facebook

சனி, ஜூன் 19, 2010

அம்மா என்னும் தாய்மை

                              
                           
                                                                        தந்தையர்கள் தினம்

எப்படி எப்படி எல்லாமோ தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு கைஅழுத்தத்தில்
எல்லாமே உணர்த்துவார் அப்பா...

முன்னால் சொன்னதில்லை பிறர் சொல்லித்தான் கேட்டிருக்கிறேன என்னைப் பற்றி பெருமையாக அப்பா
பேசிக்கொண்டிருந்ததை...

அம்மா எத்தனையோ முறை திட்டினாலும் உறைத்ததில்லை உடனே உறைத்திருக்கிறது என்றேனும் அப்பா முகம் வாடும் போது...

உன் அப்பா எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார் தெரியுமா என என் நண்பர்கள் என்னிடமே சொல்லும் போதுதான் எனக்குத் தெரிந்தது எத்தனை பேருக்குக் கிடைக்காத தந்தை எனக்கு மட்டும் என...

கேட்ட உடனே கொடுப்பதற்கு முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி இருக்கிறாரோ கடவுள்..?

சிறுவயதில் என் கைப்பிடித்து நடைபயில
சொல்லிக்கொடுத்த அப்பா என் கரம் பிடித்து
நடந்த போது என்ன நினைத்திருப்பார்..?

லேசாக என் கால் தடுமாறினாலும் பதறும் அப்பா
இன்று நான் தடுமாறிய போது பதறாமல் இருக்கிறார்
மீளா துயிலில்..

அம்மா செல்லமா அப்பா செல்லமா என கேட்டபோதெல்லாம் பெருமையாகச் சொல்லி இருக்கிறேன் அம்மா செல்லமென அப்பா செல்லம் என, இன்று அப்பா சென்ற பின்னர் நான் யார் செல்லம்..?

எத்தனையோ பேர் நான் இருக்கிறேன் எனச் சொன்னாலும் அப்பாவை போல் யார் இருக்க முடியும்..?

சொல்லிக் கொடுத்ததில்லை, திட்டியதும் இல்லை,
இல்லை என்றும் சொன்னதுமில்லை, வேண்டாம் எனக்
கூறியதும் இல்லை, இருந்தும் ஏதோ ஒன்றினால்
கட்டுப்படுத்தியது அப்பாவின் அன்பு.

நானும் காட்டியதில்லை அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை... இருந்தும் காட்டிக் கொடுத்த கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை..

அம்மாவிடம் பாசத்தையும்
     அப்பாவிடம் நேசத்தையும்
          இன்றே உணர்த்துங்கள்
சில நாளைகள் இல்லாமலும் போகலாம்...

வெறும் காமமும், கோபமும், வெறுப்பும், சண்டையும்,
பகையும், ஆட்டமும், பாட்டமும், திமிரும்,
அகந்தையுமா வாழ்க்கை?               
அன்பை தருவதும் பெறுவதும் தான் அது...

                                                         
* யாரோ எழுதிய கவிதை all credit goes to him, service charges  deteced 10% only...

23 கருத்துகள்:

asiya omar சொன்னது…

happy fathers day...to all appas..

நாடோடி சொன்னது…

யாரோ எழுதிய‌ க‌விதையை எங்க‌ளிட‌ம் ப‌கிர்ந்த‌மைக்கு ந‌ன்றி... க‌விதை ந‌ல்லா இருக்கு..

ஜெய்லானி சொன்னது…

நல்ல கவிதை . இங்கே போட்டதுக்கு நன்றி

தந்தையர் தின வாழ்த்துக்கள்..( ஆமா கல்யாணம் ஆயிடுச்சா )

Jaleela Kamal சொன்னது…

இந்த கவிதை நான் தான் பார்வேட் பண்ணேன்
என் தோழி கீதாவின் கணவரின் , நண்பர் எழுதியது.

ரொம்ப உருக்கமா இருந்தது
நான் தான் சிலருக்கு இதை பார்வேட் செய்தேன் அதன்முலம் கிடைத்ததான்னு தெரியல.

எம் அப்துல் காதர், பெயர் சரியா?

அனைத்து தந்தையர்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்.

இளம் தூயவன் சொன்னது…

ஒரு வருடத்திற்கு முன் என் வாப்பாவின் உடல் நலம் மோசம் அடைந்து. நான் மற்றும் என் உடன் பிறந்த சகோதர்கள் அனைவரும் தாயகம் சென்று விமான நிலையத்தில் இருந்து ,நேராக மருத்துவ மனைக்கு சென்று தந்தையை போய் பார்த்தோம் , இன்று இறைவன் அருளால் நலமாக உள்ளார்கள். அன்று டாக்டர் கூறியது எனக்கு இன்றும் நினைவு இருக்கின்றது. அவர் நலம் பெற காரணம் பிள்ளைகளான நீங்கள் தான் என்றார்.
பாசம் என்கின்ற பாலம் ,வழுவானது.

அஹமது இர்ஷாத் சொன்னது…

தந்தையர் தின வாழ்த்துக்கள்

எம் அப்துல் காதர் சொன்னது…

@ asiya omar கூறியது...

வாங்க சகோதரி! நலம் நலமறிய ஆவல்! தந்தையர் தினத்தை எங்களோடு ஆங்கிலத்தில் பகிர்ந்தமைக்கு மிக்க ந‌ன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ நாடோடி கூறியது...

