facebook

செவ்வாய், ஜூன் 07, 2011

உடல் பருமனை குறைக்க என்ன செய்யலாம்?


உடல் பருமனை குறைக்க  என்ன செய்யலாம்?

எப்படி எல்லாம் பாடுபட்டு வளர்த்த உடம்பை இப்படி பாடுபட்டு
எழுதி குறைக்க வழி சொல்லவேண்டியதா இருக்கு!! அவ்வ்வ்வ்.!!!

நாம் பயன்படுத்தும் துணிகளின் அளவு ஆண்களின் இடுப்பளவு
முப்பத்தி எட்டு இன்சுக்குக் குறைவாகவும், பெண்களின் இடுப்பளவு முப்பத்தி ரெண்டு இன்சுக்குக் குறைவாகவும் இருக்க வேண்டும்.
அந்த அளவுக்குள் இருந்தால் தான் ஆரோக்கியம். ஆனால்
இன்றைக்கு எக்ஸ்ட்ரா லார்ஜ், டபுள் எக்ஸ்ட்ரா லார்ஜ், ட்ரிபிள்
எக்ஸ்ட்ரா லார்ஜ் என கணக்கில்லாமல் போய்க் கொண்டிருக்கி-
றோம். இதெல்லாம் நோயில் கொண்டு போய்தான் முடியும். உடல்
எடை அதிகரிப்பால் மூட்டுவலி, இடுப்பு வலி இன்னபிற வியாதிகள்
நம் சொந்தமாகிப் போகும்.

நம்மில் பெரும்பாலானவர்கள் திருமணம் ஆகும் வரை ஒல்லியாக இருப்பார்கள். திருமணம் முடிந்ததும் குண்டாகி விடுவார்கள்.
இதற்கு 'மனைவி வந்த பூரிப்பு!'. 'வீட்டு சாப்பாடு' என்றெல்லாம்
நமக்கு நாமே சொல்லும் சமாதான காரணங்கள். வயிறு கெட்டு
விடும் என்று பார்த்துப் பார்த்து சாப்பிட்டவர்கள் அதிக அளவு
உண்பார்கள். இது தான் உடல் பருமனுக்கு முக்கிய காரணம்.

சென்டர் ஒபிசிட்டி:

கால்கள் கைகள் மார்பு பகுதி எல்லாம் சின்னதாக இருக்கும். வயிறும் பின்பக்கமும் வீங்கி பெருத்திருக்கும். இதற்கு ‘சென்டர் ஒபிசிட்டி’ என்று பெயர். நம் ஊரில் இப்படிப் பட்டவர்கள் எக்கச்சக்கமாக இருக்கிறார்கள். சமையல் எண்ணெய் ஒருமுறைக்கு மேல் பயன்படுத்துவது. அளவில்- லாமல் கண்டபடி சாப்பிடுவது, ஸ்டைலுக்காக சிகரெட், நண்பர்களோடு பார்டி என்கிற பெயரில் பீர் என்கிற பழக்கத்தை எல்லாம் விட்டுவிட வேண்டும்.

உணவுக் கட்டுப்பாடென்பது:

அறவே சாப்பிடாமல் வயிற்றை/வாயைக் கட்டுவதென்பதல்ல. மூன்றுவேளை சாப்பாட்டை ஐந்து வேலையாகப் பிரித்து மூன்று மணி நேரத்திற்க்கொரு முறை அளவோடு நம் உடலுக்கு ஜீரணமாகக் கூடிய உணவுகளை சாப்பிடனும். நான் ஆபீஸ் போறேன், வெளியே போறேன் அப்படி இப்படி என்ற காரண மெல்லாம் ரிஜெக்டெட். நம் உடம்புக்குத் தானே நாம் செய்கிறோம் என்ற அக்கறை மனசில் வேணும். சாப்பிடும் ஒவ்வொரு பொருளிலும் கலோரி, புரதம், கார்போஹைடிரேட், கொழுப்பு எல்லாம் எவ்வளவு இருக்கு என்று கால்குலேட் பண்ணியே சாப்பிடுங்க. ஒருதடவை உங்கள் அருகிலுள்ள டயடீசியனை அவசியம் கன்சல்ட் செய்துக் கொள்ளுங்க! பிரச்சினைகள் ஏதுமிருக்காது.

