facebook

திங்கள், செப்டம்பர் 26, 2011

"நல்ல ஓஹுத்திரியமா தாம்மா இக்கிது....!!!"


நெருங்கிய நண்பரின் குழந்தைகளுக்கு பர்த்டேயாம்ரொம்ம்ம்ம்ப....  வற்புறுத்தினார்.   சாதரணமா இதுமாதிரி விழாக்களில் எல்லாம்
நாம் எப்பவுமே கவனம் செலுத்துவதில்லை. ஆனால் பிரியாணியாம்... அதுவும் இறால் பிரியாணி!! இன்னும் ஏதேதோ அய்ட்டங்களை எல்லாம் சொல்லிக் கொண்டே போனார். அதெல்லாம் காதில் விழவில்லை. விடுவமா ?? சாப்பாடு என்றால் தான்  எங்க வேணும்னாலும்  போவோமேஹி..ஹி. (ஆனா புளிய மர  உச்சிக்கி மட்டும் போக மாட்டோம்அவ்வ்வ்வ்.... அங்கே.. அங்கே.. நா சொல்லமாட்டேம்பா!!!!)  

பாருங்க நாம எவ்வளவு பொறுப்போடு  வளர்ந்திருக்கிறோம்.  

சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். பேச்சு சுவாரஸ்யத்தில் நான் கொஞ்சம் நிறையவே சாப்பிட்டு விட்டேன். (ஹா.. இது எப்போதும் நடக்கிற கதை தானே என்று நீங்க கேட்பதெல்லாம் இப்ப காதில் விழாது!) ஆச்சு முடிஞ்சுச்சு...!!  கல்லா கட்டியாச்சு.


அவருடைய மகள் பாயாசத்தை ஸ்பூன் ஸ்பூனாய் குடித்துக் கொண்டிருக்கும் போது 'கடக்'கென்று சப்தம் (கல்). அப்படியே வாயில் தண்ணீரை கட கடவென்று சப்தமிட்டு பக்கத்திலிருந்த குண்டானில் துப்ப..

"ஏன்?? என்னாச்சு??" (கேட்கனும்ல!)..கேட்டேன்.

"சாப்பிட்ட பாயாசத்தில் கல் இருந்துச்சு uncle..."

சொல்லி முடிக்கலை..

"கல் சாப்பிட்டா, கல் செறிக்கிற வயசு உனக்கு"- இது அவருடைய மகன்.

"அப்ப ஏன் சோறு சாப்பிடுறீங்க?" இது அவர் மகள்.

அறிவு.. அறிவு.. அவங்க வாப்பா மாதிரியே! (ஹி..ஹி..!!)

இவர்கள் பேச்சைக் கேட்டு நண்பர் நெளிந்தார்!!

இந்தக் காலத்து பிள்ளைகள் எப்படி எல்லாம் பேசிக்கிறார்கள், யோசிக்கிறார்கள். நாமும் தான் இக்கிறோமே!!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
" பாட்சா"

இங்கே மங்களூரைச் சேர்ந்த மூன்று அண்ணன் தம்பிகள் இருக்கிறார்கள். அவர்களில் இருவர் மூத்தவர்கள். கடைசிப் பையன் இளையவன் (இதுக்கு மேலே நான் விவரிச்சா நீங்க அழுதுடுவீங்க!! ஹி..ஹி.!!) இவர்கள் என் கண் பார்க்க படிப்படியாய் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்

எப்படி என்றால், இவர்கள் வேறு கம்பெனிகளிலோ, கடைகளிலோ வேலை செய்யவில்லை. மீன்களை குறைந்த விலைக்கு வாங்கி நல்ல விலைக்கு விற்பது. அதாவது சொந்தமாய் கடை ஏதும் வைக்காமல், வாங்கி வந்த வேனிலேயே ஒரு முட்டு சந்தில் வைத்து மீன்களை விற்று விடுவது. மூன்று பேரில் ஒருவர் விலை பேசி எடை போட்டு தந்துவிடுவார்.

