facebook

செவ்வாய், ஜனவரி 24, 2012

கடையில் அரைத்து பாக்கெட்டில் விற்கும் இட்லி, தோசை மாவு: ஒரு ஸ்லோ பாய்ஸன்??!!




என்ன தலைப்பை பார்த்து பயந்துவிட்டீர்களா, ஆம் இது
முற்றிலும்  உண்மை!!

மைதாவினால் செய்த பரோட்டா, அதில் உள்ள கெமிக்கல் உடம்புக்கு நல்லது அல்ல என கொஞ்ச நாளுக்கு முன் ஃபேஸ்புக்கில் பெரிதளவில் ஷேர் செய்யபட்ட பரபரப்பு அடங்கு முன்னர், இப்பொழுது இட்லி எனப்படும் வேகவைத்த "ரைஸ் பேன்கேக்" பற்றிய சிறு ஆய்வு.

பரோட்டாவாவது நமது பாரம்பரிய உணவு அல்ல, மற்றும் அதை இளைஞர்கள் தான் உண்ணுவார்கள், ஆனால் இப்பொழுது நமது ஒரு வயது குழந்தை முதல் வயாதனவர்கள் வரை உண்பது "இட்லி" எனப்படும் ஒரு தமிழனின் உணவு. இது போக பேஷண்ட்களும், அறுவை சிகிச்சை செய்தவர்களும் மற்றும் திட உணவு சாப்பிட ஆரம்பிக்கும் எந்த ஒரு பேஷண்டுக்கும் பரிந்துரைக்கும் முதல் உணவு இட்லி தான்.

இந்த கட்டுரையை நான் எழுதவேண்டும் என பல மாதங்கள் நினைத்தும் ஏனோ சில பல காரணங்களால் அது நடக்காமல் போனதற்கு ஒரு முக்கிய காரணம் அதற்கு தேவையான ஆராய்ச்சி விஷயங்கள் தான். அதற்குரிய பொறுமையான தேடல்களில் சமீபமாய் கிடைத்தவைகளை தான் உங்களுடன் பகிர்கிறேன்.

ஆம், நான் கூறும் இந்த விஷயங்கள் 100% சதவிகிதம் உண்மை. இட்லியை நீங்கள் வீட்டில் மாவரைத்து சாப்பிட்டால் பிரச்சினை கொஞ்சமும் இல்லை இதையே கடையில் வாங்கி சாப்பிட்டால் பல பேருக்கு ஒத்து வராது என்பது மறுக்க முடியாத உண்மை. அப்ப என்ன தான் பிரச்சினை என்கிறீர்களா?? அதற்கும் தேவையான் மாவு பற்றி தான் இந்த ஆய்வு கட்டுரை.

ஆம். ஒரு காலத்தில் நாம் ஆட்டுரலில் மாவு அரைத்தோம், பின்பு அது மிக்ஸி மற்றும் எலக்ட்ரானிக் கிரைண்டர்ஸ் வந்தது. அதுவும் பரவாயில்லை வாழ்க்கை மாற்றங்களின் காரணத்தால் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாகி போனது. சமீப காலமாக இட்லி தோசை மாவு ‘ரெடிமேடாக’ பட்டிதொட்டி அண்ணாச்சி கடை முதல் பெரிய பெரிய  சூப்பர் மார்க்கெட் வரை எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. மக்களும் இட்லிக்கு மாவு அரைப்பதையே மெல்ல மறந்து வருகின்றனர்.

முன்பாவது திடீர் டிபன் ரவா உப்புமாதான். இப்பொழுது நம்ம வாண்டுகளிடம் "தம்பி முனை கடையில ஒடி போய் ஒரு பாக்கெட் இட்லி தோசை மாவு வாங்கி வா"ன்னு சொல்லி வந்த மாவை இட்லி தோசை ஊத்தி மிச்சத்தை ஃபிரிஜ்ஜில் வைத்து அது முடியும் வரை ஓட்டிக் கொண்டிருக்கிறோம். ஏனோ இதற்கு பேச்சிலர்சும்  விதிவிலக்கில்லை.

