facebook

திங்கள், நவம்பர் 22, 2010

இந்த ஃபீலிங்ஸ் நமக்குள் ளேயே இருக்கட்டும்!!




விருந்துக்கு எப்படி அழைப்பது??

சமீபத்தில் நான் ஊருக்கு சென்றிருந்த பொழுது எங்கள்
வீட்டில் நடந்த ஒரு கல்யாண விருந்துக்கு சொந்த பந்தங்களை
அழைக்கச் சென்றிருந்தேன். அப்பொழுது அறிந்துக் கொண்ட சில சில்லரைப் படிப்பினைகள்.

நம்மில் எல்லோருக்குமே, நின்றாலும் சடங்கு, உட்கார்ந்தாலும்
சடங்கு என்று வாழ பழகி விட்டோம். வீண்ஆடம்பர செலவுகள்
செய்ய வேண்டாம் என்று ஒருபுறம் பேசிக் கொண்டே மேற்படி
செயல்களையும், செலவுகளையும் நாம் அறிந்தோ அறியாமலோ
செய்து கொண்டு தானிருக்கிறோம். எதையும் தவிர்த்துக் கொண்ட-
தாகத் தெரியவில்லை.

பொதுவாக நம் வீடுகளில் கல்யாண விசேஷம் என்றால், பெண் மாப்பிள்ளை மற்றும் கல்யாண தேதியை முடிவு செய்த பின்னர், சொந்தபந்தங்களுக்கு அலைபேசியில் தகவல் தெரிவிப்போம்.
அவங்களும் "சீரும் சிறப்புமா கல்யாணத்தை நடத்துங்க!" என்று
உலகத்தில் இல்லாத புகழ்மொழியை எல்லாம் தேடிக் கண்டு
பிடித்து வாழ்த்துவார்கள். நாமும் அப்படியே உச்சிகுளிர்ந்து போய்விடுவோம். இதில் யாருமே விதிவிலக்கில்லை என்றாலும்,

பத்திரிகை வைத்து அழைக்க, என்று ஒரு களேபரம் நடக்கும்
பாருங்க....!! அதை விவரித்தால், பல பக்கங்களுக்கு சுவைபட
சொல்லிக் கொண்டே போகலாம். அதற்க்கென்று எவ்வளவு
பணவிரயம், நேரவிரயம், எவ்வளவு அலைச்சல், அதனால்
ஏற்படும் சந்தோசம் ஒரு பக்கம் என்றாலும், அலைச்சலினால்
ஏற்படும் உடல் உளைச்சல்??.

இது போக..

பெண்களை பெண்கள் அழைத்தாலும், அவர்களை - ஆண்களும்
ஒரு ஃபார்மாலிட்டிக்கும், ஆண்களை ஆண்கள் அழைத்தாலும்,
அவர்களை - பெண்களும் ஒரு ஃபார்மாலிட்டிக்கும் அழைப்பார்கள் உங்களுக்கும் அது தெரியும்தானே!

இது ‘ஒர மொர’ யில் நடக்கும் சம்பிரதாயமான விஷயம்;
அப்பதான் அதில் சந்தோஷமும், பந்த பாசத்தின் பிணைப்பும்,
அந்த நேரத்தில் கலகலப்பாய் கல்யாணம் களைக்கட்டி வரும். என்றாலும் ...இதில் நான் எந்தக் குறையும் சொல்ல வரலீங்க!

பின்னே??