மற்ற இருவரும் அதை வெட்டி சுத்தம் செய்து தந்துக் கொண்டி ருப்பார்கள். கடையில் வாங்குவதை விட, விலை மலிவாக இருப்பதால், இவர்களுக்கு நிறைய கஸ்டமர்கள். இரவில் ஒன்பது பத்து மணிக்கு மேல்தான் நிறைய பேருக்கு டூட்டி முடிந்து வருவதாலும், முனிசிபாலிட்டி (பலதியா) செக்கிங் இல்லாததாலும் இவர்கள் வியாபாரம் அமோகம்.

இப்படி சம்பாதித்துக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து கண் படுமா இல்லையா? பட்டது!! யாராவது முனிசிபாலிட்டிக்கு போட்டுக் கொடுப்பது போல் போட்டு மாட்டிவிடுவது. முனிசிபாலிட்டிகாரன் வந்து இவர்களையும், மீன்களையும் அள்ளிக் கொண்டு போய் விடுவான்கள். அப்படி மாட்டி ரெண்டு மூணு தடவை கப்பம் கட்டியும் வெளியே வந்திருக்கிறார்கள். முன்னேறுவதற்கு இந்த ஒரு அடையாளம் போதாதா??

கண் சிமிட்டும் நேரம் போல் ஒரு நல்ல நாளில், ஒரு இடத்தைப் பிடித்து, நட்ஸ் கடை திறந்து விட்டார்கள். நட்ஸ் என்றால் போல்ட் நட்ஸ் இல்லை. பாதாம் பிஸ்தா கடை. இன்ன பிற அரைத்த கிச்சன் மசாலா சாமான்கள் சில்லறையில் விற்பனை மற்றும் டெலிபோன் கார்ட்கள் மொத்தமாய் கொள்முதல் செய்து wholesale/ retail-லில் விற்பது. அச்சா பஹூத் அச்சா.

இப்பல்லாம் பிற மாநிலத்துக்காரர்களிடம் ‘மெட்ராஸ்காரங்க’ என்று சொல்லிப் பாருங்க!! அப்படி ஒரு படுகேவலமான பார்வையைப் பார்ப்பார்கள் பாமரர்கள் கூட. ஆனால் இவர்கள் அப்படியல்ல!!!

நான் எப்ப கடைக்கு போனாலும் "பாட்ஷா" படத்தை பற்றி ரொம்ப சிலாகித்துப் பேசுவார்கள். "ஏய் நீ என்ன பெரிய பாஷாவா? ஒரு ஆளை அடிச்சா நூறு பேரு செத்து போய்டுவாங்கலாமே? அப்படிம்பாங்க. தமாஷுக்கு தான். அவர்கள் பேச்சு (ததிங்கினத்தோம் தமிழில்) ஒரே சிரிப்பாய் இருக்கும். அப்பத்திலிருந்து அவர்களை நான் பாட்சா என்று அழைப்பதும் , அவர்கள் என்னை பாட்சா என்று அழைப்பதுமாய் போய்க் கொண்டிருந்தது. ஆனா என்பெயர் அவர்களுக்கு தெரியாது. அவர்கள் பெயரும் எனக்கு தெரியாது. மொத்தத்தில் பாட்சா.. பாட்சா.. தான்.

ஃபேமிலி வந்த பிறகு இவர்களையும் அழைத்துப் போய் எல்லாப் பொருட்களும் வாங்குவோம். அப்பவெல்லாம் மூத்தவர்கள் இரண்டு பேர் கடையில் எப்போதும் இருப்பார்கள். இளையவன் கடையில் எப்போதாவது தான் இருப்பான்.

ஒரு நாள் என்னிடம் ‘இவங்க’ ஏதோ வாங்கச் சொன்னங்க. நான் வேலை விஷயமாய் எங்கோ போவதாய் சொல்லி, பாட்சா கடையில் வாங்கிக்க சொல்லிவிட்டு போய் விட்டேன்.

இவங்க போயிருந்த சமயம் கடைசி தம்பி தான் இருந்திருக்கான். "பாட்சா இல்லையா" என்று இவங்க கேட்க, அவன் "பாட்சா என்று யாரும் இங்க இல்லையேக்கா" என்று சொல்லி இருக்கான். இவங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு வந்துட்டாங்க! என் கிட்டேயும் அதைப் பற்றி கேட்கலை!!

பிறகொரு நாள் அந்தக் கடைக்கு போகும் போது, அந்த நேரத்தில் மூன்று பேருமே இருந்தாங்க. போன உடனேயே இவங்க கேட்டக் கேள்வி "உங்க மூணு பேர்ல யார் பாட்சான்னாங்க? ", அவர்கள் எல்லோருமே சிரிக்க, நானும் சிரித்தேன்.

நடுவன், "யக்கா இங்கே யாருமே பாட்சா கிடையாது. என் பெயர் சௌகத், அண்ணன் பெயர் அப்துல் ரஹ்மான், இளையவன் பெயர் நூருல்லாஹ்" என்று சொல்ல,

நானும் "என்னை அவங்க பாட்சான்னு கூப்பிடுவாங்க, நான் அவங்களை பாட்சான்னு கூப்பிடுவேன்" என்று சொல்ல..

ஙே...!!

"நல்ல ஓஹுத்திரியமா தாம்மா இக்கிது" (confusion) என்று இவங்க புலம்ப, ஒரே சிரிப்பு. (நோட் பண்ணிக்கோங்க இது புது வார்த்தை!!)

கூடுதலாய் தகவலுக்காக, இந்த சகோதரர்கள் தற்சமயம் வியாபாரம் செய்து வரும் கடை, நகை கடைகளை ஒட்டிய ஏரியா. இவர்கள் வியாபாரம் செய்து வரும் கடையும் முன்பு நகை கடை இருந்த இடம் தான். இவர்களும் நகைக் கடை திறக்க முயற்சி செய்து வருவதாக, வாய் வழிச் செய்திகள் காதுவழியாக புகைகிறது.

இப்பல்லாம் நான் அவர்கள் கடைக்குப் போனால் "பாட்சா..பாட்சா" என்று கூப்பிடுவதில்லை. "ராஸா, ராஸா" என்றே தான் கூப்பிடுறாங்க. ஏங்க...?? நல்லவேளை ஏதும் மொழிவாரியாக வேறு பெயர் சொல்லி கூப்பிடாமல் இருந்தால் சரிதான். அவ்வவ்வ்வ்வ்...

<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>
ஆஹா பக்கங்களின் இன்டலி பட்டையை யாரோ லூட்டடிச்சிகிட்டு போய்ட்டாங்க!! ஒரு மாசமா கவனிக்காட்டி இப்படியெல்லாம் கூட
ஆகுமா??

37 கருத்துகள்:

ஜெய்லானி சொன்னது…

தலையும் புரியல வாலும் புரியல அவ்வ்வ்வ் (நான் தலைப்பை சொன்னேன் ))) ஹி..ஹி...

ஜெய்லானி சொன்னது…

// சாதரணமா இதுமாதிரி விழாக்களில் எல்லாம்
நாம் எப்பவுமே கவனம் செலுத்துவதில்லை. //

ஏன் மொய் வைக்கனுங்கிற பயமா..? ஹா..ஹா..

ஜெய்லானி சொன்னது…

//ஆனா புளிய மர உச்சிக்கி மட்டும் போக மாட்டோம். அவ்வ்வ்வ்.... அங்கே.. அங்கே.. நா சொல்லமாட்டேம்பா!!!!)//

ஏன் வந்தா மட்டும் விட்டுடுவோமா க்கி..க்கி....

ஜெய்லானி சொன்னது…

//இவர்கள் என் கண் பார்க்க படிப்படியாய் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் //

அடப்பாவமே...!!! இவ்வளவு பொறாமையா.? ஹி..ஹி..

ஜெய்லானி சொன்னது…

//யாராவது முனிசிபாலிட்டிக்கு போட்டுக் கொடுப்பது போல் போட்டு மாட்டிவிடுவது. //

இது நீங்கதான்னு ஒரு நியூஸ் காத்துவாக்கில வந்துச்சே அது உண்மையா பாஸ் ஹா..ஹா.. :-))

ஜெய்லானி சொன்னது…

//(நோட் பண்ணிக்கோங்க இது புது வார்த்தை!!) //

ஆக்ஸ்ஃபோர்ட் ,லிஃப்கோ , ஆத்திச்சூடி எல்லாத்திலேயும் தேடிட்டேன் . கண்டிப்பா இல்லை . இனி நாகூர் , திட்டச்சேரி லைப்ரரிலதான் செக் செய்யோனும் அவ்வ்வ்வ் :-)))

ஜெய்லானி சொன்னது…

//வாய் வழிச் செய்திகள் காதுவழியாக புகைகிறது.//

என்னோட 4வது கமெண்ட் அப்போ உண்மைதான் ஹி..ஹி... :-))

ஜெய்லானி சொன்னது…

//ஒரு மாசமா கவனிக்காட்டி இப்படியெல்லாம் கூட
ஆகுமா?? //

இன்னும் ரெண்டு நாள் விட்டிருந்தா பிளாகையே நான் திருடிகிட்டு போய் வித்திருப்பேன் ..சான்ஸ் போச்சே....:-))

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா சொன்னது…

//ஜெய்லானி சொன்னது…
தலையும் புரியல வாலும் புரியல அவ்வ்வ்வ் (நான் தலைப்பை சொன்னேன் ))) ஹி..ஹி..//

படத்துக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இருக்கப்படா என அ.கா தான் சொன்னவர்:)), அதுபோல பதிவுக்க்கும் தலைப்புக்கும் சம்பந்தம் இருக்கப்படாபோல....

எப்பவுமே சம்பந்தம் பற்றியே என்னைப் பேச வைக்கிறாங்கப்பா..அவ்வ்வ்வ்வ்வ்:))).

//
"" ஓஹுத்திரியமா தாம்மா இக்கிது....!!!""
//

அப்துல்ல் காதர்.... வெளில வாங்க... இதை எப்படி உச்சரிப்பது... ஓடியோ இணைப்பு வேணும்:))))).

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா சொன்னது…

///புளிய மர உச்சிக்கி மட்டும் போக மாட்டோம். அவ்வ்வ்வ்.... அங்கே.. அங்கே.. நா சொல்லமாட்டேம்பா!!!!) ///

போயிடாதீங்க... முன்பெல்லாம் வெள்ளை வெள்ளையாத் தெரியும்:)))), இப்பவெல்லாம் பச்சை பச்சையாத் தெரியுதாமே:))))... ஹையோ நானும் ஒண்ணும் சொல்ல மாட்டேன்ன்ன்ன்ன்ன்:)).

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா சொன்னது…

//பாருங்க நாம எவ்வளவு பொறுப்போடு வளர்ந்திருக்கிறோம். //

படத்தைப் போடாம இப்பூடிச் சொன்னா எப்பூடி? படம் போட்டால்தானே.. சைட்டால வளர்ந்திருக்கிறீங்களா இல்ல மேலால வளர்ந்திருக்கிறீங்களா எனச் சொல்ல முடியும்....:).

கடவுளே ஆவு கெச்சேனு..... (அப்பூடின்னா மீ எஸ்ஸ்ஸ்ஸ்:))) அப்பூடின்னு இப்போ அர்த்தம்:))).. ஹி..ஹி..ஹி... விடமாட்டமில்ல.

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா சொன்னது…

//"நல்ல ஓஹுத்திரியமா தாம்மா இக்கிது" (confusion) என்று இவங்க புலம்ப, ஒரே சிரிப்பு. (நோட் பண்ணிக்கோங்க இது புது வார்த்தை!!) //

ஹா..ஹா..ஹா.... இதை என்னால உச்சரிக்கவே முடியேல்லையே பாட்ஷா.... அவ்வ்வ்வ்வ்வ்:)))

Naazar - Madukkur சொன்னது…

//"நல்ல ஓஹுத்திரியமா தாம்மா இக்கிது" (confusion) என்று இவங்க புலம்ப, ஒரே சிரிப்பு. (நோட் பண்ணிக்கோங்க இது புது வார்த்தை!!) //

ஏனுங்க அவுங்க சொன்னது - உபத்திரவம் என்ற வார்த்தை மருவியதாய் இருக்குமோ?
எப்படியோ பாட்சாக்கள் வாழ்க.

ஹுஸைனம்மா சொன்னது…

//Naazar - Madukkur சொன்னது…
....உபத்திரவம் என்ற வார்த்தை மருவியதாய் இருக்குமோ?//

அடடா, வட போச்சே!!

ஆமா, அவங்க ‘ஒஹுத்திரியம்’னு சொன்னது அந்தப் பெயரையே, அல்லது அதைச் சொன்ன உங்களையா?? :-))))))

ஹுஸைனம்மா சொன்னது…

சாப்பாட்டுல கல் இருக்கும், பாயாசத்திலயுமா? (பஸ்ஸுல பாம் வெப்பா, தேங்காயுலயுமா?)

