facebook

புதன், ஏப்ரல் 20, 2011

30 கிலோ எடையை 60 நாட்களில் குறைப்பது எப்படி?30 கிலோ எடையை 60 நாட்களில் குறைப்பது எப்படி?

இது எனது அனுபவத்தில் நான் கண்ட பலன். உடல் எடை அதிகமிருக்கிறது என்று மருத்துவர் சொன்னதும், அதன் தொடர்ச்சியாக கார்போஹைட்ரேட் அதிகம் எடுக்காமல் டயட் உணவினை எடுத்துக் கொள்ளும்படியும் அறிவுறுத்தினார். 86 கிலோ இருந்தேன். தற்போது 56 கிலோ இருக்கின்றேன். உடற்பயிற்சி செய்வது இல்லை. ஆனாலும் உடல் பருமனைக் குறைத்தேன். எப்படி?

நான் தவிர்த்த உணவுகள்
========================

1) பால், தயிர் முற்றிலுமாக தவிர்த்தேன்.

2) புளியைத் தவிர்த்தேன்.

3) உப்பைக் குறைத்தேன். ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூனுக்கும்
குறைவான  உப்பை பயன்படுத்தினேன்.

4) எண்ணெய் முற்றிலுமாக இல்லாமல் சாப்பிட்டேன்.

5) தினம் ஒரு கொடம்புளி கீற்றினை குழம்பில் இட்டு அதைச்
சாப்பிட்டேன்

6) இரவில் நான்கு துண்டுகள் பப்பாளி சாப்பிட்டேன்.

7) காலையிலும், மாலையிலும் கிரீன் டீ மட்டுமே குடித்தேன்.

8) இனிப்பை தொடுவதே இல்லை (எனக்குப் பிடிக்கவே பிடிக்காத சுவை இது)

9) காய்கறிகள் இரண்டு கப் என்றால் அரிசி சாதம்  ஒரு கப் எடுத்தேன்.

10) தேங்காயைத் தவிர்த்தேன்.

11) கிழங்கு வகைகள், பூமியின் அடியில் விளையும் காய்கறிகள்  தவிர்த்தேன்.

12) மட்டன், சிக்கன் தவிர்த்தேன்.

சாப்பிட்ட பொருட்கள்
==================

காலை (7.30 மணிக்கு)
==================

* கிரீன் டீ ஒரு கப் தினம் தோறும்.

* தோசை என்றால் மூன்று தொட்டுக்கொள்ள கத்தரிக்காய் கொத்சு.

* இட்லி என்றால் மூன்று, தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி.

* சப்பாத்தி என்றால் இரண்டு அதனுடன் காய்கறிக் குருமா(தேங்காய்,  எண்ணெய் சேர்க்காமல் செய்தது)

* ஒரு கப் சாதம்(சுடுதண்ணீர் சேர்த்தது) அத்துடன் இரண்டு கப் காய்கறிகள்

>> மேற்கண்டவற்றில் ஏதாவதொரு உணவு காலையில் எடுத்துக் கொள்வேன்.

* காலை பத்து மணியளவில்  சில மேரி (அ) எதாவது பிஸ்கட்டுகளுடன் கொஞ்சம் தண்ணீர்.

மதியம் ( 12.45க்கு)
================
கீரை, ஒரு கப் சாதம், இரண்டு கப் வெந்த காய்கறிகள், பருப்பு, முட்டையின் வெள்ளைக்கரு (வாரம் ஒரு தடவை மட்டும்), சாம்பார், குழம்புகள் இவற்றில் காரம் அதிகமிருக்காது. புளிக்குப் பதில் கொடம்புளி பயன்படுத்துவேன். கிழங்கு வகை காய்கறிகளைத் தொடவே மாட்டேன். நாட்டுக் காய்கறிகளுடன் பருப்பு வகைகள் சேர்த்துக் கொண்டேன்.

மாலை (4.00க்கு)
================
* ஒரு கப் கிரீன் டீயுடன், சில மேரி (அ) எதாவது பிஸ்கட்டுகள்.

