facebook

புதன், மார்ச் 02, 2011

நேற்றை போல் இன்றும் ஒரு தகவல்!!எப்போது ஷாப்பிங் போனாலும் என் நண்பர் ஷர்மாஜி தான் கூட
வருவார். சும்மா ஒரு பாதுகாப்பு பிளஸ் பேச்சு துணைக்கு தான்.
எனக்கு பாதுகாப்பா என்று விழி உயர்த்தாதீர்கள். நாடு இப்ப
ரொம்ப கெட்டு கிடக்கு! நடந்து போனாலே பர்ஸ் பிளஸ் செல்
போனை இழப்பது நிச்சயம்.

அந்த ஹைபர் மார்க்கெட்டில் நடந்து தேவையானவற்றை எடுத்து ட்ராலியில் நான் போட்டுக் கொண்டிருக்கும் போதே, ஷர்மாஜி
என்னிடம் பேச்சுக் கொடுத்தார்.

"லிபியாவைப் போல பஹ்ரைனிலும் கிளர்ச்சி அதிகரித்து
விட்டதே, அப்படி என்றால் இங்கே (சவுதியில்) என்னாகும்"
என்றார்.

"ஒன்றும் ஆகாது" என்றேன்

"எப்படி சொல்றீங்க"

"விக்கி லீக்ஸ் விஷயம் சென்ற மாதம் புயலாய் அடித்ததே ஞாபகமிருக்கா?"

"இல்லாமலா?"

"இப்ப அது என்னாச்சு? எல்லா அரபு நாடுகளிலும் கிளர்ச்சியை உண்டாக்குவது போல் ஒரு மாயையை உண்டாக்கி அவைகளை மறக்கடிக்கிற மாதிரி மறக்கடிச்சு, நிம்மதியாய் ஆள்பவர்களின்
மனதில் பீதியை உண்டாக்கிட்டாங்களே கவனிச்சிங்களா??

"அட ஆமா!!"

"அதுவுமில்லாம இப்ப மன்னர் 'ஃபேஸ் புக்கை' விலைபேசி
வாங்கப் போறதா வேற நியூஸ் அடிபடுது"

"ஓ..... இது வேறயா?"

"திடீர்னு தமிழக அரசு பெட்ரோல் விலைய கொறச்சுட்டாங்களே,
அதப் பத்தி சொல்லுங்க, கவர்ன்மெண்டுக்கு நஷ்டமாமே?"

"லாபம்னு சொல்லுங்க!"

"எந்த விதத்தில்?"

"அப்படி கேளுங்க?"

"இப்ப 1.38 பைசா  கொறச்சதாலே, 10 லிட்டர் போட்டா ரூபாய் 13
முதல், 14 ரூபாய் வரை லாபம் என்னமோ நமக்கு தான், ஆனா
அவங்க கணக்கு ‘ஓட்டல்லவா’?"

"அது சரி!"

"பின்னரும் யார் ஜெயிச்சு வந்தாலும் லிட்டருக்கு மூன்று
ரூபாயோ, அஞ்சு ரூபாயோ ஏத்தத்தான் போறாங்க!"

"அம்மாடி!"

"இதுக்கே இப்படி சொல்றீங்களே, இந்தியாவுக்கு வருகிற ஒரு
லிட்டர் பெட்ரோலின் அடக்க விலையை இங்கே பாருங்க!"

"சரி தங்கத்தின் விலை குறைய வாய்ப்பிருக்கா?"

"நெத்திச்சுட்டியா போட்டா  உயரும், கழுத்தில போட்டா தாழும்!"

"ஜோக்கடிக்காதிங்க?"

"பின்ன நானென்ன தங்கம் விலைய நிர்ணயிக்கிற அந்த
11 பேரில் ஒருத்தரா?"

"எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கீங்களே? ஆமா இங்க அதுக்குள்ளே வெயிலடிக்க ஆரம்பிச்சுடுச்சே, குளிர் போயிடுச்சா?"

"அது சவுதி கிளைமேட், வரும் போவும்"

"அது சரி நாமெல்லாம் ஃபாரினில் இருந்தாலும், ஒட்டு போடும்
முறை இங்கே அறிமுகமாகியிருக்கே கவனிச்சிங்களா?"

"அப்படியா? அப்படி ஒரு சான்ஸ் கிடைச்சா மொத மொத
லைஃப்ல இப்ப தான் ஒட்டு போடப் போறேன்!!"

பேசிக் கொண்டே ஷர்மாஜி, ஆறேழு வயசு குழந்தைகள் யூஸ்
செய்யும் டூத் பிரஷ்களை செலக்ட் செய்து கொண்டிருந்தார்.
இவருக்கு தான் இன்னும் கல்யாணமாகலையே யாருக்கு
இவர் வாங்குகிறார்?

வெளியில் வருமுன் அவரிடம் "அந்த குழந்தைகள் பிரஷை
யாருக்கு வாங்குறீங்க?" என்று தெரியாதது போல் கேட்டேன்.
நாமும் தெரிஞ்சுக்கலாம்ல!

"அது எனக்குத் தான்"

"என்னது உங்களுக்கா? ஏன்?"

"அதொன்னுமில்லீங்க, எப்போதும் பெரியவர்கள் யூஸ் செய்யும்
பிரஷை தான் வாங்குவேன். ஆனா அது ஈறுகளை கிழிக்கிறது.
சிறிது நாளிலேயே அதன் குச்சங்கள் திருகிக் கொண்டு டான்ஸ்
ஆடுவது போல் நிற்கின்றன. ஆனா பாருங்க இந்த சின்ன
பிள்ளைங்க யூஸ் செய்ற பிரஷை கொண்டு பல் துலக்கினால், ஈறுகளையும் கிழிப்பதில்லை. குச்சங்களும் வளைவதில்லை"
என்றார்.

இது புது விஷயமா இருக்கே என்று கேட்டுக் கொண்டேன்.

அப்புறம் "பல் விளக்கிய பின் ஈறுகளை மெதுவாக தேய்த்துக் கொடுக்கணும். அப்ப தான் பற்கள் உறுதிபடும்" என்றார்.

இந்த விஷயம் ஏற்கனவே 'கவிப்பேரரசு வைரமுத்து' நமக்கு
கவிதையில் சொல்லிக் கொடுத்திருந்ததால், தெரிந்திருந்தாலும்
தெரியாதது போல் அதையும் கேட்டுக் கொண்டேன்.

"உங்க பதிவுலகத்தில் நிறைய பேர காணலியே ஏன் என்னாச்சு?!"
என்று ஒரு புகாரையும் வாசித்தார்.

என்ன சொல்றது??

"அடுத்தப் பதிவில் அதைப் பற்றி ஆராய்வோம்" என்றேன்.

45 கருத்துகள்:

S.Sudharshan சொன்னது…

உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை கொண்டு வந்துடீங்களே :)

அன்னு சொன்னது…

உங்க இடுகைகளின் தரம், அதில் வரும் படங்களின் தரமும் பெட்ரோல் விலை போல உயர்ந்து வருகிறது. வாழ்த்துக்கள் பாய் :)

Chitra சொன்னது…

துணுக்குகளை தொகுத்து அப்படியே போடாமல், இருவருக்கு இடையே நடந்த உரையாடல் போலவே பதிவில் தந்து இருப்பது, வாசிக்க நல்லா இருந்தது. தொடருங்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

நல்லா சுவராசியமா விஷயங்களை தொகுத்து உரையாடலா கொண்டு போயிருக்கீங்க, இதே மாதிரி அடிக்கடி போடலாமே....!

