வெற்றிகரமான திருமண வாழ்க்கையின் ரகசியம்!
திருமண வாழ்க்கையை எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்த
ஜோடிகள் தங்களது 25-வது திருமண நாளைக் கொண்டாடினார்கள்.
ஊரையேக் கூட்டி விருந்து வைத்து தங்களது திருமணநாளைக் கொண்டாடிய தம்பதியினரைப் பற்றி அறிந்த அந்த ஊர் செய்தி-
யாளர் ஒருவர், அவர்களைப் பேட்டிக் கண்டு பத்திரிக்கையில்
பிரசுரிக்க விரும்பினார்.
நேராக அந்த தம்பதிகளிடம் சென்று, 25-ஆம் திருமண நாளை ஒற்றுமையாகக் கொண்டாடுவது என்பது பெரிய விஷயம். இது
உங்களால் எப்படி முடிந்தது. உங்களது திருமண வாழ்வின்
வெற்றி ரகசியம் என்ன என்று கேட்டார்.
இந்த கேள்வியை கேட்டதும், அந்த கணவருக்கு தனது பழைய
தேனிலவு நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தது.
"நாங்கள் திருமணம் முடிந்ததும் தேனிலவுக்காக சிம்லா
சென்றோம். அங்கு எங்களது பயணம் சிறப்பாக அமைந்தது.
அப்பகுதியை சுற்றிப் பார்க்க நாங்கள் குதிரை ஏற்றம் செல்வது
என்று தீர்மானித்தோம்.
அதற்காக இரண்டு குதிரைகளைத் தேர்ந்தெடுத்து, இருவரும்
ஆளுக்கொரு குதிரையில் ஏறிக் கொண்டோம். எனது குதிரை
மிகவும் அமைதியாக சென்று கொண்டிருந்தது. ஆனால் என்
மனைவி சென்ற குதிரை மிகவும் குறும்புத்தனமானதாக
இருந்தது. திடீரென ஒரு துள்ளலில் என் மனைவியை அது
கீழேத் தள்ளியது. அவள் கீழே இருந்து எழுந்து சுதாரித்துக்
கொண்டு அந்த குதிரையின் மீது மீண்டும் ஏறி அமர்ந்து
கொண்டு, "இதுதான் உனக்கு முதல் முறை" என்று அமைதி-
யாகக் கூறினாள்..
சிறிது தூரம் சென்றதும் அந்த குதிரை மீண்டும் அவ்வாறே
செய்தது. அப்போதும் என் மனைவி மிக அமைதியாக எழுந்து
குதிரையின் மீது அமர்ந்து கொண்டு "இதுதான் உனக்கு இரண்டாம்
முறை" என்று கூறியவாறு பயணிக்கத் தொடங்கினாள்.
மூன்றாம் முறையும் குதிரை அவ்வாறே செய்ததும், அவள்
வேகமாக அவளது கைத்துப்பாக்கியை எடுத்து அந்த குதிரையை
சுட்டுக் கொன்றுவிட்டாள்!!!
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நான் அவளை திட்டினேன்.
"ஏன் இப்படி செய்தாய்? நீ என்ன முட்டாளா? ஒரு விலங்கைக் கொன்றுவிட்டாயே? அறிவில்லையா?" என்று கேட்டேன்.
அவள் மிகவும் அமையாக என்னைப் பார்த்து, "இதுதான்
உங்களுக்கு முதல் முறை" என்றாள்.
“பிறகென்ன... இப்பொழுதெல்லாம் எங்களது வாழ்க்கை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருக்கிறது” என்றார் கணவர்.
---------------------------------------------------------------------------------------------------------
AMAZING FACTS :
MASJID = is a 6 letters word
TEMPLE = is a 6 letters word
CHURCH = is a 6 letters word
Also...
QURAN = is a 5 letters word
GEETA = is a 5 letters word
BIBLE = is a 5 letters word
NAMES ARE DIFFERENT, BUT THEY ALL ARE TEACHES THE SAME....
(1) “HUMANITY”,
(2) “PEACE”,
(3) “UNITY”
பஸ்(buzz)ஸில் அனுப்பியது “சித்ரா” (வெட்டிப் பேச்சு சித்ரா அல்ல!!
