facebook

புதன், மார்ச் 16, 2011

“மெல்ல – வாய் மெல்ல”...!!


“மெல்ல – வாய் மெல்ல”...!!

 இந்த வாரம் ஹைபர் மார்க்கெட்டில் பணிபுரியும் நண்பர்களை
காண நேர்ந்தது. அவர்களில் திராட்சை, முந்திரி, நட்ஸ் Sales + Packing
பிரிவில் பணிபுரியும் நண்பர் மகா கிண்டல் பேர்வழி. அவரிடம்
பேச்சுக் கொடுத்து, பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு பிடி
முந்திரியை அள்ளி என் கையில் கொடுத்து "சாப்பிடுங்க" என்றார்.
அவரும் ஒரு பிடி வாயில் அள்ளி போட்டுக் கொண்டார். நானும்
ஒவ்வொன்றாய் வாயில் போட்டு மென்றுக் கொண்டே பேசிக் கொண்டிருந்தேன்.

பிறகு தான் கவனித்தேன். அவரும் ஒரு பிடி வாயில் அள்ளி
போட்டாரே, அதை மென்று சாப்பிடும் ஒரு வாயசைவோ எந்த
ஒரு சிம்டம்சும் காணோமே எப்படி சாப்பிட்டார் திகைப்பாய்
இருந்தது!

அவரிடமே கேட்டேன்.

"அதை ஏன் கேட்கிறீங்க. இங்கே இருக்கிற மேனேஜர் மிஸிரியும்
(Egypt), சூப்பர்வைசர் ஹிந்திகாரனும் பொல்லாதவனுவ! அவனுக
இந்த பக்கம் சூப்பர் வைசிங் வரும்போது யாருடைய வாய்
அசைந்தாலும் ஒரு நாள் சம்பளம் கட் பண்ணிடுறாங்க!

"பேசிக்கிட்டிருந்தா கூட வாயசையுமே!"

"இது சாப்பிடும்போது வாயசையுமே அந்த அசைவு"

"அது சரி. அதனால..!!

"நாங்கல்லாம் மொதல்ல எல்லாரும் எதிர்ப்பு தெரிவிச்சோம்!
அவனுக அதை மதிக்கவே இல்ல. பிறகு ஒன்னா கூடி
யோசிச்சோம்"

"என்னான்னு"

"இனி நாம எது வேணும்னாலும் சாப்பிடனும் ஆனா அவனுகளுக்கு தெரியக்கூடாது!!”

“எப்படி?"

"அப்படி கேளுங்க!"

"முன்பெல்லாம் ஒன்று ரெண்டு பாதாமோ, முந்திரியோ எடுத்து
வாயில் போட்டோம்னா அதை யாரும் பார்த்துடாமே மென்று
முழுங்கவே சிரமப்பட்டோம்".

"சரி"

"இப்ப என்னடான்னா ஒரு பிடி வாயில் அள்ளி போட்டாலும்,
வாயசையாமலே சாப்பிட்டிடுவோம்"

"எப்படிங்க...??" பதட்டத்துடன் கேட்டேன்.

"நீங்க ஒன்னும் ஆயாசப்படாதீங்க!அதை நாக்கால் அரைத்து
கரைத்தே கஸ்டமரிடம் பேசுவது போல, உள்ளே தள்ளிடுவோம். வாயசையாது. யாருக்கும் நாங்க சாப்பிடுறோம் என்பதும் வெளியே தெரியாது"

"அப்படியா" கிர்ர்ர்ர்ர்ர் ஆனேன்.

என்னாங்க இது இவங்க இப்படி பண்றாங்க!! எப்படியெல்லாம் சமாளிக்கிறாங்க!! நம்ம பசங்க இல்லையா!! காலரை தூக்கி விட
நினைத்து, காரை எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

 @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

SPECIAL EDITION

இந்திய துணை தூதரக அலுவலகம் - ஜித்தா அறிவிப்பு

• சவுதி அரேபியாவின் பொது மன்னிப்பு அறிவிப்பு கீழ்கண்ட
வைகளுக்கு மட்டும்தான் பொருந்தும் என அறிவிக்கப்படுகின்றது :

உம்ரா/ஹஜ்/ விசிட் விசா போன்றவற்றில் அதிக நாட்கள் தங்கி இருப்பவர்கள்.

இந்த பொது மன்னிப்பு 23 மார்ச் 2011 ல் முடிவடைகின்றது.
உம்ரா/ஹஜ்/ விசிட் விசா போன்றவற்றில் அதிக நாட்கள் தங்கி
இருப்பவர்கள் உடனடியாக இந்த சந்தர்பத்தை மார்ச் 23 க்கு
முன்பாகவே பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுருத்தப்
படுகின்றர்கள்.

• இந்த பொது மன்னிப்பு, வேலை சம்பந்தப்பட்ட விசாவில்
வந்தவர்களுக்கு இல்லை. அதுபோல் HURBOOB - வேலையிலிருந்து
ஓடிச் சென்றவர்களுக்குமல்ல - அதன் பிரச்சனையில் உள்ளவர் வர்களுக்கும் அல்ல.

• யாரெல்லாம் இந்த குறுப்பிட்ட காலத்திற்குள் நாடு செல்ல
வில்லையோ, அவர்கள் அபராத தொகை கட்ட நேரிடும், மேலும்
அவர்கள் ஜெயில் தண்டனை அனுபவிக்க நேரிடும்.

• யாரிடத்தில் ஒரிஜினல் பாஸ்போர்ட் அட்டை இல்லையோ,
அவர்கள் அவுட்பாஸ் (out pass) பேப்பரும், ஜவாஜாத் அலுவலகத்-
திலிருந்து உம்ரா/ஹஜ் விசாவிற்காண அத்தாட்சி பேப்பரையும்
கொண்டு வரவேண்டும்.

அவசர சான்றிதல் - அவுட்பாஸ் பெறுவது எப்படி? :

• சம்பந்தப்பட்ட நபர்கள், அவர்களின் பாஸ்போர்ட் காப்பியும்,
அத்துடன் ரேஷன் கார்டு அல்லது கார் வாகன வோட்டு
சான்றிதல், அல்லது எலக்ட்ரிகல் கார்டு அல்லது ஏதாவது
இந்தியன் அரசாங்கம் அல்லது மாநில அரசாங்கத்தின்
போட்டோ அடையாள அட்டை ஆகிய ஏதாவது ஓன்றை
வைத்து அவுட்பாஸ் விண்ணப்பிக்கவேண்டும்.

• இந்த அவுட்பாஸ் 3 மாதத்திற்கு செல்லுபடியாகும்.

HUROOB CASES - வேலையிலிருந்து ஓடிச் சென்றவர்கள்

• ஹுரூப் சம்பந்தப்பட்டவர்கள், அவர்களின் கஃபீலிடத்திலிருந்து
NOC certificate - பிரச்சனை இல்லை என்ற சான்றிதல் வைத்திருக்க வேண்டும்.

• ஜவாஜாத் - Jawazat போலீஸ் பாதுகாவலில் வைக்கப்பட்டு, தர்ஹீல்
என்ற போலீஸ் நிலையதிலிருந்து அனுப்பப்படுவார்கள்.

• இந்த பொது மன்னிப்பு, HURBOOB CASES - வேலையிலிருந்து ஓடிச் சென்றவர்கள் - அதன் பிரச்சனையில் உள்ளவர்களுக்கும் அல்ல.

• தாயகத்திற்கு திரும்ப அவசர சான்றிதல் -அவுட்பாஸ் மட்டும் போதுமானதல்ல.

• ஹுரூப் சம்பந்தப்பட்டவர்கள், இந்நாட்டு சட்டப்படி, அவர்களின்
கஃபீலிடம் சென்று அவர்கள் பிரச்னைகளை முடித்து கொள்ள
வேண்டும்.

30 கருத்துகள்:

எல் கே சொன்னது…

கீழே சொல்லப்பட்ட தகவல்கள் பலருக்கு உபயோகம் ஆகும்

Asiya Omar சொன்னது…

-- ஆஹா! இங்கே carrefour - ரில் கூட ஒரு சிலர் கையில் எடுத்து வாயில் போடுவது தான் தெரியும்,ஆனால் வாய் அசையாது,இது தான் டெக்னிக்கோ சாக்லேட்ஸ்,ஃப்ரூட்ஸ்,நட்ஸ் எதையும் விட்டு வைப்பதில்லை..

-- இது மாதிரி ரொம்ப வருஷமாக இருக்கிறவங்க நிறைய பேர் இருப்பாங்க,அவங்க ஊர் வர ஒரு சந்தர்ப்பம்.

ஸாதிகா சொன்னது…

நட்ஸ் இருக்கிற பகுதியில் கண்டிப்பா ஒரு கேமரா வைத்து விடவேண்டும் போலும்.

பொன் மாலை பொழுது சொன்னது…

துன்னுட்டு போவட்டுமே ! என்ன குறைஞ்சுது? நல்ல ஐடியா.!

Mohamed Faaique சொன்னது…

///நட்ஸ் இருக்கிற பகுதியில் கண்டிப்பா ஒரு கேமரா வைத்து விடவேண்டும் போலும்.//

நம்ம மக்களிடம் அவர்கள் வாங்கும் வேலைக்கும் குடுக்கும் சம்பளத்திற்கும் பெறிய ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. எனவே, கொஞ்சம் இப்படியாவது அவர்களின் உழைப்புக்கான ஊதியத்தை எடுத்துக்கட்டுமே!!

கீழே உள்ள தகவல் ரொம்ப பிரயோசனமானது... நன்றி

செ.சரவணக்குமார் சொன்னது…

ஆஹா.. பகிர்வுக்கு நன்றிங்க.

Pranavam Ravikumar சொன்னது…

Good Post,Your welcome note is good. Let me complete that as

"Nothing is impossible if your Will become dynamic"

Thanks & Regards.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நல்லா சாப்பிடட்டும் விடுங்க மக்கா....உழைக்கிரவன் வாயை கட்ட கூடாது என்பது என் கொள்கை....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கீழே நீங்கள் சொல்லி இருப்பது மிகவும் பயனுள்ள தகவல்கள்....

சிநேகிதன் அக்பர் சொன்னது…

இது நல்ல ஐடியாவா இருக்கே


விசா பற்றிய தகவல்கள் பயனுள்ளவை.

ஜெய்லானி சொன்னது…

ரெண்டாவது போட்ட மேட்டரை பங்க்ளா-ல எழுதினா நிறைய பேருக்கு பிரயோஜனமா இருக்கும் . சவுதியில இருக்கிற பாதி க..லி...ளி பயலுங்க பங்காளிதானே ..!! :-))

ஜெய்லானி சொன்னது…

அடப்பாவிங்களா....கிலோ கணக்குல சும்மாவே காசு குடுக்காம துன்னுட்டு , ஃபிரியா குடுத்த ஆளை பத்தி பப்ளிக்குல போட்டு குடுக்க வெக்கமா இல்லை அவ்வ்வ்வ்வ்வ்...!!! :-))

ஜெய்லானி சொன்னது…

// இந்த வாரம் ஹைபர் மார்க்கெட்டில் பணிபுரியும் நண்பர்களை
காண நேர்ந்தது//

வாரத்துக்கு எத்தனை தடவை போவீங்க பாஸ்...சும்மா சொல்லுங்க ..!! நா தப்பா நினைக்கல ...ஹி...ஹி... :-))

vanathy சொன்னது…

உங்க நண்பர் சாப்பாட்டு ராமரோ??? நல்ல வேளை கடை ஓனருக்கு தமிழ் தெரியாது. ஸாதிகா அக்காவின் ஐடியா படிச்சு, camera போட்டாலும் போடுவார்.
நல்ல தகவல்கள்.

Unknown சொன்னது…

ஹா ஹா ஹா.. எப்படியெல்லாம் யோசிக்கறாங்க..

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ எல் கே கூறியது...

// கீழே சொல்லப்பட்ட தகவல்கள் பலருக்கு உபயோகம் ஆகும் //

வாங்க எல் கே சார் ..

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ asiya omar கூறியது...

//-- ஆஹா! இங்கே carrefour - ரில் கூட ஒரு சிலர் கையில் எடுத்து வாயில் போடுவது தான் தெரியும், ஆனால் வாய் அசையாது, இது தான் டெக்னிக்கோ சாக்லேட்ஸ், ஃப்ரூட்ஸ், நட்ஸ் எதையும் விட்டு வைப்பதில்லை..//

வாங்க asiya omar இது எல்லா இடங்களிலும் சர்வ சாதாரணமா நடக்குது. சாப்பிடும் விஷய மல்லவா!! அதான் எவ்வளவு தடை போட்டாலும் மக்கள்ஸ் போட்டு தள்ளுதுகள்.

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஸாதிகா கூறியது...

// நட்ஸ் இருக்கிற பகுதியில் கண்டிப்பா ஒரு கேமரா வைத்து விடவேண்டும் போலும்.//

வாங்க ஸாதிகாக்கா, நம்ம மக்கள்ஸ் கிட்ட அதெல்லாம் நடக்காது. அது பாட்டுக்கு போய்கிட்டே இருக்கும்.

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

கக்கு - மாணிக்கம் கூறியது...

// துன்னுட்டு போவட்டுமே ! என்ன குறைஞ்சுது? நல்ல ஐடியா.! //

வாங்கண்ணே... நல்லா சாப்பிடட்டும் நம்ம மக்கள்ஸ் தானே!!

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

Mohamed Faaique கூறியது...

