facebook

செவ்வாய், ஜூன் 15, 2010

நட்புப் பக்கங்கள்


ஜெகத் எனும் நட்பு !
   



 நம்ம  ஃபிரிக்வென்சியோடு ஒத்துப்போகிற உண்மையான நண்பர்கள் ஒரு சிலரே நமக்கு அமைவர். அவர்களை நாம் நம் உள்ளங்கையில் வைத்துக் கொண்டாடனும்.
                   
               அவர்களில் மேற்படி.... ஜெகத்தும் ஒருவர்.

     நான் அல்கோபரில் பணியாற்றிக் கொண்டிருந்த சமயம், MIDDLE EAST AIR LINES (MEA)  (இ)(வி)ல் அவர் இருந்தார். ரொம்ப சகஜமான பேர்வழி. நட்புக்களை கொண்டாடுவார். 'தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஏன் என்னை அழிக்கணும்' என்று பாரதியாரை நகைச்சுவையாய் வம்புக்கிழுப்பார்.

     பெங்களுரு HMT வாட்ச் கம்பெனியில்  வேலை பார்த்த இவரது மனைவி கூட ஐந்து வருட விடுமுறை எழுதிக் கொடுத்து விட்டு இவரோடு வந்து குடும்பம் நடத்திக்   கொண்டிருந்தது.

     அதிகாலையில் பூஜை அறையில் கிணு கிணு வென மணியடித்து சாமி கும்பிடும் மனைவியிடம், "ஏம்பா இப்படி காலையிலேயே தூங்குற சாமிய மணியடித்து எழுப்புறியே, ஒரு நா அந்த சாமி படத்துலேந்து இறங்கி வந்து அந்த மணியாலேயே ஒந் தலையில அடிக்கப் போகுது" என்பாராம். அவரோடு சமயங்களில் வரும் அவர் மனைவி என்னிடம் சொல்லி சிரிக்கும். ஏனென்றால் அந்நேரத்தில் இவர் தூங்கிக் கொண்டிருப்பாராம். ஒருவேளை சாமி என்று இவர் தன்னை தானே சொல்லிக் கொண்டாரோ? தெரியலை..

     இப்படியாக நமது காலங்கள் ஓடிக் கொண்டிருக்கிற வேகத்தில், அவர் என்னை வந்து பார்த்துப் போவது அரிதாகிப் போனது. ஏனென்று விசாரித்த போது, "கிட்னி ஸ்டார்டிங் டிரபுலாம்" என்று அவரே வந்து கமெண்ட்டும்  அடித்து விட்டு, என்னை திக்கித்து விட்டுப் போனார்.

    நாளாக நாளாக நூலாகிக் கொண்டிருந்தார். வாரத்திற்க்கொரு முறையோ, இரண்டு வாரம் கூடியோ டயாலிசிஸ் என்று சொல்லக் கூடிய ரத்த புத்துயிரூட்டளுக்கு சென்று வந்துக் கொண்டிருந்த போது கூட. "உள்ளங் காலில் குத்தி குத்தி உயிர் போகுதப்பா, கிட்னிய மாத்தனுமாம், செலவு ரொம்ப ஆகும் போல" என்று மருட்சி இல்லாமல் தெளிவாய் பேசினார்.

     கிட்னி மாற்று சிகிச்சைக்கு சென்னையில் ஒரு பிரபல ஹாஸ்பிடலில் (பெயர் வேண்டாமே!) அப்பாயின்மெண்ட் வாங்கி, ஒரு மாத ட்ரீட் மெண்டுக்குக்காகப் போனவர், பதினைந்து இருபது நாளிலேயே திரும்பி வந்து விட்டார். அன்று நான் ஆபீசில் வேளை விஷயமாய் யாருடனோ தொலைபேசிக் கொண்டிருந்த போது, சேரில் வந்து உட்கார்ந்த மனிதரை கண்டு ஒரு கணம் ஸ்தம்பித்து தான் போனேன். முகம் கை கால்களெல்லாம் சிகரெட் நெருப்பால் சுட்ட மாதிரி அட நம்ம ஜெகத் தான்.“என்ன சார் என்னாச்சு" பதைப் பதைத்துக் கேட்டேன்.

     "மூன்றரையிலிருந்து நாலு லட்சம் வரை செலவாச்சுப்பா. அது ஒரு பெரிய மேட்டர் கிடையாது. ரத்தத்தை ஒழுங்கா டெஸ்ட் பண்ணாமல் hiv aids உள்ள ரத்தத்தை எனக்கு ஏத்திட்டம்ப்பா. இன்னும் பத்தோ பதினைந்து நாளோ இருப்பேன் போல. இங்கு வந்த பின் கம்பெனியில் உடனே exit அடித்து விட்டார்கள்" என்று மூச்சு விடாமல் பேசினார் (இங்கே சவுதியில் அப்படி தான்.   இது மாதிரியாகிவிட்டால் govt இருக்கவும் விடாது என்பது எல்லோருக்கும் தெரிந்த கூடுதல் விஷயம்)

     அதன் பின் தான் அவரோடு வந்த அவர் மனைவியை பார்த்தேன். அழுத கண்கள் அழுதபடியே இருந்தது. எனக்காக pray பண்ணு என்று சொல்லி விட்டு போய் விட்டார். அவர் பத்து பதினைந்து நாள் என்று சொன்னது, தான் உயிரோடு இருப்பேன் என்பதை தானோ என்பது அவர் இறந்த செய்தி கிடைத்த பின் புரிந்தது.

     பின்னர் இவரது மனைவி HMT வேலையை ரிசைன் பண்ணிவிட்டு டிராவல் ஏஜென்சி ஒன்று தனியாய் துவங்கி தன்னுடைய இரண்டு மகன்களையும் நல்லவிதமாக படிக்க வைத்து துணிச்சலாய் வாழ்க்கையை எதிர் கொண்டது போற்றுதலுக்குரிய  விஷயம்.

                                         
விளம்பர சுவாரஸ்யங்கள்:

இந்த ஃபேன் படத்தை பார்க்கிறீர்களே அது சுற்றுகிறதா? சுற்றாவிட்டால், அதுக்காக நீங்க ஒன்னும் ஃபீல் பண்ணாதீங்க. உங்க sys நல்லாதானிருக்கு. உங்க கண்டிஷன் எப்படி இருக்குன்னு சோதிக்கத் தான் அப்படி. புரிஞ்சீங்களா!


பஜாஜ் ஃபேன் விளம்பரம்

ஒரு ஆன்ட்டி அந்த ஃபேனை சுவிட்ச் ஆன் பண்ணுகிறார். அது ஆசிலேசனில் இங்கும் அங்கும் தலையாட்டி சுற்றுகிறது. அவர் முகத்தில் காற்றுபடும் போதெல்லாம் முகத்திலிருக்கும் சுருக்கங்கள் மறைந்து முகம் மிகுந்த பொலிவாகிறது. ஃபேனின் திசை மாறி நகரும் போது, திரும்பவும் முகம் பொலிவிழந்து போகிறது. திசை மாறி நகரும் காற்று அங்கே உட்கார்ந்திருக்கும் அங்கிள் முகத்திலும் படுகிறது. அவர் முகத்தில் எந்த வித மாற்றமும் இல்லை. பாவமாய் உட்கார்ந்திருக்கிறார். (நிச்சயமாய் அவர் தான் காசு கொடுத்து அந்த ஃபேனை வாங்கி வந்திருப்பார்.ஹும்..)

ஆமா இந்த விளம்பர கம்பெனிகளெல்லாம் ஆண்களை என்ன கேனையன்னு நெனசுட்டாங்களா. ங்கொய்யாலே.. அல்லது அவர்கள் ஃபேனில் இருந்து முகத்தினை பொலிவாக்கும் காற்றை வீசி அடிக்கிறார்களா? அப்ப முகத்தை அழகாக்கும் ஃபேஷன் மேக்கர், முகத்தை அழகாக்கும் சர்ஜரிகள் எல்லாம் இழுத்து மூடிட்டு போய்ட வேண்டியது தானா? என்னங்கடாது ஒண்ணுமே புரிய மாட்டேங்குது...

இந்த விளம்பர குரூ, விளம்பர ஹெட்..என்பவர்கள் மண்டையில் எல்லாம் என்ன மாதிரி ஒரு கற்பனை வளம்..

37 கருத்துகள்:

Riyas சொன்னது…

AAHA... ASATHTHURINGALAE THODARNDHU ASATHUNGA

Riyas சொன்னது…

PUBLISH TO TAMILISH AND TAMILMANAM

ஜெய்லானி சொன்னது…

தலைவா லேட் ஆகுது . ஸ்குரோல் ஆகுது வெப் பேஜ் ..

அது யாருங்க படத்துல சொந்த காரங்களா ?..ஹி..ஹி... அசிங்கமா ..!!

நாடோடி சொன்னது…

//ரத்தத்தை ஒழுங்கா டெஸ்ட் பண்ணாமல் hiv aids உள்ள ரத்தத்தை எனக்கு ஏத்திட்டம்ப்பா.///

ஹாஸ்பிட்ட‌ல் மேல் கேஸ் எதுவும் போட‌ முடியாதா?...

Asiya Omar சொன்னது…

நண்பர் பற்றி குறிப்பிட்டது மனதை தொட்டது.அத்தோடு சில்லென்ற படங்கள் வேறா,யுக்தி நல்லாதான் இருக்கு.

Asiya Omar சொன்னது…

நண்பர் பற்றி குறிப்பிட்டது மனதை தொட்டது.அத்தோடு சில்லென்ற படங்கள் வேறா,யுக்தி நல்லாதான் இருக்கு.

தூயவனின் அடிமை சொன்னது…

மருத்துவ துறையில் உள்ள குறைபாடுகளை இங்கு அருமையாக சுட்டி காட்டி உள்ளீர்கள். எதிர்காலத்தில் இது
போன்ற தவறுகள் நடைபெறா வண்ணம் ,அனைவரும் விழிப்புடன் இருக்க ,இது ஒரு நல்ல இடுக்கை.

எம் அப்துல் காதர் சொன்னது…

@ Riyas கூறியது...

//AAHA... ASATHTHURINGALAE THODARNDHU ASATHUNGA//

* ரியாஸ் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ ஜெய்லானி கூறியது...

//தலைவா லேட் ஆகுது . ஸ்குரோல் ஆகுது வெப் பேஜ் ..//

என்ன பாஸ் நீங்களே லேட்டா வந்துட்டு, இப்படி ஸ்குரோல் லேட் ஆகுதுன்னு discourage பண்ணா எப்படி? இப்படி இப்படி செய்ங்க என்று உரிமை எடுத்துகிட்டு சொல்லிக் கொண்டுங்க தல! இது விசயமாய் எனக்கு நிறைய தெரியல.. advise pls

my mail id

(makhader2010@gmail.com)

எம் அப்துல் காதர் சொன்னது…

@ ஜெய்லானி கூறியது...

//அது யாருங்க படத்துல சொந்த காரங்களா ?..ஹி..ஹி... அசிங்கமா..!!//

நம்ம சொந்த கரங்களான்னு கேட்கணும் தல. இப்படி பிரிச்சி பேசுறது ஆகாது பாஸ்.

உங்கள welcome பண்றதுக்கு என்ன வேணும்னு யோசிச்சேன். மற்றபடி எனக்கொன்றும் ஹி..ஹி..

மற்ற விபரத்தை அல்லாறும் போன பின்னாடி அப்படீக்கா வந்து பேசிக்குவோமே!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ asiya omar கூறியது...

//நண்பர் பற்றி குறிப்பிட்டது மனதை தொட்டது.அத்தோடு சில்லென்ற படங்கள் வேறா,யுக்தி நல்லாதான் இருக்கு.//

ஆமாம் மேடம் நண்பரின் மறைவு பேரிழப்பு தான்.

சில்லென்ற படங்களை போட்டாலாவது வந்து படிக்க மாட்டங்களான்னு தான். அதுக்குன்னே சில குரூப் வந்து போவும்.

அதுக்காக ஜெய்லானி, பட்டாபட்டி, மங்குனி அமைச்சர்,அஹமத் இர்ஷாத்,பன்னிக்குட்டி ராம்சாமி, வெளியூர்க்காரன், கரிகாலன், முத்து, (phantom mohan paruppu) illuminatti, கக்கு மாணிக்கம், அக்பர், "ஆல் இன் ஆல்" அழகு ராஜா கடை, ரமேஷ் ரொம்ப நல்லவன் சத்தியமா, இளம் தூயவன் இவுக எல்லாம் என் friend ன்னு சொல்லமாட்டேன்..(இருங்க கொஞ்சம் மூச்சு விட்டுக்கிறேன்)

இப்படி சொல்லாகட்டி (பெயர் விடுபட்டு போனவர்களும் ஹி..ஹி.) குரூப்பா கனவுல வந்து வந்து உதைப்பாக.

ஹரீகா சொன்னது…

அண்ணீ இங்க வந்து கொஞ்சம் பார்த்துட்டு போங்க! இந்த அண்ணனின் அலும்ப. அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்....

இந்த மேட்டருக்கு அனுஷ்கா, தமன்னா படம் எதற்கு...? இந்த அநியாயத்த கேட்க யாருமே இல்லையா....?

அவ வேற ஒரு கண்ணெ மூடிக்கிட்டு, வாயே ஒரு மாதிரி கோணிக்கிட்டு இருக்கா! அப்பப்பா... தாளால!!!!

ஹரீகா சொன்னது…

இன்னா சார் ரைட்டிங் சூப்பரா இருக்கு! எங்கனாச்சும் பத்திரிகையில ஏதும் வேல பார்த்தியா?

சரி..சரி.. ஊட்டாண்ட வந்து கண்டுகினு போ. அப்பால நா எல்லார் கையிலேயும் கண்டுக்கிறேன். அக்காங்.. இன்னங்கிரே...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

நல்ல எழுத்து நடை, தொடர்ந்து எழுதுங்கள், மெயில் ஐடியை பப்ளிக்காக வைக்க வேண்டாம், முதலில் அதை டெலிட் செய்துவிடுங்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

உங்கள் நண்பரை பற்றிய தகவல் நெகிழ வைக்கிறது! அனைவருக்கும் விழிப்புணர்வு அவசியம். கட்டாயம் இதற்கு சட்டப்பூரவ்மாக நஷ்ட ஈடு பெறமுடியும்! முயற்சிக்கச் சொல்லுங்கள், குடுபத்தினருக்கு நிச்சயம் பயன்படும்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அனுஷ்கா சூப்பர்! (ஆமா நீங்க அனுஷ்கா கட்சியா இல்ல தமன்னா கட்சியா?, ரெண்டையும் போட்டு கொழப்பிக்காதீங்க, ஏதாவது ஒண்ணுல உறுதியா இருங்க)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அடுத்த பதிவு போடும்போது சொல்லியனுப்புங்க பாஸ்!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ நாடோடி கூறியது...

//ஹாஸ்பிட்ட‌ல் மேல் கேஸ் எதுவும் போட‌ முடியாதா?...//

போடலாம் தான், ஆனா அந்த குடும்பம் அதை விரும்பலையோ என்னமோ..

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ இளம் தூயவன் கூறியது...

//மருத்துவ துறையில் இது போன்ற தவறுகள் நடைபெறா வண்ணம், அனைவரும் விழிப்புடன் இருக்க//

எங்கே விழிப்புடன் இருக்கிறோம் சார். தட்டி எழுப்பியும் தூங்குவது போல் படுத்திருப்பதால் தான் இது மாதிரி பிரச்சினையே! நீங்கள் சரி பண்ணுவீர்கள், நான் சரிபண்ணுவேன் என்று ஆளாளுக்கு நினைத்துக் கொண்டிருந்தால்...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மிக்க சார்..

எம் அப்துல் காதர் சொன்னது…

@ ஹரீகா கூறியது...

வாங்கம்மா சீதேவி (காட்டிக் கொடுக்கும் துரோகி என்று மனதுள் சொல்லிக் கொண்டு)ஹேய்..போட்டுக் கொடுதுதாச்சா.. இப்ப நிம்மதியா தூங்கி இருப்பியே!!.

என்ன பண்றது இப்படியெல்லாம் படங்கள் போட்டு தான் தமிழை வளர்க்க வேண்டி இருக்கு. சமாளிப்பு எப்படி??

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிம்மா தாயி..

எம் அப்துல் காதர் சொன்னது…

@ சுப்ரமணிய சிவா கூறியது...

வாங்க சார் வாங்க, அப்படியெல்லாம் எங்கும் வேலை பார்க்கலை சார். ஏதோ எனக்கு தெரிந்ததை எழுதுகிறேன் தல! வாங்க வந்து தொடந்து படிங்க. இதே ஆர்வத்துடன் எனக்கு கருத்துரையும் எழுதுங்க. அதன் நல்ல பிள்ளைக்கு அழகு!

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்...

Unknown சொன்னது…

உங்கள் ப்ளாக்கை பார்த்து
சிரித்துகொண்டு இருந்தோம்,
இந்த உண்மையை படித்து
மனம் கலங்கியது ,

ஹரீகா அண்ணி இங்க
வந்து பார்க்க மாட்டங்க
என்ற தைரியம் தான்,

அப்படியே பார்த்தாலும்
ஒன்றும் சொல்ல மாட்டங்க
என்ற நம்பிக்கை தான்,

நாமலே ஒரு ஏழரையை
போட்டு விடுவோம்.

Unknown சொன்னது…

உங்கள் ப்ளாக்கை பார்த்து
சிரித்துகொண்டு இருந்தோம்,
இந்த உண்மையை படித்து
மனம் கலங்கியது ,

ஹரீகா அண்ணி இங்க
வந்து பார்க்க மாட்டங்க
என்ற தைரியம் தான்,

அப்படியே பார்த்தாலும்
ஒன்றும் சொல்ல மாட்டங்க
என்ற நம்பிக்கை தான்,

நாமலே ஒரு ஏழரையை
போட்டு விடுவோம்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@ பன்னிக்குட்டி ராம்சாமி

வாங்க ஸ்டார்ட் மியூசிக்,,, எப்படி இருக்கீங்க!

//கட்டாயம் இதற்கு சட்டப்பூரவ்மாக நஷ்ட ஈடு பெறமுடியும்! முயற்சிக்கச் சொல்லுங்கள்//

அதையும் அதனால் ஏற்படும் மனவுளைச்சளையும் அந்த குடும்பம் விரும்பலை போலிருக்கு தல.

எம் அப்துல் காதர் சொன்னது…

@ பன்னிக்குட்டி ராம்சாமி

//அனுஷ்கா சூப்பர்! (ஆமா நீங்க அனுஷ்கா கட்சியா இல்ல தமன்னா கட்சியா?, ரெண்டையும் போட்டு கொழப்பிக்காதீங்க, ஏதாவது ஒண்ணுல உறுதியா இருங்க)//

உறுதி குலையாமல் இருப்பதற்கு ரெண்டு பக்க பாலன்ஸ் அவசியம்ங்க. அதுல நான் உறுதியா இருக்கேங்க!! அதுல குழப்பத்துக்கு சான்சே இல்லங்க!! அது சரீ...அதுங்க ரெண்டையும் பார்த்த பிறகு உறுதியா இருக்க முடியும்னு நெனக்கிறீங்களா..ஹி.. ஹி..

எம் அப்துல் காதர் சொன்னது…

@ பன்னிக்குட்டி ராம்சாமி

ப.கு.ராம் சாம், உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!!! மீண்டும் வருக..

எம் அப்துல் காதர் சொன்னது…

vannila கூறியது...

//உங்கள் ப்ளாக்கை பார்த்து
சிரித்துகொண்டு இருந்தோம்,
இந்த உண்மையை படித்து
மனம் கலங்கியது//

என்னாதிது முன்னுக்கு பின் முரணாக,, ஏதாவது சுட்டி டிவி, ஆதித்யா டிவியை பார்த்துக்கிட்டே கமண்ட்ஸ் எழுதுனீங்களா மேடம்??

எம் அப்துல் காதர் சொன்னது…

@ vannila கூறியது...

நீங்க ஹரீகவிற்கு பதில் சொல்றீங்களா? இல்லை என்னை ஏதும் வம்பில் மாட்டி விட திட்டம் போடுறீங்களா மேடம்!! நம்ப முடியாதுப்பா..சரி சரி நான் ஊரில் இல்லை வெளியூர் போய்விட்டேன்னு நெனசுங்க..

எம் அப்துல் காதர் சொன்னது…

@ vannila கூறியது...

//அப்படியே பார்த்தாலும் ஒன்றும் சொல்ல மாட்டங்க என்ற நம்பிக்கை தான்,நாமலே ஒரு ஏழரையை போட்டு விடுவோம்//.

அஹா.. ஹரீகா நீ வசமா மாட்டப் போறே. உன்னை பாத்திக் கட்டி, கூறு போட அங்கே ஒரு கூட்டமே அலையுதுக..

எம் அப்துல் காதர் சொன்னது…

@ vannila கூறியது...

வாங்க வெண்ணிலா உங்கள் வருகைக்கும், மனம் சந்தோஷிக்கும் கும்மிக்கும் மனம் நிறைந்த நன்றி!!

செ.சரவணக்குமார் சொன்னது…

நண்பரின் மறைவு பற்றிக் குறிப்பிட்டிருந்தது வருத்தமடையச் செய்தது.

விளம்பர சுவாரஸ்யங்கள் எல்லாப் பதிவுகளிலுமே இடம் பெற வேண்டாமே சார்.

மேலும் தமன்னா, அனுஷ்கா படங்கள்??????

அண்ணிகிட்ட சொல்லவா?

எம் அப்துல் காதர் சொன்னது…

@ செ.சரவணக்குமார் கூறியது...

//விளம்பர சுவாரஸ்யங்கள் எல்லாப் பதிவுகளிலுமே இடம் பெற வேண்டாமே சார். மேலும் தமன்னா, அனுஷ்கா படங்கள்?????? அண்ணிகிட்ட சொல்லவா?//

ஐயா, அன்புள்ளீர்.. விளம்பர சுவாரஸ்யங்கள் நீங்க சொல்லி தான் போட்டேன். அதற்குள் போரடித்து விட்டதாய்யா? இந்த தமன்னா அனுஷ்கா படங்களெல்லாம் அண்ணி தான் செலக்ட் பண்ணி கொடுத்தாங்க சார்? ஹி..ஹி..

அப்புறம்...எங்கே புதிய இடுகைய காணோம்! இன்னும் ஊர் நினைப்பாவே இருந்த எப்படி?? எல்லாரும் டெய்லி ஒன்னு போடுறாங்க..நீங்க அட்லீஸ்ட் வாரம் ரெண்டாவது போட முயற்சி செய்ங்க தல! ஆவலுடன்...

Abu Khadijah சொன்னது…

சிரித்துக் கொண்டே இருந்தேன், நன்பரின் விஷயம் சற்று கவலையளித்தது

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

அப்துல்காதர் நண்பா.. ரொம்ப அருமையா எழுதிருக்கீங்க.. ஆரமபத்திலே அசத்திட்டீங்க.. சரவணன் உங்க சந்திப்பை பற்றி சொன்னார். நம் சந்திப்பும் விரைவிலா..

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

ஆவலுடன் உங்கள் ஸ்டார்ஜன்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@ Adirai Express கூறியது...

வாங்க அதிரை எக்ஸ்பிரஸ், எப்படி இருக்கீங்க! நீங்கள் கொடுக்கும் ஊக்கமும், வாழ்த்துகளும் தான் எங்களை போன்ற புதிய பதிவர்களை இயங்க வைக்கிறது. உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ Starjan( ஸ்டார்ஜன் ) கூறியது...

வாங்க ஸ்டார்ஜன், எப்படி இருக்கீங்க!

செ.சரவணக்குமார் எங்களைப் பற்றி உங்களிடம் சொல்லி, பதிவில் அதீதமாய் எழுதி விட்டாரோன்னு தோணுது நண்பா, என்றாலும் நம் சந்திப்பு விரைவில் நல்க விழைகிறேன்!

நீங்கள் கொடுக்கும் ஊக்கமும், வாழ்த்துகளும் தான் எங்களை போன்ற புதிய பதிவர்களை இயங்க வைக்கிறது. உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!