ' மாவட்டத்தில்
ஒன்றும், (கர்நாடகா) 'பெல்காம்' மாவட்டத்தில் ஒன்றும் இருக்கு.

'கொத்தமங்கலம்'  என்ற ஊர் 'புதுக்கோட்டை' மாவட்டத்தில் இருப்பது போல், (கேரளா) 'எர்ணாகுளம்' மாவட்டத்தில்  "கோதமங்கலம்" என்ற ஊர் இருக்கு! ஆங்கிலத்தில் இரண்டு ஊருக்குமே (KOTHAMANGALAM) என்றே குறிப்பிடப் பட்டுள்ளது கவனத்தில் கொள்ள வேண்டும்.

'புதுக்கோட்டை' மாவட்டத்தில் அறந்தாங்கிக்கு அருகிலுள்ள
ஊரின் பெயரை கேட்டால் சிரிப்பு வரும். "கொக்கு முட்டை"
அதேபோல அறந்தாங்கிக்கு அருகில் இருக்கும் மற்றொரு
ஊரின் பெயர் "ஆளப்பிறந்தான்".

(கேரளா) 'எர்ணாகுளத்தில்' 'மட்டன்சேரி' என்ற ஒரு ஊர் இருக்கு. அது எந்த வகை 'மட்டன்' என்று நமக்கு தெரியாதுங்க!

‘கேரளாவில்’ "இடுக்கி" என்று ஒரு மாவட்டமிருக்கு. (இதில் யார் யாரை தூக்கி இடுப்பில் “இடுக்கி”க் கொள்வார்கள் என்று நமக்கு தெரியாதுங்க!!)

(கேரளா) ‘கொல்லத்தில்’ "புனலூர்" என்ற ஊர் இருக்கு. (இது நாம யூஸ் பண்ணும் 'புனல்' அல்ல!!)

(கேரளா) கோட்டயத்தில் "நாலு கோடி" என்று ஒரு ஊர் இருக்கு!!

'திருநெல்வேலி'  மாவட்டத்தில் ஒரு ஊரின் பெயர்  'படுக்க பத்து!'

(கேரளா) "பத்தனம்திட்டா" மாவட்டத்தில் ஒரு ஊரின் பெயர் "தடியூர்" (இங்கே யாரும் மெல்லிசாக இருக்க மாட்டாங்களோ?)

"கங்கை கொண்டான்", "கடாரம் கொண்டான்", "எப்போதும் வென்றான்" இவைகள் எல்லாமே ஊர்கள் பேர் தாங்க!!

'சென்னையில்' "சாலி கிராமம்" இருப்பது போல், 'சிவகங்கை' மாவட்டத்தில் "சாலை கிராமம்" என்ற ஊர் இருக்கு!

இப்படி இரண்டு, மூன்று, நான்கு மாவட்டங்களில் ஒரே ஊர்களின்
பெயர்கள் இருப்பது போல்......

                                                                                     இன்னுமிருக்கு .....!!



                                                                 

ஞாயிறு, அக்டோபர் 10, 2010

உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா? (தொடர் பதிவு)

                                                                                      

நேற்று நண்பர் "மங்குனி அமைச்சரிடமிருந்து" அவசர ஓலை! அதிலிருந்த சாரம்சம் கீழே!
-------

உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா? (தொடர் பதிவு)

முஸ்கி : நண்பர்களே நேற்று "சந்தோஷ் பக்கங்கள்" இந்த பதிவை போட்டு இருந்தார், "இந்த விஷயத்தை உங்களால் முடிந்தால் நாலு பேருக்கு பகிருங்க" அப்படின்னு கேட்டு இருந்தார், ரொம்ப நல்ல விஷயம். எனவே நண்பர்களே உங்களால் முடிந்த அளவுக்கு அனைவரும் குறைந்த பட்சம் ஒரே ஒரு நாளாவது உங்கள் பிளாக்கில் இந்த பதிவை போடுங்க. நிறைய பேருக்கு 'ரீச்' ஆகும். விருப்பமுள்ளவர்கள் அனைவரும் இந்த தொடர்பதிவை தொடரலாம் .

