சென்ற பதிவில் (ஆசையில்லா மனிதர்கள்) சஹர் பக்கிர்
பாவாவின் மகனார், தற்சமயம் வாடகை ஆட்டோ ஒட்டி அன்றாட
பிழைப்பு நடத்தி வருகிறார். அவருக்கு சொந்தமாக ஒரு ஆட்டோ
வாங்கிக் கொடுப்பதாக, நகையை தொலைத்து திரும்ப பெற்றுக்
கொண்ட நமது சொந்தக்காரர்கள் மகிழ்ச்சியோடு இன்று
தெரிவித்தார்கள். அவர்கள் இருவருக்கும் நமது வாழ்த்துகளை சொல்லுவோம்!!!
**************************************************************************************
கக்கு மாணிக்கம் அண்ணன் எல்லோருக்கும் டாக்டர் பட்டம் கொடுத்தாலும் கொடுத்தார். அவரர்கள் ஒரிஜினல் டாக்டர்
ரேஞ்சுக்கு மருத்துவப் பதிவெல்லாம் எழுத ஆரம்பித்து
விட்டார்கள். நமக்கும் தானே அவர் டாக்டர் பட்டம் கொடுத்தார்.
நாமும் மருத்துவத்தைப் பற்றி எழுதலாம் என்று இங்கே ஒரு
பதிவை போடுகிறேன். டாக்டர்கள் வாழ்க!! ஹி..ஹி.. (நான் என்னை சொல்லிக் கொண்டேன்.)
சக்கரை நோய்க்கு சிக்கன மருத்துவம்!! (டயாபடீஸ்)
சக்கரை வியாதி என்பது ஒரு கொடிய நோய் அல்ல. வாயைக்
கட்டி பேணினால் எல்லா நோயும் ஒரு அடி எட்டி நின்று
வேடிக்கைப் பார்த்து விட்டு எட்ட ஓடிப் போய் விடும்.
சரி இந்த சக்கரை நோய் எப்படி வருகிறது?
சாதரணமாக bp உள்ளவர்களுக்கு மன அழுத்தம் கூடும்போது சத்தமில்லாமல் இந்த நோய் இவர்களுக்கு இலவச இணைப்பாய்
ஒட்டிக் கொள்கிறது. இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு டாக்டர்கள் பரிந்துரைக்கும் பிரிஸ்கிரிப்ஷன்களை தவறாது பயன்படுத்தி,
சாதாரண நடையோ - வேக நடையோ நடந்து உடலை
கண்ட்ரோலில் வைத்துக் கொண்டாலே போதுமானது. அதை
விடுத்து bp வந்து விட்டதே என்று கவலைப்பட்டு, இன்னும்
பல கவலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டால் கேட்கவே
வேண்டாம். சர்வசாதரணமாக இந்த சுகர் நோய் அளவைக்
கடந்து விடும்.
ஆகவே எந்த கவலைகளும் இல்லாமல் மன சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தாலே பாதி நோயை நம்மை அண்ட
விடாமல், மற்றவை உண்ணும் உணவிலும், வாழும் பழக்க வழக்கங்களிலும் மனிதர்கள் திருப்திகரமாக வாழ்ந்து விடலாம். சுகாதாரமாக வாழ்வதற்கு சுற்று புற சூழ்நிலையும் காரணிகளாக அமைகின்றன.
ஒன்றுமே புரியாமல் bp உள்ள மனிதர்கள் உண்டு தின்று வாழும்
போது, திடுதிப்பென்று சுகர் 240 - 350 வந்துவிட நிலைகுலைந்து போகிறார்கள். அதை சாப்பிட வேண்டாம் இதை சாப்பிட
வேண்டாம் எனும் போது மேலும் வெறுத்துப் போகிறார்கள்.
அதனால் நாம் எப்போதுமே வருடத்துக்கு ஒரு முறை மெடிக்கல்
செக் அப் செய்து வருவது தான் பாதுகாப்பான விஷயம். இங்கே
சவுதியில் பெரும்பாலான கம்பெனிகளில் மெடி-இன்சூரன்ஸ்
இருப்பதால் மூன்று மாததிற்கொருமுறை ஃபுல் செக்அப் செய்து
கொள்ள சொல்லி (இது உங்கள் காசல்லவே இன்சூரன்ஸ் தானே
தருகிறது என்று) டாக்டர்களே வற்புறுத்துகிறார்கள். அதுவும்
நல்லதுக்கு தானென்று நினைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
சக்கரையை உடனடியாய் கண்ட்ரோலுக்கு கொண்டுவர நாம்
அன்றாடம் காய்கறிகளில் சேர்த்துக் கொள்ள பயன்படுத்தும் வெண்டைக்காய் மிகப் பெறும் பயனைத் தருகிறது.