இவங்க வேற சித்ரா.S!!)
நல்ல விஷயம் தானே!!
மேற்படி “ஆர-ஞ்சை” பெற்று விட்டாலும், கீழுள்ள “முக்கனி”
களை எப்பொழுது கைவர பெறப்போகிறோம். அனைவரும்
சற்றே சிந்திப்போம்!!
12 கருத்துகள்:
ப்பூ...இவ்ளோதானா??? சொல்ரதுக்கெல்லாம் தலையாடிட்டா போச்சு....
இப்பவாச்சும் ரகசியத்தை சொன்னிங்களே... புண்ணியமா போகும்..!! :))
எங்கள் MD பில்லி காட்டா கதை என இதை சொன்னார்கள். ஆனால் நீங்கள் சொன்ன விதம் இன்னும் சிறப்பாக நன்றாக உள்ளது.
தல இதுதானா ரகசியம். ஆனா இது ரகசியம்னு தெரியாம, இதைத்தான் நாங்களும் ஃபாலோ பண்றோம். :)
========
(1) “HUMANITY”,
(2) “PEACE”,
(3) “UNITY”
இந்த மூணும்தான் இறைவன் விரும்புவது. இதை பின்பற்றாமல் நான் இந்த மதம் தெரியுமா என பெருமையாக சொல்லிக்கொண்டு வாழ்வதால் யாருக்கு நன்மை?
நான் ஒழுங்கா என சுயபரிசோதனை செய்யக்கூடிய விசயம்.
the story is really funny!
@!@ Mohamed Faaique சொன்னது…
// ப்பூ...இவ்ளோதானா??? சொல்ரதுக்கெல்லாம் தலையாடிட்டா போச்சு.... //
சொல்வது ஈஸி, செயல் படுத்துவது சிரமம். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
அன்பு Mohamed Faaique உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
@!@ சேலம் தேவா கூறியது...
// இப்பவாச்சும் ரகசியத்தை சொன்னிங்களே... புண்ணியமா போகும்..!! :)) //
ரகசியத்தை ரகசியமா வைத்திருந்தா தானே ரகசியம். சொன்ன பிறகு அது எப்படி ரகசியமாகும். அதை கடைபிடித்தால் உங்களுக்கு தான் புண்ணியம் :-))
அன்பு சேலம் தேவா உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
@!@ ஒ.நூருல் அமீன் கூறியது...
// எங்கள் MD பில்லி காட்டா கதை என இதை சொன்னார்கள். ஆனால் நீங்கள் சொன்ன விதம் இன்னும் சிறப்பாக நன்றாக உள்ளது.//
பில்லி காட்டா கதைன்னா பூனை சொன்ன கதையா நானா??
அன்பு ஒ.நூருல் அமீன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
@!@ சிநேகிதன் அக்பர் கூறியது...
// தல இதுதானா ரகசியம். ஆனா இது ரகசியம்னு தெரியாம, இதைத்தான் நாங்களும் ஃபாலோ பண்றோம். :) //
பார்ரா.. இந்த திருநெல்வேலி நக்கல்லாம் உங்களுக்கு ரொம்ப இலகுவாய் வருது தல!:-))))
அன்பு சிநேகிதன் அக்பர் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
@!@ சிநேகிதன் அக்பர் கூறியது...
//(1)“HUMANITY”,(2)“PEACE”,(3)“UNITY” இந்த மூணும்தான் இறைவன் விரும்புவது. இதை பின்பற்றாமல் நான் இந்த மதம் தெரியுமா என பெருமையாக சொல்லிக்கொண்டு வாழ்வதால் யாருக்கு நன்மை? நான் ஒழுங்கா என சுயபரிசோதனை செய்யக்கூடிய விசயம். //
உண்மையில் நீங்க சொன்ன கருத்தே சிறப்பு அக்பர்.
அன்பு சிநேகிதன் அக்பர் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
@!@ ஷர்புதீன் கூறியது...
// the story is really funny! //
வாங்க ஷர்புதீன் நலமா??
அன்பு ஷர்புதீன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
;))) ஏதோ சீரியசா சொல்லப் போறீங்க என்று நினைச்சேன்.
கருத்துரையிடுக