facebook

செவ்வாய், ஜனவரி 11, 2011

புத்தூர் சாப்பாட்டுக் கடை


புத்தூர் சாப்பாட்டுக் கடை

சென்னையிலிருந்து நாகூர் வந்து சேரும்வரை, திண்டிவனத்தில்
எங்கே தலைப்பாக்கட்டு பிரியாணி நல்லா இருக்கும் ; வடை
எங்கே நல்லா இருக்கும் ; போண்டா எங்கே நல்லா இருக்கும் ;
இரவு உணவு எங்கே நல்லா இருக்கும் ; டீ எங்கே குடித்தால்
டேஸ்டா இருக்கும் ; மல்லிகை பூவிலிருந்து பனங்கிழங்கு வரை ; கொய்யாப்பழத்திலிருந்து பட்டர் பிஸ்கட் வரை எங்கே சல்லீசாய்
தரமாய் கிடைக்கும் என்பன போன்ற விவரங்கள் பொதுவாகவே
எல்லா டிரைவர்களுக்கும் அத்துப்படி என்றாலும் எங்கள் வீட்டு
டிரைவர் 'சாதிக்'  கொஞ்சம் எக்ஸ்ட்ராடினரி. அவரும் நல்லா
'கட்டுக் கட்டுவார்'. நம்மையும் வற்புறுத்துவார். நம்மால் அவரோடு போட்டிப்போட முடியாதென்பது வேறு விஷயம்.

எத்தனையோ தடவை நாகூரிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு சென்றிருக்கிறேன் - வந்திருக்கிறேன். ஆனால் அந்த ஹோட்டல்
இருந்த இடம் எனக்குத் தெரியாது. இந்த தடவைத்தான் சென்னை யிலிருந்து திரும்பும் சமயம் சாதிக், "பகல் சாப்பாட்டை புத்தூரில் சாப்பிடுவது போல் அரேஞ் செய்து கொண்டு கிளம்புவோம்" என்று சொன்னார். "அப்படி என்ன அந்த ஹோட்டலில் விஷேசம் இருக்கு?"
என்று கேட்டேன். “நீங்க வந்து சாப்பிட்டு பாருங்க, அப்பத்தான்
உங்களுக்கு புரியும். நீங்களும் மற்றவர்களுக்கும் பரிந்துரைப்பீர்கள் மச்சான்" என்றார். என்னை அவர் அப்படித்தான் கூப்பிடுவார்.
ஏனென்றால் அவர் எங்கள் சொந்தக்காரார்.

                                                   சிக்கன் மீன் வறுவல்

மெர்சிடிஸ், ஸஃபாரி, டொயோடா, ஸ்விஃப்ட் என்று ஏகப்பட்ட
கார்களைப் பார்க்கும் போது நாம் ஏதோ ஃபைவ் ஸ்டார்
ஹோட்டலுக்குத் தான் சாப்பிட வந்திருக்கிறோமோ என்ற
பிரமையை ஏற்படுத்துகிறது. பகல் நேரங்களில் சாப்பிடுவதற்கு
கூட்டம்னா கூட்டம் அப்படி ஒரு கூட்டம் வந்து அப்புகிறது. அக்கம் பக்கத்து ஊர்களிலெல்லாம் ஆபீசில் வேலை செய்யும் அத்தனை
பேரும் கார் போட்டுக் கொண்டு வந்து  இங்கே சாப்பிட குழுமு-
கிறார்கள். கார் நிறுத்த இடமில்லாமல் அல்லாடுவதும் நடக்கிறது 
என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

அது ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் மாதிரியாவுமில்லை.
சிம்பிளாய் இருக்கும் த்ரீ ஸ்டார் ஹோட்டல் மாதிரியாவுமில்லை. சாதாரணமாய் கான்கிரீட் கட்டடத்தில் இயங்கும் ஹோட்டல் மாதிரியாவுமில்லை. சொல்லப் போனால் இது சாப்பாடு ஹோட்டல்
தானா என்று கேட்குமளவுக்கு ஒரு குடிசை மாதிரி வேயப்பட்டு
ஹோட்டல் மாதிரியான அமைப்பில்  விஸ்தாரமாய் இருக்கிறது.
 
                                                  இறால் பொறியல்

மெயின் ரோட்டை ஒட்டியே இந்த ஹோட்டல் இருப்பதால் காரை
நிறுத்த கொஞ்ச தூரம் இடம் தேடி போட்டுவிட்டு நடந்து வர
வேண்டி இருக்கிறது. வாசலில் மிகப் பெரிய தவ்வாவை வைத்து
கூடை கூடையாய் இராலை கொட்டி பொறித்துக் கொண்டிருப்பதை பார்க்கும் போதே சாப்பிடனும் என்ற பசி கிளம்பிவிடுகிறது. அந்த
வாசனை ஊரையே தூக்குகிறது. பின்னர் இடையிடையே வஞ்சிர
மீனை ஸ்லைஸ் ஸ்லைசாக பொறிக்கிரார்கள். பார்க்கும் போதே
நாஊறுகிறது. அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கணும்
என்று மனசு சொல்கிறது என்றாலும்...