இந்த நோய் இருப்பவர்கள் கொஞ்சம் வெண்டைக்காயை வாங்கி
ஸ்டாக் வைத்துக் கொள்வது நல்லது. தினம் இரண்டே இரண்டு
வெண்டைகாயை தலையையும் வாலையும் வெட்டிவிட்டு, இரவில் படுக்கப் போகுமுன், மேலே படத்தில் உள்ளது போல் ஸ்லைஸ் ஸ்லைசாக வெட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு கிளாஸ்
தண்ணீரில் அவைகளை போட்டு ஊறவைத்து மூடிவிடவும்.
காலையில் எழுந்தவுடன் அந்த ஊறவைத்த தண்ணீரை எடுத்து,
ஸ்லைஸ் வெண்டைக்காய்களையும், கொட்டைகள் உதிர்ந்து
கிடந்தால் அவைகளையும் ஒரு ஸ்பூனால் எடுத்துப் போட்டு
விட்டு, அந்த தண்ணீரை மட்டும் பல்விளக்கியபிறகு வெறும்
வயிற்றில் அப்படியே குடித்து விடவும். இது போல் தொடர்ந்து
செய்துவர சுகர் அளவு சட்டென்று குறைந்து, கண்ட்ரோலில்
இருக்கும். இதை எனது நண்பர் கடை பிடித்து வந்ததால் தெரிந்து
கொண்ட பலன். உங்களில் யாருக்கேனும் இஷ்டமானவர்களுக்கு
சுகர் கட்டுக்கடங்காமல் இருந்தால் நீங்களும் இதை பரிட்சித்துப்
பாருங்கள். பிறகு சுகர் அளவையும் சோதித்துக் கொள்ளுங்கள்.
இருங்க!! இன்னொரு குறிப்பையும் சொல்லிவிட்டு போகிறேன்
யாரும் அடிக்க வராதீங்க!!
இரவில் கண்விழித்து நெடுந்தூரம் காரோட்டி பயணிப்பவர்களுக்கு,
வழியில் தூக்கம் வருவதைப் போல் கண்கள் செருகினால்,
எங்காவது ஓரிடத்தில் காரை நிறுத்தி சிறிது நேரம் கண்ணுறங்கி
விட்டு செல்வார்கள் பார்த்திருக்கிறோம். அப்படியல்லாது விரைந்து பயணிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு யோசனை!!
நடிகவேல் ‘எம் ஆர் ராதா’ சொல்லக் கேட்டு - அவர் மகன் நடிகர் ‘ராதாரவி’ (திரும்பிப் பார்க்கிறேன் - ஜெயா டிவி)

சிறிது நீரை உள்ளங்கையில் ஊற்றி மூக்கால் உறிஞ்சினால், சுரீர்
என்று புறை ஏறுவது போல் ஏறி உடல் சுறுசுறுப்பாகிவிடும்.
அப்பொழுது பழையபடி நெடுந்தூரம் பயணத்தை மேற்கொள்ளலாம்.
நடிகவேல் ‘எம் ஆர் ராதா’ சொல்லக் கேட்டு - அவர் மகன் நடிகர் ‘ராதாரவி’ (திரும்பிப் பார்க்கிறேன் - ஜெயா டிவி)
64 கருத்துகள்:
vadai.............
நல்ல உபயோகமான தகவல்தான் சொல்லி இருக்கீங்க..... நன்றி
////சிறிது நீரை உள்ளங்கையில் ஊற்றி மூக்கால் உறிஞ்சினால், சுரீர்
என்று புறை ஏறுவது போல் ஏறி உடல் சுறுசுறுப்பாகிவிடும்.
அப்பொழுது பழையபடி நெடுந்தூரம் பயணத்தை மேற்கொள்ளலாம்./////
பயங்கரமான ஐடியாவா இருக்கே?
