facebook

திங்கள், மார்ச் 07, 2011

"நாகூர் பப்படம்"


நாகூர் எழுத்தாளர்களில் இவருடைய எழுத்து நடை
கொஞ்சம் லாவகமானது. இடையிடையே பழமொழிகளும்,
ஊரின் எல்லையில்லா பேச்சு வழக்குகளும் வந்து வந்து கண்சிமிட்டிவிட்டுப் போகும் ஜாலம் படிப்பவர்களை கட்டிப்-
போடும். பஹ்ரைனில் வாழும் சகோதரர் அப்துல் கையும்
‘அந்த நாள் ஞாபகம்’ என்ற நூலையும் ‘போன்சாய் – குட்டிக்
கவிதைகள்’ என்ற புதுக்கவிதை தொகுப்பையும் வெளியிட்-
டுள்ளார். ‘நாகூரி’ என்ற புனைபெயரில் நாகூர் பிஸாது
கிளப்-ஐ முன்பு கலக்கியவர் இவர்தான். .


நாகூர் மண்வாசனை
- அப்துல் கையூம்

"நாகூர் பப்படம்"

ஊர் பற்றிய குட்டிக்கதை ஒன்று நினைவுக்கு வந்தது. மங்களம்
என்ற பெண்மணியும் அவளது சகோதரியும் ஆத்தங்கரைக்கு
குளிக்கச் சென்றார்களாம். அப்போது மங்களத்தை ஆற்றுத்
தண்ணீர் அடித்துக்கொண்டு போய் விட்டதாம். “அடி அக்கா!
மங்களம்! போயிட்டியே!” என்று அழுது புரண்டு அலறி அடித்துக்
கொண்டு வீதியில் அவள் தோழி ஓடி வந்தாளாம். அந்த நேரத்தில்
ஊருக்கு புதிதாக வந்த வெள்ளைக்கார துரை அவளிடம் சென்று
“What is the name of this place?” கேட்க, ஒப்பாரியை நிறுத்தாமல் “அடி
அக்கா! மங்களம்” என்று மறுபடியும் கூவியிருக்கிறாள். இதுதான்
இந்த ஊரின் பெயர் என்று எண்ணி “அடியக்க மங்கலம்” என்று
பெயர் வைத்துவிட்டு போய்விட்டானாம் வெள்ளைக்காரதுரை.

இது ஒரு வேடிக்கைக்காக சொல்லப்படும் கதைதான். “அடியற்கை மங்கலம்” அல்லது “அடியார்க்கு மங்கலம்” என்றுதான் உண்மை-
யிலேயே இருந்திருக்க வேண்டும். அடியார்களுக்கு மங்கலம்
உண்டாக்கக் கூடிய இடமாக அது இருந்திருக்கிறது.

இதுபோன்ற எத்தனையோ கதைகள் நம்மிடையே உலவுகின்றன

முந்திரிக்கொட்டை விற்றுக் கொண்டிருந்தாளாம் ஒரு கூடைக்காரி. அவளிடம் சென்று வெள்ளைக்கார துரை “How much is this?” என்று
கேட்க, கேள்வியைப் புரிந்துக்கொண்ட பெண்மணி “காசுக்கு எட்டு”
என்று சொன்னாளாம். அதுவே பின்னர் “Cashew Nut” என்று ஆங்கிலப் பெயராக ஆகிவிட்டதாம்.

தயாரிப்பு நம்முடையதாக இருந்த போதிலும் அதற்கு பெயர்
வைப்பதும், விலைநிர்ணயம் செய்வதும் வெள்ளைக்கார துரை கையில்தான் இருந்தது.

ஊரான் ஊரான் தோட்டத்துலே

ஒருத்தன் போட்டா வெள்ளரிக்கா

காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி

காகிதம் போட்டான் வெள்ளைக்காரன்

என்ற நாட்டுப்பாடல் இவ்வுண்மையை உணர்த்தும்.

இரண்டாம் உலகப்போரின் போது நாகூர் மக்களின் குடிசைத்
தொழிலாக தடுக்கு முடைதல், பாய் முடைதல், ஓலை விசிறி,
சங்கு வெட்டி பாலிஷ் செய்தல், சுருட்டு தயாரிப்பு, பப்படம்
செய்தல் இப்படி பலதரப்பட்ட கைத்தொழில்கள் வாழ்வாதரமாக
இருந்திருக்கிறது.

நாகூருக்கு வந்த வெள்ளைக்கார துரை பப்படத்தை பார்த்து விட்டு
“வாவ்! வாட் இஸ் திஸ்?” என்று கேட்க, “திஸ் இஸ் பப்படம்” என்று
யாரோ சொல்ல “வொண்டர்ஃபுல் நேம். பப்படம்” என்று சொல்லி
விட்டு ஆங்கில அகராதியிலும் இந்த “பப்படத்தை” ஏற்றி
விட்டானாம்.

“பெரிய நானா” (Big Brother) டிவிஷோவில் Jade Goody ஷில்பா
ஷெட்டியை பப்படம் என்று வசைபாட இந்த ‘பப்படம்’ அகில
உலகத்திலும் பிரபலமாகி விட்டது. இனவெறி கண்ணோட்டத்தில் திட்டியதாக சர்ச்சை எழுந்து பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சொற்பதம் ‘பன்னாடை’ ‘பரதேசி’ என்று பொருள்படும்படி வசை பாட அவர்களுக்கு பயன்படுகிறதாம். ஷில்பாவின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது “பப்படம்” என்ற இந்த வார்த்தைதான்.

அடப்பாவிகளா! தின்பதற்காக பயன்படும் உணவுப் பண்டத்தை எப்படியெல்லாம் உதாரணம் காட்ட பயன்படுத்துகிறார்கள் என்று
திட்டித் தீர்க்கலாமே என்று பார்த்தால், நாம் மட்டும் என்ன
யோக்கியமா என்று எனக்குள்ளே கேள்வி எழுந்தது. ‘நொந்துப் போய்விட்டேன்’ என்று சொல்வதற்கு ‘நொந்து நூடுல்ஸாகி
விட்டேன்’ என்று சீன உணவுப்பொருளை நாம் சொல்வதில்லையா? சீனாக்காரன் இதைக் கேள்விப்பட்டால் அவன் முதலில் நொந்து நூடுல்ஸாகி விடுவான்.

தமிழ்நாட்டில் ஏதாவதொரு திரைப்படம் Flop ஆகிவிட்டால் “படம்
பொப்படம் ஆகிவிட்டது” என்று சொல்வதுண்டு.

நாகூரைப் பொறுத்தவரை நீளமாக உள்ளூரிலேயே தயாரிக்கப்படும் அயிட்டத்திற்கு பப்படம் என்று பெயர். வட்ட வடிவமாக இருப்பதற்குப் பெயர் அப்பளம். பப்படம் Unbranded goods. அப்பளம் Branded goods. (உதாரணம் அம்மாமி அப்பளம், பாப்புலர் அப்பளம்). ‘பொப்படம்’ என்ற பெயரில் அயர்லாந்தில் பிரபலமான உணவகம் ஒன்று இருக்கிறது.

அப்பளம் தயாரிப்பில் பிராமணர்கள் பிரசித்தம் என்றுச் சொன்னால் பப்படம் தயாரிப்பில் நம்மவர்கள் பிரசித்தம். நாகூர் சாப்பாட்டு
மெனுவில் பப்படம் கண்டிப்பாக இடம் பெற்றுவிடும்.

பொதுவாக அப்பளம் என்று தமிழகத்திலும், அப்படம் என்று
தெலுங்கிலும், அப்பளா என்று துளு மொழியிலும், ஹப்பளா என்று கன்னடத்திலும், பாப்பட் என்று இந்தியிலும் அழைக்கப்படுகிறது.

அப்பள வியாபாரத்தில் மலையாள நடிகர் மோகன்லால் முன்பு
குதித்தது ஞாபகமிருக்கும். இந்தி தாரகை ஷில்பா ஷெட்டியும்
அப்பளச் சட்டியில் டைவ் அடித்து விட்டார். நாளை ‘நானகத்தா’
தயாரிப்பில் ‘லாரா தத்தா’ இறங்கினாலும் ஆச்சரியப்
படுவதற்கில்லை.

ஷில்பாவின் தயாரிப்புக்குப் பெயர் “ஷில்பா பொப்படம்”.

நம்ம ஊரில் ஜொஹராமா லாத்தாவும், சின்னாச்சிமாவும் இந்த
பப்படம் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தது எனக்கு நினைவில்
இருக்கிறது. ஒரு சிறிய உருண்டை பொப்பட மாவை கையில்
வைத்துக் கொண்டு, பலகைக்கட்டையில் லாவகமாக உருட்டி
ஒரு கட்டு பப்படத்தை தயாரித்து விடுவார் சின்னாச்சிமா.

