facebook

திங்கள், நவம்பர் 08, 2010

துணிவு கொள் பெண்ணே!!


திருட்டு கொலை கொள்ளை டோர் ப்ரேகிங் கற்பழிப்பு இன்ன
பிற சம்பவங்கள் எல்லா இடங்களிலும் பரவலாகவோ மிதமாகவோ தீவிரமாகவோ நடை பெறுகின்ற இந்த நேரத்தில் ஒரு சம்பவம் :

வீட்டிலிருந்து புறப்பட்டு "போயிட்டு வர்றேன்" என்று சொல்லிட்டு
போகும் கணவர், எப்போதும் வீட்டின் மெயின் டோரை பூட்டிவிட்டு
தான் போவார். அன்று நான் அவர் பின்னாடியே போனதாலோ
என்னவோ அவர் பூட்டாமல் போக, அவர் பூட்டிவிடுவார் என்று
நான் கிச்சனுக்குள் போக, அது எதிர்பாராத விதமாக சம்பவமாகிப்
போனது என்றார் பக்கத்து மேன்ஷனில் வசிக்கும் ஒரு பெண்மணி.

"என்ன அது சொல்லுங்க".....

எங்கள் வீட்டு கிச்சன் மெயின் டோருக்கு அருகில் இருப்பது ஒரு வகையில் வசதியான விஷயம். சில நேரங்களில் சங்கடம்.

அன்றைக்கு கிச்சனுக்குள் நுழைந்தவுடன் ஃபிரிஜரிலிருந்து
கோழியை எடுத்து பேக்கிங்கை, கத்திரிகோலால் கட் செய்து பிரித்து
வாஷ் பேஷினில் போட்டுஐஸ் கரையட்டுமே என்று  தண்ணியை
திறந்து விட்டு திரும்பிய போது 'சடக் சடக்' என சப்தம்.

ஒருவேளை பிளாஸ்டிக் பேப்பரில் தண்ணீர் தெரிக்கிறதோ..
'இல்லையே நான் தான் கட் செய்தவுடன் கார்பேஜ் பாஸ்கெட்டில் போட்டுட்டேனே பின்னே என்ன? ' என்று யோசித்துக் கொண்டே
நிமிர்ந்த போது தான், எவனோ ஒருவன் வீட்டு கதவை திறந்து
தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்து வருகிறான்..

எப்படி?? கதவை லாக் பண்ணலையா..!!

மனசு சொளேர் என்கிறது.

யோசிக்க நேரமில்லை. என்ன செய்வது??

எங்கிருந்து தான்அந்த துணிச்சல் வந்ததோ தெரியலை.
நைட்டியின் கையை மடக்கி விட்டுக் கொண்டு...
 
 'வாடா வாடா' என்று கையை ஆட்டுகிறேன்.
 
 அவன் மிரள்கிறான்.
 
இரண்டடி பின்னோக்கி போகிறான். என்னாது அப்ப அவன்
நம்மை பார்த்து பயப்படுகிறானா??

நாமல்லவா பயப்படனும். துணிவு தொண்டைவரை வந்து

திரும்பவும்...

'வாடா வாடா' என்று கையை ஆட்டுகிறேன்.

அப்ப தான் கவனிக்கிறேன் என் கையில் கத்திரிகோல் இருப்பதை. கோழியின் பிளாஸ்டிக் பேக்கை வெட்டிவிட்டு கையிலேயே
வைத்திருந்திருக்கிறேன். என்ன ஒரு தெய்வாதீனம்.

இப்ப தான் உண்மையிலேயே வீரமான துணிச்சல் வந்து.....

ரெண்டடி முன்னெடுத்து வைக்கிறேன். அவன் நாலடி பின்னடை
கிறான். நான் வேகமாய் நடக்கவும் அவன் ஓட ஆரம்பிக்கிறான்.
விரட்டிக் கொண்டே பில்டிங்கின் மெயின் கேட் வரைக்கும் ஓடியிருக்கிறேன்.

அந்த மெயின் கேட் திறந்திருந்ததால் இவன் உள் நுழைந்
திருக்கிறான். அந்த கேட்டை இழுத்து சாத்திய பிறகு தான்
எனக்கு பயமே வர துவங்கியது.