உள்ளே நுழைந்தால் உட்கார இடம் பிடிக்கணுமே, ஆளாளுக்கு
ஒவ்வோர் டேபிளில் நின்றுக் கொண்டோம். எது காலியாகுமோ அதற்க்கருகில் எல்லோரும் ஒன்று கூடிக் கொள்வோம் என்பது
திட்டம்!! ரெண்டு மணிக்கு மேலாகிவிட்டதால் எது கிடைத்தாலும் சாப்பிடலாம் என்கிற நிலையில் பசியும், பொறிக்கும் வாசனையும்
நம்மை கிறங்கடிக்கிறது. ஒரு வழியாய் இடம் கிடைத்து உட்கார்ந்-
தாகி விட்டது. எல்லாமே சாதிக் தான் ஆர்டர் செய்தார். அவருக்குத்
தான் தெரியும் இங்கே எது டேஸ்டா இருக்குமென்று...!!

அருமையான அரிசியில் பளீரென்று சாப்பாடு. மீன் வறுவல், மீன்
சால்னா, கோழி குழம்பு, அதற்கு கூட்டு வகைகள் என்று ஏராளமாய் கொண்டு வந்து வைக்கிறார்கள். அதில் கீரை மசியல் எனக்கு
ரொம்ப இஷ்டமாய் இருந்தது. எல்லாம் போக இறால் பொறியலை
விட மனசில்லை. அதுவும் ஆளுக்கொரு ப்ளேட்.

எது கேட்டாலும், மற்ற ஹோட்டல்களில் பசியடங்கியதும் கொண்டு
வந்து கொடுப்பார்களே அதுமாதிரி இல்லாமல், கேட்டவுடன் தாமத மில்லாமல் கொண்டுவந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
இதை முக்கியமாய் குறிப்பிட்டுதான் ஆகவேண்டும்.

சவுதியில் கட்டி கட்டியாய் தயிரைப் பார்த்த எனக்கு, ஊரில் சில இடங்களில் சாப்பிடும் போது, சவுதியில் கிடைக்கும் மோர் மாதிரி
யான வெள்ளை வஸ்துவை கொடுத்து அதுதான் தயிர் என்பார்கள்.
வாயில் வைக்க விளங்காது. ஒரே புளிப்பாய் இருக்கும். இந்த ஹோட்டலில் தான் பெரிய பெரிய பக்கெட்டுகளில் தயிரை பாலம் பாலமாக வெட்டியெடுத்து கஸ்டமர்களுக்கு அள்ளிக் கொட்டுவதை,
அதுவும் போதும் போதும் என்று சொல்கிற அளவுக்கு, எல்லாமே
வயிறு நிறைந்த மாதிரி  மனசும் நிறைந்து போனதென்னவோ நிஜம்!

                                                       ஓனர் ஜெயராமன்  

வாசலுக்கு வந்து கல்லாபெட்டியருகே சர்வ் செய்தவர் கணக்குச்
சொல்லி காசைக்கொடுக்கும் போது நானூத்தி சில்லறையோ
ஐநூறோ கொடுத்த ஞாபகம். மற்ற நடுத்தர ஹோட்டல்களை
கம்பேர் செய்யும் போது நாங்கள் ஆறு பேர் சாப்பிட்டதற்கு
ரொம்ப மலிவானதாகவே தெரிந்தது. ஸோ, இதை மற்றவர்
களுக்கும் பரிந்துரைக்கலாமே என்று மனசுக்கும் பட்டது. இந்த
வழியாய் போகும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும் பட்சத்தில்,
குடிசை என்று யோசிக்காமல் ஒரு தடவை,  இங்கேயும் நுழைந்து
தான் பாருங்களேன்!

இடம் : "புத்தூர்" - சிதம்பரத்திற்கும் சீர்காழிக்கும் நடுவே, இங்கிட்டும் அங்கிட்டும் பதினைந்து கிலோமீட்டர், கொள்ளிடம் பாலத்தை
விட்டு இறங்கியதும் இருக்கிறது இந்த ஹோட்டல்!!


83 கருத்துகள்:

ப.கந்தசாமி சொன்னது…

ஆஹா, படிச்சதிலேயே வயிறு நெறஞ்சிட்டது போல் ஆயிட்டுதுங்க.

Balajisaravana சொன்னது…

எனக்கு கடல் உணவுகள் அவ்வளவா பிடிக்காது ஆனா நீங்க அந்த இரால் பத்தி சொன்னதும் எனக்கும் சாப்பிடணும் போல இருக்கு பாஸ் ;) நான் பார்த்தவரைக்கும் ஹை-வேல இருக்குற ஹோட்டல்கள் எல்லாமே கொள்ளையடிக்கிறதாவே இருந்திருக்கு ஆனா இந்த ஹோட்டல் ரொம்பவே வித்தியாசம் தான்.. :)

Chitra சொன்னது…

நாவில் நீர் ஊற வாசித்தேன்....

ஸாதிகா சொன்னது…

கடைக்குப்பேரே புத்தூர் சாப்பாட்டுக்கடைதானா?உங்கள் பதிவைப்பார்த்ததுமே இதற்காகவே காரில் சென்னையில் இருந்து நாகூருக்கு பிரயாணப்படவேண்டும் போல் உள்ளது

பொன் மாலை பொழுது சொன்னது…

/////இடம் : "புத்தூர்" - சிதம்பரத்திற்கும் சீர்காழிக்கும் நடுவே, இங்கிட்டும் அங்கிட்டும் பதினைந்து கிலோமீட்டர், கொள்ளிடம் பாலத்தை விட்டு இறங்கியதும் இருக்கிறது இந்த ஹோட்டல்!!////

இந்த மொழி வளம் எனக்கு ரொம்ப பிடித்துள்ளது.

ஆமினா சொன்னது…

இம்முறை போனால் கண்டுபிடித்து சாப்பிட்டுட்டு தான் அடுத்த வேலையெ ;)

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

நண்பரே உங்கள் விருதுக்கு நன்றி சொல்லியிருக்கேன். பார்க்க...
http://ragariz.blogspot.com/2011/01/award-to-me.html

GEETHA ACHAL சொன்னது…

இந்த இடத்தினை பற்றி சொல்லியதற்கு மிகவும் நன்றி...படிக்கும் பொழுதே பசி எடுக்கின்றது...

ரவி சொன்னது…

நல்ல பதிவு, இந்தாங்க உங்களை ஒரு வெளாட்டுக்கு அழைச்சிருக்கேன்

http://tvpravi.blogspot.com/2011/01/blog-post_11.html

துளசி கோபால் சொன்னது…

இப்பதாங்க போனவாரம் சென்னை விஸிட்டில் வாங்குன சாப்பாட்டு புராணம் என்ற புத்தகத்தில் இந்த புத்தூர் சாப்பாட்டுக் கடையைப் பத்திப் படிச்சேன்.

ஒருக்கா கட்டாயம் போய்த்தான் ஆகணும்போல இருக்கு உங்க பதிவு பார்த்தால்!!!!!!!!!!!

ஜெய்லானி சொன்னது…

//அப்பத்தான்
உங்களுக்கு புரியும். நீங்களும் மற்றவர்களுக்கும் பரிந்துரைப்பீர்கள் மச்சான்" என்றார்.//

கிடைச்ச கமிஷனை பத்தி வாயை திறக்கலையே...!!

ஜெய்லானி சொன்னது…

//வாசலில் மிகப் பெரிய தவ்வாவை வைத்து
கூடை கூடையாய் இராலை கொட்டி பொறித்துக் கொண்டிருப்பதை பார்க்கும் போதே சாப்பிடனும் என்ற பசி கிளம்பிவிடுகிறது//

நமக்குதான் எதை பார்த்தாலும் கேக்குமே..!! அவ்வ்வ்வ்

ஜெய்லானி சொன்னது…

//அருமையான அரிசியில் பளீரென்று சாப்பாடு.//

ஒருவேளை சொட்டு நீலத்துடன் ஓமோ + ஏரியல் அதிகமோ ...!!!

ஜெய்லானி சொன்னது…

//அதில் கீரை மசியல் எனக்கு
ரொம்ப இஷ்டமாய் இருந்தது.//

இதை நாங்க நம்பனுமாக்கும்..!! இதுக்கா இம்புட்டுதூரம் ஹி...ஹி....

ஜெய்லானி சொன்னது…

//அருமையான அரிசியில் பளீரென்று சாப்பாடு. மீன் வறுவல், மீன்
சால்னா, கோழி குழம்பு, அதற்கு கூட்டு வகைகள் என்று ஏராளமாய் கொண்டு வந்து வைக்கிறார்கள். அதில் கீரை மசியல்//

//எல்லாம் போக இறால் பொறியலை
விட மனசில்லை. அதுவும் ஆளுக்கொரு ப்ளேட். //

வண்டில போய்கிட்டே சாப்பிட வாங்கிய பார்ஸலை விட்டுட்டீங்களே..

//பெரிய பெரிய பக்கெட்டுகளில் தயிரை பாலம் பாலமாக வெட்டியெடுத்து கஸ்டமர்களுக்கு அள்ளிக் கொட்டுவதை,
அதுவும் போதும் போதும் என்று சொல்கிற அளவுக்கு//

இப்பவாவது வயிறு .ச்சே...மனசு நிறைஞ்சுதா...இல்ல வேற ஹோட்டலுக்கு போய்ட்டு போகலாமா..!!

//நானூத்தி சில்லறையோ
ஐநூறோ கொடுத்த ஞாபகம்.//

பாவம் யார் பெத்த புள்ளையோ கணக்கு தெரியாம கல்லா பெட்டியில உட்கார்ந்து இருக்கு...!!

//நாங்கள் ஆறு பேர் சாப்பிட்டதற்கு
ரொம்ப மலிவானதாகவே தெரிந்தது//

நாலு பேருக்கு மட்டுதான் காசு குடுத்தோமுன்னு சொன்னா நா திட்டவாபோறேன் :-))

ஜெய்லானி சொன்னது…

//"புத்தூர்" - சிதம்பரத்திற்கும் சீர்காழிக்கும் நடுவே, இங்கிட்டும் அங்கிட்டும் பதினைந்து கிலோமீட்டர், கொள்ளிடம் பாலத்தை
விட்டு இறங்கியதும் இருக்கிறது இந்த ஹோட்டல்!!//

எங்கேயே பார்த்த ..ச்சே..கேட்ட இடம் மாதிரி தெரியுதே..!!! ஹி...ஹி...

Asiya Omar சொன்னது…

அந்த தயிர் ஒன்றுக்கே போலாம் போல.தகவலிற்கு மிக்க நன்றி.நிறைவான பதிவு.

ஜெய்லானி சொன்னது…

http://www.youtube.com/watch?v=JROigL20fwA&feature=player_embedded

ஹுஸைனம்மா சொன்னது…

ம்ம்.. சாப்பாட்டுக் கடைக்கு, அதுவும் போன லீவுல சாப்பிட்டு வந்த கடைக்கு, இம்புட்டு விளம்பரமா? பார்ட்னர்ஷிப் எம்புட்டு பர்செண்ட்?

//கேட்டவுடன் தாமத மில்லாமல் கொண்டுவந்து கொடுத்துக் கொண்டே//
இதுவும், ஆறு பேருக்கு ஐநூறுதான்(!!) ஆச்சுங்கிறதும் பிடிச்சுருக்கு. அப்படியே மெயிண்டெயின் பண்ணச் சொல்லுங்க உங்க பார்ட்னர்கிட்ட!! :-))))))))

(கமிஷன் ரேட் சொன்னா நானும் ஒரு பதிவு போட்டுடுறேன், எப்படி வசதி?) ;-)))))

சிநேகிதன் அக்பர் சொன்னது…

தல என்ன இது? காலையிலேயே இரால் , அமைக்குஞ்சுன்னு பசியை கிளப்பி விடுறீங்களே :)

திருநெல்வேலியிலிருந்து வந்து சாப்பிடுவது கஷ்டம்தான்.

உங்க கவரேஜ் அருமை.

Jaleela Kamal சொன்னது…

மிக அருமை நீங்க சொல்லியதை படிக்கும் போதே.மீனும் இறாலும் நாவில் ஊறுகிற்து

//நானூத்தி சில்லறையோ
ஐநூறோ கொடுத்த ஞாபகம்.//

பாவம் யார் பெத்த புள்ளையோ கணக்கு தெரியாம கல்லா பெட்டியில உட்கார்ந்து இருக்கு...!!
ஹ்ஹா

பரவாயில்லை
இப்படி தெரிய படுத்துவது, எல்லோருக்கும் பிரயோஜனமாக இருக்கும்
நோட் பண்ணி வைத்து கொள்கிறேன்
தயிர் ரும் நல்ல தயிர் கிடைக்கு து என்றால் ஆச்சரியம் தான்

Unknown சொன்னது…

சீர்காழி சிதம்பரத்துக்கு இடைப்பட்ட தூரமே 20 கிலோ மீட்டர் தான்
நீங்கள் 30 கிலோ மீட்டருக்கு கணக்கு சொல்லி இருக்கிங்களே

ஜெய்லானி சொன்னது…

//சீர்காழி சிதம்பரத்துக்கு இடைப்பட்ட தூரமே 20 கிலோ மீட்டர் தான்
நீங்கள் 30 கிலோ மீட்டருக்கு கணக்கு சொல்லி இருக்கிங்களே //

அது ஒன்னுமில்லைங்க அன்னைக்கு பார்த்து பார்த்து .......அதான் ..இப்போ புரியுதா...!!! :-)))

ஜெய்லானி சொன்னது…

// இங்கிட்டும் அங்கிட்டும் பதினைந்து கிலோமீட்டர், //

இங்கிருந்து கணக்கு பண்ணீணா அங்கே பதினஞ்சி , அங்கிருந்து கனக்கு பண்ணீணா இங்கே பதினஞ்சி... ரொம்பவும் இடிக்குதே...!!

பாவம் மக்கா.!கணக்கு பிள்ளையா ஒட்கார வச்ச அந்த அரபியை சொல்லனும் ஹி..ஹி...

Denzil சொன்னது…

டயட் நல்லபடியா போய்டிருக்கிற சமயத்துல...

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

ஆஹ்ஹா.. சூப்பருங்கோ.. சூப்பர் சாப்பாடு சாப்பிட்டுருக்கீங்க என்பதை உங்க எழுத்தே சொல்லுது.

நாங்க திருநெல்வேலில இருந்து வந்து சாப்பிட்டுறது கஷ்டம்தான். நீங்க பக்கத்துல இருக்கிறவக சாப்ப்பிட்டதே நாங்க சாப்பிட்டதுக்கு சமானம்.

அருமையான இடுகை.

ராஜவம்சம் சொன்னது…

சாப்பாடு ருசியாதா இருக்கு ீங்க சொன்ன விததில்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

வாவ், நல்லாருக்குங்க, முழுவிருந்து சாப்ட்ட திருப்தி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ DrPKandaswamyPhD கூறியது...

// ஆஹா, படிச்சதிலேயே வயிறு நெறஞ்சிட்டது போல் ஆயிட்டுதுங்க.//

வாங்க டாக்டர் சார். மிக்க நன்றி உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@Philosophy Prabhakaran கூறியது...

// நூறாவது இடுகை எழுதியிருக் கிறேன்... படித்துவிட்டு கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்...//

அவசியம் வர்றேன் பிரபா. மிக்க நன்றி!

ஜெய்லானி சொன்னது…

நடுராத்தியில பேய் வந்து கதவை தட்ட போகுது ராஸா..!!ஹி..ஹி...

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி கூறியது...

// நடுராத்தியில பேய் வந்து கதவை தட்ட போகுது ராஸா..!!ஹி..ஹி...//

அதுக்கு பயந்துக்கிட்டு தான் இங்க வந்து உட்கார்திருக்கேன் ராசய்யா.. க்கி..க்கி (உளறிட்டேனோ....!!!)

