ஊரில் எங்க சொந்தகாரர்கள் வீட்டில் சுமார் 75 பவுன் (சவரன்)
பெறுமான நகையை தொலச்சுட்டாங்கலாம். கிட்டத்தட்ட 10-11
லட்சம் பெறுமானது. மனசுக்கு கலக்கமா இருந்தது. ஒரு வருஷம்
ரெண்டு வருஷம் சம்பாதித்த பணமா?? பல வருஷம் கஷ்டப்பட்டு சம்பாதித்த தாச்சே!! சங்கடப் படுவார்களே! உடனே ஊருக்கு
போனில் பேசி ஆறுதல் சொன்னேன்.
கண் கட்டப்பட்டது போல் சில சம்பவங்கள் இது போல் மறைக்கப்
படும். ஆனால் அது நிச்சயம் திரும்ப கிடைத்துவிடும். என்
அனுபவத்தில் அது மாதிரி நிகழ்ந்திருக்கு!!. அதை அவர்களுக்குச் சொன்னேன். நிச்சயம் கிடைக்கும் என்று நாம் என்ன தான் ஆறுதல் சொன்னாலும் இழந்தவர்களுக்கு மனம் கேட்குமா? அழுதார்கள்!!
சரி எப்படி எந்த சூழ்நிலையில் அவைகள் தொலைந்தது. அதை நாம் அவசியம் தெரிந்து கொள்ளனும்.
ஏதோ கல்யாண விஷேசத்திற்காக குடும்பத்தில் உள்ள பெண்கள் புறப்பட்டு போயிருக்கிறார்கள். போகிற வழியில் ஒரு மரண செய்தி கேட்டு, அந்த வழியில் தானே போகிறோம் அப்படியே அந்த
வீட்டுக்குள் நுழைந்து விட்டுச் செல்லலாம் என்ற யோசனையிலும், நகைகளை அணிந்துச் சென்றால் அவ்வளவு உசிதமா இருக்காதே
என்று நினைத்து, எல்லாவற்றையும் கழற்றி ஒரு ஹாண்ட் பேகில் வைத்து காரின் பின் சீட்டில் உட்கார்ந்திருந்த பிள்ளைகளிடம்
கவனமாய் பார்த்துக் கொள்ளும்படி சொல்லி ஒப்படைத்து விட்டு சென்றிருக்கிறார்கள்.
அரை மணி நேரம் தான் சென்றிருக்கும், திரும்ப வந்து காரில் ஏறி கல்யாண வீட்டிற்கு புறப்பட்டு போய் அங்கே நகை பேக்கை
தேடியபோது கிடைக்கவில்லை. எப்படி இருக்கும் மனசு!! பிள்ளை
களிடம் கேட்டபோது விவரம் சொல்லத் தெரியவில்லை!!
“அழுகிறார்களே தவிர வேறு எதையும் சொல்ல மாட்டேங்கிறார்கள்” கல்யாண வீடு கொஞ்ச நேரம் கலங்கிப் போனது என்னவோ நிஜம்...
என்று சொல்லுகிறார்கள் அங்குள்ளவர்கள்!!
காரை ரோட்டோரமாய் நிறுத்தி வைத்திருந்த போது குழந்தைகள்
கதவை திறந்து வைத்துக் கொண்டு விளையாடியிருக்கிறது.
“அப்பொழுது கவனமில்லாமல் வெளியே விழுந்திருக்கக் கூடும்”
என்று சொன்னார்கள்.
அது நல்லவர்கள் கையில் கிடைத்தாலே ஒழிய, வேறு எவர்
கையில் கிடைத்தாலும் திரும்ப கிடைக்கப் போவதில்லை.
இது நிஜம். மனதில் நினைத்துக் கொண்டேன்.
உரியவர்களுக்கு தகவல் தெரியப் படுத்தியவுடன் ஆளாளுக்கு
வந்து அவரவர்கள் ரீதியில் தொலைத்த இடம், போலீஸ்
ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட், வெளியூரில் இருப்பவர்களுக்கு
செய்தி - என்று பின்னிரவு வரை நீண்டிருக்கிறது.
நம்மூர் போலீஸ் டிபார்ட்மென்டில் நகைகள் திருட்டுப்
போயிருந்தால் எப்படியாவது கண்டு பிடித்து விடுவார்கள்.