இந்த மாவு ஒரு உயிர்கொல்லி - ஸ்லோ பாய்ஸன் என்பது ஏனோ நிறைய பேருக்கு தெரிவதில்லை. இதன் பயங்கரத்தை இப்பொழுது கூறுகிறேன் கேளுங்கள்.




1. நீங்கள் வாங்கும் எந்த ஒரு வெட் ஃப்ளோர்-Wet Flour (ஈர பத தோசை மாவிற்கும்) ஐ எஸ் ஐ-ISI சான்றிதல் கிடையாது. அதனால் இது எந்த ஒரு ஆராய்ச்சி கூடத்திலும் சோதனை செய்யபடவில்லை.

2. இந்த மாவு சில மட்டமான அரிசியும் உளுந்தும் அத்துடன்,
புண்ணுக்கு பயன்படும் போரிங் பவுடர் மற்றும் ஆரோட் மாவு போடுவதால் மாவில் புளிப்பு வாசனை கண்டிப்பாக வராது. அது போக, மாவும் பொங்கி நிறைய வரும் என்பதால் இதை செய்கின்றனர். இதே மாதிரி வீட்டில் அரைத்த மாவை ரெண்டு நாள் வைத்து மூன்றாவது நாள் முகர்ந்து பாருங்கள் புளிப்பு வாசனையும் வரும் தோசையும் புளிக்கும். ஏனென்றால் மாவு பக்குவமாவதும் தயிர் உறைவதும் ஒரு நல்ல பேக்டீரியாவின் செயலாகும். இதை தவிர்க்க தான் கடையில் வாங்கும் மாவுக்கு 6 நாள் கியாரண்டி அளித்தும் ஒரு வாசனையும் வராமல் இருக்கக் காரணம்.

3. முக்கியமாக இந்த கிரைண்டர்கள் கமர்ஷியல் ரகம் இல்லை. அதாவது, ஒரு நாளைக்கு 3 - 6 மணி நேரம் அரைக்க முடியும். ஆனால் இவர்கள் 12- 18 மணி நேரம் தொடர்ந்து ஓட்டுவதால் அந்த கல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து பல சமயம் இந்த சிறு கருங்கல் துகள்களால் சிறு நீரகத்தில் கல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஒரு நல்ல கல்லின் ஆயுள் 12 மணி நேரம் அரைத்தால் வெறும் 6 மாதம் தான். கொத்தி திரும்ப போட்டாலும் அடுத்த மூன்று மாதம் தான் மேக்ஸிமம்.

4. உங்களுக்கு நன்கு தெரியும். சமையல் செய்யும் ஆட்கள் கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மற்றும் நகங்கள் வளர்க்கவே கூடாது. ஆனால் இந்த மாதிரி எந்த ஒரு சுத்ததையும் இவர்கள் பேணுவது இல்லை. ஒவ்வொரு நகத்தின் இடுக்கிலும் உள்ள கிருமிகள் இந்த மாவில் கெட்ட பேக்டிரியாக்கள் மற்றும் கிருமிகள் ஈஸியாக உருவாகி எதிர்ப்பு சக்தி குறைந்து வாந்தி, பேதி மற்றும் அடிக்கடி உடம்பு முடியாமல் போவதற்கும் இது தான் காரணம்.

5. கிரைண்டர்களை எனக்கு தெரிந்து தாய்மார்கள் பயன்படுத்த
தயங்கும் இரண்டு காரணங்கள்

i. கிரைண்டரை சுத்தம் செய்யும் கஷ்டம்.

ii. ஒவ்வொரு முறையும் கழுவிய கல்லை தூக்கி மாட்ட வேண்டும். பெரிய குடும்பமென்றால் இது சாத்தியம். சிறுகுடும்பம் என்பதால் கடையில் மாவு வாங்குவது அவசியமாகிறது. ஆனால் அரைத்து விற்பவர்களோ, அல்லது கடையிலோ, கிரைண்டரை ஒவ்வொரு முறையும் அரைத்து முடிந்து கழுவுவதில்லை. அதனால் அந்த கிரைண்டரில் கிருமி அதிகரித்து கொண்டே செல்கிறது. இவர்கள் கமர்ஷியலாக பயன்படுத்த ஒவ்வொரு முறையும் வென்னீர் (Hot Water) உற்றி தான் சுத்தம் செய்ய வேண்டும். ஆனால் இவர்கள் ஒரு வாரத்திற்கு ஒரு முறை கழுவினாலே அதிகம், மாவு பொருட்களினாலும், எலிகள் மற்றும் பூச்சிகள் அந்த மிச்ச மாவை ருசித்து அந்த மெஷினின் சுத்ததன்மை அறவே
போய்விடுகிறது.

