facebook

புதன், நவம்பர் 10, 2010

போகிற போக்கில்..!!


ஒரு முறை C N அண்ணாதுரையும், கவியரசு கண்ணதாசனும்
இன்னும் சிலரும் உரையாடிக் கொண்டிருக்கும் போது,
அண்ணாவைப் பார்க்க வெளியூரிலிருந்து ஒரு நண்பர்
வந்திருந்தாராம். அவரிடம் அண்ணா "தாங்கள் எங்கிருந்து
வருகிறீர்கள்" என்று கேட்டாராம். அதற்கு அவர் "கரூரிலிருந்து
வருகிறேன்" என்று பதில் சொன்னாராம். உடனே அண்ணா நகைச்சுவையாய் "எல்லோருமே கரூரிலிருந்து தான் வருகிறோம்"
என்று சொன்னாராம். அதைப் பார்த்துக் கொண்டிருந்த கவியரசு,
அப்பொழுது பாட்டெழுதிக் கொண்டிருந்த "காட்டு ரோஜா" படத்தில்,
"எந்த ஊர் என்றவனே.." (PBS பாடிய) பாடலில் அந்த வரியை சேர்த்துக் கொண்டாராம். ("பொதிகை"யில் சுபலட்சுமி சொல்லக் கேட்டு ....)

இது போன்றதொரு அமைப்பில் வந்த பாடல் தான் கவிப் பேரரசு
எழுதிய 'பொற்காலம்' படத்தில் வரும் "தஞ்சாவூரு மண்ணு எடுத்து",
மிகப் பெரிய சூப்பர் டூப்பர் ஹிட் பாடல் அது!!

பிற்காலத்தில் கண்ணதாசன் எழுதிய பாடலை எந்த அளவுக்கு
விரும்புகிறார்கள் என்று தெரிந்து கொள்ள, அது போல் கவிப் பேரரசு 
எழுதி, மிகப் பெரிய பிரபல மடைந்த பாடல் தான் "ஊர தெரிஞ்சுக்
கிட்டேன் உலகம் தெரிஞ்சுக் கிட்டேன்" (படிக்காதவன் - ராஜா சார் -
ரஜினி - மலேசிய வாசுதேவன் கூட்டணி!!)

                                                                     
                                                                    

உண்மைத் தத்துவம்

வாழ்க்கையின் வெற்றியை தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் வைக்கக் கூடாது. -வாலிபக் கவிஞர் 'வாலி'

                                                                        
வாழ்க்கைத் தத்துவம் :

மற்றவர்களுக்கு கொடுக்கணும், அவர்களை கொண்டாடனும்
என்று நினைக்கும் பொழுது தான் மனதில் அளவில்லா
சந்தோசமும், உற்சாகமும் பீறிடுகிறது. அதை வார்த்தைகளால்
வர்ணிக்க முடியாது. அந்த பொழுது தான் நிறைய சம்பாதிக்கணும்
என்ற ஆர்வம் நமக்கு மேலோங்கி வரும். உங்கள் மனம்
நினைப்பதை கைகள் அள்ளிக் கொடுக்கிறது. அந்த நேரத்தில்
நினைத்ததை அந்த கணத்திலேயே செயல் படுத்துங்கள். அதற்கு
தடை போடாதீர்கள். நிச்சயம் நமக்கு இறைவன் தரவேண்டும்
என்று நினைத்ததை ஒரு போதும் தடை போட்டதில்லை!!

                             
கவிதை!!


 
ஒய்வுக்கால வயதிலே..


குருவியாய் திரிந்தோம்

அருவியாய் சிரித்தோம்;

இடியே விழுந்தாலும்

அடிவயிறு குலுங்கச் சிரிப்போம்!



வம்பு என்றால்

கம்புடன் நிற்போம்;

தெம்புடன் இருந்ததால்

திமிருடனே இருப்போம்!