For your quick referance:

http://santhoshpakkangal.blogspot.com/2010/10/blog-post.html

உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா?

உங்க கிட்ட நீங்க உபயோகப்படுத்தாத பொருட்கள் ஆடைகள், பொம்மைகள் இருக்கா? அதை தூக்கி எறியவும் மனசு இல்லாமல் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிங்களா? அதை எங்களிடம் கொடுங்க நாங்க அதை ஏழை எளியவர்களுக்கு கொடுக்கிறோம்.

CTC - Chennai Trekking Club என்று ஒரு இயக்கம் இருக்கிறது.. நீங்க மேற் சொன்ன விஷயங்களை இவர்களிடம் அளிக்க விரும்பினால்...

"இந்த சுட்டியில்"

(https://spreadsheets1.google.com/viewform?hl=en&formkey=dEU1d2gzVnNVVTBMR3Z2eGNiMS1RaVE6MQ#gid=0)

உள்ள EXCEL FORM-ஐ நிரப்பினால் எங்க தன்னார்வலர் ஒருவர்
உங்களை தொடர்பு கொண்டு உங்களை நேரில் சந்தித்து அதை
பெற்றுக் கொள்வார்கள். இப்போதைக்கு இது "சென்னையில்" உள்ளவர்களுக்கு மட்டுமே. நீங்கள் அளிக்க இருக்கும் பொருட்களை சென்னைக்கு அனுப்ப முடிந்தால் நீங்களே  கூட  இவர்களை   தொடர்பு கொள்ளலாம்.

"முத்துலட்சுமி" அக்கா சொன்ன மாதிரி இது ஆதரவற்ற முதியோர்களுக்கும், குழந்தைகளுக்கும் கொடுக்கப் போறாங்க. எனவே தயவு செய்து திரும்ப உபயோகப்படுத்தும் நிலையில் இருந்தால் மட்டும் கொடுங்க. கிழிந்த நிலையில் உள்ள துணிகளை எல்லாம் கொடுக்காதீங்க  பிளீஸ்!!

இது ஒரு நல்ல விஷயம். இதை படிப்பவர்கள் மற்றவர்களுக்கு தெரிவித்தால் கூட நம்மால் முடிந்த அளவுக்கு உதவி செய்யலாம்.
இந்த விஷயத்தை உங்களால் முடிந்தால் நாலு பேருக்கு பகிருங்க!!

டிஸ்கி : உதவி பண்றேன்னு பெருமைக்காக நிறைய பேர் கிழிந்த,
உடைந்த பொருட்களை தருகிறார்கள், உங்களை யாரும் கட்டாயப்
படுத்தப் போவதில்லை, கொடுக்கபோகும் துணிகளை நன்றாக
துவைத்து, அயன் செய்து   உபயோகிக்கும் நிலையில் கொடுங்கள்.
இல்லை யென்றால் வேண்டாம். யாரும் உங்களை குறை
சொல்ல மாட்டார்கள்.

(நன்றி : சந்தோஷ் பக்கங்கள் + மங்குனி அமைச்சர்)


----------
சகோதர! சகோதரிகளே!! உங்களின் அவசர வேலையின் நேரத்திலும்,  சில நிமிடத் துளிகள் ஒதுக்கி இதை  படித்து மனதால்
புரிந்து கொண்டமைக்கு நன்றி!!



                                                                  

புதன், அக்டோபர் 06, 2010

சுவாரஸ்யங்கள் என்பது....!!!

