தமிழ்மணத்தை சவுதியில் மீட்க கை கோர்ப்போம்
அஸ்ஸலாமு அலைக்கும்!!
சவுதியில் தமிழ்மணம் தடை செய்யப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது.
எல்லோருடைய பதிவுகளையும் படித்தவர்கள் தான் உணர்ச்சி வசப்பட்டு மெயில் அனுப்பி இருக்க வேண்டும். சவுதியில் unblock செய்ய வேண்டிய வேலையை பாருங்கள்.
நீங்கள் சவுதியில் இருக்கிறீர்களா? தமிழரா? இணைய வசதி இருக்கா?
தயவு செய்து unblock request கொடுங்கள்.
கிழேயுள்ள இந்த லிங்கில் கொடுக்கவும்.
http://www.internet.gov.sa/resources/block-unblock-request/unblock/
நானும் என்னை சார்ந்த நண்பர்களும் unblock-request கொடுத்து விட்டோம்.
குறைந்தது 25 நபர்களாவது இந்த பரிந்துரை கொடுக்க வேண்டும்
இன்னும் 24 மணிநேரம் தான் டைம் இருக்கு. ப்ளீஸ்!!!
19 கருத்துகள்:
ஸலாம் அருமை சகோதரர்களே ..
தமிழ்மணத்தை சவுதியில் மீட்க கைகோர்க்கிறேன்...
நான் எனது Unblock request அனுப்பிவிட்டேன்....
அன்புடன்
ரஜின்
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
ரொம்ப நன்றி சகோ
insha allah block will be taken out.
'நம் பதிவுகளை படித்தவர்கள் தான் உணர்ச்சி வசப்பட்டு மெயில் அனுப்பி இருக்க வேண்டும். சவுதியில் unblock செய்ய வேண்டிய வேலையை பாருங்கள்.'
ஏன் சாமிகளா, நாம எதையும் ஒரு தடவைக்கு ரெண்டு தடவை யோசிச்சி செய்ய மாட்டமா? எதிர் பதிவு போட்டவங்களுல ஒருத்தராவது நிலைமையின் சாரம்சத்தை புரிஞ்சிகிட்டு ஒரு பதிவை போட்டீகளா. ஐயோ குத்துதே குடையுதேன்னு இப்ப வருந்தி என்ன பிரயோசனம். இப்படித்தான் சாதி கலவரம், மத கலவரம், மண்ணாங்கட்டி கலவரம் ஊரில தலை விரிச்சி ஆடுது. நாம எல்லாம் படிச்சி என்னத்த செய்ய?!
தமிழ்மணம் தடை செய்யப்படுவதுதான் சவூதி அரசின் நோக்கமாக இருந்தால் அது நிறைவேறட்டும், எதற்கு இப்படி தடை அகற்ற கோரி ஒரு தீர்மானம். அதுவும் ஒருவரின் தனிப்பட்ட நபரின் மின்னஞ்சலைப் பார்த்து செயல்படும் ஒரு அரசு எல்லாம் என்ன அரசு? ஒன்றை தடை செய்ய ஒருவரின் குற்றச்சாட்டு போதும், அந்த தடையை நீக்க இருபத்தி ஐந்து பேரு வேண்டும். என்ன நியாயம் கெட்ட அரசியல் இது.
ஒரு மதத்தவரின் மனதை புண்படுத்த அந்த மதத்தவரே போதும் என்கிற நிலைப்பாடுதான் இந்த மதங்கள் தோன்றிய நாளில் இருந்து நடந்து வருகிறது. நன்றி.
தமிழ்மணத்தை சவுதியில் மீட்க கைகோர்க்கிறேன்... என செய்தி அறிந்த அனைத்து முஸ்லீம் பதிவாளர்களூம் அணிவகுத்து செயலாற்றி கொண்டிருக்கிறார்கள் என்பதை இதில் பதிவிட மகிழ்கிறேன்.
சவூதியில் உள்ள முஸ்லீம் அல்லாத எவெரேனும் முஸ்லீம்களின் பெயரை உபயோகித்து இச்செயலை செய்திருக்கலாம் என்பதையும் யோசிக்கவேண்டியிருக்கிறது.