நான் எப்படி இதை தனியாய் செய்ய துணிந்தேன். நான்
தனித்திருக்கும் போது ஏதாவது விபரீதமாகியிருந்தால்?
மெல்ல மெல்ல குப்பென்று வியர்த்துப் போய் மூச்சு சீராய்
வரவில்லை. அப்படியே சிறிது நேரம் சுவரில் சாய்ந்து நின்று
என்னை ஆசுவாசப் படுத்தினேன்.

சாதரணமாய் ஒரு கரப்பான் பூச்சி  வந்தாலே துள்ளி கணவரின்
தோள் மேல் உட்கார்ந்து கொள்ளும் நானா இவ்வளவு துணிச்சலாய்..!!

நம்ப முடியவில்லை. எல்லாம் ஒரு கண நேரமே நிகழ்ந்த நிகழ்வு.

மனதில் அவ்வளவும் ஓடுகிறது. அப்படியே நைட்டியுடன் ஓடியாந்திருக்கிறேன். நல்ல வேளை மேன்ஷனில் யார் வீட்டு
கதவும் திறந்திருக்கவில்லை. ஆண் மக்கள் நடமாட்டமும் இல்லை. எல்லோரும் டூட்டிக்கு போயிருக்கும் நேரம்.

விடு விடு வென்று வீட்டுக்கு ஓடியாந்து அவருக்கு செல்
பேசியில் அழைத்தேன். அவர் என்னமோ ஏதோவென்று அவசர
அவசரமாக வீட்டுக்கு வந்து விட்டார். அவர் நெஞ்சில் சாய்ந்துக்
கொண்டு அழ ஆரம்பித்து விட்டேன். அவருக்கோ மிகுந்த ஆச்சர்யம்.”

எங்களுக்கும் தான்!!

எந்த ஒரு அவசரத்துக்கும் யாரையாவது துணைக்கழைக்கும்
இந்த பெண் எவ்வளவு சாதுரியமாய் சமாளித்திருக்கிறது.

                                                                  வாழ்க தைரியமுடன்!!

                                                             

17 கருத்துகள்:

philosophy prabhakaran சொன்னது…

உருப்படியான தகவல்...

Balaji saravana சொன்னது…

உண்மை சம்பவமா இது?!

நான் ஏதோ நீங்க கதை சொல்லுறீங்களோன்னு நினைச்சுட்டேன்.. அவ் ;)

Chitra சொன்னது…

எந்த ஒரு அவசரத்துக்கும் யாரையாவது துணைக்கழைக்கும்
இந்த பெண் எவ்வளவு சாதுரியமாய் சமாளித்திருக்கிறது.

வாழ்க தைரியமுடன்!!

... SUPERB!!!! I like it!!!

பதிவுலகில் பாபு சொன்னது…

நல்ல பதிவு..

ஸாதிகா சொன்னது…

விழிப்புணர்வு ஊட்டத்தக்க நல்லதொரு பதிவு.

ஹுஸைனம்மா சொன்னது…

பரவால்ல, நல்ல தைரியமா சமாளிச்சுட்டாங்க.

எங்க நடந்துது இது?

Dhosai சொன்னது…

nalla dhairiyamdhan.. vazhthukkal

சிவா சொன்னது…

பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயங்கொள்ளலாகாது பெண்ணே!

நிலாமதி சொன்னது…

தைரியசாலி பெண்ணை சிருஷ்டித்த கதாநாயகனுக்கு பாராடுக்கள்

vanathy சொன்னது…

நல்ல பதிவு. இது உண்மைச் சம்பவமா???

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

வோட்டு போட்டாச்சிண்ணா..பதிவு அட்டகாசம்

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் எப்போதுமே விழிப்புடன் இருக்க வேண்டும். அதுவும் மெட்ரோபாலிட்டன் சிட்டியில் இருப்பவர்கள் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். சில சமயம் உயிருக்கே ஆபத்தாகலாம்.

கதையோ நிஜமோ பாராட்டுக்கள் அந்த பெண்ணுக்கு...

அன்னு சொன்னது…

நிஜமாயிருக்கும் பட்சத்தில் உண்மையிலேயே அந்த பெண்ணை பாராட்ட வேண்டும். உடனே வீட்டிற்கு விரைந்து வந்து ஆறுதல் அளித்த அந்த சகோதரும் பாராட்டுக்குரியவர். ஆனாலும் கவனமாக இருப்பது நல்லது, கதையே ஆனாலும் :(

விமலன் சொன்னது…

சூழ்நிலையின் கைதிகள்தானே நாமெல்லாம்,நிலைமைக்குத் தகுந்தவாறு மனிதம் உருவெடுக்கிறது,உருக்கொள்கிறது.