                                                                               

சுவாரஸ்யங்கள் என்பது...மனதிலிருந்து பொங்கி பிரவாகமாய் வருவது தானே!  சுணக்கமாய் இருக்கும் போது மூச்சை உள் இழுத்து மெது மெதுவாய் வெளியே விட்டு மனதை சுறுசுறுப்பாக்கி கொள்ளணும். அப்படி செய்தால் அலை அலை என பொங்கும் சந்தோசத்திற்கு அளவே இருக்காது. SO, நீங்க ஃபிரெஷ்ஷா ஆயிட்டீங்களா?? வாங்க..,,

கேரளாவில் உள்ள "பத்தனம்திட்டா" மாவட்டத்தில் "வளஞ்ச வட்டம்" என்று ஒரு ஊர் இருக்கிறது. இங்கிருந்து பணம் அனுப்ப வரும் நபரிடம் " வட்டம் வளைந்து" தானே இருக்கும். பின்னே எப்படி அந்த ஊருக்கு அப்படி பேர் வந்தது? என்று கேட்டால் அவருக்கு சொல்லத் தெரியவில்லை.

உங்களில் யாருக்கேனும் தெரியுமா? (ஜமால் சார்!! நீங்க ‘அதிரை’யில் பிறந்தாலும், கோட்டயத்திலா இருக்கீங்க!! இப்படியே வந்து சத்தம் போடாம படிச்சிட்டு போனா எப்படி?? விவரம் சொல்லலாம்ல. கேப்போம்ல!! )

கேரளாவில் பெரும்பாலான வீடுகளுக்கு டோர் நம்பர் கிடையாது. சமீபத்தில் தான் திருவனந்தபுரம் சிட்டியில் கூட டோர் நம்பர் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். வீட்டின் பெயர், ஊரின் பெயர், மாவட்டம் பெயர் இருந்தாலே போதும் போஸ்டல் டிபார்ட்மென்ட் இலகுவாய் கொண்டு போய் சேர்ப்பித்து விடுகிறது.

காலிகட் (கோழிக்கோடு) மாவட்டத்திலிருந்து ஒரு நபர் பணம் அனுப்ப வருவார். அவர் வீட்டின் பெயர் "நூறு ஏக்கரில் வீடு" (வேலை பார்ப்பதோ எண்ணூறு ரியால் சம்பளத்துக்கு!!) "நூறு ஏக்கரில் வீட்டை வைத்துக் கொண்டு, எதுக்கு இங்கே வேலைக்கு வந்தாய்” என்று கேட்டால், அந்த ஆள் சிரிக்கிறார்.

இன்னொரு வீட்டின் பெயர் "வீடு வில்ல வீடு" (என்னங்க இது??)

திருவனந்தபுரத்தில் இன்னொரு ஊரின் பெயர் "நெய் யாற்றின் கரா" (neyyattinkara) (தேனும் பாலும் ஆறா ஓடும்னு கேள்வி பட்டிருக்கிறோம். இங்க நெய்யா ஓடும் போல..!!) இளையராஜா சார் கூட ஒரு பாட்டில் இந்த ஊர் பெயரை சொல்லி பாடுவார்.

இன்னொரு ஊரின் பெயர் "சிறையின் கீழ்" (chirayinkil) நான் கூட நினைத்துக் கொள்வதுண்டு. உயரமான இடத்தில் ஜெயில் இருக்கும், அதுக்கு கீழே ஊர் இருக்கும் போல!! இல்லையாம். தண்ணீரை சிறை பிடித்து வைத்திருப்பதால் (அணைக்கட்டு) அந்த பெயராம். (என்னங்கடாது... !!)

இன்னும் நம்ம கன்யாகுமரி மாவட்டத்தில் பார்த்தீர்கள் என்றால் ஊர் பெயர்களே சுவாரஸ்யமாய் இருக்கும்.

"அஞ்சு கிராமம்" (‘ஒரு’ கிராமத்தையே நம்மால் சமாளிக்க முடியலே! இதுலே அஞ்சு கிராமமா?? ஸ்டீபன் என்னாதிது??)

"கருங்கல்" (ஊர் பெயர் தாங்க..!!)

திங்கள் மார்க்கெட், புதன் மார்க்கெட், வெள்ளி மார்க்கெட் இப்படி நாட்கள் பெயர்களிலேயே ஊர்கள் பெயரும். அத்தனையும் சந்தைகள் கூடும் நாள்.

