facebook

புதன், ஜனவரி 05, 2011

நண்பரைக் கண்டேன்..!!


நண்பரைக் கண்டேன்..!!

என் நண்பரில் ஒருவருக்கு உடல் நலமில்லை என்று தகவல்
வந்து போய் பார்க்க நேரமில்லை. எனக்கு சில நேரங்களில் மனதில் நோயாளி களை நாம் போய் டிஸ்டர்ப் செய்யக் கூடாது என்று
தோன்றும். ஆனால் நாம் போய்  பார்த்தால்  அவர்களுக்கு  மனதில்    ஆறுதலாக    இருக்கும்  என்று பெரியவர்கள்     சொன்னதை  மனதில்   கொண்டேன்.   இந்த     வாரம்   தான் அதற்குரிய  நேரம் கிடைத்தது.
கொஞ்சம் ஆப்பிள், கொஞ்சம் இதர பழங்கள், ஹார்லிக்ஸ் எல்லாம்
வாங்கி போட்டுக் கொண்டு போன போது வீட்டில் கச்சா முச்சா
வென்று அப்படி ஒரு கூட்டம்.

அப்படி உடம்புக்கு என்ன?

வயிற்று வலியாம்!

சரி   அதிலென்ன   பிரச்சினை?  வயிற்று   வலி   என்பது 
எல்லோருக்கும் வரக்  கூடிய   பொதுவான   பிரச்சினைதானே? 
இவருக்கு  மட்டும்   என்ன புதுசா என்று நான் நினைத்தது
அவருக்கு கேட்டிருக்க வேண்டும்.

அதை   டெலிபதி   என்பார்களே.   அப்படிஎன்றால்   நமக்கு   டெலிபதி
உணர்வு   ஏற்படுவதற்கு   பலகோடி   வாய்ப்புகள்   இருக்கு.  "சபாஷ்டா
தம்பி"  என்று என்னை நானே மனதிற்குள் பாராட்டிக்கொண்டு, அவர் சொல்லப் போகும் செய்தியை கேட்க உட்கார்ந்தேன். கச்சா முச்சா வெல்லாம் விலகி வீடு அமைதியானது.

“எனக்கு ஆரம்பத்தில் வாரம் ஒருமுறை தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து  குளிக்கும் பழக்கம் இருந்தது. அது ஒரு நல்லப் பழக்கம் தான் உடம்பு இலேசாகும். கண்கள் குளிர்ச்சியாகும். தூங்கனும் என்று மனசு நினைத்தவுடன் படுத்தோம்னா தூக்கம் வந்துடும்”

"சரி இப்ப என்ன??"

“சவுதி போன பிறகு அந்த பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போய் மாதம் ஒரு முறையாகிப் போனது”

“ம்ம்ம்”

"ஆனாக்கா பாருங்க, கல்யாணம் முடிஞ்ச பிறகு அந்த பழக்கமே நின்னு சுத்தமா போச்சு"

சரி அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்க நினைத்து, பல்லு வரை வந்ததை, உதட்டால் மூடி தடுத்துக் கொண்டேன்.

பிறகு அதை அவரே சொன்னார். அது தாம்பத்தியத்தில் ஏதோ
பிரைச்சினை வரும் என்று யாரோ சொன்னார்களாம்.

சரி நாம அதைப் பற்றி இப்ப பேச வரவில்லை. அவரின் உடல்
நலம் பற்றி விசாரித்து விட்டு எழுந்து விடலாம் என்று நினைத்த
எனக்கு அவர் ஒரு தியரியே நடத்தினார்.

“சவுதி வந்த பிறகு எண்ணெய் தேய்த்து குளிப்பதை எப்ப நிறுத்தி
னேனோ அப்பவே எனக்கு வயிற்று வலி தலைக் காட்ட
ஆரம்பித்தது. இது இந்த சூடான பூமியின் தட்பவெப்ப நிலையால் நிகழ்கிறதென்றே கருதினேன். குடும்பம் எந்தவிதத்திலும் கஷ்டப்
பட்டுவிடக் கூடாதென்பதற்காக, நேரத்திற்கு கூட சாப்பிடாமல்
சுழல ஆரம்பித்திருந்தேன்.

வயிற்றில் வலி வரும்போது ஆபீஸ் வேலை எதிலும் நாட்டம்
வராது. புரட்டி எடுக்கும். உட்கார விடாது. படுத்தால் தூக்கம் வராது. சாப்பிட்ட சாப்பாட்டை வாந்தி எடுத்து வயிறு காலியான பின்னரே
அந்த வலி விடும். அப்படியாப்பட்ட ஒரு அவஸ்தையை தந்துக் கொண்டிருந்தது. இதனால் எதையும் விரும்பி சாப்பிடும் எண்ணம்
குறைய ஆரம்பித்தது. வலி வரும் போது ஆலிவ் எண்ணையை
கொஞ்சம் எடுத்து தொப்புளைச் சுற்றி வயிற்றில், தடவினால்,
அல்லது தலையில் தடவினால் அந்த வலி நின்று போய்விடும்.
ஆனால் உடம்பு பலஹீனப்பட்டுப் போன மாதிரி ஃபீலிங்க்ஸ் வரும்.

இந்த நிலையில் ஒரு தடவை ஊருக்கு வந்தபோது தான்
அம்மா, "இப்படியே வலிவருது வலிவருதுன்னு வச்சுக்கிட்டே இருக்கீங்களே ஒரு எட்டு டாக்டரை போய் பார்த்து என்ன ஏது
என்று கேட்கலாம்ல" என்று சொன்னங்க.அவர்கள் சொல்வதும்
ஒரு விதத்தில் சரியானதாகவேப் பட்டது.

டாக்டரை கன்சல்ட் செய்த போது, ஆபரேஷன் செய்யணும்
வயிற்றை ஸ்கேன் எடுத்து வாங்க என்று எழுதிக் கொடுத்தார்.
ஸ்கேன் எடுக்க சென்ற போது, “எதற்கு இது?” என்று அந்த டாக்டர்
கேட்க, விவரம் சொன்னேன். “வயிற்று வலிக்கு எதற்கு ஆபரேஷன்”
என்று வினா எழுப்பினார். அப்ப மனசில் பொறி தட்டியது. இரண்டு டாக்டர்களுக்குள் ஏன் இந்த முரண்பாடு? ரிசல்டை வாங்கிக் கொண்டு வந்து விட்டேன்.

எனக்கு எப்பவுமே ஒரு குணம் உண்டு தம்பி. என் மனசுக்கு ஒத்து
போகிற விஷயங்களோடு தான் நானும் இயயைந்து போவேன். இல்லையேல் அது என்மனசோடு ஒட்டாது.

எங்களுடைய ஃபேமிலி டாக்டரிடம் கன்சல்ட் செய்யலாமென்றால் அப்பொழுது அவர் ஊருக்கு போயிருந்ததாலேயே மேற்படி
டாக்டர்களை பார்க்க வேண்டி இருந்தது. அவருடைய போன்
நம்பரை மறுநாள் தேடி எடுப்பதற்குள், தெய்வாதீனமாய் அவர்
ஊரிலிருந்து திரும்ப வந்து விட்டார்.

ரிசல்டை வாங்கி பார்த்து விட்டு "ஆபரேஷன் செய்து வலியை
எப்படி வெளியே எடுப்பாங்களாம். அந்த டாக்டரிடம் கேட்டீங்களா?"
என்றார். பின்னர்  "உடம்பில் எந்த காரணத்தைக் கொண்டும்
'கத்தி'யை வைக்காதீர்கள். அப்புறம் எல்லா காலத்திலும் நோய்
நோய் என்றே உங்கள் வாழ்க்கை ஆகிவிடும். இதை நான்
உங்களுக்கு முன்பே சொல்லியிருக்கிறேனே மறந்துட்டீங்களா?"
என்றார் கூலாக.

