சவுதியில் சாலை விதிகள்!!
வாகன ஓட்டிகளே எச்சரிக்கை !!
சவுதி அரேபியாவில் நாள்தோறும் அதிகரித்து வரும் வாகன
விபத்துகளை கட்டுப் படுத்த தானியங்கி முறையில் செயல்படும் கேமராக்களை சாலைகளில் சவுதி அரசாங்கம் நிறுவியுள்ளது.
இந்த கேமராக்கள் சவுதி அரேபியாவில் உள்ள உள்துறை
அமைச்சகத்தில் கீழ் இயங்கும் தேசிய தகவல் மையத்துடன்
இணைந்து செயல் பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் பெயர்
தான் ‘ஸாஹர்’ (SAHER) http://www.saher.gov.sa/e_Default.aspx
கடந்த ஆண்டு தலை நகர் ரியாதில் நிறுவி வெற்றிகரமாக செயல்படுவதைத் தொடர்ந்து தற்போது கிழக்கு மாகாணம்
'தம்மாம்' மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்களிலும் செயல்படத் தொடங்கியுள்ளது.
சவுதி அரசாங்கத்தின் புள்ளி விபரப்படி:
* ஒவ்வொரு ஒன்றரை மணி நேரத்திற்கு ஒருவர் வாகன
விபத்தில் உயிரிழக்கிறார்.
* சராசரியாக 18 பேர் அன்றாடம் மரணிக்கிறார்கள்.
* ஒவ்வொரு 15 நிமிடத்திற்கு ஒருவர் விபத்தின் மூலம்
ஊனமடைகிறார்கள்.
* 2009 ஆம் ஆண்டு மட்டும் 485931 விபத்துகள் பதிவாகியுள்ளன.
விபத்துக்கான காரணத்தை ஆராய்ந்தபோது 60% விபத்துகள் முரட்டுத்தனமாக வாகனங்களை ஒட்டியதாலும், 30% சிகப்பு
விளக்கின் போது நிறுத்தாமல் போனதாலும், 8% அங்கீகரிக்கப்
படாத வளைவுகளாலும் ஏற்பட்டது. என அறிக்கை கூறுகிறது.
மேலும், நிர்ணயிக்கப் பட்ட வேகத்தை விட கூடுதலான வேகம், முன்னறிவிப்பின்றி திடீரென்று நிறுத்துதல், மொபைலில் பேசிக்
கொண்டே வாகனம் ஒட்டுதல் போன்றவையே முக்கிய காரணங்-
களாகவும் புள்ளி விபரக் கணக்கு நமக்கு தெரிவிக்கின்றது.
பெற்றோர், மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்களை பிரிந்து பொருளாதாரம் தேடி நாம் இங்கு வந்திருக்கின்றோம். பொருளா-
தாரத்தை தேடி வந்த நம் மக்களில் எத்தனை பேர் இதே வாகன
விபத்தில் உயிரிழந்திருக்கிறார்கள் ? எவ்வளவு பேர் ஊனமுற்றி- ருக்கிறார்கள்? நம்மையே நினைத்துக் கொண்டிருக்கும் அவர்களை
நாமும் நினைக்க வேண்டாமா?
இந்த நிலை மாற வேண்டுமானால் வாகனம் ஓட்டும் ஒவ்வொரு-
வரும் நிதானம் கடைபிடிக்க வேண்டும். அதன் மூலமே விபத்துக்
களை குறைக்க முடியும். எனவே, நாம் அனைவரும் தற்போது
நிறுவப் பட்டிருக்கின்ற ‘ஸாஹர்’. திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு
அளிக்க வேண்டும். அதன் விதிமுறைகளை மதிக்க வேண்டும்.
அதற்கு முன் 'ஸாஹர்' பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ள
வேண்டும்.
‘ஸாஹர்’ என்பது உயர்தொழில் நுட்பங்களை கொண்ட தானியங்கி கேமராக்களின் மூலம் சாலைக் கட்டுப்பாடுகளை செய்கின்ற முறையாகும். வாகன நெருக்கடிகள், விபத்துகள், சிக்னல் விளக்குகளை மீறுதல், தடம் மாற்றி மாற்றி ஒட்டுதல், சாலைகளில் ஓரங்களில் ஒட்டுதல் போன்றவைகளை குறிப்பாக அறிந்து அதனை புகைப்படம் எடுக்கும் ஆற்றல் கொண்டது.
ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட டிராக்குகளில் வாகன ஓட்டிகள் தவறு செய்யும் போது, ஒரே நேரத்தில் அவைகளை படம் பிடிக்கும் வண்ணம் அமைக்கப் பட்டுள்ளது. எவ்வளவு வேகமாக சென்றாலும், வாகனத்தின் எண்கள் உள்பட தெளிவாக படம் பிடிக்கும் உயர் தொழில் நுட்பம் கொண்ட கேமராக்கள் பயன்படுத்தப் படுகின்றன.
இந்த புகைப்படங்கள் உடனயாக தானியங்கி முறையில் தகவல் மையத்திற்கு தெரிவிக்கின்றன. அவை தேசிய தகவல் மையத்தின் ஆவணங்கள் மூலம் குறிப்பிட்ட வாகன ஒட்டிக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அவை ஃபேக்ஸ் மற்றும் எஸ் எம் எஸ் மூலம்
அவருக்கு தெரியப்படுத்துகின்றது.
அபராதத்தை ஒரு மாதத்திற்குள் செலுத்தாவிட்டால் அபராதம்
அதன் மடங்குகளாகப் பெருகும் அபாயம் இருப்பதால், உடனடியாக அபராதத்தை செலுத்துவது புத்திசாலித் தனமாகும். எனவே
மொபைல் எண், ஈ-மெயில் முகவரிகளை மாற்றக் கூடியவர்கள் அவ்வப்போது தங்களது தகவல்களை அருகிலுள்ள அருகிலுள்ள போக்குவரத்து தகவல் மையத்தில் தெரிவிப்பதன் மூலம்
தங்களுக்கு அபராதம் விதிப்பதை உடனடியாக அறிந்து
கொள்ளலாம்.
மேலும், இத்திட்டத்தின் மூலம் வாகனங்கள் எந்தெந்த பகுதிக்கு சென்றிருக்கின்றன, எங்கு இருக்கின்றன போன்ற விபரங்களையும் கூடுதலாக அறிய முடியும். இதன் மூலம் வாகனங்களின் திருட்டை குறைக்க முடியும் என எதிர்பார்க்கப் படுகிறது.
அதே போல சாலை விதிமுறைகளை மீறும் வாகனங்கள் யாரின்
பேரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ அவருக்கே அபராதம்
விதிக்கப் படுவதால், வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றவர்கள் ஓட்டுவதற்கு தங்களின் வாகனங்களை கொடுப்பதை தவிர்க்க
வேண்டும்.
தங்களுக்கு அபராதம் விதிக்கப் பட்டிருக்கிறதா என்பதை பின்வரும் முறையில் தேய்ந்து கொள்ளலாம்.
* 01 - 2928888 என்ற தொலைபேசி எண்ணுக்கு பேசுவதன் மூலம்.
* சவுதி உள்துறை அமைச்சகத்தின் இணைய தளத்திற்கு செல்வதன் மூலம்.www.moi.gov.sa/wps/portal
= *56* இக்காமா நம்பர் என்ற (ex : *56*1234567890) என்ற நம்பரை
கீழ்க்கண்ட நம்பர்களுக்கு எஸ் எம் எஸ் செய்வதன் மூலம் :
= STC - 88993
= MOBILY - 625555
அபராதத்தை அவ்வப்போது அறிந்து அதை சரி செய்வதன் மூலம் அபராதம் இரட்டிப்பாவதை தவிர்க்கலாம்.
உலகெங்கிலும் சாலை விதிகளை கடைபிடிப்போம்.
விபத்துக்களை தவிர்ப்போம்.