எப்படியிருப்பினும் நம்முடைய நல்லெண்ண குறிக்கோளில் நாம் ஒன்றுபட்டு நிலைத்திடுவோம்.
====================================
தமிழ்மண நிர்வாகிகளுக்கு நான் அனுப்பிய மெயில்.
From: VANJOOR
Date: 2011/10/19
Subject: GOODWILL
To: admin@thamizmanam.com
Dear Administrators,
After I have registered the following comment
83.VANJOOR on October 18th, 2011 11:43 am
in link http://blog.thamizmanam.com/archives/359
HEADER: தமிழ்மணம் பதிவர்களுக்கு சில விளக்கங்கள்
I was delighted to receive positive response and support from majority of muslim
Bloggers to my call and agreed in good faith to forget and put an end to this unfortunate episode .
So let us shake hands in goodwill with goodwill for goodwill.
Your acknowledgement regarding this much appreciated.
Regards.
vanjoor
http://vanjoor-vanjoor.blogspot.com/
E&O.E.
83.VANJOOR on October 18th, 2011 11:43 am
in link http://blog.thamizmanam.com/archives/359
HEADER: தமிழ்மணம் பதிவர்களுக்கு சில விளக்கங்கள்
• VANJOOR on October 18th, 2011 11:43 am
திரு.சங்கரபாண்டி அவர்களின் விளக்கத்திற்கு நன்றி.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
மன உளைச்சலுக்குள்ளான சக இஸ்லாமிய பதிவர்களே ! வாசகர்களே !!
இனிமேலும் இதுபோன்ற நிகழ்வுகள் தமிழ்மணத்திலோ தமிழ்மணத்தின் பெயராலோ இடம் பெறாது என பரிபூரணமான நம்பிக்கையுடன்
மன்னிப்போம் மறப்போம் என்ற மானுட வசந்த பாதையில் பயணிப்போம்.
நாம் சந்திக்கும் பல இடங்களில் ஒன்றாக தமிழ்மணமும் வழக்கம் போல் இருக்கட்டும்.
தன்மான உணர்வுடன் இதுவரையிலும் தமிழ்மணத்திலிருந்து தானாகவே விலகிக்கொண்ட அனைத்து சக முஸ்லீம் பதிவர்களும் மீண்டும் தமிழ்மணத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
நல்லெண்ணத்தின் அடிப்படையில் நேச கரம் நீட்டும் செயலாக இதுகாறும் தானாகவே விலகிக்கொண்ட மன உளைச்சலுக்குள்ளான சக இஸ்லாமிய பதிவர்களை
தமிழ்மணம் அடையாளம் கண்டு தமிழ்மணம் தன்னிச்சையாக அவர்களை தமிழ்மனத்தில் இணைத்து திரு.சங்கரபாண்டியன் உள்ளிட்ட தமிழ்மண நிர்வாகிகளின் நேசக்கரத்தை வலுவூட்டலாமே ..
வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.
என்ன ஒரு மட்டமான அரசு சவுதி அரசு...யாரும் தட்டிக் கேக்கிறது கிடையாதா?
ரொம்ப நன்றி....
https://plus.google.com/109184741571783529584/posts/bRsssENUucg
பஸ்ஸில் பகிர்ந்திருக்கிறேன்.,முயற்சியினை பாராட்ட வார்த்தைகள் இல்லை !!!!!
//அதுவும் ஒருவரின் தனிப்பட்ட நபரின் மின்னஞ்சலைப் பார்த்து செயல்படும் ஒரு அரசு எல்லாம் என்ன அரசு? ஒன்றை தடை செய்ய ஒருவரின் குற்றச்சாட்டு போதும், அந்த தடையை நீக்க இருபத்தி ஐந்து பேரு வேண்டும். என்ன நியாயம் கெட்ட அரசியல் இது. //
இது யாரோ ஒருவரின் மெயிலால் எதையும் சட்டென்று தடை செய்ய முடியாது .சரியான காரணம் காட்ட வேண்டும் .
குர் ஆன் , ஹதிஸுக்கு முற்றிலும் முரணாக ’அவதூறாக’ எதுவும் எழுதி இருப்பதாக ஆதாரம் காட்டினால் போதும் .