//இந்தக் காலத்து பிள்ளைகள் எப்படி எல்லாம் பேசிக்கிறார்கள், யோசிக்கிறார்கள். நாமும் தான் இக்கிறோமே!! //

இறால் பிரியாணியே நினைப்பா ஈக்குறீஹ!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி கூறியது...

// தலையும் புரியல வாலும் புரியல அவ்வ்வ்வ் (நான் தலைப்பை சொன்னேன் ))) ஹி..ஹி... //

வாங்க தல!! தல நீங்க தான். ரெட்டை வால்ஸ் நானும், பூஸும் இப்ப புரிஞ்சிருக்கணுமே!! ஹி..ஹி.(நான் எங்களை சொல்லிக்கிட்டேன்!!)

உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றீஸ்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி கூறியது...

// ஏன் மொய் வைக்கனுங்கிற பயமா..? ஹா..ஹா..//

மொய்யா...!! ஒசீஸ் கிடைக்கும் போது எக்ஸ்பென்சஸ் நோஸ்!!அவ்வவ்வ்வ்வ் ....!!!

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றீஸ்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி கூறியது...

//ஆனா புளிய மர உச்சிக்கி மட்டும் போக மாட்டோம். அவ்வ்வ்வ்.... அங்கே.. அங்கே.. நா சொல்லமாட்டேம்பா!!!!)//

// ஏன் வந்தா மட்டும் விட்டுடுவோமா க்கி..க்கி.... //

விடாதிங்க...!! சொந்த பந்தம்னா விட மனசு வராது தான் அவ்வ்வ்வவ்..!!

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றீஸ்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி கூறியது...

// அடப்பாவமே...!!! இவ்வளவு பொறாமையா.? ஹி..ஹி.. //

பொறாமையா..??? அப்படீன்னா இன்னாங்னா...???

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றீஸ்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி கூறியது...

// முனிசிபாலிட்டிக்கு போட்டுக் கொடுப்பது நீங்கதான்னு ஒரு நியூஸ் காத்துவாக்கில வந்துச்சே அது உண்மையா பாஸ் ஹா..ஹா..:-))//

இந்த காத்து கருப்பு எல்லாம் ரொம்ப பொல்லாதது பாஸ்..!! கவனமா இருந்துங்க ஆமா...!! புளியமத்துக் கிட்டேவா....?? என்று யாரோ சொல்வது காத்து வாக்கில் கேட்குது) ஹா..ஹா..!!

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றீஸ்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி கூறியது...

//ஆக்ஸ்ஃபோர்ட், லிஃப்கோ, ஆத்திச்சூடி எல்லாத்திலேயும் தேடிட்டேன். கண்டிப்பா இல்லை. இனி நாகூர், திட்டச்சேரி லைப்ரரில தான் செக் செய்யோனும் அவ்வ்வ்வ் :-))) //

நீங்களே ஒரு "என்ஸைக் குளோபீடியா" இதெல்லாம் சும்மா ஜுஜுபி...!! அவ்வ்வ்வ்..

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றீஸ்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி கூறியது...

//என்னோட 4வது கமெண்ட் அப்போ உண்மைதான் ஹி..ஹி... :-)) //

காது வழியா கசிகிறதுன்னு.... வாசிக்கோணும் தல!!!

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றீஸ்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி கூறியது...

// இன்னும் ரெண்டு நாள் விட்டிருந்தா பிளாகையே நான் திருடிகிட்டு போய் வித்திருப்பேன்.. சான்ஸ் போச்சே....:-)) //

இஸ்கொயர் ஃபீட் இன்னா விலை பாஸ்??? நல்ல விலைக்கு வந்தா ஃபிப்டி ஃபிப்டி (பூஸ்....!! நோட் பண்ணிக் கோங்க!! இவங்கல்லாம் ஊருக்கு போகாமலா இருப்பாங்க?? :-))) அவ்வவ்வ்வ்வ்

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றீஸ்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

வாங்க பூஸ்!! நல்வரவு!!


@!@ athira கூறியது...

// எப்பவுமே சம்பந்தம் பற்றியே என்னைப் பேச வைக்கிறாங்கப்பா.. அவ்வ்வ்வ்வ்வ்:))) //

அதானே!!

பிள்ளைகள் வளர்ந்து ஆளாகிட்டாலே ... இந்த கவலை வரத்தான் செய்யும்!! நியாயமான கவலை தான். ஹி..ஹி.. (யாருக்கு??) மீமீமீமீமீமீ.... எஸ்ஸ்ஸ்ஸ்...

பூஸ் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றீஸ்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ athira கூறியது...

// "" ஓஹுத்திரியமா தாம்மா இக்கிது....!!!"" அப்துல்ல் காதர்.... வெளில வாங்க... இதை எப்படி உச்சரிப்பது... ஓடியோ இணைப்பு வேணும்:))))) //

இருங்க....!! மேடம் கூப்டுறாங்க... ஏதோ சமைச்சு வச்சிருக்காங்களாம். இதோ இப்ப சாப்டுட்டு இப்ப வந்துடுறேன். அவ்வ்வ்வ்..

பூஸ் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றீஸ்!!

Mohamed Faaique சொன்னது…

இந்த பதிவு என் டேஷ் போட்`ல வரலயே!!!

///ஙே...!!

"நல்ல ஓஹுத்திரியமா தாம்மா இக்கிது"//

இது தமிழ்தானா???

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா சொன்னது…

//நன்றீஸ்!!//

ஹா..ஹா..ஹா... நல்ல தம்பதிகள்:)))) உங்களிடமிருந்து நிறைய வார்த்தைகள் கற்றுக்கொள்ளப்போகிறேன்.. ஒகத்தியாரமாத்தான் இருக்குது..... ஹைஈஈஈஈ எனக்கும் வந்திட்டுதூஊஊஊஊஊ நன்றீஸ்ஸ்ஸ்:)))).

Asiya Omar சொன்னது…

//நல்ல ஓஹுத்திரியமா தாம்மா இக்கிது" (confusion) என்று இவங்க புலம்ப, ஒரே சிரிப்பு. (நோட் பண்ணிக்கோங்க இது புது வார்த்தை!!) //

நோட் செய்தாச்சு, அடுத்த புது வார்த்தைக்காக வெயிட்டிங்..

சிநேகிதன் அக்பர் சொன்னது…

குழந்தைகளை பற்றிய செய்தி உண்மைதான் தல அவர்கள் நமக்கு ஒரு அடி முன்னேதான் எப்போதும் ...

மங்களூர்க்காரர்களுக்கு எனது வாழ்த்துக்களும்!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ athira சொன்னது…

///புளிய மர உச்சிக்கி மட்டும் போக மாட்டோம். அவ்வ்வ்வ்.... அங்கே.. அங்கே.. நா சொல்ல மாட்டேம்பா!!!!) ///

//போயிடாதீங்க... முன்பெல்லாம் வெள்ளை வெள்ளையாத் தெரியும்:)))), இப்பவெல்லாம் பச்சை பச்சையாத் தெரியுதாமே :)) ஹையோ நானும் ஒண்ணும் சொல்ல மாட்டேன் ன்ன்ன்ன்ன்:)). //

ஒருமரத்தில் உட்கார்ந்திருந்தாதானே!! மரத்துக்கு மரம் தாவினா அப்பூடி தான் ஹி.. ஹி..!!

பூஸ் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றீஸ்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ athira சொன்னது…

// படத்தைப் போடாம இப்பூடிச் சொன்னா எப்பூடி? படம் போட்டால் தானே.. சைட்டால வளர்ந்திருக் கிறீங்களா இல்ல மேலால வளர்ந் திருக்கிறீங்களா எனச் சொல்ல முடியும்....:). //

இருங்க....!! மேடம் கூப்டுறாங்க... ஏதோ சமைச்சு வச்சிருக்காங்களாம். இதோ இப்ப சாப்டுட்டு இப்ப வந்துடுறேன்...... என்று சொல்லிட்டுப் போனேனே அப்பவே புரியலையா?? நாங்கல்லாம் எப்பூடின்னு !! இதையும் விலா வாரியா படமெல்லாம் போட்டு
விளக்க முடியாதூதூதூதூதூதூ. அவ்வவ்வ்வ்வ்.....