**************************************************************************************************
மேலும் தகவல்களுக்கு :
இந்திய பிரடெர்னிடி ஃபோரம் தம்மாம் (வெளிநாடு வாழ் இந்தியர்-
களுக்காக பாடுபடும் தன்னார்வ தொண்டு அமைப்பு)
உங்களது பிரச்சினைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு தொடர்பு
கொள்ள :
தம்மாம் : 0535791233, அல்கோபர் : 0546087261, சிஹாத் : 0509027345
ஜூபைல் : 0569304589.
Email : iff.dammam.tamil@gmail.com
32 கருத்துகள்:
சவூதியில இப்பத்தான் இந்தக் கேமராக்கள் வருதா? அமீரக்த்துல பலகாலமா வெற்றிகரமா இயங்கிகிட்டிருக்கு. எந்தளவுக்குன்னா, நிரந்தர கேமராக்கள் எங்கெங்கே இருக்கோ அங்கே மட்டும் பிரேக்கை அழுத்திச் செல்லப் பழகிவிட்ட அளவுக்கு!! எனினும், சர்ப்ரைஸ் கேமராக்கள் அதிகம் உண்டு என்பதால், கவனமும் இருக்கும்.
சவுதியில் எல்லாமே கொஞ்சம் லேட்டு தான் ஹுசைனம்மா!!
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
இங்க எந்த இம்ப்ரூவ்மெண்ட்டும் தெரியல, அதெல்லாம் மொதல்ல மனுசங்க கிட்ட வரனும்.... பார்ப்போம்...
அட நான் சொல்ல வந்ததை ஹுஸைனம்மாவே சொல்லிட்டாங்க .. :))
இது தவிர காருக்குள்ளேயே ரகசியமா வைத்து பிடிக்கும் அளவுக்கு எமிரேட்ஸ் முன்னேரிட்டுது.. இது இல்லாம் செடிகளுக்கு நடுவில வைச்சும் காசு பிடிங்கிகிட்டு இருக்காங்க ..
இதெல்லாம் இங்கே 10 வருஷ பழைய டெக்னிக் அங்கே இப்பதான் தலைய காட்டுதா ஹி..ஹி...
அன்புடையீர்,
தங்கள் பதிவிற்கு தொடர்பில்லாத மறுமொழி என்று தயவு செய்து இதை நீக்கிவிடாதீர்கள்.
சுட்டியை சொடுக்கி படிக்கவும்.
==>இந்துக்களே! விழிமின்! எழுமின்! 7. காம சூத்திரம். நிர்வாண சாமியார்கள். பிணந்திண்ணி சாமியார்கள். புனித கங்கையில் காலைக்கூட நனைக்க மனம் வரவில்லை. <==
.
அங்கு நடக்கும் விஷயங்களை தெரிந்து கொண்டோம். Safe driving - எல்லோருக்கும் நல்லதுதானே.... அதுவும், வெளிநாட்டில் வந்து விட்டு , விபத்தில் சிக்கி கொண்டு கனவுகளை தொலைப்பது எப்படி இருக்கும் என்று சமீபத்தில் தோழிகளுக்கு நேர்ந்த விபத்தின் போது நன்றாகவே புரிந்து கொண்டேன்.
அங்கேயும் இந்த காமரா இம்சை வந்திடுச்சா?? பார்த்து கார் ஓட்டுங்க, நாட்டாமை. அமெரிக்காவில் அதை cash cow என்பார்கள். எல்லோரும் கொஞ்சம் நிதானமா வண்டி ஓட்டுறது ஆறுதல்.
எங்க ஊர்ல இந்த கவலையே இல்லை.. ஹி..ஹி.. உள்குத்து எதுவும் இல்ல
நியூட்டனின் 3ம் விதி
எனக்கு மிகவும் ஆச்சரியமாய் இருக்கிறது சவூதி அரேபியாவில் இத்தனை தாமதமாக இந்த வசதிகள் வந்திருப்பதற்கு!