இரவு(7.30க்கு)
===========
* தோசை என்றால் மூன்று தொட்டுக்கொள்ள கத்தரிக்காய் கொத்சு

* சப்பாத்தி என்றால் இரண்டு அதனுடன் காய்கறிக் குருமா(தேங்காய்,  எண்ணெய் சேர்க்காமல் செய்தது)

* அத்துடன் மதியம் மீதமான காய்கறிகள் கொஞ்சம்

படுக்கும் முன்பு
==============
* ஐந்தோ அல்லது ஆறோ துண்டுகள் நன்கு பழுத்த பப்பாளி.

* இரண்டு லிட்டர் தண்ணீரை  இடையிடையே பருகுவேன்.

மேற்கண்ட உணவினைச் சாப்பிட்டு வந்தேன். உடல் எடை 56 கிலோ வந்து விட்டது. தற்போது ஒரு மாதம் எண்ணெய் சேர்க்காமல் சாப்பிடுவேன். அடுத்த மாதம் எண்ணெய் சேர்த்துச் சாப்பிடுவேன். மட்டன், மீன், சிக்கன் மாதமொரு முறைச் சேர்த்துக் கொள்வேன். அவ்வளவுதான் உடல் எடை குறைந்து, உடல் லேசானது போல ஆகி விட்டது.

*முக்கியமாக கவனிக்க வேண்டியது:
நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும். அதுமட்டுமின்றி இரவு
பத்து மணிக்கு உறங்க சென்று விட வேண்டும்.

டாக்டர் என்னை ஆச்சரியத்துடன் பார்த்தார். உடலுக்குத் தேவையான உணவினை மட்டுமே சாப்பிட்டால் நோய் எதற்கு வருகிறது?

நன்றி : தங்கவேல், தமிழ்மன்றம்.
நன்றி : ஷாஜஹான்
 குறிப்பு : மேலதிக தகவல்களுக்கு உங்களுடைய 'டயடீசியன்'-
களின் பரிந்துரைகளை  கேட்டுத் தொடருங்கள்.      


60 கருத்துகள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நல்ல உபயோகமான பதிவு....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஐ வடை எனக்கே....

விக்கி உலகம் சொன்னது…

நல்ல உபயோகமான பதிவு.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

தமிழ்மணத்தில் ஓட்டு [[ரொம்ப நாளா பிரச்சினை சரி ஆகிருச்சி]] போட்டாச்சு...
உங்கள் பதிவு அருமை....

எம் அப்துல் காதர் சொன்னது…

ஹா.. ஹா.. வாங்க தல!!

Jaleela Kamal சொன்னது…

present
pathil pooda mudiala apparam vareen

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//விக்கி உலகம் கூறியது...
நல்ல உபயோகமான பதிவு.//

எலேய் தக்காளி, என்ன காப்பி பேஸ்ட் பண்ணுருயா கொய்யால பிச்சிபுடுவேன் பிச்சி....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//எம் அப்துல் காதர் கூறியது...
ஹா.. ஹா.. வாங்க தல!!//


நீங்கதான் தல.....

நாங்கல்லாம் பிள்ளை பூச்சிங்க....

சிநேகிதி சொன்னது…

பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கு காதர்... மெயில் அனுப்பிய தமிழ்மன்ற நண்பருக்கு நன்றி..

ஆனால் இப்படி சட்டுனு 2 மாதத்தில் உடல் எடை 30 கிலோ கம்மியாவது உடலுக்கு ஆரோக்கியமில்லை என்று நான் நினைக்கிறேன்... ஒரு மாதத்திர்க்கு அதிக பச்சம் 4 அல்லது 5 கிலோ தான் கம்மியாக வேன்டும்..