இந்த டாக்டரைப் பற்றி நிறைய சொல்லணும். ஆனா பதிவு
நீள்கிறது. இப்ப ரெண்டு வரியாவது சொல்லிவிடுகிறேன். பக்கா
டீசன்ட். நிறைய பணம் பண்ணனும் என்றெல்லாம் யோசிக்க
மாட்டார். சமயங்களில் நான் காசு கொடுத்தாக் கூட வாங்கவே
மாட்டார். போய் உடம்ப கவனிச்சிங்க என்பார்.அதனாலேயே சவூதியிலிருந்து வரும்போது ஒவ்வொரு தடவையாய் ஒரு
ஸ்டெத், ஒரு BP செக்கப் காம்போனன்ட் என்று அவருக்கு
தேவைப்படும் விஷயமாய் வாங்கி கொண்டு வந்து அவர்
மறுத்தாலும் வைத்து விட்டு போய் விடுவேன்.

'குலாம்அலி' அப்படி இப்படி என்று ரசனையாய் பாட்டு கேட்பார்.
“ரிடயர்ட் ஆர்மி கேம்பில்” காலை டூட்டி. மாலை கிளினிக் என்று
நூல் பிடித்த மாதிரி வாழ்க்கை. பிள்ளைகள் காலேஜில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

"சரி, நான் ஒரு ஹாஸ்பிடலுக்கு லெட்டர் தருகிறேன். அங்கே
போய் உங்களை ஒரு ஃபுல் உடல் செக்அப் செய்து கொண்டு
வாங்க. அப்பத்தான் உங்களுக்கும் மனசுக்கு திருப்தியாய் இருக்கும்". என்றார்.

நான் "ஆபரேஷன் ஏதும் ...!!" என்று வாய் திறந்தபோது,

"அப்படி அவசியம் என்றால் எனக்கு போன் பண்ணுங்கள் நான்
பேசிக்கிறேன்" என்று முடித்து விட்டு கிளம்பி விட்டார்.

சென்னைக்கு கிளம்பிவிட்டேன். அது ஒரு ஸ்டார் ஹாஸ்பிடல்.
வயிற்ரை காலியாக வைத்து எல்லா டெஸ்டும் முடிந்து ரிசல்ட்  
நார்மல் என்றாலும், OGD என்று சொல்லக் கூடிய (Oesophago Gastro
Duodenoscopy) டெஸ்டில் உங்களுக்கு வாய்வழி சென்று குடலை
அடையும் ட்யூபில் லேசான வளைவு இருப்பதால் நீங்கள்
சாப்பிடும் சாப்பாடு சீக்கிரம் ஜீரணமாகாமலும், அதே சமயம்
உணவு செரித்தாலும் கேஸ் ஏதும் உருவானால் முன் வழியாக
வோ பின்வழியாகவோ வெளியேற வாய்ப்பு மிகக் குறைவாக
இருப்பதால், அதுவே அங்கே தங்கி உங்களுக்கு வயிற்றில்
வலியைக் கொடுக்கிறது என்றார்கள். ஆகவே படுத்துறங்கும்
போது தலைப்பக்கம் சற்று உயரத்தை அதிகப்படுத்தி சற்றே
சரிவாகப் படுக்கச் சொன்னார்கள். தொடர்ச்சியாய் டெய்லி OMEZ
மாத்திரை எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள்.

அது உடம்புக்கும் மனதுக்கும் நல்லாவே இருந்தது. பின்னர்
அதுவே தொடர்ச்சியாய் மாத்திரை சாப்பிடுகிறோமே என்று
நிறுத்திப் பார்த்தேன். அதனால் தான் இப்ப வலி விட்டது" என்றார்.

கண்சிமிட்டாமல் அவர் சொல்வதையே பார்த்துக் கொண்டிருந்து
விட்டு "அப்புறம்..." என்றேன்.

"அப்புறமென்ன அதுவே Pantoprazole என்கிற (pantop -40) Tablet டாக
 மாற்றி தரப்பட்டது. சாப்பிடுகிறேன். அதிலும் குழப்பம் வந்து
திரும்ப வலி வந்தது".

"எப்படி??"

"சாப்பாட்டுக்கு முன் மாத்திரை சாப்பிடச் சொல்கிறார்களே என்று சாப்பாட்டு மேஜையில் உட்கார்ந்துக் கொண்டு,அந்த மாத்திரையை பிய்த்துப் போட்டுக் கொண்டு உடனே சாப்பிடுவேன். அப்பவும் அடுத்த அரை மணி நேரத்தில் வலி வர ஆரம்பித்தது"

"பிறகு என்னாச்சு ...??"

பின்னர் டாக்டரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது தான்,
"சாப்பாட்டுக்கு முன் என்பது, சாப்பிடும் ஒரு மணி நேரத்திற்கு
முன் அல்லது அரைமணி நேரத்திற்கு முன்னர் என்று கொள்ள
வேண்டும்" என்று முடித்தார்.உடம்பை கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு விடைப்பெற்று கிளம்பி வந்தேன்.

டிஸ்கி :  அனுபவம்  என்பது   நம்மை   தேடிவரும்.   அல்லது   நாம்   
தேடி போகணும்.  அவரிடம்   பேசிக்   கொண்டிருந்த போது நமக்கு
ஒரு அனுபவம் கிடைத்தது.எவ்வளவு தான் குடும்பத்துக்காக
உழைத்தாலும் நேரத்துக்கு சாப்பிடனும், எந்த நோய் வந்தாலும்
நாமே ஒரு முடிவுக்கு வாராமல், அனுபவ டாக்டர்களை சந்தித்து கலந்தாலோசிக்கணும்!!
33 கருத்துகள்:

ஜெய்லானி சொன்னது…

எங்கேயே மெயில்ல படிச்ச நினைவு வருதே...!! ((ஒரு வேளை வயசாயிடுச்சோ -நான் என்னைய சொன்னேன் )) ஹி..ஹி...

ஜெய்லானி சொன்னது…

போன பதிவுல வச்ச விருந்துல ...இந்த பதிவு தலைப்புக்கும் ஏக ஒற்றுமை ஹா..ஹா..

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி கூறியது

// எங்கேயே மெயில்ல படிச்ச நினைவு வருதே...!! //

..ஆனாலும் ரொம்பவும் குசும்புதான்யா உங்களுக்கு..!!

எம் அப்துல் காதர் சொன்னது…

ஜெய்லானி கூறியது..

((ஒரு வேளை வயசாயிடுச்சோ -நான் என்னைய சொன்னேன் )) ஹி..ஹி...

ம்ம்ம் உண்மை எப்படியெல்லாம் வெளிய வருது க்கி..க்கி..

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி கூறியது..

// போன பதிவுல வச்ச விருந்துல ...இந்த பதிவு தலைப்புக்கும் ஏக ஒற்றுமை ஹா..ஹா..//

இந்நேரத்துல அங்க தூங்காம என்ன கலாட்ட வேண்டி கெடக்கு செல்லம். அனும்மாவ அனுப்பவா?? ஹி..ஹி

மாணவன் சொன்னது…

//அனுபவம் என்பது நம்மை தேடிவரும். அல்லது நாம் தேடி போகணும். அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது நமக்கு ஒரு அனுபவம் கிடைத்தது. எவ்வளவு தான் குடும்பத்துக்கு உழைத்தாலும் நேரத்துக்கு சாப்பிடனும், எந்த நோய் வந்தாலும் நாமே ஒரு முடிவுக்கு வாராமல், அனுபவ டாக்டர்களை சந்தித்து கலந்தாலோசிக்கணும்!!//