//கக்கு மாணிக்கம் அண்ணன் எல்லோருக்கும் டாக்டர் பட்டம் கொடுத்தாலும் கொடுத்தார். அவரர்கள் ஒரிஜினல் டாக்டர்
ரேஞ்சுக்கு மருத்துவப் பதிவெல்லாம் எழுத ஆரம்பித்து
விட்டார்கள்.//
ங்கொக்கா மக்கா நேரா பேரையே போட்டுட வேண்டியதுதானே ஏன் இந்த கொலவெறி
தூங்காததுக்கு ஐடியாவா..???
//நீங்கள் இப்ப சொல்வது கூட, அடுத்தப் பதிவுக்கு கருவாக இருக்கலாம். யார் கண்டது!!//
அங்கே சந்திக்கலாம் :-))
ஆமா மக்கா இந்த வெண்டைக்காய் மூளை இல்லாதவங்களுக்கு குடுப்பாங்களாமே ?? ஹி..ஹி..
வெண்டாக்காய்தான் வேனுமா இல்லை லேடிஸ் ஃபிங்கர் வாங்கினாலும் செய்யலாமா டீடைல் பிளீஸ்
தேங்க்யூ டாக்டர் அப்துல் ..!! உங்க ஃபீஸ் எவ்வளவு..?
அஸ்ஸலாமு அழைக்கும்
உபயோகமான தகவல்தான் சொல்லி இருக்கீங்க சகோ.
நல்ல தகவல்.ஆசையில்லா மனிதர்கள் தொடரில் அவர்களுக்கு நல்ல சன்மானம் கிடைத்தது குறித்து மகிழ்ச்சி.
சர்க்கரை நோய் தடுக்க டிப்ஸ் நல்லாயிருக்கு.
நல்ல பயனுள்ள தகவல்.
நான் இன்னும் மருத்துவக்குறிப்பு போடலையே அப்ப என்னை டாக்குடரா ஏத்துக்க மாட்டீங்களா. :)
(போன பதிவே டாக்டர் எழுதுன மாதிரி புரியாமத்தான் இருந்துச்சின்னு யாரும் சொல்லக் கூடாது)
//ங்கொக்கா மக்கா நேரா பேரையே போட்டுட வேண்டியதுதானே ஏன் இந்த கொலவெறி//
யாரந்த டாக்குடர் ஜெய்லானி?
//தேங்க்யூ டாக்டர் அப்துல் ..!! உங்க ஃபீஸ் எவ்வளவு..?//
டாக்குடர்குள்ள என்ன பீஸெல்லாம் கேட்டுக்கிட்டு அடுத்த தடவை நீங்க ஃப்ரியா ட்ரீட் பண்ணுங்க ( யாரந்த ஃப்ரியான்னா கொலை விழும்)
//ஆமா மக்கா இந்த வெண்டைக்காய் மூளை இல்லாதவங்களுக்கு குடுப்பாங்களாமே ?? ஹி..ஹி..//
அப்ப மூளையும் வெண்டைக்காயும் ஒரே சத்துங்களா?
//வெண்டாக்காய்தான் வேனுமா இல்லை லேடிஸ் ஃபிங்கர் வாங்கினாலும் செய்யலாமா டீடைல் பிளீஸ்//
தொரை இங்கிலிபீஷெல்லாம் பேசுது :)
//ரஹீம் கஸாலி
vadai.............//
அப்துல் காதர் வடை கேக்குறாரு பாருங்க. அப்படியே வடை செய்றது எப்படின்னு போட்டா ரொம்ப சந்தோசப்படுவாரு :)
நல்ல உபயோகமான தகவல்கள். வெண்டைக்காய் செய்தி கேள்விப் படாதது."இனிய"நண்பர்களுக்கெல்லாம் சொல்லிவிட வேண்டியது தான்!
டாக்டர் அப்துல் காதர் ...வாழ்க!
அஸ்ஸலாமு அலைக்கும் நாநா நல்ல பயனுள்ள குறிப்பு கொடுத்து இருக்கிங்க ஜஜகல்லாஹ்
//சிறிது நீரை உள்ளங்கையில் ஊற்றி மூக்கால் உறிஞ்சினால், சுரீர்
என்று புறை ஏறுவது போல் ஏறி உடல் சுறுசுறுப்பாகிவிடும்.
அப்பொழுது பழையபடி நெடுந்தூரம் பயணத்தை மேற்கொள்ளலாம்.