இங்கே ஒரு ஊர் இருக்குங்க. அங்கே பத்திரிகை கொடுத்தோமா,
வந்தமா சாப்பிட்டோமா, மொய் வச்சமா, போனமா என்றில்லாம,
பத்திரிகை வைத்த வீட்டிலுள்ள ஆண்களை (ஒவ்வொரு
தடவையும் அந்தக் கல்யாணம் முடியும் வரை) நாம் கடை
வீதிகளில் நடந்து போகும்போது நம் எதிரே அவர்கள் வரக்
கண்டால் (சிரித்து Just hello சொல்லிவிட்டு மட்டும் போகக்
கூடாதாம்...) பின்னே?? திரும்பவும் அவர்கள் கைகளை பிடித்துக்
கொண்டு (முன்பு பத்திரிகை வைக்கும் போது அழைத்தோமே, அதுமாதிரியே-தலைப்பிலிருந்து ரிப்பீட்டனுமாம். அதாவது)
“அவசியம் கல்யாணத்துக்கும், சாப்பிடவும் தேவைக்கு எல்லாத்-
துக்கும் வந்துடுங்க!” (மச்சான்ஸ், மாம்ஸ், பெரியப்ஸ், சித்தப்ஸ்
என்று இன்னபிற முறைகளைச் சொல்லி) பவ்யமாய் அழைக்க-
னுமாம். அப்ப தான் அவங்கல்லாம் வருவாங்களாம்.

அப்படியில்லாமல் அந்த கல்யாண தேவைக்கே வர மாட்டார்-
களாம். ஆக்கிய சோறு அப்படியே கிடக்குமாம். அப்படி ஒரு
நடப்பு அந்த ஊரில் இருக்குங்க! என்னாங்க இது??

நான் தெரியாமத் கேட்கிறேன்...

கல்யாண வீட்டுக்காரனுக்கு 1008 வேலைகள் இருக்கும்.
எத்தனையோ (வெளியே சொல்ல முடியாத) சங்கடங்கள்
இருக்கும். அதில் அவன் குழம்பிப் போயோ, வேறெதாவது நினைவுகளுடனோ ரோட்டில் நடந்து போகலாம். அப்படி
போகும் போது உங்களை கவனிக்காமல் போகக் கூடுமானால் - வேணும்னே அவன் உங்களை கவனிக்காமல் போறான் - என்று
தான் எடுத்துக்குவீங்களோ? என்னாங்கடாது?? உங்க அழிச்சாட்டி-
யத்துக்கு ஒரு அளவே இல்லையா??

இது உங்க வீட்டில் நடந்தால் என்றில்லை - எங்க வீட்டில்
நடந்தாலும் இதுதானாம். இது என்னங்க பண்பாடு??

இந்த ஊருக்கு என்று ஊர் உறவின்முறை என்று சொல்லக் கூடிய
நிர்வாக பொறுப்பாளர்கள் கூட இருக்கிறார்கள். ஆனாலும் திருந்தினபாடில்லை. இவைகளெல்லாம் நாம் எந்த நூற்றாண்டில் வாழ்கிறோம் என்ற சிந்தனையை தான் தருகின்றன.

சரி அதுபோகட்டும் என்று நினைத்தால் மேற்படி விஷயத்தை
எல்லாம் மிஞ்சியது இன்னுமொரு ஊருங்க!! அங்கே
என்னவென்றால்..

கல்யாணத்தன்று சாப்பாடு ரெடியானவுடன், உள்ளூருக்குள்ளேயே
கூட, கல்யாண வீட்டுக்காரர்கள் ஒரு காரோ, ஒரு ஆட்டோவோ
எடுத்துக் கொண்டு வீடு வீடாக சென்று “அழைத்தவர்களை”
திரும்பவும் அழைத்துக் கொண்டு வந்தால் தான் சாப்பிடவே வருவாங்களாம். இப்படியும் ஒரு ஊர் இருக்கு தெரியுமா
உங்களுக்கு?

இதையெல்லாம் கண்கூடாக பார்த்த பின் எனக்கு என்ன சொல்வ-
தென்றே தெரியல்லைங்க!!