ஆனால் இந்த மாதிரி ரோட்டில் தொலைத்து விட்டோம்
என்று சொன்னால், லேசில் பிடி கிடைக்காதே!!
அந்த பெண்களின் தம்பியில் ஒருவர் கார் நின்ற வீட்டிற்கு
அருகிலேயே திண்ணையில் இரவு முழுதும் உட்கார்ந்து
எடுத்தவர்கள் யாரும் அங்கே இங்கே இருந்தால் செய்திகள்
தெரிய வருமே என்று உட்கார்ந்திருக்கிறார். ஊஹூம்... ஒன்றும் வேலைக்காக வில்லை !! தூக்கம் கண்களைச் சுழற்ற வீட்டில்
போய் படுத்து விட்டார்.
(விடியலுக்கு முன்) ஃபஜர் நேரத் தொழுகைக்குப் பின் - "உங்க
வீட்டில் நகைகள் காணாமப் போனதாக பேசிக் கொண்டார்களே
அது எங்கள் வீட்டில் தான் இருக்கிறது. வாருங்கள் - வந்து சரி
பார்த்து எடுத்துச் செல்லுங்கள்" என்று இவருக்கு தெரிந்த நபர்
செல்பேசி, இவரை விழிப்புற செய்திருக்கிறார். ஹா.. தூக்கமாவது ஒன்னாவது... இவர் அங்கே விரைந்திருக்கிறார்.
யார் அவர்???
நோன்பு (ரமலான்) காலங்களில் பின்னிரவு (சஹர்) நேர உணவை
உண்ண, அந்த ஊரையே ‘கொட்டடித்து’ விழிப்புற செய்யும் “சஹர்
பக்கிர் பாவா” வுடைய மகன் தான் அவர் என்று சொன்னால்
உங்களால் நம்ப முடிகிறதா? என்னாலும் தான் நம்ப முடிய
வில்லை...!! (இவர்களுக்கு என்று ஒரு தனி காலனி கட்டிக்
கொடுத்து அமர்த்தி அவர்களின் வாழ்வாதாரத்தை பங்கிட்டு
கொள்கிறது அந்த ஊர் நிர்வாக சபை என்பது வேறு விஷயம்)
அந்த நேர்மையான மனிதர் இவரிடம் சொன்னது, "நான் எப்போதும்
ஃபஜர் (விடியல்) தொழுகைக்கு செல்லும் போது செருப்பு அணியும் இடத்தில் இந்த பேக் இருந்தது. பிள்ளை களுடைய ஸ்கூல் பேக்
அல்லது விளையாட்டுப் பொருட்கள் போட்டு வைத்திருக்கும் பேக்
என்றே தான் நினைத்து சென்று விட்டேன். விடி லைட்டில்
சரியாகவும் தெரியவில்லை. தொழுது விட்டு வீடு திரும்பியவுடன்
தான் கவனித்தேன் முற்றிலுமாக நம் வீட்டுக்கே அது சம்பந்த
மில்லாத ஒரு பொருள், எனவே அதை திறந்து பார்த்தப் போது
முழுதுமாக நகை இருந்தது.
அதனுள்ளே தேடியபோது தான் ஒரு சின்ன டைரியில் உங்கள்
செல்பேசி நம்பர் முதல் வீட்டு அட்ரஸ் வரை எழுதி இருந்தது
கண்டு உங்களுக்கு பேசினேன். சரி பார்த்து எடுத்துச் செல்லுங்கள்" என்றிருக்கிறார்.
சரியாவது ஒன்னாவது?? பலமுறை நன்றி சொல்லிவிட்டு
வந்திருக்கிறார்!!
பிறகு தான் எனக்கு தகவல் தெரிவித்தார்கள்.
“நிச்சயமாய் இவர்கள் மிக மிக நல்லவர்கள். ஆனால் இறைவன் இவர்களை இன்னும் மிகவும் பின்தங்கிய அன்றாடம் காய்ச்சி
நிலையில் வைத்துள்ளான். நன்றியை வார்த்தையோடு
மட்டுமில்லாமல் இவர்களின் நல்ல பிழைப்புக்கு நம்மால் எந்த
அளவு அதிகப் பட்சமாக உதவி செய்ய முடியுமோ அதை
செய்யுங்கள்” என்று சொல்லி இருக்கிறேன்.