மிகச் சரியாக சொல்லியிருக்கீங்க முற்றிலும் உண்மையான கருத்து

பகிர்வுக்கு நன்றி சார்

vanathy சொன்னது…

நாட்டாமை, நல்ல பதிவு. எனக்கும் இந்த சாப்பாட்டு விடயம் வீக் தான். நேரத்திற்கு சாப்பிடுவது குறைவு. இப்ப அதன் பலனை அனுபவிக்கிறேன். உடல் ஒரு முறை மக்கர் பன்ணினால் அதை பழைய நிலைக்கு கொண்டு வருவது கஷ்டமோ கஷ்டம்.

asiya omar சொன்னது…

நல்ல அனுபவம் தான்.

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

இப்படியெல்லாம் பிரச்சனைகள் வந்தபின் யோசிப்பதைவிட வருமுன் யோசிப்பதே சிற‌ந்தது.

நல்ல அருமையான பகிர்வு.

Chitra சொன்னது…

warning message.....

Balajisaravana சொன்னது…

நல்ல பதிவு நண்பா! தெளிவான நடையில சிறப்பா சொல்லிட்டீங்க!

curesure4u சொன்னது…

நண்பரே ..வாழ்த்துக்கள்...


சொன்ன விஷயம் நச்சு ..சொன்ன முறை பஞ்ச்..

சிநேகிதன் அக்பர் சொன்னது…

pantop 40 எனக்கும் இதுதான் ஊரில் டாக்டர் எழுதி கொடுத்தார்.

உண்மையிலேயே பயனுள்ள பதிவு.

ஆமினா சொன்னது…

அதெல்லாம் விடுங்க!!!

ஒரு நாளைக்கு 5 வேளைக்கு சாப்பிட்டா அதுவும் வேளா வேளைக்கு சர்யா சாப்பிட்டா, அதுவும் ருசிக்காகவும் பசிக்காகவும் சாப்பிட்டா எந்த நோயும் வந்துடாதே ;(

மின்மினி RS சொன்னது…

நல்ல அருமையான அனுபவ பகிர்வு. வேளாவேளைக்கு சாப்பிட்டாலே எந்த நோயும் வராது.

பா.ராஜாராம் சொன்னது…

நல்ல பகிர்வு சார்!

சுவராசியமாய் சொல்லி இருக்கீங்க.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

நல்லாச் சொல்லியிருக்கீங்க....!

ஆயிஷா சொன்னது…

நல்ல பகிர்வு சகோ.

தோழி பிரஷா சொன்னது…

உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் பெற்றுக்கொள்ளவும்
http://pirashathas.blogspot.com/2011/01/blog-post_07.html

enrenrum16 சொன்னது…

இப்படி அடுத்தவங்களுக்கு ஆகும் உடல்நலக்குறைவைப் பார்த்தா தான் நம்ம உடல்நலம் மீது அக்கறை வருதோ இல்லையோ பயம் வருது. அனுபவத்தின் மூலம் கிடைக்கும் பாடத்தை அந்த பயம் தீரும் வரை மட்டுமில்லாமல் ஆயுளுக்கும் பின்பற்ற வேண்டும். அனுபவத்தைப் பகிர்ந்தததற்கு நன்றி.

goma சொன்னது…

அதே போல் எல்லோருக்கும் இருப்பதுதான் என்று இக்னோர் பண்ணவும் கூடாது.....ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணமாக இருக்கலாம் ....நேரம் தாழ்த்தாமல் மருத்துவரை அணுகுவது புத்திசாலித்தனம்

ஸாதிகா சொன்னது…

அருமையான,அவசியமான பகிர்வுக்கு நன்றி.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

தங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். பங்கேற்று சிறப்பிக்கவும்.

http://sinekithan.blogspot.com/2011/01/blog-post_10.html

எம் அப்துல் காதர் சொன்னது…

@ வாங்க வானதி, ஆமா உடம்பு மக்கருக்கு முன்பு நாம மக்கர் செய்து அதை நம்கிட்ட நெருங்க விடாம பார்த்துக்கணும்- நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ வாங்க மாணவன் சார்...நன்றி!

