"அருக்காணி"
"அதாரு பேரு"
"அது யாரு பேரும் இல்லீங்க, ஒரு ஊரு பேரு"
"என்னாதூ..!!"
"ஆமாங்க ‘கன்யாகுமரி மாவட்டத்துல’ இருக்கும் ஒரு ஊரோட
பேர் தான் அது"
"இண்ட்ரஸ்ட்டா இருக்கே, மேலே சொல்லுங்க..!!"
"முக்காலி"
"என்னாங்க இது?? மேலே சொல்லுங்கன்னு சொன்னது தப்பா? அதுக்கு ஏங்க திட்டுறீங்க"
“இல்லீங்க இதுவும் ஒரு ஊர் பெயர் தான்”
"நான் ஏதோ நாக்காலி மாதிரி உள்ளதுன்னு நெனச்சேன்"
"ஆமா அப்படியும் முக்காலின்னு உட்காரும் பொருளிருக்கு!!
"சரி மேலே சொல்லுங்க!"
“இந்த ஊர் கேரளா 'பாலக்காடு' மாவட்டத்தில் இருக்கு!!”
(இந்த ஊர் பெயரை கேட்டால் நிறையப் பேருக்கு தெரியல!!
ஆனாலும், நாம விட்டுட்டு போற ரகமில்லையே!!) விபரம்
தெரிந்துகொள்ள ‘சைட்’டுக்கு போனா, அங்கே ஒரு நேஷனல்
பார்க் இருக்கு!!
டூரிஷம் டெவலப்மெண்ட் கண்ட்ரோலில் இருக்கு!!)
இங்கே போய் படிச்சு பாருங்க நிறையதெரிஞ்சுக்கலாம்!!)
http://www.gatewayforindia.com/tourism/silent_valley.htm
சரி வாங்க அடுத்த ஊர பத்தி தெரிஞ்சுக்குவோம்!!
"கல்லெட்டும்கரா"
"இதென்னங்க புது கராவா இருக்கு??"
"ஆமாங்க இதுவும் ஒரு ஊர் பேர் தான், அதாவது கேரளாவுல
‘திருச்சூர்’ மாவட்டத்துல இருக்கு!!"
"அதெப்படி இந்த பேர்..!! அதுக்கும் ஒரு விளக்கம் வச்சிருப்பீங்களே?"
"இருக்கு சொல்றேன் கேட்டுங்க!! இந்த கரையில் நின்னுகிட்டு,
ஒரு கல்லை எடுத்து வீசினால் தத்தி தத்தி 'ட்ட்ட்டட்ட்ட்' என்று தண்ணியில் போகுமே (அதுக்கு பேரென்ன தவளைக்கல் விளையாட்டா??) அது மாதிரி அக்கரையில் போய் விழும் வரை
உள்ள தூரம். அதற்கு பெயர் தான் "கல்லெட்டும்கரா"...
"அப்பாடா எப்படியெல்லாம் பேர் வைக்கிரைங்கய்யா?? நாமும்
தான் இருக்கமே ‘தேவூர்’னு பேர் வச்சுக்கிட்டு"
"பரவாயில்லையே நீங்களும் ஊர் விபரமெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கீங்களே"
"பின்னே உங்களோட பேச ஆரம்பிச்சா ஃபிங்கர் டிப்ஸ்ல புள்ளி விபரமா எடுத்து விடுவீங்க! நாமளும் ஒன்னு ரெண்டு தெரிஞ்சு வச்சிருந்தாதான் கவுரதி!!....ஹி.. ஹி.. தப்பில்லையே"
"ஆமா உண்மை தான்.., அதென்ன ‘தேவூரு’"
"ஆமாங்க அப்படி ஒரு ஊர் பெயர் ‘நாகை மாவட்டத்தில்’ ஒன்றும், ‘சேலம் மாவட்டத்தில்’ ஒன்றும் இருக்கு"
"அப்படியா..வெரி குட்.. வெரி குட்... நல்லாச் சொன்னீங்க.."
"வாரங்கள்!!"
"ஏன் மாதங்கள் இல்லையோ??"
"இல்லீங்க 'வாரங்கள்' (WARANGAL) என்ற ஊர் + மாவட்டம் ‘ஆந்திர பிரதேசத்தில’ இருக்கு சார் அதை சொல்ல வந்தேன்"
"அப்படியா??"
"என்னாதது பேசிக்கிட்டே இருக்கும் போது ஆந்திராவுக்கு
போயிட்டீங்க?"
"ஆமா இங்கேயே கெடந்து உழன்று கிட்டிருக்காமா கொஞ்சம்
வெளி மாநிலத்தையும் தெரிஞ்சு வச்சிருக்கிறது நல்லது தானே!"
"சரி சரி சொல்லுங்க"
"(A.P) ஆந்திர பிரதேசத்தில ஒரு 'நிஜாமாபாத்' இருப்பது போல,
(U.P) உத்தர பிரதேசத்தில ஆஜம்கர்’ (AZAMGARH) மாவட்டத்திலும்
ஒரு 'நிஜாமாபாத்' இருக்கு!!"
"ஓஹோ!!"
"என்ன ஓஹோ!! இன்னொன்னு கவனிங்க. நம்ப 'தேனி
மாவட்டத்துல' ‘கம்பம்’னு ஒரு ஊர் இருக்கு தெரியுமா?"
"ஓ பேஷா தெரியுமே!!"
"அதுமாதிரி ‘ஆந்திர பிரதேசத்தில’ ‘கம்மம்’னு ஒரு ஊர் இருக்கு!!"
"அப்படீன்னா நானும் ஏதாச்சும் ஒன்னு சொல்லணுமே!!"
"சொல்லும்!"
"அடி அக்கா மங்களம்!"
"அடி ஆத்தி அது யாரது?"
"இதுவும் ஊர் பேர் தான்"
"இதென்னா அக்கா தங்கச்சின்னா?"
"இல்ல சார்,.. ரயில் புறப்பட்டு போக ஆரம்பிச்சிடுச்சு. உடனே
தங்கச்சிக்காரி, "அடி-அக்கா- மங்களம் சீக்கிரம் வாடி..!" என்று
குரல் விட்டாளாம். ஓடி வந்த அக்கா ஏறிய பிறகே ரயில்
புறப்பட்டு சென்றது என்றாலும், அதை கேட்டுக் கொண்டிருந்த
ஊர்க் காரர்களில் சிலர், 'இது நல்லா இருக்கேன்னு' அந்த
பெயரைச் சொல்லியே அழைக்க ஆரம்பிச்சுட்டாங்கலாம்.
நாளைடைவில் 'அடியக்கா மங்களம்' என்ற பெயரே நிலைத்து
விட்டது!! "
"அது எங்க இருக்குன்னு சொல்லலியே?"
"திருவாரூர் மாவட்டத்துல!!"
- இன்னும் தெரிந்து கொள்வோம்...!!
27 கருத்துகள்:
எனக்குத் தெரிந்த வகையில் ஊர்களைப் பற்றி நிறைய சொன்னது நீங்களாகத் தானிருக்கும் சார்! இன்னும் எழுதுங்க!!
செம கலெக்சன்.. :)
நல்லதொரு ஆராய்ச்சிப் பதிவு....
///"அடி அக்கா மங்களம்!"
"அடி ஆத்தி அது யாரது?" ////
ஹா ஹா ஹா... இது இது சூப்பர் போங்க.. :-)))
எல்லா ஊர் பெயர்க்காரணம் சொன்னது தூள்.. நல்ல இருக்குங்க.. நன்றி..
very interesting,continue sako.
சூப்பர் சார் , அதவிடுங்க மனுஷனுக்கு பேரு "பாவாடை" , அவனோட அப்பாபெரும் "பாவாடை ". அது அவுங்க குலசாமி பேராம் முதல் பிறக்கும் குழந்தைக்கு அந்த பேருதான் கண்டிப்பா வப்பாங்கலாம்.
வணக்கம் சார்.. நல்லாயிருக்கீங்களா..
எனது அலைபேசி எண்ணில் தொடர்புகொள்ள முடியுமா? 0543189275
இந்த மாதிரி வித்தியாசமான பேர்களோட நிறைய ஊர்கள் இருக்கு. இன்னும் ஊர்களுக்கு இன்சியலெல்லாம் இருக்கும்.
enna oru aarachi....
அடியக்கா மங்களம்.ஊரு பெயரே ந்ல்லா இருக்கே சார்.காரணப்பெயர்கள் வழக்கில் வந்தது இப்படித்தானா?ந்ல்ல தகவல்.நன்றி/
@!@ முஹம்மது ஆரிப் கூறியது...
// எனக்குத் தெரிந்த வகையில் ஊர்களைப் பற்றி நிறைய சொன்னது நீங்களாகத் தானிருக்கும் சார்! இன்னும் எழுதுங்க!! //
வாங்க ஆரீப் சார்!! தெரிந்தவரை மூன்று பதிவு ஊர்களைப் பற்றி எழுதி விட்டேன். இனியும் எழுதுகிறேன் சார்!!
உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!!
@!@ Balaji saravana கூறியது...
// செம கலெக்சன்.. :) //
வாங்க தல!!
நன்றி பாலாஜி சரவணா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ பாரத்... பாரதி... கூறியது...
// அதிரடி கவிதை போட்டி//
நன்றி பாரத்...பாரதி
உங்கள் வருகைக்கும் போட்டி அறிவித்தலுக்கும்!!
@!@ philosophy prabhakaran கூறியது
// நல்லதொரு ஆராய்ச்சிப் பதிவு....//
வாங்க தல!!
நன்றி philosophy prabhakaran உங்கள் வருகைக்கும் கருத்து ரைக்கும்.
@!@ Ananthi கூறியது...
// எல்லா ஊர் பெயர்க்காரணம் சொன்னது தூள்.. நல்ல இருக்குங்க.//
நன்றி சகோதரி!!
ஆனந்தி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ asiya omar கூறியது...
