facebook

திங்கள், அக்டோபர் 17, 2011

தமிழ் மணம்!!!


உங்கள்  அனைவர்களின்  மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக...!!

எனக்கு நட்பு வட்டங்களில் மிகப் பெரியது மாற்று மதசகோதரர்கள் தான். அவர்களே நான் சொல்லும் சலாத்தின் அர்த்தம் அறிந்து கொண்டு, என்னை சந்திக்க வரும் பல நேரங்களிலும் சலாம் சொல்லாமல் என்னை பார்க்க வருவதில்லை. அவர்களோடு பழக்க வழக்கங்களும் சொல்லில் சொல்ல முடியாதவை.

சமீபத்தில் தமிழ்மணம் பற்றி தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா... என்ற பதிவு டெர்ரர் கும்மி தளத்தில் வந்தது. அதில் தமிழ்மணம் திரட்டியின் சமீப நிலைகளை நகைச்சுவையாக அல்லது நக்கலாக எழுதப்பட்டிருந்தது. அதில் பின்னூட்டமிட்ட பெயரிலி என்கிற இரமணிதரன் என்கிற தமிழ்மணத்தின் நிர்வாகி ஒருவர் அப்பதிவிற்கு ஆட்சேபனை செய்தார். அவர் ஆட்சேபனை செய்ததில் எந்த தவறும் இல்லை. ஆனால் அவர் பயன்படுத்திய வார்த்தைகள் தான் கண்டனத்துக்குரியது. சக பதிவர்கள் பலர் மீது அவர் பயன்படுத்திய கீழ்த்தரமான, கேவலமான வார்த்தைகள் இங்கு மேற்கோள்காட்டுவதற்காக கூட பிரசுரிக்க முடியாதவைகள். அந்த பதிவிற்கு சென்று நீங்களே அறிந்துக் கொள்ளுங்கள்.

மேலும், முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சந்திக்கும் போது சொல்லிக்கொள்ளும் "சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது நிலவட்டுமாக" என்னும் முகமனை கேலி செய்யும் விதமாக "...சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்..." என்று கொச்சைப் படுத்தியுள்ளார்.

இப்பொழுது வலைத்தளத்தை கேலி மற்றும் மனித மதங்களை (மனங்களை) புண்படுத்தும் ஒரு ஆயுதமாக  பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். தனது வக்கிரத்திற்காக மதங்களை பயன்படுத்திக் கொள்ளும் நபர்களை இங்கே வண்மையாய் கண்டிக்கிறோம்.

13 கருத்துகள்:

ஆமினா சொன்னது…

அதுக்கு கேனத்தனமா விளக்கங்கள் வேறு

Pebble சொன்னது…

//சாந்தியும் அவ அக்கா சமாதானியும் //
Will he write/say like this, if both of them are his sisters.

எம் அப்துல் காதர் சொன்னது…

தமிழ்மணம் தற்போது விளக்கம் வெளியிட்டுள்ளது. பார்க்க http://blog.thamizmanam.com/archives/359

Mohamed Faaique சொன்னது…

தமிழ் மணத்தோட விளக்கம் கிடையாது... அவங்க குரூப் ஆளுக்கு (ஆப்பிழுத்த குரங்கு) வக்காலத்து வாங்கி இருக்காங்க..

ஜெய்லானி சொன்னது…

அங்கே விளக்கம் குடுத்திருப்பது கண்துடைப்பு மாதிரிதான்.இருங்க அதுக்கும் ஒரு மாற்று வழியுடன் வருகிறேன் :-)))

அன்னு சொன்னது…

romba naal kalichu, soodaana oru naermaiyaana pathivu kader bhai. alhamthulillaah. vaalthukkal.

UNMAIKAL சொன்னது…

2008ம் வருடமே இணையதளத்தில் கீழ்க்கண்டவாறு பிரசுரமாகியிருப்பதை கண்ணுற்று அதிர்ச்சியாக இருக்கிறது.

1.பொறுத்திருந்து பாருங்கள் பெயரிலி...

வார்த்தை ஜாலக்காரரான இவருக்குப் பதில் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. சும்மா பொழுதுபோக்குக்காக பின் டெஸ்க்கில் உட்கார்ந்து கிடைக்கிற கொஞ்ச நேரத்தில் புரியாத வார்த்தை வரிசைகளை அடுக்கும் இவருக்கெல்லாம் பதில்சொல்வது நமது முட்டாள் தனம். இவன் ஆயிரம் சல்ஜாப்பு சொன்னாலும் அதிகாரத்திமிர் தலைக்கேறி அலையும் ஒரு ஜந்து தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது! …………

SOURCE: பொறுத்திருந்து பாருங்கள் பெயரிலி...

