பஸ்ஸுக்கு காத்திருந்தபோது இரு அம்மணிகள் அளவலாவிக் கொண்டிருந்தாங்க!! அதை நான் உங்களுக்காக 'லாவிக்' கொண்டு
வந்து விட்டேன் !!
"என்னடி இவளே ஒரு மாதிரி இருக்கே, முழுகாம இருக்கியா?"
"இல்லக்கா இப்பல்லாம் அவரு டூட்டி முடிஞ்சு வந்ததுமே வெடு
வெடுன்னு விழுறாரு!"
"சரி இப்ப அதுக்கென்ன?"
"முந்திய மாதிரி என் மேல் அவருக்கு பிரியமில்லையோன்னு
மனசுக்கு தோணுதுக்கா?"
"இவ பெரிய இவ! கல்யாணமாகி வருஷம் ஒன்னு இன்னும்
முடியல! பிரியத்தைப் பத்தி ரொம்பதான் கண்டுட்டாளாக்கும்"
"அது வந்துக்கா...!!"
"அடியே இவளே..!! நாமெல்லாம் நடந்துக்குற முறையில தாண்டி
பிரியமும், பாசமும் நம் மேல வரும். நான் சொல்றேன் நல்லா
கேட்டுக்க!!
(பஸ்கள் நிற்பதும் போவதுமாய் இருக்க, நான் போக வேண்டிய
பஸ் இன்னும் வந்தபாடில்லை!!)
"சொல்லுங்கக்கா"
“காலையில் எழுந்ததிலிருந்து அவங்க ‘ஆப்பீஸ்’ போற
வரைக்கும் அந்த ஹரிபரி நேரத்தில் உன் மூஞ்சியையும்
(அது வேறு) முகத்தையும் (இது வேறு) காட்டிட்டீன்னா, இவங்க
'ஆப்பீஸ்' போய் நீ காட்டிய மூஞ்சியை நினைவில் வச்சிருந்-
தாங்கன்னு வச்சுக்கோ, ஆணி புடுங்க வேண்டிய இவரை, டேமேஜர்
பீஸ புடிங்கிடுவார். பொளப்பு என்னாகும். டப்பா டான்ஸ் ஆடிடும்.
புரியுதா?"
"புரியுதுக்கா!"
"அதனால எப்பவும் கொஞ்சம் சிரிச்ச மாதிரியே இரி! வேல
பாட்டுக்கும் வேல, கையும் கண்ணும் பார்த்துக்கிட்டிருக்க,
என்ன சங்கடமிருந்தாலும் கடையில் சேல்ஸ்மேன்கள்
மெல்லிதாய் சிரிச்சிக்கிட்டிருப்பாங்களே அதுமாதிரி!”
"அடடா விளக்கமெல்லாம் அழகா சொல்றீங்களேக்கா!"
"சரிடி பினாத்தாதே, கவனமா கேட்டுக்கோ!'
"ம்ம்ம்..."
"வாய்க்கு சுவையா ஆக்கிப் போடு!! எல்லாரும் ருசிக்கி
வயப்படுபவர்கள் தாம் புள்ள!"
"எனக்கு அத்தன வகையா சமைக்கத் தெரியாதேக்கா!"
"விடிஞ்சது போ! ஒன்னச் சொல்லியும் ஏதும் ஆகுறதில்ல. நம்மட அம்மாக்கள்ஸும் நமக்கு கல்யாணம் முடியுற வரைக்கும்
செல்லம் கொடுத்தே அடுப்படி பக்கம் போக விட மாட்டாங்க.
அதனால டீ, காபி தவிர்த்து சுடுதண்ணி மட்டும் தான் நமக்கு
போட வரும். என்னா நா சொல்றது சரிதானா?".
"உண்மைதாக்கா"
"சரி அதனால ஒன்றும் பிரச்சின இல்ல! இந்த பக்கம் நிறைய
தோழிகள், ப்ளாக்ஸ்பாட்டுல வகை வகையான சமையலைப்
பத்தியும், அவைகளை சமைக்கும் முறைப்பத்தியும் வண்ண
வண்ணமா படங்களைப் போட்டு அசத்துறாங்க!! அவைகளையும்
ஒரு முறைக்கு ரெண்டு முறை போயி படிச்சுப் பாரு. சந்தேக-
மிருந்தா அவங்களுக்கே கமெண்ட்ஸ் போட்டு விளக்கம் கேளு.