6. என்னதான் நல்ல அரிசி உளுந்து போட்டாலும் நல்ல தண்ணீர்  ஊற்றி தான் மாவு அரைக்க வேண்டும். இவர்கள் எந்த தண்ணீரை உபயோகப்டுத்துகின்றனர் என்பது அந்த இறைவனுக்கே வெளிச்சம். எனக்கு தெரிந்த தகவல் படி இவர்கள் போரிங் தண்ணீர் மற்றும் உப்பு தண்ணிரை ஊற்றும் காரணம் உப்பு போட வேண்டிய வேலை இல்லை.

7. அந்த கால ஃபார்முலா படி நம் முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும் போது ஒரு கை வெந்தயத்தை போட்டு அரைப்பார்கள். வெந்தயம் ஒரு இயற்கை ஆண்டிபயாடிக், உடம்பு உஷ்ணம், வாய் நாற்றம், அல்சருக்கு கைகண்ட மருந்து. ஆனால் இவர்கள் யாரும் வெந்தயத்தை உபயோகிப்பதில்லை.

8. கிரைண்டரில் மாவு தள்ளிவிடும் அந்த ஃபைபர் பிளாஸ்டிக்கை ஆறு மாதத்திற்கு அல்லது வருடத்திற்க்கு ஒரு முறை மாற்ற வேண்டும். ஆனால் இவர்கள் அதை மாற்றவே மாட்டார்கள். அதனால் அந்த பிளாஸ்டிக்கும் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து இந்த மாவில்தான் கலக்கும்.

9. கிரைண்டர் ஓட அதன் மத்திய குளவியை இணைக்கும் செயினை இவர்கள் கழட்டி ஒரு கார்பன்டம் பெல்ட்டை மாட்டி இருப்பர்கள். ஒன்று சத்தம் வராமல் இருப்பதற்கும் மற்றும் மாவை கையால் தள்ளி விடாமல் அரைக்கும் டெக்னிக்குககாக. தண்ணீர் பட்டு பட்டு அந்த பெல்ட் துகள்களும் நமது மாவில்தான் கலக்கும்.

10. இந்த மாவை இவர்கள் அரைத்து கடைக்கு பிளாஸ்டிக் பேக் மூலம் சப்ளை செய்கின்றனர். நமது தமிழ் நாட்டு கிளைமேட் படி இதை ஃப்ரீஜரில் தான் வைக்க வேண்டும். அப்பொழுது தன் இந்த மாவில் பாக்டீரியாவின் உற்பத்தியை கட்டுப்படுத்த முடியும், ஆனால் நம்மூரில் பாதி கடைகளில் ஃப்ரிட்ஜில் தான் இதை வைக்கிறார்கள். இப்ப இருக்கிற கரெண்டு ‘கட்’ பிரச்சனையில் இந்த மாவு கண்டிப்பாக பாய்ஸனாகிறது.

இந்த மாவில் இப்பொழுது நிறைய இடங்களில்  பால், தயிறு, முட்டை, காய்கறி, மாட்டு இறைச்சிகளில் காணப்படும் ஈகோலி (E-COLI) எனும் பேக்டீரியா பரவி சிலருக்கு உடனே பிரச்சினையும் சிலருக்கு இந்த மாவுகள் ஸ்லோ பாய்ஸனாக உருவாகிறது. இந்த ஈகோலி மைனஸ் 24 டிகிரிக்கு கீழே இருந்தால் தான் கொஞ்சமாவது கட்டுபடும். அதனால் தயவு செய்து இவர்கள் கொடுக்கும் 6 நாள் கியாரண்டியில் ஈரமான இட்லி தோசை மாவை கண்டிப்பாக வாங்குவதை தவிருங்கள்.