பூஸ் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றீஸ்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ athira சொன்னது…

// அப்துல்ல் காதர்.... வெளில வாங்க... இதை எப்படி உச்சரிப்பது... ஓடியோ இணைப்பு வேணும்:))))). //

//இதை என்னால உச்சரிக்கவே முடியேல்லையே பாட்ஷா.... அவ்வ்வ்வ்வ்வ்:))) //

// உங்களிடமிருந்து நிறைய வார்த்தைகள் கற்றுக் கொள்ளப் போகிறேன்.. ஒகத்தியாரமாத்தான் இருக்குது..... ஹைஈஈஈஈ எனக்கும் வந்திட்டுதூஊஊஊஊஊ நன்றீஸ்ஸ்ஸ்:)))). //

அப்பாடா இது தான் நல்ல பிள்ளைக்கு அடையாளம்!!க்கி..க்கி

// ஹா..ஹா..ஹா... நல்ல தம்பதிகள்:)))) //

அதிஸ் மிக்க நன்றீஸ்.... உங்கள் பாராட்டுதல்களுக்கு!! (இருந்தாலும் (அங்கே இங்கே பார்த்துக் கொண்டு)சுற்றிப் போட்டுக் கொள்வது உத்தமம் ... அவ்வ்வ்வ்)

பூஸ் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றீஸ் மியாவ்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Naazar - Madukkur கூறியது...

வாங்க நாசர் பாய் !!

// ஏனுங்க அவுங்க சொன்னது - உபத்திரவம் என்ற வார்த்தை மருவியதாய் இருக்குமோ? //

தப்பு தப்பா சொன்னாலும் நீங்க ரொம்ப சமர்த்து தான்!! அவ்வ்வ்வ்..

Naazar - Madukkur உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றீஸ்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஹுஸைனம்மா கூறியது...

//Naazar - Madukkur சொன்னது…....உபத்திரவம் என்ற வார்த்தை மருவியதாய் இருக்குமோ?//

// அடடா, வட போச்சே!! //

வட போனா என்ன ஹுசைனம்மா, இறால் பிரியாணி இக்கிதூல்லோ!! அவ்வ்வ்வ்..

// ஆமா,அவங்க ‘ஒஹுத்திரியம்’னு சொன்னது அந்தப் பெயரையே, அல்லது அதைச் சொன்ன உங்களையா?? :-)))))) //

என்னைச் சொன்னா விட்டிடுவேனா?? ஓஹோன்னானாம்..(சாதரணமாவே அப்படி தான் என்று யாருக்குமே
நான் சொல்ல மட்டேன்ல!! :-))

ஹுசைனம்மா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றீஸ்

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ asiya omar கூறியது...

// (நோட் பண்ணிக்கோங்க இது புது வார்த்தை!!) நோட் செய்தாச்சு, அடுத்த புது வார்த்தைக்காக வெயிட்டிங்..//

மனசை ஃபிரெஷா வச்சிக்கிட்டாவே
... வார்த்தைகள் மட்டுமல்ல, வாழ்க்கையும் எப்பவும் எங்களை மாதிரி புதுசாவே புலரும்...!! ஹா..ஹா..!!

asiya omar உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றீஸ்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Mohamed Faaique கூறியது...

// இந்த பதிவு என் டேஷ் போட்`ல வரலயே!!! //

சில நேரங்களில் இப்படி தான் ஆகுது boss. சர்வர் ப்ராப்ளமா இருக்கும்.

///ஙே...!! "நல்ல ஓஹுத்திரியமா தாம்மா இக்கிது"// இது தமிழ் தானா??

என்ன இப்படி கேட்டுடீங்க!! தமிழில் எழுதினா தமிழ்! ஆங்கிலத்தில் எழுதினால் அது இங்க்லீஷ்! இது புரியுதா?? அவ்வ்வ்வ்..

Mohamed Faaique உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றீஸ்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ சிநேகிதன் அக்பர் கூறியது...

// குழந்தைகளை பற்றிய செய்தி உண்மைதான் தல அவர்கள் நமக்கு ஒரு அடி முன்னே தான் எப்போதும் மங்களூர்க் காரர்களுக்கு எனது வாழ்த்துக்களும்! //


குழந்தைகளை விடுங்க! மீ பாவம்ல!! :-))

அக்பர் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றீஸ்!!