இதை எல்லாம் முடித்துக் கொண்டு மயிலாடுதுறைக்கு போனேங்க. அவங்க சொன்னாங்க. “என்னாங்க இவ்வளவு கஷ்டப்பட்டு
இவ்வளவு தூரத்திலிருந்து வர்றீங்க. ஒரு போன் பண்ணி சொல்லி-
யிருந்தா வந்து விழுந்திருக்க மாட்டோமா அல்லது பத்திரிகைதான் கொடுக்கணும் என்று நீங்க ஆசைப் பட்டிருந்தா எங்க ஃபேக்ஸில் போட்டிருக்கக் கூடாதா?” என்றாங்கங்க. அட்ரா சக்க!!

அவங்க அப்படி சொன்னதும் நாள் முழுக்க அலைந்து பட்ட கஷ்டமெல்லாம் தீர்ந்து போன மாதிரி ஒரு ஃபீலிங்ஸ். அவங்களுக்கெல்லாம் எந்த மாதிரியான ஒரு பரந்த மனசு. இந்த
மாதிரி இலகுவாய் உள்ள விஷயங்களை நாம் ஏன் எல்லோரும்
எல்லா ஊர்களிலும் பின்பற்றக் கூடாது?? ஒரு சின்ன முயற்சியாய்
ஒருவர் இதை ஆரம்பித்தாலே, 'அட இது நல்ல மாதிரியா இருக்கே!'
என்று பலபேர் பின்பற்ற ஆரம்பித்து விடுவார்களே!! ஒரு சமுதாய முன்னேற்றத்துக்கு வழிகோலியதாக அமையுமே.

ஆதலினால்...

இந்த மாதிரி ஃபீலிங்ஸ் எல்லோருக்கும் வரணும்னா, முதலில்
நமக்கும் வரணுமே!!…. அதனால்தான்,-- “இந்த ஃபீலிங்ஸ்
நமக்குள்ளேயே இருக்கட்டும்!!”

39 கருத்துகள்:

Jaleela Kamal சொன்னது…

haa ha
கல்யானவீடு காரஙக் வேர எதோ ஞாபகத்தில் ,ரோட்டில் கவனிக்க போனால் , அவ்வளவு தான் வெடி தான்

VELU.G சொன்னது…

ஆஹா இந்த பீலிங் நமக்குள்ளேயே வைச்சிக்கலாங்க

அருமை

kavisiva சொன்னது…

இந்த அழைப்பிதழ் கொடுப்பதில் நிறைய விஷயங்கள் இருக்குங்க. ஒவ்வொரு பக்கம் ஒவ்வொரு பழக்கம். இப்போ கொஞ்சம் கொஞ்சமா மாறி வருது. போஸ்டில் அனுப்பினாலும் நிறைய பேர் தவறா எடுத்துக்கறதில்லை எங்கள் குடும்பங்களில்! சிலரை மாத்த முடியாது. அப்படிப்பட்டவங்க லிஸ்ட் ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கும். அவங்களை மட்டும் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிச்சுக்குவாங்க :)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

கீழே உள்ள பீலிங்கி ரொம்ப நல்லாருக்கு (இந்த பீலிங்கும் நமக்குள்ளேயே இருக்கட்டும்)

asiya omar சொன்னது…

எனக்கு தெரிந்த ஊரில கல்யாணப்பத்திரிக்கை வைக்க ஒரு அழைப்பு,சாப்பாடு சொல்ல ஒரு அழைப்பு ,அதே ஊரில் முன்பு சாப்பாடு சொன்னா பத்தாதுங்க,விருந்தன்று சாப்பிட கூப்பிட போகனும்,இப்ப பரவாயில்லை,கல்யாணத்திற்கு அழைத்துவிட்டு,சாப்பாடு சொல்ல மட்டும் இன்னொரு தடவை போனால் போதும் என்று ஏதோ பெரிய மனசா ஒத்துக்கிட்டாங்க,இந்த ஃபீலிங் நமக்குள்ள இருக்கட்டும் சகோ.

ஹுஸைனம்மா சொன்னது…

அய்யோ, அந்தக் கொடுமையை ஏன் கேக்குறீங்க!! ஒரு விசேஷம் வந்தா, அதுக்கு அழைக்கிற வேலைதான் பெரும்வேலையே!!

