facebook

செவ்வாய், டிசம்பர் 14, 2010

கதவைத் தட்டியது யார்?? (தேவதை- 2)


தேவதை வரும் நேரம் - 2



கதவைத் தட்டியது யார்??

என் பயத்தில் அயனிங் டேபிள் மேல் கை வைக்க, அந்த ஆட்டத்
திலேயே, அதன் மேலிருந்த 'கப் & ஸாசர்' 'சிலிங்' என்ற சப்தத்தோடு
கீழே விழுந்து சிதறியது. அந்த சப்தத்தில் கதவோரம் தெரிந்த நிழல்
சற்றே வாசலை விட்டு அசைவது போலிருந்தது. கதவைப்
பிராண்டும் சப்தமும் நின்று போன மாதிரியிருந்தது.

விருட்டென்று துணிவை வரவழைத்துக் கொண்டு கதவின் வியு ஃபைண்டர் வழியாக ஊடுருவினேன். யாரோ கதவை விட்டு விலகி நடப்பது போல் காதுவழி உணர்வில் யூகிக்க முடிந்தது.

யாரது??

வரண்ட தொண்டையை எச்சில்கூட்டி விழுங்கிக் கொண்டே
கதவை மெல்லமாய், அதேநேரம் வேகம் கூட்டி. சப்தம் வராமல்
திறந்து, தலையை வெளியே நீட்டி எட்டிப் பாத்தேன்.

யாரோ திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டே ஓடுவது தெரிந்தது.
நானும் முழுகதவையும் திறந்துக் கொண்டு வெளியே வந்து,
அவனை பின் தொடர்ந்து ஓட எத்தனித்தேன். அறிமுகமே இல்லாத முகமாய் இருக்கே என்று நான் உணருமுன்னே, அவன் எதையோ
என் மீது வீசி எறிந்தான். நான் சடுதியில் விலகி சுவற்றில்
பரவினேன். அது தரையில் ‘கிளங்’ என்று விழுந்து ஓசையைக்
கிளப்பியது. கொஞ்சம் வெலவெலத்துதான் போனேன். நாம்
யாருக்கும் எந்த கெடுதலும் செய்யலியே. ஏன் இப்படி நடக்கிறது?

ஆணி போன்ற கூறிய பொருளொன்று விழுந்து கிடந்ததை
எடுத்துப் பார்க்கையில், அதில் ரிஜிஸ்டர் லெட்டருக்கு முடுச்சு
போட்டு வைக்கும் tag ஒன்று இறுக்கிக் கட்டப்பட்டிருந்தது. அதில்
"will see u again" என்று கிறுக்கலாய் எழுதியிருந்தது.

மேல் மாடியாய் இருந்ததால் எளிதாய் வெளியே நடப்பது எல்லாத்தையுமே பார்க்கும் படியாய் இருந்தது. ரோட்டின் பக்கம்
ஒரு கார் ஸ்டார்ட் ஆகாமல் அடம் பிடிக்க ‘கிர்ர்றிக் கிர்ர்றிக்’
என்று நீண்ட சப்தம் எழுப்பிக் கொண்டிருந்தது. இதுவாய்
இருக்குமோ?

திரும்பி வந்து கதவின் கைபிடியில் கைவைக்க, லாண்டரி மேன் மாட்டிவிட்டுச் சென்ற எனது பேண்டும் சர்ட்டும், பாலிதீன் பேப்பர்
சுற்றி தரையில் சரசரக்க, ஹேங்காரின் ஹோல்டர் கதவின்
கைப்பிடியில் "சரக் சரக்" என்று உராய்ந்துக் கொண்டிருந்தது. இது
தான் அந்த சப்தமா? இல்லையே!!

எதிர் வீட்டுப் பக்கம் கண்களால் அளந்தேன். அங்கே பாத்ரூம் வெண்டிலேடர் எதிலோ உரசி ஓவராய் சப்தமெழுப்பிக் கொண்டி
ருந்தது. இந்த சப்தம் அதுதானா??