Raj Chandirasekaran சொன்னது…

Yeah its called " Jayaraman Kadai". Puthur Jayaraman as its fondly called in that area. Pretty close to Chidambaram too may be about 20 kms from Chidambaram.

vanathy சொன்னது…

நல்லா இருக்கு. அப்படியே அந்தக் கடையின் படத்தினையும் போட்டிருக்கலாமே.

பெயரில்லா சொன்னது…

அருமையான பதிவு. இந்த புத்தூர் ஜெயராமன் கடையை பற்றி விரிவாக பதிவு எழுதலாம் என்றிருந்தேன். முந்தி விட்டீர்கள். அருமையான பகிர்வு.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Balajisaravana கூறியது...

// எனக்கு கடல் உணவுகள் அவ்வளவா பிடிக்காது ஆனா நீங்க அந்த இரால் பத்தி சொன்னதும் எனக்கும் சாப்பிடணும் போல இருக்கு பாஸ் ;) நான் பார்த்தவரைக்கும் ஹை-வேல இருக்குற ஹோட்டல்கள் எல்லாமே கொள்ளையடிக்கிறதாவே இருந்திருக்கு ஆனா இந்த ஹோட்டல் ரொம்பவே வித்தியாசம் தான்.. :)//

அவசியம் ஒருதடவை நீங்க சென்று சாப்பிட்டு பாருங்க பாஸ்!

நன்றி சரவணா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@சித்ரா கூறியது...

// நாவில் நீர் ஊற வாசித்தேன்....//

வாங்க டீச்சர் நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஸாதிகா கூறியது...

// கடைக்குப்பேரே புத்தூர் சாப்பாட்டுக்கடைதானா? //

வாங்க ஸாதிகாக்கா,

அப்படிதான்.. ஆனால் 'புத்தூர் ஜெயராமன் கடை' என்றால் எல்லோருக்கும் விளங்குகிறது.

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ கக்கு-மாணிக்கம் கூறியது...

/////இடம் : "புத்தூர்" - சிதம்பரத்திற்கும் சீர்காழிக்கும் நடுவே, இங்கிட்டும் அங்கிட்டும் பதினைந்து கிலோமீட்டர், கொள்ளிடம் பாலத்தை விட்டு இறங்கியதும் இருக்கிறது இந்த ஹோட்டல்!!//// //இந்த மொழி வளம் எனக்கு ரொம்ப பிடித்துள்ளது.//

அண்ணே உங்கள மாதிரி படித்த ஆசான்களிடம் கற்ற மொழிகள் தானண்ணே!

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஆமினா கூறியது...

// இம்முறை போனால் கண்டுபிடித்து சாப்பிட்டுட்டு தான் அடுத்த வேலையெ ;)//

இதவிட முக்கியமான வேலைக் கூடவா நமக்கு இருக்கு சகோ :-)))அவசியம் போகணும், அப்படியே வந்து இந்த (தம்பி/அண்ணன்) இடம் சொல்லணும் சொல்லிப்புட்டேன் ஹா..ஹா..

நன்றி ஆம்ஸ் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ரஹீம் கஸாலி கூறியது...

// நண்பரே உங்கள் விருதுக்கு நன்றி சொல்லியிருக்கேன். பார்க்க...

http://ragariz.blogspot.com/2011/01/award-to-me.html //

உங்கள் நன்றிக்கு நன்றி நண்பரே!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ GEETHA ACHAL கூறியது...

// இந்த இடத்தினை பற்றி சொல்லியதற்கு மிகவும் நன்றி...படிக்கும் பொழுதே பசி எடுக்கின்றது...//

அவசியம் ஒருமுறை நீங்கள் குடும்பத்துடன் சென்று வரணும் சகோ.

நன்றி GEETHA ACHAL உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ செந்தழல் ரவி கூறியது...

// நல்ல பதிவு, இந்தாங்க உங்களை ஒரு வெளாட்டுக்கு அழைச்சிருக்கேன் //

போற போக்கில் நம்மையும் பிடித்து இந்த விளையாட்டில் இழுத்து விட்டுடீங்களா!! நான் கலந்துக்கிறேன் பாஸ்!

நன்றி செந்தழல் ரவி சார் உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ துளசி கோபால் கூறியது...

// ஒருக்கா கட்டாயம் போய்த்தான் ஆகணும்போல இருக்கு உங்க பதிவு பார்த்தால்!!!!!!!!!!!//

புத்தகத்தில் படித்ததோட இருந்துடக் கூடாது பாருங்க, அவசியம் உங்க குடும்பத்தோட ஒரு முறை சென்று வாங்க சகோ.

நன்றி துளசி கோபால் உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

Butter_cutter சொன்னது…

அருமை .போட்டோ பிடிச்சு போட்ருக்கலாம் .

Menaga Sathia சொன்னது…

நானும் இந்த ஹோட்டலில் சாப்பிட்டிருக்கேன்,செம சூப்பராயிருக்கும்...விருதுக்கு மிக்க நன்றி சகோ!! விரைவில் வலைத்தளத்தில் போட்டுக்கொள்கிறேன்...

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி கூறியது

// கிடைச்ச கமிஷனை பத்தி வாயை திறக்கலையே...!! //

அதைப் பற்றி தான் வெளியே சொல்ல வேணாம்னு சொல்லிடீங்களே!! க்கி..க்கி..

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி கூறியது

//நமக்குதான் எதை பார்த்தாலும் கேக்குமே..!! அவ்வ்வ்வ் //

அது அது உங்க சிஷ்யரை பற்றி உங்களுக்கு தானே தெரியும் ஹி..ஹி..

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி கூறியது

//அருமையான அரிசியில் பளீரென்று சாப்பாடு.//
//ஒருவேளை சொட்டு நீலத்துடன் ஓமோ + ஏரியல் அதிகமோ...!!!//

ஷார்ஜாவில் ரேஷன் அரிசி சாப்பாடா பாஸ்??

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி கூறியது

//எல்லாம் போக இறால் பொறியலை விட மனசில்லை. அதுவும் ஆளுக்கொரு ப்ளேட். //

வண்டில போய்கிட்டே சாப்பிட வாங்கிய பார்ஸலை விட்டுட்டீங்களே..

பப்ளிக்.. பப்ளிக் ஹி..ஹி..

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி கூறியது

//பெரிய பெரிய பக்கெட்டுகளில் தயிரை அதுவும் போதும் போதும் என்று சொல்கிற அளவுக்கு//

இப்பவாவது வயிறு .ச்சே...மனசு நிறைஞ்சுதா...இல்ல வேற ஹோட்டலுக்கு போய்ட்டு போகலாமா..!!

ஆஹா ஏதப்பா சுடுசோறு சாப்பிட விடமாட்டேங்கிராங்களே!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி கூறியது

//நானூத்தி சில்லறையோ ஐநூறோ கொடுத்த ஞாபகம்.//

பாவம் யார் பெத்த புள்ளையோ கணக்கு தெரியாம கல்லா பெட்டியில உட்கார்ந்து இருக்கு...!!

உங்கள மாதிரி நல்ல புள்ளைல ஒன்னு தான்!!

//நாங்கள் ஆறு பேர் சாப்பிட்டதற்கு
ரொம்ப மலிவானதாகவே தெரிந்தது//

நாலு பேருக்கு மட்டுதான் காசு குடுத்தோமுன்னு சொன்னா நா திட்டவாபோறேன் :-))

சேச்சே அப்படியெல்லாம் சொல்லக் கூடாது அல்லா அடிப்பான்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி கூறியது

//அதில் கீரை மசியல் எனக்கு ரொம்ப இஷ்டமாய் இருந்தது.//

இதை நாங்க நம்பனுமாக்கும்..!! இதுக்கா இம்புட்டுதூரம் ஹி...ஹி....

உங்களுக்கு பரங்கிப் பேட்டைக்கு ஒரு பார்சல் அனுப்பியிருந்தா இந்த வம்பே வந்திருக்காதுல அவ்வவ். அடுத்தமுறை அனுப்பிட்டுதான் மறுவேளை. சரியா?? done க்கி..க்கி

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி கூறியது

//"புத்தூர்" - எங்கேயே பார்த்த ..ச்சே..கேட்ட இடம் மாதிரி தெரியுதே..!!! ஹி...ஹி//

தெரியாதா பரங்கிப்பேட்டையிலிருந்து கூப்பிடு தூரம் பாஸ்!! ஹா..ஹா..

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ asiya omar கூறியது...

// அந்த தயிர் ஒன்றுக்கே போலாம் போல. தகவலிற்கு மிக்க நன்றி. நிறைவான பதிவு//

சாப்பாட்டுப் பதிவுன்னாலே மக்கள்ஸ் நிறைவான பதிவுன்றாங்க. ஆகவே இனிமே உங்க கடைக்கு எதிர் கடை தான் டீச்சர் சரியா?? ஹா..ஹா.. நன்றி அவசியம் போய் வாங்க sis!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி கூறியது

// http://www.youtube.com/watch?v=JROigL20fwA&feature =player_ embedded //

இதென்ன புத்தம் புதிய காப்பி யெல்லாம் கிடையாதா பாஸ்??
ஹா..ஹா..

எம் அப்துல் காதர் சொன்னது…

!@! ஜெய்லானி கூறியது...

//சீர்காழி சிதம்பரத்துக்கு இடைப்பட்ட தூரமே 20 கிலோ மீட்டர் தான்
நீங்கள் 30 கிலோ மீட்டருக்கு கணக்கு சொல்லி இருக்கிங்களே //

// இங்கிருந்து கணக்கு பண்ணீணா அங்கே பதினஞ்சி, அங்கிருந்து கனக்கு பண்ணீணா இங்கே பதினஞ்சி... ரொம்பவும் இடிக்குதே...!! //

பசி நேரத்துல இதெல்லாமா கணக்குப் பார்த்துக்கிட்டு இருக்கமுடியும் பாஸ். அத ஸ்பெக்ட்ரம் கணக்குல சேர்த்து லூஸ்ல விடுங்க பாஸ்!!க்கி..க்கி..

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஹுசைனம்மா கூறியது..