ஷில்பாவின் டெக்னிக்கை பின்பற்றி இருந்தால் இந்நேரம்
“சின்னாச்சிமா பப்படம்” உலகச் சந்தையில் விற்பனையில்
போட்டி போட்டிருக்கும்.

ஷில்பாவும் ஜேட் கூட்டியும் தோழிகளாகினர். ஜேட் கூட்டி
கேன்சர் ஏற்பட்டு மறைந்தும் விட்டார். ‘பொப்படம்’ என்ற இந்தப்
பெயரை தன் தோழியின் நினைவாக வைத்திருப்பதாக அவர்
சொன்னது மனதை நெகிழ வைத்தது. ஜேட் கூட்டி மரணத்திற்கு
முன்பு சாப்பிட ஆசைப்பட்டது எது தெரியுமா? பொப்படம்தான்.



36 கருத்துகள்:

Jaleela Kamal சொன்னது…

present
apparam vareen

அஸ்மா சொன்னது…

நல்ல பகிர்வு சகோ. அப்துல் கையூம் அவர்களின் இந்த ஆக்கம் நம்ம ஊர் பேச்சு வழக்கில்:) நல்ல இன்ட்ரஸ்ட்டா இருக்கு. சரி, "பப்படம்"னு தலைப்பு இருக்கு, ஆனா படத்தில் அப்பளம்தானே இருக்கு..? படத்தில் பார்க்கக் கூட பப்படம் டிமாண்டா போயிடுச்சா? :-)

பொன் மாலை பொழுது சொன்னது…

பொறித்த அப்பளம் போல சுவையான பதிவு.

ஸாதிகா சொன்னது…

ஒரே மூச்சில் பல தகவல்களை சொல்லி முடித்து விட்டீர்கள்.நாகூர் பப்படம் சூப்பர்.எஸ் வி சேகரரின் தனிக்குடித்தனம் நாடகத்தில் ஒரு காமெடி அப்பளத்தை அபாளம் என்று நடுவில் வரும் ம் ஐ அழுத்தாமல் உச்சரிப்பார்.ஏண்டா அப்பளத்தை அபாளம் என்று சொல்லுறே என்று கேட்டால் அப்பளத்தை அழுத்தி உச்சரித்தல் நொறுங்கி விடுமே என்பார்.உங்கள் அப்பள வரலாறை பபடிக்கும் பொழுது இந்த ஞாபகம் வந்து விட்டது.யாரவது இந்த நாடகத்தின் லின்க் சொன்னால் மீண்டும் கேட்டு ரசிக்க ஏதுவாக இருக்கும்.

Menaga Sathia சொன்னது…

சுவையான பதிவு.

பெயரில்லா சொன்னது…

செம இண்ட்ரஸ்டிங் மேட்டர் பாஸ்! :)

vanathy சொன்னது…

“How much is this?” என்று
கேட்க, கேள்வியைப் புரிந்துக்கொண்ட பெண்மணி “காசுக்கு எட்டு”
என்று சொன்னாளாம். அதுவே பின்னர் “Cashew Nut” என்று ஆங்கிலப் பெயராக ஆகிவிட்டதாம்.//

சூப்பர் விளக்கம். எல்லாமே சூப்பர்.

Chitra சொன்னது…

நிறைய தகவல்களை கலந்து கட்டி அடிச்சு இருக்கீங்க... Good post!

Asiya Omar சொன்னது…

எப்படி இப்படில்லாம யோசிக்கிறீங்க சகோ?
பப்படத்தினால் நாகூர் ஜொஹராமா,சின்னாச்சிமாவை பாப்புலர் ஆக்கிட்டீங்க ,எனக்கு சேச்சிக்கனி,ஆச்சிகனி என்று இருவரை நாகூரில் தெரியும்.அவங்க கிட்ட உங்க நாகூர் பப்படம் வரவழைத்து விடனும்..

Julaiha Nazir சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.அப்துல் கையூமின் எழுத்துக்களின் விசிறி நான் என்றே சொல்லலாம் அந்த அளவிற்கு அவர்களின் எழுத்து பிடிக்கும் அதிலும் காந்தியின் நாகூர் விசிட் ரொம்ப அருமையாக எழுதி இருப்பார்கள் நல்ல பகிர்வு ....