நல்ல யோசனையாத்தேன் இருக்கு முயற்சி பண்ணிப் பாத்துட்டு சொல்லுறேன்
நல்ல தகவல்... நன்றி டாக்டர்...
டாக்டர் பட்டம் குடுத்தாலும் குடுத்தாங்க. எல்லோரும் போட்டு தாக்குறீங்க. நல்ல குறிப்புகள். ஆனால், இந்த மூக்கினால் தண்ணீர் உறிஞ்சுவது தான் கொஞ்சம் டெரரா இருக்கு. வேறு ஏதாச்சும் ஐடியா சொல்லுங்க.
சீக்கிரம் ஆட்டோ வாங்கி குடுக்க சொல்லுங்க, நாட்டாமை.
நல்ல தகவல்
சர்க்கரை நோய்க்கு சிக்கன் மருத்துவம்ன்னு நினைச்சேன்:)
//(இது உங்கள் காசல்லவே இன்சூரன்ஸ் தானே
தருகிறது என்று) டாக்டர்களே வற்புறுத்துகிறார்கள்//
இதுவும் நம்ம காசுதான் :)
வெண்டைக்காய் மருத்துவம் முயற்சி செய்யச் சொல்கிறேன், டாக்டர் (?) :))
மூக்குறுஞ்சி மருந்து கொஞ்சம் டெரராத்தான் இருக்கு!!
உபயோகமான தகவல்கள்
மருத்துவரே எனக்கு சுகர் bp எதுவும் இல்லை ஆனால் அடிக்கடிப்பசிக்குது இதுக்கு ஏதவது மருந்து இருக்க?
மூன்று இட்லி நான்கு மசால் தோசைன்னு சொன்னா அக்பர் சொன்னதுபோல் கொலை விழும்.
நண்பரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன். நேரம் கிடைத்தால் வருகை தரவும் .
http://blogintamil.blogspot.com/2011/02/5-saturday-in-valaichcharam-rahim.html
பதிவு அருமை..
தாங்கள் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தபட்டுள்ளீர்..
வாழ்த்துக்கள்..
நல்லதொரு பதிவுங்க மிக்க நன்றிகள்..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கோயில்கள் ஏன் கட்டப்பட்டன
@!@ ரஹீம் கஸாலி கூறியது...
//vadai.............//
வாங்க தல வடை உங்களுக்கு தான். வலைச்சரத்தில் தொடர்ந்து அசத்துங்க!!
@!@ பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது..
//பயங்கரமான ஐடியாவா இருக்கே?//
உண்மையாவா சொல்றீங்க தல!! ஹி..ஹி..
நன்றி பன்னிக்குட்டி ராம்சாமி வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ ஜெய்லானி கூறியது...
//அவரர்கள் ஒரிஜினல் டாக்டர்
ரேஞ்சுக்கு மருத்துவப் பதிவெல்லாம் எழுத ஆரம்பித்து விட்டார்கள்.//
//ங்கொக்கா மக்கா நேரா பேரையே போட்டுட வேண்டியதுதானே ஏன் இந்த கொலவெறி//
சேச்சே.. நான் அப்படியாப்பட்டவனா பாஸ்? பயந்துடாதீங்க!! ஒரிஜினல் டாக்டர்ஸ் என்றாலே அது நீங்க தான்னு மக்கள்ஸே புரிஞ்சுப்பாங்க. ஏன்னா சந்தேகமெல்லாம் ஒரிஜினல் டாக்டர்ஸுக்கு தானே வரும் அவ்வவ்வ்வ்வ்....!!!!
@!@ ஜெய்லானி கூறியது...
//ஆமா மக்கா இந்த வெண்டைக்காய் மூளை இல்லாதவங்களுக்கு குடுப்பாங்களாமே ?? ஹி..ஹி..//
(அக்பர்) அப்ப மூளையும் வெண்டைக்காயும் ஒரே சத்துங்களா?
மூளை இல்லாதவங்கன்னு சொல்லலாமா?? வேணுமின்னா அறிவில்லாதவங்கன்னு சொல்ல லாமே. மூளை இல்லாத படைப்பென்று ஒன்று உண்டா பாஸ்??
@!@ ஜெய்லானி கூறியது...