Nahasi சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்
நாநா உங்களின் எழுத்து நடை நல்ல இருக்கு ரசித்து படிக்கும் படி எழுதுறிங்க வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்

மாணவன் சொன்னது…

உரையாடல் வடிவில் தகவல்களை பகிர்ந்துகொண்டது நல்லாருக்கு நண்பரே :)

ஓட்ட வட நாராயணன் சொன்னது…

"உங்க பதிவுலகத்தில் நிறைய பேர காணலியே ஏன் என்னாச்சு?!"
என்று ஒரு புகாரையும் வாசித்தார்.

என்ன சொல்றது??

"அடுத்தப் பதிவில் அதைப் பற்றி ஆராய்வோம்" என்றேன்.

சச்பென்சு தாங்க முடியல சீக்கிரம் போடுங்க பாஸ்!!

ஜெய்லானி சொன்னது…

//"உங்க பதிவுலகத்தில் நிறைய பேர காணலியே ஏன் என்னாச்சு?!"
என்று ஒரு புகாரையும் வாசித்தார்.

என்ன சொல்றது??

"அடுத்தப் பதிவில் அதைப் பற்றி ஆராய்வோம்" என்றேன்.//

அதுக்கு ஒரு விசாரனை கமிட்டி போட்டுடலாமா..??

ஜெய்லானி சொன்னது…

//நடந்து போனாலே பர்ஸ் பிளஸ் செல்
போனை இழப்பது நிச்சயம். //

இதுப்போல அங்கிருந்து வரும் செய்திகள் அந்த நாட்டுமேலே இருக்கும் மரியாதையை குறைச்ச்சிகிட்டே வருது..

asiya omar சொன்னது…

ஒஹோன்னு இருக்கு இந்த பதிவு,காதர்ஜியும் சர்மாஜியும் சூப்பர் காம்பினேஷன்,இன்னும் நிறைய பேசுங்க.என்னமோ தெரியலை,பல்லை பற்றி அடிக்கடி எழுதற மாதிரி இருக்கு,சகோ.பல்லு போயிடுச்சோ!

vanathy சொன்னது…

நல்லா இருக்கு கேள்வி & பதில். நாட்டாமை, எப்பவும் பூனைப் படை பாதுகாப்போடு தான் வெளியே போவீங்க போலிருக்கே.

ஸாதிகா சொன்னது…

//நடந்து போனாலே பர்ஸ் பிளஸ் செல்
போனை இழப்பது நிச்சயம். //
அங்கேயும் அப்படியா??

கக்கு - மாணிக்கம் சொன்னது…

டெம்பிளேட் கமெண்ட்ஸ் போடவே பிடிபதில்லை. ஆகவே ஓட்டுகள் என்று உண்டு. சரிதானே?!

ரஹீம் கஸாலி சொன்னது…

ஆஹா...ஒரே பதிவில் பல தகவல்கள்.கலக்குங்க நண்பா...

எனது வலைப்பதிவில் இன்றைய பதிவு புலன் விசாரணை - பாகம்-2

ஹுஸைனம்மா சொன்னது…

//மன்னர் 'ஃபேஸ் புக்கை' விலைபேசி
வாங்கப் போறதா வேற//

இப்படியெல்லாமா கொளுத்திப் போடுவீங்க, அடப்பாவிங்களா!!

//ஆறேழு வயசு குழந்தைகள் யூஸ்
செய்யும் டூத் பிரஷ்களை //

ஹூக்கும், இதென்ன பெரிசு? நான் காலேஜ்ல படிக்கும்போதும், வேலை பாக்கும்போதும் சில பெண்கள், ஜான்ஸன்ஸ் பேபி சோப்தான் பயன்படுத்துவாங்க. ஏன்னா, அவங்க சருமம் ரொம்ப பூப்போல ஆகணுமாம்!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//"எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கீங்களே? ஆமா இங்க அதுக்குள்ளே வெயிலடிக்க ஆரம்பிச்சுடுச்சே, குளிர் போயிடுச்சா?"

"அது சவுதி கிளைமேட், வரும் போவும்//

பஹ்ரைன்'லயும் இந்த நிலைதான்.....

