facebook

செவ்வாய், மார்ச் 22, 2011

சவுதி சவுதி
சவுதி சவுதி

நான் சவுதிக்கு வந்து எத்தனை வருஷமாச்சுன்னு எனக்கே
தெரியல! விடுங்க! அதுவா முக்கியம். எழுத வந்த தகவல்
முக்கியம். அத முதல்ல பார்ப்போம். முதன் முதலா வந்து
சேர்ந்தது மிகப் பெரிய கம்பெனி.  அவங்க கொடுத்த ஃப்ரீ விசா-
வில் நாங்கள் எல்லோரும், டெல்லி ஏஜெண்ட் வழியாக இங்கே
வந்து சேர்ந்தோம்.

கிட்டத்தட்ட ஐயாயிரம் பேர் அந்த கம்பெனியில் வேலைப் பார்த்து வந்தார்கள். சவுதியில் எல்லாப் பகுதிகளிலும் அதன் கிளைகள்
பறந்து விரிந்து கிடந்தது. எல்லாமே நல்லா தான் போய்க்
கொண்டிருந்தது.  முதல் வெகேஷன் போய் வந்த பின்

எனக்கு பிடிக்கலையோ, இல்லை  அவங்களுக்கு என்னை
பிடிக்கலையோ தெரியல! ரிலீஸ் தந்துட்டாங்க. அப்பவெல்லாம்
ரிலீஸ் என்பது சர்வ சாதாரணம் பெரிய கம்பெனியா இருக்கிறதால
தானே வேலையும் அதிகமா இருக்கு, சின்ன கம்பெனியா பார்த்து
சேரலாமேன்னு தேடி தேடித் பார்த்து சேர்ந்தேங்க. அது ஒரு
சப்ளையர் கம்பெனி. இருக்கிற நாலஞ்சு சேல்ஸ்மேன்கள் பெரிய
பெரிய கம்பெனிகளுக்கு சாமான்களை எடுத்துக்கொண்டு காலையில் போகிறவர்கள், மாலையில் தான் திரும்ப வருவார்கள்.

அப்ப நானும் ஒரு ஆபீஸ் பாயும் தான் இருப்போம். அவர்
ரொம்ப விபரம் தெரிந்தவர். 'வேக்குவம்' போட்டு விட்டு,
எல்லோருக்கும் டீ காபி போட்டுக் கொடுத்து விட்டு, போஸ்ட்
பாக்ஸில் லெட்டர்  எடுத்து வருகிறேன் பேர்வழி என்று
கம்பி நீட்டுகிறவர் மாலையில்  நாலு மணிக்கு தான் திரும்ப
வருவார்.

அப்பவெல்லாம் கம்பியூட்டரும், இன்டர்நெட்டும் வராத காலம்.
தனியே இருந்துக் கொண்டு எவ்வளவு பேருக்கு தான் லெட்டர்
எழுதுவது.  அதுவும் போரடிச்சு போச்சு. இப்படியே இருந்தா ஒரு
வேலையும் கற்றுக் கொள்ளாம காலம் பூரா இருந்து விட
வேண்டியது தான் என்று மனசு குறுகுறுத்தது. என்ன
பண்ணலாம் யோசித்தேன்!!!!

                                                                                              ((((தொடரும்))))

*****************@@@@@@@@************@@@@@@@**********@@@@@@@


சவுதியில் நிறைய பாடகர்கள் வரிசையில் 'நான்ஸி' ரசிகர்கள்
கூட்டமும் இருக்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்டவே "சவுதி
சவுதி" பதிவில் அதுவும் குறிப்பிட்டு  சேர்க்கப்பட்டிருந்தது.
இப்ப இதில் பதிந்த பதிவு  நீக்கப்பட்டது!24 கருத்துகள்:

ஹாஜா மொஹைதீன் சொன்னது…

"அப்பவெல்லாம் கம்பியூட்டரும், இன்டர்நெட்டும் வராத காலம்.
தனியே இருந்துக் கொண்டு எவ்வளவு பேருக்கு தான் லெட்டர்
எழுதுவது. எவ்வளவு பாட்டுகள் தான் கேட்பது"
அட நம்ம ஆளு

vanathy சொன்னது…

நான் சவுதிக்கு வந்து எத்தனை வருஷமாச்சுன்னு எனக்கே
தெரியல! விடுங்க! அதுவா முக்கியம். //
வயசை குத்து மதிப்பா கண்டு பிடிச்சுடுவோம்ல. அதான் நாட்டாமை பம்முறாரு போல.

இதுக்கும் தொடருமா??? டூ மச்!!!!

ஜெய்லானி சொன்னது…

எழுதுறதே ரொம்பவும் அதிகம் ...இதுல தொடரும் வேறயா...??? :-))

சவுதியில இருந்துகிட்டு நான்ஸிக்கு ரசிகரா இல்லாட்டி எப்படி..?? ஹி..ஹி...

எல்லாம் LbC சேனல் செய்யுற வேலை :-)))))))))))))))))))

ஜெய்லானி சொன்னது…

//"அப்பவெல்லாம் கம்பியூட்டரும், இன்டர்நெட்டும் வராத காலம்.
தனியே இருந்துக் கொண்டு எவ்வளவு பேருக்கு தான் லெட்டர்
எழுதுவது. எவ்வளவு பாட்டுகள் தான் கேட்பது"//

நாங்க அந்த டைமில ஓடி பிடிச்சி விளையாடுவோமே.. ஹா..ஹா.. :-))

செ.சரவணக்குமார் சொன்னது…

சவுதி அனுபவங்களைத் தொடர்ந்து எழுதுங்கள் தலைவரே.

செ.சரவணக்குமார் சொன்னது…

நான்ஸி...

நன்றி.

நாடோடி சொன்னது…

நீங்க‌ க‌ல‌க்குங்க‌... :)

asiya omar சொன்னது…

தொடர்ந்து எழுதுங்க சகோ,நான்ஸியை இப்ப தான் தெரிஞ்சிகிட்டேன்..

அன்னு சொன்னது…

//சொல்வதை அழகாய் - மிடுக்காய் - மனத்தைக் கொள்ளை கொள்ளும்படி - சொல்லிவிட்டு போங்க!! //
பதிவை விட இது நல்லாருக்கே...!!

ஹி ஹி ஹி

பாய், அடுத்த பதிவுக்கு கவலையே படாம் இந்த தொடர் பதிவை எழுதிடுங்க :)
http://mydeartamilnadu.blogspot.com/2011/03/blog-post_22.html

அன்னு சொன்னது…

//காலீத் பாடிய "தீதீ-தீதீ" என்ற ‘ரய்’ பாடல் இந்தியாவில்
மிகப் பிரபலம். //

எனக்கும் பிடித்த பாடல் :)

அன்புடன் மலிக்கா சொன்னது…

நான்ஸியா????????? அப்படின்னா யாரு. ஓ அதான் சொல்லிட்டீங்கள்ல பாடகின்னு ..

சவுதி. நான்ஸி. ம்ம்ம் இதுல தொடரும் தொடருங்க..

Mohamed Faaique சொன்னது…

உங்க வரலாற்றை சொல்ல பொரீங்க போல... ம்ம்ம் நடக்கட்டும்.. நடக்கட்டும்... நல்லா இருக்கு..
நான்சி.. இசை கேட்பது ஹராம். இந்த லின்க்’கை பார்த்து இசை கேட்க தொடங்கினால், அதன் கூலி’யில் உங்களுக்கும் பங்கு வருமே!! நான் யாருக்கும் உபதேசம் செய்ய விரும்புவதில்லை.ஆனால் இங்கு சொல்லாமல் இருக்க முடியவில்லை.

Mohamed Faaique சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Mohamed Faaique சொன்னது…

http://faaique.blogspot.com/2011/03/blog-post_20.html உங்கள் வேண்டுதலுக்காக முயற்சி செய்தது..

சிநேகிதன் அக்பர் சொன்னது…

என்ன தல ஆர்வமா படிச்சிட்டு இருக்கும் போது தொடரும் போட்டுட்டிங்க. சீக்கிரம் எழுதுங்க.

சவுதிகள் நிறைய பேர் நான்சியின் ரசிகர்கள். நான் காரில் செல்லும் போது இந்த பாட்டுகளைதான் ஓட விடுவார்கள்.