// வெண்டாக்காய்தான் வேனுமா இல்லை லேடிஸ் ஃபிங்கர் வாங்கி னாலும் செய்யலாமா டீடைல் பிளீஸ்//
இதுக்கு நான் பதில் சொன்னா அழகா இருக்காது பாஸ். வான்ஸோ பூஸாரோ பதில் சொன்னா உங்களுக்கும் வெளங்கிடும். எங்களுக்கும்...அவ்வ்வ்வ்..!!
@!@ ஜெய்லானி கூறியது...
// தேங்க்யூ டாக்டர் அப்துல்..!! உங்க ஃபீஸ் எவ்வளவு..? //
ஹி..ஹி.. இப்படி டாக்டர் அப்துல்ன்னு நீங்க கூப்பிடவுமே வெக்க வெக்கமா போச்சு பாஸ். ஆனாலும் ஃபீஸ்...!! இப்படி பப்ளிக்லையா கேக்றது?? எங்க ஹாஸ்பிடல்ஸ் மேல்(male) நர்ஸ் (நோ ஃபீமேல் நர்ஸ்) கிட்ட தான் கேட்கணும். க்கி..க்கி..
நன்றி டாக்டர் ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ ஆயிஷா கூறியது...
// அஸ்ஸலாமு அழைக்கும் உபயோகமான தகவல்தான் சொல்லி இருக்கீங்க சகோ.//
வ அலைக்கும் சலாம் வாங்க சகோ.. நல்லா இருக்கீங்களா??
நன்றி ஆயிஷா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ asiya omar கூறியது...
// நல்ல தகவல்.ஆசையில்லா மனிதர்கள் தொடரில் அவர்களுக்கு நல்ல சன்மானம் கிடைத்தது குறித்து மகிழ்ச்சி. சர்க்கரை நோய் தடுக்க டிப்ஸ் நல்லாயிருக்கு.//
வாங்க மேடம். மிக்க மகிழ்ச்சி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ சிநேகிதன் அக்பர் கூறியது...
// நான் இன்னும் மருத்துவக்குறிப்பு போடலையே அப்ப என்னை டாக்குடரா ஏத்துக்க மாட்டீங்களா.:) //
நம்ம 'சிநேகிதர்'கள் அனைவர் களும் 'டாக்டர்'கள் தான் தல!! அவ்வ்வ்வ்...!
@!@ சிநேகிதன் அக்பர் கூறியது...
//ங்கொக்கா மக்கா நேரா பேரையே போட்டுட வேண்டியதுதானே ஏன் இந்த கொலவெறி//
//யாரந்த டாக்குடர் ஜெய்லானி? //
சிலேடை பேச்சர்(பேசுபவர்) வார்த்தை சித்தர், வாய் வார்த்தை வித்தகர், வன்முறை இல்லா சொல் அழகர், இப்படி நிறைய பேருண்டு அவருக்கு. அவரை உங்களுக்கு தெரியாதா? இருங்க அவர் போட்டோ இருக்கு அனுப்புறேன் பாருங்க!!! அவ்வ்வ்வ்!!!
@!@ சிநேகிதன் அக்பர் கூறியது...
//தேங்க்யூ டாக்டர் அப்துல் ..!! உங்க ஃபீஸ் எவ்வளவு..?//
// டாக்குடர்குள்ள என்ன பீஸெல்லாம் கேட்டுக்கிட்டு அடுத்த தடவை நீங்க ஃப்ரியா ட்ரீட் பண்ணுங்க (யாரந்த ஃப்ரியான்னா கொலை விழும்) //
கொலை விழுந்தாலும் யாரந்த ஃப்ரியான்னு சொன்னாதான் ஃபீஸெ சொல்லுவேன். ஹி..ஹி..
@!@ சிநேகிதன் அக்பர் கூறியது...
//வெண்டாக்காய்தான் வேனுமா இல்லை லேடிஸ் ஃபிங்கர் வாங்கினாலும் செய்யலாமா டீடைல் பிளீஸ்//
//தொரை இங்கிலிபீஷெல்லாம் பேசுது :)//
என்ன இருந்தாலும் படிச்ச வங்கள்ள?!?!
வாங்க சிநேகிதன் அக்பர் மிக்க மகிழ்ச்சி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ மோகன்ஜி கூறியது...
//நல்ல உபயோகமான தகவல்கள். வெண்டைக்காய் செய்தி கேள்விப் படாதது. "இனிய" நண்பர்களுக்கெல் லாம் சொல்லிவிட வேண்டியதுதான்!
//
அவசியம் சொல்லுங்க ஜி, அவசியமில்லாதவங்க கிட்டயும் சொல்லிவைங்க. ஒரு விழிப்புணர்வு கிடைக்கட்டும்.
வாங்க மோகன்ஜி மிக்க மகிழ்ச்சி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்
@!@ Chitra கூறியது...
// டாக்டர் அப்துல் காதர்...வாழ்க!//
நன்றி டாக்டர் சித்ராஜி... ஹா.. ஹா.. ஹா.. ஆஹா...!!
வாங்க Chitra மிக்க மகிழ்ச்சி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ Nahasi கூறியது...
//அஸ்ஸலாமு அலைக்கும் நாநா நல்ல பயனுள்ள குறிப்பு கொடுத்து இருக்கிங்க ஜஜகல்லாஹ்//
வ அலைக்கும் சலாம். வாங்க தம்பி. நல்லா இருக்கீங்களா? நீங்க நாகூரா? எந்த தெரு? ப்ரோஃபைலில் எந்த விபரமும் இல்லையே அதான் கேட்டேன்!!
Nahasi மிக்க மகிழ்ச்சி உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்
@!@ தங்கராசு நாகேந்திரன் கூறியது...
// நல்ல யோசனையாத்தேன் இருக்கு முயற்சி பண்ணிப் பாத்துட்டு சொல்லு றேன்//
அவசியம் செய்து பார்த்திட்டு சொல்லுங்க தல!!
வாங்க தங்கராசு நாகேந்திரன் மிக்க மகிழ்ச்சி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ Philosophy Prabhakaran கூறியது..
// நல்ல தகவல்... நன்றி டாக்டர்...//
ஆஹா வாங்க டாக்டர் Philosophy Prabhakaran மிக்க மகிழ்ச்சி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ vanathy கூறியது...
// டாக்டர் பட்டம் குடுத்தாலும் குடுத்தாங்க. எல்லோரும் போட்டு தாக்குறீங்க. நல்ல குறிப்புகள். //
ஆமா அப்படி போடாகட்டி கொடுத்த டாக்டர் பட்டத்தை புடுங்கிவாங்களே அதான் பயமா இருக்கு. ஹி..ஹி..
//ஆனால், இந்த மூக்கினால் தண்ணீர் உறிஞ்சுவது தான் கொஞ்சம் டெரரா இருக்கு. வேறு ஏதாச்சும் ஐடியா சொல்லுங்க.//
தெரியலையே ராதாரவிய கேட்டு சொல்றேன்.அவ்வ்வ்வ்..(அவர போய் நான் எங்க பாக்குறது...ம்ம்ம்ம்)
// சீக்கிரம் ஆட்டோ வாங்கி குடுக்க சொல்லுங்க, நாட்டாமை.//
ஆமா புது மாடலா(??!!) பார்த்து வாங்கி கொடுக்க சொல்லி இருக்கேன்.அவ்வவ்...
வாங்க டாக்டர் வானதி மிக்க மகிழ்ச்சி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்
@!@ பட்டாபட்டி.... கூறியது...
// நல்ல தகவல்//
வாங்க தல நம்ம 'பெட்டிகடை' பக்கமும் அடிக்கடி வாங்க!!
டாக்டர் பட்டாபட்டி மிக்க மகிழ்ச்சி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ ராஜ நடராஜன் கூறியது...
// சர்க்கரை நோய்க்கு சிக்கன் மருத்துவம்ன்னு நினைச்சேன்:)//
நல்ல கொலவெறி தான் பாஸ் நீங்க நெனச்சது!! நான் கூட பப்ளிஷ் பண்ணிட்டு ஒரு தபா திருப்பி படிக்கும் போது, திக்குன்னு நீங்க சொன்ன மாதிரி தான் படிச்சிட்டு மலைச்சு போனேன். ஹி..ஹி. பிறகு திருத்திக்கிட்டேன்.
டாக்டர் ராஜ நடராஜன் மிக்க மகிழ்ச்சி உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ தஞ்சாவூரான் கூறியது...
//(இது உங்கள் காசல்லவே இன்சூரன்ஸ் தானே தருகிறது
என்று) டாக்டர்களே வற்புறுத்துகிறார்கள்//
இதுவும் நம்ம காசுதான் :)
அடடா நீங்க சொல்வதும் சரிதான்.
வெண்டைக்காய் மருத்துவம் முயற்சி செய்யச் சொல்கிறேன், டாக்டர் (?) :))
சுகர் இருந்தா தான் ஆர்வம் காட்டுவார்கள்.
மூக்குறுஞ்சி மருந்து கொஞ்சம் டெரராத்தான் இருக்கு!!
அதையும் ஒரு தடவ ட்ரை தான் பண்ணுங்களேன் அவ்வ்வ்வ்..
டாக்டர் தஞ்சாவூரான் மிக்க மகிழ்ச்சி உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.
நாட்டாமை, டாக்டரா?? நானா? சே! சாதாரண ஒரு பேஷன்டா இருந்துட்டு போறேனே!!!!
@!@ vanathy சொன்னது…
// நாட்டாமை, டாக்டரா?? நானா? சே! சாதாரண ஒரு பேஷன்டா இருந்துட்டு போறேனே!!!! //
நீங்க பேஷண்டாவெல்லாம் இருக்க வேணாம். என்றைக்குமே நீங்க டாக்டர் தான். ஆகவே மக்கள்ஸ்
..... "டாக்டர் வானதி" என்று இன்னொருமுறை ஊருக்கு குரல் உயர்த்திச் சொல்லுங்கள்.. வாழ்க டாக்டர் வானதி....!!
Very Good Post...
நல்ல உபயோகமான தகவல் நன்றி நண்பரே
கக்கு மாணிக்கம் டாக்டர் பட்டம் கொடுத்தாலும் கொடுத்தார் , எல்லாம் சூப்பர் டாக்டர் ஆயாச்சு.
மிக அருமையான் தகவல், குறிப்புகல்.
வெண்டைக்காய் முன்பே என்க்கு மெயிலில் வந்தது தான் நானும் போட்டு இருக்கேன்.
உஙக்ள் நன்பர் பய்னபடுத்தி சர்கக்ரையின் அள்வு குறைந்துள்ளது என்றது நல்ல செய்தி, ஊரில் வாப்பாவுக்கும் சொல்லிடுறேன், குளுமை கிடையாது இல்ல
@!@ வாங்க - ஸாதிகாக்கா - நன்றி!
@!@ ராஜவம்சம் கூறியது...
// மருத்துவரே எனக்கு சுகர் bp எதுவும் இல்லை ஆனால் அடிக்கடி பசிக்குது இதுக்கு ஏதவது மருந்து இருக்க? //
பச்ச தண்ணி குடிச்சாலே பசியடங்கிடுமே!! ஹி..ஹி..
// மூன்று இட்லி நான்கு மசால் தோசைன்னு சொன்னா அக்பர் சொன்னதுபோல் கொலை விழும்.//
இது ரொம்ப அதிகம் தல. நான் ரெண்டு இட்லி கெட்டி சட்னி மட்டும் தான் பரிந்துரைப்பேன். அவ்வ்வ்வவ்...!!
நன்றி ராஜவம்சம் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
வாங்க ரஹீம் கஸாலி நன்றி!!
# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...
// பதிவு அருமை..தாங்கள் வலைச் சரத்தில் அறிமுகப் படுத்த பட்டுள்ளீர்..
வாழ்த்துக்கள்..//
வாங்க சௌந்தர்,
நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் .
@!@ ம.தி.சுதா கூறியது...
// நல்லதொரு பதிவுங்க மிக்க நன்றிகள்..//
வாங்க ம.தி.சுதா
நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@Philosophy Prabhakaran கூறியது
// http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_1145.html //
நன்றி தல என்னை அங்கே அறிமுகப்படுத்தியதற்கு!!
@!@ சங்கவி கூறியது...
// Very Good Post...//
வாங்க சங்கவி சார்!!
நன்றி உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும். .
@!@ விக்கி உலகம் கூறியது...
// நல்ல உபயோகமான தகவல் நன்றி நண்பரே//
வாங்க விக்கி உலகம் சார்!!
நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ Jaleela Kamal கூறியது...
// மிக அருமையான் தகவல். ஊரில் வாப்பாவுக்கும் சொல்லிடுறேன்
குளுமை கிடையாது இல்ல.//
வாங்க ஜலீலாக்கா. குளுமை எல்லாம் கிடையாது.
நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும். .
அநாமதேய கருத்துரைகளை இந்த வலைப்பதிவு அனுமதிக்கவில்லை
கருத்துரையிடுக