அழகா பதில் தருவாங்க! சும்மா லேப்டாப்பை தலகாணிக்கி
கீழே வச்சுக்கிட்டு தூங்காதே! சரியா?
"எல்லாம் சரீக்கா...ஆனா..க்கா ?"
"என்னடி ஆனாக்கா ஆவன்னாக்கா.. ?"
"அவரு டூட்டி முடிஞ்சு வந்த உடனே வெடுவெடுன்னு விழுறாரு!
அதுக்கு நீங்க எதுவுமே சொல்லலையே. அதாங்... க்கா!!”
"இரிடி...பறக்காதே! ஒன்னு ஒண்ணாத்தானே சொல்லணும். அவங்க
டூட்டி முடிஞ்சு சோர்ந்து போய் தான் வீட்டுக்கு வருவாங்க!
அப்பவும் கூட, உன்னோடு செல்லில் பேசி, வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டுதானே வராங்க!! அப்ப செல்லில் உன்னோடு பேசிய பிறகு, அவங்க வீட்டுக்கு வரும் நேரத்தை
கால்குலேட் செய்து மனதுக்குள் வச்சுக்க. இதுக்கு கம்ப்யுட்டர்
எல்லாம் தேவையில்லை!! (ஏஏஏ..யப்பா ரொம்ப படிச்சவங்களா
இருப்பாங்க போலிருக்கே!!) அதற்குள் காபியோ, டீயோ, டிஃபனோ,
அல்லது ஸ்ட்ரைட்டா சாப்பாடோ சாப்பிடுபவர்கள் என்றால்
அவைகளை ரெடி செய்து வைத்து விடு. குளித்து விட்டு சாப்பிட,
அவங்க மனசு சந்தோஷமா இருந்தா எவ்வளவு எலக்ட்ரிசிட்டி
ஷேவ் ஆகுதுன்னு நீயே பாரு!! சரியா??
"ஹி.. ஹி...சரீக்கா??"
"நா என்னத்த சொல்லிப்புட்டேன்னு இப்படி ஹி..ஹி..ன்னு
இளிக்கிரே! கவனமா கேளு புள்ளோய்!"
"சரீக்கா..சரீக்கா..!!"
"அத விட்டுபுட்டு அவங்க வர்ற வரைக்கும், டிவி தொடர், காமெடி
ஷோ பார்க்கலாம்னு உட்கார்ந்துட்டீன்னு வச்சுக்கோ, பிறகு நாம
காமெடிபீஸாகி விடுவோம். தெரிஞ்சுதா??"
"ஆமாக்கா, அதான் அவரு வெடுவெடுன்னு விழறாரா..!! இப்ப
தானே புரியுது. நீங்க மேலே சொல்லுங்கக்கா!"
“ஒன்னு மட்டும் மனசுல வச்சுக்கோ. புருஷா எல்லோரும்
குழந்தைங்க மாதிரி. நாம சிரிச்சா அவங்களும் சிரிப்பாங்க.
அவங்க சிரிச்சா நம்ம மனசும் வீடும் நிறைஞ்ச மாதிரி. அவங்க வரும்போது அழகா டிரஸ் பண்ணி கொஞ்சம் சிரிச்ச மாதிரி
முகத்த வச்சுக்கோ! வந்த உடனே எந்த கவலைப்படும் விஷயத்-
தையும் சொல்லிடாதே! நீ வாங்கி வரச் சொன்னதில் ஏதும்
மறந்து வந்துட்டாங்கன்னாலும், "போய் வாங்கிட்டு வாங்கன்னு
விரட்டாதே!", "பரவாயில்லிங்க, சமாளிச்சுக்கலாம்" என்று சொல்லி அட்ஜஸ்ட் பண்ணு" , புரியுதா?
"அச்சச்சோ... எம்பூட்டு விஷயம் அழகழகா சொல்றீங்க!"
“சரி சரி...மற்றதெல்லாம் ஒன்னற தோழிகளும் அம்மாவும்
சொல்லிக் கொடுத்திருப்பாங்க அதுபடி மனசில வாங்கி நடந்துக்க,
எல்லாம் சரியா வரும். என்னா புரியுதா..!!"
