facebook

ஞாயிறு, ஆகஸ்ட் 22, 2010

கவனமின்மை இதுவே உண்மை!!


                                                                                                                                                                                                    

கவனமின்மை இதுவே உண்மை!!

குழந்தைகளை கண்ணுக்கு கண்ணாக பள்ளிக் கூடங்களில் கொண்டு போய் சேர்ப்பித்து திரும்பவும் அழைத்து வரும் பொறுப்பு வேன் மற்றும் பஸ் டிரைவர்களின் தலையாயக் கடமை ஆகும். டிரைவர்களின் பொறுப்பு என்பது ரோட்டில் வண்டியை விரைவில்லாமல் மெதுவாய் கவனமாய் ஓட்டுவதில் மட்டுமல்ல மற்றதிலும் பொறுப்பு வேண்டும் என்பது தான்.

பள்ளிக்கூடத்திற்கு அனுப்பும் தன்னுடைய குழந்தைகளை பராமரித்து அனுப்புவது பெற்றோர்களின் கடமை மட்டுமல்ல. அதை ஒரு பொறுப்பான பஸ் அல்லது வேன் நிர்வாகியிடம் ஒப்படைத்து விட்டு நம் கடமை முடிந்து விட்டது என்று அலட்சியமாக இருந்து விடக் கூடாதே என்பதற்காவே பதற வைக்கும் இந்தப் பதிவு.

இப்படி தான் கடந்த மாதத்திற்கு முந்திய மாதம் பள்ளிக்கூடம் சென்ற 5 வயது பச்சிளம் தளிர் மரணித்து போனது இங்குள்ள (சவுதி)  தம்மாம் மாவட்டத்தில் அனைவரிடமும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஸ்கூலுக்கு வேனில் போன குழந்தை மரணித்தது எப்படி??

வேனில் சென்ற குழந்தை வேனை விட்டு இறங்க வில்லை. உடல் அசதியோ, இல்லை தூங்கிக் கொண்டிருந்ததோ தெரியவில்லை, மற்றக் குழந்தைகள் இறங்கி கிளாசுக்கு போன பின்,  இது கடைசி சீட்டிலேயே படுத்திருந்தது போலும். டிரைவரும் வண்டியை ஒரு முறைக்கிருமுறை நோட்டமிட  தவறி  ஓரிடத்தில் பார்க் செய்து பூட்டி விட்டு வேறெங்கோ சென்று விட்டார்.

வெயில் சூட்டின் தாக்கமும், ஏசி வண்டி யாதலால் லாக் செய்யப் பட்டிருந்த கதவை தள்ளித் திறக்க (தெரிய/முடிய) வில்லை. இது தான் நடந்திருக்க வேண்டும். மூச்சு திணறல் ஏற்ப்பட்டு குழந்தை கத்தி இருக்கக் கூடும். பூட்டிய கதவுகளால் அது வெளியில் நின்றவர்களுக்குக் கூட கேட்டிருக்க வாய்ப்பில்லை. காரணம் -

ஸ்கூலுக்கு சற்று தூரத்தே பார்க் செய்யப் பட்டிருந்ததாலும் யார் கண்ணிலும் பட வாய்ப்பில்லாமல் போய்விட்டது எனலாம். வெளி சுவாசக் காற்று கிடைக்காததால், குழந்தை தன் சுவாசத்தை நிறுத்திக் கொண்டது. பார்த்த நெஞ்சு அனைத்தும் பதைப் பதைத்து போனது தான் நிஜம்.


                                                                                                                      
  
இது போன்றே இன்னொரு சம்பவமும் பின் பனிக் காலத்தில் நடந்தது. காரில் கூட்டி வந்த குழந்தை அது தானே கீழே இறங்கி கதவை சாத்தியதும், டிரைவர் காரை சற்று முன்னெடுத்து ரிவர்ஸ் எடுத்திருக்கிறார். அவ்வளவுதான் "வீல்" என்ற சப்தம். குழந்தை காலி. எப்படி?? கீழே இறங்கியக் குழந்தை பென்சில் பாக்ஸிலிருந்து ஏதோ தவறி விழ, உட்கார்ந்து எடுத்துக் கொண்டிருந்தது, டிரைவருக்கு தெரியவில்லை. அவ்வளவு தான்.

நான் ஏதோ கதை சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று இதைப் படிக்காதீர்கள். ஏனிந்த தவறுகள் எப்படி நடை பெறுகின்றன??.

