facebook

சனி, நவம்பர் 26, 2011

ஹைப்பர் கொள்ளைகள்!!

பத்து நாள் வலைப்பூ பக்கம் வாராமல் போனால் "காணவில்லை" போர்டு 
மாட்டிடுராங்கைய்யா...!! மீ... நடந்தாலும் கடல் மேல் தான் நடந்துக் கொண்டிருப்பேன். அவ்வ்வ்வ்...


 
கல்யாணம் முடிந்தும் பேச்சிலர்ஸாக சமைத்துக் கொண்டிருந்த காலத்தில், இங்குள்ள மினி மார்கெட்களில் தான் பொருட்கள்களை வாங்குவோம். அப்பொழுதெல்லாம் குறைந்தபட்சமாக 25-லிருந்து 50- ரியால்கள் வரை வாங்கினால், ராஃபில் டிக்கட் ஒன்று தருவார்கள். மாதக் கடைசியில் பரிசு விழும் நம்பருக்கு, அவர்கள் பக்கத்திலேயே திறந்து வைத்திருக்கும் புடவைக் கடையில் ஒரு புடவை எடுத்துக் கொள்ளலாம். புடவையின் மதிப்பு சுமாராக ஐம்பது ரியாலுக்கு குறையாமல் இருக்கும். நல்ல டிசைனில், விலை அதிகமுள்ள புடவை வேணுமென்றால் நாம் மேற்கொண்டு பணம் கொடுக்க வேண்டும். மாதா மாதம் நண்பர்கள் நாங்கள் ஆளுக்கொன்று என்று கணக்கு வைத்து எடுத்துக் கொள்வோம்.

இது மாதம் முழுக்க (கிட்டத்தட்ட அறுநூறு ரியாலுக்கு மேல்) நாம் பணம் கொடுத்து வாங்கும் பொருட்களுக்கு, நம்மிடமே வாங்கிய பணத்தை, இப்படி புடவை என்ற பெயரில் அட்ராக்ஸனாக திருப்பி தந்து விடுவது. கஸ்டமர் களை கட்டிப் போடும் டெக்னிக்கும் இதுதான்! இதை எவ்வளவோ மேல் என்று இப்ப கூட ஒப்புக் கொள்ளலாம். ஆனால் -

இப்பொழுது புற்றீசல்கள் போல் தெருவுக்குத் தெரு பல ஹைப்பர் மார்க்கெட்கள் நம்மை எப்படி எல்லாம் கவர்ந்து கொள்ளையடிக்கின்றன என்றால் வாரா வாரம் ஆஃபர் மழை என்ற பெயரில் தான்.

கட்டுகட்டாய் புக்லெட்டுகளை எல்லா இடங்களிலும் கொண்டு வந்து வீசிவிட்டு போவார்கள். எப்படி என்றால் சாதரணமாக மினி மார்கெட்களில் வாங்கும் ஒரு பொருளின் விலையை ஐந்து ரியாலிலிருந்து பத்து ரியால்கள் வரை குறைத்துப் போட்டு நம் மனதில் சலனமேற்ப் படுத்து வார்கள். சரி, சலனமேற்ப்படுத்திய மனதை சமாதனப் படுத்தலாம் என்று நம் பர்சை தொட்டுப் பார்த்துக் கொண்டு அங்கே போனால், அந்த பிரமாண்டமான மார்க்கெட்களின் வாசல்களில் வகைக்கு ஒன்றாக அப்பொழுது தான் புதிதாக இறங்கிய கார்களின் அணிவகுப்பை நிறுத்தி வைத்து இருப்பார்கள். மனம் இப்ப ஒருவகை உவகைக் கொண்டு உள்ளே நுழைய அடியெடுத்து வைப்போம்.

சரி......

உள்ளே போயாச்சா?.....

போயாச்சு!!

இனிமேல் தான் நமக்கு கவனமோ கவனம் ரொம்ப தேவை. மறந்து விடாமல் அவர்கள் ஆஃபர் போட்டிருக்கும் ஒரு புக் லெட்டை நம் கையில் வைத்திருப்பது உத்தமம்.