ரஹீம் கஸாலி சொன்னது…

இதையெல்லாம் சாப்பாட்டுக்கு முன்னாடி சேர்க்கனுமா? பின்னாடி சேர்க்கணுமா? ஹி...ஹி...டவுட்டு

S.Menaga சொன்னது…

பகிர்வுக்கு நன்றி!! கொடம்புளின்னா என்ன?? ஆங்கிலத்தில் என்ன பெயர்?? இங்கு கிடைக்குதான்னு பார்க்கிறேன்.

asundar83 சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Chitra சொன்னது…

மெயிலில் அனுப்பி தந்தது : தங்கவேல், தமிழ்மன்றம்.


..... :-)))))))))

க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

கொடம்புளி
http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=824

http://ayurvedamaruthuvam.blogspot.com/2010/02/blog-post_09.html

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

நல்ல இடுகை. உடல் எடையை குறைத்தால் மட்டும் போதாது; மனதை எப்போதும் பிரஸ்ஸா வைத்திருத்தல் மிக அவசியம். சரிதானே!..

தம்பி கூர்மதியன் சொன்னது…

//மேற்கண்டவற்றில் ஏதாவதொரு உணவு காலையில் எடுத்துக் கொள்வேன்.//

நான் காலையில ஒண்ணுமே சாப்பிட மாட்டேன்.. ஹி ஹி.. உடனே அப்படி இருக்ககூடாதுன்னு சொல்லிடாதீங்க.. அது எனக்கும் தெரியும்.. அப்பரம் ஏன் சொன்னனு கேக்காதீங்க.. சொல்லணும் தோணுச்சு..

தம்பி கூர்மதியன் சொன்னது…

//காலை பத்து மணிவாக்கில் சில மேரி பிஸ்கட்டுகளுடன் கொஞ்சம் தண்ணீர்.//

காலையில பத்து மணிக்கு நான் எங்க இருப்பேன்னு எனக்கே தெரியாது.. ஐ திங்.. ஒபாமா கூட இந்தியா-அமெரிக்கா உறவை பத்தி பேசுவேன்னு நினைக்கிறேன்.. தினமுமான்னு கேக்கலாம்.. அதுக்கு என்னுடைய பதில் நானும் ஒபாமாவும் நண்பேன்டா..

தம்பி கூர்மதியன் சொன்னது…

//ஒரு கப் கிரீன் டீயுடன்,சில மேரி பிஸ்கட்டுகள்//

இந்த பதிவு மேரி பிஸ்கட் விளம்பரமா.?

தம்பி கூர்மதியன் சொன்னது…

//இரவு(7.30க்கு)//

நைட் 7.30க்கே சாப்பாடா.? நான் சாப்பிட 11 ஆகுமே.!!

தம்பி கூர்மதியன் சொன்னது…

//இடையிடையே இரண்டு லிட்டர் தண்ணீர் பருகுவேன்//

ஓவ்வொரு முறையும் ரெண்டு லிட்டர் தண்ணியா,??? என்னால முடியாதுப்பா..

தம்பி கூர்மதியன் சொன்னது…

// பத்துக்கு தூங்கச் சென்று விட வேண்டும்.//

பதினோறு மணிக்கு தான் சாப்பாடாம்.. நான் தூங்க 1 ஆகுமே.!!

தம்பி கூர்மதியன் சொன்னது…

//டாக்டர் என்னை ஆச்சரியத்துடன் பார்த்தார்.//

எனக்கு நம்பிக்கை இருக்கு என்னையும் டாக்டர் ஆச்சர்யமா பாப்பார்னு.. என்னடா இவன் இப்படி பெருத்துட்டே போறானேன்னு..

சித்தன்பாலா சொன்னது…

இரண்டு மாதங்களில் 30 கிலோ உடல் எடை ஆரோக்கியமாக குறைய வாய்ப்பே இல்லை. சிலவகையான நோய்களில் மட்டுமே (கேன்சர், அதிக தைராய்ட் சுரப்பு, சர்க்கரை வியாதி) துரிதமாக குறையும்.