கண்ணுக்குத் தெரிந்த / தெரியாத மனிதர்களில் இவர்களைப்
போல் எவ்வளவோ நல்ல மனம் படைத்த இதயங்கள் இவ்வுலகில் இன்னும் நிறையபேர் வாழ்ந்து கொண்டு தானிருக்கிறார்கள்!!
எனினும், இச்சம்பவத்தில் சில பாடங்கள் கிட்டின.
(1) விலையுயர்ந்த பொருட்களை, குழந்தைகள் பாதுகாப்பில்
ஒருபோதும் விடக்கூடாது.
(2) பிள்ளைகளைத் தனியாகவும் விடக்கூடாது.
இச் சம்பவம் சொல்லும் நீதி!!
(1 ) ஹலாலான (நேர்மையான) முறையில் சேமித்த பொருள்
எப்போதும் நம்மை விட்டுப் போகாது.
( 2 ) உலகத்தில நல்லவர்கள் இன்னும் வாழத்தான் செய்கிறார்கள்.
( 3) அப்படி வாழ்பவர்கள் பெரும்பாலும் ஏழைகள் தான். ஆனால்
நாம அவர்களிடம் நெருங்கி பழகுவதில்லை.
( 4 ) காரணம் நம்மை மற்றவர்கள் சில்லைரைத்தனமாக நினைத்து விடுவார்களோ இல்லை அவர்கள் கடன் ஏதும் கேட்டு விடுவார்- களோன்னு பயம்.
( 5 ) இது போல சில பொருட்கள் நம்மை விட்டு (கொஞ்ச நேரம்) விலகினால்தான் இறைவனின் நினைவும், நல்லவர்களை பற்றியும்
நாம நினைக்கிறோம்..
எல்லாம் நன்மைக்கே...!! எல்லா புகழும் இறைவனுக்கே!!!
46 கருத்துகள்:
நெகிழ்வான பதிவு... அந்த நண்பர் என்றென்றும் நலம் வாழ வாழ்த்துக்கள்...
இந்த அளவுக்கு நல்ல மனிதர்கள் இருப்பதுதான், தனி சிறப்பு... விரைவில், அவர் எல்லா நலனும் பெற்று வாழ வாழ்த்துக்கள்!
நெகிழ வைத்த பதிவுங்க.
மிகவும் நெகிழச்செய்த பதிவு.//“நிச்சயமாய் இவர்கள் மிக மிக நல்லவர்கள். ஆனால் இறைவன் இவர்களை இன்னும் மிகவும் பின்தங்கிய அன்றாடம் காய்ச்சி
நிலையில் வைத்துள்ளான். //உண்மைதான்.யார் யாருக்கு எதனை எப்படி எவ்வளவு கொடுக்கவேண்டும் என்பதனை அல்லாஹ் ஒருவனே நிர்மாணிக்கிறான்.கொடியோன் ஃபிர் அவுன்னுக்கு இறைவன் அளப்பறிய செலவத்தை வாரி வாரி வழங்கவில்லையா?இன்னும் தன் திருமறையில் வல்ல அல்லாஹ் செல்வமும்,மக்களும் சோதனைக்கே என்று அழகாக குறிப்பிடுகின்றான்.
நல்ல பகிர்வு,ஆனால் இப்ப டிவியை திறந்தாலே அங்கே கொள்ளை,இங்கே கொள்ளை என்று செய்தி பார்க்கும் பொழுது,இப்படியும் கூட நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை அறியும் பொழுது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.இறைவனின் சிறிய சோதனை. இது பெண்களின் கவனக்குறைவு தான்.
நல்ல பதிவு இப்படியும் மனிதர்கள் இருப்பது தான் எதிர் காலத்தை நம்பிகையுற செய்கிறது ..
மிக மிக நெகிழ்ச்சியான நிகழ்வு. இறைவன் அவர்களின் குடும்பத்துக்கு எந்த குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்வானாக.ஆமின்.
வறுமையிலும் நேர்மை என்பது நமக்குக் கஷ்டமான விஷயமாகத் தெரிக்றது. அவரக்ள் சுலபமாகச் செய்கிறார்கள்.