நாகை மாவட்டத்தில் “பூந்தோட்டம்” என்று ஒரு ஊர். சுற்றி பார்த்தீர்கள் என்றால் வெறும் “கருவக்காடா” இருக்கும். இப்ப அவைகள் சரி செய்யப்பட்டிருந்தால், பிளாட்கள் போட்டு விற்பனையாகிக் கொண்டிருக்கும்.

“மயிலாடுதுறை” யில் ஒரு ‘மயில்’ கூட ஆடி நான் பார்த்ததில்லை (அப்ப எதுக்கு அந்த பேர் - ஊர் காரங்க தெரிந்தா சொல்லுங்க!!)

விட்டா... (action packed) மாதிரி, சுவாரஸ்யம் packed என்று சொல்லிக்கிட்டே போவீங்களோ??!!

கேக்குது.. கேக்குது..

நீங்க சொல்வது கேக்குதுங்க!!

அதனால... ??

அதனால என்னவா??

நீங்க "எஸ்" ஆகிடுங்க!!!

நாங்க கமெண்ட்ஸ் பக்கம் போறோம்.

ஹி.. ஹி.. இப்படியும் (வோட்டும், கமெண்ட்ஸும்) போட சொல்வோம்ல !!

                                                                          

திங்கள், அக்டோபர் 04, 2010

சாடுதல் + ஜம்ப்பிங் !!

                                                                            
சாடுதல் + ஜம்ப்பிங் !!

நம்மில் நிறைய பேருக்கு தெரிந்தவர்கள் அறிந்தவர்களுக்கு தூரத்து சொந்தத்தில், (ஒன்று விட்ட, ரெண்டு விட்ட, டூ விட்ட....!! அண்ணன்ஸ், தம்பிஸ், மாம்ஸ், மச்சான்ஸ், சித்தப்ஸ், பெரியப்ஸ்) என்று நிறைய பேர் இங்கு சவுதி வந்து சம்பளம், வேலை, தட்ப வெப்ப நிலை... இன்னும் பிற சூழ்நிலைகள் சரியில்லாமல், கம்பெனியை விட்டு, ஸ்பான்சரை விட்டு ( சாடி + ஜம்ப்பிங்) வெளியேறி இருக்கக்கூடும். அதெல்லாம் இங்கே சகஜம்ங்க.. என்று சொல்பவர்களுக்கெல்லாம் இந்த செய்தியை எடுத்து சொல்லி பகிர்ந்து கொள்ளுங்கள்.

எமது நண்பர் 'ஸ்டீபன்' தனது "நாடோடியின் பார்வையில்" சவுதியில் நம் மக்கள் படும் கஷ்டங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதையும் படியுங்கள்.

---------------------------------------------------------------------------------------------------------

சவூதி அரேபியாவில் சட்டத்திற்கு புறம்பாக வசிக்கும் வெளி நாட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி வெளியேற அரசாங்கம் ஆணையிட்டுள்ளது. செப்டம்பர் 25, 2010 முதல் மார்ச் 23, 2011 வரை 6 மாதங்களுக்கான கால அவகாசம் இதற்காக வழங்கப்பட்டு ள்ளதாக சவூதி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பை மேற்கோள் காட்டி, “சவூதி பிரஸ் ஏஜென்ஸி” தெரிவிக்கின்றது

உம்ரா விசா, ஹஜ் விசா, சுற்றுலா விசா போன்ற விசாக்களில் சவூதி அரேபியாவிற்கு வருகை தந்து, விசா காலாவதியான பிறகும், சவூதியில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ள வெளிநாட்டினர், அருகிலுள்ள வெளியுறவுத்துறை அலுவலகத்தில் (வாஃபிதீன்) பதிவு செய்து கொண்டு நாட்டை விட்டு வெளியேறலாம் என அந்த செய்திக்குறிப்பு மேலும் தெரிவிக்கின்றது.