இருபத்தைந்து வருடங்கள் முன்பாகவே இந்த மாதிரி விதிமுறைகள் அமீரகத்தில் நிறையவே வந்து விட்டன! அந்த சமயத்தில், என் கணவர் காரை நிறுத்தியதும் சக்கரங்கள் நேராக இருக்கின்றனவா அல்லது வளைந்து நிற்கின்றனவா என்று பார்த்து விட்டுத்தான் காரையே பூட்டிச் செல்வார்கள்.அப்படி சக்கரங்கள் வளைந்து நின்றால் போலீஸ்காரர் சக்கரத்தோடு பூட்டு போட்டு பூட்டிச்சென்று விடுவார். அப்புறம் நாம்தான் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று அபராதம் செலுத்தி, பிறகு அவர்கள் காரை நிறுத்தியுள்ள இடத்திற்கு வந்து பூட்டைத் திறந்து விடுவார்கள்! இது ஒரு சாம்பிள்தான்!
சகோ.இங்கே ஒரு சிலர் பைன் கட்டுவதை பார்க்கும் பொழுது நம் ஊரில் அந்த பைன்க்கு ஒரு நல்ல புது காரே வாங்கிடலாம்.அங்கு வீட்டு வாடகை எப்படி என்பதை எழுதுங்க,இங்கே யு.ஏ.யில் accomadation அள்ளிட்டு போகுது,ஆஃபிஸில் accomadation தந்தால் தான் தப்பித்தோம்.
அங்கேயும் இப்படித்தானா...
மிகவும் அக்கரையான இடுகை ஆனால், இப்பதான் கேமராக்கள் அங்கு வந்துள்ளது என்பது ஆச்ச்சரியமான விஷியமே
இப்பதான் வந்திருக்கா.. இப்பத்தான் வந்திருக்கான்னு ஒவ்வொருத்தரும் கேட்கும் போதுதான் தெரியுது. இன்னுமா இந்த மக்கள் சவுதியை நம்புறாங்கன்னு.
அப்ப நீங்களாத்தான் வாயக்கொடுத்து மாட்டிகிட்டிங்க போல. இப்ப பாருங்க சவுதி 25 வருஷம் பின்னோக்கி இருக்குன்னு எல்லோரும் சொல்லிட்டாங்க :)
சரி விடுங்க.
அப்புறம் இது சம்பந்தமா நானும் ஒரு பதிவு எழுதனும்னு நினைச்சேன். நீங்களே நல்ல விளக்கமா சொல்லிட்டிங்க.
நம்ம நாட்டுக்காரர்களை விட சவுதிகளுக்குத்தான் இந்த கட்டுப்பாடுகள் கட்டாயம் தேவை. காட்டுத்தனமா வண்டி ஓட்டுறாங்க.
ரியாத்துல நண்பர் ஒருவர் 540 ரியால் தண்டம் கட்டி விட்டு கேமராவ மரச்சு வச்சு காசு புடுங்கிறாய்ங்க அப்புடியின்னு இரண்டு நாட்களுக்கு முன் புலம்பியது நினைவுக்கு வருகிறது
@!@ பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது
// இங்க எந்த இம்ப்ரூவ் மெண்ட்டும் தெரியல, அதெல்லாம் மொதல்ல மனுசங்க கிட்ட வரனும்.... பார்ப்போம்//
வந்தாலும் ஊர் மாதிரி குடும்ப பிக்கள் புடுங்கல் போகத் தானே!!! மிச்ச மிருக்குமா??
நன்றி பன்னி சார் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ ஜெய்லானி கூறியது...
// அட நான் சொல்ல வந்ததை ஹுஸைனம்மாவே சொல்லிட் டாங்க .. :)) //
அட அவங்க சொல்றது இருக்கட்டும். நீங்க என்ன சொல்ல வர்றீங்க அத சொல்லுங்க மொதல்ல!! ஹி..ஹி..
நன்றி பாஸ் சார் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
சவுதியில் இருக்கும் சில அரபிகள் கொஞ்சம் காட்டுமிரண்டிதனமாகதான் இருப்பார்கள் அதை போலதான் காரும் ஓட்டுவார்கள் என்று கேள்விபட்டு இருக்கிறேன் அங்கே இருப்பவர்களுக்கு லேட்டாக வந்தாலும் இந்த சட்டம் தேவைதான்...!!!எங்கும் சாலை விதிகளை பின்பற்றினால் அவங்கவங்களுக்குதான் நல்லது இது யாருக்கு புரியுது
@!@ ஜெய்லானி கூறியது...
// இது தவிர காருக்குள்ளேயே ரகசியமா வைத்து பிடிக்கும் அளவுக்கு எமிரேட்ஸ் முன்னேரிட்டுது.. இது இல்லாம் செடிகளுக்கு நடுவில வைச்சும் காசு பிடிங்கிகிட்டு இருக்காங்க.. //
அதையெல்லாம் விடுங்க பாஸ். எமிரேட்சை பார்த்து பார்த்து தானே இங்கும் ஒன்னொன்னா செய்துகிட்டு வர்றாங்க. முன்பே ஒரு பதிவில் இதைப் பற்றி நான் குறிப்பிட்டி ருந்தேனே. இப்ப தான் பிளாட் ஃபாரத்தில் காரை நிறுத்தவே இடம் விட்டு கட்டி பில்லு போட்டுக் கிட்டிருக்காங்க. அதை விட கொடுமை இக்காமா சிறிய டெல்லெர் கார்ட் அளவுக்கு வர ஆரம்பித்ததே ரெண்டு வருடத்துக்கு முன்பு தானே. அதுவும் 'வேர்ல்ட் டிரேடில்' சேரனும் என்று இவர்கள் ஆசைபட்டதற்கு அமெரிக்கா கொடுத்த லிஸ்டில் இப்படி இப்படியெல்லாம் இருக்கணும் என்று சொன்னதால் தான் இது கூட நடந்தது. ஏன் அந்த அளவுக்கு போறீங்க. அங்க வேலை பார்ப்ப வர்களின் பாஸ்போர்ட் அவரவர்களின் கையில் வைத்திருப்பதாக பார்த்தி ருக்கிறேன் கேள்வியும் பட்டிருக் கிறேன். இங்க ஊரிலிருந்து வந்தவுடன் பிடுங்கி வைப்பது ஊர் போகும்போது தான் கண்ணில் காட்டுவார்கள். இதுவா முன்னேற்றம்!! இன்னும் பத்தி பத்தியை சொல்லிக் கொண்டே போகலாம் இங்குள்ள முன்னேற்றத்தை!! நீங்க இருந்து பார்த்த ஊர் தானே உங்களுக்கு தெரியாதா என்ன??
நன்றி பாஸ் சார் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ ஜெய்லானி கூறியது...
// இதெல்லாம் இங்கே 10 வருஷ பழைய டெக்னிக் அங்கே இப்பதான் தலைய காட்டுதா ஹி..ஹி...//
அப்படீன்னா கழுத உழவுக்குப் போனாலும், சவுதி நேருக்கு வராதுன்னு சொல்றீங்களா பாஸ் சார் ஹி..ஹி..
நன்றி ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ tamilan கூறியது...
// அன்புடையீர், தங்கள் பதிவிற்கு தொடர்பில்லாத மறுமொழி என்று தயவு செய்து இதை நீக்கி விடாதீர்கள் //
இல்ல படிக்கிறேன்!!
நன்றி உங்கள் வருகைக்கு.
@!@ Chitra கூறியது...
// அங்கு நடக்கும் விஷயங்களை தெரிந்து நன்றாகவே புரிந்து கொண்டேன்.. Safe driving - எல்லோருக்கும் நல்லதுதானே.... //
வாங்க டீச்சர். ஆமாம் உங்கள் தோழிகளுக்கு நடந்த விபத்துகள் மறக்க முடியாதது தான். ஆனாலும் மறக்கணும்.
நன்றி சித்ரா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ vanathy கூறியது...
// அங்கேயும் இந்த காமரா இம்சை வந்திடுச்சா?? பார்த்து கார் ஓட்டுங்க, நாட்டாமை. அமெரிக்காவில் அதை cash cow என்பார்கள். எல்லோரும் கொஞ்சம் நிதானமா வண்டி ஓட்டுறது ஆறுதல்.//
எங்க அப்படி நிதானமா ஓட்டுறாங்க. ஏதோ மறந்து தவறவிட்டு வந்த பொருளை எடுக்க போறது மாதிரி தானே தலை தெறிக்க அவசரமா ஓட்டுறாங்க. இதில 'கிரீச்'சுன்னு சத்ததோட ஒட்டுனா தான் ஏதோ சாகசம் செய்வது போல் வேறு நினைக்கிறாங்க வான்ஸ்.
நன்றி வானதி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ கவிதை காதலன் கூறியது...
// எங்க ஊர்ல இந்த கவலையே இல்லை.. ஹி..ஹி.. உள்குத்து எதுவும் இல்ல//
உண்மைதான். எதுவுமே இல்லாம லிருந்து விட்டால், கவலையே தெரியப் போவதில்லை தான் நண்பரே!!
நன்றி கவிதை காதலன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
இந்தியாவுக்கு இந்த வசதி வந்தால் நல்லது.
வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்
கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். சீனா பதிலளிக்க காத்திருக்கிறார். மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.
//சிநேகிதன் அக்பர் கூறியது...
இப்பதான் வந்திருக்கா.. இப்பத்தான் வந்திருக்கான்னு ஒவ்வொருத்தரும் கேட்கும் போதுதான் தெரியுது. இன்னுமா இந்த மக்கள் சவுதியை நம்புறாங்கன்னு//
ஆஹா.. அக்பர்.. ரொம்ப ஃபீலிங்ஸாகிட்டீங்க போல. அமீரகத்துல வந்தா என்ன, சவூதியில வராட்டி என்ன, நம்ம இந்தியாவுல இந்த மாதிரித் திட்டங்கள் இன்னும் பல வருஷங்களுக்கு வர்ற மாதிரியான சுவடே இல்லியே? நம்ம ஊர்ல இதெல்லாம் வந்தாத்தான் நமக்கு பெருமை, பாதுகாப்பு. மத்ததெல்லாம் ச்சும்ம்மா..
ஆனாலும், சவூதியில இருக்க நீங்கள்லாம் அமீரகத்துல இருக்க எங்களை விட நிறைய விஷ்யங்களில் கொடுத்து வச்சவங்க. தீ போல சுடும் வாடகை, விண்ணை முட்டும் விலைவாசி, இவைபோக, சம்பாதிக்கும் காசில் மிச்சமிருப்பதை இங்கேயே செலவழிக்க வைக்கும் கேளிக்கைகள் - இதெல்லாம் அங்கே இல்லையே?
இன்னும் நவீன மருத்துவ வசதிகள் அமீரகத்தைவிட சவூதியில்தானே அதிகம்? ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் பிரிக்கும் பல சிகிச்சைகள் அங்குதானே வெற்றிகரமாக நடந்துள்ளன?
//வேர்ல்ட் டிரேடில்' சேரனும் என்று இவர்கள் ஆசைபட்டதற்கு அமெரிக்கா கொடுத்த லிஸ்டில் இப்படி இப்படியெல்லாம் இருக்கணும்//
ஏன் காதர், அப்ப இந்தியா இந்த டிரேடில் இன்னும் இல்லையா? ஆச்சர்யமாருக்கே!!
@!@ மனோ சாமிநாதன் சொன்னது…
// எனக்கு மிகவும் ஆச்சரியமாய் இருக்கிறது சவூதி அரேபியாவில் இத்தனை தாமதமாக இந்த வசதிகள் வந்திருப்பதற்கு!//
கொஞ்சம் தாமதமாய் நிறையவே மாற்றங்கள் வந்தாலும், அதைவிட, விலைவாசியும் கையூட்டும் கடந்த இரண்டு வருடங்களாக குபீரென்று இங்கே எகிற ஆரம்பித்து விட்டது தான் மலைப்பாக இருக்கு சகோ.
நன்றி மனோ சாமிநாதன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
ஹுசைனம்மா சொன்னது…
// ஆஹா.. அக்பர்.. ரொம்ப ஃபீலிங்ஸாகிட்டீங்க போல. அமீரகத் துல வந்தா என்ன, சவூதியில வராட்டி என்ன, நம்ம இந்தியாவுல இந்த மாதிரித் திட்டங்கள் இன்னும் பல வருஷங்களுக்கு வர்ற மாதிரி யான சுவடே இல்லியே? நம்ம ஊர்ல இதெல்லாம் வந்தாத்தான் நமக்கு பெருமை, பாதுகாப்பு. மத்ததெல்லாம் ச்சும்ம்மா..//
அமீரகத்தில் இருந்தாலும், இந்தியா வை நினைத்து நீங்கள் கவலைப் படுவது பெருமையாய் இருக்கு ஹுசைனம்மா. என்றைக்கு அமெரிக்கா 'பச்சை அட்டை' கொடுத்து நமது அரசியல் சொந்தங் களை அவர்களின் நாட்டுடைமை யாக்கி அரவணைத்துக் கொண்டார் களோ அப்பவே நமது எதிர்கால கனவுகளும் முன்னேற்றங்களும் அடகு வைக்கப்பட்டு விட்டது என்று தானே அர்த்தம். பிறகு நமக்கு பெருமையும், பாதுகாப்பும் (நம்மை நாமே பெருமையா பேசிக்கொண்டும், நமக்கு நாமே பாதுகாப்பாவும் இருந்தாலே ஒழிய) எங்கிருந்து வரும்.
நன்றி ஹுசைனம்மா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ ஹுசைனம்மா சொன்னது…
//ஆனாலும், சவூதியில இருக்க நீங்கள்லாம் அமீரகத்துல இருக்க எங்களை விட நிறைய விஷ்யங் களில் கொடுத்து வச்சவங்க. தீ போல சுடும் வாடகை, விண்ணை முட்டும் விலைவாசி, இவைபோக, சம்பாதி க்கும் காசில் மிச்சமிருப்பதை இங்கேயே செலவழிக்க வைக்கும் கேளிக்கைகள் - இதெல்லாம் அங்கே இல்லையே? //
(1)தீ போல சுடும் வாடகை= இப்ப தான் அதை நெருங்கி வந்துக்கிட்டிருக்கு!!
(2) விண்ணை முட்டும் விலைவாசி == அது ரெண்டு வருஷமாச்சு விண்ணை தாண்டி
(3) சம்பாதிக்கும் காசில் மிச்சமிருப் பதை இங்கேயே செலவழிக்க வைக்கும் கேளிக்கைகள் =
= அது மட்டும் தான் இல்லாம லிருந்தது, இப்பவும் யாரோ ஒரு நல்ல உள்ளம் படைத்த அமைச்சர் அந்த கேளிக்கை தியேட்டர் கட்ட மன்னரிடம் அனுமதி கேட்டிருப்பதாக செவி வழி செய்திகள் கசிகின்றன. ஆக, சவுதியும் அமீரகத்துக்கு இணை யாய் எல்லாவிதத்திலும் நெருங்கும் நாள் வெகு தூரத்திலில்லை.
நன்றி ஹுசைனம்மா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
அருமையான உபயோகமான பதிவு மக்கா....
@!@ மனோ சாமிநாதன் சொன்னது…
// எனக்கு மிகவும் ஆச்சரியமாய் இருக்கிறது சவூதி அரேபியாவில் இத்தனை தாமதமாக இந்த வசதிகள் வந்திருப்பதற்கு! //
உண்மை தான் சகோதரி! ஆனால் இருக்கும் வரை கிடைப்பதை பயன்படுத்திக்க வேண்டிய நிலை இங்கே! எல்லாமே அமீரகத்தைப் பார்த்து தான் கொஞ்சம் கொஞ்சமாக இங்கேயும் வருகிறது.
நன்றி மனோ சாமிநாதன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@ வாங்க அக்பர் நன்றி!
@ வாங்க ஹைதர் அலி நன்றி!
@ வாங்க தம்பி Nahasi நன்றி!
@ வாங்க தமிழ்வாசி - பிரகாஷ் முதல் வருகைக்கு நன்றி!
@ வாங்க MANO நாஞ்சில் மனோ நன்றி!
@ வாங்க ஆசியா உமர் நன்றி!
@ வாங்க Philosophy Prabhakaran நன்றி!
@ வாங்க சிநேகிதன் அக்பர் நன்றி!
கருத்துரையிடுக