இதுவே இஸ்லாமிய அமைச்சகத்தின் கீழ் வரும் நிறுவனங்களின் ஒரு போன கால் மட்டுமே போதும் .
மண்ணிப்பது மனிதனின் செயல். அதற்குதான் சிறிது நேரம் கேட்டது. எனது பிளாகிலும் இதற்குதான் அவகாசம் கேட்டேன் .எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்வது கூடாது.
நடுநிலையாளர்கள் எந்த வகையிலும் பாதிக்கக்கூடாது :-)
நானும் Unblock request கொடுத்து விட்டேன்.
((குறைந்தது 25 நபர்களாவது இந்த பரிந்துரை கொடுக்க வேண்டும்))>>>இதற்கு பலமதனக்கு மேலேயே கொடுத்து இருப்பார்கள்.
((இதுவே இஸ்லாமிய அமைச்சகத்தின் கீழ் வரும் நிறுவனங்களின் ஒரு போன கால் மட்டுமே போதும் .))>>>பதிவர்.ஜெய்லானி சொல்றது சரிதான். அனுபவத்தில் நான் உணர்ந்து இருக்கிறேன்.
மிக வருத்தமான செய்தி.
நானும் மெயில் அனுப்பிவிட்டேன்.
சீக்கிரம் சரியாகும் என நம்புகிறேன்.
தமிழ்மணத்தை சவுதியில் மீட்க கைகோர்க்கிறேன்.
நானும் அன்ப்ளாக் ரிக்வஸ்ட் கொடுத்துருக்கேன்
PUTHIYATHENRAL கூறியது...
தமிழ்மணத்தை சவுதியில் மீட்க கைகோர்க்கிறேன்.
ஆமினா கூறியது...
நானும் அன்ப்ளாக் ரிக்வஸ்ட் கொடுத்துருக்கேன்.
ஆஹா! என்ன அக்கறை !என்ன அக்கறை! மெய்சிலிர்க்கிறது.
வ அலைக்கும் சலாம் வரஹ்
சகோ அப்துல் காதர் செய்தி பகிர்ந்தமைக்கு நன்றி.,
சகோ., V.Radhakrishnan
உங்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
உங்கள் பின்னூட்டம் தொடர்பாக என்னின் சில வரிகள்:
பதிவு போடும் போது கூட நாங்கள் இந்தளவிற்கு உணர்ச்சி வசப்படவில்லை., பின்னூட்டம் இடும் போது அவ்வளவு உணர்ச்சி வசப்படுகிறீர்கள்.,...சகோ
கொஞ்சம் உங்களை ஆசுவாசப்படுத்தி தொடருங்கள் சகோ
ஆஹா.... நம் முகமனை கேவலப்படுத்தி விட்டார்கள் உடனே தட்டு கீ போர்டை போடு பதிவை....!
எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவு பண்ணி சகோ ரமணிதரன் / தமிழ்மணம் குறித்த பதிவுகளை நாங்கள் பதிவிடவில்லை.,
மாறாக ஒரு நிர்வாகத்துக்கு தரவேண்டிய கண்ணியத்துடன் தமிழ்மணத்திற்கு முறையாக மெயில் மூலம் தொடர்புக்கொண்டு முகமன் தொடர்பான குற்றச்சாட்டிற்கு காரணம் வினவியும் - அதுக்குறித்து தகுந்த பதில் தராமல் பதிலிட்டதாலே அதைத்தொடர்ந்து பதிவுகள் இட்டோம்.
ஆக சவுதியில் தடை செய்யட்ட செய்தயே இங்கும் முஸ்லிம் பதிவர்கள் தான் தெரிவிக்கிறார்கள்., அதற்கான மாற்று தீர்வையும் அதே முஸ்லிம் பதிவாளர்கள் தான் கூறுகிறார்கள்., சகோ
முகமன் தொடர்பாக - தமிழமணம் தடை செய்யப்படவேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம் என்றிருந்தால் அந்த பதிவும் - இந்த பதிவும் இட வேண்டிய அவசியமே இல்லை.,
புரிந்துக்கொள்வீர்கள் என நினைக்கிறேன்.,
-இறை நாடினால் இனியும் சந்திப்போம்
நன்றி ஜெய்லானி, நன்றி குலாம்.