*************

வீடு கட்டி முடிந்து பெயிண்டிங் வேலை நடந்துக் கொண்டி
ருந்தது. "தம்பி அந்த பிரேயர் ரூமை ‘சவுண்ட் புரூஃப்’ செய்து
கொடுத்துடுங்கன்னு” அம்மா சொன்னாங்க. அது ரொம்ப
செலவாகுமே என்று சொல்ல வாயெடுத்து, 'பார்க்கலாமே' என்று சொல்லலாமா, 'சரி' என்று சொல்லலாமா என்று யோசித்துக்
கொண்டு அம்மாவின் முகத்தை நோக்கினேன். சிரிச்சுக்கிட்டே
"நிறைய செலவாகும் தானே"ன்னாங்க!!

அது தான் அம்மா!

அந்த சிரிப்புக்கும், எதையுமே புரிந்துக்கொண்டு ஈஸியா எடுத்துக் கொள்வதற்காகவே அவங்களுக்கு கோடி ரூபாயில் அழகான
மாளிகை கட்டிக் கொடுக்கலாமே என்று நானும் சிரித்துக்
கொண்டே அவர்களைப் பார்க்க, என்னை கிட்டக் கூப்பிட்டு
வாஞ்சையோடு நெற்றியில் முத்தமிட்டாங்க. அம்மான்னா சும்மாவா சொன்னாங்க. அவங்க கேட்டதை என்ன செலவானாலும் செய்து கொடுக்கணும், ‘அவங்களுக்கு தேவை இப்ப அமைதி’ என்று மனதில் நினைத்துக் கொண்டு வெளியே கிளம்பினேன்.

***************

வீடு குடிபுகும் நாளன்று வந்தவர்கள் எல்லாம் கைபிடித்து முகம்
பார்த்து சிரித்து வீட்டைப் பார்த்து இது என்ன? அது அழகா இருக்கே என்றெல்லாம் சொல்லி பாராட்டி, வாழ்த்தி சாப்பிட்டுவிட்டு சென்றபின் நானும் அம்மாவும் இவங்களும் சாப்பிட உட்கார்ந்தோம். பிள்ளைகள் எல்லாம் சாப்பிட்டு விட்டு ரூமில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

தான் பார்த்து பார்த்து இழைத்து இழைத்துக் கட்டிய வீட்டைப் பார்க்க ‘இரண்டு’ அம்மாக்களுக்கும் பரம சந்தோஷம். உலகத்தில் இதைவிட மனுஷனுக்கு வேறென்னய்யா வேண்டும். சந்தோஷத்தில் சந்தோஷம் பெரிய சந்தோஷம் சொந்தங்களையும் பந்தங்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்தி, கூட இருந்து பார்த்து மகிழ்வது தான்.

சாப்பாடும் பேச்சுமாய் போய்க் கொண்டிருந்தபோது, என் கண்கள்
வாசல் பக்கமே மேய்ந்துக் கொண்டிருந்தது. அங்கே யாரோ
ஸ்க்ரீனை விளக்கி வீட்டுக்குள் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

“எல்லோரும் தான் சாப்பிட்டு விட்டுப் போயிட்டாங்களே, பிறகு
யாரது?” அம்மாவிடம் கேட்டேன். “யாரும் சாப்பாடுக் கேட்டு
வந்திருப்பாங்க எடுத்துப் போடச் சொல்லுங்க” ன்னாங்க.

உள்ளே குரல் கொடுத்து எடுத்துக் கொடுக்க சொல்லி அவர்கள்
கொண்டு சென்ற போது, அங்கே யாருமில்லை என்று திரும்ப வந்து சொன்னார்கள். நானும் பார்த்தேன் யாருமில்லை. சிறிது நேரம் சென்று அந்த முகம் திரும்பவும் தெரிந்தது.

எனக்கு மட்டும் தான் தெரிகிறதா? இல்லை எல்லோருக்குமா?
அந்த முகத்தை திரும்பி அவர்களையும் பார்க்கச் சொன்னேன்.
ஆமாம் தெரிகிறது என்றார்கள்.

சடேரென்று எழுந்தபோது கண்கள் அதன் கால்கள் பக்கம்
சென்றது.!! அந்த உருவம் பின்னோக்கி நகர்வது போலுணர்ந்தேன்!!


                                                                       - தொடரும்

 

24 கருத்துகள்:

Chitra சொன்னது…

நல்ல திகில் கதை.

nis சொன்னது…

1 வதை போல நல்ல திகில்

Asiya Omar சொன்னது…

நல்ல கிளப்புறீங்க திகிலை.

ஆமினா சொன்னது…

என்னங்க ரொம்ப பயமுடுத்துறீங்க???

//சந்தோஷத்தில் சந்தோஷம் பெரிய சந்தோஷம் சொந்தங்களையும் பந்தங்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்தி, கூட இருந்து பார்த்து மகிழ்வது தான்.///

ரசிச்சு படிச்ச வரிகள்

ஹுஸைனம்மா சொன்னது…

இது முந்தைய பகுதியின் தொடர்ச்சிதானே? வேறு கதையோன்னு ஒரு சந்தேகம். அப்ப ஊரில் நடந்ததா இது?

வீடு கட்டி முடிந்ததும் ஒரு தனி சந்ந்தோஷம்தான் வரும். அது உங்கள் குடும்பத்துக்கும் கிடைத்தது இறைவனருள். வாழ்த்துகள்.

அந்த ஃப்ளைட் டேக்-ஆஃப் படம் நல்லாருக்குங்க காதர்.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

//சந்தோஷத்தில் சந்தோஷம் பெரிய சந்தோஷம் சொந்தங்களையும் பந்தங்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்தி, கூட இருந்து பார்த்து மகிழ்வது தான்.
//

சூப்பர்.

ஆமா கதைக்கு நடுவிலே அம்மா பற்றி?

சுவாரஸ்யமா இருக்கு தொடருங்கள்.

தூயவனின் அடிமை சொன்னது…

உம் பயத்தின் விழிம்பில் இருக்கிறீர்கள் .அருமையாக உள்ளது.

Mohamed Faaique சொன்னது…

kalakkurenga....

Unknown சொன்னது…

ஆஹா!! பயங்கர திகிலாப் போகுதே..

சூப்பர்..

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

ரொம்ப சஸ்பென்சான திகில் கதை. படிக்க படிக்க ரொம்ப இன்ரஸ்டா இருக்கு.. அடுத்தது எப்போ?..

மனோ சாமிநாதன் சொன்னது…

சஸ்பென்ஸ் நன்றாகவே இருக்கிற‌து!
இடையில் தாய்மையைப்பற்றி எழுதியிருப்பது கதைக்கு அழகூட்டுகிறது!
தொடருங்கள்!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Chitra கூறியது...

// நல்ல திகில் கதை.//

வாங்க சித்ரம்!! முழுசா படிச்சீங்களா?? ஏன்னா பஞ்ச் டயலாக் ஏதும் சொல்லலியே!! :))))

நன்றி சித்ரா உங்கள் வருகைக்கும் என்னை எழுத உற்சாகமூட்டுவதற்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

!~! nis கூறியது...

//1 வதை போல நல்ல திகில்//

நீங்கள்லாம் பயந்துடக் கூடாதேன்னு தான் பயத்தைக் குறைச்சி ருக்கேன் :))

நன்றி nis உங்கள் வருகைக்கும் என்னை எழுத உற்சாகமூட்டுவதற்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ asiya omar கூறியது...

// நல்ல கிளப்புறீங்க திகிலை//

திகில் மாதிரி இருக்கும் ஆனால் அது திகிலல்ல மேடம் :))))))

நன்றி asiya omar உங்கள் வருகைக்கும் என்னை எழுத உற்சாகமூட்டுவதற்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஆமினா கூறியது...

// என்னங்க ரொம்ப பயமுடுத்துறீங்க???//

இதெல்லாம் ஒரு பயமா?? இன்னுமிருக்கு!!
நன்றி ஆமினா நீங்கள் ரசித்த வரிகளுக்கும்....

உங்கள் வருகைக்கும் என்னை எழுத உற்சாகமூட்டுவதற்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஹுஸைனம்மா கூறியது...

// இது முந்தைய பகுதியின் தொடர்ச்சிதானே? வேறு கதையோ ன்னு ஒரு சந்தேகம். அப்ப ஊரில் நடந்ததா இது? //

ஆமா...!!

//வீடு கட்டி முடிந்ததும் ஒரு தனி சந்ந்தோஷம்தான் வரும். அது உங்கள் குடும்பத்துக்கும் கிடைத்தது இறைவனருள். வாழ்த்துகள்.//

நன்றி......!!

//அந்த ஃப்ளைட் டேக்-ஆஃப் படம் நல்லாருக்குங்க காதர்.//

நன்றி ஹுஸைனம்மா நீங்கள் ரசித்த காட்சிகளுக்கும்....