(கமிஷன் ரேட் சொன்னா நானும் ஒரு பதிவு போட்டுடுறேன், எப்படி வசதி?) ;-)))))

என்னா மிஞ்சி மிஞ்சி போனா ஒரு ப்ளேட் இறால் கிடைக்கும் ஓகே வா?? ஆனா ராலை உறிச்சுக் கொடுக்கணும் சரியா?? ஹா.. ஹா.. நன்றி ஹுசைனம்மா..

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ சிநேகிதன் அக்பர் சொன்னது…

// திருநெல்வேலியிலிருந்து வந்து சாப்பிடுவது கஷ்டம்தான். உங்க கவரேஜ் அருமை. //

வாங்க தல!! திருநெல்வேலி யிலிருந்து வந்து சாப்பிடுவது தானே கஷ்டம். சவூதியிலிருந்து போகும் போதே சாப்பிட்டுட்டு போய்ட்டா...??

நன்றி அக்பர்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Jaleela Kamal கூறியது...

// மிக அருமை நீங்க சொல்லியதை படிக்கும் போதே. மீனும் இறாலும் நாவில் ஊறுகிற்து.//

* நீங்க வந்து சாப்பிட்டா அந்த மீனுக்கும் இறாலுக்கும் இன்னும் சுவை கூடிடும்ல!! ஹா..ஹா...

//நானூத்தி சில்லறையோ
ஐநூறோ கொடுத்த ஞாபகம்.//

// பாவம் யார் பெத்த புள்ளையோ கணக்கு தெரியாம கல்லா பெட்டியில உட்கார்ந்து இருக்கு...!! ஹ்ஹா//

* அப்படியெல்லாம் இல்லை ஜலீலாக்கா. பர்ஸ் பத்திரமா இருக்கும். பயப்பட வேணாம்.

// பரவாயில்லை இப்படி தெரிய படுத்துவது, எல்லோருக்கும் பிரயோஜனமாக இருக்கும் நோட் பண்ணி வைத்து கொள்கிறேன் தயிரும் நல்ல தயிர் கிடைக்குது என்றால் ஆச்சரியம் தான்.//

தயிர் அப்படி இருக்குது என்பது தான் முக்கியமான விஷயம். இல்லா விட்டால் நம்ம ஆள் (சாதிக்)அந்த ஹோட்டலையே நம் கண்ணில் காட்டி இருக்க மாட்டார்.

நன்றி ஜலீலாக்கா!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ தமிழ் உலகம் கூறியது...

// உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும் //

அவசியம் இணைக்கிறேன் சார், நன்றி நீங்கள் இதை "உலவில்" இணைத்தமைக்கு!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ ஹாஜா மொஹைதீன் கூறியது...

// சீர்காழி சிதம்பரத்துக்கு இடைப் பட்ட தூரமே 20 கிலோ மீட்டர் தான் நீங்கள் 30 கிலோ மீட்டருக்கு கணக்கு சொல்லி இருக்கிங்களே//

வாங்க பாஸ்!! இதெல்லாம் பசி நேரத்துல கணக்குப் பார்த்துக் கிட்டிருக்கவா முடியும். கோபர்ல எங்கே இருக்கீங்க தல!!

நன்றி உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Denzil கூறியது...

// டயட் நல்லபடியா போய்டிருக்கிற சமயத்துல...//

வாங்க denzil,ஒரு நாளைக்கு, அதுவும் ஒரு வேளை சாப்பாட்டுக்கு டயட் நம்ம கூட ஒன்னும் சண்டை போட்டுடாது தல! ஹா..ஹா..

நன்றி உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

Starjan (ஸ்டார்ஜன்) கூறியது...

// நாங்க திருநெல்வேலில இருந்து வந்து சாப்பிட்டுறது கஷ்டம்தான். நீங்க பக்கத்துல இருக்கிறவக சாப்ப்பிட்டதே நாங்க சாப்பிட்டதுக்கு சமானம்.//

வாங்க தல!! திருநெல்வேலி யிலிருந்து வந்து சாப்பிடுவது தானே கஷ்டம். சவூதியிலிருந்து போகும் போதே சாப்பிட்டுட்டு போய்ட்டா...??

நன்றி ஸ்டார்ஜன்

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ராஜவம்சம் கூறியது...

// சாப்பாடு ருசியாதா இருக்கு ீங்க சொன்ன விததில்//

வாங்க தல, எங்க ரொம்ப நாளாச்சு ஆளையே காணோம்.

நன்றி ராஜவம்சம்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

// வாவ், நல்லாருக்குங்க, முழுவிருந்து சாப்ட்ட திருப்தி!//

வாங்க பாஸ். நீங்கல்லாம் வந்து படிப்பது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு.

நன்றி பன்னிக்குட்டி ராம்சாமி!!

ஜெய்லானி சொன்னது…

//
வாங்க தல!! திருநெல்வேலி யிலிருந்து வந்து சாப்பிடுவது தானே கஷ்டம். சவூதியிலிருந்து போகும் போதே சாப்பிட்டுட்டு போய்ட்டா...??//

அப்படியே ரிட்டன் டிக்கெட்டும் குடுத்துட்டா வேண்டாமுன்னா சொல்ல போறோம் ஹி..ஹி..

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Raj Chandirasekaran கூறியது...

// Yeah its called " Jayaraman Kadai". Puthur Jayaraman as its fondly called in that area. Pretty close to Chidambaram too may be about 20 kms from Chidambaram.//

வாங்க பாஸ். நீங்கள் சொல்வது மிகச் சரி பாஸ்!! அது ஜெயராமன் கடை தான்.