அதுபோல ரூபி மற்றும் இன்னும் சில பாடகிகளும் இவர்களின் விருப்பம்.

அரசரை சில பாடகர்கள் புகழ்ந்து பாடுவார்களே அதில் முகமது அப்த் தை இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@ ஹாஜா மொஹைதீன் சொன்னது…

//"அப்பவெல்லாம் கம்பியூட்டரும், இன்டர்நெட்டும் வராத காலம்.
தனியே இருந்துக் கொண்டு எவ்வளவு பேருக்கு தான் லெட்டர் எழுதுவது.
எவ்வளவு பாட்டுகள் தான் கேட்பது"//
//அட நம்ம ஆளு//

வாங்க கூட்டாளி!!

ஹாஜா மொஹைதீன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ வானதி கூறியது...

// வயசை குத்து மதிப்பா கண்டு பிடிச்சுடுவோம்ல. அதான் நாட்டாமை பம்முறாரு போல. இதுக்கும் தொடருமா??? டூ மச்!!!! //

வாங்க வான்ஸ் டூ மச்சா இருந்ததால தான் தொடரும் போட்டேன்!!! அவ்வவ்...!!ஆனாலும் வயச கண்டுபிடிக்கிறதுல இவங்களுக்கு உள்ள சந்தோசத்தை பாருங்கய்யா!! சகோதர நட்புகளுக்குள்ளே இதுவும் டூ மச் தானே. கேட்போம்ல. கர்ர்ர்ர்ர்ர்..

வான்ஸ் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி கூறியது...

// எழுதுறதே ரொம்பவும் அதிகம் ...இதுல தொடரும் வேறயா...??? :-)) //

வாங்க செல்லம். நீங்க ஒரு ஆள் தான் பாக்கி. நீங்களும் இப்ப சொல்லிடீங்க!!

// சவுதியில இருந்துகிட்டு நான்ஸிக்கு ரசிகரா இல்லாட்டி எப்படி..?? ஹி..ஹி...//

அங்கிட்டு எப்படி????? க்கி.. க்கி..

// எல்லாம் LbC சேனல் செய்யுற வேலை :-))))))))))))))))))) //

அது மட்டுமா MBC-ய விட்டுடீங்களே!! இன்னும் எத்தனையோ பிரைவேட் சேனல்களும் >>

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

ஜெய்லானி கூறியது...

//"அப்பவெல்லாம் கம்பியூட்டரும், இன்டர்நெட்டும் வராத காலம்.
தனியே இருந்துக் கொண்டு எவ்வளவு பேருக்கு தான் லெட்டர் எழுதுவது.
எவ்வளவு பாட்டுகள் தான் கேட்பது"//

// நாங்க அந்த டைமில ஓடி பிடிச்சி விளையாடுவோமே.ஹா..ஹா.:-))//

யார்கூட-ன்னு கேட்கமாட்டேன். ஏன்னா எனக்கு தான் தெரியுமே!! ஹா..ஹா.:-))

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

செ.சரவணக்குமார் கூறியது...

// சவுதி அனுபவங்களைத் தொடர்ந்து எழுதுங்கள் தலைவரே.//

எழுதுறேங்க!!

// நான்ஸி...நன்றி.//

நான்ஸிக்கு எதுக்கு நன்றி!! ஹி..ஹி..

செ.சரவணக்குமார் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ நாடோடி கூறியது...

// நீங்க‌ க‌ல‌க்குங்க‌... :)//

வாங்க ஸ்டீபன். நல்லா இருக்கீங்களா??

உங்கள் வருகைக்கு நன்றி!

ஹுஸைனம்மா சொன்னது…

அட, டான்ஸ்/பாட்டு வீடியோ!! அடுத்ததா என்ன, ஜோக்ஸ், தத்துவம் கார்னர்கள் ஒண்ணொண்ணா எல்லாம் வருமா? பெரிய ஆளாகிடுவீங்க அப்ப?

“நான் வளர்கிறேனே மம்மீ!!”

:-))))

அன்னு சொன்னது…

kader bhai,

May Allah bless you abundantly with the best of both worlds.

wa Salam,
Sister in Islam.

கொல்லாபுரம் S.M.சாதிக் சொன்னது…

தொடர்ந்ததா ??????