2. காலைல வந்து பதிவு எழுதலாமுன்னு கீபோர்டுல கைய வச்சா ஒரு பாலாப்போன எடுபட்ட சனியன் தான் கண்முன்னாடி நிக்கறான். நான் எதை ஒரு ஆல்டர்நேட்டிவ் மீடியா என்று நினைத்தேனோ அதை தன் பொச்சறிப்பிற்கு பயன்படுத்தி அராஜகம் செய்யும் இந்த சனி பகவானின் திருவருவம்!! கண்முன் வந்து தொலைக்கிறது... இந்த சனியனுக்கு பிடித்த எள் உருண்டை மட்டுமே படைப்பதா... இல்லை என் உருண்டை படைப்பதா என்று ஒரே குழப்பம். டமிழ்ஸ்மெல் நிலைமை இவ்வளவு கேவலமாகும் என்று நான் சத்தியமாக நினைக்கவில்லை... இருந்த ஒரே பெண்கலகக்குரலும் கழுத்து நெறிக்கப்பட்டுவிட்டிருக்கிறது.. அதுவும் இந்த சனியனின் வரிகளை மேற்கோள் காட்டியதற்க்காக... என்னடா பரிகாரம்னு ஒரு ஜோசியன்கிட்ட கேட்டா...

ரமணீதராய நமஹன்னு காலைல 1008 தடவை அடிச்சு அதை டமிழ்ஸ்மெல் லிஸ்ட் அட்மினுக்கு அனுப்பிவிட்டு பிறகு பதிவு எழுதனும்னு சொல்றாருங்க..

ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ....ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ....

Source: ரமணீதராய நமஹ+ப்ளடி டமிழ்ஸ்மெல்+பரிகாரம்

3. பெயரிலி அண்ணனனுக்கு ஒரு ”ஊ” போடுங்க!
மகராசா, வணக்கமுங்க... இடுப்புல துண்டைக்கட்டிக்கிட்டு காலில போட்றுக்கர செருப்ப கக்கத்துலு வச்சுக்குட்டு கும்புடறமுங்க... நீங்க யாரு.. என்னன்னு தெரியாம மோதிட்டமுங்க... உங்களுக்கு கோபம் வந்தா என்னாகுமுன்னு தெரியாம இத்தனை நாள் பொழப்பை கெடுத்துக்கிட்டு எழுதிட்டனுங்க...

உங்க தயவு இல்லைன்னா நாங்க தூக்கியெறியப்படுவோமின்னு இம்புட்டுநாள் தமிழ் மணம் படீங்க தமிழ்படீங்கன்ன பொட்டைவெயிலில வழியில பாத்தவங்ககிட்டல்லாம் சொன்னபோதெல்லாம் தெரியலீங்க...

இப்பத்தான் தெரிஞ்சதுங்க உங்க மேன்மை... ………….. ……. …

SOURCE: பெயரிலி அண்ணனனுக்கு ஒரு ”ஊ” போடுங்க!

அப்துல்மாலிக் சொன்னது…

தமிழ்மணமே மன்னிப்புகேள்


தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு என் ஆழ்ந்த கண்டனங்கள்...

G u l a m சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
நம் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!!!

தமிழ் மனங்களின் இந்த எதிர்ப்பை தமிழ்மணம் இந்தளவிற்கு எதிர் பார்த்திருக்காதென்ற நினைக்கிறேன்., இப்பொழுது தமிழ் மனங்களை குறித்து தமிழ்மணம் தெளிவாய் அறிந்திருக்கும் ஆக இனியும் தம் போக்கை தமிழ்மணம் மாற்றிக் கொள்ளாவிட்டால் தம் logo வை "ங்" லிருந்து "ஙே" க்கு தான் மாற்றிக்கொள்ள வேண்டும்.

-இறை நாடினால் இனியும் சந்திப்போம்
http://iraiadimai.blogspot.com/2011/10/blog-post_16.html

செ.சரவணக்குமார் சொன்னது…

அநாகரிகமான கமெண்ட் அது. தமிழ்மணம் சார்பாக என்று வேறு இருக்கிறது. தமிழ்மணம் சேவை நோக்குடன் துவக்கப்பட்ட நல்ல அமைப்பு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இருப்பினும் அதன் நிர்வாகிகளில் ஒருவர் இந்த அளவிற்கு தரம் தாழ்ந்த கருத்தைச் சொல்லியிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது.

எனது கடுமையான கண்டனங்கள்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இன்னும் மன்னிப்பு கேட்கலையே...???

பஹ்ரைனிலும் தமிழ்மணம்[[துக்கு]] ஆப்பு ரெடியாகிட்டு இருக்கு...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஜெய்லானி கூறியது...
அங்கே விளக்கம் குடுத்திருப்பது கண்துடைப்பு மாதிரிதான்.இருங்க அதுக்கும் ஒரு மாற்று வழியுடன் வருகிறேன் :-)))//

சீக்கிரம் வாங்க...

tamil Naththam சொன்னது…

தமிழ் நாத்தம்.
தமிழ் மணம் திரட்டியின் கயமைத்தனத்தை அம்பலப்படுத்தி தமிழ்10, இன்ட்லி, தமிழ்வெளி, வலைபூக்கள், உழவன், தேன்கூடு, ஹாரம், போன்ற திரட்டிகளுக்கு மக்களை வரவேற்பதே.