facebook

புதன், மார்ச் 07, 2012

வைரத்தின் வரலாறு

வைரத்தின் வரலாறு

இந்த பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு, இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும்.

உலகிலேயே முதன் முதலில் இந்தியாவில் தான் வைரங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆந்திராவில் உள்ள கோல்கொண்டா என்னுமிடத்திற்கு அருகில் உள்ள வஜ்ரகரூர் என்னும் இடத்தில் தான் வைரங்கள் கிடைத்தது.

இங்கிருந்து தான் வைரம், அந்தக் காலத்தில் கி.மு.எட்டாம் நூற்றாண்டில் அதாவது 2800 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து கலிங்க நாடு (இன்றைய ஒரிஸ்ஸா) வழியாக பாரசீக வளைகுடா, அலெக்சாண்டிரியா, ரோம், அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

வைரங்களை பட்டை தீட்டும் முறையையும் இந்தியர்கள் தான் முதன் முதலில் கண்டுபிடித்தனர். இந்தியாவிலிருந்து தான் "வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடியும்'' என்ற பழமொழியும் வந்தது.

வைரம் எப்படி உருவாகிறது?

பூமியின் மேற்பரப்பில் இருந்து 150-200 கிலோ மீட்டர் ஆழத்தில் 1200 முதல் 1800 டிகிரி சென்டி கிரேடு வெப்பம் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கும் போது சுத்தமான கார்பன் மூலக்கூறுகளால் வைரம் உருவாகிறது.

வைரம் உருவாக எத்தனை ஆண்டுகள் ஆகும் ?

இன்றைக்கு நாம் உபயோகிக்கும் வைரங்களில் மிகவும் வயது குறைந்த வைரம் 30 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக 1977-ல் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி கூறுகிறது.

வைரம் ஏன் இவ்வளவு ஜொலிக்கிறது ?

வைரம் மட்டுமே தன்னுள் பாய்கின்ற வெளிச்சத்தில் 85 சதவீதம் ஒளியை பல கோணங்களில் பிரதிபலித்துத் திருப்பி வெளியிலேயே அனுப்பி விடும். வேறு எந்த ரத்தினத்துக்கும் இந்த தன்மை கிடையாது. இதனை ஆங்கிலத்தில் Internal Reflection (TIR) முழுமையான உள்பிரதிபலிப்பு என்பர். அதனால் தான் இதனை அடம் பிடிக்கும் ஜொலிப்பு (Adamantine Luster) என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.

வைரத்தின் ஆங்கிலப் பெயர் Admas என்பதாகும்.

இந்த வார்த்தை மருவி, Diamond என்று வழக்கத்தில் ஆகிவிட்டது.

வைரத்தை ஏன் காரட்(Carat)முறையில் எடை போடுகிறார்கள் ?

இந்தியாவிற்குப் பிறகு, 1870 லிருந்து தென் ஆப்பிரிக்காவில் வைரங்கள் கண்டெடுக்கப்ப டுகிறது. இங்கு, எடை அளவுகள் நிர்ணயிக்கப் படாத காலகட்டத்தில் காரப் விதை (Carob Seeds) என்ற ஒருவித விதைகளையே எடையாக பயன்படுத்தினர். ஏனென்றால் இந்த விதைகள் அனைத்தும் அநேகமாக ஒரே அளவு எடை உடையவை.இந்த காரப் என்ற பெயர் மருவி, காலப்போக்கில் காரட் என்றாகி விட்டது.

ஒவ்வொரு காரப் விதையும் 200 மில்லி கிராம் எடை கொண்டது. ஆகவே, ஒரு காரட் வைரத்தின் எடை 200 மில்லி கிராம். அதாவது 5 காரட் 1 கிராம் எடை.

சென்ட் என்பது எந்த எடையை குறிக்கும் ?

ஒரு காரட் என்பது 100 பாகங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பாகமும் 1 சென்ட் எனப்படும். ஒரு காரட் வைரம் 100 சென்ட்டுகள்.

உம் : 10 சென்ட் கற்கள் 10 எண்ணிக்கை 1 காரட்.

ப்ளு ஜாகர்(Blue Jager)வைரம் என்றால் என்ன ?

தென் ஆப்பிரிக்காவில் ஜாகர் பவுண்டன் (Jagers Fontein) என்ற இடத்தில் ஒரு வைரச்சுரங்கம் இருந்தது. அங்கிருந்து எடுக்கப்பட்ட வைரங்கள் வெண்மையோடு சேர்ந்த ஒரு நீலநிற ஒளியைக் கொடுக்கும். அதனால் தான் அந்த வைரங்களுக்கு Blue Jager என்று பெயர். ஆனால் இப்பொழுது இந்த சுரங்கம் உபயோகத்தில் இல்லை.

வைரத்திற்கு இவ்வளவு விலை ஏன் ?

ஒரு காரட் வைரம் தோண்டி எடுக்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 350 டன் (35/40 லாரி லோடு) பூமியை தோண்டி எடுக்க வேண்டும். அதிலும் நிச்சயமாய் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இதற்காகும் செலவு, பட்டை தீட்டும் போது ஏற்படும் சேதம், சந்தைப்படுத்துதல் (மார்க்கெட்டிங்), இதில் செய்யும் முதலீடு, தரம் பிரித்தல் மற்றும் பிற செலவுகள் சேரும் போது விலை கூடுகிறது.

இந்தியாவில் எங்கு வைரம் கிடைக்கிறது ?

இந்தியாவில் மத்தியபிரதேசத்தில் பன்னா (Panna) என்னும் இடத்தில் உள்ள வைர சுரங்கத்திலிருந்து தினமும் வைரம் தோண்டி எடுக்கிறார்கள். இங்கிருந்து இன்றும் நல்ல தரமான வைரங்கள் கிடைக்கிறது. ஆனால் ஆப்பிரிக்காவை ஒப்பிட்டால், மிகவும் குறைந்த அளவே இங்கு கிடைக்கிறது.

பெல்ஜியம் கட்டிங் என்றால் என்ன ?

முதல் முதலில் இந்திய வல்லுநர்கள் பட்டை தீட்டியதை இன்னும் மேம்படுத்தி, பெல்ஜியம் நாட்டை சேர்ந்த லோடெவிஜ்க் வேன் பெர்க்காம் என்ற வல்லுநர் 58 பட்டைகளோடு மிகவும் நன்றாக ஜொலிக்கும் முறையில் வைரத்தை பட்டை தீட்டினார். இதற்கு (Round Brilliant cut) என்று பெயர். இது தான் பெல்ஜியம் கட்டிங்.

வைரம் உலகிலேயே மிகவும் கடினமானது என்கிறார்களே ?

வைரத்தை வெட்டவோ, பட்டை தீட்டவோ செய்வதற்கு வைரத்தால் மட்டுமே செய்ய முடியும். ஆனால் வைரத்தை வைத்து மற்ற எல்லா ரத்தினக் கற்களையும் பட்டை தீட்டலாம். ஆனால் வைரத்தை பட்டை தீட்ட, வைரத்தால் மட்டுமே முடியும்.

பட்டை தீட்டிய வைரக்கல்லில் உலகில் உள்ள எந்தப் பொருளை வைத்து உரசினாலும் அதில் கீறல் விழாது. இதைத்தான் வைரத்தின் கடினத்தன்மை Hardness என்கிறோம்.

வைரம் என்னென்ன நிறங்களில் கிடைக்கிறது ?

வெள்ளை (நிறமற்றது), மஞ்சள், பிரவுன், கிரே பச்சை, ஆரஞ்சு, பிங்க், நீலம், வெளிர்பச்சை, வயலட் கலர்களில் கிடைக்கிறது. முழுக்கறுப்பிலும் காணப்படுகிறது.

இந்தியாவில் கிடைத்த மிகப் பெரிய வைரம் எது ?

கோல்கொண்டாவில் கிடைத்த கோகினூர் வைரம் தான் மிகப் பெரியது. இதன் எடை 105.80 காரட்கள். இன்று இங்கிலாந்தில் Tower of London என்னும் இடத்தில் அரச பரம்பரை நகைகள் ஒரு மகுடத்தில் சூட்டப்பட்டு காட்சியளிக்கிறது.

இதுவரை உலகில் கிடைத்த மிகப்பெரிய வைரம் எது ?

தென் ஆப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட Golden Jubilee தான் மிகப்பெரியது இதன் எடை : 545.67 காரட்டுகள், தாய்லாந்து அரசரிடம் இது உள்ளது.
 
 
நன்றி : இன்று ஒரு தகவல்
 
 
 


19 கருத்துகள்:

சிநேகிதன் அக்பர் சொன்னது…

இதுக்குத்தான் தல நான் வைரமே வாங்குறதில்லை. எம்பூட்டு செலவு!

ஆனா என்னைச்சுத்தி எத்தனை வைரம் இருக்கு தெரியுமா! :)))))


அருமையான தகவல் நன்றி தல!

ஸாதிகா சொன்னது…

ஹப்பா..வைரத்தை பற்றி மணி மனியா தகவல்கள் சொல்லி பட்டையை கிளப்பிட்டீங்க அப்துல்காதர்.

ஸாதிகா சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.

athira சொன்னது…

ஆஹா பக்கத்தில வைரமோ அவ்வ்வ்வ்வ்:)))...

வரவர கிட்னிக்கு வேலை கொடுக்கமல் பதிவு போடுறார்... இவரை என்ன செய்யலாம்? ஆவு கச்சேனு?:)))

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ சிநேகிதன் அக்பர் கூறியது...

// இதுக்குத்தான் தல நான் வைரமே வாங்குறதில்லை. எம்பூட்டு செலவு! //

இனி போத்தீஸுக்கு மாறிய பிறகு நிறைய வருமோ?/வரணுமம்ம்ம்ம்.

// ஆனா என்னைச்சுத்தி எத்தனை வைரம் இருக்கு தெரியுமா! :)))))//

ஹி..ஹி.. என்னை ரொம்ப புகழாதிங்க தல! அவ்வ்வ்வ்....

சிநேகிதன் அக்பர் தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றீஸ்!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஸாதிகாகூறியது...

//ஹப்பா..வைரத்தை பற்றி மணி மணியா தகவல்கள் சொல்லி பட்டையை கிளப்பிட்டீங்க //

ஸாதிகாக்கா தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் + 'அங்கே' அறிமுகத்துக்கும் மிக்க நன்றீஸ்!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ athira கூறியது...

// வரவர கிட்னிக்கு வேலை கொடுக்கமல் பதிவு போடுறார்... இவரை என்ன செய்யலாம்? //

வாங்க பூஸ்! அங்கே பஞ்சவர்ண பூவைப் பற்றி கர்ர்ர்ர்ர்... தேங்க்ஸ்.

கலாநிதி கிட்னியெல்லாம் சாப்பிட கூடாது என்று சொல்லிவிட்டார். க்கி.. க்கி..

வெந்நீர் + சந்தேகம் + ஆஃப் பாயில் இதெல்லாம் போட்டாச்சு.
வெறுமனே தங்கத்தையே வாங்கிக் கொண்டிருந்தால் போரடிக்காதா? பிறகு எப்ப தான் வைரம் பிளாட்டினம் வாங்குவது. அதனால் முதலில் வைரம் பிறகு பிளாட்டினம். பிறகு அவ்வ்வ்வவ்...

ஆனா நீங்க வைரத்தையும் பிளாட்டினத்தையும் வாங்கி குவிப்பதைப் பற்றி வெளியில் மூச்சு விடமாட்டேனாக்கும். கிர்ர்ர்ர்...