நீங்கள் விருப்பப்பட்ட பொருட்களை எடுக்கும் போது செல்ஃபில் அதன் விலையையும், புக் லெட்டில் போட்டிருக்கும் விலையோடு ஒப்பிட்டு சரி பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் ஒவ்வொரு பொருளுக்கும் அதன் மேல் விலை குறிக்கப் பட்டு இருக்காது. தோராயமாக ஒரு பொருளுக்கும் இன்னொரு பொருளுக்கும் இடையே செல்ஃபிலேயே விலை குறிக்கப்பட்டு இருக்கும். இது தான் ஹைப்பர் மார்கெட்களின் ட்ரிக். ஆஃபரில் மதிமயங்கி எல்லா பொருட்களின் விலையுமே குறைவாகத் தானிருக்கும் அள்ளிக் கொண்டு போவர் பலர். அவர்களை உஷார் படுத்தவே இந்தப் பதிவு!!

விலை குறைக்கப்பட்ட ஒரு பொருளை வைத்துக் கொண்டு, பத்துப் பொருட்களில் பலமடங்கு விலை ஏற்றி வைத்திருப்பார்கள். மனதில் பட்டதை எல்லாம் ட்ராலியில் அள்ளிப் போட்டுக் கொண்டு, கவுண்டரில் போய் நின்றால், பார்கோடு நம்பரை வைத்து க்ளிக்கி கிடுகிடுவென்று சிலிப்பை கிழித்து கையில் கொடுத்து, பணத்தை வாங்கிக் கொண்டு நம்மை அங்கிருத்து நகர்த்தத்தான் பார்ப்பார்கள். அங்கே நின்று கொண்டு நாம் எடுத்த பொருளையும் விலையையும் சரி பார்த்துக் கொண்டிக்க முடியாது. கூட்டம் முட்டித் தள்ளும்.

கவனமாய் பொருட்களை தேடி எடுத்தாலும், இந்த கேஷியர் கவுண்டரில் பணம் கொடுக்கும் போது தான் ரொம்ப உஷாராய் இருக்கணும்.

சில நேரங்களில் சில ஹைப்பர் மார்க்கெட்களில் ஆஃபர் போட்ட விலையை கேஷியர் டேட்டாவில் என்ட்ரி செய்யாமல் வைத்திருப் பார்கள். நீங்கள் எடுத்த (ஆஃபர்) பொருளின் விலையை பார்கோடை வைத்து அடிக்கும் போது பழைய கூடுதல் விலையே பிரிண்ட் ஆகும் அபாயமும் இருக்கு! இப்படி தான் சென்ற வாரம் நான் வாங்கிய ஷாம்பூவில் கேஷியர் கவுண்டரில் விலை அதிகமாக ப்ரிண்டாகி வந்தது. கேட்டால் "அது வேறு நமுனா- (BRAND), இது வேறு நமுனா" என்கிறான். ரெண்டும் ஒன்று தான் என்று ஆஃபர் லீப்லெட்டை காட்டிய போது, ஏதேதோ சொல்லி நம்மை சமாளிக்கப் பார்க்கிறான். (நம்ம கிட்டேயேவா??) வேணாம் என்று அதை கேன்சல் செய்வதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.

இதெல்லாம் ஒரு கண்கட்டு வித்தை மாதிரியே இப்பல்லாம் எல்லா இடங்களிலும் நடக்கிறது. கேட்பதற்கு வெட்கப்பட்டுக் கொண்டு சிலபேரும், மொழி தெரியாமல் எப்படி கேட்பது என்று பலபேரும், வாய் பேசாமல் அப்படியே வாங்கிச் செல்வதை பார்க்க முடிகிறது.

இறுதியாக -

இந்த மாதிரி ஹைப்பர்களில் இரண்டு வாரத்திற்க்கு ஒருமுறை ஆஃபர் போடுவதையே வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் போகும் போது ஆஃபர் போட்டிருக்கும் பாதி பொருட்களுக்கு மேல் அங்கே இருக்காது. கேட்டால் "விற்று தீர்ந்து போச்சு" என்பார்கள். ஆஃபர் போட்ட அன்றே போனால் கூட இதே கதை தான். ஏனெனில்  நீங்கள் விரும்பி வாங்கும் அந்த பொருட்களை அவர்கள் அங்கே வைப்பதே இல்லை. வெறுமனே புக்லெட்டில் மட்டும் தான் ஆஃபர் என்று பெயருக்கு இருக்கும். காரணம் உங்களை மால்களுக்கு வரவழைக்கவே! வந்தது தான் வந்தோம் வெறுமனே கைவீசிக் கொண்டு போக வேணாம் வேறு ஏதாவது வாங்கிக் கொண்டு போவோம்  என்ற உங்களின் நாடி துடிப்பு தான் அவர்கள் கையில்!