கூட்டமாய் இருந்த நாமோ

ஆளுக்கொரு கூட்டை நோக்கி

பறந்தோம்;

ஆளுக்கொரு கூடு கட்ட

உழைத்தோம்!



நாட்டை விட்டு நகர்ந்த நாமோ

நாதியற்று கிடந்தோம்;

மாற்றாரிடம் சொல்லி சிரிக்கும்போது

உன் கதை மெல்ல திறக்கும்;

உன் புகழ் கொடிக்கட்டி பறக்கும்!



என்றாவது பேசினாலும்

குலுங்கக் குலுங்கச் சிரிப்போம்;

விழுந்து விழுந்து ரசிப்போம்!



பெருநாளுக்கு நாம் எடுத்த

சட்டையோ வண்ணமிழந்து போனது;

நம் கன்னமும் குழி விழுந்து போனது!



உழைத்து அலுத்து ஒய்ந்துவிட்டோம்

ஒய்வுக்கால வயதிலே; நரை விழுந்து

கண்ணில் திரை விழுந்து நீயும் நானும் நாட்டிலே!



இழந்து போன

இன்பத்தை அழுது கொண்டே

வடித்து விட்டோம்;

வடிந்து போன வாலிபத்தை

வளைகுடாவில் தொலைத்துவிட்டோம்!


மெயிலில் கவிதை அனுப்பிய யாசர் அரஃபாத், முஹமது ரியாஸ் நன்றி!!

32 கருத்துகள்:

Prasanna சொன்னது…

சூப்பர் :)

அலைகள் பாலா சொன்னது…

//வளைகுடாவில் தொலைத்துவிட்டோம்//

unmai...

ஸாதிகா சொன்னது…

//இழந்து போன

இன்பத்தை அழுது கொண்டே

வடித்து விட்டோம்;

வடிந்து போன வாலிபத்தை

வளைகுடாவில் தொலைத்துவிட்டோம்!
// என்னத்த சொல்ல...?ஆனாலும் வளைகுடா வாழ் நம்மவர்கள் இப்படியே புலம்பி கவிதை வடிப்பதை விட்டு,அங்கிருந்து பெறக்கூடிய நன்மைகளை கவிதையாக வடித்து இனி வரு ஜெனரேஷன்களுக்கு பூஸ்ட் கொடுக்கலாமே?

Radhakrishnan சொன்னது…

அருமையான விசயங்களுடன் நல்ல கவிதை.

ஜெய்லானி சொன்னது…

:-)) :-((

vasu balaji சொன்னது…

நல்ல மிக்ஸ். கவிதை:(

kavisiva சொன்னது…

நல்ல தகவல்கள் :) மனம் கனக்க வைத்த கவிதை :(

Chitra சொன்னது…

படங்களும் தத்துவங்களும் பதிவும் - நச்!

எல் கே சொன்னது…

கவிதையில் வலி :(

மற்றவை அருமை

சிவராம்குமார் சொன்னது…

நல்ல தொகுப்பு!!! மனதை கனக்கச் செய்யும் கவிதை!!!

Unknown சொன்னது…

கண்களை கலங்க வைத்த கவிதை வரிகள் அருமை..

யாசர் தமிழ்குடும்பம்.காம் ல் கவிதை எழுதுபவரா?

பெயரில்லா சொன்னது…

போகிற போக்குல ஒரு புன்னகையையும் ஒரு புரிதலையும் ஒரு வலியையும் சொல்லிட்டு போயிட்டீங்க நண்பா!

vanathy சொன்னது…

நல்லா இருக்கு. கவிதை வரிகள் ரொம்ப டச்சிங்கா இருக்கு, நாட்டாமை.

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

அருமையான பகிர்வு.. நெகிழவைத்த கவிதை.

ஜெயந்தி சொன்னது…

உணர்வைச் சொல்லும் கவிதை. மேலே உள்ள தகவல்கள் இன்ட்ரஸ்ட்டிங்.