உடலுக்கு எல்லாவித சத்துக்களும் பேலன்ஸ்டா சேர்வது மாதிரி சாப்பிடுவது தான் நல்ல வழி. அதனால் சத்தான சாப்பாட்டை
எப்பவுமே மிஸ் பண்ணிடாதீங்க. சாப்பாட்டு நேரத்தை அடிக்கடி
மாற்றிக் கொண்டே இருப்பது நம் உடம்பை ரொம்பவே டிஸ்டர்ப் பண்ணும். எந்த நேரத்துக்கு என்ன சாப்பாடுன்னு பட்டியல் போட்டு
வெச்சு அதை ஸ்ட்ரிக்ட்டா கடைப் பிடிக்கணும். சத்தான உணவு
சரியான நேரம் இது தான் டயட் சீக்ரட்.

நாம் வாழும் முறை உண்மையிலேயே சரியானதாக ஆரோக்கிய
மானதாக இருக்கிறதா?

இது நம்மை நாமே கேட்டுக் கொள்ளவேண்டிய கேள்வி. இதயம்
சம்பத்தப் பட்ட நோய்களுக்கு பிளட் பிரஷர் + டயாபடிஸ் முக்கிய காரணிகளாக விளங்குகின்றன. சுகர் நோய் பரம்பரையாகத்
தொடரக் கூடியது என்றாலும் பலபேர் இந்த வகை நோய்களை
கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளாமல் கடைசிவரை
அலட்சியமாகவே இருக்கிறோம். (ஏதோ சொந்த பந்ததை விட்டுப்
பிரிந்து விடுவோமோ என்ற ஏக்கம் போல!)

அதே சமயம் டீன் ஏஜில் இருந்தே நம் லைஃப் ஸ்டைலை
முறைப் படுத்திக் கொள்ளவேண்டும்.

எப்படி? இது நல்ல கேள்வி?

ஆண்டுக்கு ஒருமுறை இதய நோய்களுக்குக் காரணமான BP + சுகர் பரிசோதனைகளைச் செய்து விடுங்கள். ஆறுமணி நேரமோ எட்டு
மணி நேரத்திற்கு மிகாமலோ தூக்கமும், நாற்பது நிமிடத்திலிருந்து அறுபதே அறுபது நிமிடநேர உடற்பயிற்சியுடன் கூடிய நடை
பயிற்சி அயற்ச்சியில்லா தேக ஆரோக்கியத்தைத் தந்து உடல்
எடையை கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்கும். "இதற்கெல்லாம்
எங்கே சார் நேரம் இருக்கு?" என்று டேக்கா கொடுக்க
நினைக்காதீங்க!!

நீங்கள் நிச்சயமாய் ஆபீசுக்கோ மற்ற எந்த வேலைகளுக்காகவோ வெளியே தெருவே சென்று வருபவர்களாகத் தானிருப்பீர்கள். பஸ்
வேன் ஆட்டோவில் செல்பவர்களானால் இறங்க வேண்டிய
இடத்துக்கு இரண்டு கிலோ மீட்டரோ, அல்லது ஒரு கிலோ
மீட்டருக்கு (உங்களால் நடந்து வரக் கூடிய அளவுள்ள தூரத்துக்கு) முன்பாகவே இறங்கி நடந்தே ஆபீசுக்கோ மற்ற எந்த வேலை களுக்காகவோ போங்களேன். டூ வீலர் வைத்திருப்பவர்கள் நடந்து
போகிற தூரத்திற்கு நடந்தே போகலாமே!

ஆபீஸ் ரெண்டாவது மூன்றாவது மாடியிலோ இருக்கிறதா? அதற்காக பெருமூச்சு விடாதீர்கள்.மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு படிகளில் ஏறி இறங்குங்கள். டயர்டாக இருக்கிறதா? அதற்காகத் தான் மேலே சொன்ன சத்தான சாப்பாடு. இப்போது புரிந்திருக்குமே!

சார் உங்களால் மேலே சொன்ன எதையுமே செய்ய முடியா
விட்டால் தினமும் இருபது நிமிடம் நீச்சல், அல்லது முப்பது
நிமிட சைக்கிளிங் அல்லது நாற்பது நிமிட வாக்கிங்...இதில் ஏதாவதொன்றை வாரத்தில் ஐந்து நாட்கள் செய்யப் பழகினாலே
போதும்.