சிரித்துக் கொண்டே தலையை ஆட்டினாள்.
“சும்மா தலைய தலைய ஆட்டாதே!! காலையில் 'அவங்க' ஆப்பீஸ் போறதுக்கும், 'ஆணி' புடுங்கிட்டு வர்றதுக்கும், வாழ்க்கையின் அந்திம
நாள் வரைக்கும் அவங்களுக்கு உதவும்கரங்கள், என்றால் அது நாம
தான், இதில் எந்தவித மூன்றாம் நாலாம் கருத்துக்கும் இடமில்லை.
இப்ப நீ ஜாக்கெட்டில் காலர் வச்சிருந்தீன்னா ஒருதடவை தூக்கி
விட்டுக்கோ. தப்பே இல்ல!!”
அம்மாடி... கொஞ்ச நேரத்துக்குள்ளார அவங்க பாட்டுக்கும் எவ்வளவு சொல்லிக்கிட்டே போய்ட்டாய்ங்க!!

அதற்குள் நான் புறப்படவேண்டிய நாலாம் நம்பர் பஸ் வந்துடுச்சு. ஏறிட்டேன்.!! கண்டக்டர், “ரைட்.. ரைட்” விசில் கொடுத்தார்.
25 கருத்துகள்:
அடேங்கப்பா.. என்ன என்ன அட்வைஸ்..
கவிதை காதலன்
பரவா இல்லை.பேசிமுடிக்கறவரைக்கும் பஸ் வராமல் இருந்து எல்லோருக்கும் நல்ல மெசேஜ் கொடுத்து இருக்கீங்க அப்துல்காதர்.உங்கள் காது படு ஷார்ப் தான்.
தல உங்க காது ரொம்ப கூர்மை. இது ஊர்ல வச்சு நடந்ததா?
ஐடியா சொன்ன பெண்மணி ரொம்ப அனுபவசாலியா இருப்பாங்க போல :)
//ஒரு முறைக்கு ரெண்டு முறை போயி படிச்சுப் பாரு. சந்தேக-
மிருந்தா அவங்களுக்கே கமெண்ட்ஸ் போட்டு விளக்கம் கேளு.
அழகா பதில் தருவாங்க!//உண்மைதாங்க !!! நம்ம ப்ளாக் சகோதரிகள் உதவியால நானும் இப்ப சமையல் எக்ஸ்பெர்ட்.
அண்ணே உங்க காது செம உஷாருண்ணே...!!!
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்,
நல்ல அட்வைசுங்க !
@!@ கவிதை காதலன் கூறியது...
// அடேங்கப்பா.. என்ன என்ன அட்வைஸ்.. //
வாங்க கவிதை காதலன்..
நன்றி உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ ஸாதிகா கூறியது...
// பரவாஇல்லை. பேசி முடிக்கற வரைக்கும் பஸ் வராமல் இருந்து எல்லோருக்கும் நல்ல மெசேஜ் கொடுத்து இருக்கீங்க அப்துல்காதர். உங்கள் காது படுஷார்ப் தான்//
மெசேஜ் கொடுக்கணும் என்பதற்காக, ரெண்டு பஸ்ஸ தவறவிட்டச்சு, ! சொன்னா சொல்ல வந்த செய்தியின் வேகம் குறைஞ்சுடும்.
நன்றி ஸாதிகா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
ithu sontha kathai pola irukke!!!
அடடா ஒட்டுக் கேக்கவும் தொடங்கியாச்சோ அவ்வ்வ்வ்வ்வ்?:)).
எனக்கென்னமோ இது, நொந்து நூடில்ஸாகிப் போய் தனக்குத்தானே எழுதிப்போட்ட ஒரு பதிவுபோல தெரியுதே... அருமையான அட்வைஸ்தான்...:))).
@!@ vanathy கூறியது...
// ithu sontha kathai pola irukke!!! //
வான்ஸ் இப்படியெல்லாம் கேட்டா உண்மையை சொல்லிடுவமாக்கும் அவ்வ்வ்வ்...!!