அன்னு சொன்னது…

மன்னிக்கனும். இது சரியான டயட்டாக எனக்கு படவில்லை. உடலுக்கு கால்ஷியமும் புரோட்டீனும் கண்டிப்பாக தேவை. எண்ணெய் பால் சேர்த்தவில்லை என்றால், அவகேடோ, சோயா பீன், ராஜ்மா தினமும் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும். அதே போல் மீனும் டயட் செய்பவர்களுக்கே பரிந்துரைக்கப்படும் ஒரு உணவு. இது உங்களுக்கு தெரிந்தவராக இருந்தால் அவரிடம் டயட்டீஷியனிடம் காண்பிக்க கூறவும்.

பட்டாபட்டி.... சொன்னது…

என்னமோ போங்க...
பேசாம புல்லை மேயுங்கனு சொல்லியிருக்கலாமே..!! ஹி..ஹி

====================


வாழ்க்கைய நல்லா சாப்பிட்டு அனுபவிங்க..
கூடவே உடற்பயிற்சியும்...

Narmi சொன்னது…

Very useful information

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

மிகவும் பயனுள்ள பதிவு

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ S.Menaga கூறியது...

//கொடம்புளின்னா என்ன?? ஆங்கிலத்தில் என்ன பெயர்?? இங்கு கிடைக்குதான்னு பார்க்கிறேன்.//

கொடம்புளியின் பூர்வீகம் இந்தியா தான். தற்போது தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் விளைகின்றது/ கிடைக்கின்றது.

Tamil : கொடும்புளி, English : Brindel berry, Malayalam : Kodumpuli.

எல்லா சூப்பர் மார்க்கெட் களிலும் 'கொடம்புளி' என்று சொல்லியே கேட்கலாம். கிடைக்கும்.

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

நான் 60 கிலோ இருக்கேன். நானும் உடம்பை குறைக்கனுமா பாஸ்.

கடைசி வரியை படிக்கிறவரைக்கும் இது உங்க அனுபவம்னே நினைச்சேன்.

நல்ல பயனுள்ள தகவல்.

vanathy சொன்னது…

இதெல்லாம் சாத்தியமா? கிரீன் டீ எல்லோருக்கும் ஒத்து வருவதில்லை. ரத்தக் கொதிப்பு, சுகர் பிரச்சினை இருப்பவர்களுக்கு அது ஒத்து வராது. கிரீன் டீ குடித்த பின்னர் ( காலையில் வெறும் வயிற்றில் ) அவருக்கு நடந்த சோகத்தை ஒரு பெண் எழுதி இருந்தார். முறையான உணவுப் பழக்கத்திற்கு ஒரு டயட்டீஷியனை நாடுவதே நலம்.

நாடோடி சொன்னது…

உங்க‌ க‌தைதான் என்று ஆர்வ‌முட‌ம் ப‌டித்தேன்.. க‌டைசில்.. :)

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//எம் அப்துல் காதர் கூறியது...
ஹா.. ஹா.. வாங்க தல!!//

// நீங்கதான் தல.....
நாங்கல்லாம் பிள்ளை பூச்சிங்க.... //

நாங்கள்லாம் வாயில்லாப் பூச்சிங்க தல :-)))

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ விக்கி உலகம் கூறியது...

// நல்ல உபயோகமான பதிவு.//

வாங்க விக்கி - நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Jaleela Kamal கூறியது...

// present pathil pooda mudiala apparam vareen //

வாங்க,, பொறுமையா வாங்க ஜலீலாக்கா - நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ சிநேகிதி கூறியது...

// ஆனால் இப்படி சட்டுனு 2 மாதத்தில் உடல் எடை 30 கிலோ கம்மியாவது உடலுக்கு ஆரோக்கிய மில்லை என்று நான் நினைக்கிறேன். ஒரு மாதத்திர்க்கு அதிக பச்சம் 4 அல்லது 5 கிலோ தான் கம்மியாக வேன்டும்..//

நீங்கள் சொல்வதும் சரி தான் சிநேகிதி, ஆனா நண்பர் ஊருக்கு போறாரோ என்னமோ தெரியல, அவசரமா வெயிட்டை குறைத்து விட்டார் போலும்!! :-)))

- நன்றி சிநேகிதி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ரஹீம் கஸாலி கூறியது...