ரிமோட் உங்களின் எதிரி! எழுந்து போய் சேனலை மாற்றப்
பழகுங்கள். ரிமோட் பேட்டரியை கழற்றி விட்டால் உங்கள்
குடும்பத்துக்கே நல்லது செய்தவர்கள் ஆவீர்கள்!

இறுதியாக-

இதய நோய்கள் காஸ்ட்லி நோய்கள். இவற்றுக்கு அளிக்கப்படுகின்ற சிகிச்சைகளும் காஸ்ட்லி வைத்தியம் தான். இவற்றை அருகிலேயே சேர்க்காமல் தடுக்கின்ற இலவச மருந்துகள் தான் மேலே சொன்ன
பழக்க வழக்கங்கள். இதை புரிந்துகொண்டாலே போதும்! நஹீன்னா,
போங்க சார் உங்க கூட டூ... !!


25 கருத்துகள்:

மாணவன் சொன்னது…

பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே :-)

vanathy சொன்னது…

ரிமோட் உங்களின் எதிரி! எழுந்து போய் சேனலை மாற்றப்
பழகுங்கள். ///இதுக்கு டிவியே பார்க்காமல் இருக்கலாம்.
நல்ல பதிவு, நாட்டாமை.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

அருமையான ஆலோசனை தல.

ஆனா நம்மாட்கள் (என்னையும் சேர்த்துதான். எதையுமே வந்த பின்தானே யோசிப்போம்.

உடல் உழைப்பு இல்லாமல் உட்கார்ந்த இடத்திலேயே வேலை பார்ப்பவர்கள். கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய விசயம் இது.

Asiya Omar சொன்னது…

சகோ,வேலைப்பளுவின் நடுவில் உங்களை எல்லாம் பார்த்து விட்டு செல்லலாம்னு வந்தேன்,நலமா? இடுகைகளை நேரம் கிடைக்கும் பொழுது வாசிக்கிறேன்.

athira சொன்னது…

எடுத்துக்காட்டான நல்ல பதிவு... அதுசரி காருக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம்? சைக்கிள்ள போகச் சொல்றீங்களோ? உண்மைதான் ஆனால் குளிர்தாங்காதே.. சாப்பாட்டையும் குறைச்சால் குளிரில நிண்டுபிடிக்கேலாது....:)).

ஊசிக்குறிப்பு:
வாங்கிற துணியின் அழவிலகூட உங்களுக்கு 38 எங்களுக்கு(நம்பாலார்) 32 என ஓர வஞ்சனை காட்டுறீங்களே அவ்வ்வ்வ்வ்வ்வ்:))).

கஸ்டப்பட்டு மெலிஞ்சு என்னதான் பண்ணப்போறோம்.... மெலிஞ்சுமுடிய உலகமும் 12இல இல்லாமல் போயிட்டால்... ஆங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்:)).

நாடோடி சொன்னது…

//நாம் பயன்படுத்தும் துணிகளின் அளவு ஆண்களின் இடுப்பளவு
முப்பத்தி எட்டு இன்சுக்குக் குறைவாகவும், பெண்களின் இடுப்பளவு முப்பத்தி ரெண்டு இன்சுக்குக் குறைவாகவும் இருக்க வேண்டும். //

அப்ப‌ நான் ஆரோக்கியமா தான் இருக்கேன்.. :))))))

இமா க்றிஸ் சொன்னது…

//உலகமும் 12இல இல்லாமல் போயிட்டால்...// ;))))))))))
எனக்கு இப்ப சொல்ல வந்த கமண்ட்டும் மறந்து போச்சுது. ;)

நல்ல விஷயம் சொல்லி இருக்கிறீங்கள். இதெல்லாம் யாராவது சொன்னால் கொஞ்சம் யோசிப்போம். பிறகு எல்லாம் ரிவேஸ்ல போயிரும். அடிக்கடி யாராவது நினைவு படுத்த வேணும். ம்.

இமா க்றிஸ் சொன்னது…

பேர் போட மறந்து போனன். ;) ரெண்டாவது பந்தி நாட்டாமைக்கு, பூனைக்கு முதல் பந்தி மட்டும்தான்.

Dubukku சொன்னது…

இங்கே Rolles Roys கார் எங்கே வந்தது. மொக்கை பதிவு.

Dubukku சொன்னது…

ஹிட் வேணும்னு என்னவேணும்னாலும் எழுதலாமுன்னு சிலர் தப்ப நினைக்கிறாங்க.

எம் அப்துல் காதர் சொன்னது…

டுபுக்கு (பேரே ஒரு மாதிரியா இருக்கே. உங்க எண்ணங்களும் வித்தியாசமாத்தானிருக்கும்.) இனிமே இங்கே வராதீங்க. நல்ல பதிவை தேடி போய் படிங்க.வந்ததற்கும் இனிமேல் வராமல் இருப்பதற்கும் நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ மாணவன் கூறியது...

// பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே :-) //

வாங்க மாணவன் நலமா? உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

vanathy கூறியது...

ரிமோட் உங்களின் எதிரி! எழுந்து போய் சேனலை மாற்றப்
பழகுங்கள். /// இதுக்கு டிவியே பார்க்காமல் இருக்கலாம்.
நல்ல பதிவு, நாட்டாமை.//

அதை சொல்லத் தான் இந்த பதிவு. எலெக்ட்ரிசிட்டியையும் மிச்சப் படுத்தலாம்ல!!

வான்ஸ் உங்க வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

சிநேகிதன் அக்பர் கூறியது...

அருமையான ஆலோசனை தல.

//ஆனா நம்மாட்கள் (என்னையும் சேர்த்துதான். எதையுமே வந்த பின்தானே யோசிப்போம்)//

ஆனா நீங்க சிலிம்மா தானே இருக்கீங்க தல!

அக்பர் உங்க வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

asiya omar கூறியது...

// சகோ, வேலைப்பளுவின் நடுவில் உங்களை எல்லாம் பார்த்து விட்டு செல்லலாம்னு வந்தேன்,நலமா? இடுகைகளை நேரம் கிடைக்கும் பொழுது வாசிக்கிறேன்//

பரவாயில்லை, நீங்க மெதுவாவே வரலாம். ஒன்றும் அவசரமில்லை! (அதான் முன்னமே சொல்லிடீங்க அல்லவா!)

asiya omar உங்க வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

athira கூறியது...

// அதுசரி காருக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம்? சைக்கிள்ள போகச் சொல்றீங்களோ? உண்மைதான் ஆனால் குளிர்தாங்காதே.. சாப்பாட்டையும் குறைச்சால் குளிரில நிண்டுபிடிக்கேலாது....:)).//

சைக்கிளைப் பார்த்தா சுறுசுறுப்பு வருமா? இல்லை காரைப் பார்த்தா வருமா? சொல்லுங்க அதிஸ்! பதிவுக்கு படம் தேடித் போடுவ தெல்லாம் ஓல்ட் ஃபேஷன். கிடைத்தப் படத்த போட்டுவிட்டு சமாளிப்பது தான் நியூ..... ஃபேஷன்.. அவ்வ்வ்வ்.

athira உங்க வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

athira கூறியது...

ஊசிக்குறிப்பு: வாங்கிற துணியின் அழவிலகூட உங்களுக்கு 38 எங்களுக்கு(நம்பாலார்) 32 என ஓர வஞ்சனை காட்டுறீங்களே அவ்வ்வ்வ்வ்வ்வ்:))).

பூஸார் சைடில் வளரும்னா ... உங்க ஆசையை யாரும் கெடுக்கலேது. ம்ம்ம் நடத்துங்க. ஹை ஜாலி. க்கி.. க்கி..

athira உங்க வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

athira கூறியது...

கஸ்டப்பட்டு மெலிஞ்சு என்னதான் பண்ணப்போறோம்.... மெலிஞ்சு முடிய உலகமும் 12இல இல்லாமல் போயிட்டால்... ஆங்ங்ங்ங்ங்ங்ங்ங்:))

மெலிந்தாலும்....நாலுபேருக்கு நல்லது செய்ரோம்ல! அதுவே பேருபகாரம் தான். 12-ல உலகமும் முடியாது. நீங்க பார்த்தப் படத்த சொல்றீங்களா அதிஸ்!! அந்த படம் எடுத்தவங்களுக்கு நிரம்ப லாபம் போல!

athira உங்க வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மியாவ் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

நாடோடி கூறியது...