பெறும்பாலான தவறுகள் பெற்ற நம்மிடம் தான் இருக்கின்றன என்பது கணிப்பு.  எப்படி??  கல்வி நிர்வாகத்தினால் நடத்தப்படும் அல்லது கவர்ன்மெண்ட்டால் நிர்வகிக்கப் படும் பஸ்சிலோ வேனிலோ குழந்தைகளை அனுப்பாமல், பிரைவேட் வேனில் அனுப்புகிறோம் என்பது குற்றச்சாட்டு.  ஏன்??  விலை மலிவு என்று சிம்பிளாகச் சொன்னாலும், நமது வேலை பரபரப்பில் இவற்றை எல்லாம் உட்கார்ந்து சிந்திக்க தவறி விடுகிறோம் என்பதே உண்மை. பொறுப்புள்ள பெற்றோர்களாகிய நாம் இவைகளை பற்றி சிந்திக்க கடமைப் பட்டிருக்கிறோம்.

பொறுப்பான வேன் டிரைவர் என்றால் வண்டியில் உள்ள அனைத்துக் குழந்தைகளும் இறங்கி விட்டதா என்று பார்த்து, அத்தனையும் அழைத்து சென்று (கைபிடித்து, முடியாவிட்டால் வழி காட்டி) ஸ்கூலில் விட்டப் பின்பே இவர் வண்டியை நோக்கி  வர வேண்டும். அது மாதிரி ஸ்கூல் முடிந்ததும்  பொறுப்பாய் அழைத்து வந்து வீட்டில் விட வேண்டும். எங்கே நடக்கிறது இது மாதிரி யெல்லாம்??  தனிக் காரில் அழைத்து வரப் படும் குழந்தைகள் கூட இது மாதிரி பார்த்து பார்த்து கையாளப் படுவதில்லை என்பதே உண்மை.

ஒரு சில டிரைவர்கள் அது மாதிரி செய்கிறார்கள் என்றால் நீங்களே அவர்களை நாலு பேர்கள் முன்னிலையில் கௌரவியுங்கள். அப்ப தான் ஒரு விழிப்புணர்வு ஏற்படும்.  இனி இந்த மாதிரி செய்திகள் நம் கண்ணில் படாமல் இருந்தாலே நாம் பாக்கியம் செய்தவர்கள் என்று நினைத்துக் கொள்ள தோன்றுகிறது.


1) Sense of Responsibility.
2) Not Letting A Child Walk in Front of the Van or Bus
3) Making sure that All Children are off the Vehicle at the time of Drop Off.
4) Driving Slowly
5) Not allow Tinted Windows.
6) Not allow children to peek out of the windows when the vehicle is moving.
7) Maintain their vehicles and make sure that the Air Condition Works Fine.


Dear All: Please add to the above list and let us educate.

LET US MAKE SURE THAT WE NEVER HAVE TO READ SUCH NEWS AGAIN.

36 கருத்துகள்:

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

இந்தியா முழுவதும் இதற்கான விழிப்புணர்வு மிக அவசியம் ...

ராஜவம்சம் சொன்னது…

arab newsல் வாசித்தபோதே மனம்கனத்திருந்தது.

இதற்க்கு பள்ளிகளிலேயே அனைத்து ஓட்டுனருக்கும் மாதம் மாதம் இல்லையென்றால் இரண்டுமாதத்திற்க்கு ஒருமுறை அனைத்துவிசயங்களையும் முன் வைத்து அரைமனிநேரம் பாடம் எடுத்தால் கூட போதும்.

பெற்றோரின் கவணம் ரொம்ப முக்கியம்.

நாடோடி சொன்னது…

அந்த‌ குழ‌ந்தைக‌ளின் ம‌ர‌ண‌த்தை ப‌டிக்கும் போது ம‌ன‌ம் க‌ன‌க்கிற‌து..

ந‌ல்ல‌ விழிப்புண‌ர்வு ப‌திவு..

asiya omar சொன்னது…

இங்கு அபுதாபியில் 2 வருடம் முன்பு எங்கள் வீட்டு பக்கம் உள்ள ஒரு பிரபல நர்சரி பள்ளியில் இப்படி நடந்தது.மூன்று வயது வரை தாத்தா பாட்டியுடன் இருந்துவிட்டு மார்ச்சில் வந்த குழந்தை ஏப்ரலில் உயிரை விட்டு மார்ச்சுவரியில்.இப்படி ஸ்கூல் பஸ்ஸில் நடந்தது அன்று நெஞ்சு பதைத்தது,இன்றும் பதைக்கிறது.கவனம் மிக முக்கியம்.தேவையான பகிர்வு.

செ.சரவணக்குமார் சொன்னது…

அதிர்ச்சியாக இருந்தது. தமிழ்நாட்டிலும் இதுபோன்ற அலட்சியத்தால் நேர்ந்த கொடூரங்கள் அதிகம். மிக முக்கியமான பகிர்வாக இதை நினைக்கிறேன்.

மிக்க நன்றி.

ஜெய்லானி சொன்னது…

முதல் செய்தி :- வந்தவுடன் இங்குள்ள அனைத்து ஸ்கூல் பஸ்ஸின் கண்ணாடியில ஓட்டப்பட்டுள்ள கருப்பு ஸ்டிக்கர்களை (( வெய்யில் தடுப்பு )) தடை செய்ததுதான். யாராவது உள்ளே இருந்தால் கண்ணாடி வழியே வெளியே தெரியும். அந்த குழந்தை இறந்ததுக்கு இதுதான் மெயின் காரணம்.

அது உள்ளே தட்டியது வெளியே யாருக்கும் தெரியவில்லை.. பாவம் ..

ஜெய்லானி சொன்னது…

இது அந்த டிரைவரின் பொருப்பற்ற தன்மையே காரணம். அதுக்கு வீட்டில் உள்ளவர்கள் என்ன செய்வாங்க பாவம் ..!!கண்கானிக்க வேண்டியது பள்ளி நிர்வாகம் .


அதுக்கு வழி இருக்கு. இங்கே உள்ள மாதிரி

வண்டி பின்னே பள்ளியின் செல் நம்பர் எழுதி வைக்கனும் டிரைவிங் சரியில்லாட்டி இந்த நெம்பருக்கு போன் செய்து ரிப்போட் செய்யுற மாதிரி . நிர்வாகமும் உடனே ஆக்‌ஷன் எடுக்கனும்

அப்பதான் இது தொடராது...

ஜெய்லானி சொன்னது…

ஆமாம் பாஸ் சானியாதான் போய்ட்டாங்களே இன்னும் ஏன் இப்பிடி ..?...இது மிரட்டல் இல்லை.....இல்லை....அடுத்த பதிவுல பாத்துக்கிறேன்.....

இல்லாட்டி பிளாக்ஸ்பாட் ஹேக் செய்யப்படும் என்பதை தாழ்மையுடன் பெரு மகிழச்சியுடன் தெரிவித்து கொ(ல்)ள்கிறேன்...

காயலாங்கடை காதர் சொன்னது…

இதுபோல் ஒரு சம்பவம் கத்தாரிலும் சில மாதங்களுக்கு முன் நடந்தது.

அந்த குழந்தை மூச்சி விடமுடியாமல் எப்படி தினறிஇருக்கும்.

என்று நினைத்தால் ஐயோ!!! மனசெல்லாம் பதறுகிறது.

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ கே.ஆர்.பி.செந்தில் கூறியது...

//இந்தியா முழுவதும் இதற்கான விழிப்புணர்வு மிக அவசியம் //

உண்மை தான் செந்தில் சார்,,

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ராஜவம்சம் கூறியது

//இதற்கு பள்ளிகளிலேயே இரண்டுமாதத்திற்க்கு ஒருமுறை அனைத்து விசயங்களையும் முன் வைத்து அரைமனிநேரம் பாடம் எடுத்தால் கூட போதும்//.

இது சூப்பர் ஐடியாவா இருக்கே பாஸ்.

ராஜவம்சம் உங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ நாடோடி கூறியது...

//அந்த‌ குழ‌ந்தைக‌ளின் ம‌ர‌ண‌த்தை ப‌டிக்கும் போது ம‌ன‌ம் க‌ன‌க்கிற‌து..//

உண்மையிலேயே கேள்வி பட்ட உடனே மனம் ரொம்ப வேதனையா தானிருந்தது ஸ்டீபன். அதுவும் பக்கம் பக்கம்.

நாடோடி உங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ asiya omar கூறியது...

//இங்கு அபுதாபியில் மூன்று வயது வரை தாத்தா பாட்டியுடன் இருந்துவிட்டு மார்ச்சில் வந்த குழந்தை ஏப்ரலில் உயிரை விட்டு மார்ச்சுவரியில்..//

இப்படி எல்லா இடங்களிலுமே இருந்தால் எப்ப தான் இதற்கு மாற்று தீர்வு கிடைக்கும் மேடம்!

asiya omar உங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ செ.சரவணக்குமார் கூறியது...

//அதிர்ச்சியாக இருந்தது. தமிழ்நாட்டிலும் இதுபோன்ற அலட்சியத்தால் நேர்ந்த கொடூரங்கள் அதிகம். மிக முக்கியமான பகிர்வாக இதை நினைக்கிறேன்.//


ஆமா நிச்சயமா எல்லோரும் விழிப்புணர்வுடன் இருந்து மற்றவர்க்கும் அதை எடுத்துப் போகணும் தல!

செ.சரவணக்குமார் உங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி!!

kavisiva சொன்னது…

கொடுமைங்க! அலட்சியமும் பொறுப்பின்மையுமே இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு காரணம்.

சிறு குழந்தைகளுக்கான ஸ்கூல் பஸ்களில் குழந்தைகளின் பெற்றோர்கள் முறை வைத்துக் கொண்டு யாராவது ஒருவர் கூடவே சென்றால் நலம்.

ரமேஷ் சொன்னது…

ரொம்ப கொடுமைங்க..படிக்கும் போதே பதறுது....மனிதர்களுக்கு இருக்கும் அலட்சியம் விலங்குகளுக்கு கூட இல்லை என நினைக்கிறேன்...அதை எல்லாம் மிருகம் என மட்டமாகப் பேசுகிறோம்...நாமெல்லாம்...ஜீனியஸ் 6 அறிவு 7 அறிவுன்னு நம்மல நாமலே பாராட்டிக்கிறோம்...என்னத்த சொல்ல...

Chitra சொன்னது…

உங்கள் கருத்துக்களை ஆமோதிக்கிறேன்.... நல்ல பதிவு.

குழந்தைகளின் உயிர்களுடன் விளையாடாமல் பொறுப்புடன் இருக்க பயிற்சி அளிப்பார்களா?

மோகன்ஜி சொன்னது…

படித்ததிலிருந்து மனம் பரிதவிக்கிறது. என்ன அநியாயம்?இந்த பாதிப்புக்குள்ளான பெற்றோருக்கு இந்த தவற்றைக் களையும் நேரமோ,மனநிலையோ இருக்க வாய்ப்பில்லை.மற்ற சிலருக்கு இது ஒரு செய்தி... வேதனையான செய்தி. பெரும்பாலோனோருக்கு இது விதியின் விளையாட்டு.துப்புரவாய் இந்த துர்நிகழ்வை ஆராய்ந்து முன் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் பள்ளி நிர்வாகம், அரசாங்கம்,பத்திரிகைகள் கடமை.
அலட்சியத்தால் இன்னும் எத்தனைக் காவுகள் தரப் போகிறோம்?

vanathy சொன்னது…

கவலையாக இருக்கு படிக்கவே. யார் மீது தவறு என்று விவாதம் செய்யாமல், இனியும் இப்படி நடக்காமல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

ஜெய்லானி சொன்னது…

ஐயா...நா மிரட்டல பேசாம வந்து பதில சொல்லிட்டு போங்க ...

பதிவுலகில் பாபு சொன்னது…

என்ன கொடுமைங்க இது.. படிக்கவே கஷ்டமா இருக்கு..

Jaleela Kamal சொன்னது…

ரொம்ப அதிர்சியான தகவ்ல்.
பிள்ளைகள் உயிருடன் விளையாடம,
ஓட்டுனர்கள் கொஞ்சம் பிள்ளைகள் மேல் கவனம் செலுத்தி ஏறியவர்கள் எல்லோரும் இறங்கினார்க்ளா என்று ஒன்றுக்கு இருமுற்றை செக் பண்ணி நால் நல்லது, அது பள்ளியிலேயே அடிக்கடி டிவர்கள் மீட்டிங் போடும் போடும் போது திரும்ப திரும்ப நினைவு படுத்தினால் நல்ல இருக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஜெய்லானி கூறியது...

//முதல் செய்தி :- வந்தவுடன் இங்குள்ள அனைத்து ஸ்கூல் பஸ்ஸின் கண்ணாடியில ஓட்டப்பட்டுள்ள கருப்பு ஸ்டிக்கர்களை (( வெய்யில் தடுப்பு )) தடை செய்ததுதான். யாராவது உள்ளே இருந்தால் கண்ணாடி வழியே வெளியே தெரியும். அந்த குழந்தை இறந்ததுக்கு இதுதான் மெயின் காரணம்.//

உண்மை தான் பாஸ். நீங்க எல்லாத்தையும் ஃபிங்கர் டிப்ஸ்ல தெரிஞ்சு வச்சிருக்கீங்க. கிரேட் தல! ஹி..ஹி..

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஜெய்லானி கூறியது...

//வண்டி பின்னே பள்ளியின் செல் நம்பர் எழுதி வைக்கனும் டிரைவிங் சரியில்லாட்டி இந்த நெம்பருக்கு போன் செய்து ரிப்போட் செய்யுற மாதிரி . நிர்வாகமும் உடனே ஆக்‌ஷன் எடுக்கனும்//

இப்ப சொன்னீங்களே இது பெஸ்ட் ஐடியா பாஸ். ஆனா அதுமாதிரி யார் சொல்வா?? செய்வா?? நாம தான் புலம்பிக்கிட்டு திரியனும் போல!!

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஜெய்லானி கூறியது...

//ஆமாம் பாஸ் சானியாதான் போய்ட்டாங்களே இன்னும் ஏன் இப்பிடி ..?...இது மிரட்டல் இல்லை.....இல்லை....அடுத்த பதிவுல பாத்துக்கிறேன்.....//

ண்ணா.. கண்ணாடிய தொடச்சுட்டு பாருங்கண்ணா.இது உங்க அ..அனும்மா பாஸ். ஒரு சிம்பத்திக்காக, அவங்களப் பார்த்துட்டாவது இறக்கப் படுவாங்கலேன்னு தான். ஹி..ஹி..,, அடுத்த பதிவு வரைக்கும் ஏன்?? இப்பவே பாத்து வச்சுடுங்க பாஸ்..க்கி..க்கி..

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஜெய்லானி கூறியது...

//இல்லாட்டி பிளாக்ஸ்பாட் ஹேக் செய்யப்படும் என்பதை தாழ்மையுடன் பெரு மகிழச்சியுடன் தெரிவித்து கொ(ல்)ள்கிறேன்...//

இன்னாதிது சின்னப் புள்ள தனமா இருக்கு. இப்ப தானே அவ்வளவு உயர்வா சொன்னேன். ஆட்டோ அனுப்பனுமா?? ஹி.. ஹி..,, வேணாம். நீங்க நல்ல புள்ள தான். ஆட்டோ வரைக்கும் ஏன் போகணும். நான் இங்கிருந்துக் கொண்டு சொன்னாவே கேட்டுக்குவீங்க. இது உங்க பிளாக்ஸ்பாட் பாஸ். அப்புறம் ஹேக் பண்ணிட்டு நீங்களே புதுசா ஒன்னு ஆம்பிச்சு கொடுபீங்களா?? க்கி..க்கி ((அப்படீன்னா ஹேக் பண்ணுங்க, பண்ணிட்டு உங்க கை உங்க கிட்ட இருக்கான்னு பாத்துங்க. இதுவும் சவால் தான்!! ஹா.. ஹா..))

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ காயலாங்கடை காதர் கூறியது...

//இதுபோல் ஒரு சம்பவம் கத்தாரிலும் சில மாதங்களுக்கு முன் நடந்தது. அந்த குழந்தை மூச்சி விடமுடியாமல் எப்படி தினறி இருக்கும் என்று நினைத்தால் ஐயோ!!! மனசெல்லாம் பதறுகிறது. //

இதுபோல் எங்கு நடந்தாலும் மக்கள் தன் எதிர்ப்பைக் காட்டனும். அப்ப தான் ஒரு விழிப்புணர்வு வரும்.

காயலாங்கடை காதர் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ kavisiva கூறியது...

//சிறு குழந்தைகளுக்கான ஸ்கூல் பஸ்களில் குழந்தைகளின் பெற்றோர்கள் முறை வைத்துக் கொண்டு யாராவது ஒருவர் கூடவே சென்றால் நலம்.//

நீங்கள் சொல்வது சரியென்றாலும், இப்ப உள்ள காலக் கட்டத்தில் யார் அப்படி செய்ய முன்வருவார்கள்??