Philosophy Prabhakaran சொன்னது…

சூப்பர் தொகுப்பு... ஆனாலும் கவிதையில் கலங்கடித்து விட்டீர்கள்...

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Prasanna கூறியது...

// சூப்பர் :) //

வாங்க தல!!

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ அலைகள் பாலா கூறியது...

//வளைகுடாவில் தொலைத்துவிட்டோம்//

//unmai...//

வாங்க அலைகள் பாலா!!

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஸாதிகா கூறியது...

//ஆனாலும் வளைகுடா வாழ் நம்மவர்கள் இப்படியே புலம்பி கவிதை வடிப்பதை விட்டு, அங்கிருந்து பெறக்கூடிய நன்மைகளை கவிதையாக வடித்து இனி வரு ஜெனரேஷன்களுக்கு பூஸ்ட் கொடுக்கலாமே?//

உண்மை தான் நீங்கள் சொல்வது..!!

நன்றி ஸாதிகாக்கா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ V.Radhakrishnan கூறியது...

// அருமையான விசயங்களுடன் நல்ல கவிதை.//

வாங்க சார்!!

நன்றி V.Radhakrishnan உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி கூறியது...

// :-)) :-(( //

இப்படி 'சிம்லே' போட்டுட்டு போனா எப்படி? ஏதவாது சொல்லலாம்ல தல!! ரொம்பதான்...!!

நன்றி ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ வானம்பாடிகள் கூறியது...

// நல்ல மிக்ஸ். கவிதை:( //

ரொம்ப நன்றி சார்!!

உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ kavisiva கூறியது...

// நல்ல தகவல்கள் :) மனம் கனக்க வைத்த கவிதை!! //

ரொம்ப நன்றி!!

கவிசிவா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Chitra கூறியது...

// படங்களும் தத்துவங்களும் பதிவும் - நச்! //

ரொம்ப நன்றி!!

சித்ரா மேடம் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ LK கூறியது...

// கவிதையில் வலி :( மற்றவை அருமை!! //

ரொம்ப நன்றி!!

LK உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ சிவா கூறியது...

// நல்ல தொகுப்பு!!! மனதை கனக்கச் செய்யும் கவிதை!!! //

ரொம்ப நன்றி!!

சிவா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ சிநேகிதி கூறியது...

// கண்களை கலங்க வைத்த கவிதை வரிகள் அருமை.. //

ரொம்ப நன்றி!!

// யாசர் தமிழ்குடும்பம்.காம் ல் கவிதை எழுதுபவரா? //

இல்லை!! இவர் தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் என்ற குழுமத்தில் கவிதை எழுதும் யாசர் அரஃபாத்!!

சிநேகிதி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Balaji saravana கூறியது...

// போகிற போக்குல ஒரு புன்னகையையும் ஒரு புரிதலையும் ஒரு வலியையும் சொல்லிட்டு போயிட்டீங்க நண்பா! //

ரொம்ப நன்றி நண்பா!!!

Balaji saravana உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ vanathy கூறியது...

// நல்லா இருக்கு. கவிதை வரிகள் ரொம்ப டச்சிங்கா இருக்கு, நாட்டாமை.//

ரொம்ப நன்றி வான்ஸ்!!

vanathy உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Starjan (ஸ்டார்ஜன்) கூறியது...

// அருமையான பகிர்வு.. நெகிழவைத்த கவிதை.//

ரொம்ப நன்றி ஸ்டார்ஜன் சார்!!

Starjan உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெயந்தி கூறியது...

// உணர்வைச் சொல்லும் கவிதை. மேலே உள்ள தகவல்கள் இன்ட்ரஸ்ட்டிங்.//

ரொம்ப நன்றி சகோதரி!!

ஜெயந்தி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ philosophy prabhakaran கூறியது

// சூப்பர் தொகுப்பு... ஆனாலும் கவிதையில் கலங்கடித்து விட்டீர்கள்...//

ரொம்ப நன்றி பாஸ்.

philosophy prabhakaran உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.