அஹமது இர்ஷாத் சொன்னது…

:)

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ S.Sudharshan சொன்னது…

// உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை கொண்டு வந்துடீங்களே:) //

வாங்க S.Sudharshan

நம்ம மக்கள்ஸ் எல்லாம் இப்ப இப்படி இலகுவா கொடுத்தா தான் படிக்கிறாங்க!!

உங்களின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ அன்னு கூறியது...

// உங்க இடுகைகளின் தரம், அதில் வரும் படங்களின் தரமும் பெட்ரோல் விலை போல உயர்ந்து வருகிறது. வாழ்த்துக்கள் பாய் :) //

வாங்க அனீஸ்!! எல்லாம் நீங்கள் எல்லோரும் கொடுக்கும் பேராதரவு தான். இதைவிட நானென்ன சொல்லமுடியும். :-))

உங்களின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Chitra கூறியது...

// துணுக்குகளை தொகுத்து அப்படியே போடாமல், இருவருக்கு இடையே நடந்த உரையாடல் போலவே பதிவில் தந்து இருப்பது, வாசிக்க நல்லா இருந்தது. தொடருங்கள்!//

வாங்க டீச்சர்! ஆஹா நீங்க சொல்லிடீங்கள்ள இனி என்ன, அசத்திடுவோம்!!

உங்களின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

// நல்லா சுவராசியமா விஷயங்களை தொகுத்து உரையாடலா கொண்டு போயிருக்கீங்க, இதே மாதிரி அடிக்கடி போடலாமே....! //

வாங்க பாஸ்! அவசியம்... இனி வாரம் ஒரு முறை இந்த விருந்தை பரிமாறிடுவோம் தல!!

உங்களின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Nahasi கூறியது...

// அஸ்ஸலாமு அலைக்கும் நாநா உங்களின் எழுத்து நடை நல்ல இருக்கு ரசித்து படிக்கும் படி எழுதுறிங்க வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்//

வ அலைக்கும் சலாம். அவசியம் எழுதுறேன் தம்பி!

உங்களின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ மாணவன் கூறியது...

// உரையாடல் வடிவில் தகவல்களை பகிர்ந்துகொண்டது நல்லாருக்கு நண்பரே :) //

வாங்க மாணவர் சார்!

உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

ஓட்ட வட நாராயணன் கூறியது...

// "உங்க பதிவுலகத்தில் நிறைய பேர காணலியே ஏன் என்னாச்சு?!"
என்று ஒரு புகாரையும் வாசித்தார். என்ன சொல்றது?? "அடுத்தப் பதிவில் அதைப் பற்றி ஆராய்வோம்" என்றேன். //

சச்பென்சு தாங்க முடியல சீக்கிரம் போடுங்க பாஸ்!!

லிஸ்ட் தயாராகிறது.. விரைவில் உங்கள் பார்வைக்கு வரும் தல!

ஓட்ட வட நாராயணன் உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி கூறியது...

//"உங்க பதிவுலகத்தில் நிறைய பேர காணலியே ஏன் என்னாச்சு?!"//

//அதுக்கு ஒரு விசாரனை கமிட்டி போட்டுடலாமா..?? //

விசாரணை கமிட்டி தலைவரே நீங்க தான். தலைவரே இடையிடையே காணா போய்டுறீங்க. நாங்க யார்கிட்ட போய் முறையிடுறது. அவ்வ்வ்வ!!

ஜெய்லானி உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி கூறியது...

//நடந்து போனாலே பர்ஸ் பிளஸ் செல் போனை இழப்பது நிச்சயம். //

// இதுப்போல அங்கிருந்து வரும் செய்திகள் அந்த நாட்டு மேலே இருக்கும் மரியாதையை குறைச்ச்சி கிட்டே வருது..//

நீங்க தன்னலம் கருதா பொது நலம் விரும்பி பாஸ்! ஐ லைக் தட்!!:-))

ஜெய்லானி உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ asiya omar கூறியது...

