facebook

சனி, மார்ச் 26, 2011

சின்ன சின்ன சந்தோஷங்கள்


படம் : ஆசியா உமர் அனுமதியுடன்! நன்றி!! 

சின்ன சின்ன சந்தோஷங்கள்
நேற்றைக்கு முந்தியதினம் ஃபேஸ்புக்கில் சகோதரி ஆசியா
உமர், தனது மகன் ZAAHID பள்ளியில் எல்லோர் முன்னிலையிலும்
டிகிரி முடித்து விட்டு பட்டம் வாங்குவதற்கு நிகரான
கான்வகேஷன் உடையுடன் நின்று பள்ளி cbsc syllabbus, ஃபேர்வெல்
டேயை grade-12 completion n merit certificate-ஐ பெற்றுக் கொள்ளும்
புகை படத்தினை வெளியிட்டு மகிழ்ந்தார்கள். ‘ஈன்ற பொழுதில்’  பெற்றோர்களுக்கு வாழ்வில் இதை விட வேறென்ன மகிழ்ச்சி
இருக்க முடியும். அந்த ஒரு காட்சியே கண்கொள்ளா காட்சியாக அமைந்திருக்கும். (அதை பதிவாய் வெளியிடுங்கள் சகோ:-)

அந்த 'தம்பி' மென்மேலும் படித்து தன் பெற்றோர்களுக்கு
தங்கமகனாய், வாழ்வில் எல்லாநிலையிலும் சிறந்து விளங்கிட
'ஆஹா பக்கங்கள்’ தனது வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறது!

இந்த நேரத்தில் எங்கள் ‘உம்மா’வின் சின்ன ஃப்ளாஷ்பேக்.

எங்கள்  வீட்டின் தெரு வழியே பள்ளிக்கூடம் செல்லும் சிறுவர்
களையோ சிறுமிகளையோ காணும் போதெல்லாம் எங்க உம்மா, அவர்களை தன் கிட்ட அழைத்து, தெரிந்த பிள்ளையாய்
இருந்தாலும் சரி ; இல்லாவிடில் "நீங்க  யார் வீட்டுப் பிள்ளைம்மா?"
என்று கேட்டு தெரிந்துக் கொண்டு, அந்த பிள்ளையிடம், "என்ன படிக்கிறீங்க?" என்றும் "என்ன படிக்கப் போறீங்க?" என்று கேட்டு ஆர்வமூட்டியும் "நீங்க நிறைய படிச்சு பெரிய ஆளா வரணும்"
என்று ஊக்கப் படுத்துவார்கள்.

அதன் பின்னர் பிள்ளைகளுக்கு தலைவாரி, முகத்தில் பவுடர்
தடவி, வீட்டில் செய்து வைத்திருக்கும் ஏதாவது தின்பண்டங்களை அவர்களுக்கு தின்னக்கொடுத்து "ரோட்டில் பார்த்து நடந்து
போம்மா" என்று சொல்லி சந்தோஷமாய் வழியனுப்பி வைப்பார்கள்.
அவர்களுக்கு இந்த மாதிரி பிள்ளைகளை காணும்போது பரவசம்
தொற்றிக் கொள்வதை பலமுறை பார்த்து உணர்ந்திருக்கிறேன்.

அதுபோலவே சபர் (பயணம்) சென்றுவிட்டு இவர்களை
காணவரும் சொந்த பந்த பிள்ளைகளிடம், எல்லா சுகநலன்களும் விசாரித்துவிட்டு, அருந்த, சாப்பிட கொடுத்தப் பிறகு, அவர்கள்
புறப்பட்டு செல்லும் சமயம், "நீங்க சம்பாதிப்பதில் உங்கள்
பெற்றோர்க்கும், குடும்பத்தார்க்கும், தாராளமாகக் கொடுங்கள்.
அதுவே பெருமை என்று இருந்து விடாதீர்கள். கொஞ்சம்
உங்கள் எதிர் காலத்திற்கும் சேர்த்து வைக்க மறந்து விடாதீர்கள்" என்பார்கள்.

இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால், ஆசியா உமரின்
அந்த பகிர்வு ‘இந்த மகனுக்கும்’ பழைய நினைவுகளை மீட்டுக்
கொண்டு வந்து உங்களோடு பகிர வைத்து விட்டது. நன்றி!!