உலர்ந்த மாவு ஓரளவு பரவாயில்லை. ஆனால் இதே மாதிரி சில தாய்மார்களும் மாவரைத்து நான்கு அல்லது ஐந்து பேர் ஷேர் செய்து கொள்கிறார்கள். அவர்களுக்கும் இதில் கண்டிப்பாக கவனம் தேவை.

இப்பொழுது இது ஒரு அங்கிகரிக்கபட்ட தொழில் அல்ல. அதனால் சென்னை மாநகராட்சி ரெய்டு நடத்தி, பல இடங்களில் சுகாதாரமற்ற, தரமற்ற முறைகளில் தயார் செய்யும் இதுபோன்ற பொருட்களை கைப்பற்றி பெனால்டியும் விதிக்கிறது.

ஆகவே,  இந்த விழிப்புணர்வை உங்களால் முடிந்த அளவு
மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மாற்று கருத்து இருப்பினும் அதையும் இங்கே பகிருங்கள்.

ஃபேஸ் புக்கில் (பகிரச்சொல்லி) பகிர்ந்தவர்:
எஸ் எம் ஆரீப் மரைக்காயர்
காரைக்கால் 




38 கருத்துகள்:

Asiya Omar சொன்னது…

ஆஹா ஆராய்ச்சி முடிந்து இடுகையை வெளியிட்டமைக்கு மகிழ்ச்சி.
ஆனாலும் திக்குன்னு தான் இருக்கு.இப்ப என்ன பிரச்சனை என்றால் ஃப்ரிட்ஜில் இருக்கும் ரெடிமேட் இட்லிமாவை உபயோகிப்பதா? வேண்டாமா?
நாளை காலைக்கு அது தான் என்று முடிவு செய்திருந்தேன்.இப்படியா பீதியை கிளப்புவது?
இனி வீட்டில் இருக்கும் டேபிள் டாப் கிரண்டரில் சோம்பாமல் மாவு அரைக்க வேண்டும் அதுவும் வெந்தயம் சேர்த்து.நன்றி பகிர்விற்கு.

Asiya Omar சொன்னது…

சகோ,ஆமாம் தோசை,சட்னி, பொடி பரிமாறியது வீட்டம்மாவா? கூகிளில் சுட்டதா? பார்க்கவே சூப்பராக இருக்கேன்னு கேட்டேன்.

ஹுஸைனம்மா சொன்னது…

//தேவையான ஆராய்ச்சி விஷயங்கள் தான். அதற்குரிய பொறுமையான தேடல்களில் சமீபமாய் கிடைத்தவைகளை //

//ஃபேஸ் புக்கில் பகிர்ந்தவர்
எஸ் எம் ஆரீப் மரைக்காயர்//

அப்ப இந்த ஆராய்ச்சியெல்லாம் செஞ்சது நீங்க இல்லியா? :-)))))

Mohamed Faaique சொன்னது…

”ஆஹா (பக்கங்கள்)”னு பேரு வச்சிட்டு “அய்யய்யோ (பக்கங்கள்)”னு சொல்ர மாதிரில்ல பதிவு போடுரீங்க....

ஆராய்ச்சிக்கும், பகிர்விற்கும் நன்றி

ஹுஸைனம்மா சொன்னது…

மிக நல்ல ஆராய்ச்சி. பொதுவா இந்த மாவுல பாக்டீரியா நிறய இருக்கும்னுதான் கெடுதலுக்குக் காரணம் சொல்வாங்க. (மனோ அக்கா முன்பு இதுபத்திப் பதிவிட்டிருந்தாங்க) ஆனா, இன்னமும் பல காரணங்களைத் தெளிவாச் சொல்லி புரிய வச்சிருக்கீங்க. மக்கள் உணரனும். இன்னிவரைக்கும் ரெடிமேட் மாவு நான் வாங்கினது இல்லை. இனியும் இல்லை என்று உறுதியாக்கிவிட்டது இப்பதிவு, இன்ஷா அல்லாஹ்.