உங்கள் வருகைக்கும் என்னை எழுத உற்சாகமூட்டுவதற்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ சிநேகிதன் அக்பர் கூறியது...

//சந்தோஷத்தில் சந்தோஷம் பெரிய சந்தோஷம் சொந்தங்களையும் பந்தங்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்தி, கூட இருந்து பார்த்து மகிழ்வது தான்.
//

சூப்பர்.

ஆமா பாஸ், நானும் அப்படியே வாழ்ந்து விட்டேன். இன்னமும்..!!

// சுவாரஸ்யமா இருக்கு தொடருங்கள்.//

நன்றி அக்பர் உங்கள் வருகைக்கும் என்னை எழுத உற்சாகமூட்டுவதற்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ சிநேகிதன் அக்பர் கூறியது...

// ஆமா கதைக்கு நடுவிலே அம்மா பற்றி?//

ஆமாங்க தல உம்மா நெனப்பு வந்துடுச்சு.. அவங்க இந்த மாதத்தின் ஒரு நாளில் தான் எங்கள விட்டு போய்ட்டாங்க...!!! அதன் தாக்கம் நெஞ்சில்-வலி- அதான்!! பல நேரங்களில் அவங்க நெனப்பு வந்தாலும், சில நேரங்களில் அவங்களைப் பத்தி இப்படி எழுதி ஆற்றிக் கொள்ள வேண்டி யிருக்கு...வேறென்ன சொல்ல!!

நன்றி அக்பர் உங்கள் வருகைக்கும் என்னை எழுத உற்சாகமூட்டுவதற்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ இளம் தூயவன் சொன்னது…

//உம் பயத்தின் விழிம்பில் இருக்கிறீர்கள். அருமையாக உள்ளது./

ஆமா பாஸ் நீங்க என் பக்கத்தில் இருந்தும் கூட பயமாத்தான் இருக்கு :-))

நன்றி இளம் தூயவன் உங்கள் வருகைக்கும் என்னை எழுத உற்சாகமூட்டுவதற்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Mohamed Faaique கூறியது...

// kalakkurenga....//

வாங்க பாஸ் :-))

நன்றி Mohamed Faaique உங்கள் வருகைக்கும் என்னை எழுத உற்சாகமூட்டுவதற்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ பதிவுலகில் பாபு கூறியது...

// ஆஹா!! பயங்கர திகிலாப் போகுதே.. சூப்பர்..//

வாங்க பாஸ் :-))

நன்றி பதிவுலகில் பாபு உங்கள் வருகைக்கும் என்னை எழுத உற்சாகமூட்டுவதற்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Starjan (ஸ்டார்ஜன்) கூறியது.

// ரொம்ப சஸ்பென்சான திகில் கதை. படிக்க படிக்க ரொம்ப இன்ரஸ்டா இருக்கு.. அடுத்தது எப்போ?..//

தொடர்ந்து வந்துக்கிட்டே இருக்கு பாஸ்!!

நன்றி Starjan (ஸ்டார்ஜன்) உங்கள் வருகைக்கும் என்னை எழுத உற்சாகமூட்டுவதற்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ மனோ சாமிநாதன் கூறியது...

// சஸ்பென்ஸ் நன்றாகவே இருக்கிற‌து! இடையில் தாய்மை யைப்பற்றி எழுதியிருப்பது கதைக்கு அழகூட்டுகிறது! தொடருங்கள்!//

ரொம்ப மகிழ்ச்சி சகோதரி. அடிக்கடிவாங்க!!

நன்றி மனோ சாமிநாதன் உங்கள் வருகைக்கும் என்னை எழுத உற்சாகமூட்டுவதற்கும்.

Jaleela Kamal சொன்னது…

பயங்கர திகிலா போடுரீங்க.

இந்த பேப்பர் சர் சருன்னு, தண்ணீர் சொட்டும் சத்தம் டக் டக்,
துணி காற்றில் ஆடுவது, இதெல்லாம் பார்த்தா எனக்கு ரொம்ப பயம் தூக்கமே வராது,
அதல்லாம் தாண்டி இப்ப தைரியாம இருந்தா
இப்படி பயம் காட்டி விடுரிங்க

படிக்க படிக்க முன்பு பயந்தது ஞாபகம் வருது,
அம்மான்னா சும்மாவா? யாரு அங்கு மறைந்திருந்தது?