அதுலயும் கல்யாணத்துக்குத் தனியா, சாப்பாட்டுக்குத் தனியான்னு அழைக்கிற கொடுமை இருக்கே...

அதுலயும், இப்ப உறவினர்கள் பல ஊர்களிலேயும் பரவி இருக்க, ஒவ்வொரு ஊருக்காப் போய் அழைக்கணும் கண்டிப்பா!! நல்லவேளை நாடுவிட்டு நாடு போய் அழைக்கிறது இன்னும் பழக்கமாகலைன்னு நினக்காதீங்க.

எங்க வீட்ல கல்யாணம்னா, சவூதில இருக்க உறவினர்களை, அங்கே இருக்க என் நெருங்கிய உறவினர் யாராவது நேரில் போய் அழைக்க வேண்டும்!!

இப்பப் பலரும் புரிஞ்சிக்கிறாங்க. இருந்தாலும் சிலர் விடும் அலப்பறை இருக்கே??!!

ஆமா, அந்தப் படம் எதுக்கு சம்பந்தமேயில்லாம? இரும்படிக்கிற இடத்துல ஈக்கென்ன வேலை? :-((((

ஹுஸைனம்மா சொன்னது…

உங்க வலைப்பக்கம் திறந்தவுடனே, ரேடியோ கிடந்து அலறுது. அதைக் கொஞ்சம் மியூட் போடுங்க இல்லைன்னா நீக்கிடுங்க.

ஜெய்லானி சொன்னது…

வயசானாலே இந்த ஃபீலீங் வருவது சகஜமப்பா..!! :-))

ஜெய்லானி சொன்னது…

//கீழே உள்ள பீலிங்கி ரொம்ப நல்லாருக்கு (இந்த பீலிங்கும் நமக்குள்ளேயே இருக்கட்டும்) //

?????????????????

!!!!!!!!!!!!!!!!!!

:-))))))))))))))))))

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////ஜெய்லானி கூறியது...
//கீழே உள்ள பீலிங்கி ரொம்ப நல்லாருக்கு (இந்த பீலிங்கும் நமக்குள்ளேயே இருக்கட்டும்) //

?????????????????

!!!!!!!!!!!!!!!!!!

:-))))))))))))))))))///////////


:-())))))

முஹம்மது ஆரிப் சொன்னது…

அருமை! அருமை!! சூப்பரான பதிவு!!! இந்த ஃபீலிங் எல்லோருக்கும் வரணும். வரும்!! வாழ்த்துகள் சகோ.

அஸ்மா சொன்னது…

14 வருஷத்துக்கு முன்னாலேயே இப்படிதான் என் தோழி வீட்டு கல்யாணத்திற்கு போஸ்ட்டில் வந்த பத்திரிக்கைக்கு மதிப்பு கொடுத்து போயிருந்தோம். போஸ்ட் மூலம் கொடுத்த அழைப்பை மட்டும் ஏற்று நாங்கள் வந்த செய்தியை ஏதோ உலக அதிசயம்போல் பேசிக்கொண்டார்கள் அந்த ஊர் மக்கள். என் தோழிக்கோ அப்படியொரு பெருமை :) அவளிட‌ம் காரணம் கேட்டபோது அவள் சொன்ன விஷயம், அந்த ஊர் மக்கள் மீது எங்களுக்கு கோபத்தையும் வெறுப்பையும்தான் ஏற்படுத்தியது. 'காலையிலிருந்து கார் எடுத்துக் கொண்டு வீடு வீடாக அழைத்து வர எங்க உம்மா அலையிறாங்க, இல்லாட்டி சாப்பிட வரமாட்டாங்க. இதுல வேற குளித்துக் கொண்டிருக்கிறோம்.. மேக்கப் பண்ணுகிறோம்.. பிறகு வந்து அழைத்து போங்கன்னு வேற சொல்லி அனுப்புறாங்க. இப்படிதான் எங்க ஊர்ல பாரு' என்றாள். பின்னே நமக்கு கோபம் வராமல் என்ன செய்யும்.. சொல்லுங்க‌?

