facebook

புதன், ஏப்ரல் 27, 2011

"வைரஸ் போயிடுச்சா?"




"வைரஸ் போயிடுச்சா..??"

“SUN LIKES THE SUNDAY
MOON LIKES THE MONDAY
BUT I LIKE ONEDAY
THATS YOUR BIRTHDAY”

இதை காதலிகளுக்கு அனுப்பினாலாவது சந்தோஷப் பட்டிருப்-
பார்கள். என் நண்பரின் பர்த்டேக்கு வந்த மெயிலை என்னிடம்
காட்டி புளங்காகித மடைந்துக் கொண்டிருந்தார். இது ரொம்ப பழசு
என்று சொன்னால் எங்கே மனசொடிந்து விடுவாரோ என்றெண்ணி,

"இது உங்க கேர்ள் ஃபிரெண்ட் அனுப்பியதா?" என்றேன்.

"ஹி.. ஹி.."

"இல்ல குளோஸ் ஃபிரெண்ட் அனுப்பியதா?"

"இது என் வீட்டுக்காரங்க அனுப்பியது" என்று மரியாதையாக
சொன்னார். (மறுபடியும்) ஹி.. ஹி...!! அப்பாடா என்ன ஒரு
மரியாதை!! என்ன ஒரு மரியாதை!! அப்படி தான் இருக்கணும்.
அவ்வ்வ்வ்....!!

கஸ்டமர் கேர் கவுண்டரில் உட்கார்ந்திருந்த எனக்கு இந்த கொசுத் தொல்லையில் இருந்து தப்பிக்க, யாரும் கிடைத்தால் போட்டு
கும்மலாம் என்று தோன்றியது.

அப்போது வெளியில் நின்றிருந்த செக்யூரிட்டி(அரபி) பணம்
அனுப்ப வந்த ஒரு "சிரியா" கஸ்டமரை அழைத்து வந்து, அவர்
பணம் அனுப்ப வழிமுறைகளை சொல்லும்படி கேட்டுக் கொண்டார்.
அந்த நேரம் உண்மையிலேயே 'சர்வர் ப்ராப்ளம்'.  என்றாலும் அதை
எப்படி அவருக்கு சொல்லி விளங்க வைப்பது?? சும்மா "வைரஸ்
ப்ராப்ளம்" என்று சொல்லி வைத்தேன். "அப்படியா?" என்று கேட்டுக்
கொண்டு போய் விட்டார். பிறகு நான் அதை மறந்தும் விட்டேன்.

அரைமணி நேரம் சென்றிருக்கும். திரும்பி வந்த அவர்,
"முஹம்மது ஃபைரூஸ் போயிடுச்சா?" என்று கேட்டார். எனக்கு
சட்டென்று விளங்கவில்லை. நான் வைரஸ் என்று சொன்னதை
தான் அவர் 'ஃபைரூஸ்' என்று புரிந்துக் கொண்டார் என்று அறிந்த
நான்.. கிர்ர்ர்ர்ர்… ஆனேன்.

+++++++++++++++………………………+++++++++++++++++…………………….

தகவலோ தகவல்:

இச்செய்தியினை மற்றவர்களோடும் பகிர்ந்து கொண்டால் பயன் பெற ஏதுவாயிருக்குமென நம்புகின்றேன்.

1) தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.

2) பொறியியல் கல்வி படித்த மாணவர்கள் தங்களின் கல்வி விபரம் குறித்து http://www.campuscouncil.com/ என்ற தளத்தில் பதிந்து வைப்போமானால் குறிப்பிட்ட நாற்பது நிறுவனங்கள் நடத்தும் நேர்முகத் தேர்வில் எளிதாக கலந்து கொள்ள முடியும்.

3) மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கல்வி, இலவச விடுதி குறித்து தகவலைப் பெற‌ 9842062501 & 9894067506 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

4) தீ விபத்துக்களினாலோ அல்லது பிறக்கும் போதே வாய், காது , மூக்கு போன்ற உறுப்புக்களின் வளர்ச்சி குறைந்த நிலையில் இருந்தாலோஇலவசமாக ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள முடியும். PASAM Hospital , Kodaikanal மேலும் தகவல்களைப் பெற PASAM மருத்துவமனைக்கு 045420 240668,245732 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

5) வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம்... போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சற்பெட்டியில் இட்டுவிடுங்கள். அது தானாக உரியவரிடம் சேர்ந்து விடும். அதற்குரிய அஞ்சற்செலவுத் தொகையை சம்பந்தப் பட்ட நபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக் கொள்ளும்.

6) அடுத்த 10 மாதங்களில் நம் பூமியின் வெப்ப நிலை கூடுதலாக 10டிகிரி உயர்ந்து இப்போதிருக்கும் வெப்பத்தை விட அதிகமான வெப்பம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். நமது இமயமலையில் உள்ள பனிப் பாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்து விட்டனவாம். ஆகையினால் நாம் புவி வெப்ப மயமாதலை எதிர்த்துப் போராட வேண்டிய தருணத்திலிருக்கின்றோம் என்பது நாமறிந்த செய்தியே!

அதனால் நம்மால் முடிந்த வரை

*மரங்களை நட்டு அதனைப் பேணிக் காக்கலாம்.

**நீரினையும், இன்ன பிற சக்திகளையும் (மின்சாரம் உள்பட) தேவையில்லாமல் செலவழிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்

***ப்ளாஸ்டிகை பயன்படுத்தாமலும் அவற்றின் கழிவுகளை எரித்து நாசம் செய்யாமலும் இருக்க முயற்சிக்கலாம்.

7) இப்போதிருக்கும் மனித இனம் ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயு தயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இத்தனை சிரமம் இல்லாமல் நமக்காக பிராணவாயு அளிக்கும் மரங்களை நட்டு அவற்றிற்கும் மரியாதை செய்வோமே!!

8) கண் வங்கி, கண் தானம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ள சங்கர நேந்த்ராலயா கண் வங்கியின் சிறப்புத் தொடர்பு எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப் படும் சமயம் நிச்சயமாக உதவும். 044 28281919 மற்றும் 044 282271616
மேலதிக விபரங்களுக்கும் எப்படி கண் தானம் செய்வது குறித்த தகவல்களுக்கும். http://ruraleye.org/

9) பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை வேண்டின் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது. மேலும் விபரங்கள் பெற 9916737471

10) இரத்தப் புற்று நோய்:

"Imitinef Merciliet" என்ற மருந்தின் மூலமாக இரத்தப் புற்று நோயை குணப்படுத்தலாம். இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கின்றது.

மேலும் விபரங்களுக்கு

East Canal Bank Road, Gandhi Nagar,
Adyar Chennai - 600020
Land mark: மிக்கேல் பள்ளிக்கு அருகில்
தொலைபேசி இலக்கம் : 044 - 24910754, 044-24911526, 044-22350241

*
நன்றி : பண்புடன் குழுமம் ஜீவா.K.S + ஷாஜஹான்


24 கருத்துகள்:

சிநேகிதன் அக்பர் சொன்னது…

ஃபைரூஸ் . ஹா.ஹா.ஹா..

===

மிகவும் பயனுள்ள தகவல் தல.

Balaji saravana சொன்னது…

மிகத் தேவையான தகவல்கள் பாஸ்! நன்றி!
//முஹம்மது ஃபைரூஸ் //
புது வகையான வைரஸா இருக்கே! ஹி ஹி.. ;)

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//அரைமணி நேரம் சென்றிருக்கும். திரும்பி வந்த அவர், "முஹம்மது ஃபைரூஸ் போயிடுச்சா?" என்று கேட்டார். எனக்கு சட்டென்று விளங்கவில்லை. நான் வைரஸ் என்று சொன்னதை தான் அவர் 'ஃபைரூஸ்' என்று புரிந்துக் கொண்டார் என்று அறிந்த நான்.. கிர்ர்ர்ர்ர்… ///

நீங்க கிர்ர்ர்ர் ஆனது சரி, எங்களையும் கிர்ர்ர்ர்ர்ர்ர் அடிக்க வச்சிட்டீங்களே....ஹே ஹே ஹே ஹே...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நல்ல பதிவு மக்கா....

ரஹீம் கஸாலி சொன்னது…

தகவலோ தகவல் மூலம் மிக பயனுள்ள தகவல்களை தந்துள்ளீர்கள்

ஹுஸைனம்மா சொன்னது…

ஆங்கிலக் கவிதையில் சொற்குற்றம் உள்ளது.

//BUT I LIKES //

I likeதான் வரும். I கூட likesனு வராது. ;-)))))

நல்லவேளை அவர் ஃபைரூஸ்னு புரிஞ்சிகிட்டார். ஒருவேளை வைரஸ்னே கேட்டிருந்துச்சுன்னா, போய் மருந்து,மாத்திரை வாங்கிவந்து கம்ப்யூட்டருக்குக் கொடுக்கச் சொல்லிருந்தா? :-))))))

vanathy சொன்னது…

கஸ்டமர் கேர் கவுண்டரில் உட்கார்ந்திருந்த எனக்கு இந்த கொசுத் தொல்லையில் இருந்து தப்பிக்க, யாரும் கிடைத்தால் போட்டு கும்மலாம் என்று தோன்றியது.// hahaa... pavam neenga!!!

சிநேகிதன் அக்பர் சொன்னது…

//ஆங்கிலக் கவிதையில் சொற்குற்றம் உள்ளது.

//BUT I LIKES //

I likeதான் வரும். I கூட likesனு வராது. ;-)))))//


நீங்க சொல்றது சரிதான் ஹுஸைனம்மா. ஆனா தலையோட நண்பர் அவரோட வீட்டுக்காரங்க கிட்ட இதை சொன்னாருன்னு வைங்க அவங்க ஒரேயடியா டிஸ்லைக் பண்ணிருவாங்க :)

Mohamed Faaique சொன்னது…

பைரூஸ்......
நல்லா கேக்குரானுங்க சார் டீட்டெய்லு...

கீழே பயனுள்ள தகவல்கள்

கக்கு - மாணிக்கம் சொன்னது…

மிக நல்ல தகவல் தொகுப்பு.

S.Menaga சொன்னது…

மிகவும் பயனுள்ள தகவல் தொகுப்பு!!

asiya omar சொன்னது…

பிறந்த நாள் வாழ்த்து ரைமிங்கா இருக்கே,கஸ்டமர் கேரில் இருப்பதால் வேலைக்கு வேலையும் ஆச்சு,பொழுதும் போன மாதிரியும் இருக்கும்..ஐ ஜாலி தான்.சகோ..

தகவல் தொகுப்பு நல்ல பகிர்வு..

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஹுஸைனம்மா சொன்னது…

ஆங்கிலக் கவிதையில் சொற்குற்றம் உள்ளது.

//BUT I LIKES // I like தான் வரும். I கூட likesனு வராது. ;-)))

ஒருவேளை 'அவங்க' இவரை ரொம்ப விரும்பிட்டாங்களோ? அதான் ரைமிங்கா இருக்கேன்னு இன்னொரு 'எஸ்' கூட சேர்த்துட்டாங்க போல!! அவ்வ்வ்வ்....

நன்றி ஹுசைனம்மா..

எம் அப்துல் காதர் சொன்னது…

@ வாங்க சிநேகிதன் அக்பர் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ வாங்க Balaji saravana நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ வாங்க MANO நாஞ்சில் மனோ நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ வாங்க ரஹீம் கஸாலி நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ வாங்க ஹுசைனம்மா நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ வாங்க வானதி நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ வாங்க mohamed faaique நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ வாங்க கக்கு-மாணிக்கம் சார் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ வாங்க மேனகா மேடம் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ வாங்க ஆசியா உமர் நன்றி! ஆமா....!!

டி.சாய் சொன்னது…

:)