facebook

ஞாயிறு, பிப்ரவரி 17, 2013

பயணநாளில் ஒரு நாள்
பயணநாளில் ஒரு நாள்

-----------------------------------
சிதம்பரம் அண்ணாமலை நகரில் இருக்கும் எனது நண்பர் இக்பாலை சந்திப்பதாக ஏற்பாடு. நண்பரை சந்தித்து வெகு காலமாகிவிட்டது. அதோடு கூடவே புத்தூரில் உள்ள அண்ணன் ஜெயராமன் கடையில் பகல் சாப்பாட்டை ஒரு கட்டு கட்டலாம் என்றும் ஒரு திட்டம். ஆனால் கடை ஓனரின் தம்பி தங்கதுரை எனக்கு இங்கே பழக்கமாகிவிட்டார். இருந்தாலும் அவருடைய அலைபேசி நம்பரை வாங்காமல் வந்தது தப்பென்று அப்பொழுது புரிந்தது.

கார் புறப்பட்டு போகும் வழியில் தான் நினைவு வந்தது கடலூரில் நமது காசிம் பாய் வீட்டுக்கும் போனால் அவரும் சந்தோசப் படுவாரே அங்கும் ஒரு விசிட் அடித்து விடுவோம் என்று முடிவு செய்துக் கொண்டேன். மயிலாடுதுறை தாண்டிப் போகும் போது, டிரைவர் "பரங்கிப்பேட்டையில் ஒரு சின்ன வேலை இருக்கு, அஞ்சு நிமிசத்தில் முடித்து விட்டுப் போய் விடலாம்" என்றார். ஓகே done என்றேன். சமயங்களில் இப்படி இலக்கில்லாமல் போகிறேனோ என்று கூட மனம் யோசிக்கும்.


பரங்கிப்பேட்டை என்றவுடன், மனதில் பல்ப் பளிச்சிட்டது. நமது ஆஸ்தான பதிவர் + நண்பர் தான். இவருடைய நல்ல பழக்கம் என்னவென்றால் நாம் அலைபேசினால் எப்போதுமே பதில் பேசமாட்டார். இத்தனைக்கும் ரெண்டு சிம் இருக்கு. ஒரு நம்பர் 050 என்றும், மற்றொரு நம்பர் 055 என்று ஆரம்பித்து மீதி நம்பர் எல்லாம் இரண்டிலுமே ஒரே மாதிரி இருக்கும். ஃபேன்ஸி நம்பராக தேடித் பார்த்து வாங்கியதாக சொல்வார். வீடு கட்டிக் கொண்டிருந்தாரே கட்டி முடித்து விட்டாரா தெரியவில்லை. வீட்டுக்கு வந்தால் பரங்கிப்பேட்டை பிரியாணி நிச்சயம் என்பார். அவருடைய பதில் பேசாத அந்த நல்ல பழக்கத்தினால் அங்கும் போக முடியாமல் போய் விட்டது.

வண்டி பரங்கிப்பேட்டையில் ஒரு வீட்டின் வாசலில் நின்றவுடன் தான் நினவு கலைந்தது. டிரைவர், "இப்ப வந்துடுறேன்" என்று சொல்லிவிட்டுப் போனவர், உடனே வரவில்லை. அந்த வீட்டிலிருந்த அவரின் உறவினர் ஒருவர் தான் வெளியில் வந்து, எங்களை உள்ளே வந்து விட்டுப் போகச் சொல்லி வற்புறுத்தினார். சரி ரிலாக்ஸ் செய்துக் கொள்ளலாமே என்று எழுந்து போனோம்.

அங்கிருந்த ஊஞ்சலில் ஆடிக்கொண்டே டீ யை உறிஞ்சுகையில் அந்த நோட்டிஸ் கண்ணில் பட்டது. அந்த நோட்டிஸ் இங்கே உங்கள் பார்வைக்கு!- பயணம் தொடரும்

19 கருத்துகள்:

Asiya Omar சொன்னது…

Back to Blog - கா? வாங்க வந்து அசத்துங்க சகோ.
சுவாரசியம்,தொடருங்க...!

இப்னு ஹம்துன் சொன்னது…

உங்கள் அலைபேசி எண்ணை மடலில் தெரிவியுங்கள்.

பேச வேண்டியிருக்கிறது.

athira சொன்னது…

அடடா... நீண்ட காலத்துக்குப் பின் தலை தெரியுதே. நலம்தானே? அதுசரி பரங்கிப்பேட்டையில் நண்பர்.. பிரியாணி.. ஆஆஆஆ கண்டு பிடிச்சிட்டேன்ன்.. அவர் ஃபோனுக்கு ஆன்ஷர் பண்ணமாட்டாரோ?:) பொறுங்கோ வரட்டும் போட்டுக்குடுப்பேன்ன்:)...

தொடருங்கள் உங்கள் அனுபவத்தை...

Asiya Omar சொன்னது…

சகோ.உங்களை தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்.

http://www.asiya-omar.blogspot.ae/2013/03/blog-post_11.html

ஜெய்லானி சொன்னது…

//அவர் ஃபோனுக்கு ஆன்ஷர் பண்ணமாட்டாரோ?:) பொறுங்கோ வரட்டும் போட்டுக்குடுப்பேன்ன்:)..//

அடப்பாவிங்களா....!! நல்லா இருங்க .ஒன்னும் சொல்றதுகில்லை...!! வரதும் தெரியரதில்லை , போறதும் தெரியதில்லை அவ்வ்வ்வ் :-)

ஜெய்லானி சொன்னது…

ஃபுல் மப்புல போய் டாக்டரை பார்த்ததுப்போல தெரியுதே ஹி..ஹி... :-)

aaradhana சொன்னது…

நான் உங்கள் இடுகைகைள தெடர்ந்து படித்து வ௫கிறேன்.மிகவும் அருமையாக உள்ளது.
https://www.youtube.com/edit?o=U&video_id=Sr1vwJ77sWg

aaradhana சொன்னது…

மிகவும் அருமையாக உள்ளது.
https://www.youtube.com/edit?o=U&video_id=znKm4METo60

aaradhana சொன்னது…

மிகவும் அருமையாக உள்ளது.
https://www.youtube.com/edit?o=U&video_id=3FaLl1XSxi8

aaradhana சொன்னது…

அருமை
https://www.youtube.com/edit?o=U&video_id=6AkN3c3KcXc

aaradhana சொன்னது…

SUPER ARTICLE
https://www.youtube.com/edit?o=U&video_id=UoVgDL90wn8

aaradhana சொன்னது…

அருமை https://www.youtube.com/edit?o=U&video_id=44JiJPaFwEM

aaradhana சொன்னது…

https://www.youtube.com/edit?o=U&video_id=TiUW_1Q7blQ

aaradhana சொன்னது…

https://www.youtube.com/edit?o=U&video_id=WSolgzRXBv4

aaradhana சொன்னது…

super
https://www.youtube.com/edit?o=U&video_id=n83X_kuW96U

aaradhana சொன்னது…

super post
https://www.youtube.com/edit?o=U&video_id=DHjNC-t4iZs

aaradhana சொன்னது…

excellent post
https://www.youtube.com/edit?o=U&video_id=-ayAOu1QPnw

Ramesh Ramar சொன்னது…

அருமையான பதிவு.
மிகவும் நன்று ...
For Tamil News Visit..
மாலைமலர் | தினத்தந்தி

Sathiya Balan M சொன்னது…

I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Tamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie News