facebook

வெள்ளி, டிசம்பர் 03, 2010

வாழ்வை ரசிக்கலாம் வாங்க!!





வாழ்வை ரசிக்கலாம் வாங்க!!


நாமிருவர் நமக்கிருவர் போய், நாமிருவர் நமக்கொருவர்
போய், நாமிருவர் நமக்கேன் ... என்று காலம் போய்க்
கொண்டிருந்து விட்டு, இப்ப நம்மைக் காக்க பிள்ளைகள்
வேண்டும் என்றெண்ணி 'விழித்துக்' கொண்டு..... நாம் எங்கோ…
போய் விட்டோம்.  நான் பாப்புலேசனை சொன்னேங்க!!

இப்ப இங்கே நம்மிடம் நம்மை அறியாமலேயே ஒரு
ஃபேஷன் ஒன்று தொற்றிக் கொண்டிருக்கிறது. அது
தெரியுமா நமக்கு?? அதென்ன? வாங்க பார்ப்போம்.

“வீட்டில் இது சமைத்தால் என் பையனுக்குப் பிடிக்காது ;
அது சமைத்தால் என் பெண்ணுக்குப் பிடிக்காது ; அவரவர்
களுக்கென்று தனித் தனியாய் கறி சமைக்கணும். இந்த
ரெண்டுகளும் சாப்பிடும் அயிட்டம் ‘அவருக்கு’ப் பிடிக்காது.
அவருக்கென்று ஒரு தனிக்கறி சமைக்கணும். இவர்கள்
சாப்பிடும் எதுவுமே எனக்குப் பிடிக்காது. எனக்கென்று
தனியா சமைத்துக் கொள்வேன்” என்று தாய்மார்கள்
சொல்வதைக் கேட்க நேரிடுகிறது.

உண்மையாதான் சொல்றாங்களா? ஃபேஷனுக்காக
சொல்றாங்களா? இல்ல பெருமைக்குச் சொல்றாங்களா?
நாமும் கொஞ்சம் தெரிந்துக் கொள்ளனும்ல!!

இதை நாம் கவனித்தோமா?? கண்டுக் கொண்டோமா?
இல்லையே!! நாம் உண்டு நம் வேலை உண்டு ; அதையும்
மீறி நமது ப்ளாக் ஸ்பாட் உண்டு (ஹி..ஹி..) என்றிருக்கிறோம்.

என்ன இது நாமென்ன நோயாளிகளா? தனித்தனியாய்
உணவு சமைத்துக் கொள்ள? இல்லை பிள்ளைகளை
வளர்ந்த + வளர்த்த விதம் சரியில்லையா.

எல்லோருக்கும் சேர்த்து ஒருவகைக் கறி, பின்னர்
கூட்டு, மோர் அப்பளம் என்றாலும், அல்லது கோழிக்
கறியோ + கோழி ஃபிரையோ ஆனாலும் வருமானத்தில்
எங்கோ துண்டு விழுந்து, பட்ஜெட் எகிறி, குடும்ப
வருமானத்துக்கு மேல் கடன் வாங்கி, நம்மை ஒரு
ஆட்டு ஆட்டி விடுகிறது. இதில் நாலு பேருக்கு நாலு
வகையான கறி என்றால் ??

உலகில் எத்தனையோ குழந்தைகளுக்கு சரியான உணவுக்
கூட கிடைக்காமல் அல்லாடிகிட்டிருப்பதாக யுனெஸ்கோ
கணக்கு சொல்கிறது.

பையனும் பொண்ணும் படிக்கப் போகுது என்று பாசக்
கயிற்றைப் போட்டு கட்டிவைக்கும் நாம், நாளை இந்தப்
பிள்ளைகள் தான் குடும்பத்தை நிர்வகிக்கப் போகிறது
என்பதை ஏனோ சிந்திக்கத் தவறி விடுகின்றோம்.
நாமிருக்கிறவரைப் பார்த்துக் கொள்ளலாம் என்ற
மனோபாவம் வேரூன்றிப் போய் விட்டது தான்
காரணமா இல்லை வேறு ஏதேனுமா?

குழந்தைகளின் வளர்ச்சியில் அதற்கு ஊட்டமாய் உணவு
தந்து, சுகாதரமாய் வைத்து நோய் நொடி இல்லாமல்
வளர்க்க ஆசைப் படும் நாம், அது வளர்ந்து கொண்டே
போகும் போது எங்கோ கவனிக்கத் தவறி விடுகிறோம். ஒவ்வொருவருக்கும்  வேறு வேறு டேஸ்ட் என்று
வளர்க்காமல், அடிப்படையில் குடும்ப சூழ் நிலைகளை
புரியவைக்கணும். வருமானம் இவ்வளவு என்றும் அதற்கு
தகுந்தாற்போல் செலவு செய்யணும் என்றும் சொல்வதோடு மட்டுமில்லாமல்,

கையில் பையையும், லிஸ்டையும் போட்டு எடுத்துக் கொண்டு,
கூடவே ரங்ஸ்கள் தன் பையனையும் அழைத்துக் கொண்டுப்
போய் இதை இதை அவசியமென்றால் சரி ; அனாவசியமாய்
வாங்கினால் நம் குடும்பச் செலவுக்கு கட்டுப்படியாகாது என்ற அறிவையும், பொருட்களின் தரத்தையும், நம் வரவுக்குத்
தகுந்தாற்போல் பார்த்து பார்த்து வாங்க கற்றுக் கொடுக்கணும்.

பின்னாளில் அவர்களே யோசித்து முடிவெடுத்து, அவர்கள்
வாயாலேயே சொல்லும்படி தயார்ப் படுத்த வேண்டும். அப்ப
தெரியும் டேஸ்ட் என்பதற்காக வேண்டாததை எப்படியெல்லாம் தவிர்க்கணும் என்று! இதை நம்மில் எத்தனைப் பேர் செய்கின்றோம்.

அதற்கு இது மேட்ச் இதற்கு அது மேட்ச் என்று, சுடி, புடவை,
மருதாணி கலர்களை மட்டுமே செலெக்ட் செய்ய பெண்
பிள்ளைகளுக்கு அறிவு புகட்டி, படிக்கப் போகிறாளே,
டயர்டாகி வீட்டுக்கு வருகிறார்களே என்று (இரக்கப்பட்டு)
அடுப்படிப் பக்கம் போக விடாமல் செல்லம் கொடுத்து
வைக்காதீர்கள்.

கிச்சன் உங்களுக்கு மட்டும் சொந்தமில்லை நாளை
அவளும் அதனுள் ராஜாங்கம் நடத்தனும் என்பதை
மனதில் கொள்ளுங்கள். கிச்சனில் நின்று அம்மா எப்படி
அவதிப்படுகிறாள் என்பதை பெண் பிள்ளைகள் உணர்ந்தாலே,
இருப்பதைக் கொண்டு, தனித்தனியாய் டேஸ்ட்டுக்கு தான்
சமைத்து சாப்பிடனும் என்ற மனப்பான்மை தன்னால்
குறைய வரும்.

இப்பொழுதெல்லாம் குடும்பத்தில் பேச்சுக்களை பகிர்ந்துக்
கொள்ளும் சூழல் குரைந்து கொண்டே போய் ஒருவருக்
கொருவர் பேசிக் கொள்ளும் அளவே மணிரத்னத்தின் பட
வசனம் போலாகிவிட்டது. உட்கார்ந்து பேசி அவரவர்
மனநிலையை தெளிவுப் படுத்திக் கொள்வது பலவழிகளில்
குடும்பத்தில் மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

பெற்றோர்கள் மனதில் இருத்திக் கொள்ள வேண்டிய
விஷயம் என்னவென்றால் மற்றவர்கள் முன்னிலையில்
நம் பிள்ளைகளை நாமே 'வாடா-போடி' என்று அழைக்காமல், பிள்ளைகளிடம் தாழ்வு மனப்பான்மை உருவாகாமல் இருக்க,
'வாங்க போங்க' என்று அழைக்கப் பழகி கொள்ளவேண்டும்.

'நாங்கள் அன்பாய் அப்படிதான் 'வா-போ' என்பதெல்லாம்
மற்றவர்கள் முன்னாடி வேண்டாமே. (எங்கள் வீட்டில்
பையனை 'டியர்' என்றும், பெண்ணை 'டார்லிங்' என்றும்
அழைத்துக் கொள்வதாக என் நண்பர் ஒருவர் போகிறப்
போக்கில் சொன்னார். இது கூட நல்லாத்தானே இருக்கு!!)

டிஸ்கி : அங்கீகாரம் என்பதும் அந்நியோன்யம் என்பதும்
வேறு வேறு. இப்ப நீங்கள் பிள்ளைகளுக்குக் கொடுப்பதை,
பின்னாளில்.. அரவணைப்பாய்ப் பெறுவீர்கள் என்பது திண்ணம்.


30 கருத்துகள்:

முஹம்மது ஆரிப் சொன்னது…

வாழ்க்கையை ரசித்து ரசித்து எழுதிய விதம் அருமை!!

முஹம்மது ஆரிப் சொன்னது…

வாழ்க்கையை ரசித்து ரசித்து எழுதிய விதம் அருமை!!

ராஜவம்சம் சொன்னது…

அலசல் அருமை
தேவையானப்பதிவு
வாழ்த்துக்கள்.

Asiya Omar சொன்னது…

எங்க வீட்டில் ஒரு படி மேலே போய் அவர்கள் தேவைக்கு அவரவர் ரெடி செய்து சாப்பிடுறாங்க பிள்ளைங்க,நாம இது மாதிரி எனக்கும் செய்து தா,ரெசிபி சீக்ரெட்டை சொல்லு,ப்ளாக்கில் போடனும்னு கேட்க வேண்டியதாய் இருக்கு.எப்படியோ அவங்களேல்லாம் பிழைச்சுப்பாங்க சகோ.

Chitra சொன்னது…

கருத்துக்கள் அருமையாக இருக்கின்றன. நல்ல பதிவுங்க.

ஆமினா சொன்னது…

எங்க வீட்டுலையும் இந்த மாதிரி தனிதனியா சமைக்க ஆர்டர் வர பாத்துச்சு. நான் தான் சுதாரிச்சுட்டேன் :))

தேவையான பதிவு...
அருமை

vanathy சொன்னது…

சரியா சொன்னீங்க, தல. என் பிள்ளைகளை நான் பள்ளி லீவில் சின்ன சின்ன வேலைகள் செய்ய சொல்வேன். பீன்ஸ், கறிவேப்பிலை, காய்கறி வகைகள் கழுவுவது, கிளீன் செய்வது, வீட்டினை சுத்தம் செய்வது இப்படி ஏதாவது வேலைகள் பழக்கி வைத்திருக்கிறேன்.

சமையலும் எல்லோருக்கும் பொதுதான். ஒருவருக்கு ஒரு கறி என்ற சட்டம் வீட்டில் இல்லை. எது சமைக்கிறேனோ அது தான் சாப்பாடு. என் பிள்ளைகளும் பழகி விட்டார்கள். உலகில் உணவே இல்லாமல் கஷ்டப்படும் குழந்தைகள் பற்றி நிறைய சொல்வேன்.

venkat சொன்னது…

நல்ல பதிவுங்க

ஜெயந்தி சொன்னது…

பிள்ளைகளை கஷ்டம் தெரிந்து வளர்க்க வேண்டும். நீங்கள் சொல்வதுபோல் பட்ஜெட்டை அவர்களே போட வைக்க வேண்டும். எல்லாமே சரியா சொல்லியிருக்கீங்க.

பெயரில்லா சொன்னது…

நல்லா சொல்லியிருக்க நண்பா!

சிவராம்குமார் சொன்னது…

டிஸ்கி செம.... சத்தியமான உண்மை!

Unknown சொன்னது…

நல்ல பதிவுங்க.. டிஸ்கி நச்சுன்னு இருக்கு..

சிநேகிதன் அக்பர் சொன்னது…

இப்போதைய சூழலுக்கேற்ற சரியான பதிவு.

முன்பெல்லாம் வீட்டில் பலகாரம் செய்தது போய் இப்போது கடைகளில் வாங்கி சாப்பிடுகிற நிலமை. யாருக்கும் நேரம் இல்லையாம். :)

ஹுஸைனம்மா சொன்னது…

மிக வருத்தமான விஷயம் காதர் இது. பல வீடுகளில் இது ஒரு ஃபேஷன் போல ஆகிவிட்டது. இம்மாதிரி “தனிச்சமையல்” விட்டுக் கொடுத்து வாழும் மனப்பாங்கைக் கெடுக்கும். வேண்டுமெனில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருக்கு விருப்பமான சமையல் என்று செய்யலாமே தவிர, ஒரே நாளில் என்பது குடும்ப ஒற்றுமைக்கு மட்டுமல்ல, பொருளாதாரத்துக்கும் ஏற்றதல்ல.

வலையுகம் சொன்னது…

சகோ அப்துல் காதர்

//இப்பொழுதெல்லாம் குடும்பத்தில் பேச்சுக்களை பகிர்ந்துகொள்ளும் சூழல் குரைந்து கொண்டே போய் ஒருவருக்
கொருவர் பேசிக் கொள்ளும் அளவே மணிரத்னத்தின் பட
வசனம் போலாகிவிட்டது. உட்கார்ந்து பேசி அவரவர்
மனநிலையை தெளிவுப் படுத்திக் கொள்வது பலவழிகளில்
குடும்பத்தில் மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.///
கூட்டு ஆலோசனை குடும்பத்தில் பொறுப்புகளை பகிர்ந்துக் கொள்வது இதேல்லாம் இஸ்லாம் காட்டி தந்த வழிமுறை

அறிவிப்பாளர்:இப்னு உமர் (ரலி)
அண்ணல் நபி(ஸல்)அவர்கள் நவின்றார்கள்:
“உங்களில் ஒவ்வொருவரும் பொருப்பாளரும்,பாதுகாவலரும் ஆவார்.உங்களில் ஒவ்வொருவரும் அவரது கண்காணிப்பின் பொருப்பின் கீழ் உள்ளவர்களைப் பற்றி கேட்கப்படுவார்.கணவன் தன் வீட்டாருக்குப் பொருப்பாளியாவன்.பெண்,தன் கனவனின் வீடு,அவனுடைய குழந்தகளுக்குப் பொறுப்பாளியாவள்.உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே! உங்களிடம் ஒவ்வொருவரிடமும் அவர்களின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டவர்களைப் பற்றிக் கேட்கப்படும்(புகாரி, முஸ்லிம்)

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ முஹம்மது ஆரிப் கூறியது...

// வாழ்க்கையை ரசித்து ரசித்து எழுதிய விதம் அருமை!! //

அதை நீங்க ரசித்து சொன்ன விதம் அருமை பாஸ் ஹி..ஹி..

நன்றி முஹம்மது ஆரிப் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ராஜவம்சம் கூறியது...

// அலசல் அருமை. தேவையானப் பதிவு. வாழ்த்துக்கள்.//

வாங்க நண்பரே நல்லா இருக்கீங்களா??

நன்றி ராஜவம்சம் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ asiya omar கூறியது...

// எங்க வீட்டில் ஒரு படி மேலே போய் அவர்கள் தேவைக்கு அவரவர் ரெடி செய்து சாப்பிடுறாங்க பிள்ளைங்க,நாம இது மாதிரி எனக்கும் செய்து தா, ரெசிபி சீக்ரெட்டை சொல்லு, ப்ளாக்கில் போடனும்னு கேட்க வேண்டியதாய் இருக்கு. எப்படியோ அவங்க ளேல்லாம் பிழைச்சுப்பாங்க சகோ. //

ஆஹா இது இறைவன் கொடுத்த வரம். யு ஆர் வெரி லக்கி மேடம்!!

நன்றி asiya omar உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Chitra கூறியது...

// கருத்துக்கள் அருமையாக இருக்கின்றன. நல்ல பதிவுங்க.//

வாங்க சித்ரா மேடம்!!

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஆமினா கூறியது...

// எங்க வீட்டுலையும் இந்த மாதிரி தனிதனியா சமைக்க ஆர்டர் வர பாத்துச்சு. நான் தான் சுதாரிச்சுட்டேன் :))

ஆஹா நீங்க ரொம்ப விவரமானவங்கத் தான் போல!! :))))))

நன்றி ஆமினா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ வானதி கூறியது...

// சமையலும் எல்லோருக்கும் பொதுதான். ஒருவருக்கு ஒரு கறி என்ற சட்டம் வீட்டில் இல்லை. எது சமைக்கிறேனோ அது தான் சாப்பாடு. என் பிள்ளைகளும் பழகி விட்டார்கள்.//

நீங்கள் சொல்வது + செய்வது தான் சரி வான்ஸ்.

// உலகில் உணவே இல்லாமல் கஷ்டப்படும் குழந்தைகள் பற்றி நிறைய சொல்வேன்.//


ஆமா அதைப் பற்றியும் ஒரு பதிவு ப்ளீஸ்!! அவசியம் போடணும்.

நன்றி வானதி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ venkat கூறியது...

// நல்ல பதிவுங்க //

வாங்க பாஸ்!! இப்பல்லாம் பதிவே எழுதுறதில்லையா??

நன்றி venkat உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெயந்தி கூறியது...

// பிள்ளைகளை கஷ்டம் தெரிந்து வளர்க்க வேண்டும். நீங்கள் சொல்வது போல் பட்ஜெட்டை அவர்களே போட வைக்க வேண்டும். எல்லாமே சரியா சொல்லி யிருக்கீங்க.//

ஆமா,,இது எல்லா விதத்திலும் அவர்களுக்கு பிளஸ். அப்புறம் நமக்கு பாரம் குறையும் தானே!!

நன்றி ஜெயந்தி உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Balaji saravana கூறியது...

//நல்லா சொல்லியிருக்க நண்பா!//

ரொம்ப நன்றி நண்பா!!

Balaji saravana உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ சிவா என்கிற சிவராம்குமார் கூறியது...

//டிஸ்கி செம.... சத்தியமான உண்மை!//

வாங்க நண்பா நன்றி!!

சிவா என்கிற சிவராம்குமார் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ பதிவுலகில் பாபு கூறியது...

// நல்ல பதிவுங்க.. டிஸ்கி நச்சுன்னு இருக்கு..//

வாங்க தல!

நன்றி பதிவுலகில் பாபு உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ சிநேகிதன் அக்பர் கூறியது...

// முன்பெல்லாம் வீட்டில் பலகாரம் செய்தது போய் இப்போது கடைகளில் வாங்கி சாப்பிடுகிற நிலமை. யாருக்கும் நேரம் இல்லையாம். :) //

ஆமா தல உங்க ஆதங்கம் புரியுது. வீட்டில செஞ்சா அள்ளி சாப்பி டலாம். கடையில வாங்கினா கிள்ளில சாப்பிட வேண்டியிருக்கு ஹி..ஹி.. பாஸ் நல்ல சொன்னீங்க!!

நன்றி சிநேகிதன் அக்பர் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஹுஸைனம்மா கூறியது...

// ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வருக்கு விருப்பமான சமையல் என்று செய்யலாமே தவிர, ஒரே நாளில் என்பது குடும்ப ஒற்றுமைக்கு மட்டுமல்ல, பொருளாதாரத்துக்கும் ஏற்றதல்ல //

நடுத்தரக் குடும்பத்துக்கு அது தான் ஏற்ற அழகு!! ஆனா தொடர் பார்த்துக் கொண்டு சாப்பிடுவதால், பேசி மகிழ்ந்து, மனதில் உள்ளதைப் பகிர்ந்துக் கொண்டு உண்ணும் காலம் மலையேறி விட்டது. இதனால் சொல்ல முடியாத நிறைய விளைவுகள். யார் புரிந்துக் கொள்கிறார்கள்.

நன்றி ஹுஸைனம்மா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஹைதர் அலி கூறியது...

// கூட்டு ஆலோசனை குடும்பத்தில் பொறுப்புகளை பகிர்ந்துக் கொள்வது இதேல்லாம் இஸ்லாம் காட்டி தந்த வழிமுறை //

ஆமா உண்மை தான். ஆனா எல்லா மதமும் நல்ல வழியை தான் போதிக்கின்றன. அதை எடுத்தாளும் விதத்திலும், புரிதலிலுமே வேறு படுகிறார்கள்.

நன்றி ஹைதர் அலி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

நிலவு சொன்னது…

ப‌யணம் - பொதுபுத்தியிலுள்ள முசுலீம் மீதான வன்மம்

http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_27.html