facebook

செவ்வாய், ஜூலை 10, 2012

ஸாஃபி-Safi (Herbal)

இந்த படத்தில் பார்க்கும் டானிக் பாட்டிலை உங்கள் வீட்டில் எங்காவது பார்த்திருக்கிறீர்களா? உங்களின் தாத்தா காலம் தொட்டு இப்ப அப்பாக்கள் காலம் வரை இன்னும் பல குடும்பங்களில் உபோயகப் படுத்தப்படும் டானிக். இன்னும் பலருக்கு இதை பற்றி தெரியாமலே இருக்கலாம். அவர்களுக்காக இங்கே சொல்கிறேன்.

ஸாஃபி-Safi (Herbal)

இது ஹம்தர்த் (Hamdard) கம்பெனியின் தயாரிப்பு! பன்னெடுங் காலமாய் மார்கெட்டில் வளம் வந்துக் கொண்டிருக்கும் இதன் உபயோகம் என்னவென்று தெரியாமல் நான் கூட கவனமில்லாமல் இருந்து விட்டேன். நண்பர் ஒருவர் சொன்ன பிறகே புரிந்தது. பயன் படுத்த ஆரம்பித்தேன்.

அதன் மகாத்மியம் பற்றி அவர்களே சொல்வது :

Safi இது ஒரு பயனுள்ள இரத்த purifying மூலிகை துணை யாகும். அது உங்களின் உடலில் உள்ள செயல்பாடுகளை சுத்திகரிக்கும் நேரத்தில், குடல், சிறுநீரகம் மற்றும் தோல் மூலம் திரட்டப்பட்ட ஆரோக்கியமற்ற விஷயத்தை நீக்குதல் போன்ற வேலையை முடுக்கி விடுகிறது. Safi, செரிமான அமைப்பை சரி செய்து, மலச்சிக்கல் மற்றும் உடல் சூட்டை தணித்து, பருக்கள் , தோல் வெடிப்புகளை நீக்குகிறது.

விவரம் போதுமா?

இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால், படிக்கிற பிள்ளைகளுக்கு அரவணைப்பாய் அன்னையும், கல்யாணம் முடிந்திருந்தால் அன்பான மனைவியும் அனுசரணையாய் பரிமாறிய கூட்டுக்குடும்பக் காலம் டெலிவிஷன் ஊடாய் தொடர்கள் என்னும் பின்னனியூடே கனவாகிப் போனது. என்றாலும், எல்லாக் குடும்பத்தையும் அப்படி சொல்லிவிட முடியாது, எங்கோ ஏதோ கண்ணுக்குத் தெரியாத தூரத்தில் சில குடும்பங்களில் கனவில் பலன் நடந்துக் கொண்டிருக்கலாம்.

வெளிநாடுகளில் வேலைக்கு செல்லும் நம்மை போன்ற பலர் நம் உடல் நலனில் என்றைக்குமே அக்கறை கொள்வதில்லை. குடும்பம், பிள்ளைகள், சொந்தங்கள் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கும். பெரும்பாலோனோர் இருக்கையில் அமர்ந்து கணிணியில் வேலை செய்து விட்டு, இரவில் அவசரம் அவசரமாய் சாப்பிட்டு விட்டு உறங்கி, உடல் உஷ்ணத்தால் காலையில் பாத்ரூமில் அமர்ந்து படும் அவதி சொல்லில் மாளாது. அவசர யுகம் நம்மை பாடாய் படுத்துகிறது.

இரவில் இந்த டானிக்கை சாப்பிட்டுவிட்டு படுத்துறங்குங்கள். காலையில் எழுந்து பாத்ரூமுக்கு ஓட வேண்டியிருக்கும். அங்கே சென்று விட்டு வந்தால் கலகலாதான் :) எங்கள் பக்கமுள்ள வேளாங்கண்ணியை சுற்றிய கிராமப்புறங்களில் “மடா உடைத்த மாதிரி” (மண் பானையை போட்டுடைத்த) மாதிரி என்ற சொலவாடை சொல்வார்கள் :))

சாப்பிடும் முறை :

இரவில் சாப்பாட்டுக்குப் பின் படுக்கப் போகுமுன் பாலிலோ, தண்ணீரிலோ (தண்ணீர் என்றால் குடிக்கிற தண்ணீர் ஐயா!!) ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் கலந்து சாப்பிடவேண்டும். பாலில் கூடுதலாய் ஒரு ஸ்பூன் சுகர் கலந்துக் கொள்வது நல்லது. ஏனெனில் இந்த டானிக் கசப்போ கசப்பு அப்படி ஒரு கசப்பு!

அதனுள்ளே உள்ள Leaflet-ல் விவரமிருக்கிறது. பார்த்துக் கொள்ளுங்கள். http://www.hamdard.com.pk/safi போய் தெரிந்துக் கொள்ளுங்கள்

இந்தியாவில் இருந்து தயாராகும் இந்த 200 மிலி டானிக்கின் விலை ரூ.70 தான். இது நாட்டு மருந்துக் கடைகளிலும், பார்மஸிகளிலும் கிடைக்கிறது.

பாகிஸ்தானிலிருந்து தயாராகி வெளிநாடுகளில், குறிப்பாக சவுதி போன்ற வளைகுடா நாடுகளில் விற்பனையாகும் இந்த 175 மிலி டானிக்கின் விலை Pkr 50/- ஆனால் இங்கே ரொம்ப கடைகளில் கிடைப்பதில்லை. வந்த உடனே விற்று தீர்ந்து விடுகிறது. நாட்டு மருந்துக் கடைகளிலும், Bhatkal போன்ற ஷாப்பிங் சென்டர்களில் மட்டுமே கிடைக்கிறது. விலை SR.10/= (சவுதி ரியால்கள்)8 கருத்துகள்:

athira சொன்னது…

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இங்கினதான் இருக்கிறாரோ?:)

athira சொன்னது…

இப்போ கேர்பல்..... தயாரிக்கிறாரோ?:)

athira சொன்னது…

உங்கட புளியமர நண்பரைக் காணவில்லையே:(((( திரும்பவும் முதல்ல இருந்து பூச்சி பிடிக்கப் போயிட்டாரோ?

எம் அப்துல் காதர் சொன்னது…

அவருக்கு ஜல்ப்பு புடுச்சிக்கிசாம். அவ்வ்வ்வவ் :))

எம் அப்துல் காதர் சொன்னது…

பூஸ்.. இந்த ஹெர்பல் அங்கன கிடைக்கிதுல்லையா??

எம் அப்துல் காதர் சொன்னது…

நீங்க ஏன் ஃபேஸ்புக் பக்கம் வர மாட்டேங்குறீங்க பூஸ்??? :))

athira சொன்னது…

எம் அப்துல் காதர் கூறியது...
பூஸ்.. இந்த ஹெர்பல் அங்கன கிடைக்கிதுல்லையா?//

இல்ல, நான் பிறந்து வளர்ந்து 16 வருடமாகியும் விட்டுது, எங்கேயும் கண்டதில்லை.

athira சொன்னது…

எம் அப்துல் காதர் கூறியது...
நீங்க ஏன் ஃபேஸ்புக் பக்கம் வர மாட்டேங்குறீங்க பூஸ்??? :))//

நோ நான் இப்பொ வரமாட்டேன்:)) ஆனா வரவே மாட்டேன் எனவும் சொல்ல மாட்டேன்... இது எப்பூடி இருக்கு?:).

எங்கட பபூ கலக்கோ கலக்கெனக் கலக்குறாரே அங்கின,நான் ஆளைக் காணவில்லையே என்னாச்சோ ஏதாச்சோ என யோசிச்சு, கடைசியில் அங்கினதானே கண்டேன் கர்ர்:))..

கொஞ்சம் பொறுங்கோ, தேசிக்காய் வருதாம் என அவரிடம் ஒருக்கால் சொல்லி விட முடியுமோ?:)).முடிஞ்சால் இதைக் கொப்பி பேஸ்ட் பண்ணிடுங்கோ.. ”அங்கு” தான்:)).
எங்கிட்டயேவா? விடமாட்டனில்ல:).