காயலாங்கடை காதர் சொன்னது…

ஒரே ஊருல இருந்துகிட்டு கல்யாணத்துக்கு வர இதுமாதிரி ஓவர பிகு பண்ணினா சாப்பாடு வைக்குற நேரம் பிரியாணி சட்டியை திறந்து திறந்து மூடினால் வாசனை தாங்க முடியாம தன்னால வந்துருவானுங்க .

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Jaleela Kamal கூறியது...

// ஹா ஹா கல்யானவீடு காரஙக் வேர எதோ ஞாபகத்தில்,ரோட்டில் கவனிக்க போனால், அவ்வளவு தான் வெடி தான்.//

சரவெடியா இருக்குமோ ஜலீலாக்கா ஹா ஹா.

நன்றி சகோ Jaleela Kamal உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ VELU.G கூறியது...

// ஆஹா இந்த பீலிங் நமக்குள்ளேயே வைச்சிக்கலாங்க. அருமை//

வாங்க வேலு G. நிச்சயமா.. வச்சுக்குவோம்...

நன்றி உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ kavisiva கூறியது...

// இப்போ கொஞ்சம் கொஞ்சமா மாறி வருது. போஸ்டில் அனுப்பினாலும் நிறைய பேர் தவறா எடுத்துக்கறதில்லை எங்கள் குடும்பங்களில்! சிலரை மாத்த முடியாது. அப்படிப்பட்டவங்க லிஸ்ட் ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கும். அவங்களை மட்டும் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிச்சுக்குவாங்க :)//

உண்மையே இதுவானாலும், சிறுக சிறுக இப்படி பலர் கருத்தை வெளியிடும் போதும், அதை படிக்கும் பிடிவாத பாரம்பரியக் கருத்துக்களைக் கொண்டவர்கள் கூட மாறுவதற்கு 50% வாய்ப்புண்டு.

நன்றி கவிசிவா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது.

//கீழே உள்ள பீலிங்கி ரொம்ப நல்லாருக்கு (இந்த பீலிங்கும் நமக்குள்ளேயே இருக்கட்டும்)//

வராத உங்களை வர வழைத்த அந்த பீலிங்கியும், பீலிங்கும் வாழ்க!! :))))

நன்றி பன்னிக்குட்டி ராம்சாமி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ asiya omar கூறியது...

// அதே ஊரில் முன்பு சாப்பாடு சொன்னா பத்தாதுங்க, விருந்தன்று சாப்பிட கூப்பிட போகனும், இப்ப பரவாயில்லை, கல்யாணத்திற்கு அழைத்துவிட்டு, சாப்பாடு சொல்ல மட்டும் இன்னொரு தடவை போனால் போதும் என்று ஏதோ பெரிய மனசா ஒத்துக்கிட்டாங்க, இந்த ஃபீலிங் நமக்குள்ள இருக்கட்டும் சகோ.//

காலமும் எல்லார் மனசையும் மாத்தணும், விடாப் பிடியாய் கெளரவம் வேண்டும் என்பவர்களும் நிறைய தன்னை மாத்திக்கணும். விடாது இந்த பீலிங்க நாமும் எல்லார்கிட்டயும் சென்றடைய ஓங்கி ஒலிக்கனும்...

நன்றி Siss.asiya omar உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!!

MOHAMED சொன்னது…

no words to say.. but your words is faboulous..

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

இந்தமாதிரி இன்னும் சில ஊர்கள்ல இப்படித்தான்... கல்யாணத்துக்கு நிக்காஹ் எழுதும்போது ஊர் சத்தம் காட்டணுமுன்னு ஒரு வழக்கம் இருக்கு.. அதாவது நிக்காஹ் எழுதப்போறோம்.. கல்யாணத்துக்கு வந்து சாப்பிட்டுட்டு போங்க என்று சொல்லணுமாம்.

இன்னும் எந்த காலத்துல இருக்காங்கன்னு தெரியல..

நல்ல பகிர்வு அப்துல்காதர் சார். பகிர்வுக்கு நன்றி.

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

அப்புறம் அந்த ஊர்ல இன்னொரு விசயம்... கல்யாணத்துக்கு ஒரு நாளைக்கு முன்னாடி ஊர்ச்சாப்பாடு வைக்கணும். ஊர்ல உள்ள எல்லாத்துக்கும் சாப்பாடு வைக்கணும். அப்போதான் மறுநாள் கல்யாணத்துக்கு வருவாங்க.. என்ன பழக்க வழக்கமோ..

Chitra சொன்னது…

இந்த மாதிரி ஃபீலிங்ஸ் எல்லோருக்கும் வரணும்னா, முதலில்
நமக்கும் வரணுமே அதனால் தான்,, “இந்த ஃபீலிங்ஸ்
நமக்குள்ளேயே இருக்கட்டும்!!”

.....ஊருக்கு ஊரு வாசப்படி! :-)

vanathy சொன்னது…

என்னத்தை சொல்ல? ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விதம். சிலர் வீட்டில் வரிசையாக எல்லோருக்கும் சொல்லி அழைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். மகளுக்கு/மகனுக்கு சொல்லாவிட்டால் வர மாட்டார்கள்.

ஜெயந்தி சொன்னது…

//கல்யாண வீட்டுக்காரனுக்கு எவ்வளவோ வேலைகள், எத்தனையோ (வெளியே சொல்ல முடியாத) சங்கடங்கள் இருக்கும். அதில் அவன் குழம்பிப் போயோ, வேறேதோ நினைவுகளுடனோ ரோட்டில் நடந்து போகலாம். அப்படி போகும் போது உங்களை கவனிக்காமல் போனால் - வேணும்னே கவனிக்காம போறான் - என்று எடுத்துக் குவீங்களோ? இது உங்க வீட்டில் நடந்தால் என்றில்லை - எங்க வீட்டில் நடந்தாலும் இது தானாம். //
நிறையப்பேரு இந்த மாதிரியெல்லாம் எதிர்பாக்குறாங்க. போன்லயோ, போஸ்ட்லயோ சொன்னா நமக்கும் இருக்கிற வேலையில வசதியா இருக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஹுசைனம்மா கூறியது ...

நீங்களோ நானோ இவ்வளவு விவரமா எழுதியிருந்தாலும் யாராவது இதையெல்லாம் புரிஞ்சுகுவாங்க கிறீர்களா?? சான்ஸே இல்ல ஹுசைனம்மா!! அப்புறம் ..

//ஆமா, அந்தப் படம் எதுக்கு சம்பந்தமேயில்லாம? இரும்படிக்கிற இடத்துல ஈக்கென்ன வேலை? :-(((( //

அதை ஏன் கேட்கிறீங்க!! அங்க பாருங்க ரெண்டு பேர் வந்து தேவ பாஷையோ, பரி பாஷையோ பேசிக்கிறாங்க பாருங்க!! :)))

எம் அப்துல் காதர் சொன்னது…

ஹுஸைனம்மா கூறியது...

// உங்க வலைப்பக்கம் திறந்தவுடனே, ரேடியோ கிடந்து அலறுது. அதைக் கொஞ்சம் மியூட் போடுங்க இல்லைன்னா நீக்கிடுங்க.//

அதெல்லாம் இப்ப நீக்குற மாதிரி ஐடியாவே இல்ல ஹுசைனம்மா!! ஒன்னும் நெனச்சுக்காதீங்க நீங்க ஒரு நாளைக்கு BBC யிலோ, அல் ஜெஸிரா விலோ நியூஸ் வாசிக்காமலாப் போயிடப் போறீங்க.அதை கேட்கிற வரையாவது இது இருக்கட்டுமே. அவ்வ்வ்வ்....