முடிவாக –

பணத்தை கொடுத்துக் கொண்டிருக்கும்போது, நாம் வாங்கிய பொருளை பையில் எடுத்துப் போட்டு, நம் கையில் கொடுக்கும் இந்தியர் ஒருவர் சொல்கிறார். "இங்கே எல்லாமே கோல்மால் வேலை தான் நடக்கிறது பய்யா(சகோதரா), நேற்று பம்பர் பரிசுக்காக பெட்டியில் போட்ட சீட்டுக் களை, நேற்றிரவே குப்பையில் தூக்கி கொட்டச் சொல்லி விட்டார்கள்" என்று ஹஸ்கியாய் என்னிடம் சொல்கிறார். அடப்பாவிகளா?? இந்தக் கொடுமையை நான் எங்கே போய் சொல்வது... உங்களைத் தவிர!!

அப்ப தினம்தினம் இப்படித் தானா??

கடைசி கடைசியாக -

நாம் சம்பாதித்த பணத்துக்கு, பணமும்   போய், கடைசியில்  'பல்பு' வாங்காமல் இருந்தால் சரி!! இதற்குமேல் ஒன்றும் சொல்வதிற்கில்லை!!

48 கருத்துகள்:

எம் அப்துல் காதர் சொன்னது…

meee first....test!!!

Mohamed Faaique சொன்னது…

எல்லா இடத்திலும் இதே ஏமாற்று வேலைதான் சார்...

Asiya Omar சொன்னது…

என்ன கொடுமை சார் இது? கொஞ்சம் உஷாராக இருக்கணும் போல.

Jaleela Kamal சொன்னது…

இந்த பெருநாளில் போட்ட ஆஃப்பர் பதிவு தான் அடுத்து போட இருந்தேன்.அடுத்த பேச்சுலர் பபாக பதிவு அதுதான்...

சரியான கொள்ளை தான்

Jaleela Kamal சொன்னது…

கட்டு கட்ட்ட்ா புக் லெட் படியேறூம் போது வழியெலாம் கிடக்கும்.

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

சில ஹைப்பர் மார்க்கெட்டுகளில் சொன்னதுபோல ஆஃபர் கொடுக்கிறார்கள். நிறைய மால்களில் இதேமாதிரி ஏமாற்றுவேலைகள் நடக்கின்றது. எப்போதும் நாம் உசாரா இருக்கணும்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

ஸலாம் சகோ.அப்துல் காதர்,
நிறைய ஹைப்பர் மால்களில் இப்படித்தான் என்றாலும், சிலர் உண்மையிலேயே உண்மையாக நடந்து கொள்கிறார்கள். இதுதான் மக்கள் ஏமார மிக முக்கியக்காரணம். பேசாமல் எல்லா ஹைப்பர் மால்களும் ஏமாற்றுவதில் ஒற்றுமையாய் இருந்தால் மக்கள் விழித்துக்கொள்வார்கள். போகப்போக அதுதான் நடக்க்கும்போல இருக்கிறது.

vanathy சொன்னது…

நாட்டாமை, நலமா? இங்கே ( அமெரிக்கன் கடைகளில் )அந்த விளையாட்டே இல்லை. கொரியன் மார்க்கெட்டில் சில நேரங்களில் இது மாதிரி நடக்கும். நாங்கெல்லாம் யாரு? பொருளே வேண்டாம் என்று திருப்பி கொடுத்துவிடுவேன்.

ஜெய்லானி சொன்னது…

உங்களை யாருங்க அங்கே போக சொன்னது ..?????

இதெல்லாம் அரபிகாரனை ஏமாத்த வச்சது ...ஹி...ஹி....!!!

ஜெய்லானி சொன்னது…

//கல்யாணம் முடிந்தும் பேச்சிலர்ஸாக சமைத்துக் கொண்டிருந்த காலத்தில், இங்குள்ள மினி மார்கெட்களில் தான் பொருட்கள்களை வாங்குவோம்//


ஒரு 45 வருஷத்துக்கு முன்னே இருக்குமா..பாஸ்...ஹி..ஹி... :-)))

எம் அப்துல் காதர் சொன்னது…

வாங்க! Mohamed Faaique, நீங்கள் சொல்வது உண்மை தான். உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றீஸ்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

வாங்க! ஆசியா உமர், நீங்கள் சொல்வது போல் யாரும் இதை உஷாரா கவனிப்பதில்லை என்று தான் தோன்றுகிறது. ஏனெனில் பெண்களின் கைகளில் தான் பர்சேசும், டிராலிகளும் இருக்கின்றன.

உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றீஸ்!!

ஜெய்லானி சொன்னது…

//கட்டுகட்டாய் புக்லெட்டுகளை எல்லா இடங்களிலும் கொண்டு வந்து வீசிவிட்டு போவார்கள்.//

இதே நம்ம ஊரா இருந்தா எல்லாத்தையும் போட்டு பட்டாணி + பொட்டுகடலை வாங்கிடலாம் ...இங்கே எந்த பயபுள்ளையும் வாங்க மாட்டேங்கிறானுங்களே... !! :-))

ஜெய்லானி சொன்னது…

//அடப்பாவிகளா?? இந்தக் கொடுமையை நான் எங்கே போய் சொல்வது... உங்களைத் தவிர!!//


அதைதான் இப்போ படிக்கிறோமே...இந்த கொடுமையை நாங்க எங்கே சொல்றது ...ஹா..ஹா... :-)))

ஜெய்லானி சொன்னது…

பெரும்பாலும் இரெண்டுக்கு மேல் வாங்கும் பொருட்களில்தான் இந்த ஆஃபர் , விலை குறைச்சல் கோல்மால் நடக்கும் . இதை தடுக்க இல்லை விட்டு விலக ஒரே வழி....
நமக்கு எது எத்தனை தேவையோ அது மட்டும் வாங்கும் குணம் வர வேணும்.


# சீக்கிரம் டேட் எக்ஸ்பிரி ஆகும் பொருளை வாங்கும் போது கொஞ்சம் உஷாரா இருக்கனும் . (அது ஷாம்பு , சோப் ஆக இருந்தாலும் கூட )). ஆஃபர் நம் கண்னை மறைத்து விடும்

:-)

முற்றும் அறிந்த அதிரா சொன்னது…

No...nope!!!! mee da firstuuuuuuuuuu...

இப்போதானே கவனித்தேன் தூசு தட்டியிருப்பதை... பின்பு வந்து படிச்சிட்டுச் சொல்றேன்.. சீயா மீயா.....

எம் அப்துல் காதர் சொன்னது…

வாங்க ஜலீலாக்கா, இந்த மாதிரி பெருநாள் ஆஃபரிலும் கொள்ளையோ கொள்ளை தான்.

உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றீஸ்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

வாங்க ஷேக், நீங்க உஷாரா தான் இருப்பீர்கள். உஷாராதான் இருக்கோணும்.

உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றீஸ்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

வலைக்கும் சலாம் சகோ. வாங்க முஹம்மத் ஆஷிக், ஏமாற்றுவதில் அவர்கள் ஒற்றுமையாக இருந்தாலும்,மக்கள்ஸ் விழிப்பாக இருப்பதாகத் தெரியவில்லை. இந்த கண்கட்டு வித்தை தெளிய இன்னும் கொஞ்ச நாளாகலாம்.

உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றீஸ்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

நலம்.... வாங்க வான்ஸ்!!!

நம்மை ஏமாற்ற தகுமா?? அப்படியே ஆனாலும் இனிமே நாமே தான் பிறந்து வந்து நம்மை ஏமாற்றிக்கனும். ஹா.. ஹா..

உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றீஸ்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

வாங்க பாஸ்!! ஆஃபர்ன்னதும் ஹி.. ஹி.. போயிட்டேன் தல!! ஆனா அரபுக்காரங்களை மட்டும் இப்படி ஏமாற்றலாமா? தப்புதானே!!

உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றீஸ்!! வந்து

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி ...

// ஒரு 45 வருஷத்துக்கு முன்னே இருக்குமா..பாஸ்...ஹி..ஹி... :-))) //

இந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு பாஸ்!! இது நமக்குள்ளேயே இருக்கட்டும் ஹி.. ஹி.. நீங்க சொன்னதை எல்லாம் நான் ஏதும் வெளில சொல்ல மாட்டேன்.அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்...
உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றீஸ்!!