Mohamed Faaique சொன்னது…

சார்.... சூப்பர் சார்... ஒரே மூச்சில் படிச்சச்சு.... உன்மையிலேயே அழகான எழுத்து நடை. நல்ல விடயங்களும் இருக்கின்றன. ரசித்தேன். சுவைத்தேன்

ஆயிஷா சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும்

நல்ல பகிர்வு சகோ.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அருமையான எழுத்து நடை.... தெளிந்த நீரோடை போல் ஓடி வருகிறது.... சுவையான தகவல்களும் கூட......!

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

பாஸ்...ஊரை பற்றிய ஆராய்ச்சி இன்னும் தொடருது போல...

இன்றைய என் பதிவை நீங்க படிச்சுட்டீங்களா?...............
கலைஞரின் ராஜினாமா நாடகமும், அழகிரியின் மனசாட்சியும்

ஜெய்லானி சொன்னது…

//நாகூர் பிஸாது
கிளப்-ஐ முன்பு கலக்கியவர் இவர்தான். .//

இப்ப ஏன் நீங்க இதை பிஸாது பண்ணுறீங்க ..ஹி..ஹி..

ஜெய்லானி சொன்னது…

//ஊர் பற்றிய குட்டிக்கதை ஒன்று நினைவுக்கு வந்தது. மங்களம்
என்ற பெண்மணியும் அவளது சகோதரியும்//

இந்த கதையில குட்டியையே கானோமே..?????

ஜெய்லானி சொன்னது…

நாகூர்ல பப்படமுன்னு சொல்வீங்களா இல்லை பப்பூடுன்னு சொல்வீங்களா..? டவுட்டு # 1

vanathy சொன்னது…

//இந்த கதையில குட்டியையே கானோமே..?????
//

இந்த வயசில் குட்டி கேட்குதோ??????

Unknown சொன்னது…

சூப்பரா இருக்குங்க எழுத்து நடை.. நிறைய தகவல்களைக் கொண்ட பதிவு.. நன்றி..

ஜெய்லானி சொன்னது…

@@@vanathy
//இந்த கதையில குட்டியையே கானோமே..?????
//

இந்த வயசில் குட்டி கேட்குதோ?????? //

அதானே வான்ஸ் கேளுங்க ..அப்துலுக்கு இந்த வயசில குட்டி தேவையா..? ஹா..ஹா.. :-))

பெயரில்லா சொன்னது…

காசுக்கு எட்டு”
என்று சொன்னாளாம். அதுவே பின்னர் “Cashew Nut” என்று ஆங்கிலப் பெயராக ஆகிவிட்டதாம்.//
super

எம் அப்துல் காதர் சொன்னது…

@ வாங்க ஜலீலாக்கா நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ அஸ்மா கூறியது...

//நல்ல இன்ட்ரஸ்ட்டா இருக்கு. சரி,"பப்படம்"னு தலைப்பு இருக்கு, ஆனா படத்தில் அப்பளம்தானே இருக்கு? படத்தில் பார்க்கக் கூட பப்படம் டிமாண்டா போயிடுச்சா?:-) //

வாங்க சகோ அஸ்மா கூகிளில் தேடினேன் பப்படம் கிடைக்கலை!

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@ வாங்க கக்கு மாணிக்கம் அண்ணே நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ ஸாதிகா கூறியது...

// ஒரே மூச்சில் பல தகவல்களை சொல்லி முடித்து விட்டீர்கள்.நாகூர் பப்படம் சூப்பர்.எஸ் வி சேகரரின் தனிக்குடித்தனம் நாடகத்தில் ஒரு காமெடி அப்பளத்தை அபாளம் என்று நடுவில் வரும் ம் ஐ அழுத்தாமல் உச்சரிப்பார்.ஏண்டா அப்பளத்தை அபாளம் என்று சொல்லுறே என்று கேட்டால் அப்பளத்தை அழுத்தி உச்சரித்தல் நொறுங்கி விடுமே என்பார்.உங்கள் அப்பள வரலாறை பபடிக்கும் பொழுது இந்த ஞாபகம் வந்து விட்டது.யாரவது இந்த நாடகத்தின் லின்க் சொன்னால் மீண்டும் கேட்டு ரசிக்க ஏதுவாக இருக்கும்.//

வாங்க ஸாதிகாக்கா எனக்கு அந்த நாடகத்தின் விபரம் தெரியலைக்கா. கிடைத்தால் அவசியம் சொல்கிறேன்.