அமீரகத்தில் கிடைக்கும் மாவுகள் ஓரளவு தரத்தோடு இருக்கும்தான் என்றாலும், இந்த “சுத்தம்” காரணமாகவே தவிர்ப்பது. மேலும் இக்காலத்து “டேபிள்டாப்” கிரைண்டர்கள் பயன்படுத்த மிகவும் இலகுதானே. அதனால் சோம்பல்படுவதைப் பெண்கள் தவிர்க்க வேண்டும். ஆண்களும், கிரைண்டர் அரைப்பதில் உதவினால் சிரமம் தெரியாது.

நன்றிங்க நல்லதொரு பதிவுக்கு.

Chitra சொன்னது…

மக்கள் நலனை கருதாமல், வியாபாரத்தில் லாபம் மட்டுமே எண்ணி இப்படி செய்கிறார்களே. உணவு உலகம், சங்கரலிங்கம் அண்ணன் - இதை குறித்து ஒரு எச்சரிக்கை பதிவு போட்டு இருந்தார்கள்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

எச்சரிக்கையை ஃபேஸ்புக்கில் பகிர்ந்த ஆரிப்-க்கும் மற்றும் உங்களுக்கும் நன்றி.

ஸாதிகா சொன்னது…

நல்ல எச்சரிக்கை!அவசிய பகிர்வு.பகிர்தலுக்கு நன்றி!

பிலஹரி:) ) அதிரா சொன்னது…

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இப்பத்தானே கண்டேன் இதை... இன்பு வாறேன்..படிக்க.

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

ஐயா வணக்கம். நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் உங்களை
சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. மிக மிக அவசியமான விஷயங்களை
உங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ளீர்கள். மிக அருமை. மிகவும் விளக்கமான
தெளிவான கட்டுரை. மிக்க நன்றி ஐயா.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

மாவு கரைக்கிறவங்க வயித்துல புளிய கரைக்கிற மாதிரி ஒரு பதிவு தல.

இது மட்டுமல்லாமல் ரோட்டோர வடை, பரோட்டா, சூப் வண்டிகளின் சுத்தமும் உலகறிந்த விசயம்.

நம்மூரில் அடிக்கடி ஏற்படும் மண்டை வலி, தொண்டை வலி காய்ச்சல் சவுதி வந்த பிறகு ஏற்படாமல் இருப்பதற்கு சுத்தமான உணவு மிக முக்கிய காரணம்.

மிக அருமையான பகிர்வு. நன்றி தல.

Naazar - Madukkur சொன்னது…

என்னங்க நீங்க, இட்லி மாவு ஆராய்ச்சி செய்து அபாய மணி அடித்து விட்டீர்கள், பரோட்டா நிறுத்தி கொஞ்ச நாள் தான் ஆகிறது இப்போ இதுவா, என்னமோ போங்க

பிலஹரி:) ) அதிரா சொன்னது…

உஸ்ஸ்ஸ் அப்பா இவ்ளோ விஷயங்கள் இருக்கா. இதனால்தான் எங்கட அப்பா, சின்னனில வெளியில் எந்தச் சாப்பாடும் வாங்கவே விடமாட்டார்.

ஆனா இது உண்மைதான் வெளிநாட்டிலும் சிலர் வீடுகளில் தோசை மா, இட்லி மா தயாரித்து விற்கிறார்கள், அதை வாங்கி பிரீஸ் பண்ணிச் செய்கிறார்களாம் நம்மவர்கள்.

நான் வாழ்க்கையில் ரெடிமேட் இட்லி தோசை இன்னும் செய்யவில்லை. இதைப் பார்த்தால் இனி வாங்கிச் செய்வவே மனம் வராதே.

ஆனா பவுடராக பக்கெட்டில் கிடைக்கிறது, இங்குள்ளோர் பயன் படுத்துகிறார்கள்.

நாம் எப்பவாவதுதான் தோசை இட்லி என்பதனால், செய்துதான் எடுப்பேன்.

பிலஹரி:) ) அதிரா சொன்னது…

//ஆனால் இவர்கள் ஒரு வாரத்திற்கு ஒரு முறை கழுவினாலே அதிகம், மாவு பொருட்களினாலும், எலிகள் மற்றும் பூச்சிகள் அந்த மிச்ச மாவை ருசித்து அந்த மெஷினின் சுத்ததன்மை அறவே
போய்விடுகிறது. //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... இப்பூடியா மக்களைப் பயமுறுத்துவது:)).

பிலஹரி:) ) அதிரா சொன்னது…

// ஒவ்வொரு நகத்தின் இடுக்கிலும் உள்ள கிருமிகள் இந்த மாவில் கெட்ட பேக்டிரியாக்கள் மற்றும் கிருமிகள் ஈஸியாக உருவாகி எதிர்ப்பு சக்தி குறைந்து வாந்தி, பேதி மற்றும் அடிக்கடி உடம்பு முடியாமல் போவதற்கும் இது தான் காரணம்.//

உண்மைதான் travel channel இல் பார்த்திருக்கிறோம், நெற்றியில் வழியும் வியர்வையைக் கையாலே துடைத்துவிட்டு அந்தக் கையாலேயே மாக்குழைப்பதை:).

இனியும் ஆராவது ரெடிமேட் க்கு ஆசைப்படுவினமோ? சத்தியமா இருக்காதென்றே நம்புகிறேன்.

நல்ல பதிவு, ஆனாலும் பாட்ஷா வாசல்ல ஒரு கும்பல் நிற்கிறமாதிரி இருக்கே:)) ... தங்கட புழைப்பில மண்போட்டாச்சென.., ஓடிப்போய்ப் புளியில ஏறுங்க, அல்லது கட்டிலுக்குக்கீழ ஒளிச்சிடுங்க:))... நானும் எஸ்ஸ்ஸ்ஸ்:).

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Asiya Omar கூறியது...

// இனி வீட்டில் இருக்கும் டேபிள் டாப் கிரண்டரில் சோம்பாமல் மாவு அரைக்க வேண்டும். அதுவும் வெந்தயம் சேர்த்து.//

இதுதான் நல்லபிள்ளைக்கு அழகு:-)

சகோ ஆசியாஉமர் உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றீஸ்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Asiya Omar கூறியது...

//சகோ,ஆமாம் தோசை,சட்னி, பொடி பரிமாறியது வீட்டம்மாவா? கூகிளில் சுட்டதா? பார்க்கவே சூப்பராக இருக்கேன்னு கேட்டேன்.//

வீட்டம்மா என்று சொல்லி வம்பில் மாட்டிவிடத்தானே? அவ்வவ். கூகிளில் சுட்டது:-))

சகோ ஆசியா உமர் உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றீஸ்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஹுஸைனம்மா கூறியது...

சலாம் சகோ வாங்க!!

//தேவையான ஆராய்ச்சி விஷயங்கள் தான். அப்ப இந்த ஆராய்ச்சியெல்லாம் செஞ்சது நீங்க இல்லியா? :-)))))

பார்ரா இந்த வம்பை...! நல்லதை எடுத்து பகிர்ந்தாலும் இப்படியா ஆராய்ச்சி செய்வது??

சகோ ஹுஸைனம்மா உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றீஸ்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Mohamed Faaique கூறியது...

சலாம் சகோ.வாங்க!!

//”ஆஹா (பக்கங்கள்)”னு பேரு வச்சிட்டு “அய்யய்யோ (பக்கங்கள்)” னு சொல்ர மாதிரில்ல பதிவு போடுரீங்க....//

அப்படியா இருக்கு? அல்ஹம்துலில்லாஹ்!! :-))

சகோ Mohamed Faaique உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றீஸ்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஹுஸைனம்மா கூறியது...

சலாம் சகோ. வாங்க!!

// ஆண்களும், கிரைண்டர் அரைப்பதில் உதவினால் சிரமம் தெரியாது.//

அதானே பார்த்தேன்!! அங்கே குளிருக்கு கவிதை எழுதிப்புட்டு, இங்கே தீய கொளுத்திப் போட்டாச்சா? வெளங்கிருச்சு. :-))

சகோ ஹுஸைனம்மா உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றீஸ்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Chitra கூறியது...

வாங்க சகோ. !!