எனினும், சில பாடங்கள் கிட்டின இச்சம்பவத்தில்: விலையுயர்ந்த பொருட்களை, குழந்தைகள் பாதுகாப்பில் ஒருபோதும் விடக்கூடாது. பிள்ளைகளைத் தனியாகவும் விடக்கூடாது.
//இவர்களுக்கு என்று ஒரு தனி காலணி கட்டிக்
கொடுத்து அமர்த்தி அவர்களின் வாழ்வாதாரத்தை பங்கிட்டு
கொள்கிறது அந்த ஊர் நிர்வாக சபை என்பது வேறு விஷயம்//
இது என்னன்னு புரியலை. விளக்க முடியுமா? காலணி = காலனி = colony- சரியா? ”வாழ்வாதாரத்தை பங்கிட்டுக் கொள்கிறது” அப்படின்னா?
//இந்த அளவுக்கு நல்ல மனிதர்கள் இருப்பதுதான், தனி சிறப்பு... விரைவில், அவர் எல்லா நலனும் பெற்று வாழ வாழ்த்துக்கள்!
நெகிழ வைத்த பதிவுங்க//
என் கருத்தும் இதுதான்....
இது போன்ற நல்ல மனிதர்களால்தான் கொஞ்சமாவது மழை பெய்கிறது.
வாழ்வில் நம்பிக்கையும், பிடிப்பும் ஏற்படுத்தும் சம்பவம். இன்னும் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதே ஆறுதலாக இருக்கிறது. நெகிழ்வான பதிவு.
ஸலாம் உண்டாவதாக சகோ.
மிக ஆக்கப்பூர்வமான பகிர்வு சகோ.
விடியற்காலை எழுந்து சுபுஹுக்கு பள்ளிக்குச்செல்லும்... இறைக்கட்டளையை மறுமைக்காக இறைவனுக்கு பயந்து வாழும் ஒருவரால் அவர் வரியவராகவோ தன்வந்தராகவோ இருந்தாலும் எப்படி பிறர் பொருளை அபகரிக்கத்தோன்றும்?
//எனினும், சில பாடங்கள் கிட்டின இச்சம்பவத்தில்: விலையுயர்ந்த பொருட்களை, குழந்தைகள் பாதுகாப்பில் ஒருபோதும் விடக்கூடாது. பிள்ளைகளைத் தனியாகவும் விடக்கூடாது.//---பதிவிற்கு நல்லதொரு முடிவுரை, நன்றி சகோ.ஹுசைனம்மா.
உண்மையான மனிதம் அந்த ஏழையிடம்.
இதற்க்கான கூலி இன்ஸா அல்லாஹ் நிச்சயம்.
அஸ்ஸலாமு அழைக்கும் சகோ.
இறைவன் அருளால் இன்னும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். அவருடைய தொழுகை,ஈமான் அந்த பையை திரும்ப கொடுக்க வைத்திருக்கு.அல்லாஹ் அவருக்கும்
கண்டெடுத்த செலவத்தை போல்
கொடுத்து மேன்மையாக்கி வைப்பானாக !ஆமீன்.
இப்படிப்பட்ட மனிதர்கள் அங்கங்கு உள்ளதால்தான் மழை பெய்கிறது
மனதை நெகிழ வைக்கும் பதிவு. ஆனால் இஸ்லாத்தின் வழி நேர்மையாய் வாழ்பவர்களுக்கு இவ்வுலகில் சோதனைகள் மிக மிக அதிகம். அந்த சோதனையிலும் அந்த பாவா வென்று விட்டார் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் அவர்களுக்கு ஈருலகின் நற்குலிகளையும் தருவானாக. ஆமீன்.
எதுக்கும் இன்னும் சூதானமா இருக்க சொல்லுங்க !!
//நீங்கள் இப்ப சொல்வது கூட, அடுத்தப் பதிவுக்கு கருவாக இருக்கலாம். யார் கண்டது!!//
அப்ப இப்படித்தேன் பதிவெல்லாம் தேத்தறீங்களா... ஆஹா நமக்கு தோணாம போயிருச்சே.. ??
@@@அன்னு சொன்னது…
//நீங்கள் இப்ப சொல்வது கூட, அடுத்தப் பதிவுக்கு கருவாக இருக்கலாம். யார் கண்டது!!//
அப்ப இப்படித்தேன் பதிவெல்லாம் தேத்தறீங்களா... ஆஹா நமக்கு தோணாம போயிருச்சே.. ?? //
ஆஹா...புத்திசாலி கண்டு பிடிச்சிட்டீகளே..!! :-))))
( 1 ) ஹலாலான முறையில் சேமித்த பொருள் எப்போதும் நம்மை விட்டுப்போகாது
( 2 ) உலகத்தில நல்லவர்கள் இன்னும் வாழத்தான் செய்கிறார்கள்
( 3) அப்படி வாழ்பவர்கள் பெரும்பாலும் ஏழைகள் தான் ..ஆனால் நாம அவர்களிடம் நெருங்கி பழகுவதில்லை
( 4 ) காரணம் நம்மை மற்றவர்கள் சில்லைரைத்தனமாக நினைத்து விடுவார்களோ இல்லை அவர்கள் கடன் ஏதும் கேட்டு விடுவார்களோன்னு பயம்
( 5 ) இது போல சில பொருட்கள் நம்மை விட்டு (கொஞ்ச நேரம் ) விலகினால்தான் இறைவனின் நினைவும் , நல்லவர்களை பற்றியும் நாம நினைக்கிறோம்..
எல்லாம் நன்மைக்கே எல்லா புகழும் இறைவனுக்கே
@ வாங்க பிரபா - நன்றி!
@ வாங்க சித்ரா - நன்றி டீச்சர்!
@ வாங்க TAMILAN - நன்றி!
@ வாங்க ஸாதிகாக்கா - நன்றி!
@ வாங்க ஆசியா உமர் - நன்றி டீச்சர்!
@ வாங்க அஞ்சா சிங்கம் - முதல் வருகைக்கு நன்றி!
@ வாங்க அக்பர் - நன்றி!
@ வாங்க ஹுசைனம்மா - நன்றி!
// வாழ்வாதாரத்தை பங்கிட்டுக் கொள்கிறது” அப்படின்னா?//
இதைப் பற்றி-இந்த ஊரைப் பற்றி ஒரு தனி பதிவாய் விரைவில் எழுதுகிறேன்!
@ வாங்க MANO நாஞ்சில் மனோ நன்றி!
@ வாங்க பாலாஜி சரவணா - நன்றி!
@ வாங்க பன்னிக்குட்டி ராம்சாமி - நன்றி!
@ வாங்க முஹம்மத் ஆஷிக் - நன்றி!
@ வாங்க ராஜவம்ஷம் - நன்றி!
@ வாங்க ஆயிஷா - நன்றி சகோ!
@ வாங்க தங்கராசு நாகேந்திரன் - நன்றி!
@!@ அன்னு கூறியது...
வாங்க சகோ அனீஸ். நலமா??
//நீங்கள் இப்ப சொல்வது கூட, அடுத்தப் பதிவுக்கு கருவாக இருக்கலாம். யார் கண்டது// //அப்ப இப்படித்தேன் பதிவெல்லாம் தேத்தறீங்களா... ஆஹா நமக்கு தோணாம போயிருச்சே.. ??//
ஹா ஹா.. அப்பவாவது சிம்லே, நல்லா இருக்கு, அருமை, சூப்பர், பின்னிட்டீங்க, அசத்தல் என்று டெம்ப்ளேட் கமெண்ட்ஸ் போடாம, கொஞ்சம் வித்தியாசமா எழுதுவாங்க லேங்கிற ஒரு நப்பாசை தான் சிஸ். (உங்களின் இந்த கேள்விக்கு 'தல ஜெய்லானியின்' பதிலையும் பார்க்கவும்.)
நன்றி அனீஸ் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ ஜெய்லானி...
வாங்க பாஸ். நீங்க சொன்ன அத்தனை விஷயங்களும் என் மனசுக்கும் ரொம்ப பிடித்த விஷயங்கள் தான். ஆகவே நீங்கள் சொன்ன அந்த வரிகளையும், சகோ ஹுசைனம்மா சொன்ன ரெண்டு வரிகளையும் பதிவில் சேர்த்து விட்டேன்.
நன்றி ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
இப்படிப்பட்ட மனிதர். அவர் நல்லா இருக்கணும்.
//வாங்க ஹுசைனம்மா - நன்றி!
// வாழ்வாதாரத்தை பங்கிட்டுக் கொள்கிறது” அப்படின்னா?//
இதைப் பற்றி-இந்த ஊரைப் பற்றி ஒரு தனி பதிவாய் விரைவில் எழுதுகிறேன்!//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//ஆகவே நீங்கள் சொன்ன அந்த வரிகளையும், சகோ ஹுசைனம்மா சொன்ன ரெண்டு வரிகளையும் பதிவில் சேர்த்து விட்டேன். //
அடங்கொக்கா மக்கா இந்த ஆமை எப்படி அடிச்சாலும் தாங்குது ஓய்....!!
இந்தக்காலத்திலும் இப்படி ஒரு நல்ல மனிதரோ? நம்பமுடியவில்லை... உலகம் அழியத்தான் போகுது.....
இதில் இன்னொரு நீதி.....
எந்த நல்ல காரியத்துக்குப் போகும்போதும் இடையிலே சாவு/ கவலையான இடங்களுக்குப் போய்விட்டுப் போகக்கூடாது.
இந்த அளவுக்கு நல்ல மனிதர்கள் இருப்பதுதான், தனி சிறப்பு... விரைவில், அவர் எல்லா நலனும் பெற்று வாழ வாழ்த்துக்கள்!
உண்மையான வார்த்தைகள்..
நகை திரும்பக் கிடைத்ததில், மனம்
மகிழ்வடைந்தது. அந்த அன்பருக்கு
இறையருள் கிடைக்க எனது துஆ!
75 பவுன் நகை தொலைந்த கதையைப் படித்ததும் மனதிற்கு ரொம்ப வேதனையாகி விட்டது... ஹ்லாலான பணம் கண்டிப்பாக திரும்ப கிடைக்கும் என்று நினைத்து, சரி, தொலைந்ததை ஒரு பதிவாக போட்ட இவர், நகை திரும்பக் கிடைத்துவிட்டது என்று அடுத்த பதிவிடுவார் போல என்று நினைத்து கொண்டே வாசித்தால் நகை திரும்ப கிடைத்த கதையையும் இதே பதிவில் போட்டு ஆச்சரியப்படுத்திவிட்டீர்கள் ;). ஆச்சரியம் எதுக்குன்னா வறுமையிலும் மனம் சஞ்சலப்படாமல் நகையை உரியவரிடம் ஒப்படைத்த அந்த மனிதரை நினைத்தும் நகை மட்டுமல்லாது தொலைபேசி எண் மற்றும் முகவரி போன்ற தகவல்களைக் கொண்ட டைரியையும் அதே பையில் இருக்கச் செய்தானே இறைவனின் அந்த செயலையும் நினைத்துத் தான்.... அந்த மனிதர் காசு பணம் சம்பாதிக்காவிட்டாலும் நன்மைகள் பல சம்பாதித்துக் கொண்டார். நல்ல பதிவு...
மனது வேண்டுவதற்கு தொடங்கி விட்டது. நமக்கே இப்படி என்றால் தொலைத்தவர்களுக்கு..
இது போன்ற நிகழ்வுகள் தான் இறைவன் மீது நம்பிக்கையை ஏற்படுத்துக்கின்றன.
//இச் சம்பவம் சொல்லும் நீதி!!//
அத்துணையும் மிக உண்மை.
//இறைவன் அவர்களின் குடும்பத்துக்கு எந்த குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்வானாக.ஆமின்.//
// இது போல சில பொருட்கள் நம்மை விட்டு (கொஞ்ச நேரம்) விலகினால்தான் இறைவனின் நினைவும், நல்லவர்களை பற்றியும்
நாம நினைக்கிறோம்..//
உண்மைதான். இதுபோன்ற நினைவுகள் கூட நமக்கு துன்பம் வரும் பொது மட்டுமே தான் வரும்.
மற்ற நேரங்களில் நம் மனதில் நிறைந்து நிற்பது தான் என்ற கர்வமும், மமதையும், ஆணவமும், செல்வத்தின் செருக்கும்,வறட்டு கௌரவமும் தான் இல்லையா?!
@!@ vanathy கூறியது...
// இப்படிப்பட்ட மனிதர். அவர் நல்லா இருக்கணும்.//
ஆமா வான்ஸ் அவருக்கு உங்கள் வாழ்த்துரையும் வேணும். நன்றி வான்ஸ்.
