facebook

சனி, நவம்பர் 06, 2010

மீனாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும்!

(5 நிமிடக் கதை)

மீனாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும்!

அவள் ஸ்கர்ட் உடுத்தி துள்ளி துள்ளி என் கைப் பிடித்து
கூடவே ‘ரைமிங்’கும் சொல்லி கொண்டு ஸ்கூலுக்கு வரும்
போதும், வீட்டுக்கு வந்த பின்பு "அறஞ் செய்ய விரும்பு ;
ஆறுவது சினம்" என்று குறுக்கே கைக் கட்டிக் கொண்டு
ஆடி ஆடி சொல்லும் போதும்..

மீனாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும்!

அவள் பாவாடை உடுத்தி அழகாய் ரெட்டை ஜடைப் போட்டு
சைக்கிள் ஓட்ட கற்று கேட்ட போதும், மருதாணிய கையில்
வைத்து அது சிவக்கலையே என்று கவலைப் பட்டுக்
கொண்டிருந்தவளை, "அதுல கொஞ்சம் கோடாலி தைலத்த
மிக்ஸ் செய்து வை சிவக்கும்" என்று சொன்ன போது
'உய் உய்' என்று குதித்துக் கொண்டு ஓடிய...

மீனாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும்!

அவள் பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஸ்கூல் ஃபஸ்ட்டு
என்பதை யாரிடமும் முதலில் சொல்லாமல், என்னை தேடி
வந்து சொல்லி சந்தோஷப் பட்டு, சாக்லெட்டும் கொடுத்துட்டு
போனாலே அந்த..

மீனாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும்!

ஒவ்வொரு பிள்ளை பெற்ற போதும், மொத மொதல்ல தூக்கி
வந்து சந்தோஷமாய் என்னிடம் காட்டி, “சீரோடும் சிறப்போடும்
வாழட்டும்” என்று நான் சொன்ன பிறகே எடுத்துச் செல்வாளே..

மீனாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும்!

மற்றவர்களை பற்றி குறை சொல்லாமல், அதட்டிப் பேசாமல்,
பூமி அதிராமல் நடந்து போகும் அந்த பதவிசுக்காகவே..

மீனாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும்!

நகை வேணும் புடவை வேணும் என்று கேட்காம இப்படியே
இருக்கியேடி என்று கேட்டாலும், சிரிச்சிகிட்டே போவாளே..

மீனாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும்!

இதோ மலர்ந்த முகத்துடன் மௌனித்து மல்லாந்து கிடக்கிறாளே,
சொந்த பந்த மெல்லாம் சுமங்கலியாய் போய் சேர்ந்துட்டாலே
என்று மஞ்சளும் சந்தனமும் அவள் முகத்தில் தடவி, புதுப்
புடவை சாத்தி அழுகிறார்களே, அந்த...

மீனாவை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்! ஏன் அவள்
என் உயிரோடு ஒன்றிய மனைவி என்பதாலா??


இது எனது 50-வது பதிவு!!


                                              

20 கருத்துகள்:

Philosophy Prabhakaran சொன்னது…

என்னது ஐந்து நிமிடக் கதையா...??? பாஸ்... இது உங்க வாழ்க்கை...

Philosophy Prabhakaran சொன்னது…

பின்தடமறிதல் கருத்துரைகளை

சிவராம்குமார் சொன்னது…

50-வது பதிவு அசத்தலான பதிவு...

RVS சொன்னது…

ஐம்பதில் ஐந்து நிமிடத்தில் சொன்னது அருமை. வாழ்த்துக்கள். ;-)

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

வாழ்த்துக்கள்.

மனோ சாமிநாதன் சொன்னது…

மன உணர்வுகளை அழகாக வெளிப்படுத்திய பதிவு!
ஐம்பதாவது பதிவை மெல்லிய சோகத்துடன் முடித்து விட்டீர்கள்!
இனிய வாழ்த்துக்கள்!

vasu balaji சொன்னது…

வாழ்த்துகள். ஷார்ட் அண்ட் ஸ்வீட்

நிலாமதி சொன்னது…

உங்கள் மீனாவை ( கதையை ) எனக்கும் ரொம்ப் ரொம்ப பிடிச்சிருக்கு ஐம்பதாவது அல்ல, இன்னும் பல மடங்கு பதிந்து புகழ் பெறுக.

ஜெய்லானி சொன்னது…

//என் உயிரோடு ஒன்றிய மனைவி என்பதாலா?? //

!!!!!! ??????? !!!!!!! ??????

Jaleela Kamal சொன்னது…

50பதிவுக்கு வாழ்த்துக்கள்.பாதி ப்படி்்கு்் போ்தெ நினைத்தஏன்.

Menaga Sathia சொன்னது…

congrats!!

மோகன்ஜி சொன்னது…

arai sadhaththin attagaasamaana padhivukku vazhththukkal kadhar bhai!(sorry no tamil fonts..)

ஸாதிகா சொன்னது…

50க்கு வாழ்த்துக்கள்.சிறுகதை மனதினை தொட்டது.

மதுரை சரவணன் சொன்னது…

எனக்கும் மீனாவைப்பிடிக்கும் படித்தப்பின் அப்படி ஒரு உணர்வை ஏற்படுத்தி உள்ளீர்கள். வாழ்த்துக்கள்

Asiya Omar சொன்னது…

50 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.கதை மனதை தொட்டது.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ philosophy prabhakaran கூறியது

// என்னது ஐந்து நிமிடக் கதையா??? பாஸ். இது உங்க வாழ்க்கை.//

சில நேரங்களில் வாழ்க்கை அப்படி தான் ஐந்து நிமிடங்களில் ஃபுல் ஸ்டாப் வைத்து விட்டு போய் விடுகிறது பாஸ் என்ன செய்ய!!.

நன்றி philosophy prabhakaran உங்கள் வருகைக்கும் கருத்து ரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

நன்றி சிவா
நன்றி R V S
நன்றி புவனேஸ்வரி ராமநாதன்
நன்றி மனோ சாமிநாதன்
நன்றி வானம்பாடிகள்
நன்றி நிலாமதி உங்கள் முதல் வருகைக்கு
நன்றி ஜெய்லானி
நன்றி ஜலீலாக்கா
நன்றி Mrs மேனகாசத்யா
நன்றி மோகன்ஜி
நன்றி ஸாதிகா
நன்றி மதுரை சரவணன்
நன்றி asiya omar

உங்கள் எல்லோருடைய வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி! நன்றி!!நன்றி!!!

Unknown சொன்னது…

50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்...

5 நிமிட கதை.. நன்றாக இருந்தது..

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ சிநேகிதி சொன்னது…

// 50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்..5 நிமிட கதை.. நன்றாக இருந்தது//

வாங்க சிநேகிதி!!

மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும்.

Unknown சொன்னது…

50வது பதிவு சூப்பர்.. வாழ்த்துக்கள்..