கவிசிவ உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ரமேஷ் கூறியது...

// ரொம்ப கொடுமைங்க..படிக்கும் போதே பதறுது நாமெல்லாம் ஜீனியஸ் 6 அறிவு 7 அறிவுன்னு நம்மல நாமலே பாராட்டிக்கிறோம் //

எந்த அறிவு வேணுமோ அது இல்லன்ன, மனித ஜீவிதமே பொய்த்துப் போய் விடும் பாஸ்.

ரமேஷ் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ Chitra கூறியது...

// உங்கள் கருத்துக்களை ஆமோதிக்கிறேன்.... நல்ல பதிவு. //

வாங்க மேடம். நன்றிங்க!

//குழந்தைகளின் உயிர்களுடன் விளையாடாமல் பொறுப்புடன் இருக்க பயிற்சி அளிப்பார்களா?//

இதை அரசாங்கம்,, மக்களையும், குறிப்பாக டிரைவர்களையும் கலந்து முடிவெடுக்கும் போது வேணுமானால் சாத்தியப் படலாம் Siss.

Chitra உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ மோகன்ஜி கூறியது...

// படித்ததிலிருந்து மனம் பரிதவிக்கிறது. இந்த பாதிப்புக் குள்ளான பெற்றோருக்கு இந்த தவற்றைக் களையும் நேரமோ, மனநிலையோ இருக்க வாய்ப் பில்லை. முன் தடுப்பு நடவடிக்கை களை மேற்கொள்ளுதல் பள்ளி நிர்வாகம், அரசாங்கம், பத்திரிகைகள் கடமை.//

அருமையாச் சொன்னீங்க மோகன்ஜி. பத்திரிகைகளில் வந்த செய்திகளை இப்ப மக்கள் முன்னெடுத்தும் வைத்தாச்சு. இனி எல்லாமே உரியவர்கள் பார்த்துக் கொள்வார்கள். சரிதானே!!

மோகன்ஜி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ vanathy கூறியது...

// கவலையாக இருக்கு படிக்கவே. யார் மீது தவறு என்று விவாதம் செய்யாமல், இனியும் இப்படி நடக்காமல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.//

அது தான் எல்லோருடைய விருப்பமும்!!

வானதி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஜெய்லானி கூறியது...

//ஐயா...நா மிரட்டல பேசாம வந்து பதில சொல்லிட்டு போங்க //

((அப்படீன்னா ஹேக் பண்ணுங்க, பண்ணிட்டு உங்க கை உங்க கிட்ட இருக்கான்னு பாத்துங்க. இதுவும் சவால் தான்!! ஹா.. ஹா..))

இத படிச்சுட்டு பயந்துட்டீங்களா. ஆம்மா அந்த பயமிருக்கணும். க்கி..க்கி..

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ பதிவுலகில் பாபு கூறியது...

// என்ன கொடுமைங்க இது.. படிக்கவே கஷ்டமா இருக்கு..//

நல்ல மனதுகள் எல்லாமே இறைவனிடம் pray பண்ண வேண்டியதுதான்.

பதிவுலகில் பாபு உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ Jaleela Kamal கூறியது...

//ஓட்டுனர்கள் கொஞ்சம் பிள்ளைகள் மேல் கவனம் செலுத்தி ஏறியவர்கள் எல்லோரும் இறங்கினார்க்ளா என்று ஒன்றுக்கு இருமுற்றை செக் பண்ணி நால் நல்லது, அது பள்ளியிலேயே அடிக்கடி டிவர்கள் மீட்டிங் போடும் போடும் போது திரும்ப திரும்ப நினைவு படுத்தினால் நல்ல இருக்கும்.//

டிரைவர்களுக்கு டெய்லி காலையில் அழைத்துப் போக பத்து ட்ரிப் இருக்கும் அழைத்து வரவும் அது போலவே. அப்படி இருக்கும் போது அவர்களுக்கு எங்கே பொறுமை இருக்கும். பெறும்பாலான ஓட்டுனர்களுக்கு காசு தான் கவனமே ஒழிய நமது பிள்ளைகளல்ல!!

ஜலீலாக்கா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

கருத்துரை வழங்கிய அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி!!