//மக்கள் நலனை கருதாமல், வியாபாரத்தில் லாபம் மட்டுமே எண்ணி இப்படி செய்கிறார்களே. உணவு உலகம், சங்கரலிங்கம் அண்ணன் - இதை குறித்து ஒரு எச்சரிக்கை பதிவு போட்டு இருந்தார்கள்.//

நான் அதை படிக்கல! ஆனாலும் வியாபாரம் என்று வரும்போது மட்டும் ஏன் மற்றவர்களின் நலனில் அக்கறை கொள்ள மாட்டேனென் கிறார்கள்.

சகோ சித்ரா உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றீஸ்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ NIZAMUDEEN கூறியது...

// எச்சரிக்கையை ஃபேஸ்புக்கில் பகிர்ந்த ஆரிப்-க்கும் மற்றும் உங்களுக்கும் நன்றி.//

வாங்க சகோ. !!
நலமா?? ஊரில் எல்லோரும் நலம் தானே??

சகோ NIZAMUDEEN உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றீஸ்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஸாதிகா கூறியது...

// நல்ல எச்சரிக்கை!அவசிய பகிர்வு.பகிர்தலுக்கு நன்றி!//

சலாம் வாங்க சகோ!! நலமா?

சகோ ஸாதிகா உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றீஸ்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ athira கூறியது...

// அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இப்பத்தானே கண்டேன் இதை... இன்பு வாறேன்..படிக்க.//

வாங்க சகோ அதிஸ்!! மெல்லன வாங்க!! க்ர்ர்ர்ர்ர்ர்...

சகோ athira உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றீஸ்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ புவனேஸ்வரி ராமநாதன் கூறியது

// ஐயா வணக்கம். நீண்ட நாட்கள் கழித்து மிக மிக அவசியமான விஷயங்களை உங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ளீர்கள்//

வாங்க சகோ!! நலமா??

சகோ புவனேஸ்வரி ராமநாதன் உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றீஸ்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ சிநேகிதன் அக்பர் கூறியது...

வாங்க தல!! நலமா ஷேக் நலமா??

// மாவு கரைக்கிறவங்க வயித்துல புளிய கரைக்கிற மாதிரி ஒரு பதிவு//

அப்ப ரசம் வச்சுடலாம்ங்கறீங்க!! அவ்வ்வ்வ்..

சகோ அக்பர் உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றீஸ்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Naazar-Madukkur கூறியது

வாங்க சகோ!! நலமா??

//என்னங்க நீங்க, இட்லி மாவு ஆராய்ச்சி செய்து அபாய மணி அடித்து விட்டீர்கள், பரோட்டா நிறுத்தி கொஞ்ச நாள் தான் ஆகிறது இப்போ இதுவா, என்னமோ போங்க//

பிஸினெஸ் பண்றவங்க அவங்க பொழப்ப பார்த்துகிட்டாலும், நம்ம வயத்தை நாம தானே பார்துக்கிடனும்.

சகோ Naazar-Madukkur உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றீஸ்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ athira கூறியது...

//இதனால்தான் எங்கட அப்பா, சின்னனில வெளியில் எந்தச் சாப்பாடும் வாங்கவே விடமாட்டார். வெளிநாட்டிலும் சிலர் வீடுகளில் தோசை மா, இட்லி மா தயாரித்து விற்கிறார்கள். ஆனா பவுடராக பக்கெட்டில் கிடைக்கிறது, இங்குள்ளோர் பயன் படுத்துகிறார்கள்.//

சின்னனில் = கிச்சனா ?? (புது வார்த்தை!!)

உண்மை தான் பூஸ். ரெடிமேட் பாராட்டா வந்த மாதிரி இதுவும் கூடிய விரைவில் வரத்தான் போகுது. போற போக்கைப் பார்த்தா, கடல்ல தலைகீழாவே நடந்து, கெடக்கிற மீனை சாப்பிட்டுகிட்டு வாழ்த்திடலாம் போலிருக்கு. அப்படீன்னு நான் சொல்ல...

சகோ பூஸ் உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றீஸ்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ athira கூறியது...