விசா காலாவதியாகியுள்ள வெளிநாட்டவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு வெளியேற வேண்டும் என்றும், இந்த பொதுமன்னிப்பு காலக்கெடு முடிந்தும் வெளியேறாதவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர். மேலும், இவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள், வாகனங்களில் ஏற்றிச் செல்பவர்களும் கடுமையாக தண்டிக்கப் படுவதோடு, அபராதம், சிறை தண்டனை, வாகனங்கள் பறிமுதல் முதலிய நடவடிக்கைகளோடு, அவர்களது படங்களும் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படும் என அமைச்சகம் எச்சரித்துள்ளது.

செப்டம்பர் 23 ஆம் தேதி, சவூதி அரேபியாவின் தேசிய நாளை யொட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கருதப்படுகின்றது. பொதுவாக, ஒவ்வோர் ஆண்டும், இந்நாளில் சிறிய குற்றங்கள் செய்து சிறைச்சாலைகளில் வாடி வரும் சவூதி மற்றும் வெளிநாட்டவர்கள் பொது மன்னிப்பு வழங்கப்படுவர்.

ஏறக்குறைய 30 இலட்சம் வெளிநாட்டவர்கள் சவூதி அரேபியாவில் சட்டத்திற்கு புறம்பாக வசித்து வருகின்றனர் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. இதர வளைகுடா நாடுகள் சிலவற்றை பின்பற்றி சவூதி அரேபியாவும் இந்த பொது மன்னிப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.




நன்றி : tntj .net                                             ரியாதிலிருந்து … ஃபெய்ஸல்




                                                                                       

சனி, அக்டோபர் 02, 2010

மனதினிலே பார்த்து விட்டேன்!

                    




மனதினிலே பார்த்து விட்டேன்!


அன்னிக்கி அது மாதிரி தாங்க வார லீவு வீட்டிலிருந்தேங்க. பாத்ரூமுக்கு குளிக்கப் போன நான் மறதியோ பழக்க தோஷமோ, போவட்டும், 'தங்ஸ்'க்கு உதவியா இருக்கட்டுமேன்னு சுத்தமா பக்கெட்லேந்து சிட் அவுட் வாஷ் பேஸின் வரைக்கும் பளிச்ன்னு கிளீன் செய்து வைத்து விட்டு, (பேச்சிலர்ஸ்ஸா இருந்த போது இதைத்தானே செய்துக் கொண்டி ருந்தோம் என்ற நினைப்பிலேயும் ) ...

குளித்து விட்டு வெளில வந்தா ஒரே கலைப்பா இருக்கேன்னு ஒரு லெமன் ஜூஸ் போடச் சொல்லி (அல்ல போட்டு) குடித்து விட்டு (இப்படி சொல்வதனால ‘ரங்ஸ்’ களெல்லாம் என்னை தாப்பா எடுத்துக்கப் படாது. ஏன்னா அங்கிட்டும் அப்படி தானென்று எங்களுக்கு அப்பவே தெரியும்ங்க ஹி..ஹி.. ) சரி மேட்டருக்கு வர்றேன்.

பின்னர் அவுக பாத்ரூம் போய்  பாத்திருப்பாங்க போல, பதறியடிச்சிக் கிட்டு ஓடியார்ராக (அப்படித் தான் எனக்கு தெரிந்தது) என்னமோ ஏதோ வென்று பதறிப் போய் 'லேப்டாப்பை' தூக்கி பெட் மீது வீசி விட்டு, எழுந்தே நின்று விட்டேன்!

"என்னாங்க இப்படி பண்ணிட்டு வந்திருக்கீங்க"

"என்..ன்னா.. ?" என்றேன்.

"பாத்ரூம இப்படி பளிச்சுன்னு கிளீன் செஞ்சு வச்சிருக்கீங்க பக்கெட்டேல்லாம் பள பளாங்குது...? "

அதுக்கு..??

"ஹி..ஹி.."

"அய்யய்யோ சிரிக்கிறாங்க டோய்... மண்டைக்குள் ஏதோ பொறி தட்டி பல்பு எரிந்தது..தொண்டைக்குள் ஏதோ அடைப்பது போலிருந்தது, சுதாரிச்சிக்கிட்டு.."

"அதுக்கென்ன இப்ப ? "

ஏதும் விளங்காதவனைப் போல் முகத்தை வைத்துக் கொண்டு....
(நாம் தான் அதெல்லாம் கரெக்ட்டா செய்வோமே...!!)

"ஒன்னுமில்லீங்க..ஹி..ஹி..! "

(அய்யய்யோ மறுபடியும் சிரிக்கிறாங்க டோய் எடத்த காலி பண்ணிட்டு குதிச்சு ஓடுடாய்.., என்று மனசு சொன்னாலும், சிரிச்சிட்டாங்களே இன்னொரு மனசு அடியெடுத்து கொடுக்க, நானும் ஹி..ஹி.. (இதுக்குப் பேர் வழிதலல்ல கம்பீரம்னு எடுத்துக்கணும் ஹி..ஹி..)

இந்த 'தங்ஸ்'களெல்லாம் செம கில்லாடிங்க! நம்ம முகத்தில் என்ன எழுதியிருக்குன்னு அப்படியே ‘ஸ்கான்’ பண்ணிடுவாங்க...

(அத மறைக்க  ஏதாச்சும் கூடிய விரைவில்  கண்டு பிடிக்கணும். இருக்கட்டும் கண்டு பிடிப்போம்..)

அந்த நேரத்தில் கோட்டை விட்டோம் அம்புட்டுதேன்... அப்படி என்னா எழுதி இருந்துச்சோ என் முகத்தில் எனக்கே தெரியலீங்க.. எனக்கெப்படி தெரியும். அதானே!! அவுக படிச்சிட்டாக போல… படிச்சவுகல்ல...!!

ஆஹா இத ரொம்ப நுணுக்கமா ஹேண்டில் பண்ணனும் டோய் என்று நெனச்சுக்கிட்டிருக்கும் போதே...'அவங்க சொன்னாங்க'...,

"நா என்னா தான் கிச்சான கிளீன் பண்ணினாலும் (பண்ணினாத் தானே) கிச்சன்..கிச்சன்.. மாதிரி இல்ல.. அதனால ...!"

"வெளங்கிடும்" என்று சொன்னது வெளியில் தெரியாம அதை காற்றில் மேய விட்டுட்டு, பிறகு pause button-ன on பண்ணி..

"அதனால ..!! " (இப்பவும் கம்பீரமாக கேட்டேன்..)

"நீங்களே கிளீன் பண்ணிடுங்க" ஒரு க்கி..க்கி.. விட்டுப் போய்ட்டாங்கைய்யா ..!!

சொந்த செலவில் சூனியம்.., தலையில் மஞ்சத் தண்ணி .., சேச்சே ...அதெல்லாம் சொல்ல மாட்டேங்க.. இதுல வலையுலக “அன்புச்” சகோதரிக லெல்லாம் ஒன்று சேர்ந்து 'தங்ஸ்'க்கு உதவியா இருங்கன்னு என்று வேற அட்வைஸ் மழை (..நற.. நற..) செய்ததாலும்..!!

இருங்க... !

ஏதோ ஒரு வாசனை வருதே!! அதென்ன...?? காபி வாசனை மாதிரி...!! கண் முழிச்சிட்டேங்க...!!

'தங்ஸ்' எதிரே புன்னகையுடன் முகத்தை வைத்துக் கொண்டு காபியுடன் வந்து எழுப்ப..

அட... அது... புரூ காபிம்மா... நம்புங்க...!!

அடடா 'தங்ஸ்'களெல்லாம் என்ன சொன்னாலும் எவ்வளவு
நல்லவுக, நாம தான்  தப்பு தப்பா புரிஞ்ச்சிக்கி றோம்னு நெனக்கக் கூடாதுன்னு...நெனச்சிக்கிட்டே எழுந்து பாத்ரூமைப் பார்க்க ஓடினேன்.

ஹி..ஹி.. இப்பயும் அங்கிட்டு தான் வேலையா??