// very interesting, continue sako.//
Thanks medam, insha allah!!
asiya omar உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ மங்குனி அமைச்சர் கூறியது
// சூப்பர் சார், அதவிடுங்க மனுஷனுக்கு பேரு "பாவாடை" , அவனோட அப்பாபெரும்
"பாவாடை ". அது அவுங்க
குலசாமி பேராம் முதல் பிறக்கும் குழந்தைக்கு அந்த பேருதான் கண்டிப்பா வப்பாங்கலாம். //
நீங்கள் சொல்வதும் உண்மை தான்.. நிறைய கிராமங்களில் குல வழக்கப்படி தான்!!
நன்றி மங்குனி அமைச்சர் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ செ.சரவணக்குமார் கூறியது
// வணக்கம் சார்.. நல்லாயிருக்கீங்களா..எனது அலைபேசி எண்ணில் தொடர்புகொள்ள முடியுமா? 0543189275 //
வாங்க சார், நான் நலமாய் இருக்கிறேன். நீங்கள்.. எப்ப ஊரிலிருந்து வந்தீர்கள்??
@!@ ஜெயந்தி கூறியது...
// இந்த மாதிரி வித்தியாசமான பேர்களோட நிறைய ஊர்கள் இருக்கு. இன்னும் ஊர்களுக்கு இன்சியலெல்லாம் இருக்கும்.//
ஆமாம் சகோ. ஊர் பெயர்களில் வித்தியாசமானதாய், ஒரே ஊரின் பெயர் இரண்டு மூன்று மாவட்டங்களில் வருவதையும், ரசிக்கும்படியாய் உள்ளவைகளையும் எழுதலாமேன்னு இந்த முயற்சி...
நன்றி ஜெயந்தி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ வழிப்போக்கன் - யோகேஷ் கூறியது...
// enna oru aarachi....//
வாங்க பாஸ்!!
நன்றி வழிப்போக்கன் - யோகேஷ் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
@!@ விமலன் கூறியது...
// அடியக்கா மங்களம். ஊரு பெயரே ந்ல்லா இருக்கே சார். காரணப் பெயர்கள் வழக்கில் வந்தது இப்படித்தானா? ந்ல்ல தகவல். நன்றி//
நிறைய ஊர் பெயர்கள் இதுமாதிரி இருக்கு. இது மூன்றாவது பதிவு. இன்னும் எழுதுகிறேன். தொடர்ந்து வாங்க..
நன்றி விமலன் சார் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
நல்ல ஆராய்ச்சி!
கன்யாகுமரி மாவட்ட ஊரின் பெயரில் மட்டும் ஒரு சிறு திருத்தம். அது அருக்காணி இல்லை ஆறுகாணி.
பத்து காணி என்ற ஊரும் உண்டு. இயற்கை அழகு கொஞ்சும் கிராமங்கள் இவை.
மங்குனி அமைச்சர் சொன்னது…
சூப்பர் சார் , அதவிடுங்க மனுஷனுக்கு பேரு "பாவாடை" , அவனோட அப்பாபெரும் "பாவாடை ". அது அவுங்க குலசாமி பேராம் முதல் பிறக்கும் குழந்தைக்கு அந்த பேருதான் கண்டிப்பா வப்பாங்கலாம்./////////
ஆமாங்க நானும் கேள்வி பட்டிருக்கேன். அண்ணா.தி.மு.க-வை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் மறைந்த காளிமுத்திவின் தந்தைபெரும் காளிமுத்துதான்
வித்யாசமான ஊர்களின் பெயர்கள், நல்ல தகவல்கள்.
@!@ kavisiva சொன்னது…
// கன்யாகுமரி மாவட்ட ஊரின் பெயரில் மட்டும் ஒரு சிறு திருத்தம். அது அருக்காணி இல்லை ஆறுகாணி. பத்து காணி என்ற ஊரும் உண்டு. இயற்கை அழகு கொஞ்சும் கிராமங்கள் இவை. //
நீங்கள் சொல்வது உண்மைதான் கவிசிவா. நானும் விசாரித்த வகையில் வாய் வார்த்தையாய் பழக்கத்தில் சொல்வது 'அருக்காணி' தான். இங்கு வங்கி பண பரிமாற்றத் திற்கு வரும் கஸ்டமர்களும் அதுவே சொல்கிறார்கள்.
நன்றி உங்கள் வருகைக்கும் குறிப்புகள் தந்தமைக்கும்.
@!@ ரஹீம் கஸாலி கூறியது...
// ஆமாங்க நானும் கேள்வி பட்டிருக்கேன். அண்ணா.தி.மு.க-வை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் மறைந்த காளிமுத்திவின் தந்தைபெரும் காளிமுத்துதான்//
ஆமா, நானும் கேள்விப் பட்டிருக்கேன். ஆனா இப்ப ஊர் பெயர்களை சேகரித்துக் கொண்டிருப்பதால், தாற்காலிகமாக மனிதப் பெயர்களை கண்டுக் கொள்ளவில்லை!
நன்றி ரஹீம் கஸாலி உங்கள் வருகைக்கும் தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டமைக்கும்!!
@!@ vanathy கூறியது...
// வித்யாசமான ஊர்களின் பெயர்கள், நல்ல தகவல்கள்//
நன்றி வானதி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!!
கருத்துரையிடுக