facebook

திங்கள், ஜூன் 21, 2010

செ.சரவணக்குமார் இப்படி செய்யலாமா..?


அது வேறொண்ணுமில்லீங்க. செ.சரவணக்குமார்  எங்களைப் பற்றி புதிய பதிவர்கள் அறிமுகத்தில் எல்லோரிடமும்  பகிர்ந்துக் கொண்டார். எங்களைப் பற்றி அவர் இவ்வாறாக எழுதியதும்  மிகுந்த மகிழ்ச்சியாகி, அதை உங்களோடு...


இனி சரவணக்குமார்-
****************************************************************
நீங்கள் ஒரு வங்கியிலோ அல்லது வேறு ஏதேனும் நிறுவனத்திலோ தொடர் வாடிக்கையாளராக இருக்கிறீர்கள். அங்கு பணிபுரியும் அனைவரையுமே உங்களுக்குத் தெரியும். ஆனால் அவர்களுக்கு நாம் எண்ணற்ற வாடிக்கையாளர்களில் ஒருவர் என்ற அளவிலேயே பரிச்சயம் ஆகியிருப்போம். அப்படித் தொடர்ச்சியாகச் சென்று கொண்டிருக்கும் நிறுவனங்களில் சிலரின் ஆளுமைகள் நம்மை வெகுவாக ஈர்க்கும்.  அவர்களின் செயல்பாடுகள் வாடிக்கையாளரோடு பழகும் முறை என வெகு சிலரே நம் மனதிற்கு மிக நெருக்கமாக வருவார்கள். அடுத்த முறை செல்லும்போது அவர் எங்கே எனத் தேடும் அளவிற்கு இருக்கும் அவர்கள் மீதான நம் விருப்பம். எதிர்பாராதவிதமாக நாம் விரும்பும் அந்த ஆளுமைகள் நமக்கு மிக நெருக்கமான நண்பர்களாகிவிட்டால் எத்தனை தூரம் மனம் மகிழ்ச்சியில் துள்ளும் என்பதை கடந்த வாரம் உணர்ந்தேன்.

நான் எப்போதுமே AL ZAMIL BANKING & SPEED MONEY REMITTANCE SERVICE-ல் தான் ஊருக்குப் பணம் அனுப்புவேன். தம்மாம், அல்கோபர், ஜுபைல், ரியாத் என சவுதியில் மொத்தமே நான்கு இடங்களில்தான் இந்த எக்சேன்ஞ் செயல்படுகிறது. தமாமிலிருக்கும் அல் ஜாமில்
கிளைக்கு ஒவ்வொரு முறை செல்லும்போதும் இதன் வாடிக்கையாளர் செயல்பாடுகளையும் ஊழியர்களின் அன்பான சேவையையும் பார்த்து வியந்திருக்கிறேன். எனது கடந்த சில இடுகைகளில் பின்னூட்டங்கள் வாயிலாக நண்பர் திரு. எம் அப்துல்காதர் அவர்களும், திரு.இளம் தூயவன் அவர்களும், அறிமுகமாகியிருந்தனர். எம் அப்துல்காதர் தமாமில் இருப்பதாக சொல்லி அவரது அலைபேசி எண்ணை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். தொடர்புகொண்டபோது அவர்கள் இருவருமே அல்ஜமீலில் பணியாற்றுவதாக சொன்னார். மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். கடந்த வெள்ளியன்று பதிவர் நண்பர் ஆறுமுகம் முருகேசனோடு சென்று அவர்களைச் சந்தித்தேன். இன்ப அதிர்ச்சியான சந்திப்பு அது.

இரண்டு வருடங்களுக்கு மேலாக நன்கு பரிச்சயமாகியிருக்கும் இருவர் பதிவுகளின் வாயிலாக நண்பர்கள் ஆனது மிகப் பெரிய சந்தோஷம். இருவருமே புதிதாக எழுத ஆரம்பித்துள்ளனர். அவர்களோடு பேசிக்கொண்டிருந்தது கொஞ்ச நேரமேயானாலும் மிக மகிழ்ச்சியான சந்திப்பாக அமைந்தது அது. நெகிழ்ச்சியான இந்தத் தருணம் பற்றி பா.ரா அண்ணனிடம் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தேன். பதிவுகளின் மூலம் கிடைக்கும் நட்புக்கள் உற்சாகமளிப்பதாக இருக்கின்றன.
=======================================================
நிச்சயமாய் இது எங்களுக்கு புதிய அனுபவம். கடந்த சில மாதங்களாகத் தான் வலைகளில் உலவிக் கொண்டும், கருத்துரைகள் எழுதிக் கொண்டுமிருந்த எங்களை மிகுந்த உற்சாகப்படுத்தி எழுதத் தூண்டி எங்களை ஆகர்ஷித்துக் கொண்டார்.

இன்றுடன் ஆரம்பித்து 22 நாட்கள் தானாகிறது. பார்த்து விட்டு, படித்து விட்டு எல்லோரும் விசாரிக்கிறார்கள். சூப்பர் என்று சிங்கபூரிலிருந்தும், ஸ்க்ரோல் ஆகிட்டே இருக்கு என்று சரிபண்ணுங்க என்று ஷார்ஜாவி- லிருந்தும், ஊக்கம் தந்தும் உற்சாகமூட்டியும், அபுதாபி  துபாய் கத்தார் இந்தியா மலேசியா என்று  இன்னும் எல்லா  தூர தேசங்களில் இருந்தும் எழுதுகிறார்கள். கடுமையான உழைப்புக்கு நடுவிலும் மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது!
--------------------------------------------------------------------------------------------
"செ.சரவணக்குமார் இப்படி செய்யலாமா..?"  என்று, அவர் எழுதிய இடுகையை  எடுத்துப் போட்டது சரியா? தப்பா? அதை அவர்தானே சொல்லணும் அதனால்
say சரவணக்குமார் say yes or no..?
---------------------------------------------------------------------------------------------
செ.சரவணக்குமார் பக்கங்களை கிளிக்கி படியுங்கள்.

11 கருத்துகள்:

Asiya Omar சொன்னது…

சரவணகுமார் பக்கங்களை படிச்சாச்சு,உங்கள் சந்திப்பு குறித்து பகிர்ந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி.

நாடோடி சொன்னது…

உங்க‌ளின் ச‌ந்திப்பு ப‌ய‌ண‌ம் ம‌கிழ்ச்சி அளிக்கிற‌து.... நானும் ஒருமுறை முய‌ற்ச்சி செய்கிறேன் உங்க‌ளை எல்லாம் ச‌ந்திக்க‌... அப்புற‌ம் புறா பிரியாணி ஆச்சுதா? ஆக‌லியா?..

ஹரீகா சொன்னது…

உங்கள் சந்திப்பைப் பற்றி, சந்தித்த அன்றே இங்கு வந்து சொன்னீர்கள். மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்தது. இருவரும் பகிர்தலை இடுகையாய் பகிர்ந்து கொண்டது அருமை. வாழ்த்துகள்!

முஹம்மது ஆரிப் சொன்னது…

படிப்பவர்கள் யாரும் சட்டென்று கருத்து சொல்ல மாட்டார்கள். அதுவும் பத்திரிகைக்கே ஒரு கார்டு எழுதி போட மாட்டார்கள். அவ்வளவு ஏன்,, எலெக்சன் அன்றைக்கு கவர்மெண்ட் லீவு வேறு கொடுத்துடுதா,, காசு வாங்கியவர்கள் ஒட்டுக் கூட போட போக மாட்டார்கள்,, அதுவும் கவர்மெண்ட் ஆபீசர்கள் பற்றி சொல்லவே வேண்டாம்.. டிவியில் சினிமா பார்ப்பார்கள்/ அல்லது சினிமாவுக்கு போய்விடுவார்கள். சரியா?

எம் அப்துல் காதர் சொன்னது…

@ asiya omar

செ.சரவணக்குமார் பக்கங்களை எல்லோருமே படித்திருப்பார்கள். ஆனாலும் நம் பக்கத்திலும் போட்டால் படிக்காதவர்களும் படிப்பார்களே என்ற நோக்கில் தான் எடுத்துப் போட்டேன்! சகோதரி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ நாடோடி கூறியது

வாங்க ஸ்டீபன் அவசியம் வாங்க. எல்லோரும் எல்லாரையும் வாழ்வில் ஒரு முறையாவது சந்திசுக்கணும். அல்லது கருத்துரை மூலமாவது பகிர்ந்துக்கணும். இல்லாவிடில் இங்கு வேறென்ன அவுட்லெட் நமக்கு இருக்கு!

//அப்புற‌ம் புறா பிரியாணி ஆச்சுதா? ஆக‌லியா?..//

நீங்க வந்தாலே பிரியாணி தான். கவலையேப் படாதீங்க! புறா பிரியாணியாவே போட்டுடுவோம்.

ஸ்டீபன் தங்கள் வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி!

இன்று முழுக்க இங்கே இன்டர்நெட் ப்ராப்ளம்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@ஹரீகா கூறியது...

//ஆமாம் ஹரீகா மிகச் சரியாக சொன்னாய்.

உனது வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி!

இன்று முழுக்க இங்கே இன்டர்நெட் ப்ராப்ளம். அங்கே எப்படி?
ஒரு நியூஸ் கூட படிக்க முடியலை..

எம் அப்துல் காதர் சொன்னது…

@ "நான் உங்கள் ரசிகன்" கூறியது

//எலெக்சன் அன்றைக்கு அதுவும் கவர்மெண்ட் ஆபீசர்கள் பற்றி சொல்லவே வேண்டாம். ஒட்டுக் கூட போட போக மாட்டார்கள். டிவியில் சினிமா பார்ப்பார்கள்/ அல்லது சினிமாவுக்கு போய்விடுவார்கள்//.

//ஆமாம் சார் மிக விபரமான கணிப்பு உங்களது. ஆமா நீங்க எந்த ஊர் சார்??

"நான் உங்கள் ரசிகன்" சார் உங்கள் வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி!

முஹம்மது ஆரிப் சொன்னது…

இன்று தான் உங்கள் இடுகை அனைத்தையும் படிக்க நேர்ந்தது சார் அருமை. நிறைவாய் இருக்கு தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள்...

எம் அப்துல் காதர் சொன்னது…

@ முஹம்மது ஆரிப்

வாங்க முஹம்மது ஆரிப், நலமா? அடிக்கடி வாங்க,, இடுகைகளை படித்து விட்டு உங்கள் மேலான கருத்துக்களை சொல்லுங்க.. உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிகுந்த நன்றி

சிநேகிதன் அக்பர் சொன்னது…

அவரு எப்பவுமே இப்படித்தான் பாஸ்.