facebook

திங்கள், மே 02, 2011

ஃபியூஸ் போன பல்புகளை எரிய வைப்பது எப்படி??


ஃபியூஸ் போன பல்புகளை
எரிய வைப்பது எப்படி??

ஐந்தாவதோ ஆறாவதோ படித்துக் கொண்டிருந்த பள்ளிப் பருவம்
அது. அப்பொழுது எங்களுக்கு பெரிய கடைத் தெருவில் சின்ன
எலெக்ட்ரிக் கடை ஒன்று இருந்தது. அதை எங்க அப்பா தான்
வைத்து நிர்வகித்து வந்தாங்க. அப்பாவுக்கு ஒயரிங் வேலைகள்
முதல் எல்லா எலெக்ட்ரிக் வேலைகளும் அத்துப்படி. ஆனா
கடைக்கும், எங்க வீட்டுக்கு மட்டுமே தான் எல்லா எலெக்ட்ரிக் வேலைகளும் அவங்களே செய்வாங்க. வெளியிடங்களுக்கு
காண்ட்ராக்ட் ஆட்களை தான் அனுப்புவாங்க. சொந்த வீட்டுக்கு
மட்டும் அவங்க ஏன் அப்படி செய்றாங்க என்றால் நாங்கள்
எல்லோரும் அதை கத்துக்கணும் என்ற பேரார்வம் தான்.
ஆனாலும் நாங்க கற்றுக் கொண்டோமா என்றால்? தொடர்ந்து
படிங்க !!

ஒவ்வொரு நாளும் ஸ்கூல் முடிந்து வந்து கடையில் தான்
உட்கார்ந்து கொள்வேன். நான் வந்தவுடன் எவ்வளவு பிஸியான
கஸ்டமர் கூட்டமிருந்தாலும், எனக்கு டீயோ அல்லது காபியோ
அதனுடன் வடை பஜ்ஜி ஆர்டர் செய்து தனக்கும் அப்பா எடுத்துக் கொள்வாங்க.

கடையில் உள்ள அலங்கார விளக்குகள் சின்ன சின்ன மேஜிக்
விளக்குகள், சீரியல் செட்டுகள் இன்னும் விதவிதமான அலங்கார
பல்புகள், சுவிட்சுகள் எல்லாம் அந்த சின்ன வயசில் பார்க்கப்
பார்க்க பிரமிப்பாய் இருக்கும். கடையில் உட்கார்ந்துக் கொண்டு
ரோட்டில் போவோர் வருவோரை பார்க்க ஆர்வமாய் இருக்கும்

கடையில் கஸ்டமர்கள் வந்து கேட்கும் சோக்கு, சுவிட்ச் பாக்ஸ்
வண்ண வண்ண பின்னல் ஒயர்கள் இன்னும் நிறைய வகையான பெயர்கள் எல்லாம் எனக்கு அப்ப புதுசு.

சரவிளக்குகள், குலோபர்ஸ், சாண்ட்லியர்ஸ் இன்ன பிறவைகள்
ஏதாவது புதுமாதிரி எங்க கடைக்கு வந்தாலும், முதல் முதலில் முன்னோட்டம் பார்ப்பது எங்கள் வீட்டில் தான்!

வீட்டின் ஹோவென்று அகன்ற கூடத்தின் ஸீலிங்கில் வித
விதமான விளக்குகள் அழகழகாய் தொங்கிக் கொண்டிருக்கும்.
வருகிற போகிற சொந்த பந்தங்களிடமெல்லாம் இது இப்ப வந்த
புது மாடல், விலை ரொம்ப கம்மி என்றெல்லாம் சொல்வாங்க.
"அட அழகா இருக்கே எங்க வீட்டுக்கொன்று வேண்டும்" என்று
சொல்லி நிறைய பேர் வாங்கி போவாங்க.அப்ப அந்த டெக்னிக் என்னவென்று எனக்கு விளங்கவில்லை. இப்ப நினைத்துப்
பார்த்தால் அது பக்கா மார்க்கெட்டிங் யுக்தி என்பது மட்டும்
புரிகிறது!

எல்லோருமே அந்த கூடத்தில் தான் படுத்துறங்குவோம். இரவில்
படுத்துக் கொண்டு அவைகளை பார்க்கும் போது, மிக பாந்தமாய்
ஒரு மிகப் பெரிய டெக்கோரேட் செய்த அரண்மனையில் படுத்து
உறங்குவது போல் நினைப்பு வரும். அதற்கு தகுந்தாற்போல் அந்த ஸீலிங்கும் மிக ரசனையாய் வடிவமைக்கப் பட்டிருக்கும். அதைப்
பார்க்கும் போது அப்பவே நிறைய கற்பனைகளாய் வரும். ஆனால் அவைகள் என்னவென்று இப்ப கேட்டால் எனக்கு சொல்ல
தெரியாது.

ஒரு பல்பு பியூஸ் போய்விட்டால் அதை தூர வீசியெறிய
மாட்டாங்க. அதன் இழைகள் உள்ளே கழன்று விழுந்து கிடப்பதை திரும்பவும் ஒட்டவைத்து எரிய விடுவார்கள். அந்த சின்ன வயசில்
எனக்கு ரொம்ப ஆச்சரிய மாயிருக்கும்!! இதை என் சகோதரிகளுக்கு
அப்பா சொல்லிக் கொடுத்தாங்க.

ஆர்வத்தில் நானும் கற்றுக் கொள்ளனும் என்று அக்காவிடம்
அடம்பிடித்து, பல்பை தூக்கிப் பிடித்து அந்த இழையை சரியாய்
கொண்டு வந்து அதனோடு ஒட்டவைக்க படாதபாடு பட்டு,
தலையை இப்படி அப்படி சாய்த்து, பல்பை போட்டு உடைத்து
கடைசியில் அக்கா கையால் ‘ணங்’ என்று தலையில் குட்டு
வாங்கியது தான் மிச்சம் ஆனா வலிக்காது. அவ்வ்வ்வ்..!!
(என்னா பெருந்தன்மை) (:-)))

அப்பா யார்கிட்டயாவது பேசிக் கொண்டிருக்கும் போது, அடிக்கடி
என் காதில் விழுகிற மாதிரி, "இந்த வேலை தான் என்றில்லை.
எல்லா வேலைகளையும் நாம கத்து வச்சுக்கணும். அப்பதான்
ஏதாவது ஒன்னு நமக்கு கைகொடுக்கும்" என்று சொல்வாங்க.
விளையாட்டு தனமான வயசு. அப்ப அதை நான் பெரிதாக
எடுத்துக் கொண்டதில்லை. பின்னர் உணர்ந்ததுண்டு !!

ஆனா இப்ப வரைக்கும் “ஃபியூஸ் போன பல்புகளை எப்படி
ஒட்ட வைத்து எரிய வைப்பது” என்பதை நானும் கற்றுக்
கொள்ளவே இல்லை. தெரிந்திருந்தால் உங்களுக்காவது
சொல்லிக் கொடுக்கலாம். ஹி..ஹி… சரி விடுங்க! இப்ப என்ன
போச்சு! இப்பல்லாம் அதிகமாய் அதை உபயோகப் படுத்துவ-
தில்லை என்பது ஆறுதலான விஷயம் தானே! நாம் தான்
அதிகமாய் ‘குழல்’ விளக்குகள் யூஸ் பண்ண ஆரம்பித்து
விட்டோமே!

ஒரு அனுபவம் என்பதை நாம் கற்றுக்கொள்ள பலபடிகள்
ஏறி இறங்க வேண்டியிருக்கும். நாம் கற்ற அனுபவங்களை
மற்றவர்களிடம் சொன்னால் அது அவர்களுக்கு ரொம்ப சீப்பாய்
தோன்றலாம்! ஏனெனில் அது இலவசமாய் கிடைக்கிறதே! அதுவே.
சில விஷயங்கள் அவர்கள் அனுபவப்பட்டு, பணம் செலவழித்து
பெற்றால் தான் அதன் தனித்துவமும் மகத்துவமும் புரியவரும்.

ஒரு ஊரில் பெரிய மனிதர் ஒருவர் இருந்தார். அவர் தன்னிடம் முக்கியமான 'அட்வைஸ்' ஒன்று இருக்கு என்று விளம்பரப்
படுத்தினார். அது என்னவென்று கற்றுக் கொள்ளும் ஆர்வம்
பலருக்கு இருந்தாலும், "ஒரு அட்வைஸுக்கு ஆயிரம் ரூபாய்
கட்டணமாய் தரனும்" கறாராய் சொன்னதால் இது கேட்டு மிரண்ட
பலரும் அவரிடம் போகவே இல்லை.

ஒரே ஒரு மனிதர் மட்டும் அவரிடம் சென்று ஆயிரம் ரூபாயைக் கொடுத்து, "நீங்கள் சொல்லும் அட்வைஸ் என்ன?" என்று கேட்டார்.
"எந்த வேலையையும் அந்தந்த குறித்த நேரத்தில் செய்திடணும்,
தாமதிக்கக் கூடாது" என்று பதில் வந்தது.

"ச்சே" ஆயிரம் ரூபாய்க்கு இது தானா அட்வைஸ் என்று மனம் நினைத்தாலும், சரி அவர் சொன்ன அறிவுரைப் படி செய்துப்
பார்க்கலாமே என்றெண்ணி, அன்றிரவு வந்திறங்கிய சரக்கு
மூட்டைகளை, பின்னேரம் ஆயிடினும், உடல் அசதி வருத்திய
போதும், ஆட்களை முன்னிறுத்தி அவைகள் எல்லாவற்றையும்
ஸ்டாக் ரூமில் கொண்டு போய் அடுக்கிய பின்பே படுத்துறங்கப்
போனார்.

பொழுது விடிந்து பார்த்தபோது ஊரே காற்றிலும் மழையிலும்
அல்லோலப் பட்டுப் போய் கிடந்தது. பல வியாபாரிகளின் மதிப்பு
மிக்க பொருட்கள் நீரில் மூழ்கி பல லட்சம் நஷ்டமாகிப்
போயிருந்தது. தான் பணம் கொடுத்து கற்ற அட்வைஸ் அந்த
நொடியில் மதிப்பு மிக்கதாய் தெரிந்தது. தனது பொருட்களும்
வீணாகாமல் போனதில் அந்த வியாபாரிக்கு மிக்க மகிழ்ச்சி!!
அந்த வியாபாரி உப்பு ஏற்றுமதி வியாபாரம் செய்து வந்தார்
என்பது இங்கே ஞாபகம் கொள்ளவேண்டிய ஒரு விஷயம்!!

ஆகவே நல்ல அறிவுரைகள் எங்கு கிடைத்தாலும் அள்ளிக்
கொள்ளனும். அதை நாமும் பின்பற்றனும்!!
                                                                        
                             

26 கருத்துகள்:

ம.தி.சுதா சொன்னது…

அடடா நல்லதொரு அனுபவம் தான் ஹ..ஹ..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)

Mohamed Faaique சொன்னது…

///ஆனா இப்ப வரைக்கும் “ஃபியூஸ் போன பல்புகளை எப்படி ஒட்ட வைத்து எரிய வைப்பது” என்பதை நானும் கற்றுக் கொள்ளவே இல்லை. தெரிந்திருந்தால் உங்களுக்காவது சொல்லிக் கொடுக்கலாம். ஹி..ஹி…///

கடைசியில் நமக்கே பல்பு குடுத்துடீங்களே!!!

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

கொஞ்சம் பெட்ரோலை ஊற்றி கொளுத்தி பாருங்கள் நன்றாக எரியும் ஹி....ஹி

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

எங்களையும் சின்ன வயசுக்கு கூட்டிட்டு போயிட்டீங்களே....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

செய் செய்வதை அன்றே செய் சூப்பர்...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அசத்துங்க அசத்துங்க...

Philosophy Prabhakaran சொன்னது…

பகிர்வுக்கு நன்றி...

பெயரில்லா சொன்னது…

பாஸ் எனக்கு கூட சின்ன வயசில பியூஸ் போன பல்பு இலையை ஓட்ட வச்ச அனுபவம் உண்டு, உங்க பதிவில சின்ன வயசுக்கே கூட்டி சென்று விட்டீர்கள். அருமை

சிநேகிதன் அக்பர் சொன்னது…

எப்போதுமே அப்பாதானே அனைவருக்கும் முன்மாதிரி. முதல் ஆசான்.

என்ன அப்போது அதன் அர்த்தம் புரியாது. நாமும் ஒரு தகப்பனாக மாறும் வரை :)

மிக அருமையாக எழுதியிருக்கீங்க பாஸ்.

காலமும் ஒரு ஃப்யூஸ் போன பல்புதான் போல சென்றதை மீட்கவே முடியாது.

நாடோடி சொன்னது…

அனுப‌வ‌ங்க‌ளை அழ‌கா தொகுத்திருக்கீங்க‌ த‌ல‌... அப்ப‌ எப்ப‌ அந்த‌ பீஸ் போன‌ ப‌ல்பை எரிய‌ வைக்கிற‌தை சொல்லித்த‌ருவீங்க‌...:)))))))

Asiya Omar சொன்னது…

மிக நல்ல பகிர்வு,நல்ல இடுகையும் கூட..எங்க வீட்டு எலெக்ட்ரிக் சம்பந்தப்பட்ட வேலைகளை வீட்டில் உள்ளோர் தான் செய்வாங்க,என் மகனும் பழகிட்டார்,ஆனால் எனக்கு ஒரு பல்பை மாட்டக்கூட பயம்..

எம் அப்துல் காதர் சொன்னது…

♔ம.தி.சுதா♔ கூறியது...

// அடடா நல்லதொரு அனுபவம் தான் ஹ..ஹ..//

வாங்க டாக்டர் ம தி சுதா, கருத்துக்கு மிக்க நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Mohamed Faaique

// கடைசியில் நமக்கே பல்பு குடுத்துடீங்களே!!! //

வாங்க Mohamed Faaique நீங்கல்லாம் இதைப் பற்றி தெரிந்து வைத்திருப்- பீர்கள் என்றல்லவா நினைத்தேன். கருத்துக்கு மிக்க நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ரஹீம் கஸாலி கூறியது...

// கொஞ்சம் பெட்ரோலை ஊற்றி கொளுத்தி பாருங்கள் நன்றாக எரியும் ஹி....ஹி //

எப்படி தல!! இப்படியெல்லாம் ஹி..ஹி.. முடியல!!

ரஹீம் கஸாலி கருத்துக்கு மிக்க நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...

// எங்களையும் சின்ன வயசுக்கு கூட்டிட்டு போயிட்டீங்களே....//

வாங்க பாஸ், இளமையை விரும்பாதவர் யார் தல?

// செய் செய்வதை அன்றே செய் சூப்பர்...//

ஆமா கரெக்ட், புதிய போஸ்ட் போட்டுட்டீங்களா??

// அசத்துங்க அசத்துங்க...//

நன்றி மனோ!! கருத்துக்கு மிக்க நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

Philosophy Prabhakaran கூறியது...

// பகிர்வுக்கு நன்றி...//

வாங்க பி பி கருத்துக்கு மிக்க நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ கந்தசாமி. கூறியது...

// பாஸ் எனக்கு கூட சின்ன வயசில பியூஸ் போன பல்பு இலையை ஓட்ட வச்ச அனுபவம் உண்டு, உங்க பதிவில சின்ன வயசுக்கே கூட்டி சென்று விட்டீர்கள். //

வாங்க கந்தசாமி, உங்களுக்கு அது தெரியுமா? எங்களுக்கும் சொல்லித் தாங்களேன்! கருத்துக்கு மிக்க நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ சிநேகிதன் அக்பர் கூறியது

// காலமும்
ஒரு ஃப்யூஸ்
போன பல்புதான்
போல
சென்றதை
மீட்கவே
முடியாது.//

வாங்க அக்பர்ஜி, அடடா ஒரு அருமையான தலைப்பை, கவிதை மாதிரி சொல்லிட்டீங்களே!! கருத்துக்கு மிக்க நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ நாடோடி கூறியது...

// அனுப‌வ‌ங்க‌ளை அழ‌கா தொகுத் திருக்கீங்க‌ த‌ல‌... அப்ப‌ எப்ப‌ அந்த‌ பீஸ் போன‌ ப‌ல்பை எரிய‌ வைக்கிற‌தை சொல்லித் த‌ருவீங்க‌...:))))))) //

வாங்க ஸ்டீபன், இப்ப தான் "எஞ்சி நீர்" கோர்ஸுக்கு போய்கிட்டிருக் கிறேனே. கற்றபின் உங்களுக்கு நிச்சயமா சொல்லிதர மறக்க மாட்டேன் தல! எப்படி??

கருத்துக்கு மிக்க நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ asiya omar கூறியது...

// எங்க வீட்டு எலெக்ட்ரிக் சம்பந்தப் பட்ட வேலைகளை வீட்டில் உள்ளோர் தான் செய்வாங்க, என் மகனும் பழகிட்டார், ஆனால் எனக்கு ஒரு பல்பை மாட்டக்கூட பயம்..//

வாங்க டீச்சர், ஆமா நான் கூட ரொம்ப துணிச்சலா இருப்பேன். எலெக்ட்ரிக் வேலை எங்க நடந்தாலும் பத்தடி தள்ளி தான் நிற்பேன்.

கருத்துக்கு மிக்க நன்றி!!

Jaleela Kamal சொன்னது…

ஃப்யுஸ் போன பல்ப கழற்றி எறிய தெரியும் மாட்ட தெரியும் ஆனா மறு படி ஒட்ட வைக்க தெரியாதுங்கோஒ

Ahamed irshad சொன்னது…

குசும்பு ஜாஸ்தியா போச்சோ..ம்ம் ந‌ட‌க்க‌ட்டும்..

ஏங்க‌ உண்மையாலுமே ந‌ம்பி வ‌ந்தேங்க‌..

athira சொன்னது…

ஆனாலும் நாங்க கற்றுக் கொண்டோமா என்றால்? தொடர்ந்து
படிங்க !!///
இதைப் பார்த்ததும் ஆவலாக ஷெயாரின் விழிம்புக்கே வந்து தொடர்ந்து படிச்சேன் அவ்வ்வ்வ்வ்:)).

நானும் ஃபியூஸ் ஆன பல்ப்பை எப்பூடி மீண்டும் பத்த வைப்பது என்பதை சொல்லித்தரப்போறீங்க என எண்ணியபடியே படிச்சு முடிச்சேன் பதிவை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

//ஆகவே நல்ல அறிவுரைகள் எங்கு கிடைத்தாலும் அள்ளிக்
கொள்ளனும். அதை நாமும் பின்பற்றனும்!!
//
கரெக்ட்... அதனால்தான் “விழுவதையெல்லாம் பொறுக்குவது என் வேலை”:))))...

நல்ல பகிர்வு.

எம் அப்துல் காதர் சொன்னது…

Jaleela Kamal சொன்னது…

//ஃப்யுஸ் போன பல்ப கழற்றி எறிய தெரியும் மாட்ட தெரியும் ஆனா மறு படி ஒட்ட வைக்க தெரியாதுங்கோஒ
//

ஜலீலாக்கா உங்களுக்கு தெரியாதது எதுவுமில்லை. ஆனாலும் தன்னடக்கம். :-))

கருத்துக்கு மிக்க நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ அஹமது இர்ஷாத் கூறியது...

// குசும்பு ஜாஸ்தியா போச்சோ..ம்ம் ந‌ட‌க்க‌ட்டும்..ஏங்க‌ உண்மையாலுமே ந‌ம்பி வ‌ந்தேங்க‌..//

உங்க ஏமாற்றத்துக்கு கம்பெனி பொறுப்பல்ல பாஸ்!:-)))

கருத்துக்கு மிக்க நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

athira கூறியது...

நானும் ஃபியூஸ் ஆன பல்ப்பை எப்பூடி மீண்டும் பத்த வைப்பது என்பதை சொல்லித்தரப்போறீங்க என எண்ணியபடியே படிச்சு முடிச்சேன் பதிவை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

வாங்க பூஸார். நான் கற்றுக் கொண்டவுடன் நிச்சயமா உங்களுக்கு தான் முதலில் சொல்லித் தருவேன். அவ்வ்வ்வவ்..

//ஆகவே நல்ல அறிவுரைகள் எங்கு கிடைத்தாலும் அள்ளிக்
கொள்ளனும். அதை நாமும் பின்பற்றனும்!! //

//கரெக்ட்... அதனால் தான் “விழுவதை யெல்லாம் பொறுக்குவது என் வேலை”:))))...//

பொறுக்குவது என்பது சாதாரண வேலையல்ல பூஸ். நல்லதை பொறுக்குவதே விவேகம். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

அதிரா தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!!