'வ அலைக்கும் சலாம் வரஹ்'
நாம் செய்யும் செயல்களுக்கு காரணம் கற்பிப்பது எளிது.
அடித்துவிட்டு வருந்துவதை விட, அடிக்கும் முன்னர் யோசித்தால் நலம்.
ஒருவர் தான் தவறாக செய்த செயலுக்கு மன்னிப்பு கேட்டுவிடுவதால் அவர் செய்த செயல் சரியென ஆகிவிடாது.
ஒருவரை நாம் மன்னித்துவிடுவதால் அவர் செய்த குற்றம் குற்றம் இல்லை என்றாகி விடாது.
அவரவர் எழுத்துக்கு, செயலுக்கு அவரவர் பொறுப்பு. ஒருவரை தீண்ட தீண்ட வேண்டாத விசயங்கள் நடப்பது சில நேரங்களில் தவிர்க்க இயலாதது, அதுவும் கட்டுப்பாடு தவறினால்.
எனது எழுத்துகளில் நீங்கள் நான் உணர்ச்சிவசப்பட்டேன் என இல்லாத ௦ஒன்றை எப்படி கண்டு கொண்டதாக கூறுகிறீர்களோ, பொதுவாக நான் இதுபோன்ற விசயத்துக்கேல்லாம் உணர்ச்சிப்படுவதில்லை,மாறாக மனதில் எழுதும் கருத்தை எழுதுவது உண்டு, அதைப்போலவே பிறரும் உங்கள், எனது செயல்பாடுகள் குறித்து வெவ்வேறு கருத்து கொள்ளலாம் என்பதை நினைவில் நாம் நிறுத்துவது நன்று.
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் சகோ. எவராலும் கேவலப்படுத்த முடியாது இறைவனின் முகமனை. எவராலும் மாசுபடுத்த இயலாது இறைவனின் ஒளிமிக்க இயல்பை. இறைவன் மாசுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர். இறைவன் உற்றார், உறவில்லாதார் என அனைவருக்குமே பொதுவானவர். அவரை களங்கப்படுத்தும் செயலை செய்பவர்கள் தங்களை தாங்களே களங்கபடுத்துகிறார்கள் என்பதுதான் உண்மை. இதை உலகில் உள்ள அனைவரும் நினைவில் கொண்டால் நலம் பெறலாம்.
எல்லாம் ஒரு குரூப்பாய் தான் இருக்காய்ங்க போல
புள்ளையும் கிள்ளியாச்சி தொட்டிலையும் ஆட்டியாச்சி
//எல்லாம் ஒரு குரூப்பாய் தான் இருக்காய்ங்க போல
புள்ளையும் கிள்ளியாச்சி தொட்டிலையும் ஆட்டியாச்சி//
திரைமணம் அப்படின்னு அதுக்கூடவே ஒரு பிளாக் இருக்கு , அதில் நிறைய திரை பட ஸ்டில்லும் இருப்பதால் இந்த தமிழ்மணம் திரும்ப வருவதில் நடைமுறை சிக்கல் இருக்கு .
என்னதான் அன்பிலாக் ரிக்வெஸ்ட் குடுத்தாலும் ..... :-(
((சவுதியின் சட்டம் தெரிந்தவர்கள் நான் சொல்வதை புரிந்துக்கொள்வார்கள் என நினைக்கிறேன் )).
## அன் பிலாக் ரிக்வெஸ்ட் கொடுப்பவர்களின் தனிபட்ட தகவலும் கூடவே கொடுப்பதால் அவர்கள் பிளாகில் (அறை குறை ) படங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது . அப்படி இல்லாவிட்டால் அவர்கள் அங்கேயே (அதே நாட்டில் )இருந்தால் அவர்களுக்கும் கஷ்டம்தான் ஜாக்கிரதை :-)
கருத்து தெரிவித்த அனைவர்களுக்கும் நன்றீஸ்!!
கருத்துரையிடுக