@ வாங்க ஆசியா டீச்சர்...நன்றி!

@ வாங்க ஷேக் ஸ்டார்ஜன்..நன்றி!

@ வாங்க சித்ரா டீச்சர்...நன்றி!

@ வாங்க பாலாஜி சரவணா, நல்லா இருக்கீங்களா நண்பா! நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ curesure4u சொன்னது..

//சொன்ன விஷயம் நச்சு ..சொன்ன முறை பஞ்ச்.. //

வாங்க டாக்டர். நன்றி உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ சிநேகிதன் அக்பர் கூறியது...

// pantop 40 எனக்கும் இதுதான் ஊரில் டாக்டர் எழுதி கொடுத்தார். //

உங்களுக்குமா?? டேக் கேர் பாஸ்!! நன்றி அக்பர், வருகைக்கும் தொடர் பதிவு அழைப்புக்கும்- எழுதுகிறேன் தல!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஆமினா கூறியது

//அதெல்லாம் விடுங்க!!!//

சரி விட்டுட்டேன்!!

// ஒரு நாளைக்கு 5 வேளைக்கு சாப்பிட்டா அதுவும் வேளா வேளைக்கு சர்யா சாப்பிட்டா, அதுவும் ருசிக்காகவும் பசிக்காகவும் சாப்பிட்டா எந்த நோயும் வந்துடாதே//

சரிங்க டாக்டர் ஆமினா, நீங்க சொன்னா சரியாத்தானிருக்கும் (சயனைடு ஞாபாகத்தில் வருவதால்... :-))ஹா..ஹா..

எம் அப்துல் காதர் சொன்னது…

@ வாங்க Siss.மின்மினி RS நன்றி!

@ வாங்க பா.ரா.சார் நன்றி!

@ வாங்க பன்னிகுட்டி ராம்சாமி சார் நன்றி!

@ வாங்க ஆயிஷா நன்றி உங்கள் முதல் வருகைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ தோழி பிரஷா கூறியது...

//உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் பெற்றுக்கொள்ளவும்
http://pirashathas.blogspot.com/2011/01/blog-post_07.html //

பெற்றுக்கொண்டேன் தோழி நன்றி! லாக்கரிலும் வைத்து விட்டேன்!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ enrenrum16 கூறியது...

// இப்படி அடுத்தவங்களுக்கு ஆகும் உடல் நலக்குறைவைப் பார்த்தா தான் நம்ம உடல்நலம் மீது அக்கறை வருதோ இல்லையோ பயம் வருது. அனுப வத்தின் மூலம் கிடைக்கும் பாடத்தை அந்த பயம் தீரும் வரை மட்டுமில்லாமல் ஆயுளுக்கும் பின்பற்ற வேண்டும். அனுபவத்தைப் பகிர்ந்தததற்கு நன்றி.//

வாங்க என்றென்றும் பதினாறு. அருமையா சொன்னீங்க சகோதரி! நன்றி உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ goma கூறியது...

// அதே போல் எல்லோருக்கும் இருப்பதுதான் என்று இக்னோர் பண்ணவும் கூடாது.....
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணமாக இருக்கலாம் ....நேரம் தாழ்த்தாமல் மருத்துவரை அணுகுவது புத்திசாலித்தனம்//

ரொம்ப டீப்பா படிச்சிருக்கீங்க..நீங்க சொல்வது தான் கரக்ட். நன்றி சகோ goma உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஸாதிகா கூறியது...

// அருமையான, அவசியமான பகிர்வுக்கு நன்றி.//


வாங்க ஸாதிகாக்கா மிக்க நன்றி!!