// அப்ப‌ நான் ஆரோக்கியமா தான் இருக்கேன்.. :)))))) //

தல நீங்க பெரிய டாக்டரா ஆக வேண்டிய ஆளுங்க! பை லக்கா "இஞ்சிநீர்" ஆகி தப்பிச் சிட்டீங்க! (நன்றி வார்த்தை உபயம் "சகோ ஹுசைனம்மா!)

ஸ்டீபன் உங்க வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

இமா கூறியது...

// நல்ல விஷயம் சொல்லி இருக்கிறீங்கள். இதெல்லாம் யாராவது சொன்னால் கொஞ்சம் யோசிப்போம். பிறகு எல்லாம் ரிவேஸ்ல போயிரும். அடிக்கடி யாராவது நினைவு படுத்த வேணும். ம்.//

கேமராவில் கண் வைத்து எப்போதும் பிஸியா இருப்பீங்க! அதனால் தான் உங்கள டிஸ்டர்ப் செய்ய வேணாமே என்று அங்க வருவதில்லை! இனி அடிக்கடி வந்து நினைவு படுத்தி விடுகிறேன். சரியா?

இமா உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

இமா கூறியது...

// பேர் போட மறந்து போனன். ;) ரெண்டாவது பந்தி நாட்டாமைக்கு, பூனைக்கு முதல் பந்தி மட்டும்தான்.//

பார்த்தீங்களா கடைசிவரை சொந்தங்களை வடிவா விட்டுக்
கொடுக்காமலே பந்தி வச்சிட்டீங்களே..அவ்வவ்..!

இமா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

athira சொன்னது…

///இமா கூறியது...

//உலகமும் 12இல இல்லாமல் போயிட்டால்...// ;))))))))))
எனக்கு இப்ப சொல்ல வந்த கமண்ட்டும் மறந்து போச்சுது. ;)///
ஹா..ஹா..ஹா.....

//இமா கூறியது...

பேர் போட மறந்து போனன். ;) ரெண்டாவது பந்தி நாட்டாமைக்கு, பூனைக்கு முதல் பந்தி மட்டும்தான்.//

பூஸாருக்கு எங்க போனாலும் முதல் பந்திதான் வித் அ.கோ.மு:)))))

athira சொன்னது…

///பூஸார் சைடில் வளரும்னா ... உங்க ஆசையை யாரும் கெடுக்கலேது. ம்ம்ம் நடத்துங்க. ஹை ஜாலி. க்கி.. க்கி.. ///
அதை இன்னும் நீங்க மறக்கவில்லையோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))))).

எம் அப்துல் காதர் சொன்னது…

@ athira சொன்னது…

// எனக்கு இப்ப சொல்ல வந்த கமண்ட்டும் மறந்து போச்சுது. ;)///
ஹா..ஹா..ஹா.....//

வயசானாலே இந்த வம்பு தான்
[நான் என்னைச் சொன்னேன்] ஹா..ஹா..ஹா.....க்ர்ர்ர்ர்ர்

// பூஸாருக்கு எங்க போனாலும் முதல் பந்திதான் வித் அ.கோ.மு:))))) //

ரைட்டு... இப்ப என்ன போச்சு சாப்பிடுங்க!! [நான் சாப்பிட்டு மீதி இருந்தா] அவ்வவ்..

எம் அப்துல் காதர் சொன்னது…

athira கூறியது...

///பூஸார் சைடில் வளரும்னா ... உங்க ஆசையை யாரும் கெடுக்கலேது. ம்ம்ம் நடத்துங்க. ஹை ஜாலி. க்கி.. க்கி.. ///

//அதை இன்னும் நீங்க மறக்க வில்லையோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))))).//

நானென்ன எனக்கு வயசாயிடுசுன்னா சொன்னேன்.. மறப்பதற்கு?? க்கி க்கி கர்ர்ர்ர்....

மிக்க நன்றி மியாவ் அதிஸ்!!