பூஸ் தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றீஸ்!

ஜெய்லானி சொன்னது…

//வரவர கிட்னிக்கு வேலை கொடுக்கமல் பதிவு போடுறார்... இவரை என்ன செய்யலாம்? ஆவு கச்சேனு?:))) //

ஒன்னுமே செய்ய முடியாது ஏன்னா வீட்டுக்கே நடுராத்திரியிலதான் தட்டுதடுமாறி வருகிறாறாம் ..

((அவளோ பிஸியாம் ))ங்கொய்யாலே...!!

இதுவும் இன்று ஒரு தகவல்தான் ஹி...ஹி...

ஜெய்லானி சொன்னது…

நிறைய எதிரி கேள்வி கேக்கலாமுன்னு வந்தா கடைசியில //
நன்றி : இன்று ஒரு தகவல் // இதை போட்டுட்டு எஸ்ஸ்ஸ் ஆகிட்டாரே

இந்த தடவையும் வடைபோச்சே...அவ்வ்வ்வ் :-)

ஜெய்லானி சொன்னது…

//அநாமதேய கருத்துரைகளை இந்த வலைப்பதிவு அனுமதிக்கவில்லை.//


நாங்கலெல்லாம் அட்ரஸோடு வந்துதான் திட்டுவோம் ஹா..ஹா... :-)))

சேகர் சொன்னது…

வைரத்தின் வரலாறு அருமை.. வரலாறு முக்கியம் அமைச்சரே...

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி கூறியது...

// ஒன்னுமே செய்ய முடியாது. ஏன்னா வீட்டுக்கே நடுராத்திரியிலதான் தட்டுதடுமாறி வருகிறாறாம்.. ((அவளோ பிஸியாம்)) ங்கொய்யாலே...!! //

இது தானா?? இன்னும் இருக்கா அண்ணே! நாங்கல்லாம் பரங்கிபேட்டை வரமாட்டோம்கிற நினைப்பா? பிச்சுபிடுவோம் பிச்சு.. (இப்பவாவது பயம் வருதா பார்ப்போம் :-))

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றீஸ்!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி கூறியது...

// நிறைய எதிரி கேள்வி கேக்கலாமுன்னு வந்தா கடைசியில இதை போட்டுட்டு எஸ்ஸ்ஸ் ஆகிட்டாரே//

எதிரி கேள்வியா?? அவ்வ்வ்வ்...

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றீஸ்!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி கூறியது...

// நாங்கலெல்லாம் அட்ரஸோடு வந்துதான் திட்டுவோம் ஹா..ஹா... :-))) //

ஊர் விட்டு ஊர் வந்தவங்களுக்கு அட்ரெஸ் எல்லாம் இருக்கா?? :-))

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றீஸ்!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ சேகர் கூறியது...

// வைரத்தின் வரலாறு அருமை.. வரலாறு முக்கியம் அமைச்சரே//

வாங்க சேகர் நலமா?

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றீஸ்!

Asiya Omar சொன்னது…

பட்டை தீட்டிய வைரமாய் இன்று ஒரு தகவல் சூப்ப்ர் சகோ.
சகோ.அக்பர் சொன்ன மாதிரி சொல்லி தான் என்னை ஏமாத்துறாக...

Asiya Omar சொன்னது…

கற்றோர்க்கு அழகு,கமென்ட்ஸால் அலங்கரிப்பது ஸ்சப்பா தாங்க முடியலை சகோ.

*Chennai Plaza - சென்னை ப்ளாசா* சொன்னது…

என்ன வைரமா அத காதால தான் கேட்கமுடியுது..

ஜலீலா

NAGARJOON சொன்னது…

I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Builders In Trivandrum
Flats In Trivandrum
Apartments In Trivandrum
Flats Near Technopark
Villas In Trivandrum
Budgeted homes Trivandrum
Flats In Thiruvananthapuram
Builders In Thiruvananthapuram
Builders near Technopark