எம் அப்துல் காதர் சொன்னது…

*philosophy prabhakaran சொன்னது…

// உருப்படியான தகவல்... //

நன்றி நண்பா !!

* Balaji saravana சொன்னது…

// உண்மை சம்பவமா இது?!//

நான் ஏதோ நீங்க கதை சொல்லுறீங்களோன்னு நினைச்சுட்டேன்.. அவ் ;)

தல அதான் முதல் பாராவிலேயே எழுதியிருந்தேனே!! கவனிக்கலையா!!

நன்றி நண்பா!!

* Chitra சொன்னது…

// எந்த ஒரு அவசரத்துக்கும் யாரையாவது துணைக்கழைக்கும்
இந்த பெண் எவ்வளவு சாதுரியமாய் சமாளித்திருக்கிறது.

வாழ்க தைரியமுடன்!!//

... SUPERB!!!! I like it!!!

இப்படி சொன்னா தானே
மீண்டும் மீண்டும் எழுத ஆர்வமாயிருக்கும்.

நன்றி சித்ரா medam.

* பதிவுலகில் பாபு சொன்னது…

// நல்ல பதிவு.. //

நன்றி பாஸ்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

* ஸாதிகா சொன்னது…

// விழிப்புணர்வு ஊட்டத்தக்க நல்லதொரு பதிவு. //

நன்றி அக்கா!!
-------

* ஹுஸைனம்மா சொன்னது…

// பரவால்ல, நல்ல தைரியமா சமாளிச்சுட்டாங்க.//

// எங்க நடந்துது இது? // சவுதி தம்மாமில்..!!

நன்றி ஹுசைனம்மா.
-------
* Dhosai சொன்னது…

// nalla dhairiyamdhan.. vazhthukkal //

நன்றி நண்பா!!
---------

* சிவா சொன்னது…

// பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயங்கொள்ளலாகாது பெண்ணே! //

ஆஹா நன்றி நண்பா!!
-----

* நிலாமதி சொன்னது…

// தைரியசாலி பெண்ணை சிருஷ்டித்த கதாநாயகனுக்கு பாராடுக்கள்//

நன்றி சகோதரி!!
-------

* vanathy சொன்னது…

// நல்ல பதிவு. இது உண்மைச் சம்பவமா??? //

உண்மை உண்மை உண்மை

நன்றி வானதி!

எம் அப்துல் காதர் சொன்னது…

* ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

// வோட்டு போட்டாச்சிண்ணா..பதிவு அட்டகாசம்//

நன்றி தல!! உங்கள் முதல் வருகைக்கு!!
------

* Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

// வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் எப்போதுமே விழிப்புடன் இருக்க வேண்டும். அதுவும் மெட்ரோபாலிட்டன் சிட்டியில் இருப்பவர்கள் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். சில சமயம் உயிருக்கே ஆபத்தாகலாம். கதையோ நிஜமோ பாராட்டுக்கள் அந்த பெண்ணுக்கு... //

கதையல்ல நிஜம் பாஸ்!நன்றி
-------

* அன்னு சொன்னது…

// நிஜமாயிருக்கும் பட்சத்தில் உண்மையிலேயே அந்த பெண்ணை பாராட்ட வேண்டும். உடனே வீட்டிற்கு விரைந்து வந்து ஆறுதல் அளித்த அந்த சகோதரும் பாராட்டுக்குரியவர். ஆனாலும் கவனமாக இருப்பது நல்லது, கதையே ஆனாலும் :(

நிஜம் தான் அன்னு. சகோதர சகோதரிகளுக்கு விழிப்புணர் வுக்காகவே செய்தி கொஞ்சமே யானாலும், இதை எழுதினேன்.

நன்றி சகோதரி!!
-------

* விமலன் சொன்னது…

// சூழ்நிலையின் கைதிகள்தானே நாமெல்லாம், நிலைமைக்குத் தகுந்தவாறு மனிதம் உருவெடுக் கிறது, உருக்கொள்கிறது. //

நன்றாகச் சொன்னீர்கள் விமலன் சார்.

நன்றி உங்களின் முதல் வருகைக்கும், கருத்துரைக்கும்.
---------------------

கருத்துரை வழங்கிய அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!