நன்றி உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ vanathy கூறியது...

// நல்லா இருக்கு. அப்படியே அந்தக் கடையின் படத்தினையும் போட்டிருக்கலாமே.//

வாங்க வான்ஸ், அந்த தவ்வாவில் இறால் ஃப்ரை படம் என்னவாம்?? கடையின் படம் எடுக்கலை. ஹி..ஹி..பசி எல்லாம் மறந்து போச்சு.

நன்றி வானதி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ கொக்கரகோ... கூறியது...

// இந்த புத்தூர் ஜெயராமன் கடையை பற்றி விரிவாக பதிவு எழுதலாம் என்றிருந்தேன். முந்தி விட்டீர்கள். //

வாங்க பாஸ்!! நீங்க எழுதினா என்ன, நான் எழுதினா என்ன சார். மொத்தத்தில் நல்ல விஷயங்கள் மக்கள்ஸ்க்கு போய் சேர்ந்தா சரிதான்.

நன்றி கொக்கரக்கோ உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ சிட்டி பாபு சொன்னது…

// அருமை .போட்டோ பிடிச்சு போட்ருக்கலாம் //

வாங்க பாஸ், அந்த நேரத்துல இந்த ஐடியா இல்லாமப்போச்சு தல. எல்லாம் பசிட கூறு... ஹி..ஹி..

நன்றி சிட்டிபாபு உங்களின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ S.Menaga கூறியது...

// நானும் இந்த ஹோட்டலில் சாப்பிட்டிருக்கேன், செம சூப்பராயிருக்கும் //

ஆஹா, அனுபவத்தை அருமையாய் பகிர்ந்து கொண்டீர்கள் சகோ.

நன்றி S.Menaga உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி கூறியது...

//வாங்க தல!! திருநெல்வேலி யிலிருந்து வந்து சாப்பிடுவது தானே கஷ்டம். சவூதியிலிருந்து போகும் போதே சாப்பிட்டுட்டு போய்ட்டா...??//

//அப்படியே ரிட்டன் டிக்கெட்டும் குடுத்துட்டா வேண்டாமுன்னா சொல்ல போறோம் ஹி..ஹி..//

டிக்கெட் எதுக்கு பாஸ்??. நம்மகிட்ட ஜம்போஜெட் ஃபிளைட்டே இருக்கே. இருங்க நம்ம 'வான்ஸ்' கிட்ட இரவல் கேட்டிருக்கேன். ஃபிரீயாவே போயிட்டு வரலாம். ஹி.. ஹி..

நன்றி ஜெய்லானி சார்!!

Unknown சொன்னது…

" கோபர்ல எங்கே இருக்கீங்க தல"
Al gosaibi Hotel
behind pepsi cola factory

Unknown சொன்னது…

ஆஹா!! நீங்க சொல்ற மெனுவைக் கேட்டாலே நாக்கில் எச்சில் ஊறுதே.. இதுக்காகவே புத்தூர் போலாம்னு இருக்கு..

ஹைவேயில் சாப்பிடறதுக்கு பட்டினியாவே இருந்திடலாம்னுதான் எப்பவும் இருப்பேன்..

ரைட்டு இனி அந்த வழியாகப் போனால் கண்டிப்பா இங்கேதான் சாப்பாடு..

ஹேமா சொன்னது…

காதர்...பசி நேரத்தில வந்து வாசிச்சிட்டேன் !

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஹாஜா மொஹைதீன் சொன்னது…

//" கோபர்ல எங்கே இருக்கீங்க தல" Al gosaibi Hotel behind pepsi cola factory //

பெப்சில வேலைப் பார்க்கிறீங்களா ஹாஜா மொஹைதீன் ரொம்ப சந்தோஷம். ஆமா நீங்க எந்த ஊர் அத சொல்லலியே?? நான் அங்க வந்து எப்படி விசாரிப்பேன். அல்லது அலைபேசி நம்பராவது சொல்லலாமே?

நன்றி ஹாஜா உங்கள் வருகைக்கும் தகவலுக்கும்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ பதிவுலகில் பாபு கூறியது

// ரைட்டு இனி அந்த வழியாகப் போனால் கண்டிப்பா இங்கேதான் சாப்பாடு..//

ரைட்டு.. அதே! அதே!!

நன்றி அப்துல் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஹேமா கூறியது...

// காதர்...பசி நேரத்தில வந்து வாசிச்சிட்டேன்! //

ஆஹா இருந்து ஒரு வாய் சாப்பிட்டுட்டு போயிருக்கலாமே ஹேமா.

மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

janaki சொன்னது…

அது பூத்தூர் JAYARAMAN HOTEL.......

Unknown சொன்னது…

எங்க புத்தூர் ஜெயராமன் கடையைப் பற்றி எழுதினது நன்றி :-)

சவுதில எங்கே இருக்கிங்க?

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

அட போங்க நண்பா, அந்த புத்தூரிலிருந்து லெப்ட் போனா எனது மனைவியின் ஊர் வரும். ஒரு நாள் கூட ஜெயராமன் கடையில் சாப்பிட்டதில்ல. அந்த குடிப்பினை எப்ப வருமோ தெரியவில்லை?

பெயரில்லா சொன்னது…

நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு