facebook

செவ்வாய், ஆகஸ்ட் 10, 2010

ஈகை..!!


ஈகை!!

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு, சேரன் மஹாதேவி ஏரியாவைச் சேர்ந்த எங்கள் நண்பர் ஒருவர் VACATION போய் விட்டு திரும்பி வரும் போது, அங்கே பள்ளிவாசல் ஒன்று கட்டிக் கொண்டிருப்ப தாகவும், அதற்கு நம்மால் ஆன பொருளுதவி செய்யணும் என்று கோரிக்கை ஒன்றையும் வைத்தார். பள்ளிவாசலில் கொடுத்த ஸிலிப்பையும் கூடவே கொண்டு வந்திருந்தார்.

நாங்கள் இங்கே ரெண்டு மூணு நண்பர்கள் இருப்பதால் ஆளுக்கு கொஞ்சம் தொகையைப் போட்டு அனுப்பி விடலாம் என்று திட்டம் போட்டுக் கொண்டோம். மற்றவர்களிடமும் சொல்லி கலக்ட் செய்து கூடுதலாக அனுப்பலாமே என்று நண்பர்கள் யோசனை சொன்னபோது சற்று சங்கோஜமாக இருந்தது. அது மாதிரி யாரிடமும் போய் கேட்டு நின்றதில்லை ஆதலால் ஏதும் நினைத்துவிடுவார்களோ என்ற கோட்பாடுகளை மீறிய தயக்கம்.

பக்கத்து ரியல் எஸ்டேட் ஆபீசில் வேலைப் பார்க்கும் புதுக்கோட்டையை சேர்ந்த நண்பர் ஒருவர் பணம் அனுப்ப எங்களிடம் வர, அவரிடம் மேற்படி விஷயத்தை நாசூக்காக சொல்லி அவரையும் எங்களோடு இணைந்துக் கொள்ள சொன்னோம். உடனே சம்மதித்த அவர், போயிட்டு அரை மணியில் திரும்பி வந்து, " எங்க மொதலாளியும் ஒரு நல்ல தொழுகையாளி மனுசர் தான். உங்களுக்கு தான் தெரியுமே இது மாதிரி விஷயங்களுக்கெல்லாம் நிச்சயம் உதவுவார். நாம அவரிடம் போய் பேசிப் பார்ப்போமே" என்றார்.
அப்படி சொல்லு என் மகராசா என்று அவரை மெச்சி விட்டு, ஒரு பிரேயர் டைம் முடிந்து அந்த மொதலாளி அமைதியாய் அமர்ந்திருந்த ஏகாந்த பொழுதில் எங்களை அவர் ஆபீசுக்குள் அழைத்துச் சென்றார்.

பொதுவான நலம் விசாரித்தலைத் தொடர்ந்து, "என்ன விஷயமாய் என்னை காண வந்திருக்கிறீர்கள்" என்று வினவினார். நாங்கள், "இப்படி இப்படி இது இது" என்று மெல்லமாய் விவரித்தோம். கொஞ்ச நேரம் எங்களையே பார்த்துக் கொண்டிருந்த அவர், எவ்வளவு எதிர் பார்க்கிறீர்கள் என்றெல்லாம் கேட்காமல் யாருடைய பெயரில் செக் வேணும் என்று கேட்டார்.

எங்களுக்கு சட்டென்று எதுவும் சொல்ல தோன்ற வில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். ரியாலாய் எடுத்துக் கொடுப்பார் என்று வந்திருந்த எங்களுக்கு, இப்படி கேட்டவுடன், என்னுடைய இக்காமாவை (Identy card) எடுத்துக் கொடுத்தேன். விறு விறு வென்று எழுதி செக்கில் கையெழுத்திட்டு சரக்கென்று கிழித்துக் கொடுத்தார். அவரையே பார்த்துக் கொண்டிருந்த நாங்கள் கொடுத்ததை வாங்கிப் பார்த்து இன்னும் பிரமித்துப் போய் நின்றோம்.

"இது போதுமா" என்று அவர் கேட்ட போது தான், நாங்கள் மறு நினைவுக்கே திரும்ப வந்தோம். மிகப் பெரிய சுக்ரனை (நன்றியை) சொல்லிவிட்டு வெளியில் வந்த எங்களில் யாருக்கும் பேச்சு எழவில்லை.

எப்படிங்க, சர்வ சாதரணமாக ஊர் காசுக்கு, கிட்டத்தட்ட ரூபாய் 50-60 தினாயிரம் மதிப்பிலான 5000 சவுதி ரியால்களைக் எடுத்துக் கொடுத்த அந்த மா மனிதரைப் பற்றி என்ன வென்று சொல்ல முடியும்ங்க! பிறகு வேறு யாரிடமும் வசூல் செய்யாமல் ஒரு பெரிய தொகையை பள்ளி வாசல் நிதியாக அனுப்பி வைத்தோம்.

இப்ப இதை ஏன் உங்களோடு பகிர்ந்து கொள்கிறே
னென்றால், ரமலான் நெருங்கி வரும் இவ்வேளையில்,
அன்பு நண்பர்களே அருமை சகோதரிகளே, ஈகையைப்
பற்றி இப்பவே (எப்பவும்) சிந்திக்க ஆரம்பித்து விட வேண்டும் என்பதற்க்காகவே !!
GREETINGS TO ALL
"RAMADAN KAREEM"
                                                                              
                                                                             

24 கருத்துகள்:

vanathy சொன்னது…

நல்ல பதிவு. பணமிருந்தாலும் சிலருக்கு கொடுக்க மனமிருக்காது. இவர் வித்யாசமான ஆளாக இருக்கிறார்.

Mohamed Faaique சொன்னது…

குடுப்பாருக்கு குறைவதில்லை இதை குடுக்காதோர் அறிவதில்லை

asiya omar சொன்னது…

அருமையான பகிர்வு.ஈகைப்பெருநாள் என்று சொல்லிற்கு ஏற்ற இடுகை.

ஜெய்லானி சொன்னது…

இதுப்போல நிறைய இருக்கிறார்கள் ஆனால் வெளி உலகிற்கு தெரிவதில்லை. அதான் உண்மை..

ஜெய்லானி சொன்னது…

இங்கு முழு பள்ளிவாசல் கட்டி க்கொடுப்பதே தனி அரபிதான் . யாரும் கூட்டு இல்லை .

நாடோடி சொன்னது…

ந‌ல்ல‌ விச‌ய‌ம் தான்.. இருப்ப‌தை கொடுத்து ம‌கொழ்வ‌தே சிற‌ப்பு.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

மிக உன்னதமான காரியத்தை செய்த அவருக்கு இறைவன் நற்கூலியை வழங்குவானாக.

இந்த நன்னாளில் இறைவன் நம் அனைவருக்கும் நல்லருளை தருவானாக. ஆமீன்.

ஸாதிகா சொன்னது…

படிக்கவே ரொம்ப சந்தோஷமாக இருந்தது சகோ அப்துல்காதர்.

செ.சரவணக்குமார் சொன்னது…

அருமையான எழுத்து நடை சார்..

இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துகள்.

ஒரு நல்ல மனிதரைப்பற்றி சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். பகிர்வுக்கு சுக்ரன்..

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ vanathy கூறியது...

//நல்ல பதிவு.பணமிருந்தாலும் சிலருக்கு கொடுக்க மனமிருக்காது. இவர் வித்யாசமான ஆளாக இருக்கிறார்.//

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

வாணி உங்கள் வருகைக்கும் கருத்து பதிவுக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ Mohamed Faaique கூறியது...

//குடுப்பாருக்கு குறைவதில்லை இதை குடுக்காதோர் அறிவதில்லை//

ஆஹா அருமையா சொல்லிடீங்க!

Mohamed Faaique உங்கள் முதல் வருகைக்கும் கருத்து பதிவுக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ asiya omar கூறியது...

//அருமையான பகிர்வு. ஈகைப் பெருநாள் என்று சொல்லிற்கு ஏற்ற இடுகை.//

ஆமாம் மேடம்,மிக்க நன்றி

asiya omar உங்கள் வருகைக்கும் கருத்து பதிவுக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஜெய்லானி கூறியது...

//இதுப்போல நிறைய இருக்கிறார்கள் ஆனால் வெளி உலகிற்கு தெரிவதில்லை. அதான் உண்மை..//

நிச்சயமாய். இது போன்ற விஷயங்கள் நமக்கு தெரித்தால் அதை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தணும். சரிதானே தல!!

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்து பதிவுக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஜெய்லானி கூறியது...