முற்றும் அறிந்த அதிரா சொன்னது…

பத்து நாள் வலைப்பூ பக்கம் வாராமல் போனால் "காணவில்லை" போர்டு
மாட்டிடுராங்கைய்யா.///

10 நாள் வராட்டில் “காணவில்லை”, ஒரு மாதம் வராவிட்டால் “ஆள் இல்லை”.... இப்பூடித்தான் போர்ட் மாட்டுவோம்...:))

முற்றும் அறிந்த அதிரா சொன்னது…

வீட்டுக்கு வீடு வாசல்படிதான்... இங்கும் சுப்ப மார்கட்டுகளில் சிலதுக்கு ஹால்வ் பிரைஸ் என இருக்கும், ஆனா கசியர் மெஷினில் அது வந்திருக்காது முழு விலையே போடப்பட்டிருக்கும்....

அதைக் கவனித்துக் கொண்டுபோய்க் கேட்டால் நிட்சயம் மாற்றித்தருவார்கள், ஆனால் ஆரதைக் கவனிப்பது.. பெரிய தொகை எனில் மட்டும் கவனிப்பதுண்டு.. மற்றும்படி செக் பண்ணுவதில்லை... பழக்கம் வருகுதில்லை வர வைக்கோணும்..

நல்ல விஷயம்தான் சொல்லியிருக்கிறீங்க.. சிறு துளிதானே பெரு வெள்ளம்ம்ம்

முற்றும் அறிந்த அதிரா சொன்னது…

ஆஆஅ.. புதுச்சொல்லு ஜமுனா...ஜமுனா.... சே..சே.... நமுனா.. நமுனா... கண்டுபிடிச்சிட்டமில்ல.. எங்கிட்டயேவா....:)))

முற்றும் அறிந்த அதிரா சொன்னது…

//இதே நம்ம ஊரா இருந்தா எல்லாத்தையும் போட்டு பட்டாணி + பொட்டுகடலை வாங்கிடலாம் ...இங்கே எந்த பயபுள்ளையும் வாங்க மாட்டேங்கிறானுங்களே... !! :-))///

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எப்பவுமே இதே புலம்பல்தான்... பேசாமல் ஊரோடுபோய் நல்ல ஒரு பிஸ்னஸ் ஆரம்பியுங்க...

வேணுமெண்டால் நாங்களும்... இல்லை நான் ஒண்ணுமே சொல்லல்ல..:))

முற்றும் அறிந்த அதிரா சொன்னது…

ஹையோ... அப்துல் காதரைக் காணவில்லை...அப்துல் காதரைக் காணவில்லை...அப்துல் காதரைக் காணவில்லை...அப்துல் காதரைக் காணவில்லை...அப்துல் காதரைக் காணவில்லை...அப்துல் காதரைக் காணவில்லை...அப்துல் காதரைக் காணவில்லை...அப்துல் காதரைக் காணவில்லை...அப்துல் காதரைக் காணவில்லை...அப்துல் காதரைக் காணவில்லை...அப்துல் காதரைக் காணவில்லை...அப்துல் காதரைக் காணவில்லை...அப்துல் காதரைக் காணவில்லை...அப்துல் காதரைக் காணவில்லை...அப்துல் காதரைக் காணவில்லை...அப்துல் காதரைக் காணவில்லை...அப்துல் காதரைக் காணவில்லை...

4 நாளைக்கு முன்னாலகூட இங்கின வந்து நலம் விசாரித்துப் போனாரே.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:((((((

எம் அப்துல் காதர் சொன்னது…

// ஹையோ... அப்துல் காதரைக் காணவில்லை...//

ஹோல்டேன்.... ஹோல்டேன்... வந்துட்டேன்... வந்துட்டேன்... இப்ப... இப்ப.. இங்க.. இங்க.. !! அப்பாடா இரீங்க பூஸ் கொஞ்சம் புஸ்.. புஸ்... (மூச்சு விட்டுக்கிறேனாம்..அவ்வவ்...)

எம் அப்துல் காதர் சொன்னது…

பூஸ் அந்த காணவில்லை நோட்டீஸ் போர்ட கிழிச்சிடிவீங்களாம். நீங்க சின்ன பிள்ளையில் இருந்து நல்ல பிள்ளை தானே!! அவ்வவ்.. (நோட் பண்ணிக்கோங்க பாஸ்!)

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி

// இதே நம்ம ஊரா இருந்தா எல்லாத்தையும் போட்டு பட்டாணி + பொட்டுகடலை வாங்கிடலாம் ... இங்கே எந்த பயபுள்ளையும் வாங்க மாட்டேங்கிறானுங்களே...!! :-)) //

@!@ அதிரா

//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எப்பவுமே இதே புலம்பல்தான்... பேசாமல் ஊரோடுபோய் நல்ல ஒரு பிஸ்னஸ் ஆரம்பியுங்க... வேணு மெண்டால் நாங்களும்... இல்லை நான் ஒண்ணுமே சொல்லல்ல..:))//

அப்ப்ப்ப்பா... ரொம்ப சுமூகமான பரிவர்த்தனை/தீர்வு, ஆனா நம்ப சின்ன (ஜெய்க்கு) புள்ளைக்கு பட்டாணி + பொட்டுக் கடலை பிசினெஸ் தான் பிடிக்கும் போல. ஆகவே நானும்..ஒன்டும் சொல்லேல ஹக்காங்...

தலைவர்களே! தலைவிகளே!! ஆங்கங்கே கூடி நின்று படித்து விட்டு (கருத்துரை சொல்லாமல்) செல்லும் சொந்தங்களே, உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றீஸ்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி

// அதைதான் இப்போ படிக்கி றோமே ... இந்த கொடுமையை நாங்க எங்கே சொல்றது ... ஹா..ஹா... :-))) //

நாம கூவி விக்கிரத்தை, நீங்களும் நாலு பேருகிட்ட (கேவி கேவி அழுது) புலம்ப மாட்டீங்களான்னு தேன்..க்கி.. க்கி

எம் அப்துல் காதர் சொன்னது…

ஜெய்லானி

// பெரும்பாலும் இரெண்டுக்கு மேல் வாங்கும் பொருட்களில்தான் இந்த ஆஃபர், விலை குறைச்சல் கோல்மால் நடக்கும். இதை தடுக்க இல்லை விட்டு விலக ஒரே வழி.... நமக்கு எது எத்தனை தேவையோ அது மட்டும் வாங்கும் குணம் வர வேணும்.//

இதெல்லாம் நடக்கிற கதையா பாஸ்! (இருங்க பின்னாடி திரும்பி பார்த்துகிட்டு....) பர்ஸும் பையும் அங்கிட்டு இருக்கு. நான் போய் சொன்னா ஒரே ஒரு விழிப் பார்வைதான். நான் அம்பேல் என்றும் சொல்ல மாட்டேன். ஆனா பாருங்க இதை எல்லாம் சொன்னா வழிகிறேன் என்று சொல்வீங்கன்னு எனக்குத் தெரியும். ஹி.. ஹி.. நாங்க எப்பவுமே பெண்களுக்கு தான் முன்னுரிமை தருவோம்ங்க அய்யா பெரியைய்யா (உங்க அட்வைசுக்கு மிக்க நன்றிங்க...!!)

உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றீஸ்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி

// # சீக்கிரம் டேட் எக்ஸ்பிரி ஆகும் பொருளை வாங்கும் போது கொஞ்சம் உஷாரா இருக்கனும் . (அது ஷாம்பு, சோப் ஆக இருந்தாலும் கூட )). ஆஃபர் நம் கண்னை மறைத்து விடும் //

உண்மைதாங்க பாஸ் நீங்க சொல்வது! அதுக்கும் ஒரு பதிவு வச்சிருக்கேன். விரைவில் போடுறேன் அவ்வ்வ்வ்

ஜெய்லானி சொன்னது…

//இதெல்லாம் நடக்கிற கதையா பாஸ்! (இருங்க பின்னாடி திரும்பி பார்த்துகிட்டு....) பர்ஸும் பையும் அங்கிட்டு இருக்கு. நான் போய் சொன்னா ஒரே ஒரு விழிப் பார்வைதான்//


இதை நீங்க சொல்லிதான் நான் தெரிஞ்சுக்கணுமா ஹி..ஹி....:-))

ஜெய்லானி சொன்னது…

//@!@ அதிரா

//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எப்பவுமே இதே புலம்பல்தான்... பேசாமல் ஊரோடுபோய் நல்ல ஒரு பிஸ்னஸ் ஆரம்பியுங்க... வேணு மெண்டால் நாங்களும்... இல்லை நான் ஒண்ணுமே சொல்லல்ல..:))//

இதுக்கெல்லாம் சித்த வைத்திய பதிவு போட்டாதான் சரிவரும் போலிருக்கு ..:-))))

முற்றும் அறிந்த அதிரா சொன்னது…

//ஜெய்லானி சொன்னது…
//@!@ அதிரா

//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எப்பவுமே இதே புலம்பல்தான்... பேசாமல் ஊரோடுபோய் நல்ல ஒரு பிஸ்னஸ் ஆரம்பியுங்க... வேணு மெண்டால் நாங்களும்... இல்லை நான் ஒண்ணுமே சொல்லல்ல..:))//

இதுக்கெல்லாம் சித்த வைத்திய பதிவு போட்டாதான் சரிவரும் போலிருக்கு ..:-)))///

ஹையோ அதுக்காக மறுபடியும் தேள், பூச்சி, பூரான் பிடிக்க பாலைவனம் போயிடாதீங்க பிளீஸ்ஸ்ஸ்ஸ்... இங்கின அங்கின ஓடுற 2 கால்:)) 4 கால்:)) பூச்சி, தேள் பாம்பைப் பிடித்து வைத்து எக்ஸ்பெரிமண்ட் செய்து... சொல்லுங்க அது போதும்...:))).. ஆனா நமுனா:)) நமுனா:)) தான் முக்க்கியம்:)).

உஸ்ஸ்ஸ்ஸ் ஆபத்து தேடி வருதே.... மீ எஸ்ஸ்ஸ்ச்:)))

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ athira கூறியது...

// No...nope!!!! mee da firstuuuuuuuuuu... //

நீங்க தான் ஃபஸ்ட்ட்டு என்று நான் சொல்ல மாட்டேன்னு சொல்ல மாட்டேன்.. ஆனா நான் மயன் காலேண்டர் எல்லாம் பார்ப்பது இல்லீங்கோ!!

நன்றீஸ் மீயாஜி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

வாஞ்சூர் அப்பா நல்லா இருக்கீங்களா??

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ athira கூறியது

// 10 நாள் வராட்டில்
“காணவில்லை”, ஒரு மாதம்
வராவிட்டால் “ஆள் இல்லை”.... இப்பூடித்தான் போர்ட் மாட்டுவோம்...:)) //

அது எப்படி? நான் தான் டெய்லி டெய்லி வந்துக்கிட்டிருக்கேனே!! இந்த 'வந்து' வேற 'வந்து'!! கர்ர்ர்ர்ர்ர்ர்ர் ...

உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றீஸ் மியாஜி !!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி கூறியது

// இதை நீங்க சொல்லிதான் நான் தெரிஞ்சுக்கணுமா ஹி..ஹி....:-)) //

உங்களுக்குள்ள அனுபவம் நமக்கு வரமாட்டேங்குதே பாஸ். இன்னும் இந்த பாவி, அப்பாவியாத் தானிருக்கேன் அவ்வவ்வ்வ்வ்...

தல உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றீஸ்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ athira கூறியது

// இங்கும் சுப்ப மார்கட்டுகளில் சிலதுக்கு ஹால்வ் பிரைஸ் என இருக்கும், ஆனா கசியர் மெஷினில் அது வந்திருக்காது முழு விலையே போடப்பட்டிருக்கும்....அதைக் கவனித்துக் கொண்டுபோய்க் கேட்டால் நிட்சயம் மாற்றித்தருவார்கள், ஆனால் ஆரதைக் கவனிப்பது.. பெரிய தொகை எனில் மட்டும் கவனிப்பதுண்டு.. மற்றும்படி செக் பண்ணுவதில்லை... பழக்கம் வருகுதில்லை வர வைக்கோணும்..//

ஆனா யாரும் கவனிக்கக் காணோமே பூஸ்!! வாங்கினமா போனமான்னு தானே இருக்காங்க! நாம போய் ஒவ்வொரு ஆளினம் சொல்லி ஒவ்வொரு (பளார்-பளீர்) அடியக் கொடுத்தா சரியாகிடும்னனு தோணுது அவ்வவ்வ்வ்வ்....

மியாவும் நீங்களும் தந்த வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றீஸ்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ athira கூறியது

// ஆஆஅ.. புதுச்சொல்லு ஜமுனா...ஜமுனா.... சே..சே.... நமுனா.. நமுனா... கண்டு பிடிச்சிட்டமில்ல.. எங்கிட்டயேவா....:)))//

ஆஹா கவனிச்சாச்சா!! இனிமே ரொம்ப உஷாரா வார்த்தையைப் போடணும்னு எனக்கு நானே சொல்லிக்கிறேன். அவ்வவ்வ்வ்வ். அடுத்தது இன்னொரு புது வார்த்தை யும் வந்துக்கிட்டே இருக்கு பூஸ்!!

மியாவும் நீங்களும் தந்த வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றீஸ்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி கூறியது
// இதுக்கெல்லாம் சித்த வைத்திய பதிவு போட்டாதான் சரிவரும் போலிருக்கு ..:-)))) //

ஐயா பழனி சித்த வைத்திய சிரேஷ்ட கலாநிதி ஜெய்லானி அவர்களுக்கு ஹி.. ஹி.. போடுங்க... போடுங்க... அது யாருக்குன்னு சொல்லவே இல்லையே ஐயா?!!. அதையும் சொல்லிப் போடுங்க!! க்கி க்கி..(நமக்கு நாமே போட்டுகிட்டா அது, நமக்கு நாமே திட்டம் மாதிரி ஆகிபுடும் அவ்வ்வ்வவ்..)

தல உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றீஸ்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ அதிரா கூறியது

// இதுக்கெல்லாம் சித்த வைத்திய பதிவு போட்டாதான் சரிவரும் போலிருக்கு ..:-)))) //

// ஹையோ அதுக்காக மறுபடியும் தேள், பூச்சி, பூரான் பிடிக்க பாலைவனம் போயிடாதீங்க பிளீஸ்ஸ்ஸ்ஸ்... இங்கின அங்கின ஓடுற 2 கால்:)) 4 கால்:)) பூச்சி, தேள் பாம்பைப் பிடித்து வைத்து எக்ஸ்பெரிமண்ட் செய்து... சொல்லுங்க அது போதும்...:))).. ஆனா நமுனா:)) நமுனா:)) தான் முக்க்கியம்:)). உஸ்ஸ்ஸ்ஸ் ஆபத்து தேடி வருதே.... மீ எஸ்ஸ்ஸ்ச்:))) //

கடலில் மூழ்கி முத்(இல்லே)2 கால்+ காலில்லா (வால்) வஸ்துக்களை பிடித்த வரை ஓடியாந்துடுங்க தல! ரொம்பநேரம் இருந்தா கைய கால இஸ்துக்கும் (அந்த மேப்படியானுக்குத் தான்) :-))

ஜெய்லானி மற்றும் பூஸாருக்கும் மற்றும் சமூகம் தந்த அனைவர் களுக்கும் மிக்க நன்றீஸ்!!

Ahamed irshad சொன்னது…

நானும் க‌ல்ஃபில் இருந்த‌வ‌ரை இந்த‌ மாதிரி ஹைப்ப‌ர் மார்க்கெட்டில்தான் முடிந்த‌ வ‌ரை பொருட்க‌ளை வாங்கி வ‌ந்திருக்கிறேன்..ம் இந்த‌ ப‌திவு கொஞ்ச‌ம் தெளிவுப்ப‌டுத்தி இருக்கிற‌து..குட்..

அப்புற‌ம் ந‌ல‌மா..ரொம்ப‌ நாளாச்சே பேசி..எங்க‌டா போனார் யோசிச்சிஃபையிங்..ஆன்லைன்'ல‌ வ‌ந்தா பிங் ப‌ன்னுங்க‌.. :)

Suresh Subramanian சொன்னது…

கொஞ்சம் உஷாராக இருக்கணும் போல.. nandri.. www.rishvan.com

mohamedali jinnah சொன்னது…

"குழந்தை மனசு"
"ஆஹா பக்கங்கள்"

வலையுகம் சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

இப்படி ஒரு பதிவு இட்டதிற்கு ரொம்ப நன்றி இந்த பதிவை இப்போது படித்த பிறகு தான் நேற்று மார்க்கேட்டில் போன நினைவு வந்தது போண்ட எடுத்து உயரத்தை 42 இஞ்சி போக மீதத்தை வேட்ட சொன்னேன் அவர் 10 நிமிடம் கழித்து வாருங்கள் என்றார் வெளியே போய் வேறு பொருட்கள் வாங்கிக் கொண்டு அப்படியே வண்டியேறி ரூமிற்கு வந்து விட்டேன்

இந்த பதிவை படித்த பிறகுதான் பேண்ட் நினைவுக்கு வருகிறது இந்தா கிளம்பி விட்டேன் பேண்டை காப்பற்றிய அண்ணன் காதர் வாழ்க