// ஒஹோன்னு இருக்கு இந்த பதிவு, காதர்ஜியும் சர்மாஜியும் சூப்பர் காம்பினேஷன், இன்னும் நிறைய பேசுங்க.//

பேசுவதென்றால் தான் நமக்கு ரொம்ப பிடிக்குமே!! அவ்வ்வ்வ்...!!

// என்னமோ தெரியலை,பல்லை பற்றி அடிக்கடி எழுதற மாதிரி இருக்கு,சகோ.பல்லு போயிடுச்சோ//

அப்படியில்லை சகோ! நீங்கள் முன்னே படித்தது 'பல்லும் சொல்லும்' ஜமால் பேரா.ஷாகுல் ஹமீது சாருது. இது உங்கள் எல்லோருக்காகவும் எழுதப்பட்டது. சரியா!!

asiya omar உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ vanathy கூறியது...

// நல்லா இருக்கு கேள்வி & பதில். நாட்டாமை, எப்பவும் பூனைப் படை பாதுகாப்போடு தான் வெளியே போவீங்க போலிருக்கே.//

ஆமா மியாவ்....!!! மீ எஸ்..... ஹா..ஹா..!!

வானதி உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஸாதிகா கூறியது...

//நடந்து போனாலே பர்ஸ் பிளஸ் செல் போனை இழப்பது நிச்சயம். //

// அங்கேயும் அப்படியா??//

இது இப்ப இல்ல!! ரொம்ப காலமா தொடருது! வெளியில் சொல்லத் தெரியல!!

ஸாதிகா உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ கக்கு - மாணிக்கம் கூறியது...

// டெம்பிளேட் கமெண்ட்ஸ் போடவே பிடிபதில்லை. ஆகவே ஓட்டுகள் என்று உண்டு. சரிதானே?! //

ஊஹும்..நான் இதுக்கு ஒருபோதும் ஒப்புக் கொள்ளமாட்டேண்ணே!! அப்பப்ப வந்து 'செல்லமா' ரெண்டு கிள்ளு கிள்ளிட்டு போங்கண்ணே!! ஹா..ஹா..

கக்கு - மாணிக்கம் உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ரஹீம் கஸாலி கூறியது...

//ஆஹா...ஒரே பதிவில் பல தகவல்கள். கலக்குங்க நண்பா...//

வாங்க தல! தங்கள் சித்தப்படியே ஆகட்டும்!!

ரஹீம் கஸாலி உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஹுஸைனம்மா கூறியது...

//மன்னர் 'ஃபேஸ் புக்கை' விலைபேசி வாங்கப் போறதா வேற//

// இப்படியெல்லாமா கொளுத்திப் போடுவீங்க, அடப்பாவிங்களா!! //

செய்தி உண்மை தான் ஹுசைனம்மா. இந்நேரம் டாட் காமில் வந்தது!!

ஹுஸைனம்மா உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஹுஸைனம்மா கூறியது...

//மன்னர் 'ஃபேஸ் புக்கை' விலைபேசி வாங்கப் போறதா வேற//

// இப்படியெல்லாமா கொளுத்திப் போடுவீங்க, அடப்பாவிங்களா!! //

செய்தி உண்மை தான் இந்நேரம் டாட் காமில் வந்தது ஹுசைனம்மா!!

ஹுஸைனம்மா உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

அந்த டூத் பிரஷ் மேட்டர்..உண்மை தான்.. :-))

நல்லா இருந்ததுங்க.. படிக்கறதுக்கு.. :)
நன்றி.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஹுஸைனம்மா கூறியது...

// ஹூக்கும், இதென்ன பெரிசு? நான் காலேஜ்ல படிக்கும்போதும், வேலை பாக்கும் போதும் சில பெண்கள், ஜான்ஸன்ஸ் பேபி சோப்தான் பயன்படுத்துவாங்க. ஏன்னா, அவங்க சருமம் ரொம்ப பூப்போல ஆகணுமாம்!! //

அது வேறு ஒண்ணுமில்ல ஹுசைனம்மா, பேபி பவுடர் யூஸ் பண்றது சின்ன பிள்ளை மாதிரி 'எப்பவுமே' இருக்கணும்னு தான். அவ்வ்வ்வவ் ...!!

ஹுஸைனம்மா உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ MANO நாஞ்சில் மனோ கூறியது...

//"எல்லாம் தெரிஞ்சு வச்சிருக் கீங்களே? ஆமா இங்க அதுக்குள்ளே வெயிலடிக்க ஆரம்பிச்சுடுச்சே, குளிர் போயிடுச்சா?" "அது சவுதி கிளை மேட், வரும் போவும்//

// பஹ்ரைன்'லயும் இந்த நிலைதான்.....//

இன்னிக்கி இதை எழுதும் போது இங்கே குளிருது தல ஹி..ஹி..!!

MANO நாஞ்சில் மனோ உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ அஹமது இர்ஷாத் கூறியது...

// :) //

ஊருக்கு போயிட்டு வந்தவுடனே அப்படியென்ன சந்தோஷம், சிம்லேயில இப்படி சிரிக்கிறிங்க பாஸ்!!

அஹமது இர்ஷாத் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Ananthi (அன்புடன் ஆனந்தி) கூறியது...

//அந்த டூத் பிரஷ் மேட்டர்..உண்மை தான்.. :-)) நல்லா இருந்ததுங்க.. படிக்கறதுக்கு.. :) நன்றி.//

வாங்க ஆனந்தி, நம்ம கடைக்கு வந்து நாளாச்சே!! டூத் பிரஷ் மேட்டர் அனுபவமா?? :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

//வாங்க ஆனந்தி, நம்ம கடைக்கு வந்து நாளாச்சே!! டூத் பிரஷ் மேட்டர் அனுபவமா?? :-))//

...அதெல்லாம் ஒண்ணும் இல்லங்க.. கொஞ்சம் வேலை ஜாஸ்தி..

ஆமாங்க.. அனுபவம் தான் :-))

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Ananthi (அன்புடன் ஆனந்தி) கூறியது...

// ...அதெல்லாம் ஒண்ணும் இல்லங்க.. கொஞ்சம் வேலை ஜாஸ்தி.. ஆமாங்க.. அனுபவம் தான் :-)) //

அடடா நான் சும்மா கலாய்ச்சேங்க... நேரம் கிடைக்கும் போது வாங்க சகோ!!

அனுபவம் தான் நாம் எல்லோர் முன்னிலையிலும் துணித்து பேச ஒரு அத்தாரிட்டி!!

Ananthi (அன்புடன் ஆனந்தி) உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

ஜெய்லானி சொன்னது…

//அனுபவம் தான் நாம் எல்லோர் முன்னிலையிலும் துணித்து பேச ஒரு அத்தாரிட்டி!! //

பிச்சி புடுவேன் பிச்சி...!! :-))

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி கூறியது...

//அனுபவம் தான் நாம் எல்லோர் முன்னிலையிலும் துணித்து பேச ஒரு அத்தாரிட்டி!! //

// பிச்சி புடுவேன் பிச்சி...!! :-)) //

பிச்சாலும் நம்ம கூட்டணி ஒரு போதும் பிரியாது பாஸ் ஹி..ஹி..!!

ஜெய்லானி உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

enrenrum16 சொன்னது…

ஓ..ஷர்மாஜி ஒரு கற்பனை கதாபாத்திரமா... நல்லாருக்கே... நாட்டு நடப்பை ரெண்டு பேரும் (துவைக்காமல்) அலசிய விதமும் நல்லாருக்கு...

♔ம.தி.சுதா♔ சொன்னது…

வித்தியாசமான விடயத்தை வித்தியாசமாக பகிர்ந்துள்ளீர்கள் நன்றி...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.