இப்ப மியூட் செய்து தான் வைத்தி ருக்கிறேன். அப்படி ரொம்ப கெரச்சலா இருந்தா,சவுண்ட ஃஆப் பண்ணிட்டு படிங்க.

நன்றி ஹுசைனம்மா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி கூறியது...

// வயசானாலே இந்த ஃபீலீங் வருவது சகஜமப்பா..!! :-)) //

உங்களுக்கு ஒன்னும் ஃபீலிக்ஸ் இல்லையே பாஸ். சரி சரி அவ்வவ் ..

நன்றி ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

ஜெய்லானி கூறியது...

//கீழே உள்ள பீலிங்கி ரொம்ப நல்லாருக்கு (இந்த பீலிங்கும் நமக்குள்ளேயே இருக்கட்டும்) //

ஆஹா இந்த பீலிங்கி இருப்பதாலோ என்னவோ தானே உங்களுக்கு பேச்சு வருது பாஸ்!! இல்லையென்றால் ஒரு சிம்லியோடு போயடுவீங்கள்ள. அதான் ஹி.. ஹி..

நன்றி ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது

//////ஜெய்லானி கூறியது...
//கீழே உள்ள பீலிங்கி ரொம்ப நல்லாருக்கு (இந்த பீலிங்கும் நமக்குள்ளேயே இருக்கட்டும்) // ????????????????? !!!!!!!!!!!!!!!!!! :-))))))))))))))))))/////////// :-()))))) ///

இன்னா பாஸ் ரெண்டு பேரும் இப்படி மாத்தி மாத்தி பான்-கீ-மூன் பாஷை பேசிக்கிறீங்க!! கொல்லிமலை காட்டுக்குள்ளே மாட்டிக்கிட்ட மாதிரி இருக்கு ஹி..ஹி..

நன்றி பன்னிக்குட்டி ராம்சாமி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ முஹம்மது ஆரிப் கூறியது...

// இந்த ஃபீலிங் எல்லோருக்கும் வரணும். வரும்!! வாழ்த்துகள்//

அதை தான் எல்லோருமே எதிர் பார்க்கிறோம் சார்!!

நன்றி முஹம்மது ஆரிப் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ அஸ்மா கூறியது...

// 14 வருஷத்துக்கு முன்னாலேயே இப்படிதான் என் தோழி வீட்டு கல்யாணத்திற்கு போஸ்ட்டில் வந்த பத்திரிக்கைக்கு மதிப்பு கொடுத்து போயிருந்தோம். போஸ்ட் மூலம் கொடுத்த அழைப்பை மட்டும் ஏற்று நாங்கள் வந்த செய்தியை ஏதோ உலக அதிசயம்போல் பேசிக்கொண்டார்கள் அந்த ஊர் மக்கள். என் தோழிக்கோ அப்படியொரு பெருமை //

ஆஹா.. அப்பவே நீங்க எல்லோருக்கும் வழி காட்டி இருக்கீங்க. அப்படியிருக்கும் போது இந்நேரம் அம்பது பர்சன்ட் மக்களாவது விழிப்பா ஆகி இருக்கணும். இல்லையே!! என்ன சொல்ல!! அல்லது எல்லோரும் இப்படி சிரமப் படுவதை தான் விரும்புராங்களோ??

நன்றி சகோ.அஸ்மா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ காயலாங்கடை காதர் கூறியது...