**********************************************************************************
 சவுதியில் புழுதிப் புயல்

சகோதர பதிவர்கள் அழைத்த தொடர் பதிவை தொடர  இன்னும்
நேரம் சரியாய் கூடிவரவில்லை!!

நேற்றிரவு தொடங்கி இதை  பதிவிடும் வரையிலும்,
சவுதியிலும்  அதை சுற்றியுள்ள நாடுகளிலும் "புழுதிப்  புயல்"  
அடித்துக்  கொண்டிருக்கிறது. வானத்திலிருந்து மழைக்கு பதில்
 மண்ணாய்  கொட்டுகிறது. ரோட்டில்  நடக்க  முடியவில்லை!!
எதிரில் வரும் வாகனங்கள் புலப்படவில்லை.  கார்களை
அங்கங்கே வழியில் நிறுத்திவிட்டு, வாகன ஓட்டிகள் அலை-
பேசியில் உரியவர்களுக்கு தகவல் சொல்லிக் கொண்டிருக்-
கிறார்கள். காற்றும் குளிராய் வீசுகிறது. சங்கடமாய் இருக்கிறது.
நண்பர்கள் அனைவர்களும் கவனமாய் இருக்க வேண்டுகிறேன்!!

30 கருத்துகள்:

Muruganandan M.K. சொன்னது…

உங்க உம்மாவின்
‘இந்த மகனின்“ நினைவுகள்
எங்கள் நினைவுகளையும் கிளறுகிறது. நன்றி

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

// சவுதியிலும் அதை சுற்றியுள்ள
நாடுகளிலும் "புழுதிப் புயல்" அடித்துக் கொண்டிருக்கிறது.
வானத்திலிருந்து மழைக்கு பதில் மண்ணாய் கொட்டுகிறது.
ரோட்டில் நடக்க முடியவில்லை!! எதிரில் வரும் வாகனங்கள் புலப்படவில்லை. சங்கடமாய் இருக்கிறது. நண்பர்கள்
அனைவர்களும் கவனமாய் இருக்க வேண்டுகிறேன்!!///

பஹ்ரைன்ல இப்போ கொஞ்சம் பரவாயில்லை....

ஜெய்லானி சொன்னது…

உள்ளேன் ஐயா..!! :-))

போட்டோ நீங்களா போட்டீங்களா..?? இல்ல கேட்டுட்டு போட்டீங்களா..? :-))

Asiya Omar சொன்னது…

ஆஹா என்ன சகோ இது? அந்த உலகத்தில் இருந்து இங்கே எப்படி கொண்டு வந்தீங்க ?
என்றாலும் சின்ன சின்ன சந்தோஷத்திற்கு வாழ்த்துக்கள்.உங்க உம்மா மாதிரி தான் எங்க உம்மாவிற்கும் படிக்கிற பிள்ளைகளைக் கண்டால் பிடிக்குமாம்.

Mohamed Faaique சொன்னது…

உன்மைதான் சகோதரரே!! தாய்’க்கு மகன் செய்யும் நன்றி இதை விட வேற் என்ன இருக்க முடியும்?

நான் பார்த்த இராக் நாட்டின் (பஸ்ரா) புழுதிப் புயல் பற்றி பதிவு போட்டிருக்கேன்.

http://faaique.blogspot.com/2011/03/25-02-2011.html

முற்றும் அறிந்த அதிரா சொன்னது…

ஆஹா... சின்ன சின்ன சந்தோஷங்கள் தான் வாழ்வில் ஒரு மனிதனை முன்னுக்குக் கொண்டுவரும்... அதை அனுபவிக்கவும் தெரிந்திருக்கவேண்டும்... இதெல்லாம் ஒரு விஷயமா என விட்டிடாக்கூடாது... ஆசியாவின் மகனுக்கு வாழ்த்துக்கள்.

மண் புயலா? புதைந்துபோயிடாதீங்க... சேவ் ஆக இருங்க...அப்போ உடம்பெல்லாம் மண் கொட்டுமா? எப்படி மனிதர்கள் போவது வீதியால்?.

//ஜெய்லானி கூறியது...
உள்ளேன் ஐயா..!! :-))

போட்டோ நீங்களா போட்டீங்களா..?? இல்ல கேட்டுட்டு போட்டீங்களா..? :-))

// எங்களுக்குப் பதில் தராவிட்டாலும் பறவாயில்லை, முதலில் இந்த, உள்ளேன் ஐயாவின் சந்தேகத்தைத் தீர்த்து வையுங்கோ...:).

Chitra சொன்னது…

மென்மையான நினைவலைகள்! nice.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி சொன்னது…

// உள்ளேன் ஐயா..!! :-)) //

வாங்க ஐயா!! ஐயன்மீர். உங்கள் வரவு நல்வரவாகட்டும்!!

// போட்டோ நீங்களா போட்டீங்களா..?? இல்ல கேட்டுட்டு போட்டீங்களா..? :-)) //

படத்துக்கு கீழே இப்படி பொடிசா ((படம் : ஆசியா உமர் அனுமதியுடன்! நன்றி!!))
என்று போட்டிருக்கிறேன் ஐயா!!

உங்கள் வருகைக்கும் கருத்தாய் இந்த விஷயத்தை சுட்டிக் காட்டியமைக்கும் மிக்க நன்றி ஐயா!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Dr.எம்.கே.முருகானந்தன் கூறியது...

// உங்க உம்மாவின் ‘இந்த மகனின்“ நினைவுகள் எங்கள் நினைவுகளையும் கிளறுகிறது. //

வாங்க டாக்டர் சார்!! உண்மை யிலேயே தாயின் ஞாபகங்கள் நம் வாழ்நாளின் வரப்பிரசாதம்.

நன்றி உங்களின் முதல் வருகைக்கும் கருத்துரைத்தமைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ MANO நாஞ்சில் மனோ கூறியது...

// பஹ்ரைன்ல இப்போ கொஞ்சம் பரவாயில்லை..... //

வாங்க மனோ ரொம்ப சந்தோஷம்.

நன்றி உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ asiya omar கூறியது...

// ஆஹா என்ன சகோ இது? அந்த உலகத்தில் இருந்து இங்கே எப்படி கொண்டு வந்தீங்க? //

அந்த சந்தோஷ நொடிகளை இந்த உலகம் முழுக்க காணட்டுமேன்னு தான்!!

நன்றி உங்களின் வருகைக்கும் அனுமதிக்கும் மேடம்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ asiya omar கூறியது...

// சின்ன சின்ன சந்தோஷத்திற்கு வாழ்த்துக்கள். உங்க உம்மா மாதிரி தான் எங்க உம்மாவிற்கும் படிக்கிற பிள்ளைகளைக் கண்டால் பிடிக்குமாம். //

எங்கள் தாய்க்கும், உங்கள் தாய்க்கும் எந்த மாதிரி தருணங்களில் நன்றி யை சொல்லப் போகிறோம்!! இப்படி வாய்க்கும் அரிதான சந்தர்ப்பங்களில் தானே சொல்ல முடியும்!!

asiya omar உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Mohamed Faaique கூறியது...

// உன்மைதான் சகோதரரே!! தாய்’க்கு மகன் செய்யும் நன்றி இதை விட வேற் என்ன இருக்க முடியும்? //

நாம் வாழும் ஒவ்வொரு நாளும், தாய் நமக்கு செய்ததை விட நாம் அவர்களுக்கு அதிகமாய் ஒன்றும் செய்து விட முடியாது.

Mohamed Faaique உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

vanathy சொன்னது…

நல்ல பதிவு, நாட்டாமை. பேஸ் புக்கில் செய்தி பார்த்தேன். மண் புயலா? கேட்கவே கஷ்டமா இருக்கு.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

உங்கள் உம்மாவின் ஞாபக நினைவலைகளில்
நீங்கள் திளைத்ததைப் படித்து நானும் மகிழ்ந்தேன்.

மண் புழுதிப் புயல் இப்போது எப்படி உள்ளது?

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ athira சொன்னது…

// ஆஹா... சின்ன சின்ன சந்தோஷங்கள் தான் வாழ்வில் ஒரு மனிதனை முன்னுக்குக் கொண்டு வரும்...அதை அனுபவிக்கவும் தெரிந்திருக்கவேண்டும். இதெல்லாம் ஒரு விஷயமா என விட்டிடாக் கூடாது.//

ரசனை உள்ள மனிதர்கள் அனைவர் களும் அந்த மாதிரியான சந்தோஷத்தை நிச்சயமாய் அனுபவிப்பார்கள்.

அதிரா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

athira சொன்னது…

// மண் புயலா? புதைந்துபோயிடாதீங்க... சேவ் ஆக இருங்க...அப்போ உடம்பெல்லாம் மண் கொட்டுமா? எப்படி மனிதர்கள் போவது வீதியால்?.//

மழையின்(Drizzile)சிறு தூறல் மாதிரி வீசும் காற்றில் தலையில் பறந்து, கண்களில் விழுந்தால் வீதியில் நடப்பது எப்படி?? ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இன்ஹேல் பிரச்சினை வரும் அபாயம்.... புகை மாதிரி மணல் தூசிகள் மறைக்கும்போது ரோட்டில் கார் ஓட்டமுடியாது. இன்னும் என்னென்னவோ தொடர் தொல்லைகள்.

அதிரா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!!

ஹுஸைனம்மா சொன்னது…

அக்காலத்தில் கல்வி கற்பவர்கள் அறிவை மட்டுமல்லாமல், மனித நேயம் உள்ளிட்டவற்றிலும் பரந்த நோக்கத்தோடு இருப்பார்கள். இதுவே உங்கள் அம்மாவின் பரவசத்திற்குக் காரணமாக இருக்கலாம்.

ஆனால், இக்கால கல்விமுறை பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு கற்பிக்கப்படுகின்றதேயன்றி, வாழ்க்கை நெறிகள் எதுவும் போதிக்கப்படுவதில்லை. கல்வி வியாபாரம் செய்பவர்களைப் போலவே, அவர்கள் கற்பிக்கும் கல்வியும்!! இதில்தான் நம் பிள்ளைகளும் படிக்க வேண்டியிருக்கிறது என்று வருத்தமாகத்தான் இருக்கீறது.

எம் அப்துல் காதர் சொன்னது…

athira சொன்னது…
// எங்களுக்குப் பதில் தராவிட்டாலும் பறவாயில்லை, முதலில் இந்த, உள்ளேன் ஐயாவின் சந்தேகத்தைத் தீர்த்து வையுங்கோ...:). //

சந்தேகம் என்பது ஒருமுறை வரலாம் இருமுறை வரலாம். சந்தேகத்தின் மேலேயே (சிம்)ஆசனம் போட்டு உட்கார்ந்து இருப்பவர்களுக்கு நாமென்ன சொல்லமுடியும் அவ்வ்வ்வ்..!! நீங்களே சொல்லுங்க அதிஸ் கர்ர்ர்ர்ர்ர்...மீஈஈஈஈ எஸ்... ஸூ...

அதிரா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Chitra கூறியது...

// மென்மையான நினைவலைகள்! nice. //

வாங்க டீச்சர். தவமாய் தவமிருந்து ஐந்தில் ஒன்றாய் என்னை பெற்றெடுத்த அம்மா! எங்க தங்க அம்மா!!

சித்ரா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!!

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

present sir

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ வானதி கூறியது...

// மண் புயலா? கேட்கவே கஷ்டமா இருக்கு.//

இப்படி உள்ள சூழ்நிலையில் நீங்க அடிக்கடி சொல்லும் வாசகம் தான் நினைவுக்கு வரும். "குடும்பத்துக்கு என்று சம்பாதிக்க வந்த பிறகு, இவைகளை எல்லாம் பெரிதாக நினைக்க தோன்றாது"

ஆமா வான்ஸ் பெரிதாகத் தான் தோன்றவில்லை. உண்மை தான்!!

வானதி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!!

vimalanperali சொன்னது…

இயற்கையின் விளையாட்டுகளில் இதுவும் ஒன்று போலும்.
"என்ன படிக்கிறீங்க?என்ன படிக்கப் போறீங்க?"எனக்கேட்ட உம்மாவின் மனது எல்லோருக்கும் வாய்க்கப் பெற வேண்டும்.அப்படி வாய்க்கப்பெற வாழ்த்துக்கள்.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

அம்மாவின் நினைவுகள் அருமை தல.

மணல் புயல் அடித்த அன்று ரூமிற்கு செல்ல மிகவும் கஷ்டப்பட்டேன். ரூமில் போனால் அங்குள்ள நண்பர் என்ன இப்படி வந்து நிற்கிறீர்கள் என்று கேட்டார். கண்ணாடியில் பார்த்து விட்டு போட்டோவும் எடுத்துக்கொண்டேன்

அந்த போட்டோவெல்லாம் போட்டா ரொம்ப டெரரா இருக்கும் :)

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ asiya omar கூறியது

மிக்க நன்றி சகோ.,உங்கள் ஆர்வம் என்னையும் தொற்றி கொண்டது. நிச்சயம் அனுபவத்தை நானும் என் ப்ளாக்கில் பகிர்வேன்,அடுத்த பதிவு அது தான் சகோ.நட்புள்ளங்கள் கேட்டு கொண்டதற்கு இணங்க valediction day யை எழுதப்போகிறேன்.சின்ன சின்ன சந்தோஷம் எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ NIZAMUDEEN கூறியது...

// உங்கள் உம்மாவின் ஞாபக நினைவலைகளில் நீங்கள் திளைத்ததைப் படித்து நானும் மகிழ்ந்தேன். மண் புழுதிப் புயல் இப்போது எப்படி உள்ளது? //

வாங்க நிஜாம். ரொம்ப சந்தோஷமாக இருந்தது அந்த தருணம். மண்புழுதி இப்ப இல்லை.

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஹுசைனம்மா கூறியது

// அக்காலத்தில் கல்வி கற்பவர்கள் அறிவை மட்டுமல்லாமல், மனித நேயம் உள்ளிட்டவற்றிலும் பரந்த நோக்கத்தோடு இருப்பார்கள். இதுவே உங்கள் அம்மாவின் பரவசத்திற்குக் காரணமாக இருக்கலாம். //

நீங்கள் சொல்வது உண்மை தான் என்றாலும் அவர்களிடம் இருந்த அந்த குணம் அவர்கள் இறக்கும் வரையில் மாற்றிக் கொள்ளவே இல்லை. இந்தகால கல்வி முறைகள் தான் எல்லோருக்கும் தெரிந்த விஷயமாயிற்றே. பிறகு இதில் சொல்ல என்ன இருக்கு!!

நன்றி ஹுசைனம்மா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ரஹீம் கஸாலி கூறியது...

// present சார் //

இப்படி வந்து ப்ரெசென்ட் மட்டும் சொன்னா எப்படி? இம்போசீசன் எழுத வச்சுடுவேன்:-))

நன்றி ரஹீம் கஸாலி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ விமலன் கூறியது...

// இயற்கையின் விளையாட்டுகளில் இதுவும் ஒன்று போலும். உம்மாவின் மனது எல்லோருக்கும் வாய்க்கப் பெற வேண்டும்.அப்படி வாய்க்கப்பெற வாழ்த்துக்கள்.//

வாங்க விமலன் சார். ரொம்ப நாளாச்சு. நாமும் அதுபோல் வாய்க்க பெற இறைவனிடம் பிரார்த்திப்போம்.

நன்றி விமலன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ சிநேகிதன் அக்பர் கூறியது...

// மணல் புயல் அடித்த அன்று ரூமிற்கு செல்ல மிகவும் கஷ்டப்பட்டேன். ரூமில் போனால் அங்குள்ள நண்பர் என்ன இப்படி வந்து நிற்கிறீர்கள் என்று கேட்டார். கண்ணாடியில் பார்த்து விட்டு போட்டோவும் எடுத்துக்கொண்டேன். அந்த போட்டோவெல்லாம் போட்டா ரொம்ப டெரரா இருக்கும் :).

பரவாயில்ல எனக்கு அனுப்புங்க தல. நாங்க ஷர்ஜாவிலேயே கொஞ்ச காலம் இருந்தவங்க :-))

நன்றி சிநேகிதன் அக்பர் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.