//இதையெல்லாம் சாப்பாட்டுக்கு முன்னாடி சேர்க்கனுமா? பின்னாடி சேர்க்கணுமா? ஹி...ஹி டவுட்டு //

சாப்பாட்டுக்கு முன்பு கொஞ்சம், பின்பு கொஞ்சம் ஹி..ஹி.. (இதிலெல்லாம் கூடவா டவுட்டு! வெளங்கிரும்) இருங்க டாகுடர் தம்பி கிட்ட சொல்லி ஊசி போட சொல்றேன் அப்பவாவது பயம் வருதா பார்ப்போம். அவ்வ்வ்வ்!!

- நன்றி ரஹீம் கஸாலி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

எம் அப்துல் காதர் சொன்னது…

// கருத்துரை நீக்கப்பட்டது

இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்.//

யார் மக்கா அது...?? என்னா எழுதினீங்க???

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Chitra கூறியது...

//மெயிலில் அனுப்பி தந்தது : தங்கவேல், தமிழ்மன்றம்.
..... :-)))))))))//

- நன்றி சித்ரா உங்கள் வருகைக்கும் 'சிம்லே' சிரிப்புக்கும்!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ க‌ரிச‌ல்கார‌ன் கூறியது...

//கொடம்புளி//

விவரம் சொன்ன க‌ரிச‌ல்கார‌ன் வாழ்க!!! :-))))

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Starjan (ஸ்டார்ஜன்) கூறியது...

// உடல் எடையை குறைத்தால் மட்டும் போதாது; மனதை எப்போதும் பிரஸ்ஸா வைத்திருத்தல் மிக அவசியம். சரிதானே!..//

ஆஹா..ஆஹா, தல (நீங்க) சொன்னா மனசு கேட்குமே!!

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ தம்பி கூர்மதியன் கூறியது...

//.. அப்பரம் ஏன் சொன்னனு கேக்காதீங்க.. சொல்லணும் தோணுச்சு..//

சொல்லனும்னு கூட தோனனுமே!!

- நன்றி தம்பி கூர்மதியன்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ தம்பி கூர்மதியன் கூறியது...

//காலையில பத்து மணிக்கு நான் எங்க இருப்பேன்னு எனக்கே தெரியாது.. ஐ திங்.. ஒபாமா கூட இந்தியா-அமெரிக்கா உறவை பத்தி பேசுவேன்னு நினைக்கிறேன்.. //

அப்ப, "சில மேரி பிஸ்கட்டுகளுடன் கொஞ்சம் தண்ணீர் வைக்க சொல்லிட்டப் போச்சு!! ஹி ஹி

- நன்றி தம்பி கூர்மதியன்

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ தம்பி கூர்மதியன் கூறியது...

// இந்த பதிவு மேரி பிஸ்கட் விளம்பரமா.? //

மேரி பிஸ்கட்டுக்கு ஏன் விளம்பரம்? சாதரணமாவே எல்லார் வீட்டிலும் அது 'டீ'க்கு இருக்கும் தானே!!

- நன்றி தம்பி கூர்மதியன்

எம் அப்துல் காதர் சொன்னது…

தம்பி கூர்மதியன் கூறியது...


//இரவு(7.30க்கு)//

//நைட் 7.30 க்கே சாப்பாடா.? நான் சாப்பிட 11 ஆகுமே.!!//

பரவா இல்ல, 7.30க்கு சாப்ட்டுட்டு, பிறகு 11 மணிக்கு சாப்பிடுங்க!! :-))

- நன்றி தம்பி கூர்மதியன்

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ தம்பி கூர்மதியன் கூறியது...

// எனக்கு நம்பிக்கை இருக்கு என்னையும் டாக்டர் ஆச்சர்யமா பாப்பார்னு.. என்னடா இவன் இப்படி பெருத்துட்டே போறானேன்னு..//

இருக்காதா பின்னே!! இவ்வளவு கேள்வி கேட்டா?? அவ்வ்வ்வ்..!!

- நன்றி தம்பி கூர்மதியன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ சித்தன்பாலா கூறியது...

// இரண்டு மாதங்களில் 30 கிலோ உடல் எடை ஆரோக்கியமாக குறைய வாய்ப்பே இல்லை. சிலவகையான நோய்களில் மட்டுமே (கேன்சர், அதிக தைராய்ட் சுரப்பு, சர்க்கரை வியாதி) துரிதமாக குறையும்.//

ஆமா டாக்டர் நீங்க சொன்னா சரியாத்தானிருக்கும்.

- நன்றி சித்தன்பாலா உங்கள் வருகைக்கும் முதல் கருத்துரைக்கும்!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ அன்னு கூறியது...

// இது உங்களுக்கு தெரிந்தவராக இருந்தால் அவரிடம் டயட்டீஷியனிடம் காண்பிக்க கூறவும்.//

அவரிடம் சொல்லிட்டேன்!

- நன்றி அன்னு உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ பட்டாபட்டி.... கூறியது...

// என்னமோ போங்க...பேசாம புல்லை மேயுங்கனு சொல்லியிருக்க லாமே..!! ஹி..ஹி //

இந்த செய்தி தங்கபாலுவுக்கு தெரியுமா தல :-))) !!
====================

// வாழ்க்கைய நல்லா சாப்பிட்டு அனுபவிங்க..கூடவே உடற்பயிற்சியும்...//

சிங்கப்பூரில் உட்கார்ந்து கொண்டு ஒரிஜினல் மினரல் வாட்டர் குடிக்கிறீங்க குரு!! நாங்க??

- நன்றி பட்டாபட்டி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Narmi கூறியது...

// Very useful information //

- நன்றி Narmi உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

// மிகவும் பயனுள்ள பதிவு//

- நன்றி வேடந்தாங்கல்-கருன் உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ சிநேகிதன் அக்பர் கூறியது...

// நான் 60 கிலோ இருக்கேன். நானும் உடம்பை குறைக்கனுமா பாஸ்.//

உங்க ஒசரத்துக்கு எழுபது அஞ்சு கிலோ இருக்கணும் பாஸ்!! ஹி..ஹி..

// கடைசி வரியை படிக்கிற வரைக்கும் இது உங்க அனுபவம்னே நினைச்சேன்.//

மற்றவர்களின் அனுபவமும் நமக்கு ஒரு பாடம் தானே தல!!

- நன்றி சிநேகிதன் அக்பர் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ வானதி கூறியது...

// கிரீன் டீ எல்லோருக்கும் ஒத்து வருவதில்லை. ரத்தக் கொதிப்பு, சுகர் பிரச்சினை இருப்பவர்களுக்கு அது ஒத்து வராது //

கிரீன் டீ நானும் குடிப்பதே இல்லை வான்ஸ்!!

- நன்றி வானதி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ நாடோடி கூறியது...

// உங்க‌ க‌தைதான் என்று ஆர்வ‌முட‌ம் ப‌டித்தேன்.. க‌டைசில்.. :) //

தல, எங்க ஆன்-லைன்லேயே வரமாட்டேன்கிறிங்க. நம்ம கதையை பேசுவோமே!!

நன்றி ஸ்டீபன் உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்.

Jaleela Kamal சொன்னது…

உபயோக மான பதிவு, ஆனால் 30 கிலோ எடை 60 நாளில் என்பது சாத்தியம் இல்லை,
எனக்கு தெரிந்த தமப்திகள் ஒரு வருடமாக இது போல் டய்ட் செய்து தான் சரியான அளவில் குறைந்து மெயிண்டன் பண்ணிட்டு இருக்காங்க. ,

யாராவது முயறித்து பார்த்து சொல்லட்டும்.

asiya omar சொன்னது…

மிக நல்ல பகிர்வு,தேவையான டிப்ஸ் அவரவர் உணவுப்பழக்கம் தகுந்த படி இங்கிருந்து பலவற்றை எடுத்துக்கலாம்.

athira சொன்னது…

கடவுளே.... இப்படியெல்லாம் ஏன் கஸ்டப்படவேணும்.. நன்கு உண்டு உறங்கி, சந்தோஷமாக வாழ்க்கையைக் களிப்பதை விட்டுப்போட்டு கர்ர்ர்ர்ர்ர்:))... எல்லாம் விதிப்படிதான் நடக்கும்.

கொடம்புளி என்பதை நம் நாட்டில் கொறுக்காப் புளி என்போம்... இவரின் நேரிவ் பிளேஸ்:)... கேரளா என அறிந்தேன், உடம்புக்கு மிகவும் நல்லதாம்... இதுபற்றி அதிகம் ஹைஷ் அண்ணனின் மறை பொருள் ரகசியத்தில் எழுதியிருக்கிறார், தேட நேரமில்லை இப்போ.. இதில் படமிருக்கு பாருங்கோ.


https://picasaweb.google.com/haish12/12#5331150164297984722

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Jaleela Kamal சொன்னது…

// ஆனால் 30 கிலோ எடை 60 நாளில் என்பது சாத்தியம் இல்லை, எனக்கு தெரிந்த தம்பதிகள் ஒரு வருடமாக இது போல் டய்ட் செய்து தான் சரியான அளவில் குறைந்து மெயிண்டன் பண்ணிட்டு இருக்காங்க. யாராவது முயற்சித்து பார்த்து சொல்லட்டும். //

முயற்சித்து முயற்சித்து நான் கூட தோல்வி அடைந்திருக்கிறேன். எப்படின்னா, மூணு மாசம் கடினமா உடற்பயிற்சி செய்து, உடம்பை ஓரளவு ஸ்லிம் ஆக்கி கொண்டு, அந்த சந்தோஷத்திலேயே, திரும்ப சதை போட்டு....!! இதற்குமேல் என்னத்தை சொல்ல!!

நன்றி ஜலீலாக்கா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ asiya omar கூறியது...

// தேவையான டிப்ஸ் அவரவர் உணவுப்பழக்கம் தகுந்த படி இங்கிருந்து பலவற்றை எடுத்துக்கலாம்.//

என்றாலும், அதை தொடர்ந்து ஃபாலோ பண்ணனுமே! அங்கே தான் இருக்கு வெற்றியின் சூட்சுமம்.

நன்றி asiya omar உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ athira கூறியது...

// இப்படியெல்லாம் ஏன் கஸ்டப் படவேணும்.. நன்கு உண்டு உறங்கி, சந்தோஷமாக வாழ்க்கையைக் களிப்பதை விட்டுப் போட்டு கர்ர்ர்ர்ர்ர்:))... //

உண்டு - உறங்கி உடம்பு ஸ்லிம் ஆனால் தான் எல்லோரும் அப்படியே செய்ய ஆரம்பித்து விடுவமே கர்ர்ர்ர்ர்ர்:))... ஆனா சில பேருக்கு மட்டும் தானே அப்படியான ஒல்லி பிச்சான் உடம்பு அமையுது. அதுவும் எவ்வளவு சாப்பிட்டாலும்??

நன்றி athira உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ athira கூறியது...

// கொடம்புளி என்பதை நம் நாட்டில் கொறுக்காப் புளி என்போம்... இவரின் நேரிவ் பிளேஸ்:)... கேரளா என அறிந்தேன், உடம்புக்கு மிகவும் நல்லதாம்... இதுபற்றி அதிகம் ஹைஷ் அண்ணனின் மறை பொருள் ரகசியத்தில் எழுதியிருக்கிறார், தேட நேரமில்லை இப்போ.. இதில் படமிருக்கு பாருங்கோ.//

பார்த்தேன். நல்லா இருக்கு. ஆனா பொறுமையா உட்காரத் தான் நமக்கும் நேரமில்ல! 'ஆசனம் போடுபவர்' கர்ர்ர்ர்ர்ர்:))... திரும்ப வந்த பின் தான் விலாவாரியா கேட்டு தெரிந்துக் கொள்ளனும்.

நன்றி athira உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.