//இவர்கள் ஒரு வாரத்திற்கு ஒரு முறை கழுவினாலே அதிகம்,//

// அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... இப்பூடியா மக்களைப் பயமுறுத்துவது :))//

இவர்கள் தன் கையை சுத்தமாக வைத்திருப்பதே அதிகம். இதில் மெஷினில் எப்படி சுத்தத்தை எப்படி எதிர்பார்ப்பது?? அதுவும் கூடவே நின்று பார்த்து அரைத்து வாங்குவதற்கு பதில், நம் வீட்டிலேயே சிரமம் பாராமல் அரைத்து விடுவது உத்தமம்.

சகோ பூஸ் உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றீஸ்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ athira கூறியது...

//ஆனாலும் பாட்ஷா வாசல்ல ஒரு கும்பல் நிற்கிறமாதிரி இருக்கே:)) ... தங்கட புழைப்பில மண் போட்டாச்சென.., ஓடிப்போய்ப் புளியில ஏறுங்க//

ஒருவாய் இட்லிக்காக நம்மைப் போட்டு கும்மிடுவாங்களா பூஸ்!! அவ்வ்வ்வவ்.. ஆனாலும் ஏகத்துக்கும் ஒரு சின்ன புள்ளைக்கி இப்படியா பயம் காட்டுவது.
ஒரு 'ஆள்' கூட இல்லாங்காட்டியும் இப்படியா?? மீ எஸ்...க்ர்ர்ர்ர்ர்

சகோ பூஸ் உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றீஸ்!!

பிலஹரி:) ) அதிரா சொன்னது…

சின்னனில = சிறுவயதில், பேபியா இருந்தபோது:))(இப்பவும் பேபிதான் என்பது அது வேறு கதை:)).

பிலஹரி:) ) அதிரா சொன்னது…

அதுசரி பாட்ஷா... எங்க உங்கட பாஸ்... ஐக் காணவில்லை இந்தப்பக்கம்...

ஒரு வேளை சூடாஆஆஆஆ காப்பி கேட்டீங்களே ஊத்தப்போயிட்டாரோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).. ஆவு கச்சேனு?:))

Asiya Omar சொன்னது…

கருத்திற்கு பதில்கள் சில ரசிக்கும் படியிருக்கு.நல்ல நகைச்சுவை.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ athira கூறியது...

// சின்னனில = சிறுவயதில், பேபியா இருந்தபோது:))(இப்பவும் பேபிதான் என்பது அது வேறு கதை:)). //

சின்னனில = அடடா ரொம்ப இலகுவான வார்த்தை தான். ஆனா நீங்க பேபி என்று புளுகுவது தான் கொஞ்சம் ஓவர் பூஸ் கர்ர்ரர்ர்ர் !! (பராயில்லை ... இருங்க அப்படியே.. மனசால!!)

சகோ பூஸ் உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றீஸ்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ athira கூறியது...

//அதுசரி பாட்ஷா... எங்க உங்கட பாஸ்... ஐக் காணவில்லை இந்தப்பக்கம்...ஒரு வேளை சூடாஆஆஆஆ காப்பி கேட்டீங்களே ஊத்தப் போயிட்டாரோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:).. ஆவு கச்சேனு?:)) //

நீங்க இங்கன கேட்டவுடன் (தூண்டில் போட்டுகொண்டிருந்தவர் - அட மீன் பிடிக்கத்தாங்க!!) அங்கன வந்துட்டாரே அது தான் நம்மட பாஸ்... பூஸ்!!

சகோ பூஸ் உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றீஸ்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Asiya Omar கூறியது...

// கருத்திற்கு பதில்கள் சில ரசிக்கும் படியிருக்கு. நல்ல நகைச்சுவை.//

சிரிப்புக்காக ஒன்னும் இதை சொல்லலியே சகோ!! :-))

மிக்க நன்றீஸ் Asiya Omar உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்.

பிலஹரி:) ) அதிரா சொன்னது…

இதையும் கொஞ்சம் படியுங்கோ....

http://www.thamilnattu.com/2012/02/blog-post_05.html

Asiya Omar சொன்னது…

உங்களுக்கு அன்புடன் இரண்டு விருதுகள் வழங்கியுள்ளேன்.பெற்று கொள்ளவும்.
http://asiyaomar.blogspot.com/2012/02/blog-post_16.html