ஆஸ்கர் அவார்ட்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆஸ்கர் அவார்ட்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், ஜனவரி 19, 2011
சவுதியில் மழை...!!!
சவுதியில் மழை...!!!
(ரொம்ப முக்கியம் பாருங்க!!) அது மழை தானா என்பதை கன்ஃபர்ம்
செய்ய நாலு பேரை விசாரிக்க வேண்டியதாகிவிட்டது. செ.சரவணக்
குமார் சார், அக்பர் சார், பன்னி சார் ஆகியோர்களுக்கு அலைபேசி,
அவர்கள் சொன்ன பிறகு தான் அது ஊர்ஜிதமானது. பின்னரும்
நேற்று (மட்டும்) லீவில் இருந்த இளம்தூயவன் சார் வந்து சொன்ன
பிறகு தான் அந்த மழை குளிரானது. ஸ்ஸ்ஸ்... அப்பா...தாங்க முடியலையேன்னு யாரும் 'எஸ்' ஸாகிடக் கூடாது பாருங்க!
அதான் உங்கள சீட் நுனி வரைக்கும் கொண்டாந்து சினிமா
கிளைமாக்ஸ் மாதிரி சஸ்பென்சா கட்டிப் போட்டிருக்கோம்! ஹி..ஹி..
மழை குளிருக்கெல்லாம் ஒரு பதிவான்னு யாரும் நம்மை
கேட்டுடக் கூடாது பாருங்க. ஹி..ஹி நாம அப்படியெல்லாம்
மொக்கப் போடுற ஆளா?? (அங்க யாருக்கோ காது நுனி சிவந்து புகைவருது!! மூக்கு நுனி வேக்குது!! (வரட்டும் வரட்டும் நாம எல்லாத்துக்கும் தயாரா தானே இருக்கோம்) அவ்வ்வ்வ்...!!!
ஏன் கடந்த ஒருவாரமா நீங்க பதிவே போடலைன்னு உலகம் முழுவதிலிருந்தும் ஒரே நச் நச்..ச்ச்!! சாட்டு, மெயில், மொபைலி
ன்னு அல்லோல கல்லோலப் பட்டுப் போச்சு! (யாரு கேப்பா
ஹி..ஹி.. நம்மை நாமே கேட்டுக் கொண்டால்தான் உண்டு!!)
இடையில் இந்த கக்கு மாணிக்கம் சார் வேற அன்புத் தொல்லை
தாங்க முடியலை!! டாக்குடர் பட்டம் தர்றேன்னு ஒரே அடம்.
கேட்க மாட்டேங்குறாங்கைய்யா..!! இந்த பதிவுலக அன்புத்
தொல்லைக்கு அளவே இல்லாமப் போச்சு!!
நன்று.. நன்று..!!
"சொல்லவந்த செய்தியை மட்டும் சொல்லிட்டு போய்டு
இல்லாக்காட்டி பதிவுலகமே திரண்டு வந்து மொக்கிடும்னு
நீங்க சொல்றது கேக்குது மக்கள்ஸ்".
நன்று.. நன்று.. பார்ரா...!!
ஊரிலிருந்து ‘மகர்’ (மரியாதி) வந்திருக்கார். விசா ரினிவல்ஸ்.
ஜஸ்ட் ரெண்டு வாரம் தான் ஹாலிடே!! அவரோடு ஒரே ஊர்
சுற்றல்ஸ். சந்தோசம்ஸ். மகிழ்ச்சிஸ்.. அளவில்லாத இன்ன பிற
இத்யாதீஸ். இதோ கண்மூடி திறப்பது போல் நாள் ஓடிவிட்டது. வெள்ளிக்கிழமை அவரும் புறப்பட்டு விடுவார். பிறகு வலையுலக மக்கள்ஸ் தான் என் மக்கள்ஸ். நன் மக்கள்ஸ். ஒரு பிரிவில் சோகமென்றால், உங்களோடு அளவளாவி நேரம் செலவிடுவதில்
தனி மகிழ்ச்சிஸ் தானே!..... என்னான்றீங்க!!
இதுல ஒரு குரூப் வேற நம்மை வேவு பாக்குதுங்க. நான் யூத்தா யூத்தில்லையா என்பதை கண்டுபிடிக்க!! அதுவும் எப்படி தெரியுமா??
என் 'மகர்' என்ன படிக்கிறார்னு நான் சொல்லணுமாம்!! அத வச்சு
அவங்க என் வயசை கண்டுபிடிக்கிறாங்களாம். ங்.. ங்கொய்யா.
நாமெல்லாம் அலாஸ்கா யுனிவர்சிட்டில அரிஸ்டாடிலப் பத்தி
எத்தன மொற படிச்சிருக்கோம்... சொல்வேனா.. சொல்வேனா..!!
தமிழ்மணத்தில் ஒத்தை அவார்ட், ரெட்டை அவார்ட்ஸ், முத்தான அவார்ட்ஸ் பெற்ற நம் அனைத்து மக்கள்ஸுக்கும் எனது
வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
படித்ததை கற்றதை கேட்டதை எல்லாம் நினைவு படுத்தி
இன்னும் நிறைய எழுதி ‘ஆஸ்கர்’ வரை போய் வர வேண்டு
கிறேன். என்னது?? எழுத்துக்கு ஆஸ்கரெல்லாம் கிடையாதா?
பின்னே..?? இந்த ஆஸ்கர் ஆஸ்கர்ங்கறாங்களே அப்படின்னா
இன்னா சார்?? இசையைப் பத்தி எழுதுறவங்களுக்கும், படமெடுத்து
நம்மை ஓட விடுறவங்களுக்கு மட்டும் தான் ஆஸ்கரா??
எழுத்தாளர்களைக் கொண்டு தான் படமும், அவர்கள் எழுதும்
கற்பனை காட்சிகளுக்கு ஏற்பதான் பாடல்களும், இசையும்,
அவைகளோடு ஒன்றிணைகின்றன. ஆகவே நிறைய நிறையவே
சிந்தித்து எழுதும் எழுத்தாளர்களைப் பற்றியும் பரிசீலிக்கும்படி
ஆஸ்கர் கமிட்டிக்கு இதன் மூலம் பரிந்துரைக்கிறேன். ஙே...ஙே..??
ஏதோ நம்மால முடிஞ்சது. வர்ட்ட்ட்டா...!!
படங்கள்ஸ் : நன்றிஸ்!! அரப் நியூஸ், கூகிள்ஸ்.
லேபிள்கள்:
ஆஸ்கர் அவார்ட்ஸ்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