வாங்க ஸ்டீபன் சார் ! நலம் நலமறிய ஆவல்! தந்தையர் தினத்தை எங்களோடு பகிர்ந்தமைக்கு மிக்க ந‌ன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ ஜெய்லானி கூறியது...

//நல்ல கவிதை. இங்கே போட்டதுக்கு நன்றி//

வாங்க தல வாங்க! நல்லா இருக்கீங்களா?? தந்தையர் தினத்தை எங்களோடு பகிர்ந்தமைக்கு மிக்க ந‌ன்றி!

//ஆமா கல்யாணம் ஆயிடுச்சா//

இன்னுமில்லை தல, ரெண்டு பிள்ளைகளுக்கும்...

எம் அப்துல் காதர் சொன்னது…

@ Jaleela Kamal கூறியது...

வாங்க சகோதரி! நலம் நலமறிய ஆவல்!

//இந்த கவிதை நான் தான் பார்வேட் பண்ணேன் என் தோழி கீதாவின் கணவரின், நண்பர் எழுதியது//.

அப்படியா!அப்ப உங்களுக்கும் எழுதியவரின் பெயர் தெரியாதா சகோதரி!தெரிந்தால் குறிப்பிடுங்களேன்.

//எம் அப்துல் காதர், பெயர் சரியா?//

எப்படி இதெல்லாம் உங்களால் சாத்தியமாகிறது. அசத்திட்டீங்க. ஹி..ஹி..sooper

ந‌ன்றி சகோதரி! தந்தையர் தினத்தை எங்களோடு பகிர்ந்தமைக்கு மிக்க ந‌ன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ அஹமது இர்ஷாத் கூறியது...

வாங்க தல வாங்க! நல்லா இருக்கீங்களா?? தந்தையர் தினத்தை எங்களோடு பகிர்ந்தமைக்கு மிக்க ந‌ன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ இளம் தூயவன் கூறியது...

வாங்க இளம் தூயவன் வாங்க! நல்லா இருக்கீங்களா?? வீட்டில் எல்லோரும் நலமா? குழந்தைகள் நல்லவிதமாக படிக்கிறார்களா?,

தந்தையாகிய நீங்கள் உங்கள் தந்தையை பற்றி நெகிழ்ந்து குறிப்பிட்டு இருந்தீர்களே அது தான் நீங்கள் தந்தை மேல் வைத்திருக்கும் அளவிட முடியாத பாசம். தந்தையர் தினத்தை எங்களோடு பகிர்ந்தமைக்கு மிக்க ந‌ன்றி!

ஹரீகா சொன்னது…

கவிதைகள் நன்னாயிட்டு இருக்கு. எங்கள் அன்பான தந்தையர்கள் தின வாழ்த்துகள்!!

NIZAMUDEEN சொன்னது…

கவிதை நன்றாக
எழுதியவருக்குப்
பாராட்டுக்கள்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@ ஹரீகா கூறியது...

வாங்கம்மா வாங்க! நல்லா இருக்கீங்களா?? மொதல்ல உங்க அப்பாவுக்கு, "பாதர்ஸ் டே விஷஸ் சொன்னீங்களா??" தந்தையர் தினத்தை எங்களோடு பகிர்ந்தமைக்கு மிக்க ந‌ன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ NIZAMUDEEN கூறியது...

//கவிதை நன்றாக எழுதியவருக்குப் பாராட்டுக்கள்.//

வாங்க நிஜாமுதீன் வாங்க! நல்லா இருக்கீங்களா?? கவிதை எழுதியவருக்கு மட்டும் தான் பாராட்டுக்கள் சொல்வீங்களா? ஹைர் அல்ஹம்துலில்லாஹ்!!.

உங்கள் முதல் வருகைக்கும் தந்தையர் தினத்தை எங்களோடு பகிர்ந்தமைக்கும் மிக்க ந‌ன்றி!

செ.சரவணக்குமார் சொன்னது…

நல்லா எழுதியிருக்கீங்க சார்.

தந்தையர் தின வாழ்த்துகள்.

செ.சரவணக்குமார் சொன்னது…

தமிழ்மணம், தமிழீஷ் திரட்டிகளில் பதிவை இணைக்கவில்லையா?

எம் அப்துல் காதர் சொன்னது…

@ செ.சரவணக்குமார்

வாங்க சரவணன் நலமாய் இருக்கீங்களா? தந்தையர் தினத்தை எங்களோடு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி! வாழ்த்துகள்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@ செ.சரவணக்குமார்

//தமிழ்மணம், தமிழீஷ் திரட்டிகளில் பதிவை இணைக்கவில்லையா?//

இன்னும் முயற்சிக்க வில்லை. காலக் கிரமத்தில் கைகூடுமென்றே கருதுகிறேன். நன்றி சரவணன்..

அன்புடன் மலிக்கா சொன்னது…

கவிதையை வடிதவருக்கும் அதை வலையில் வெளியிட்டவருக்கும். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

தந்தையென்னும் தியாகங்கள் தின வாழ்த்துக்கள்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@ அன்புடன் மலிக்கா..

//கவிதையை வடிதவருக்கும்; அதை வலையில் வெளியிட்டவருக்கும்; வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்//

ஆஹா,சகோதரி மல்லிகா அன்புடன் வந்து நீங்களும் கவிதை எழுதி அசத்திட்டீங்க! தந்தையர் தினத்தை எங்களோடு பகிர்ந்தமைக்கு மிக்க ந‌ன்றி!

அக்பர் சொன்னது…

கவிதை அருமை. தந்தையர் தின வாழ்த்துகள்