நன்றி vanathy உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
//லேபிள்கள்: லேடீஸ் ஸ்பெஷல்//
அடக் கடவுளே.... இதுவும் ஆரம்பிச்சாச்சோஓ?:))))... இது எப்ப தொடக்கம்?:))) வழிவிடுங்க... வழிவிடுங்க நான் ஓடிடறேன்ன்ன்ன்ன்:)))).
@!@ athira கூறியது...
// அடடா ஒட்டுக் கேக்கவும் தொடங்கியாச்சோ அவ்வ்வ்வ்வ்வ்? :)). //
ஒரு பொது நலம் விரும்பிய, இப்படியெல்லாம் சோதிப்பதோ..பூஸ் அவ்வ்வ்வ்..
நன்றி athira உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ athira கூறியது...
// எனக்கென்னமோ இது, நொந்து நூடில்ஸாகிப் போய் தனக்குத்தானே எழுதிப்போட்ட ஒரு பதிவுபோல தெரியுதே... அருமையான அட்வைஸ்தான்...:))).//
நொந்தாலும் மீன் கருவாடாகாது, அதுவும் பூஸுக்கு மியாவ் சொல்ல வைக்காது. ஆஆஆஆ.... இந்த காதருக்கு வந்த சோதனை!
நன்றி athira உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ athira கூறியது...
//லேபிள்கள்: லேடீஸ் ஸ்பெஷல்// அடக் கடவுளே.... இதுவும் ஆரம்பிச்சாச்சோஓ?:))))... இது எப்ப தொடக்கம்?:))) வழிவிடுங்க... வழிவிடுங்க நான் ஓடிட றேன்ன்ன்ன்ன்:)))).//
யாரங்கே பூஸ் வந்தாச்சா. அது தான் இத்தனை களேபரமா? ஒரு கட்சி ஆரபித்ததற்கே இப்படி ஆர்பாட்டமா?? ஹய்யோ.. ஹய்யோ..சரி சரி.. வந்தது தான் வந்தீங்க கொடி ஏத்தி வச்சுட்டு போய்டுங்க. க்கி க்கி பூஸ்மா..!!
நன்றி athira உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ Sahajamozhi கூறியது...
//very nice//
வாங்க சகஜமொழி!! நலமா?? (நல்ல அழகான கேள்விபடாத புதுப் பெயரா இருக்கே!!)
நன்றி உங்களின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ சிநேகிதன் அக்பர் கூறியது...
// தல உங்க காது ரொம்ப கூர்மை. இது ஊர்ல வச்சு நடந்ததா? //
ஆமா!! .......... இல்ல!!.
// ஐடியா சொன்ன பெண்மணி ரொம்ப அனுபவசாலியா இருப்பாங்க போல:) //
இருக்கலாம். சொன்னத வச்சு பார்த்தா அப்படிதான் தோணுது தல!!
நன்றி சிநேகிதரே உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ angelin கூறியது....
// உண்மைதாங்க !!! நம்ம ப்ளாக் சகோதரிகள் உதவியால நானும் இப்ப சமையல் எக்ஸ்பெர்ட். //
கரெக்டா சொன்னீங்க ஏஞ்சலின்! ஃபாரினில் இருக்கும் 'பேச்சிலர்ஸ்' களுக்கு கூட, இந்த சகோதரிகள் எழுதுவது ரொம்ப உபயோகமா இருக்கு தெரியுமா? சொல்றாங்க!!
நன்றி angelin உங்களின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ MANO நாஞ்சில் மனோ கூறியது...
// அண்ணே உங்க காது செம உஷாருண்ணே...!!! //
காதர் காது கேக்காதுன்னு இங்கே கூறு போட்டு விக்கிறாங்க அண்ணே!!
நன்றி MANO நாஞ்சில் மனோ உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ இராஜராஜேஸ்வரி கூறியது...
// பகிர்வுக்குப் பாராட்டுக்கள்//
வாங்க இராஜராஜேஸ்வரி!!
நன்றி உங்களின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ மோகன்ஜி கூறியது...
// நல்ல அட்வைசுங்க! //
வாங்க மோகன்ஜி..!!
நன்றி உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்.
வலைபூக்களுக்கு விளம்பரம்,
வலைப்பூவிலே :)
நீங்க நடத்துங்க
Very useful information for life
கருத்துரையிடுக