//இங்கு முழு பள்ளிவாசல் கட்டிக் கொடுப்பதே தனி அரபிதான். யாரும் கூட்டு இல்லை//

இங்கு உண்மைதான். இந்தியாவில்?? கூட்டு முயற்சி தானே!!

ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்து பதிவுக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

நாடோடி கூறியது...

//ந‌ல்ல‌ விச‌ய‌ம் தான்.. இருப்ப‌தை கொடுத்து ம‌கொழ்வ‌தே சிற‌ப்பு.//

அருமையா சொல்லிடீங்க நண்பரே!

நாடோடி உங்கள் வருகைக்கும் கருத்து பதிவுக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ சிநேகிதன் அக்பர் கூறியது...

//மிக உன்னதமான காரியத்தை செய்த அவருக்கு இறைவன் நற்கூலியை வழங்குவானாக.இந்த நன்னாளில் இறைவன் நம் அனைவருக்கும் நல்லருளை தருவானாக. ஆமீன்.//

ஆமீன் ஆமீன் யாரப்புல் ஆலமீன். நானும் நம் எல்லோருக்காகவும் துவா இறைஞ்சுகிறேன் அக்பர்.

சிநேகிதன் அக்பர் உங்கள் வருகைக்கும் கருத்து பதிவுக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ ஸாதிகா கூறியது...

//படிக்கவே ரொம்ப சந்தோஷமாக இருந்தது சகோ அப்துல்காதர்.//

வாங்க சகோதரி. இதுமாதிரி நற்காரியங்களில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வல்ல ரஹ்மான் நம் எல்லோருக்கும் நோயற்ற நிம்மதியான நல்வாழ்வை தந்து, ஈமானில் பலத்தையும் கூட்டி, எல்லா காரியங்களிலும் நிறைந்த அவனது பரக்கத்தைப் பெற நல்லருள் புரிவானாகவும். ஆமீன்.

ஸாதிகா உங்கள் வருகைக்கும் கருத்து பதிவுக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ செ.சரவணக்குமார் கூறியது...

//ஒரு நல்ல மனிதரைப்பற்றி சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். பகிர்வுக்கு சுக்ரன்//

உலகில் எல்லா மனிதர்களும் இவர் மாதிரியே இருந்து விட மாட்டர்களா என்ற ஒரு ஆதங்கம் கூட எழுகிறது.

செ.சரவணக்குமார் உங்கள் வருகைக்கும் கருத்து பதிவுக்கும் மீண்டும் சுக்ரன் தல!!

அஹமது இர்ஷாத் சொன்னது…

நல்ல பதிவு..

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ அஹமது இர்ஷாத் கூறியது...

//நல்ல பதிவு..//

நன்றி நண்பரே!

அஹமது இர்ஷாத் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

beer mohamed சொன்னது…

அதிரடி செய்தி
தாங்கள் சொல்வது சரிதான் துபாயிலும் சில நல்ல அரபிகள் இருக்கத்தான் செய்கிறார்கள் ஆனால் இதையே சிலர் தொழிலாக செய்து ஏமாற்றுகின்றனர் இதனால் கிடைக்க கூடிய நல்ல வாய்ப்பு கிடைக்காமல் போகின்றது, ரமதான் வாழ்த்துக்கள்
www.athiradenews.blogspot.com

அப்துல்காதர் சொன்னது…

ரொம்ப நல்ல பதிவக் கொடுத்திருக்கீங்க..

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ beer mohamed கூறியது...

//ஆனால் இதையே சிலர் தொழிலாக செய்து ஏமாற்றுகின்றனர் இதனால் கிடைக்க கூடிய நல்ல வாய்ப்பு கிடைக்காமல் போகின்றது, ரமதான் வாழ்த்துக்கள்//

பீர் முஹம்மது நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே. உங்களுக்கும் எனது ரமதான் வாழ்த்துகள்.

பீர் முஹம்மது உங்களின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@@ அப்துல்காதர் கூறியது...

//ரொம்ப நல்ல பதிவக் கொடுத்திருக்கீங்க..//

வாங்க அப்துல்காதர்.

நமது பெயரைச் சொல்லி நாமே அழைத்துக் கொண்டால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும். அது மாதிரி இருக்கு உங்கள் வருகை.

அப்துல்காதர் உங்களின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!