//நம்ம மக்களிடம் அவர்கள் வாங்கும் வேலைக்கும் குடுக்கும் சம்பளத்திற்கும் பெறிய ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. எனவே, கொஞ்சம் இப்படியாவது அவர்களின் உழைப்புக்கான ஊதியத்தை எடுத்துக்கட்டுமே!!//

வாங்க தல! கரெக்ட் தான் நீங்க சொல்றது. நல்லா சாப்பிடட்டும் நம்ம மக்கள்ஸ் தானே!!

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

செ.சரவணக்குமார் கூறியது...

// ஆஹா.. பகிர்வுக்கு நன்றிங்க!!//

வாங்க தல. உங்கள் வருகைக்கு நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ Pranavam Ravikumar a.k.a. Kochuravi கூறியது...

// Good Post, Your welcome note is good. Let me complete that as
"Nothing is impossible if your Will become dynamic" //

Thanks boss your first visit & advise...

எம் அப்துல் காதர் சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...

// நல்லா சாப்பிடட்டும் விடுங்க மக்கா....உழைக்கிரவன் வாயை கட்ட கூடாது என்பது என் கொள்கை....//

வாங்க தல! நம்ம மக்கா சாப்பிடுறது நமக்கும் சந்தோசம் தான். அதுவும் நமக்கு கொடுத்துட்டு சாப்பிட்டா... ஹா..ஹா..

எம் அப்துல் காதர் சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...

// கீழே நீங்கள் சொல்லி இருப்பது மிகவும் பயனுள்ள தகவல்கள்....//

ஆமா பாஸ் நம்ம செல்வங்கள் பயனடையட்டுமே!!

மனோ உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி

எம் அப்துல் காதர் சொன்னது…

சிநேகிதன் அக்பர் கூறியது...

// இது நல்ல ஐடியாவா இருக்கே... விசா பற்றிய தகவல்கள் பயனுள்ளவை //

வாங்க அக்பர் உங்கள் வருகைக்கு நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

ஜெய்லானி கூறியது...

// ரெண்டாவது போட்ட மேட்டரை பங்க்ளா-ல எழுதினா நிறைய பேருக்கு பிரயோஜனமா இருக்கும். சவுதியில இருக்கிற பாதி க..லி...ளி பயலுங்க பங்காளிதானே ..!! :-)) //

உண்மை தான் பாஸ்!! உண்மையிலேயே அங்கேருந்து சுட்டது தான். ஹி..ஹி..

உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

ஜெய்லானி கூறியது...

// அடப்பாவிங்களா....கிலோ கணக்குல சும்மாவே காசு குடுக்காம துன்னுட்டு, ஃபிரியா குடுத்த ஆளை பத்தி பப்ளிக்குல போட்டு குடுக்க வெக்கமா இல்லை அவ்வ்வ்வ்வ்வ்...!!! :-)) //

சும்மா ஒரு பிடி அள்ளிக் கொடுத்தா அதுக்கு பேரு கிலோ கணக்கா. பேஷ்! பேஷ்!! ஊர் பேர காப்பத்திட்டீங்க!! க்கி..க்கி

செல்லம் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ ஜெய்லானி கூறியது...

// இந்த வாரம் ஹைபர் மார்க்கெட் டில் பணிபுரியும் நண்பர்களை
காண நேர்ந்தது//

// வாரத்துக்கு எத்தனை தடவை போவீங்க பாஸ்...சும்மா சொல்லுங்க ..!! நா தப்பா நினைக்கல ...ஹி...ஹி... :-)) //

பாஸ் உண்மைய சொல்லட்டுமா? நெசத்த சொல்லட்டுமா?? டெய்லி போக்கு வரத்து, கணக்கு வழக்கு எல்லாமே அங்க தான். ஏன்னா அந்த ஹைபர் மார்க்கெட் வீட்டுக்கும் ஆப்பீசுக்கும் நடுப்பர. ஹி..ஹி..

செல்லம் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ vanathy கூறியது...

// உங்க நண்பர் சாப்பாட்டு ராமரோ??? நல்ல வேளை கடை ஓனருக்கு தமிழ் தெரியாது. ஸாதிகா அக்காவின் ஐடியா படிச்சு, camera போட்டாலும் போடுவார்.
நல்ல தகவல்கள்.//

வாங்க வான்ஸ். கேமரா போட்டாலும் அதில நம்ம ஆளுங்க கில்லாடிங்க. முகத்த கையால துடைப்பது போல வாயில தள்ளிடுவாங்க!! அவ்வ்வ்வ்.

vanathy உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@ பதிவுலகில் பாபு கூறியது...

// ஹா ஹா ஹா.. எப்படி யெல்லாம் யோசிக்கறாங்க..//

நம்ம பசங்களின் ஸ்பெஷலிசிட்டியே அதானே!

பதிவுலகில் பாபு உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!