@!@ ஜெய்லானி கூறியது...
// அடங்கொக்கா மக்கா இந்த ஆமை எப்படி அடிச்சாலும் தாங்குது ஓய்....!! //
தாய் அடித்தால் இந்த குஞ்சு பறவைக்கு வலிக்குமா??? அவ்வவ்வ்வ்....!!
நன்றி பாஸ்!!
@!@ athira கூறியது...
// இதில் இன்னொரு நீதி.....எந்த நல்ல காரியத்துக்குப் போகும்போதும் இடையிலே சாவு/ கவலையான இடங்களுக்குப் போய்விட்டுப் போகக்கூடாது.//
ஆஹா பூஸார் நீங்க சொன்ன நீதியும் யோசிக்க வேண்டியது தான்.
நன்றி athira உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...
// இந்த அளவுக்கு நல்ல மனிதர்கள் இருப்பதுதான், தனி சிறப்பு... விரைவில், அவர் எல்லா நலனும் பெற்று வாழ வாழ்த்துக்கள்! உண்மையான வார்த்தைகள்..//
வாங்க சௌந்தர் நல்ல மனிதர்கள் வாழும் நாட்டில் நாமும் வாழ்வது பெருமை தானே!
நன்றி # கவிதை வீதி # சௌந்தர் உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ NIZAMUDEEN கூறியது...
// நகை திரும்பக் கிடைத்ததில், மனம் மகிழ்வடைந்தது. அந்த அன்பருக்கு இறையருள் கிடைக்க எனது துஆ!//
வாங்க நிஜாம், இறைவன் பேரன்பு மிக்கவன்!!
நன்றி NIZAMUDEEN உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ enrenrum16 கூறியது...
// தொலைந்ததை ஒரு பதிவாக போட்ட இவர், நகை திரும்பக் கிடைத்துவிட்டது என்று அடுத்த பதிவிடுவார் போல என்று நினைத்து கொண்டே வாசித்தால் நகை திரும்ப கிடைத்த கதையையும் இதே பதிவில் போட்டு ஆச்சரியப்படுத்தி விட்டீர்கள்
வாங்க என்றென்றும் பதினாறு, ஆஹா நம்மல நல்லாவே புரிஞ்சு வச்சிருக்கீங்களே:-))
நன்றி enrenrum16 உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ பாரத்... பாரதி... கூறியது...
// மனது வேண்டுவதற்கு தொடங்கி விட்டது. நமக்கே இப்படி என்றால் தொலைத்தவர்களுக்கு..இது போன்ற நிகழ்வுகள் தான் இறைவன் மீது நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.
//இச் சம்பவம் சொல்லும் நீதி!!//அத்துணையும் மிக உண்மை.//
//இறைவன் அவர்களின் குடும்பத்துக்கு எந்த குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்வானாக.ஆமின்.//
ஆமா பாரத்... பாரதி அவருக்கு உங்கள் வாழ்த்துரையும் வேணும்.
நன்றி பாரத்... பாரதி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ கக்கு - மாணிக்கம் கூறியது...
// உண்மைதான். இதுபோன்ற நினைவுகள் கூட நமக்கு துன்பம் வரும் பொது மட்டுமே தான் வரும். மற்ற நேரங்களில் நம் மனதில் நிறைந்து நிற்பது தான் என்ற கர்வமும், மமதையும், ஆணவமும், செல்வத்தின் செருக்கும், வறட்டு கௌரவமும் தான் இல்லையா?! //
நிச்சயமாய் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை அண்ணே!!
நன்றி கக்கு-மாணிக்கம் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
முதல பிள்ளைகள் கிட்ட நகைய கொடுத்து வைப்பது தவறு. இந்த பதிவு படிப்பவர்களுக்கு ப்டிப்பினை.
ஆட்டோ காரர் ரொம்ப நேர்மையாக இருந்திருக்கிறார், கண்டிப்பாக அவரை பாராட்டனும்.
நேர்மையா சமபாதித்தது கண்டிப்பாக கிடைக்கும்,
மிக அருமையான உண்மை பதிவு, அன்றே படிச்சிட்டேன், கமெண்ட் போட முடியல் நேரமும் இல்லை.
Alhamdulillah
கருத்துரையிடுக