// ஒரே ஊருல இருந்துகிட்டு கல்யாணத்துக்கு வர இதுமாதிரி ஓவர பிகு பண்ணினா சாப்பாடு வைக்குற நேரம் பிரியாணி சட்டியை திறந்து திறந்து மூடினால் வாசனை தாங்க முடியாம தன்னால வந்துருவானுங்க.//

என்னது சட்டியை திறந்து திறந்து மூடினால் வருவாங்களா?? இதெல்லாம் ஆவுறதா தெரியல பாஸ். ஊர் கட்டுப் பாடு அது இது என்று வேறு சலம்புரானுவ. ஒண்ணுமே சொல்லத் தெரியல!!

நன்றி காயலாங்கடை காதர் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ MOHAMED கூறியது...

// no words to say.. but your words is faboulous..//

வாங்க தம்பி நல்லா இருக்கீங்களா!!

நன்றி சித்தீக் உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Starjan(ஸ்டார்ஜன்)கூறியது...

// கல்யாணத்துக்கு நிக்காஹ் எழுதும்போது ஊர் சத்தம் காட்டணுமுன்னு ஒரு வழக்கம் இருக்கு.. அதாவது நிக்காஹ் எழுதப்போறோம்.. கல்யாணத்துக்கு வந்து சாப்பிட்டுட்டு போங்க என்று சொல்லணுமாம். //

ஊர் சத்தம் என்பது ஊர் வரவு செலவு நிதி தானே அது பிரச்சினை இல்லை. ஆனா கல்யாணத்துக்கு வந்து சாப்பிட்டுட்டு போங்கன்னு எத்தனை தடவை தான் சொல்றது. கல்யாண வீட்டுகாரங்க.. அலையாய் அலைந்து அழைத்து, செலவும் பண்ணி.. ரொம்ப பாவம்ங்க!!

நன்றி ஸ்டார்ஜன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Starjan (ஸ்டார்ஜன்) கூறியது...

// அப்புறம் அந்த ஊர்ல இன்னொரு விசயம்... கல்யாணத்துக்கு ஒரு நாளைக்கு முன்னாடி ஊர்ச்சாப்பாடு வைக்கணும். ஊர்ல உள்ள எல்லாத்துக்கும் சாப்பாடு வைக்கணும். அப்போதான் மறுநாள் கல்யாணத்துக்கு வருவாங்க.. என்ன பழக்க வழக்கமோ..//

கல்யாணத்துக்கு மொத நாளும் ஒரு சாப்பாடா...ஸ்ஸ்ஸ்.. இறைவா எல்லோரையும் காப்பாத்து!!

நன்றி ஸ்டார்ஜன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Chitra கூறியது...


// ஊருக்கு ஊரு வாசப்படி! :-) //

கடனை வாங்கி கல்யாணம் பண்ணியவர்கள் அப்படி தான் நெனச்சிக்கிட்டு போகணும் போல!!:)))

நன்றி Chitra உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ vanathy கூறியது...

// சிலர் வீட்டில் வரிசையாக எல்லோருக்கும் சொல்லி அழைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். மகளுக்கு/மகனுக்கு சொல்லா விட்டால் வர மாட்டார்கள்.//

இப்படியே எவ்வளவு நாளைக்கு போகும், நம்ம சமுதாயம் எப்ப மாறும். இதற்கு தீர்வில்லையா!!

நன்றி வானதி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெயந்தி கூறியது...

// போன்லயோ, போஸ்ட்லயோ சொன்னா நமக்கும் இருக்கிற வேலையில வசதியா இருக்கும்.//

அதை எல்லோரும் உணர்ந்து, மனதால் நினைத்தாலே காலப் போக்கில் மாறி விடும். அது தான் எப்ப?? இப்ப தொக்கி நிற்கும் கேள்வி!!

நன்றி ஜெயந்தி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

ஒ.நூருல் அமீன் சொன்னது…

உங்கள் பக்கத்தை திறப்பதே கஷ்டமாக உள்ளது. பாதி படிக்கும் போது ஸ்டிரக் ஆகுது கவனியுங்கள்.

மிகவும் முயன்று படித்தேன். நல்ல இடுகை.