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@ வாங்க s menaga நன்றி!

@ வாங்க balaji saravana நன்றி!

@ வாங்க வானதி நன்றி!

@ வாங்க சித்ரா நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ asiya omar கூறியது...

// பப்படத்தினால் நாகூர் ஜொஹராமா, சின்னாச்சிமாவை பாப்புலர் ஆக்கிட்டீங்க, எனக்கு சேச்சிக்கனி,ஆச்சிகனி என்று இருவரை நாகூரில் தெரியும்.அவங்க கிட்ட உங்க நாகூர் பப்படம் வரவழைத்து விடனும்..//

வாங்க சகோ. சேச்சிக்கனி,ஆச்சிகனி, ஜொஹராமா, சின்னாச்சிமா எல்லாம் நம்ம சொந்தம் தான். பப்படம் அதிகமாய் யாரும் இப்ப செய்றதில்ல! ஆர்டர் கொடுத்து செய்யச் சொன்னால் ஒரு சிலர் மட்டுமே செய்து கொடுக்கிறார்கள்.

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்

எம் அப்துல் காதர் சொன்னது…

@ வாங்க nahasi நன்றி!

@ வாங்க mohamed faaique நன்றி!

@ வாங்க ஆயிஷா நன்றி!

@வாங்க பன்னிக்குட்டி ராம்சாமி நன்றி!

@ வாங்க ரஹீம் கஸாலி நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ ஜெய்லானி கூறியது...

//நாகூர் பிஸாது கிளப்-ஐ முன்பு கலக்கியவர் இவர்தான். .//

// இப்ப ஏன் நீங்க இதை பிஸாது பண்ணுறீங்க ..ஹி..ஹி..//

வாங்க தல! அதையே இப்ப நானும் உங்களிடம் கேட்கிறேன். இப்ப ஏன் நீங்க இதை பிஸாது பண்ணுறீங்க..ஹி..ஹி

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@ ஜெய்லானி கூறியது...

// இந்த கதையில குட்டியையே கானோமே..?????. //

பாஸ் என்ன மாதிரி சின்ன பிள்ளைகளிடம் இப்படி தப்பு தப்பா கேள்வி கேட்டா எப்படி பதில் சொல்வதாம்! (க்கி க்கி அப்பாடி தப்பிசிட்டேம்ப்பா..!!)

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@ ஜெய்லானி கூறியது...

// நாகூர்ல பப்படமுன்னு சொல்வீங்களா இல்லை பப்பூடுன்னு சொல்வீங்களா..? டவுட்டு # 1 //

இங்கேயும் டவுட்டு தானா, அதுவும் நம்பர் ஒன்னா?? ஹி..ஹி..ரொம்ப நல்லது!'பப்படம்' தான்.

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@ vanathy கூறியது...

//இந்த கதையில குட்டியையே கானோமே..?????//

// இந்த வயசில் குட்டி கேட்குதோ??????//

வாங்க வான்ஸ். நல்லா அப்படி அழுத்தி கேளுங்க!!

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@ வாங்க பதிவுலகில் பாபு நன்றி!

@ வாங்க ஆர்.கே.சதீஷ்குமார் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ ஜெய்லானி கூறியது...

@@@vanathy
//இந்த கதையில குட்டியையே கானோமே..?????//

இந்த வயசில் குட்டி கேட்குதோ?????? //

அதானே வான்ஸ் கேளுங்க.. அப்துலுக்கு இந்த வயசில குட்டி தேவையா..? ஹா..ஹா.. :-))

அடப் பாவி மக்கா நல்லா இருங்க சீதேவி! ஆமா எனக்கு அப்படி என்ன வயசாயிடுச்சு அனு... ச்சே!! அவ்வ்வ்வ்...!!

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

அப்துல் கையூம் சொன்னது…

இணையத்தில் மேயும் வேலையில் தற்செயலாக இவ்வலைப்பதிவை நான் காண நேர்ந்தது. எனது பதிவை வெளியிட்டு வாசக பெருமக்களின் சுவையான, சத்தான கருத்துக்களை அறிய வாய்ப்பளித்தமைக்கு நன்றி

- அப்துல் கையூம்
http://nagoori.wordpress.com

எம் அப்துல் காதர் சொன்னது…

நன்றி அப்துல் கையும் உங்களின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் :)